Page 72 of 210 FirstFirst ... 2262707172737482122172 ... LastLast
Results 711 to 720 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #711
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச் செம்மலின் காவியங்களின் மகத்தான சாதனையில் சென்னை நகரம்..

    1964 ஆம் ஆண்டு வரை சென்னையில் அதிக வசூல் பெற்ற ஒரே படமாகத் திகழ்ந்தது. எம்.ஜி.யார். பிக்சர்ஸின்*
    புரட்சி நடிகர் எம் ஜி ஆர் வழங்கும் நாடோடி மன்னன்*
    திரைக்காவியம் ஆகும்.

    அதன் பின் 1965 ஆம் ஆண்டு எங்கவிட்டுப்பிள்ளை திரைக்காவியம் முதன் முறையாக 10 லட்சத்தை கடந்து 13 இலட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்க வீட்டுப் பிள்ளையை தொடர்ந்து 1969 ல் எம் .ஜி.யார் பிக்சர்ஸின் இரண்டாவது தயாரிப்பான அடிமைப்பெண் காவியம் 13 லட்சத்திற்கும் மேல் வசூலைக் கொடுத்த இரண்டாவது காவியமாக திகழ்ந்தது.
    அதனைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைப்படமும் 13 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது.**

    மூன்று திரைப்படங்களும்*
    13 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது மக்கள் திலகத்திற்கு மட்டுமே.

    1971ம் ஆண்டு வெளியான ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் சென்னை நகரின் 20 வாரத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்து தென்னக ரீதியில் முதன்மை பெற்ற காவியமாக திகழ்ந்தது..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #712
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மூன்றாவது தயாரிப்பான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் தென்னக திரைப்பட உலகில் 23 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்து........
    1978 ஆம் ஆண்டு வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத சாதனையாக உலகம் சுற்றும் வாலிபன் காவியம் திகழ்ந்தது.

    1978 ஆம் ஆண்டு வரை சென்னை நகரில் முதன்மை பெற்ற திரைப்படங்கள்*
    உலகம் சுற்றும் வாலிபன்*
    23 லட்சத்தை கடந்தது.....
    இதயக்கனி திரைக்காவியம்*
    100 நாளில் 20 லட்சத்தை நெருங்கியது.
    மூன்றாவது 100 நாளில்*
    மீனவ நண்பன் திரைக்காவியம்*
    18 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.
    நான்காவதாக ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 17 லட்சத்தை நெருங்கி வெற்றியைத் தொட்டது.
    அடுத்து.....*
    இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம் 100 நாளில்*
    16 லட்சத்தை தொட்டு சாதனை படைத்தது.
    அடுத்து*
    பல்லாண்டு வாழ்க திரைக்காவியம் 100.நாளில்*
    15 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.

    மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் வசூலில் பெரும் ஊழல் நடந்தது.*
    2 இலட்சம், 3 இலட்சம் அதிகமாகக் கூட்டி பொய்யான வசூலைக் கொடுத்து பொய்யான தகவல்களை தந்து விளம்பரப்படுத்தி போலியான வாழ்க்கையை தன் திரைப்படங்களில் நிரூபித்த நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் மக்கள் திலகமே என்றும் வசூல் சக்கரவர்த்தியாக உண்மையாக திகழ்கின்றார்..
    மேலும் தலைநகர் சென்னையில் குறைந்த நாளில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய காவியங்கள்*
    நீதிக்கு தலைவணங்கு*
    உழைக்கும் கரங்கள்*
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் போன்றவையாகும்.

    * மக்கள் திலகத்தின் உண்மையான நிலவரத்தை எடுத்துரைப்போம்!*

    *பொய்யர்களின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!*

    *பொன்மனச் செம்மலின் காவியங்களின் புகழை பட்டொளி வீசி பறக்க விடுவோம்!

    இந்தியா திரையுலகில்
    அசைக்க முடியாத சாதனையில்
    ஒரே ஒரு உண்மையான*
    நிஜ ஹீரோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே!.........

  4. #713
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தமிழகத்தின்_தனித்தன்மை:

    Behind woods சேனலுக்காக Anchor கோபிநாத் தொழிலதிபர் சுரேஷ் சம்மந்தம் அவர்களை நேர்காணல் செய்த வீடியோ ஒன்றை கண்டேன்!

    தமிழகத்தின் தனித்தன்மை பற்றி
    அவர் சொன்ன 4 விஷயங்கள்:-

    1.தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலை கள் அதிகம்! (குஜராத்திலோ, மஹாராஷ்டிராவிலோ அல்ல?)

    இங்கு 38,000 தொழிற்சாலைகள் உள்ளன! 23-லட்சம்பேர் பணியாற்றி
    வருகின்றனர்!

    2-வது இடம் மஹாராஷ்டிரா 28,000/அவற்றில் 18லட்சம்பேர்தான்
    வேலை செய்கின்றனர்!

    (தமிழகத்தில் பத்தாயிரம் அதிகம்! அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற் சாலைகளுமல்ல!
    23-லட்சம் பேர் அவற்றில் வேலை செய்கின்றனர்!)

    எட்டு விமான நிலையங்கள் உள்ள ஒரே மாநிலமும் தமிழகம்தான்!

    2.தமிழகத்தில் காமராஜர்காலத்தில் 40 கல்லூரிகள் என்றால்? இப்போது 1000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன!

    கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள தேனி மாவட்டத்திலேயே 30கல்லூரி கள் உள்ளன!

    உயர்கல்வி பயிலுவோர் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்-49% (மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சில யூனியன் பிரதேசங்களின் சதவீதத் தை தமிழகத்துடன் ஒப்பிட கூடாது)

    2030-ல் இந்திய அரசு எப்பாடுபட்டாவது அடைய வேண்டும் என்று நினைக்கிற இலக்கை,5ஆண்டுகள் முன்பாகவே தமிழகம் சர்வ சாதாரணமாகத் தொட்டிருக்கிறது!

    நாம் 15 ஆண்டுகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருக்கிறோம்!

    3.சுகாதாரத்தை ஒப்பீடு செய்தால்? அதற்கான அளவீடு குழந்தைகளின் இறப்பு விகிதம் தான்! இந்தியாவில் சராசரியாக1000-க்கு 34 குழந்தை கள் இறந்தால், இங்கே 1000-க்கு 17 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன!

    நாட்டின் தலைநகரமானடெல்லியை விட இந்த சதவீதம் குறைவு!

    4.மனிதர்களின் மகிழ்ச்சிகுறியீட்டிற் கான அளவீடாக பொருளாதார நிபுணர்கள் கருதுவது தனிநபர் பொருளாதார வேறுபாடுகள் தான்!

    இந்திய அளவில் ஒப்பீடே இல்லாது தமிழ்நாடு முன்னணியில் உள்ளது! இங்குதான் நடுத்தர மக்கள் 80% பேர் உள்ளனர்!

    கல்வி மற்றும் தொழில்துறையில் நிகழ்ந்த துரித வளர்ச்சியினால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது!

    எல்லோருடைய வாழ்க்கைத் தரமும் கூடியிருப்பதால்தான் இங்கு சாதாரண வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை!

    ஹிந்தி படித்தவர்கள் (பள்ளிக்கு சென்று படிக்க இயலாதவர்கள்) இங்கே கூலி வேலை செய்ய வருகின்றனர்!

    கண்டிப்பாக இதற்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய நான்கு முதல்வர்களும், இங்கு நிலைபெற்றிருக்கிற சமூக நீதிக் கொள்கையும்தான் காரணம்!

    அண்ணா விதைத்த சிந்தனைகள், அதன் தொடர்ச்சியாகவே, தமிழக அரசியல் சூழலை சரியான திசை யில் கலைஞர் நகர்த்திச் சென்றது, வரலாற்றின் அதிசயம் தான்!

    #எம்ஜிஆர்_ஒருபடி_மேலே_சென்று_நூற்றுக்கணக்கான_தொழிற ்கல்வி (என்ஜினியரிங்) கல்லூரிகளுக்கு அனுமதியளித்தார்!

    ஜெயலலிதாவும், அரசு நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் அதே பாட திட்டத்தையே பின்பற்றினர்!

    காமராஜரை மட்டுமே உயர்வாகப் பேசி விட்டு, பிறரை எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாகச் சித்திரிப்பது உள்நோக்கம் கொண்ட திரிபு!

    சொல்லப்போனால் #காமராஜர் காலத்தில் மிகச்சிறிய அடித்தளம் மட்டுமே போடப்பட்டிருந்தது!

    #மாபெரும்_மாளிகையைக்_கட்டி_எழுப்பியது_திராவிட_இயக் கங்களே!

    தமிழ்நாட்டை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்!

    இவ்வளவு தெளிவான புள்ளி விவரங்களுக்கு பிறகும் இளைஞர் கள் சிலர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்புவது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்!

    "#காமராஜர்_ஆட்சி_அமைப்போம்"

    "#திராவிடத்தால்_வீழ்ந்தோம்"

    ''#சிஸ்டம்_சரியில்லை”

    "#மாற்று_வேண்டும்"

    "#திராவிடக்கட்சிகளே_50ஆண்டுகளாக_ஆண்டுகிட்டு_இருக்க ாங்க",

    "#நான்_வலதும்_இல்லை_இடதும்_இல்லை_மய்யமா_சிந்திப்போ ம்"
    என்று ஒரு பம்மாத்து!

    இவையெல்லாமே, அறிவும், விழிப்புணர்வும் நிரம்பிய இந்த மண்ணில் கால் பதிக்கவே துப்பில்லாத ஒரு பாடாவதி கம்பெனி மாறுவேடத்தில் அனுப்பி உள்ள டம்மி நடிகர்களின் குரல்கள் தான்!

    நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டைக் காலி செய்தல், ஹிந்தித்திணிப்பு, மதவாத அரசியல், புதிய கல்விக் கொள்கை ஆகிய அனைத்துமே தமிழகத்தை வடமாநிலங்களைப் போல் மாற்றி விடும்!

    அன்பார்ந்த இளைஞர்களே! வரலாற்றையும்,புள்ளிவிபரங்களை சரியாக தெரிந்து கொண்ட பிறகு அரசியல் பேசுங்கள்!
    #வாட்ஸ்அப்_வதந்திகளை_நம்பாதீர்

    மிகப்பெரிய வளர்ச்சி கண்ட மாநிலத்தின் எதிர்காலத்தை சாதி- மத உணர்வுகளில் சிக்கி வீணாக்கி விடாதீர்கள்!

    தமிழகத்தின் அரசியல் இதுவரை ஆக்கப்பூர்வமான அரசியலாகவே இருக்கிறது!
    #மாற்று_என்பதே_மிகப்பெரிய_வலை

    அதில் சிக்கிக் கொண்டால் இன்னொரு உத்திரபிரதேசமாக நாம் மாறி விடுவோம்!

    தமிழக அரசியலே, இந்தியாவின் வழக்கமான அரசியலுக்கெதிரான மாற்று அரசியல்தான் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!

    இனியும் திராவிட ஆட்சிமுறையைப் பற்றியே, குறைசொல்லி திரியாமல் ஊழலற்ற ஆட்சியைத் தரக்கூடிய, நிர்வாகத் திறமை மிகுந்த, சுயநலம் அற்றதோர் அரசியல் தலைமையை கண்டுபிடியுங்கள் இளைஞர்களே!

    #நன்றி: D L Nadarajan, Chennai.........

  5. #714
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967ல் திராவிட முன்னேற்ற கழகம்

    179 தொகுகளை வென்று
    ஆட்சியை பிடித்தது ......

    பரங்கிமலை தொகுதி வெற்றி வீரர் ஆனார் எம்ஜிஆர்

    பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து முதலமைச்சர் ஆனார்

    இயற்கையின் அழைப்பை ஏற்று 1969ல் அண்ணா வின்னுலகம் சென்றார்

    1971 ல் அண்ணாவின் மறைவிற்க்கு பின்நடைபெற்ற பொதுத் தேர்தலில்

    184 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்து திமுகழகம்

    அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது எம்ஜிஆர்

    காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது

    அண்ணாவின் அரசு
    கலைஞர் அரசாங்கமாக மாறியது

    சர்வாதிகாரபோக்கு திமுகவில் நிலவியது

    கருத்து வேறுபாடுகள் தோன்றியது.

    எதிர் கட்சிகள்
    ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறின.

    எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்

    தி.மு.கழகத்தினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்.

    தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் பேசினார்

    இதனால்
    1972ல் தூக்கி எறியப்பட்டார் எம்ஜிஆர்.

    எம்ஜிஆரை நீக்கியது மட்டுமின்றி அவரின் ரசிகர்கள் நாடு முழுவதும் தாக்கப் பட்டார்கள்

    ரசிகர்மன்றங்கள் பிய்த்து எறியப்பட்டது ...

    எம்ஜிஆர் மன்றங்கள் தீக்கிரையானது...

    எம்ஜிஆரை அச்சுறுத்தி பார்த்தார்கள் ...

    தனது ரசிகன் தக்கப்படும் செய்தி கேட்டு கவலையடைந்தார் ...

    வெகுண்டு எழுந்தார் எம்ஜிஆர்...

    உருவானது அண்ணா திமுக

    திமுகழத்திற்க்காக உழைத்து அண்ணாவை அரியணையில் அமர்த்தியது எம்ஜிஆர்

    எம்ஜிஆரின் மக்கள் சக்தியை உணர்ந்து இருந்தார் பேரறிஞர் அண்ணா .

    திமுகழகத்திற்க்காக தன் உயிரையும் கொடுக்க தயார் என்று முழங்கியவர் எம்ஜிஆர்

    நான் இறந்து போனாலும் என் மீது கருப்பு சிவப்பு இரு வண்ணக் கொடிதான் போர்த்தப்பட வேண்டும் என்று உணச்சி பொங்க பேசியவர் எம்ஜிஆர்

    அப்படிப்பட்ட எம்ஜிஆரை தூக்கிஎறிந்ததுதோடு

    ரசிகர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதால்தான்
    அண்ணாவின் பெயரில்
    அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவானது

    இன்று வரை புரட்சித் தலைவர் mgr என்கிற மூன்று எழுத்து நாயகனால் வலுவான இயக்கமாக இருக்கிறது என்றால் ...

    அதற்கு mgr என்கிற மூன்று எழுத்து மந்திரம் தான் காரணம்............

  6. #715
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதிகம் படிக்காதவர் என்று சொல்லப்பட்ட
    இவர்தான் மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளை அதிகம் போதித்தவர்....������������
    சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பர்த்தவுடன் முதல் வணக்கம் வைப்பதுடன்
    வணங்கி அன்போடு பேசக்கூடியவர்....����
    அடுக்கு மொழியில் பேசமாட்டார் ஆனால்
    மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அடக்கமாக பேசி நெஞ்சத்தை அள்ளுவார்....��������
    வக்கீல்களிடம் என் மகன் எம்.ஜி.ஆர் ரசிகன் தவறுசெய்திருக்கமாட்டான் என்று தாயே
    வாதாடி ஜெயித்த வரலாறு இவருக்கு
    மட்டுமே உண்டு...������������
    அந்த பாரதரத்னா எம்.ஜி.ஆருடைய ரசிகர் என்று சொல்வதைவிட எங்களுக்கு பெரிய
    கௌரவம் இல்லை.....
    அவரைத் தவிர வேறு எவரையும் நாங்கள்
    நினைப்பதுகூட இல்லை.....����������
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ் ....��������.........

  7. #716
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படியும் ஒரு தலைவரா..!?

    சென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின் 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்!.காரணம் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் மூன்று பிரமுகர்களும் திடீரென ஊமையாகி விட்டார்கள்.

    எம்ஜிஆர் நீண்ட தூரப்பயணங்களில் வழக்கமாக உடன் வரும் நண்பர்கள்தான் அவர்கள்.கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் , பல ஆண்டுகளாக அவரோடு இரவு பகல் பாராமல் பயணித்துக்கொண்டு இருப்பவர்கள்தான்.
    அன்றும் அவர்களை வழக்கம்போல வீட்டுக்கு அழைத்திருந்தார். எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்,சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

    அப்போதுதான் எம்ஜிஆர் அறைக்குள் போய் ஒரு பணகட்டும் சிறு நகைப் பெட்டி ஒன்றுமாக எடுத்துக்கொண்டு வந்து 'வாங்க ஒரு கல்யாணத்துக்கு போகலாம்' என்று மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார்.கார் தாம்பரம் வரும் வரை எல்லோரும் சாதாரணமாக பேசிக்கொண்டுதான் வந்தார்கள். எம்ஜிஆர், திடீரென நினைத்துக் கொண்டவராக,' ஆமா,நாம யார் வீட்டுக் கல்யாணத்துக்குப் போறோம் தெரியுமா? என்று பின் சீட்டில் இருந்தவர்களைப் பார்த்து கேள்வியையும் கேட்டுவிட்டு ,பதிலையும் அவரே சொன்னார் '............!' திருச்சி அருகில் இருக்கும் ஒரு ஊரைச்சேர்ந்த பிரமுகரின் பெயரைச்சொல்லி, அவர் வீட்டுக்கு கல்யாணத்துக்குத்தான் போய்கிட்டு இருக்கோம்' என்றார். அதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டு வந்த மூவரும், அந்த விநாடி முதல் அவர்கள் மூவரும் ஊமயாகி விட்டார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்,ஆனால் வார்த்தையும் வரவில்லை,மனதிலுள்ளதை தலைவரிடம் சொல்லும் தைரியமும் வரவில்லை.

    இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆர், என்ன விசயம் என்று கேட்க,மூவரும் வண்டி விழுப்புரம் போகும்வரை அந்தக் கல்யாண வீட்டுக்காரரின் மேல் அடுக்கடுக்காய் குற்றம் சாட்டுகிறார்கள்.
    எம்ஜிஆர் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி கையைக் கட்டிக்கொண்டு சிந்திக்கிறார். அப்போதெல்லாம் அது சிங்கிள் ரோடு பெரும்பாலான வாகனங்கள் எல்லாம் போய்விட்டிருந்த நேரம்.அப்போதே மணி இரண்டாகிவிட்டது. சில் வண்டுகளின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அன்றைய பிரமுகர் வீட்டுக் கல்யாணத்திற்கு போகக் கூடாது என்று நண்பர்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில்,சாலையின் இடதுபுறம் தூரத்தில் ஒரு இரட்டை இலை சீரியல் லைட்டுகள் எரிவது எம்.ஜிஆரின் கண்ணில் படுகிறது.
    எம்ஜிஆர் காரில் ஏறிக்கொண்டு இரட்டை இலை வெளிச்சம் தெரிந்த இடத்தை நோக்கி காரை செலுத்தச் சொல்கிறார்.எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருக்கிறார்கள். கொஞ்ச தூரம் போனதும் இடது புறமாக பிரியும் ஒரு கிராமத்து சாலை பிரிகிறது. எம்ஜிஆர் அந்தச் சாலையில் காரைத் திருப்பச் சொல்கிறார்.மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் கண்கள் மட்டும் அந்த இரட்டை இலை சீரியல் செட்டையே பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
    நேரம் ஆக ஆக அந்த இரட்டை இலை பிரகாசமாகிக்கொண்டே வருகிறது. இப்போது சாலையின் வலதுபுறத்தில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து அந்த இரட்டை இலை மட்டுமல்ல ' வெல்கம்' என்கிற சீரியல் செட்டும் தெரிகிறது. எம்ஜிஆர் காரை அங்கே விடச்சொல்கிறார்.கார் அந்த ஊருக்குள் நுழைகிறது. தெருநாய்கள் கூட உறங்கிவிட்ட நேரம். கார் அமைதியாகப் போய் நிற்கிறது. யாரோ ஒரு எளிய அ.தி.மு.க தொண்டனின் வீடு என்று தெரிகிறது,சின்னஞ்சிறு தென்னை ஓலை பந்தல்.அங்கங்கே சுருண்டு தூங்கும் கல்யாண விருந்தினர்கள். எதிர் வீட்டு பக்கத்து வீட்டு தின்னையில் உறங்கும் சொந்தங்கள்.
    எம்ஜிஆர் காரை விட்டு இறங்குகிறார்.ஒரே ஒரு கட்டில் வாசிலில் போடப்பட்டு இருக்கிறது.அதில் ஒரு ஒல்லியான இளைஞன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். அவன் கையில் கட்டப்பட்டு இருக்கும் காப்பு அவன்தான் மணமகன் என்று காட்டுகிறது.எம்.ஜி.ஆர் குனிந்து அவன் கன்னத்தை தட்டுகிறார்,கண்விழித்துப் பார்த்த அவன் போட்ட ' தலைவரே' என்கிற கூச்சலில் அந்த ஊரே விழித்துக்கொள்கிறது.

    அடுத்த விநாடி எல்லா விளக்குகளும் எரிகின்றன.யாருக்கும் என்ன நடக்கிறது என்றோ என்ன செய்யவேண்டும் என்றோ புரியவில்லை.ஓரமாக அடுக்கப்பட்ட இரும்பு மடக்கு சேர்களில் இருந்து ஒன்றை எடுத்து வந்து யாரோ போட எம்.ஜி.ஆர் அதில் அமர்ந்துகொள்கிறார்.அங்கிருந்த அனைவருக்கும் நடப்பது அத்தனையும் கனவா அல்லது நிஜமா என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் சிலர் 'தலைவரே. என்றும் 'எந்தெய்வமே..' என்று பரவசத்தில் பெருங்குரலெடுத்து கத்துகிறார்கள்.

    அவர்களை மெதுவாக ஆசுவாசப்படுத்திக்கொள்ள விடுகிறார். சற்று நேரத்தில் அமைதியாகிறது அந்த இடம்.ஒருவர் மட்டும் எம்.ஜி.ஆர் அருகில் வந்து "அய்யா இப்படித் திடுதிப்புன்னு வந்திட்டிங்க..!? என்கிறார் பிரமிப்பு விலகாமல்." முகூர்த்தம் எத்தனை மணிக்கு ?" என்கிறார் எம்.ஜி.ஆர். " எங்க சாமியே வீட்டுக்கு வந்திருக்கு. இனி எல்லா நேரமும் முகூர்த்த நேரந்தானே " என்கிறார் பவ்வியம் காட்டியவர்.அப்புறம் என்ன?... திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களும்,மணமக்களும் உடனடியாக குளித்து அலங்கரித்துக்கொள்ள, அப்போதே திருமணம் நடைபெற்று முடிகிறது.

    தன்னை கனவிலும் எதிர்பார்க்காத ஒரு தொண்டன் வீட்டில் அழையாத விருந்தாளியாக நுழைந்து,அதிர்ச்சி விலகாத மணமக்கள் தாலிகட்டும் வரைக் காத்திருந்து,திருச்சி பிரமுகருக்குத் தர கொண்டுவந்த சங்கிலிகளை இருவருக்கும் பரிசளித்து,மணமகன் கைகளில் அந்தப் பணக்கட்டையும் தினித்துவிட்டு கிளம்பினாராம் எம்ஜிஆர்.அதனால்தான் அவர் 'புரட்சித்தலைவர். 'பொன்மன செம்மல்'!.........

  8. #717
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர்_சுளிர்_பதில்கள்...

    #ஒரு_ஃப்ளாஷ்பேக்

    நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

    வறுமைதான்.

    நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

    வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

    முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?

    ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை.

    மேடையில் எப்படி அனுபவம்?

    மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.

    பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?

    பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.

    உங்களுக்கு பாட வருமா?

    பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.

    சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?

    வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லே

    நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?

    நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.

    நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

    நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

    பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?

    நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.

    உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?

    சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.

    ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?

    இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்

    மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?

    தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.

    கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?

    நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.

    உங்களுக்கு குல தெய்வம் உண்டா?

    காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.

    உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

    என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

    நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?

    என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

    அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

    கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.

    ஸ்டுடியோ பணியாளராக இருந்து அதன் உரிமையாளராக உயர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    நெப்டியூன் ஸ்டுடியோவில் யாரோ ஒரு ஊழியனாக வேலை செய்தேன். முதலாளி ஜூபிடர் சோமு மிகப் பெரிய மனிதர். அனுபவத்திலும் ஆற்றலிலும் என்னைவிட எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அவருக்கே இந்த நிலைமை என்றால் நானெல்லாம் எத்தனை காலம் முதலாளியாக இருந்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இதுதான் வாழ்க்கை. மனிதனின் உடல் நிரந்தரம் இல்லாதது; நீர்க்குமிழி போல் எந்த நொடியும் அழையக் கூடியது என்பார்கள். உடல் மட்டுமா? பெயர், புகழ், செல்வாக்கு எல்லாமும் அப்படித்தான். அதைத்தான் நினைத்துக் கொள்வேன்.

    தமிழ் சினிமா முன்னேறி இருக்கிறதா?

    சினிமா ஒரு கூட்டு முயற்சி. ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஆனால் வெவ்வேறான செயல்களின் விளைவுதான் ஒரு திரைப்படம். கதை, வசனம், காட்சி அமைப்பு, இசை, நடிப்பு, உடை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என வேறு வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் சினிமா நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

    சினிமா விமர்சனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ஒரு பத்திரிகை என் நடிப்பு அற்புதம் என்கிறது. இன்னொரு பத்திரிகை மோசம் என்கிறது. மூன்றாவது பத்திரிகை அந்த இரண்டுக்கும் பொதுவாக என் நடிப்பு சுமார் என்கிறது. இதில் எதை நான் எடுத்துக் கொள்வது? எப்படி என் நடிப்பை திருத்திக் கொள்வது? இங்கே சினிமா விமர்சனம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கிறது. எம்ஜிஆர் என்ற நடிகனின் நடிப்பை மட்டும் பார்க்காமல் என் கட்சியை, என் கட்சியின் கொள்கையை என் தனிப்பட்ட வாழ்க்கையை மனதில் தேக்கிக் கொண்டு பார்ப்பதால் விமர்சனத்தின் நேர்மை கேள்விக்குறி ஆகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ள ஊக்கமாக விமர்சனம் இருந்தால் நல்லது என்பேன்.

    சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?

    இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம். காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது. படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

    அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது.

    ஹீரோ விரும்புகிற மாதிரியெல்லாம் கதையை மாற்றினால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி என்னாவது?

    ஒன்றும் ஆகாது. நான் நடிகன் மட்டுமல்ல. படம் எடுத்திருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன். எவ்வளவு காலமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்தால் படம் ஓடும் என்பது தெரியும். மதுரை வீரன் படமும் காத்தவராயன் மாதிரி கர்ணபரம்பரை கதைதான். வெள்ளையம்மாள் பாத்திரம் படுமோசமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். படத்தில் அந்த பாத்திரத்தை வேறுமாதிரி மாற்ற ஆலோசனை சொன்னேன். தயாரிப்பாளர் சம்மதித்தார். படம் பெரிய வெற்றி. அதே மாதிரி மலைக்கள்ளன் படத்திலும் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்திலும் சில ஆலோசனைகளை சொன்னேன். பட முதலாளிகள் ஏற்றுக் கொண்டு மாற்றியமைத்தார்கள். அந்த படங்களும் பெரும் வெற்றி பெற்றன. என்னுடைய கருத்தை நான் திணிப்பதாக நினைப்பது தவறு. என்னுடைய அனுபவத்தை அதில் கிடைத்த அறிவை பட முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன், அவ்வளவுதான்.

    சம்பளம் வாங்கும் நடிகர் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்துவிட்டு போவதுதானே முறை? நீங்கள் செய்வது சர்வாதிகாரம் ஆகாதா?

    ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. அர்த்தமில்லாத, போலியான, பித்தலாட்டமான மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைக்க முயன்றால் அது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா? நம்பத்தகுந்த, நம்பக்கூடிய காட்சிகள் என்றால் பரவாயில்லை. நம்பவே முடியாத, தர்க்க ரீதியாக ஏற்க முடியாத காட்சிகளை திணித்து மக்களிடம் காசு பறிக்க முயல்வது பேராசை. அதை ஒரு நடிகன் என்ற முறையில் நான் அனுமதிக்க முடியாது.

    பத்து இருபது பேரை ஏக காலத்தில் தன்னந்தனியாக அடித்து வீழ்த்துவது மட்டும் நம்பக் கூடியதா?

    தமிழ் சினிமாவில் வந்தால் மட்டும் நம்ப மாட்டீர்களா? புராணங்களில் அப்படி வரும் காட்சிகளை மக்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள். மகாபாரதம் கதையில் அர்ஜுனன் பெரிய வில் விற்பன்னர்களுடன் மோதுகிறான். சிக்கலான வியூகத்தை எளிதாக உடைத்து, எதிரிகள் அத்தனை பேரையும் முறியடித்துவிட்டு திரும்புகிறான். அதை நம்பி ஏற்றுக் கொள்கிறீர்கள். அர்ஜுனனால் அது சாத்தியம் என்றால் என்னை போன்ற ஹீரோக்களால் இதுவும் சாத்தியம்தான்.

    வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே?

    விமர்சகர்கள் சொல்கிறார்கள். மக்கள் அப்படி என்னைச் சொல்லவில்லையே. தவிர இன்னொன்றையும் கவனியுங்கள். 25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதை பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன். இதைப்போய் சிலர் குறை கூறுகிறார்கள்.

    உங்கள் படங்கள் சரியாக ஓடாததால் அரசியலில் தீவிரம் காட்டுவதாக சொல்கிறார்கள். நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதா?

    வியாபரம் ஓகோ என்று நடக்கும்போது யாராவது கடையை மூட நினைப்பார்களா? என் படங்களின் வசூலில் எந்த குறைவும் இல்லை. நீங்கள் வேறு யாரையும் கேட்க தேவையில்லை. என் படம் ஓடும் எந்த தியேட்டருக்கு போனாலும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதோ, சமீபத்தில் வெளியான என் படத்துக்கு 1 ரூபாய், 20 பைசா டிக்கெட், தியேட்டருக்கு வெளியே 16 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

    கோயில், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நீங்கள் நடிக்க மாட்டீர்களாமே?

    அது வெறும் வதந்தி. யார் கிளப்பியதோ தெரியாது. நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது. ஜெனோவா படத்தில் நடித்தேன். பரமபிதாவில் நடிக்கிறேன். பெரிய இடத்து பெண் படத்தில் எல்லாரையும் கோயிலுக்கு அழைத்து செல்வேன். சமீபத்தில் மருதமலை கோயிலுக்கு போய் வந்தேன்.

    பிறகு ஏன் பக்தி படங்களில் நடிப்பதில்லை?

    படம் எடுத்து அல்லது படத்தில் நடித்துதான் பக்தியை வளர்க்க முடியுமா. அப்படி இல்லை. பக்தி என்பது பரிசுத்தமானது. முன்பெல்லாம் மனசையே கோயிலாக்கி கடவுளை அதில் அமர்த்தி வைத்திருந்தார்கள். மனசு அழுக்கானதாலோ என்னவோ பிறகு கடவுளை கோயிலுக்கு அனுப்பி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனை கோயில்களை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாத பக்தியை சினிமா படங்களா வளர்த்து விடப் போகிறது? என்னை பொருத்தவரை தாயிடம் அன்பு, தந்தையிடம் மரியாதை, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்த பண்புகள்தான் மனதை தூய்மையாக்கும். மனம் தூய்மையானால் அதுதான் பக்தி. கடவுளாக வேஷம் போடாமலே அந்த பக்தியை நான் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.

    திடீரென்று வெள்ளை தொப்பி போட என்ன காரணம்?

    அடிமைப்பெண் ஷூட்டிங் நடத்த ராஜஸ்தான் சென்றபோது பாலைவனத்தில் வெயில் தாங்க முடியாமல் இருந்தது. ஒருத்தர் இந்த தொப்பியை கொடுத்து, ‘தலையில் போட்டுக்குங்க, வெயிலுக்கு இதமா இருக்கும்' என்றார். அப்ப்டித்தான் இருந்தது. பிறகு தேர்தல் வந்தது. பிரசாரத்துக்கு வெயிலில் மழையில் ரொம்ப சுற்ற நேர்ந்தது. அப்படியே தொப்பியை பழக்கமாக்கிக் கொண்டேன்.

    வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களே?

    தெரியும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எது தேவையோ அதை நான் பயன்படுத்துகிறேன். என் தலையில் முடி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். உடனே நான் எம்ஜிஆர் இல்லை என்று சொல்லி விடுவீர்களா, என்ன? இந்தி சினிமா நடிகர்கள் நிறைய பேர், என்னைவிட வயதில் குறைந்தவர்கள் தலையில் விக் இல்லாமல் வெளியே வருவதில்லை. அதுக்கு என்ன சொல்வீர்கள்? யார் என்ன சொல்வார்களோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. முன்பு ஜிப்பா போட்டேன். அப்புறம் காலர் வைத்த முழுக்கை சட்டைக்கு மாறினேன். அதை ஏதோ பேசினார்கள். ஒருநாள் சட்டையில் கை கிழிந்து விட்டது. சுருட்டி விட்டிருந்தேன். அதை பார்த்ததும், ‘எம்ஜிஆர் ரவுடி மாதிரி சட்டையை சுருட்டி விட்ருக்கார், பாரு' என்றார்கள். இதுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்.

    சினிமாவில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

    என்னைச் சுட்டது கூட பாசத்தால் என்கிறீர்களா? எதிரி யாருக்குதான் இல்லை? மனிதன் பிறக்கும்போதே அதுவும் தோன்றி விடுகிறது. தளர்ச்சி, அயர்ச்சி, பலவீனம் என்று இயற்கை எத்தனை தடைகளை மனிதன் மீது சுமத்துகிறது. அதைவிட பெரிய எதிரி என்று யாரும் இல்லையே. அதையெல்லாம் தாண்டித்தானே வளர்கிறோம். சினிமாவில் அப்படி எதிர்ப்பு, ஆதரவு கலந்துதான் இருக்கும். மேக மூட்டம் மாதிரி. மேகத்தை பார்த்ததும் இங்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்போம். எங்கிருந்தோ வரும் காற்று மேகத்தை தள்ளிக் கொண்டு போய்விடும். மழை வேறு எங்கோ பெய்யும். எதிர்ப்பை அப்படித்தான் எடுத்துக் கொள்வேன்.

    எந்த எதிர்ப்பையும் தாங்கும் இந்த மனப் பக்குவம் எப்படி வந்தது?

    இன்று நான் பெரிய நடிகன். வசதியாக வாழ்கிறேன். எனது வளர்ச்சி சிலரை பாதிக்கலாம். எனக்கு சிலர் தரும் ஆதரவு பலரை பாதிக்கலாம். நானே தெரியாமல் சில தவறுகள் செய்திருக்கலாம். இந்த காரணங்களால் எதிரிகள் உருவாகலாம். ஆனால் இந்த காரணங்கள் எதுவுமே இல்லாத காலத்தில் பல துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து பரிதாப நிலையில் வாழ்ந்தேனே, அதற்கு யாரை குற்றம் சொல்ல முடியும்? அந்த நிலையை நினைத்துப் பார்க்கும்போது இன்று எல்லா எதிர்ப்பும் சாதாரணமாக தெரிகிறது.

    சினிமாவுக்கு புதுசு புதுசாக நடிகர் நடிகைகள் வருவது நல்லதா?

    நிசயம் நல்லது. ஆனால் அப்படி நடக்கவில்லை. பயிற்சி பெறாதவர்கள் வந்தால் நீடிக்க முடிவதில்லை. இப்படியே போனால் நடிகனுக்கு பஞ்சம் வந்து விடும்.

    அதற்காக நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?

    செய்ய வேண்டும். 1948-ம் ஆண்டிலேயே இது பற்றி ஜூபிடர் சோமுவுடன் பேசி இருக்கிறேன். புதிதாக நாடக கம்பெனிகளை உருவாக்க வேண்டும். அதில் சிறப்பாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் அவ்வப்போது நாடகத்திலும் நடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டேன். அது நடக்கவில்லை.

    அதோடு விட்டு விட்டீர்களா?

    நடிகர் சங்கத்தில் இதை விவாதித்தோம். சிறந்த எழுத்தாளர்களை அழைத்து நாடகம் எழுத சொல்வோம். அமெச்சூர் நாடக நடிகர்களை அதில் நடிக்க சொல்வோம். பட முதலாளிகள் அந்த நாடகங்களை பார்த்து திறமையானவர்களை தேர்வு செய்யட்டும். அவர்களுக்கு சினிமா வய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சங்கத்தில் தீர்மானமே போட்டோம்.

    அதுவும் நடக்கவில்லையா?

    நடக்கவில்லை. பிறகு பட முதலாளி என்ற வகையில் ஃபிலிம் சேம்பரில் ஒரு யோசனை சொன்னேன். ஒரு நடிகனை ஒரே நேரத்தில் 6 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது. அப்படி உச்சவரம்பு வைத்தால் புது நடிகர்கள் வர வழி கிடைக்கும் என்று சொன்னேன். இப்படி பல யோசனைகள் சொல்லியும் ஏனோ நடக்கவில்லை.

    நடிகர் சங்கம் மூலமாக நடிப்பு பயிற்சி அளிக்கலாமே?

    அதையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் நாடக போட்டி நடத்தி, அதில் முக்கியமான வேடங்களை புதுமுகங்களும் சின்னச் சின்ன வேடங்களை பிரபல நடிகர்களும் ஏற்று நடிக்க வேண்டும். புதிய நடிகர்களின் திறமையை அதில் வெளிப்படுத்தி சினிமா உலக முக்கியஸ்தர்கள் அதை அங்கீகரிக்க செய்ய் வேண்டும் என்று முயற்சி செய்தேன். பலரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ஆனால் சில முக்கிய புள்ளிகள் இடையூறாக இருந்து திட்டத்தையே நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். நடிப்புக்கென்று தனியாக பள்ளிகள் இல்லாததால் சங்கம்தான் அதை எடுத்து செய்ய வேண்டும்.

    உங்களை போல மற்ற நடிகர்கள் ஏன் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லை?

    வாரியெல்லாம் நான் வழங்குவதில்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லாருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கு ஏற்ப கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?.........

  9. #718
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1000 பாடல்களுக்கு மேல் எழுதிய கவிஞர் முத்துலிங்கம்

    எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களுக்கு பாடல் எழுதியவர், கவிஞர் முத்துலிங்கம்.

    இவருடைய சொந்த ஊர் சிவகங்கை. பெற்றோர்: சுப்பையா சேர்வை - குஞ்சரம் அம்மாள்.

    சிவகங்கையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.

    சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சுரதா நடத்திய "இலக்கியம்'' என்ற கவிதை இதழில், இவருடைய முதல் கவிதை பிரசுரமாயிற்று.

    1958-ல் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்'' படம் வெளிவந்தது. அந்த படம் பற்றி, சுரதா ஒரு கவிதைப்போட்டி நடத்தினார். "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும் ஓடோடி வாரா உயர் தமிழில்...'' என்று தொடங்கும் கவிதை எழுதி பரிசு பெற்றார், முத்துலிங்கம்.

    இந்தப் பாடலைப் பார்த்த முத்துலிங்கத்தின் நண்பர்கள், "கவிதை நன்றாக இருக்கிறது. சுரதா மூலம் எம்.ஜி.ஆரை சந்தித்தால், நீயும் சினிமாவுக்குப் பாடல் எழுதலாம்'' என்று கூறினார்கள். நண்பர்கள் கொடுத்த ஆர்வம்தான், திரைப்பட பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசையை முத்துலிங்கத்தின் உள்ளத்தில் வளரச் செய்தது.

    படிப்பு முடிந்தது, திரைப்படக் கவிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் முத்துலிங்கம் சென்னைக்கு வந்தார். ஆனால், உடனடியாக அந்த ஆசை நிறைவேறவில்லையென்றாலும், "முரசொலி'' பத்திரிகையில் துணை ஆசிரியர் ஆனார்.

    அப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

    இந்தக் கட்டத்தில், வசனகர்த்தா பாலமுருகனின் நட்பு கிடைத்தது. அவர் முயற்சியால், டைரக்டர் மாதவனுக்கு சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' என்ற படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு, முத்துலிங்கத்துக்கு கிடைத்தது.

    இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது இளையராஜா அவரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார்.

    இளையராஜா போட்டுக்காட்டிய மெட்டுக்கு, முத்துலிங்கம் "தஞ்சாவூருச் சீமையிலே - கண்ணு தாவி வந்தேன் பொண்ணியம்மா'' என்ற பாடலை எழுதி, திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

    இந்தப் படத்தில் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா ஆகியோர் நடித்தனர். விஜயகுமாருக்கு இது முதல் படம்.

    தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க.வை தொடங்கியபோது, முத்துலிங்கம் அ.தி.மு.க.வில் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.

    இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்துக்கு முத்துலிங்கம் சென்றார். எம்.ஜி.ஆர். மாடியில் இருந்தார். அவருடன் `இன்டர்காம்' டெலிபோனில் முத்துலிங்கம் பேசினார்.

    "நீங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகிறீர்கள். மானேஜர் குஞ்சப்பனிடம் சொல்லி உங்களுக்குக் கொஞ்சம் பணம் தரச் சொல்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

    அதற்கு முத்துலிங்கம், "பணம் வேண்டாம். எனக்கு வேலை கொடுங்கள்'' என்றார். "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறியும், முத்துலிங்கம் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.

    முத்துலிங்கத்தின் மனதைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., தொடர்ந்து தன் படங்களில் பாட்டு எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.

    எம்.ஜி.ஆர். நடித்த "உழைக்கும் கரங்கள்'' (1976) படத்துக்கு, முத்துலிங்கம் இரண்டு பாடல்கள் எழுதினார்.

    "கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில்'' என்று தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடினார்.

    "முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார்?'' என்று இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது, "முத்துலிங்கம் பாடலில் மீட்டரும் சரியாக இருக்கிறது; மேட்டரும் சரியாக இருக்கிறது'' என்றார், விஸ்வநாதன்.

    எம்.ஜி.ஆர். நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க'' படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல் எழுதிக் கொண்டிருந்தார், முத்துலிங்கம். "ஏர்கண்டிஷன்'' அறையில் அவருக்கு சிந்தனையோட்டம் தடைபட்டது. எனவே, அறைக்கு வெளியே வந்து, அங்கிருந்த சவுக்குக் கன்றுகளை தொட்டபடி, பாடலுக்கான கருத்தை சிந்தித்துக் கொண்டே நடந்தார்.

    அதைப்பார்த்த பட அதிபர், "என்னய்யா இவன்! மரத்தைப் பிடிக்கிறான், மட்டையைப் பிடிக்கிறான்! பல்லவியை படிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கூறினார்.

    இது, முத்துலிங்கத்தின் காதில் விழுந்தது. "ஆம். நான் அதைப் பிடிப்பேன், இதைப்பிடிப்பேன். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து, உங்களுக்குப் பிடித்தபடி பல்லவியை எழுதிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, கோபமாக வெளியேறினார்.

    பின்னர் டைரக்டர் கே.சங்கரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவரை சமாதானப்படுத்தினார்கள். "சினிமா உலகில், பலரும், பலவிதமாகப் பேசுவார்கள். அதற்காகக் கோபப்பட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாடல் எழுதுவதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்'' என்றார்கள்.

    அதன்பின் முத்துலிங்கம் எழுதிய பாட்டு, "சூப்பர்ஹிட்'' பாடலாக அமைந்தது.

    அன்புக்கு நானடிமை - தமிழ்ப் பண்புக்கு நானடிமை - நல்ல கொள்கைக்கு நானடிமை - தொண்டர் கூட்டத்தில் நானடிமை - இதுவே அந்தப் பாடல்.

    எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி முத்துலிங்கம் கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். இசைக்கேற்றபடி கருத்துக்கள் வரவில்லையென்று கருதினால், பாடலை எழுதச்சொல்லி அதற்கேற்ப மெட்டமைக்கச் சொல்வார்.

    ``மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' படத்திற்குப் பாடல் எழுதும்போது, ஒரு காட்சிக்கான பாடலை, அவருக்கு மன நிறைவு ஏற்படும்வரை எழுத பலநாட்களாகி விட்டன.

    "இதில் கவித்துவம் இருக்கிறது; கருத்துக்கள் இல்லை. இதில் கருத்துக்கள் இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. இதில் எல்லாம் இருக்கிறது என்றாலும், நான் நினைப்பது போல் இல்லை'' என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் குறை கூறிக் கொண்டே இருந்தார். `நான் நினைப்பதுபோல் இல்லை'யென்றால், என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார்.

    அவர் சொல்லாமலேயே அவர் நினைப்பதை யார் புரிந்து கொண்டு எழுதுகிறார்களோ அவர்கள்தான் அவர் படத்தில் தொடர்ந்து பாடல்கள் எழுதமுடியும். அப்படிப் புரிந்து கொண்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.

    ஒரு நாள் அந்தப் படத்திற்குப் பாடல் எழுத வேண்டிய அந்தக் காட்சிக்கு சில மெட்டுக்களைப் போட்டு அதற்குப் பல்லவியும், அனுபல்லவியும் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள் என்னை எழுதச் சொன்னார். எழுதிய பிறகு அதை `டேப்'பில் அவரே பாடிப் பதிவு செய்து, மைசூரில் இதே படத்திற்காகப் படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்து ஒப்புதல் வாங்கி வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.

    அதை எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு "எல்லாமே நன்றாக இருக்கிறது. இதை இப்படியே ஒரு பாட்டாக்கி ஒலிப்பதிவு செய்து விடுங்கள்'' என்றார். அந்தப்பாடல் இதுதான்:

    "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்

    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்''

    இந்தப் பாடல், உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பக்கூடிய பாடல். அதே நேரம், இலங்கை வானொலியில் 1983-க்குப்பிறகு தடை செய்யப்பட்ட பாடல்! இந்தப்பாட்டின் இறுதியில் "வீரம் உண்டு வெற்றி உண்டு; விளையாடும் களம் இங்கே உண்டு; வா வா என் தோழா; பூனைகள் இனம் போலப் பதுங்குதல் இழிவாகும்; புலியினம் நீயெனில் பொருதிட வாராய்'' என்று எழுச்சியோடு சில வரிகள் வரும்.

    இதனால் தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை.''

    இவ்வாறு முத்துலிங்கம் கூறினார்..........

  10. #719
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இரங்கல் செய்தி*
    -------------------------
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*சகோதரர்*திரு.எம்.ஜி.சக்கரபாணி அவர்களின்*மகன் திரு.சந்திரன் உடல் நல குறைவால்*மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை*பலனின்றி உயிர் இழந்தார்*என்ற செய்தி கேட்டு*மிகுந்த துயரமுற்றேன் . அன்னாரின் ஆன்மா சாந்தி*அடைய*இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்*. திரு.சந்திரன் அவர்கள் பிரிவால்*வாடும்*அவரது*குடும்பத்தினர் ,நண்பர்கள் அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சென்னை சார்பில்*ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

    ஆர். லோகநாதன் .

  11. #720
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கையில் "நீரும் நெருப்பும்" திரைக்காவியம் ஓடிய சாதனைகள்* சில!.........
    01.01 1972 ல் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரு வேடங்களில் பவனி வந்த நீரும் நெருப்பும் திரைக்காவியம் கொழும்பிலுள்ள ஜெயின்ஸ்தான் திரையரங்கில் 84நாட்களும் ஈரோஸ் திரையில் 45 நாட்களும் நவா திரையில் ஏழு நாட்களும் காண்பிக்கப்பட்டு மொத்தம் 136 நாட்கள் கொழும்பில் முதல் கட்டமாக ஓடிய திரைப்படம் நீரும் நெருப்பும்.
    01.01 1972 ல் யாழ்ப்பாணம் நகரில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. தொடர்ந்து ஆறு காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை. இரண்டாவது நாளில் 5 காட்சி நடைபெற்றது 5 காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை. தொடர்ந்து நான்கு காட்சிகள் வீதம் காண்பிக்கப்பட்டு மொத்தம் ராஜா திரையரங்கில் 65 நாட்கள் ஓடியது நீரும் நெருப்பும்.
    16 .02 .1972 திரிகோணமலை சரஸ்வதி தியேட்டரில் திரையிடப்பட்ட நீரும் நெருப்பும் திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இலங்கையில் நீரும் நெருப்பும் திரைப்படம் பல பகுதியில் திரையிடப்பட்டு சாதனையாகும்.

    அடுத்து இலங்கையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் 18.2 .72 ல் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. கொழும்பில் 4 திரையில் திரையிடப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன். கொழும்பு கேப்பிட்டல், கிங்ஸ்லி பிளாசா, சபையர் ஆகிய நான்கு திரைகளில் .....
    கிங்ஸ்லி அரங்கில் 20 நாட்களும், பிளாசா திரையில் 35 நாட்களும், சபையர் திரையில் 12 நாட்களும், கேப்பிட்டல் திரையில் 78 நாட்களும் ஓடி கொழும்பில் மொத்தம் 145 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
    யாழ் நகரில் வெலிங்டன் திரை மற்றும் லிடோ திரையரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் லிடோ அரங்கில் 29 நாட்களும், வெலிங்டன் தியேட்டரில் 72 நாட்களும் வெற்றி முரசு கொட்டி முதல் வெளியீட்டில் 101 நாட்கள் ஒடியது. ஒரே நாளில் ஆறு காட்சிகள்
    காண்பிக்கப்பட்டு 12 காட்சிகளும் அரங்கு நிறைந்து அதன் பின்பு ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது....

    இலங்கையில் தொடர்ந்து இடைவெளி இல்லாது வந்து மகத்தான சாதனையை படைத்த இரண்டு காவியங்கள்...
    நீரும் நெருப்பும்
    ரிக்க்ஷாக்காரன்...
    கணேசனின் இரண்டு படங்கள்
    ராஜா... ச.சமாளி* சாதனையின்றி கிடந்தது....
    மேலே மக்கள்திலகம் செய்த சாதனையை பார்த்து முக்காடிட்டு மூலையில் ஒதுங்கி நின்றனர்.*
    தகவல்
    அ.டேவிட்
    57,டேவிட் ரோட்,
    யாழ்பாணம்
    இலங்கை.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •