Page 120 of 210 FirstFirst ... 2070110118119120121122130170 ... LastLast
Results 1,191 to 1,200 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1191
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கும் அன்பை வைகோ அவர்களிடம் சொன்ன காரணங்களை
    இங்கு பார்ப்போம்

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் கூறுகிறார்!

    பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோவுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதையும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த வர்தா புயலில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

    ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

    பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

    இந்திய அமைதிப்படையின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

    அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட்டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப்பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்கமாக உள்ளனர். திமுக தலைமையோடும் நீங்கள் நெருக்கமாக இருக்கலாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

    அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதியாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிடணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

    முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். அதுபோல் உங்கள் தலைவரை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என்றாரே மேற்கொண்டு பேச முடியவில்லை வைகோ வால்,
    மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டுவைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் இமயமலையாய் உயர்ந்தார் நம் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.!

    மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

    விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்த ஆரம்ப காலத்தில், தலைவர் எம்.ஜி.ஆர். மீது பிரபாகரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங்களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார் என்றும். ‘‘தமிழகம் வந்த சில காலத்துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண்டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!

    முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

    ‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப்போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.

    எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உபசரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப்போது ஆயுதங்கள் வாங்க நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

    பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக்கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

    ‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடுவது காணொளியில் கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது...

    ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடினம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.!
    வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!

    இப்போதும் அரசியல் கட்சிகள்
    பொன்மனச்செம்மலின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன.
    மறுவெளியீட்டு படங்களைப் பட்டியலிட்டால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!

    திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்ட என் இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு என்னுடைய இந்தக் கட்டுரை அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். கட்டுரைகள் முடியலாம், எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் என் தலைவர் பொன்மனச்செம்மல் புகழுக்கு முடிவேது?

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

    ‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

    நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

    காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

    கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ
    வாழ்க!’.............da.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1192
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது ஏன்? கணேசமூர்த்தி.

    கணேசமூர்த்தி "காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று வெளிவந்த நேரம்[1987-89கால கட்டத்தில்], ஒரு பத்திரிகையில் சொன்னது:

    அண்ணன் எம்.ஜி.ஆர் படங்களை அவரது ரசிகர்கள் பலமுறை பார்த்தார்கள் அவரது படங்கள் மாபெரும் வெற்றிகளை பெற்றது. நான் நடித்த படங்களை காங்கிரஸ்காரன் ஒரு முறை கூட பார்க்கவில்லை!

    இதே போன்ற ஒரு கருத்தை பல வருடங்களுக்கு பிறகு மும்பையிலிருந்து வரும் பத்திரிகையிலும் மீண்டும் சொன்னார்.
    இதை இல்லை என்று "பிள்ளைகள்" சொல்லுங்கள் பார்ப்போம்?

    அவர்கள் ரசிகன் "நாஞ்சில்/நசுங்கின" "சொம்பை" போல தவறான தகவல் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    அவரது படங்கள் பார்த்தேன் அடடா தினமும் ஹவுஸ்புல்.

    இருக்கின்ற "ஸ்டார்கள்" பல பேர் ஆனால் புரட்சித்தலைவர் தான் பவர்புல்............sb...

  4. #1193
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புத்தகம்- முன்னுரை, வாழ்த்துரை, பதிப்புரை

    "நாடகம், நடிகர் திலகம் ,நான்" என்று ஒரு புத்தகம் சுமார் இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரவேண்டியது, அச்சடிக்கப்பட்டது பின்பு சில பிரபலங்களுக்கு சில பிரதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் சொன்ன தேதி முதல் இன்று வரை புத்தகம் வெளிவரவில்லை!
    காரணம் அந்த பிரபலங்களில் ஒருவர் நடிகர் திலகத்தின் குடும்ப நபர்களிடம் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் .............................! நடிகர் திலகம் குடும்பம் அந்த புத்தகம், அச்சகம் அவர்களுக்கு சேரவேண்டியதை கொடுத்தவுடன், இப்படிப்பட்ட "உண்மை விவரம் இல்லாத" புத்தகத்தை புதைத்துவிட்டனர். நான் சொல்லுவது "சத்தியம்"

    இந்த உணர்வு புரட்சித் தலைவர் ரசிகர்களுக்கு இல்லையே, ஏன்???!!!

    "பொய்யான விவரங்களுக்கு" முன்னுரை, வாழ்த்துரை எழுதியவர் புகழுக்கு அந்த ஆசிரியர் "முடிவுரை" எழுதிவிடுவார் என்பதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

    நான் எந்த புத்தகத்தை பற்றி பேசுகிறேன் என்று அனைவர்க்கும் தெரியும், விளக்கம் கொடுக்க தேவையில்லை........!...sb...

  5. #1194
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1963 ல்
    தர்மம் தலைக்காக்கும்
    திரைப்படத்தில்...
    திகில் ...சஸ்பென்ஸ்..
    முகமுடி.... இக்கதையில்....
    அசோகன் தான் கொலை கொள்ளையில் தொடர்புடையவர் என்று முடிவில் தெரியும்..

    1964 ல் என்கடமை திரைப்படத்தில்...
    கொலை... கண்டுபிடிப்பு
    பெண்னின்
    மரணம்...
    பாலாஜி தான் என்பது இறுதி கட்டத்தில் தெரியும்...

    1965 ல் தாழம்பூ
    திரைப்படத்தில்...
    கொலைகள் பல நடக்கும்
    அதை செய்தவர் எம்.ஆர்.ராதா என்பது
    கடைசியில் தெரியும்.

    இதை எல்லாம் தலைவர் ஒருவருக்காவே பொருந்தும் துப்பறியும் திரைப்படங்கள் ஆகும்.

    எல்லா திரைப்படங்களையும்
    அன்று முகம் சுழித்தவர்கள் கூட இன்று பார்த்து மகிழும் காவியமாக பார்க்க வைத்த....
    ஒரே கதாநாயகன் மக்கள் திலகம் மட்டுமே....��ukr...

  6. #1195
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    கோட்டையில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்ததாக சொல்கிறார்கள் .என்னவோ ,ஏதோ என்று அந்த அதிகாரி பதறி அடித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு செல்கிறார் .* அங்கு சென்றவுடன் அவரை சாப்பிட அழைக்கிறார் எம்.ஜி.ஆர். கடந்த முறை நீங்கள் என்னுடன் சாப்பிடும்போது அந்த கூட்டு ,பொரியல் நன்றாக இருந்தது என்று சொன்னீர்கள் அல்லவா,அவற்றை இன்று* சமைக்கிறார்கள் .அதை நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்கள் என்றுதான் அழைத்தேன் என்றார் எம்.ஜி.ஆர். மற்றவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை உண்ணவைத்து , அந்த உண்கிற* அழகை பார்த்து ரசிக்கிற ஆன்மா எம்.ஜி.ஆரிடம் இருந்தது என்பதுதான் சிறப்பு .


    பெண்களுக்கு இழிவு ஏற்பட்டுவிட கூடாது, அந்த துன்பம் நேராதிருக்க அவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக, தானே முன்னின்று , நாடக கம்பெனி காலத்தில் இருந்து தானே பாதுகாப்பு உதவிகள் செய்து, பெண்கள் தனியாக செல்ல அனுமதிக்காமல்* கோவிலுக்கோ அல்லது நகை கடைகளுக்கோ போனால், அவர்களின் பாதுகாப்பிற்கு தனது ஆட்களை வழக்கமாக அனுப்பி வைப்பதில் அக்கறையும், தனி கவனமும் செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.*

    பழம்பெரும் நடிகை லட்சுமியை படப்பிடிப்பில் சந்தித்தபோது,குடும்ப வாழ்க்கையில் கணவரின் உறவு முறிந்தபோது* நீ தனியாக வாழ்க்கையை நடத்த கூடாது .அதனால் திரைப்பட நடிகை என்கிற வகையில் பலர்*பலவிதமாக பேசுவார்கள். அதற்கு இடம் தரக்கூடாது .* நீ மறுமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அதுதான் உனக்கு பாதுகாப்பு என்று அறிவுரை கூறினாராம் . திரையுலகை தன்னுடைய குடும்பமாக எண்ணியவர் . அதனால்தான் சினிமா குடும்பத்தை சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள்*அவரை தங்களின் குடும்பங்களின் தலைவராக நினைத்து ,அவரது படத்தை வைத்து இன்றும் பூஜித்து கொண்டிருக்கிறார்கள் .காரணம் அவர் திரையுலகத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கவில்லை என்பதுதான்**


    திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :* உன்னை தேடி ஒருவன் வந்துவிட்டால், தேடி வந்தவன்* உன்னை நம்பித்தான்**வருகிறான்* அது உன்னால் முடிந்ததா, முடியாததா என்பதல்ல பிரச்னை .* அவனை ஆறுதல் படுத்தி, ஆசுவாசப்படுத்தி , உன்னால் என்ன முடியுமோ அதை கொடுத்து அனுப்புவதுதான் உன்னுடைய கடமை. இதுதான் மத்துவாச்சாரியார் வாக்கு .* பொன் வேண்டும் என்று ஒருவன் கேட்டு வந்தால் பொன் இல்லை என்றாலும், பூவாவது வைக்க வேண்டும்* என்று சொல்கிறார்கள்*அல்லவா அது போல நீ எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் ஒரு விஷயத்தை, பிரச்னையை* சொல்லிவிட்டால் அது முடியுமா , முடியாதா என்று அப்போதே சொல்லாமல்* முடியும்**என்கிற வார்த்தையை, தத்துவத்தை கண நேரத்தில் சொன்னவர்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் . அவர் ஒரு திட்டத்திலே, அந்த திட்டம் சார்ந்து ஒரு இடத்தை ஆர்ஜிதப்படுத்தி பறித்துவிட்டார் .* அந்த இடம் சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றி ஒரு இடத்தில இருக்கிறது .அந்த இடத்தில குடியிருக்கும் ஏழை பெண்மணி வெறும் 2 சென்ட் நிலம் வைத்திருக்கிறார் .* அந்த நிலத்தை அரசு ஆர்ஜிதப்படுத்தி அரசு பறித்துவிட்டது .அப்போது அந்த வயதான* பெண்மணி,தம்பி முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு வணக்கம்.ஐயா , .எனக்கு இருந்தது வெறும் 2 சென்ட் நிலம்தான் .அதை ஏதோ ஒரு திட்டத்திற்காக உங்களுடைய ஆட்கள் ஆர்ஜிதப்படுத்தி விட்டார்கள் . எனக்கு வேறு நிலம் கிடையாது .சொந்தபந்தங்கள் இந்த பகுதியை சுற்றித்தான் உள்ளனர் நான் வேறு யாரிடம் நியாயத்தை கேட்பேன்.எங்கு செல்வேன் .தாங்கள்தான் எனக்கு உதவி செய்து, நல்ல வழிகாட்ட வேண்டும் என்று கண்ணீருடன் எழுதுவதாக கடிதத்தில் தெரிவிக்கிறார் .* அவர் கடிதத்தில் எழுதிய வார்த்தைகள் எம்.ஜி.ஆர். இதயத்தில் ஊடுருவி விட்டது .முதல்வர் எம்.ஜி.ஆர். காலதாமதம் செய்யாமல் ,இந்த திட்டத்தினால் அந்த பெண்மணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்று கருதி* அந்த திட்டத்தை அரசின் எந்த துறை செயல்படுத்துவதாக இருந்தாலும் ,,அதை தவிர்த்து, வேறு இடத்தில செயல்படுத்த உத்தரவிட்டு, அந்த பெண்மணிக்கு பதில் கடிதத்தில் உங்கள் நிலம் அரசால் திருப்பி தரப்படுகிறது .உங்களின் வேண்டுகோளின்படி விதிவிலக்கு அளிக்கப்படுகிறது , உங்கள் சொந்த நிலத்திற்கு அரசினால் எந்த இடர்பாடும் வராது என்று உத்தரவாதம் அளித்து எழுதுகிறார் .* இப்படி ஒரு சாதாரண ,வயதான பெண்மணிக்கு எம்.ஜி.ஆர். பதில் கடிதம் எழுதி அவரை மனநிறைவு அடைய செய்த செயலை என்னவென்று சொல்வது வர்ணிப்பது . இது போன்ற ஒரு தலைவரை* நாம்**பெற்றிருப்பது தமிழகம் செய்த புண்ணியம்தான் . இப்பேர்ப்பட்ட ஒரு தலைவரோடு நான் பழகியதை என் பாக்கியமாக கருதுகிறேன்* *நான் இப்படியெல்லாம் பேசுவதற்காக, நான் அவருக்கு சமம் என்றோ, சமமானவன் என்றோ* கருதிவிடக்கூடாது .**.நான் ஒரு சாதாரண பணியாள் போலத்தான் பழகி இருக்கிறேன் . எனக்கு சமமானவர்கள்* பலபேர் உள்ளனர்* * என்னுடன் பழகிய நண்பர்கள்* தாட்கோ கண்ணன், சைதை துரைசாமிஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் ஆகியோரை குறிப்பிடலாம் .* நண்பர் வெள்ளைச்சாமி என்பவர் எனக்கும் ,மற்ற நண்பர்களுக்கும் குருவாக இருந்தவர்* திருநாவுக்கரசு மாணவர் அணி செயலாளராக* இருந்தவர் .**


    நாங்கள் எல்லாம் இருந்தாலும், ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் போன்றவர்களிடம் தலைவர் சிரிக்க சிரிக்க பேசுவார் .அவர்களைவிட சற்று கீழான நிலையில் ஒரு தொண்டனாக* இருந்தேன்* இருப்பினும் எனக்கு உரிய* மரியாதை கொடுத்து, மாநில மாணவர் அணிதுணை செயலாளராகவும், செயலாளராக காளிமுத்து அண்ணனை நியமித்தார் தலைவர் .* ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர் அணி துணை செயலாளராகவும், திருநாவுக்கரசை இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்தார் .* சில காலத்திற்கு பிறகு காளிமுத்து, திருநாவுக்கரசு ஆகியோருக்கு வேறுபதவிகள் கொடுத்து என்னை* மாநில மாணவர் அணி செயலாளராகவும், ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்தார் இப்படி இளைஞர்களை வளர்த்துவிடுவதும் சரி, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு வாய்ப்புகள் , பதவிகள், பொறுப்புகள் அளிப்பதிலும் சரி ,அவரைப்போல் இன்னொருவர் பிறக்கவேண்டும்*.* அதாவது நாம் தவமிருந்து பெற்ற ஒரு தலைவர் ,அற்புத தலைவர்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றுதான் நான் அடித்து சொல்வேன். அது மட்டுமல்ல அவருக்கு நிகரான, இணையான தலைவராக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது* காரணம் அவரது செயல்பாடுகள்தான்*ஜெயலலிதா அவர்களும் எனக்கு உரிய மதிப்பு, மரியாதை அளித்து, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பதவியை நான் கேட்காமலேயே*கொடுத்து அழகு பார்த்தவர் .* புரட்சி தலைவரோடு இப்படி அன்பாக, நெருக்கமாக பழகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது .* நான் இப்படியெல்லாம் பேசுவதால், பேட்டி அளிப்பதால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரோடு சமமாக பழகி இருப்பதாக ,சரளமாக உட்கார்ந்து கொண்டு பேசி இருப்பதாக*, தவறாக யாரும் எண்ணிவிட கூடாது என்று தெரிவித்து கொள்கிறேன் ..*நாங்கள் எல்லாம் அடிமட்ட தொண்டர்கள். அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன சொல்கிறாரோ ,அதை செயல்படுத்தவும்,* நிறைவேற்றவும்தான் நாங்கள் தொண்டர்களாக செயல்பட்டோம் .* என் சம காலத்து நண்பர்கள் கூட இந்த என் பேச்சை கண்டு, பேட்டியை கண்டு, நான் வெட்டி பந்தா செய்வதாக கூட நினைக்க கூடும் .அப்படி நினைக்க கூடாது என்றுதான் நான் வெளிப்படையாக சொல்கிறேன் .அவரோடு பழகியவர்களில் சிலருடைய பெயர்களைத்தான் என்னால் குறிப்பிட முடிந்தது .* சிலருடைய பெயர்களை என்னால் குறிப்பிட முடியாமல் போய்விட்டது . தலைவரோடு நெருங்கி பழகியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் . அவர்களை எல்லாம் பட்டியல் இடுவது மிகவும் கடினம் .ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது சிலருடைய பெயர்களை குறிப்பிட நான் தயங்க மாட்டேன் என்று இந்த நல்ல நேரத்தில் சொல்லி கொள்கிறேன் .* ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட ,ஒரு உன்னதமான தலைவர் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். அவர்கள் 11 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி புரிந்து*மக்களுக்கு பல நல திட்டங்கள் செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், முன்னேற செய்து ,அண்டை மாநிலங்களோடு நல்லுறவை*கொண்டாடியவர் .* மத்திய அரசுகள் மாறினாலும் அனைவரிடத்தும் நட்புணர்வு கொண்டு, மாநிலம் எல்லா துறையிலும் முன்னேற பாடுபட்டவர் .* அவர் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக வாழ்ந்து ஒரு மிக பெரிய தத்துவ கதாநாயகனாக* விளங்கியவர் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்* என்பதை இந்த நல்ல நேரத்தில் பெருமகிழ்ச்சியுடனும், உவகையுடனும் நான் தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


    கவிஞர் வாலி எழுதிய அரச கட்டளை படத்தின் ஒரு பாடலில் ஜெயலலிதா வாயசைத்தார் .என்னை பாட வைத்தவன் ஒருவன் . என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் .ஒரு குற்றமில்லாத மனிதன் . அவன் கோயில் இல்லாத இறைவன் .அதே வாலி எழுதிய பாடல் ,ஜெயலலிதா சொந்தமாக பாடிய பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்றது .அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் கல்வி. அவரே உலகில் தெய்வம் . தீர்க்கதரிசனமாக எம்.ஜி.ஆர். செயல்பட்டார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களில் இதுவும் ஒன்று

    சண்டை காட்சிகளில் பொதுவாக எம்.ஜி.ஆர். வம்பு சண்டைக்கு போகமாட்டார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, பெண்கள், வயதானவர்களை* சீண்டுவதாக ,குழந்தைகளுக்கு தொந்தரவு தருவதாக யாரையாவது கண்டால் ,அந்த தீங்கு இழைப்பவர்களை கண்டால், அந்த தீங்குகளை தடுப்பதற்கு அவர் தாக்குதலில் ஈடுபடுவார் .* அதுவும் முதலில் தற்காப்புக்காகத்தான் சண்டை இடுவாரே தவிர,இவராக சென்று தாக்கமாட்டார் .* சண்டை காட்சிகளில் பல்வேறு நெறிமுறைகளை கையாண்டார் . ஒருபோதும் முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது .அப்படி ஒரு காட்சியை அமைக்க ஒத்து கொள்ள மாட்டார் .ஆனாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதி காட்சியில் மனோகரை நம்பியார் முதுகில் கத்தியை எறிவார் .அதை கண்ட எம்.ஜி.ஆர். நம்பியாரை*நீயும் ஒரு ஆண்மகனா, உனக்கு வெட்கமாக இல்லை. முதுகில் குத்துகிறாயே என்று தன் மருத்துவத்தை பயன்படுத்தி மனோகரை காப்பாற்றி விடுவார் .*ஆகவே சண்டை காட்சிகள் அமைப்பதிலும் ஒரு நியாயத்தை கண்டவர் எம்.ஜி.ஆர்.***

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

    2.ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது - மாடப்புறா*

    3.சிரித்து, சிரித்து என்னை சிறையிலிட்டாய் -தாய் சொல்லை தட்டாதே*

    4.பொம்பளை சிரிச்சா போச்சு - சங்கே முழங்கு*

    5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    6.உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*

    7.எம்.ஜி.ஆர்.-மனோகர் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*.**


    *,*

  7. #1196
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை"

    இன்று ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினர் வணங்கும் அதே வேளையில் அவர்களால் எம்.ஜி.ஆர். பற்றி சிந்திக்காமல் இருக்கவே முடியாது. காரணம்? அந்த புரட்சித் தலைவர் இல்லையென்றால், இந்த புரட்சித் தலைவி ஏது? அந்த ‘வாத்தியார்’ இல்லையென்றால் இந்த ‘அம்மா’ ஏது? என்பதுதான் அவர்கள் சொல்லும் நியாயமான காரணங்கள்.

    ஜெ.,வுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் இடையிலிருந்த ஆழமான பந்தத்தை உலகமறியும். இவர்களுக்கும் இடையிலான சுவாரஸ்ய சம்பவங்கள் ஆயிரமாயிரம். அவை புதிது புதிதாக அவ்வப்போது வெளிவரும். இருவரும் சந்தோஷித்து வாழ்வை நகர்த்திய காலத்தில் அவர்களின் நெருக்கத்தில் இருந்து அவர்களை கவனித்த நபர்கள் இதை நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

    அந்தவகையில் ஜெ.,வின் பிறந்த நாளான இன்று அவர்கள் இருவரின் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களின் முக்கியமானவரான இலக்கியவாதி இந்துமதி கூறுகையில்....”அம்முவுக்கும், எனக்கும் இடையில் இருந்த நட்பை கண்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார் எம்.ஜி.ஆர். நான் அம்முவுக்கு மிக பாதுகாப்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார். எல்லோரும் சொல்வது போல் அம்முவுக்கு, எம்.ஜி.ஆர். வெறும் சினிமா மற்றும் ரியல் லைஃப் ஹீரோ மட்டுமல்ல, சில நேரங்களில் அவரது தந்தை ஸ்தானத்திலும், தாய் ஸ்தானத்திலும் கூட இருந்தவர்.

    சிம்பிளாக ஒன்று சொல்கிறேன்...ஜெயலலிதாவின் அம்மா சந்தியா இறந்துவிட்டார். போயஸின் பிரம்மாண்ட இல்லத்தில் தனி மரமாக உடைந்து நின்றார் ஜெ., அப்போது ஒரு தந்தை போல் நின்று பல வகைகளில் அவருக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். அதிலும், ‘அம்மு, சாவிக்கொத்தை எடுத்து இடுப்புல சொருகு. மாடி, அறை எல்லாத்தையும் பூட்டு.’ என்று அவர் இட்ட கட்டளைகள் ஜெயலலிதாவின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பெரிய வழிகாட்டியாக அமைந்தன. ஜெயலலிதாவும் அந்தளவுக்கு உலகம் அறியா பிள்ளையாகத்தான் இருந்தார்.

    ஜெயலலிதா ஒரு பத்திரிக்கை அதிபராகவும், நான் அதில் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதற்காக ராயப்பேட்டையில் அன்றைய அஜந்தா ஹோட்டல் அருகே பெரிய கட்டிடம் ஒன்றை அலுவலமாக தேர்வு செய்தேன். ஜெ.,வும் அதை வந்து பார்த்து சந்தோஷப்பட்டார், எம்.ஜி.ஆர்-க்கும் அது பிடித்திருந்தது. ஆனால் அந்த திட்டம் கைகூடவில்லை.

    ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகம்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளம். இந்த நாடக அரங்கேற்றத்தின் பின், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஊர், ஊராக செல்ல வேண்டிய பணி ஜெயலலிதாவின் தோள்களில் விழுந்தது. அதை திறம்படச் செய்தார் ஜெயலலிதா. அம்முவுக்குள் அசாத்திய கலைஞானமும், நிர்வாகத் திறமையும், எதிலும் வெற்றி பெறுவதில் பிடிவாத குணமும் இருந்தது. ஆனால் அவற்றைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இதனாலும்தான் எம்.ஜி.ஆர். மீது அம்முவுக்கு அளவு கடந்த, விவரிப்பை தாண்டிய அன்பும், மரியாதை, சிறு அச்சம், பெரும் பாசம் எல்லாமே இருந்தது.” என்கிறார். அம்மு அம்மா பற்றிய வரலாற்றின் சிறு பாராவை எழுதினாலும் அதில் எம்.ஜி.ஆரை நினைவுகூறாமல் விடவே முடியாது என்பதே நிதர்சனம்..........mgn...

  8. #1197
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    The Tamil Nadu Dr. M.G.R. Medical University is a government medical university centered in Chennai, Tamil Nadu, India. It is named after the former Chief Minister of Tamil Nadu, Dr. M.G.Ramachandran and is the second-largest health sciences university in India.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
    மருத்துவ பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை மையமாகக் கொண்ட ஒரு அரசு மருத்துவ பல்கலைக்கழகமாகும்.
    இதற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரிடப்பட்டது, இது இந்தியாவின் இரண்டாவது பெரிய சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமாகும்..........

  9. #1198
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மறக்க_முடியாத_மக்கள்_திலகம்

    #தலைவன்_இருக்கிறான்.

    ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழக முதல்வராக மட்டுமல்ல ஒரு தனி மனிதராகவும் மக்கள் திலகத்தின் துணிச்சல் மகத்தானது...!!! நாடக நாட்களில் நாடக மேடை சரிந்து கால் உடைந்த போதும், பின்னாளில் 1967ல் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் அவர் காட்டிய துணிச்சல்-தன்னநம்பிக்கை அசாத்தியமானது.

    அதே போல...

    1984 ம் ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் பழுது- தலையில் ஒரு டென்னிஸ் பந்து அளவிற்கு கட்டி-பக்கவாதம் - ஆஸ்த்துமா என இத்தனை பிரச்சனைகளோடும் நினைவிழந்த நிலையில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கே அந்தசமயம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, மக்கள் திலகத்தின் உடல் நிலையே பரப்புரையில் பிரதான இடம் பெற்றது."ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டார்- வாருவார் ஆனால் செயல் பட முடியாது" என்று வதந்திகள் பெருமளவில் பரவின. திடீரென்று ஒரு நாள் வந்த "வேறு மாதிரியான" ஒரு செய்தியும் தமிழக மக்களை நிலை குலைய வைத்தது.

    பிப்ரவரி 1985, அத்தனை வதந்திகளையும் தகர்த்து எரிந்து விட்டு, சிகிச்சை முடிந்து வெற்றிகரமாய் திரும்புகிறார் மக்கள் திலகம். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பு முதல்நாளே பெண்களும்-குழந்தைகளுமாய் கூட்டம் குலுங்கியது. ((நான்காவது படம்))

    அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவரால் சரியாக நடக்க முடியாது என்பதால் விமானத்திலிருந்தே அவர் காருக்கு பேட்டரி அமைக்கப்பட்ட தனி வண்டி அமைக்கப்பட்டிருந்தது. மக்களை சந்திப்பாரா? சந்தித்தால் அவர் உடல் நிலை தாங்குமா? என்றெல்லாம் கேள்விகள்.

    வந்து இறங்கினார் மக்கள் திலகம்...தனக்குஏற்பாடு செய்த பேட்டரி காரை லேசாக சிரித்த படியே பார்த்து விட்டு, மேடையின் மேல் தவ்வி ஏறுகிறார். மேடைக்கு செல்ல போடப்பட்டிருந்த மூங்கில் பாலம் போன்ற அமைப்பில் யார் துணையின்றியும் தானே நடக்கிறார், தொண்டர்களை -பொது மக்களை பார்த்து கண்ணசைகிறார். கண்கலங்குகிறார். அதோடு விடவில்லை மேடையில் இப்படியும் அப்படியும் சிம்ம நடை நடக்கிறார். கூட்டத்தில் இடி முழங்குகிறது. "என்னை பற்றி என்ன சொன்னீர்கள்? இதோ நானே வந்துவிட்டேன்" என்று தன் நடையால்- கையசைப்பால்- சொல்கிறார் மக்கள் திலகம். முழுவதாக இரண்டு மணி நேரம் தொண்டர்களை-பொதுமக்களை சந்தித்து விட்டு பின் எவ்வித தாமதமும்-தள்ளிப்போடுதலும் இன்றி தமிழக முதல்வராக பதவி ஏற்று, அன்றிலிருந்தே பதவி ஏற்கிறார் மக்கள் திலகம்.

    கவலைக்கிடமான நிலையிலிருந்து மீண்டு வந்தாலும், தன் உடல் நிலையை காரணம் காட்டி தொண்டர்களை-பொதுமக்களை ஏமாற்றவில்லை மக்கள் திலகம்.சந்திக்க தவறவில்லை. முதல்வர் பொறுப்பையும் தட்டிக்கழிக்கவில்லை...!!! அதுதான் அவர் தன்னம்பிக்கை..துணிச்சல்.!!

    _____________________________
    1984 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் அவரால் தேர்தல் பரப்புரைக்கு வரமுடியவில்லை. செல்வி.ஜெயலலிதா அவர்களே பரப்புரைக்கு தலைமை தாங்கினார். அஇஅதிமுகவை அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வைத்தார். "மக்கள் திலகம் உங்களிடம் துள்ளிக்குதித்தோடி வருவார்" என்று ஊருக்கு ஊர் பேசினார்.

    மக்கள் திலகத்தின் உடல் நிலை குறித்து தொடர்ந்து வதந்தி பரவியதால், அமெரிக்க-ப்ரூக்கிள் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் திலகத்தின் பிரத்தியோக காணொளிகள் மக்களுக்கு அனைத்து நகரங்களிலும் காட்டப்பட்டன ((முதல் இரண்டு படங்கள்)) அதை தொகுத்து வழங்கிய, பேச்சாளர் வலம்புரி ஜானின் தொகுப்ரை பெரும் வரவேற்பை பெற்றது..

    "மக்கள் திலகத்தின் கைகளில் உணர்வே இல்லையென்றார்கள்...இதோ அந்தக்கைகளால் அவர் உணவே சாப்பிடுகிறார்" என்ற இந்த வரிகளை பின்னாளில் மக்கள் திலகமே ரசித்தார்....sbb...

  10. #1199
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகரின் "முகராசி"யை போல் அவரது கைராசியும் நன்றாக பலன் கொடுக்கும். அவரது கைராசியை நம்பி தொடங்கப்பட்ட படம்தான் சிவாஜி நடிப்பில் பீம்சிங்சின் இயக்கத்தில் உருவான "பதிபக்தி".
    படம் நல்ல முறையில் முடிவடைந்து தயாரிப்பாளருக்கு ஒரளவு வெற்றியையும் தேடித்தந்தது.

    ஆனால் மாற்று நடிகரோ கை ராசிக்கு பெயர் போனவர். அவர் பேதமின்றி யாருக்கு எந்த படத்தை தொடங்கி வைத்தாலும் கைராசி பின்னி எடுக்கும். மக்கள் திலகத்தை வைத்து "மணிமேகலை" என்றொரு படம் அவரால் தொடங்கி வைக்கப்பட்ட படம். அதன் நிலை என்னவாயிற்று என்று நமக்கே தெரியாத அளவுக்கு அவரது கைராசியின் வேகம் அந்த படத்தை தாக்கி கருவிலே உருத்தெரியாமல் அழித்து விட்டது.

    ஆனால் அவர் யாருக்கும் எந்த பாகுபாடும் பார்க்காதவர். அவரே தொடங்கிய கட்சிக்கு முதல் நாள் கொடியேற்றும் போது கொடிக்கம்பமே முறிந்து விழுந்தது கூட அவரது கைராசியின் அம்சமே. ஒரு தேர்தலோடு அந்தக் கட்சியும் அத்தோடு கைவிடப் பட்டது. பாரதிதாசன் தனது சொந்த தயாரிப்பில் எடுத்த "பாண்டியன் பரிசு" என்ற படம் கதாநாயகனாக சிவாஜியும் கதாநாயகியாக சரோஜாதேவியும் நடிக்க கர்மவீரர் காமராஜர் தொடங்கி வைத்தது என்னவாயிற்று.?

    கர்மவீரர் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவர் தொடங்கி வைத்த எத்தனையோ திட்டங்கள் வெற்றி பெற்றது. 1971 தேர்தலிலே காங்கிரஸிக்கு கணேசன் பிரசாரத்தில் காமராஜருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. கணேசனின் பிரசாரத்தால் காங்கிரஸ் வலுவிழந்ததோடு ஆட்சிக் கனவையும் அத்தோடு இழந்து நின்றது. அவருடைய பிரசாரம் இல்லையென்றால் காங்கிரஸ் கொஞ்சமாவது உயிர் பிழைத்திருக்கும்.

    ஆனால் காமராஜரோடு இணைந்த கணேசனின் ராசியின் பரிசாக பாரதிதாசனுக்கு விடிந்து அவரது திரையுலக முகவரியை மாற்றி அமைத்து விட்டது. இப்படி கணேசனின் கைராசியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
    "வேட்டைக்காரன்" "கர்ணனை" மட்டும் வேட்டையாடவில்லை1971 தேர்தலில் எதிர்க்கட்சியை சுத்தமாக வேட்டையாடி காங்கிரஸை தமிழ்நாட்டிலிருந்து அடியோடு விரட்டி விட்டான் என்பது நாடறிந்த விஷயம்.

    தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr.........

  11. #1200
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டிய ல் ( 26/10/20 முதல்* 31/10/20 வரை )
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    26/10/20* - மெகா டிவி -மதியம் 12 மணி - சக்கரவர்த்தி திருமகள்*

    * * * * * * * * மெகா 24- பிற்பகல் 2.30 மணி - பணத்தோட்டம்*

    * * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி -* கண்ணன் என் காதலன்*

    * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * *எம்.எம்.டிவி* - இரவு 10.30 மணி - படகோட்டி*

    27/10/20-சன் லைப்* - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -விவசாயி*

    28/10/20 - சன்* லைப் - காலை 11 மணி - நீதிக்கு தலைவணங்கு*

    29/10/20-**சன் லைப் -**காலை 11 மணி- எங்க வீட்டு பிள்ளை*

    * * * * * * * * மெகா டிவி -மதியம் 12 மணி - தொழிலாளி*

    * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - இதய வீணை*

    30/10/20-மெகா டிவி -அதிகாலை 1 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி/இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*

    * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - புதிய பூமி*

    * * * * * * சன் லைப் - மாலை 4 மணி - உரிமைக்குரல்*

    * * * * * *புதுயுகம்* -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

    31/10/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - படகோட்டி*

    * * * * * * *சன்* லைப் - காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * மீனாட்சி டிவி -பிற்பகல் 1 மணி - நல்ல நேரம்*

    * * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -அலிபாபாவும் 40திருடர்களும்*

    * * * * * *மீனாட்சி டிவி -இரவு 8.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * *

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •