Page 21 of 210 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #201
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரையுலகில் அன்றும்... இன்றும் ...வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து..... கடந்த சில தினங்களுக்கு முன் தந்தி டிவி யில் பேசிய ரவீந்திரன் துரைசாமி என்ற நபர் தலைவரை பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்கள் தகவல்கள் கொடுத்திருக்கிறார். இந்த லாக்அவுட் நேரத்தில் யார் படங்கள் அதிகம் ஒளிபரப்பப்பட்டது என்பது பற்றி. தமிழில் மொத்தம் 60 சேனல்கள் உள்ளது. ஆனால் பழைய படங்கள் ரெகுலராக ஒளிபரப்பபடுவது 3சேனல்கள தான் .அந்த ரவீந்திரன் துரைசாமி மொத்த சேனல்களையும் கணக்கில் எடுத்து கொண்டு தலைவர் படங்கள் குறைந்த அளவில்தான்(வாரத்திற்கு ஒரு படம் தான்) ஒளிபரப்பபடுகிறது என்றும் மற்றவர்கள் படங்கள் தான் அதிகமாக ஒளிபரப்பபடுவது என நரித்தனமாக பேசியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 80 தலைவர் படங்கள் ஒளிபரப்பட்டிருபது எல்லோரும் அறிந்த உண்மை. இந்த உண்மையை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அந்த பேர்வழி பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. புரட்சித்தலைவரின் ரசிகர்கள், அபிமானிகள், பக்தர்கள் அனைவரும் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்து நமது
    ஒற்றுமையை காட்டவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இந்தக்காலத்தில் #இப்படியுமா!

    யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக் கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், #இதிகாசத்தலைவன் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கும் பொருந்தும்.

    இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த தில்லையாடி சிவராமன் என்பவர். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்ஜிஆர்.

    அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்ஜிஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்கிறார் அவர்.

    அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்ஜிஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது அவர் அங்கு இல்லை.

    நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்ஜிஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் #மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.

    ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.

    இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்ஜிஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். “இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.

    எம்ஜிஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்ஜிஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் #நாடகத்தை #இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.

    தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். "#இந்தகாலத்தில் #இப்படியும் #ஒரு #மனிதரா...?" மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.

    நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்ஜிஆர் எப்படி #இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார்...

    வீரப்பா...!
    "தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும்... என்று நான் நினைத்திருந்தேன். இன்று அதை செய்தும்விட்டேன். என் மனதில் இருந்த மிகப்பெரிய #குறை #நீங்கியது. இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..." என்று கண்ணீர் மல்கினார்.

    நமக்கு இதையெல்லாம் பார்க்கும்போது வாத்தியார் தெய்வத்திற்கும் மேலாகத் தான் தெரிகிறார்.........

  4. #203
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?

    அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி...

    இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓட.

    விசில் அடிச்சான் குஞ்சுகளா...விரைவில் வெம்பி பழுத்த பிஞ்சுகளா.

    இவை எல்லாம் ரசிகர்கள் மன்றம் கண்ட தோழர்களுக்கு வழங்க பட்ட சர்டிபிகேட்கள்.

    அந்த பொன்மன செம்மல் ஆட்சியில்.

    1.முதன் முதலாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    2....விவசாய விளைநிலங்கள் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக 10 ஆண்டுகளில் உயர்ந்தது.

    3....கரும்பு விளைச்சலில் இந்தியாவில் 10 ஆண்டுகள் முதல் இடம்.

    4...நெல் உற்பத்தியில் 2 ஆம் இடம்.

    5....மின் உற்பத்தியில் 3 ஆம் இடம்.

    6....ஆலயங்கள் தோறும் விளக்கேற்றி வைக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக இங்கே தமிழகத்தில்.

    7....விளைச்சல் இல்லாத நேரங்களில் விவசாயிகளின் சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை கடனுக்கு பதில் பறிமுதல் செய்யக்கூடாது என்ற சட்டம் முதலில் இந்தியாவில் இங்கே.

    8....குடிசை வீடுகளுக்கு குண்டு பல்பு இப்ப இருந்தா எல்.ஈ.டி.. போட்டு இலவச மின்சாரம்.

    9....முதன் முதலாக விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்.

    10....அரசு சார் ஓட்டுனர்களுக்கு உணவு படி.

    11....முதன் முதலில் குடும்ப ரேஷன் அட்டைகள் வழங்க பட்டது தலைவர் ஆட்சியில்.

    12..காவலர் உடை சீர்திருத்தம், மகளிர் காவல் துறை....கொண்டு வந்தார்.

    13....அறநிலையத்துறை மூலம் சிறப்பு திருமணம்..வசதி இல்லா ஜோடிகளுக்கு சீரவேட்டி, புடவை, தாலி மற்ற சீர்பொருள்கள் வழங்க பட்டு திருமணம்

    இன்னும் இருக்கு ஏராளம்....தொடரும்...

    வாழ்க எம்ஜியார் புகழ்.

    நன்றி...உங்களில் ஒருவன்..

    இந்திய அளவில் எந்த லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்காத ஒரு சில முதல்வர்களில் ஒருவர் நம் தலைவர்.........

  5. #204
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆரின் இசை ஞானம்"

    M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
    ‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!

    பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

    ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
    இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
    வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
    கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
    ‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.

    வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.
    நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
    ‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
    பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
    இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
    ‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
    வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’
    ‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
    தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
    ஆடாத மனமும் உண்டோ?...’


    ____________________________________________

    எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் ‘மீரா’. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு போன்ற கலைஞர்களின் கச்சேரிகளை ரசித்துக் கேட்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்..........
    ____________________________________________

  6. #205
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர், சினிமாவிலும் பின்பற்றிய தர்மம்"!

    M.g.r. தனது படங்களின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சென்றார். படங்களின் கதை, வசனம், பாடல்கள் மட்டுமின்றி, படத்தின் பெயரே மக்களுக்கு நேர்மறையான, நல்ல செய்திகளை சொல்வதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.
    சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது ஒரு வியாபாரமும் கூட. நேரடியாகவும் மறைமுகமா கவும் அந்த தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் இருக்கின்றனர். அப்படி ஒரு தொழிலாக செய்யும்போது அதை லாப நோக்கோடுதான் செய்யமுடியும். லாபம் வந்தால்தான் அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் பிழைக்க முடியும். அதற்காக படங்களில் மசாலா விஷயங் கள் சேர்ப்பது தவிர்க்க முடியாதது. பொழுதுபோக்கும், வணிக வெற்றிக் கான லாப நோக்கமும் இருந்தாலும் கூட, அதிலும் ஒரு தர்மத்தை கடைபிடித்து சினிமாவின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். பதிய வைத்தார்.
    சினிமா திரையரங்கு சென்று படம் பார்க் காதவர்களுக்கு கூட, சுவரொட்டிகளும் படத்தின் பெயரும் கண்களில்படும். எனவே, படத்தின் பெயரே நல்ல கருத்துக் களையும் உழைப்பின் மேன்மையையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். அதன் விளைவுதான் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலை காக்கும்', 'தொழிலாளி', 'விவசாயி' , 'நீதிக்குத் தலைவணங்கு', 'உழைக்கும் கரங்கள்'… என்று நீளும் அவரது படங்களின் பெயர்கள்.

    எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.
    அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
    படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.
    லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.
    ''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழு வினர் வியந்தனர்.

    'நல்ல நேரம்' படத்தில் உழைப்பின் மேன் மையை வலியுறுத்தும் வகையில் கவிஞர் புலமைப் பித்தன் எழுதிய ''ஓடி ஓடி உழைக் கணும்…' என்ற அற்புதமான சூப்பர் ஹிட் பாடல் உண்டு. எம்.ஜி.ஆரின் அழகும் இளமையும் கூடிய வழக்கமான சுறுசுறுப்பு, காட்சிக்கு கூடுதல் பிளஸ். இந்தப் பாடலில் கவனிக்கத் தவறக் கூடாத ஒரு விஷயம். மக்களுக்கு வித்தை காட்டிக் கொண்டே பாடும் இந்தப் பாடலின்போது, ஒரு இடத்தில் கைகளை தரையில் ஊன்றி எம்.ஜி.ஆர். மூன்று முறை 'பல்டி' அடிப்பார்.அப்போது, அவ ரது உள்ளங்கைகள் தரையில் பதியாது. விரல்களை மட்டுமே ஊன்றிக் கொள்வார். இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல் எடை முழுவதையும் விரல்களில் தாங்குகிறார் என்றால் அவரது விரல் களுக்கு உள்ள வலிமை புரியும்.
    படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்தப் பாடலில் அமைந்த வரிகள்...
    'நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்'

    இதுதான் எம்.ஜி.ஆர்............

  7. #206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " எம்.ஜி.ஆர், - அவர் புகழுக்கு முடிவேது?"
    ��������������������

    m.g.r.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!
    பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
    ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.
    பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.
    இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.
    அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
    மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.
    எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.
    அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.
    முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!
    மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!
    விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!

    முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.
    ‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.
    எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!
    பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.
    தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!
    ‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.
    **********.........

  8. #207
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் புலிதான் . அவர் படங்களிற்க்கு விளம்பரம் தேவையில்லை.

    எம்.ஜி.ஆர். நடித்து 1971-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் ‘ரிக் ஷாக்காரன்’. பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்.ஜி.ஆர். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகிய திரையரங்குகளில் 1972 இல் "ரிக்க்ஷாக்காரன்"
    திரையிடப்பட்டது.
    இலங்கையில் தயாரிக்கப்பட்ட "குத்துவிளக்கு" என்கிற திரைப்படம் 1972 இல் யாழ் Windsor தியேட்டரில் திரையிடப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள அதிகமான பாடசாலைகளில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. காலை 9:00 மணிக்கு பாடசாலையிலிருந்து பஸ் மூலம் எங்களை Windsor தியேட்டருக்கு அழைத்து ச்சென்றார்கள். Windsor தியேட்டர் கோலாகலமாக தோரணங்களால் ஜோடிக்கப்பட்டிருந்தது.
    Windsor தியேட்டருக்கு அருகாமையில் Lido தியேட்டரில் " இன்று முதல் எம்ஜிஆர், மஞ்சுளா நடித்த "ரிக்சாக்காரன்" என்று சிறிய பலகை வைக்கப்பட்டிருந்தது. இரு தியேட்டர்களையும் ஒரு சிறிய சுவர் பிரிக்கிறது . குத்துவிளக்கு படத்திற்கு வந்தவர்களில் அரைவாசிக்கு மேட்பட்டவர்கள் Lido தியேட்டர் மதில் பாய்ந்து ரிக்க்ஷாகாரன் படத்தை பார்க்க நுழைந்துவிட்டோம் . இப்படம் யாழ் welington தியேட்டரில் House Full காட்சியாக காலை 8:00 மணியிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. காலை 9;00 மணிக்கு Lido தியேட்டர் House Full ஆகிவிட்டது. இரு தியேட்டர்களும் 3 நிமிடம் நடக்கும் தூரத்தில் உள்ளது. மறக்கமுடியாத அந்த நாட்கள் .......
    "பூனையல்ல புலிதானென்று போகப்போக காட்டுகிறேன் ....."........

  9. #208
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்...
    நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்
    �� அத்தியாயம்: 18��

    21 வயதில் எம்.ஜி.ஆருக்கு அந்த வயதுக்கே உரிய காதல் எண்ணம் அரும்பியது. திரைப்படங்களில் கதாநாயகிகளை உருகி உருகி காதலித்து வெற்றிபெற்ற எம்.ஜி.ஆரால் தன் முதல் காதலில் வெற்றிபெற முடியாமல் போனது ஆச்சர்யமல்ல. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாயிற்றே!

    இளைய மகனும் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த சத்தியபாமா, பெரிய பிள்ளையைப் போன்றே ராம்சந்தருக்கும் உறவிலேயே பெண் பார்த்து திருமணத்தை முடித்துவைக்க முடிவெடுத்தார். பாலக்காட்டில் சில நாட்கள் தங்கி அப்படி ஒரு பெண்ணை தேடிப்பிடித்தார்.

    பாலக்காட்டில் துாரத்து உறவினர் ஒருவருடைய மகள்தான். பெயர் பார்கவி. நல்ல கோதுமை நிறம். கேரளாவுக்கே உரிய அழகு. மகனுக்கு நிச்சயம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் திருமணத் தேதியையே குறித்துவிட்ட சத்தியபாமா, “என்ன செய்வாய் என்று தெரியாது. தம்பியை உடனே பாலக்காட்டிற்கு அனுப்பிவை. நீயும் வந்துவிடு”- என நிலைமையைச் சொல்லி சக்கரபாணிக்கு கடிதம் எழுதினார். ஆனால் தம்பியின் சுபாவம் அறிந்தவரான சக்கரபாணி, திருமணம் நிச்சயமான தகவலை சொன்னால் கோபப்படுவானே தவிர ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதை உணர்ந்திருந்தார்.

    அம்மாவின் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு அன்றிரவு முழுவதும் யோசித்து ஒரு தீர்வு கண்டார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றுதான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே...பெரியவர் சக்கரபாணி சொன்னது ஒரே பொய்தான்.

    “ஊருக்கு போன இடத்தில் அம்மாவுக்கு உடல் சுகமில்லையாம். உடனே உன்னையும் மணியையும் பார்க்கனும்னு புலம்பறதா உறவினர்கள்ட்ட இருந்து தபால் வந்திருக்கு. உடனே புறப்பட்டுப் போ... நானும் அண்ணியும் பின்னாடியே வர்றோம்”

    'அம்மாவுக்கு உடல் சுகமில்லையா'

    - அதிர்ந்துபோன எம்.ஜி.ஆர் அடுத்த ரயிலிலேயே பாலக்காட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு போனபின்தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து தாயிடம் கோபப்பட்டார். 'திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் தான் பாலக்காட்டிலேயே செத்துப்போவேன் என சத்தியபாமா மிரட்டிப் பணியவைத்தார். ஆனாலும் கோபம் இருந்தது. எல்லாம் பார்கவியை பார்க்கும்வரையில்தான். மணமேடையில் பார்கவியை பார்த்தபின் அவரது கோபம் போன திசை தெரியவில்லை.

    'திருமண உடையாக தான் கதர்தான் அணிவேன்' என்ற ஒற்றை நிபந்தனையுடன் பார்கவி கழுத்தில் தாலி கட்டினார் எம்.ஜி.ஆர். (பார்கவியுடனான எம்.ஜி.ஆரின் திருமணம் நடந்தது 1939 ம் ஆண்டின் பிற்பகுதி என்றே கணிக்கமுடிகிறது. அதுபற்றிய தெளிவான குறிப்பு எங்கும் கிடைக்கப்பெறவில்லை.)

    சென்னையில் எம்.ஜி.ஆரின் இல்லற வாழ்வு துவங்கியது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் நடித்து 'மாயா மச்சீந்திரா' படம் வெளியாகி இருந்தது. அப்போதுதான் தனது கணவர் சினிமா நடிகர் என்ற விஷயமே பார்கவிக்கு தெரியவந்தது.

    சுத்த சைவமான பார்கவி கணவருக்காக சைவ உணவுகளை சமைக்கக் கற்றுக்கொண்டார். சக்கரபாணி குடும்பத்தினருடன் எளிதாக ஒட்டிக்கொண்டார். எந்த மனவேறுபாடுமின்றி இயல்பாக அவர் எல்லோரிடமும் பழகிய விதம் சத்தியபாமாவுக்கு மகிழ்ச்சியளித்தது. மகனுக்கு நல்லதொரு மனைவி வாய்த்ததில் அவருக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. தனது மகள் தங்கமணி உயிரோடு இருந்தால் எப்படியெல்லாம் இருப்பார் என கற்பனை செய்திருந்தாரோ அப்படியே பார்கவியின் குணம் இருந்ததும் அவருக்கு கூடுதல் சந்தோஷம்.

    இதனால் மருமகளை தங்கமணி என்ற தனது மகளின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார். பார்கவி என்ற தனது சொந்தப் பெயரையே மறந்துவிடும்படி கொஞ்சநாளில் உறவினர்கள் அனைவராலும் தங்கமணி என்றே அழைக்கப்பட்டார் பார்கவி.

    இல்லற வாழ்க்கை இனிதாக கடந்துகொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அரிதாகவே வாய்ப்புகள் வந்தன. அதுவும் சிறுசிறு பாத்திரங்கள். கதாநாயகன் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு அவை வெறுப்பையே தந்தன. என்றாலும் பொருளாதார சூழலுக்காக அவற்றில் நடித்துவந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அவர் எதிர்பார்த்த கதாநாயகன் கனவு நிறைவேறும் நாள் வந்தது.

    நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய சிலநாட்களில் தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குனர் நந்தலால் என்பவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்கும் மனவருத்தமடையச் செய்யும் சில சம்பவங்கள் நடந்தன. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார். கதாநாயகி அவரின்
    முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

    அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து, 'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார். எம்.ஜி.ஆர் மனதில் இது நீங்காத காயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆயினும் அரிதாக கிடைத்த கதாநாயகன் வாய்ப்பை அவசரப்பட்டு இழந்து எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என தன் வேதனையை வெளிக்காட்டாமல் தொடர்ந்து நடித்தார்.

    ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்தது. அடுத்த சில நாட்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் முற்றி படமே நின்றது. கதாநாயகன் கனவு கலைந்த விரக்தியில் எம்.ஜி.ஆர் வீட்டில் முடங்கிக்கிடந்தார் சில மாதங்கள். அதேசமயம் அவருக்கு சினிமாத்துறை மீது கோபமும் எழுந்தது. அந்தக் கோபத்தில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவெடுத்தார் அவர்.

    என்ன முடிவு அது..?

    http://www.vikatan.com/news/coversto...isode--18.html
    Quote
    நவீனன் 1,007
    Posted March 7, 2017
    "சினிமாவை வெறுத்து இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19

    சினிமா வாய்ப்புகள் இல்லாததும், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பும் கடைசி நேரத்தில் கைநழுவிப்போன விரக்தியில் எம்.ஜி.ஆர் தீவிர சிந்தனை வயப்பட்டார். 'திருமணமாகிவிட்டதால் அடுத்தடுத்து குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கலாம்; நாடக சம்பாத்தியத்தில் அவற்றை ஈடுகட்டமுடியாது. அதேசமயம், “டேய் நம்ம ராம்சந்தர் சினிமாவில் நடிக்கிறான்டா” என அவனது நண்பர்கள் அவரை உயரத்தில் வைத்து கொண்டாடிக்கொண்டிக்கிறார்கள். இந்த நேரத்தில் சினிமாவில் கிடைத்த தோல்வியோடு நாடகத்திற்கே திரும்பினால் அவர்கள் முகங்களில் எப்படி விழிப்பது”.. 'ராம்சந்தர் தோத்துட்டான்டா' என அதே வாயால் அவர்கள் கேலி செய்ய மாட்டார்களா..' பல இரவுகள் எம்.ஜி.ஆருக்கு இதே சிந்தனை. தீவிர சிந்தனைக்குப்பின் சினிமா சாராத ஒரு தொழிலுக்கு சென்றுவிடுவதென்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அதாவது யாருக்கும் தெரியாமல் சினிமாவை விட்டே முற்றாக விலகுவது என்ற முடிவு!

    சென்னையில் அப்போது இரண்டாம் உலகப்போருக்கான சூழல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று எம்.ஜி.ஆர் நம்பினார். ராணுவத்திற்கான தேர்விலும் பங்கேற்றுவிட்டு கடிதத்திற்காக காத்துக்கொண்டிருந்தநேரத்தில் மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது அவருக்கு. சாதாரண வேடம் இல்லை... கதாநாயகனாக!

    அதேசமயம் எம்.ஜி.ஆர் ராணுவத்தில் வேலைக்கு சேருவதென எடுத்த முடிவு தாயார் சத்தியபாமாவுக்கு தெரியவர கொதித்துப்போனார். “ தங்கம்போல இரண்டு பசங்களை பெத்திருக்கேன். எங்கேயோ கண்காணாத இடத்துல போய் நீ இருக்கியா இல்லையான்னு சந்தேகத்தோட நான் என் வாழ்க்கையை வாழனுமா...அப்படி ஒண்ணும் நீ லட்சம் லட்சமாக சம்பாதிக்கத்தேவையில்ல...இங்கவே இரு....”

    மீண்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் சொன்னபடி வாய்ப்பு தரவில்லை அந்த சினிமா நிறுவனம். ஆனால் இந்த முறை விரக்தியடையவில்லை, சினிமா வாய்ப்புகளுக்காக ஸ்டுடியோக்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தார்.

    அப்படி கிடைத்ததுதான் அசோக்குமார் பட வாய்ப்பு. அன்றைய சூப்பர் தியாகராஜ பாகவதருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சியளி்த்தது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் பார்கவியுடனும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தமுடியவில்லை அவரால். அத்தனை மன்ச்சோர்வுக்குள்ளாகியிருந்தார் அக்காலத்தில். இருந்தாலும் 'சினிமாவில் என்றாவது ஒருநாள் நாம் வென்றுவிடுவோம்' என்ற நம்பிக்கை மட்டும் மனதில் கனன்றுகொண்டேயிருந்தது.

    அப்போது இரண்டாம் உலகப்போருக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. போரின் விளைவாக சென்னை நகரத்தின் மீது குண்டுகள் பொழியும் என்று பீதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. சென்னையின் பிரபலஸ்தர்கள் பலரும் வந்தவிலைக்கு தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு ரயில் ஏறினார்கள் சொந்த ஊருக்கு. சத்தியபாமாவும் அந்த யோசனையை தெரிவித்தார் மகன்களிடம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சினிமாவில் வெற்றிபெறுவதற்கான காலம் கனிந்துவரும் சூழலி்ல் உயிருக்கு பயந்துபோய் ஓடிவிடுவதா என சகோதரர்கள் இருவருமே
    தெளிவாக சொன்னார்கள். சத்தியபாமா, “குறைந்தது மருமகள் பிள்ளைகளை மட்டுமாவது பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம். போர் முடிந்து ஆபத்து இல்லையென்பது முடிவானபின் அழைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். அதை ஏற்றார்கள் மகன்கள்.

    ஆனால்கணவரைப் பிரிய இரு மருமகள்களுமே சம்மதிக்கவில்லை. இறுதியாக ஒப்புக்கொண்டனர். ரயில் நிலையத்தில் தங்கமணியும், சக்கரபாணி மனைவி நாணிக்குட்டியும் அழுது அழுது விங்கிய கண்களுடன் பாலக்காட்டிற்கு புறப்பட்டனர். பாலக்காட்டிலிருந்து தங்கமணி கணவருக்கு கடிதம் எழுதியபடியே இருந்தார். பார்கவி புறப்பட்டுச் சென்ற 20 வது எம்.ஜி.ஆருக்கு திடீரென மனைவியின் ஞாபகம் நினைவில் வந்துவந்து சென்றது. மறுநாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் எம்.ஜி.ஆர் புறப்பட்ட அதேநேரத்தில் பாலக்காட்டிலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது.

    தந்தி சென்னை வந்துசேர்ந்த சமயம் எம்.ஜி.ஆர் பாலக்காட்டில் தங்கமணி வீட்டை அடைந்துவிட்டார். மகிழ்ச்சியான மனநிலையில் வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அதிர்ச்சி. தங்கமணியின் படத்திற்கு மாலைபோட்டி வத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 'ஐயோ' என்று அலறியபடி கீழே விழுந்தார் எம்.ஜி.ஆர். சக்கரபாணி மனைவி நாணிக்குட்டி மச்சினரைத் தேற்றி விஸயத்தைச் சொன்னார்.

    முன்தினம் காலை மார்பு வலிப்பதாக சொல்லி தண்ணீர் வாங்கிக்குடித்த தங்கமணி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்கள். தந்தி வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டதால் இந்த விபரங்கள் தெரியாமல் அவர் வந்து சேர்ந்திருக்கிறார். நாயர் வகுப்பினரின் குல வழக்கப்படி உடலை சீக்கிரம் புதைத்துவிட்டிருக்கிறார்கள். பேரிடியாக சொல்லப்பட்ட இந்த தகவலால் நொந்துபோனார் எம்.ஜி.ஆர். மனைவியின் உடலைக்கூடபார்க்கமுடியாமல் போன சோகத்திலிருந்து அவர் மீள பல மாதங்கள் ஆனது.

    இதனிடையே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சிறுசிறுவேடங்கள் என்றாலும் நடிக்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் தமிழறியும் பெருமாள், தாசிப்பெண், ஹரிச்சந்திரா படங்கள் வெளியாகின. இதன்பிறகு சாலிவாஹனன். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தினால் பெரிய புகழ் ஒன்றும் கிடைத்துவிடவில்லை என்றாலும் வேறொரு வகையில் இந்தப் படம் எம்.ஜி.ஆர் வாழ்வி்ல் முக்கியத்துவம் பெற்றது. ஆம்... இந்த படத்தில்தான் தன் வாழ்வின் பிற்பகுதியில் தன்னுடைய நெருங்கிய நண்பராகப்போகிற முக்கிய நபர் ஒருவரை அவர் சந்தித்தார். அந்த சந்திப்பிற்குப்பிறகு எம்.ஜி.ஆர் தன் திரைப்பட வாழ்வின் வளர்ச்சிக்கான முக்கியமான முடிவுகளை எடுத்தார்.

    யார் அவர்....

    தொடரும்...........

  10. #209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சூப்பர் தகவல்... கடந்த 18-04-2020 முதல் 24-04-2020 வரையிலான Television Rating Points (TRP) சன் டிவியில் ஒளிபரப்பான படங்களில் "எங்க வீட்டு பிள்ளை" 5 வது இடத்தை கைப்பற்றி மாபெரும் மகத்தான சாதனை படைத்திருக்கிறார் இன்றும் மக்கள் திலகம்... அதற்கு முன் 4 இடங்களில் விஜய், சூர்யா படங்கள், செய்தி சேனல் இடம் பெற்றுள்ளன. தகவல் தெரியப்படுத்திய நண்பருக்கு நன்றி...

  11. #210
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமணி*-கொண்டாட்டம் -03/05/20
    ---------------------------------------------------------
    குரலை மாற்றி பாட முடியாது*
    ------------------------------------------------
    மறைந்த பிரபல தமிழ் பின்னணி* * *பாடகர் டி.எம்.சவுந்தரராஜனைப்போல குரலை*மாற்றிப்பாட யாராலும்** முடியாது .

    1950ஆம் ஆண்டு முதல் 70களின் கதாநாயகர்கள், துணை நடிகர்கள் , நகைச்சுவை நடிகர்கள் , சில வில்லன் நடிகர்கள் எல்லாம் டி.எம்.எஸ். தமக்கு பாடமாட்டாரா என்று தவம் கிடந்தார்கள் .**

    எம்.ஜி.ஆரிலிருந்து* நாகேஷ், தேங்காய் ஸ்ரீநிவாசன், அசோகன், எம்.ஆர். ராதா வரை எவரையும் டி.எம்.எஸ். விட்டுவைக்கவில்லை .

    புதிய படங்களின் இசை தட்டுக்கள் புதிதாய் வெளியாகிறபோது* அவற்றை வீதியெங்கும் கேட்கும்படி ஒலிபரப்பிப்* பிரபலபடுத்துவது அந்தக்கால சவுண்ட் சர்வீஸ் கடைகளின் வழக்கமாக இருந்தது .**
    காவல்காரன் ரிலீசான புதிதில்* நினைத்தேன் வந்தாய் நூறுவயது , கேட்டேன் தந்தாய் ஆசை மனது என்கிற பாட்டு காந்தமாக* இழுத்தது*

    (ஏ. எ . ஹெச் .கே. கோரி எழுதிய ஊருக்கு ரெண்டு கதை நூலில் இருந்து*-தங்க சங்கர பாண்டியன், சென்னை .

  12. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •