Page 57 of 210 FirstFirst ... 747555657585967107157 ... LastLast
Results 561 to 570 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #561
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின்
    திரைப்பட வரலாற்றில்....
    சில முக்கிய தகவல்கள்..........

    115 திரைப்படங்களில் தனிப்பெரும் கதாநாயகனாக நடித்து.....
    அக்காவியங்களில்
    அதிக திரைப்படங்கள்
    அதிக அரங்குகளில் 100 நாட்களை கடந்தவைகளில்
    மக்கள் திலகம் முன்ணனி ஆவார்....


    தமிழ்நாடு... பெங்களுர்..
    இலங்கை.... உட்பட

    மதுரை வீரன்
    35 அரங்கு 100 நாள்

    உ. சுற்றும் வாலிபன்
    25 அரங்கு 100 நாள்

    எங்க வீட்டுப்பிள்ளை
    17 அரங்கு 100 நாள்

    அடிமைப்பெண்
    16 அரங்கு 100 நாள்

    நாடோடி மன்னன்
    15 அரங்கு 100 நாள்

    மாட்டுக்கார வேலன்
    14 அரங்கு 100 நாள்.

    ரிக்க்ஷாக்காரன்
    12 அரங்கு 100 நாள்

    உரிமைக்குரல்
    12 அரங்கு 100 நாள்

    இதயக்கனி
    12 அரங்கு 100 நாள்

    குடியிருந்த கோயில்
    10 அரங்கு 100 நாள்.

    10 திரைப்படங்கள் மட்டும்
    தமிழகத்தில் ....
    கர்நாடகத்தில்....
    இலங்கையில்.....
    100 நாளை கடந்த திரையரங்குகள்...

    158 திரையரங்குகளில்
    100 நாட்கள்....

    (நாடோடி மன்னன்
    இலங்கை எத்தனை அரங்கு 100 நாள் என்பது சரியான தகவல்கள் வரவில்லை)

    சி.கணேசனின் படங்கள்
    திருவிளையாடல்
    13 அரங்கு 100 நாள்
    தங்கப்பதக்கம்
    14 அரங்கு 100 நாள்
    வ.மாளிகை
    13 அரங்கு 100 நாள்
    பா.மன்னிப்பு
    12 அரங்கு 100 நாள்
    4 படங்கள் மட்டும்
    தமிழகம்..
    இலங்கை....
    மொத்தம் அரங்குகள்
    100 நாள்.... 52 மட்டுமே...

    அடுத்தது 75 நாள் .....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #562
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரிதிலும் அரிதான புகைப்படத்தின் வரலாறு வடபழனியில் இருந்த, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், முன்பு சவுண்டு இன்ஜினியராக பணியாற்றியவர் ரவிசங்கர். கேரள மாநிலம், எர்ணாகுளம், திருப்பூணித்தரா, என்ற ஊரில் பிறந்தவர். ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பணியாற்றியபோது, இவருக்கு கிடைத்த கறுப்பு - வெள்ளை பிலிம் சுருள் ஒன்று, கடந்த, 40 ஆண்டுகளாக இவரிடம் பத்திரமாக இருந்தது. அதில், பதிவாகி இருப்பது ஒரு பிரபலமான மனிதரின் படங்கள் என்று அறியாமலேயே அதை பாதுகாத்து வந்துள்ளார்.
    இந்த பிலிம் சுருளில், இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படம் பதிவாகி இருக்கிறது என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பின், அதை, 'டெவலப்' செய்த போது, அதிலிருந்த புகைப்படத்தை பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டார். அப்புகைப் படத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆர். பிப்., 17, 1970ல், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அந்த கறுப்பு - வெள்ளை பிலிமில் இருந்தது. எம்.ஜி.ஆர்., நடித்து, ஜனாதிபதி விருது பெற்ற, ரிக் ஷாக்காரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, இடைவேளையில் படப்பிடிப்பு குழுவினர் எல்லாரும் ஓய்வில் இருந்தனர். படத்தில் எம்.ஜி.ஆர்., ஓட்ட வேண்டிய ரிக் ஷா, அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. ரிக் ஷா ஓட்டத்தெரியாத எம்.ஜி.ஆர. ஓட்டி பழகினால் தேவலை என்று தோன்றியதால் ரிக் ஷாவில் ஏறி, ஓட்டத் துவங்கினார். ஸ்டுடியோ வளாகத்தில் அவர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டுவதை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். சிறிது நேரம் ரிக் ஷா ஓட்டியவர், யாரையாவது உட்கார வைத்து ரிக் ஷா ஓட்டினால், படத்தில், இயல்பாக அமையுமே என்று நினைத்தவர், படப்பிடிப்பு குழுவினரை பார்த்து, யாராவது இருவர் ரிக் ஷாவில் வந்து அமரும்படி கூறினார். பல முறை அழைத்தும், யாரும் ரிக் ஷாவில் உட்கார தயாராக இல்லை. மதிப்பிற்குரிய, வாத்தியார் ரிக் ஷா ஓட்டும்போது, நாங்கள் எப்படி உட்காருவது என்ற கூச்சத்தால், ஒதுங்கி நிற்பதை கண்டு எம்.ஜி.ஆர்., நொந்து போனார். பரிதாபமாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் நாயரை பார்த்தார்; அவர் உடனே தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை பார்த்திருக்கிறார். உடனே, இருவரும் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்தனர். குஷியான எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே, ரிக் ஷா ஓட்டத் துவங்கினார். அங்கிருந்த பிரபல புகைப்பட கலைஞர் நாகராஜ் ராவ், இந்த காட்சியை, தன் கேமராவில் பதிவு செய்தார். எம்.ஜி.ஆர்., நடித்த, 132 படங்களின் காட்சிகளை புகைப்படமாக எடுத்தவர் இவர். நாகராஜ் ராவ், ரவிசங்கரின் தாய் மாமனின் நண்பர்.
    கடந்த, 1965ல், 12 வயது ரவிசங்கர், சென்னையில் உள்ள மாமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் நாகராஜ் ராவ் வீட்டில் தான் தங்கியிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்து, ஐ.டி.ஐ., படித்து, சான்றிதழ் காட்டி, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் சவுண்டு இன்ஜினியராக சேர்ந்தார். அங்கே, 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
    இதற்கிடையில், புகைப்படக்காரர் நாகராஜ் ராவ், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட பிலிம் சுருளை, ரவிசங்கரிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். அந்த பிலிம் சுருளை வீட்டில் வைத்தவர், அத்துடன் அதைப்பற்றி மறந்து போனார் ரவிசங்கர். நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.
    பாலகாட்டில் எம்.ஜி.ஆர்., குடும்பத்துக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீடு, நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டது. அங்கே வைப்பதற்காக, எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் தேவைப்பட்டன. இதுபற்றி ரவிசங்கரிடம் கேட்டு இருக்கின்றனர். அப்போது தான் அவருக்கு, அந்த பிலிம் சுருள் பற்றிய ஞாபகம் வந்தது. அவர், அவசர அவசரமாக, அந்த, பிலிம் சுருளை தேடி கண்டுபிடித்திருக்கிறார். அதை, 'டெவலப்' செய்தபோது, அதில் இருந்த காட்சிகள், அவரை வியக்க வைத்தன. இயக்குனர் கிருஷ்ணன் நாயரையும், ஆர்.எம்.வீரப்பனையும் உட்கார வைத்து, ரிக் ஷா ஓட்டும் புகைப்படம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தெளிவாக இருந்தது. அந்த புகைப்படத்தை, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் வைக்க, சந்தோஷமாக கொடுத்துள்ளார், ரவிசங்கர்..........

  4. #563
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம்நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் நாட்டு மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஊர்ப்பெரியவர்கள்,தனவந்தர்கள்,
    ஜமீன்தார்கள் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.

    கிராமங்களில் இவர்கள்
    வைத்ததுதான் சட்டம். புரட்சி நடிகரும்
    அந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்கை கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் எப்போதும் கதர்சட்டை அணிந்த படிதான் காட்சியளிப்பார்.
    அறிஞர் அண்ணா தி.க.விலிருந்து பிரிந்து திமுகவை 1949 செப் 19 ல் தொடங்கும் போது அண்ணாவுடன்
    சம்பத், மதியழகன், நெடுஞ்செழியன், n v நடராஜன் போன்றோர்கள் இருந்த போதிலும்
    புரட்சி நடிகரும்,கட்சியின் நீண்டகாலமாக தலைவராக இருந்தவரும் திமுக வில் இல்லை.

    கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்தவர், பெரியாரோடு தங்கி விட்டாலும் சமயம் பார்த்து யார் வளர்கிறார்கள் என்று பார்த்து 1952
    வாக்கில் திமுகவில் நுழைந்து தனது அடித்தொண்டை பேச்சு மூலமாகவும்
    கூழாங்கற்கள் வசனம் மூலமாகவும் கட்சியில் தன்னை ஒரு பெரிய ஆள் போல காண்பிக்க துவங்கினார்.
    அதன்பிறகு அண்ணாவின் கொள்கை அவரது மேடைப்பேச்சு மூலமாக எம்ஜிஆர் திமுகவில் 1954 ல். தன்னை இணைத்துக்
    கொண்டார்.

    அண்ணாவின் மூலமாக
    நடிப்பு வாய்ப்பை பெற்ற கணேசன்
    பஞ்சப் பராரிகளாக இருந்த திமுகவிடம் இருந்து தன்னையும் தன் பணத்தையும் காத்துக்கொள்ள திருப்பதி சென்று திருப்பதி கணேசா என்ற அடைமொழியுடன் முதல் படத்தில் வாய்ப்புக்காக தெய்வத்தை பழித்து "அது பேசாது கல்" என்று வசனம் பேசி விட்டு பின்னர் காங்கிரஸில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதனால் காங்கிரஸின் உதவியுடன் "கெய்ரோ படவிழா" மற்றும்இந்திய அமெரிக்க "நல்லெண்ண தூதரா"க அமெரிக்க பயணத்திற்கும் அவருக்கு
    பாதை வகுக்கப்பட்டது.

    ஆனால் சிவாஜியோ அது தனது திறமைக்கு கிடைத்த பரிசாக பறைசாற்றிக் கொண்டு கர்வத்தோடு நடந்து கொண்டது விஷயம் தெரிந்தவர்களுக்கு முக சுழிப்பை தந்தாலும் அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
    ஒரு கட்டத்தில் சிவாஜியால் எந்த அரசியல் லாபமும் இல்லை என்று புரிந்து கொண்ட காங்கிரஸ் சிவாஜியை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கியது.

    சிவாஜியும் ஏதோ தன்னால்தான் காங்கிரஸ் வளர்ந்தது என்று நினைத்துக்கொண்டு தான் தனிக்கட்சி தொடங்கி தான் ஒரு டம்மி பீஸ் என்பதை அவரே உணர்ந்து கொண்டார்.
    உலகத்திலேயே தன்னுடைய நடிப்புதான் சிறந்தது என்ற அடிப்பொடிகளின் பேச்சை கேட்டு ஏமாந்ததோடு தனக்கு ஒரு அவார்டும் கிடைக்கவில்லையே என மனம் நொந்து அரசியல் சினிமா இரண்டிலிருந்தும் துறவறம் பூண்ட கதை நாம் அறிந்ததுதான்.

    திருப்பதி சென்றவுடன் திமுகவின் வெறுப்புக்கு ஆளான புதுப்பணக்காரரான கணேசனை காங்கிரஸும் இரு கரம் நீட்டி வரவேற்றது. அந்த காலக்கட்டத்தில் யாராவது திமுகவில் இருந்தால் அவர்களை கறுப்பு சட்டைக்காரன் என்றுதான் அழைப்பார்கள். அவர்களை சமூக விரோதி போல் தள்ளியே வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் ,
    தொழிலாளர்கள், உழைப்பாளிகள்,
    விவசாயி,ரிக்ஷாக்காரன்,பரிசல்காரன், மீனவர்கள் இப்படி பல வேடங்களில் ஏழைப்பங்காளனாக நடித்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றினார்.

    ஆனால் சிவாஜி மிட்டா, மிராசு தனவந்தர், பண்ணையார் போன்ற வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை மிகை நடிப்பின் மூலம் காட்டிக் கொண்டிருந்தார். எம்ஜிஆருடைய அநேக படங்களில்
    முதலாளிகளையும் மிட்டா மிராசுகளையும் எதிர்த்து ஏழை மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முகத்திரையை கிழிப்பது போல் காட்சியமைப்பை வைத்திருப்பார்.
    அவர்கள் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் ஊர் மக்களுக்கு
    எடுத்துரைத்து முடிவில் அவர்கள் திருந்துவதாக அல்லது சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பது போல காட்சியை அமைத்து ஏழை மக்களுக்கு பண முதலைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்.

    அதனால் பணக்காரர்களின்(காங்கிரஸ்காரர்கள்) அராஜகத்தையும்
    அகம்பாவத்தையும்
    கொஞ்சம் கொஞ்சமாக மக்கனிடம் எடுத்துக் கூறினார்.
    இதனால் கிராமங்களில் ஆலமரமாக இருந்த காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சிதறியதுடன் ஏழை மக்களின் கட்சியாக திமுக
    உருமாற துவங்கியது. இப்படிப்பட்ட கதையமைப்பு உள்ள படங்களாக
    (நல்லவன் வாழ்வான் பெரிய இடத்துப் பெண் நம்நாடு உரிமைக்குரல்) போன்ற படங்களில் நடித்து திமுக வை
    வளர்க்க பெரு முயற்சி எடுத்ததால்
    பெரும் பணக்காரர்கள், தியேட்டர் ஓனர்கள், மில் ஓனர்கள் இதுபோன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.

    மலைபோல் இருந்த காங்கிரசை தனது திரைப்படம் என்ற சிறு உளியால் சிறுக சிறுக உடைத்து கற்குவியலாக மாற்றி அதன்மேல் திராவிட கொடியை ஏற்றி திமுகவை ஆட்சிபீடம் ஏற வைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு. அதனால் கோபமுற்ற காங்கிரஸ் தனவந்தர்கள் எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல தியேட்டர் கிடைக்காமலும் அப்படி கிடைத்த தியேட்டரில். எம்ஜிஆர் படங்களை 50 அல்லது 100 நாட்கள் ஓட விடாமலும் பார்த்து கொண்டனர்.

    அவர்கள் பெரும்பாலும் சிவாஜி ரசிகர்களாக இருந்து சிவாஜியின் மிகை நடிப்பை புகழ்ந்தும் எம்ஜிஆரின் நடிப்பை இகழ்ந்ததுடன் நில்லாமல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு "விசிலடிச்சான் குஞ்சுகள்" என்ற பட்டத்தையும் கொடுத்து கிண்டல் செய்து வந்தனர். இவர்களோடு சேர்ந்து பத்திரிகை முதலாளிகளும் எம்ஜிஆருக்கு எதிராக பனிப்போர் தொடங்கி எம்ஜிஆர் செய்திகளை இருட்டடிப்பு செய்தனர்.

    பத்திரிகை காரர்கள் ஆங்கில படங்களையும், சிறந்த அவார்டு படங்களையும், வங்கப் படங்களையும் பார்ப்பவர்கள். இயற்கையான நடிப்பை அறிவார்கள். ஆனாலும் எம்ஜிஆரின்
    நடிப்பை சிறுமைப்படுத்துவதாக எண்ணி சிவாஜியின் மிகை நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து அவரை மிகை நடிப்புக்கே அடிமை ஆக்கி விட்டார்கள்.

    எம்ஜிஆர் ஒரு படத்தில் சொல்லுவார். என்னை அதிகமாக புகழ வேண்டாம், புகழ்ச்சியைப் போல ஒரு மனிதனுக்கு வேறு எதிரி எதுவும் கிடையாது என்பார். அது எவ்வளவு உண்மை என்று சிவாஜியின் வாழ்க்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சிவாஜி அவர்களோடு சேர்ந்து கொண்டு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏழை எளியவர்களின் ஆதரவை முற்றிலுமாக சிவாஜி இழக்க நேரிட்டது.

    ஆனால் அவருடைய படங்கள் பார்வையாளர்கள் குறைந்த நிலையிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓட்டி தங்களது(கட்சி) முதலாளித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்தினார்கள். எம்ஜிஆர் தனது படத்தின் ஓட்டத்தை பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை.
    ஆனாலும் மக்களின் பேராதரவோடு ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று படத்தை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிடுவது திரையரங்க உரிமையாளர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மதுரை சென்ட்ரல்,மற்றும் நியூசினிமாவில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த பல படங்களை 100 நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டு வேறு படங்களை திரையிடுவார்கள்.

    அதன்பின்பு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த மாதிரி எம்ஜிஆர் வளர்த்த திமுகவை தான் வளைத்துக் கொண்டு எம்ஜிஆர் படங்களுக்கு மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்த தீயசக்தியை எதிர்த்து போராடி அதிலும் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல தியேட்டர் கிடைக்க விடாமல் பல நெருக்கடி கொடுத்தாலும் நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெற்றார்.

    ஆனால் திமுகவை வனர்த்தது தான்தான் என்று நினைத்த "கட்டமரம்" மக்களின் வெறுப்பாற்றில் மிதந்து கரை ஒதுங்கிய காட்சியைத்தான் நாம் பார்த்தோமே!. ஆனாலும் கணேசனுக்கு எப்போதும் சினிமாவில் சிவப்பு கம்பள வரவேற்புதான். என்ன செய்து என்ன பயன்?. புரட்சி(நடிகர்)தலைவரை வெல்ல யாராலும் முடியவில்லை என்பதே உண்மை நிலை..........

  5. #564
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவாணரின் நினைவு நாள் இன்று...30-08-1957

    தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்” - 1943-ம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.''நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்லஅழகான ஜதையோடு வந்தான் அய்யா!”

    என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும்
    சில சுவையான நிகழ்ச்சிகள்

    சுவை 1: உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ. மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; “ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?”

    சுவை 2: 'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?”“வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?”

    சுவை 3: 1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார்.'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்று பலரும் நினைத்தனர்.“அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.
    சுவை 4: ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.“அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?” என்றார் கல்கி.“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிக அருமை…” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!

    சுவை 5: என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். “வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க, வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய நுாலின் முடிவில் எழுதியிருக்கும் வரி இது:“

    1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”.அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணரை சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று அறிவிக்கலாமே!

    -முனைவர் நிர்மலா மோகன்,
    எழுத்தாளர்
    இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் .

    மதுரை - சிரித்து வாழ வேண்டும்
    கோவை -ஆயிரத்தில் ஒருவன்
    கோவை -புதுமைபித்தன்
    சென்னை -ஆயிரத்தில் ஒருவன் - தர்மம் தலைகாக்கும் .

    நல்லவான் வாழ்வான் -31.8.1961
    53 ஆண்டுகள் நிறைவு நாள்...
    பிறரை கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொள்ளுதலை Vicarious Learning என்கிறோம் உளவியலில். தாயைப் போலவே மகள் பாத்திரம் பிடிப்பதும், அப்பா கோபத்தில் திட்டும் வார்த்தை வெளியில் மகனுக்கு சுலபமாக வருவ தும் இதனால்தான். பிரபு தேவா நடனத்தை பொடிசுகள் டி.வி பெட்டி முன் ஆடுவதும் இதனால்தான்.

    வேலையில் பாஸ் உடல் மொழியும் வார்த்தைகளும் இதனால்தான் மிக எளிதாக உள் செல்கிறது. அதனுடன் அவர்களின் நிர்வாக நெறிமுறைகளும் திறன்களும் துணைக்குச் செல்கின்றன.

    இதில் முக்கியமானது பேசும் வார்த்தைகளும் பேசாத ஒழுக்கமும் முரண்படுகையில் அங்கு பேசாத ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. “எல்லாத்தையும் ப்ராஸஸ் மீறாம செய்யணும்பா” என்று சொல்லிக்கொண்டே “எப்படியாவது இதை இன்னிக்கு முடி!” என்று உணர்த்தினால், அங்கு வழிமுறைகள் மீறப்பட்டு அன்றே அது அவசரமாக நடந்து முடியும்! இப்படித்தான் நாம் அனைவரும் நெறிமுறைகள் கற்கிறோம்.

    நெறிமுறையும் நம்பிக்கை போலத்தான். ஆயிரம் வார்த்தைகள் புரிய வைக்காததை ஒரு செயல் புரிய வைக்கும். ஒவ்வொரு மேலாளரும் விழுமியம் கற்றுத் தரும் ஆசான். ஆனால், அது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. அன்றாட அலுவல் பணியில் கற்றுக் கொள்ளப்படுகின்றன!

    நாம் காணும் அனைத்து மக்களின் ஒழுக்கமும் நேர்மையும் நம் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகளை மாற்றுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள் என நாம் பெரிதும் மதிக்கும் நபர்களே தவறுகள் செய்யும் பொழுது அதன் தாக்கம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.

    அதுபோல, ஒரு நிறுவனம் அரசாங் கத்தையோ, வாடிக்கையாளரையோ, தொழிலாளரையோ யாரை மோசம் செய்தாலும் அது பொது மக்கள் பார்வையில் நம்பிக்கை இழக்கிறது. Corporate Fraud என்று கூகுள் செய்து பார்த்தால் இன்றைய தூக்கத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்!

    எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல்தான் சர்வ ரோக நிவாரணி போல இந்த கார்ப்பரெட் எதிக்ஸ் பயிற்சியை வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் எம்.பி.ஏ வில் முக்கிய பாடமாக இல்லை? பள்ளிகளில் மாரல் சயின்ஸ் பாடத்தையே தவறவிட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதே தவறுதான்!

    இந்த கேள்விகள் கிளப்பிய சூட்டின் தன்மை உணர்ந்து என் அமர்வின் நெறியாளர் என் மென்னையைப் பிடித்து என்னை திசை திருப்பினார். இந்த புனித பசுவைத் தொடுவதாவது? அதுவும் மாணவர்கள் மத்தியில் எப்படி? அமர்வு முடிந்து நெருப்பு கனன்று கொண்டிருந்தது.

    அகத் தூய்மை தலைமைப் பண்பிற்கும் நிறுவன நெறிகளுக்கும் எவ்வளவு முக்கியம் என தேனீர் இடைவெளியில் மாணவர்களிடம் பேசினேன். அப்போது நிறுவன மோசடிகளின் விலை பற்றி ஒரு பேராசிரியர் பிரமாதமாக பட்டியல் போட்டுக் காண்பித்தார். கைகுலுக்கல்களும் ‘கட்டிப்பிடி’ வைத்தியமுமாய் விடைபெற்ற பின்னும் மனம் பேசாத அம்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.

    எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்பு களை வைத்தே Value Clarification பற்றி கருத்தரங்கம் நடத்தலாம் என்று தோன்றியது. நல்லவன் வாழ்வான். நீதிக்குப்பின் பாசம். திருடாதே. தாய்க் குப்பின் தாரம். நீதிக்கு தலை வணங்கு.

    எங்கோ தவறவிட்ட அடிப்படைப் பாடங்களை அவசரமாக அடுத்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டும். யாரை மிதித்து ஓடினாலும் கடைசியில் பணம் சம்பாதித்து ஜெயிக்கணும் என்கிற அவசர பாடத்தை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். அரசியல்வாதியும் தலைவனும் நம் விழுமியங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று புரிய வைக்க வேண்டும்.

    கெட்ட செய்தி கொடுப்பவர்களுக்கு ஒரு வியாபார நோக்கம் உள்ளது; அதை உதறி விட்டு நல்ல செய்திகளை உருவாக்கலாம் வா என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மை என்பது யாரும் பார்க்காத போது நீ செய்யும் செயலில் இருக்கிறது என்பார்கள். நெறி முறைகளை புகட்ட சிறந்த வழி அதற்கு நாம் முன் மாதிரியாகத் திகழ்வதே. எல்லா காலத்திலும் இருட்டு இருந்திருக்கிறது. எல்லா காலத்திலும் வெளிச்சமும் வந்திருக்கிறது.

    சூது கவ்வும் என்று அரை குறையாக சொன்னதற்கு பரிகாரமாய், அதன் பின் தருமம் வெல்லும் என்பதையும் சேர்த்துச் சொல்வோம்
    1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,

    " உதயசூரியன் உதிக்கும் போது

    உள்ளத் தாமரை மலராதோ;

    எதையும் தாங்கும் இதயமிருந்தால்

    இருண்ட பொழுதும் புலராதோ "

    - என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்

    courtesy - thinnai
    " நான் ஆணையிட்டால்..."

    பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

    தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

    இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

    கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.

    ----------

    ' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

    கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :

    " கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;

    கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)

    எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (typical mgr film) அதில்
    ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
    ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
    ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
    ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
    ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
    ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -அப்றம் எப்டி மீனவப்படத்துல கவர்ச்சி காட்றது?)
    ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு) (எம்ஜிஆர் மாறுவேடம்னா ஒரு மீசை அல்லது ஒரு –ரிகஷாக்காரன் படத்துல வர்ர மாதிரி- பெரிய மரு ஒண்ண எடுத்து மூஞ்சியில ஒட்ட வச்சிக்கிறது அவ்ளோதானே? அவ்ளோதான், அடையாளம் தெரியாதுல்ல?)
    ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
    என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
    அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
    பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு.........
    Last edited by suharaam63783; 30th August 2020 at 12:17 PM.

  6. #565
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசியாவின் மக்கள் ஓசை, மற்றும் தமிழ் மலர் நாளிதழில் வெளியான செய்திகள் -29/08/20
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*ஆயிரத்தில் ஒருவன் படத்தை காண 200 ரசிகர்கள் திரண்டு வந்தனர்*
    --------------------------------------------------------------------------------------------------------------
    டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நேற்று முன்தினம் பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் அரங்கில் இரவு 8.30 மணி சுதந்திர தின சிறப்பு* காட்சியாக திரையிடப்பட்டது*

    லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ, ரெனா , ராமலிங்கம் ,மலேசிய இந்திய விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு , கிள்ளானைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ மோகன், மலேசிய எம்.ஜி.ஆர். விஜயசேகர், எம்.ஜி.ஆர். ஹரி, எம்.ஜி.ஆர். சுரேஷ்,,எம்.ஜி.ஆர். தேவா, எம்.ஜி.ஆர். குணா , தொழிலதிபர் ஜெயபாரதி, ஓம்ஸ் ப. தியாகராஜன் , ஆகியோரும் சிறப்புக் காட்சியைக் காண வருகை புரிந்தனர் .**

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா நடித்து வெற்றிக்கொடி நாட்டிய ஆயிரத்தில் ஒருவன் தற்போது லோட்டஸ் பைவ் ஸ்டார் வெளியீடாக 11 அரங்குகளில் திரையிடப்படுகிறது .* *மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இன்னிசையில் அனைத்து பாடல்களும் இன்னமும் சூப்பர் ஹிட்டாக இருக்கின்றது . என்று ரசிகர்கள் தெரிவித்தனர் .**

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்ட திரைப்படமாக*ஆயிரத்தில் ஒருவன் விளங்கிக்கொண்டிருக்கிறது .என்பது குறிப்பிடத்தக்கது .

  7. Likes orodizli liked this post
  8. #566
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் ஓசை நாளிதழ் -30/08/20
    -----------------------------------------------------
    மெர்டேக்காவை முன்னிட்டு காஜாங் திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன்*
    திரைப்படம் வெளியீடு - எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் உற்சாகம்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    மெர்டேக்காவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் எல்.எப்.எஸ்.திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது*
    காஜாங் எல்.எப்.எஸ். அரங்கில் எஸ்.ஓ.பி.விதிமுறைகளின் கீழ் லோட்டஸ் பைவ் ஸ்டார் திரையரங்கின் பணியாளர்களின் முறையான ஒத்துழைப்புடன் இத்திரைப்படம் திரையிடப்பட்டது* என இதன் நிர்வாகி விமல் முனியாண்டி தெரிவித்தார் .**
    இயக்குனர் பி.ஆர். பந்துலு* இயக்கத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா , நாகேஷ் ,நம்பியார் , மனோகர்* மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . மாபெரும் (claasic*evergreen dijital )திரைப்படத்திற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உற்சாகமான ஆதரவை வழங்கினர்*

  9. Thanks orodizli thanked for this post
  10. #567
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*10/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற பெயருக்கு வீரம்,வள்ளல்***கருணை, பண்பு, ,அன்பு ,இரக்கம் ,*மனிதநேயம், மனிதாபிமானம் என்று பலவகைகளில் அர்த்தம் கொள்ளலாம் . எம்.ஜி.ஆர்.அவர்கள் ஒருமுறை பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக சபாநாயகர் மாநாட்டில் பங்குபெற* அப்போதைய சபாநாயகர்**திரு.பி.எச் பாண்டியன் அவர்களை தகுதி, திறமை, ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில்* அனுப்பியுள்ளார் . மாநாட்டில் பங்குற்று வெற்றிகரமாக தாயகம் திரும்பிய திரு.பி.எச்.பாண்டியனை சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தன் சக அமைச்சர்களுடன் சென்று காத்திருந்து* கட்டியணைத்து வரவேற்றார் முதல்வர் எம்.ஜி.ஆர். தன் சக அமைச்சர்களையும், சகாக்களையும் எப்படி அரவணைத்து வரவேற்றார், மதிப்பளித்தார் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று .**


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த இன்ப கனவு என்கிற நாடகம் நடைபெறுகிறது .ஒருமுறை அவருடைய நாடகத்திற்கு அப்போது நண்பராக பழகி வந்த திரு.மு.கருணாநிதி நாடகத்திற்கு தலைமை தாங்கினார் .* அந்த மேடையில் ,முத்தமிழ், முக்கனி என்று பேச ஆரம்பித்த அவர் , எம்.ஜி.ஆர். அவர்கள் இன்று முதல் புரட்சி நடிகர் என்று அழைக்கப்படுவதாக விருது வழங்கினார் . எம்.ஜி.ஆர்.-கருணாநிதி இருவருக்கும் ஆழமான நட்பு இருந்தது .* என்றைக்கு சுயநலம், சொந்த பிள்ளை, சொந்த குடும்பம் என்று ஆரம்பித்ததோ ,அப்போதுதான் பிரிவினை என்கிற விரிசல் ஆரம்பமானது .எம்.ஜி.ஆர். தனது அரசியல் விவகாரத்தில் ஒருபோதும் இவற்றை அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் . 1958ல் தனது சொந்த தயாரிப்பான நாடோடி மன்னனில் இரட்டை வேடம் ஏற்று நடித்து இயக்கி**பிரம்மாண்ட வெற்றியடைந்து படத்தை பற்றி தவறான பிரச்சாரம்,*செய்தவர்கள் வாயடைக்கும்படி செய்தார் . வெற்றிவிழாவின்போது அனைத்து கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பரிசளித்தார் .* மதுரை தமுக்கம் மைதானத்தில்* லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மாபெரும் கூட்டத்தின் நடுவில் எம்.ஜி.ஆர். யானைமீது அமர்ந்து வந்தார் .* விழாவில் எம்.ஜி.ஆருக்கு 110 சவரன் தங்கவாள் பரிசளிக்கப்பட்டது .நாடோடி மன்னன் படத்தில் மன்னனாக முடிசூட்டியபின் ,ஏழை எளியோருக்கு, பெரியோர்களுக்கு, தாய்மார்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்களை அறிவித்தார் .* மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தில் மக்களுக்காக திட்டங்கள் தீட்டப்படும் .மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும் .*வயோதிகர்களுக்காகவும்,மாற்று திறனாளிகளுக்காகவும்,கல்வி நிலையங்கள் அமைக்கவும், தொழில் அபிவிருத்திக்காகவும்,வேலையில்லாத திண்டாட்டத்தை போக்கவும்* என் சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன்*என்பார்* இந்தப்படம்*.வெளியானபோது யாரும் கனவில்கூட எம்.ஜி.ஆர். முதல்வராகி இந்த திட்டங்களை நிறைவேற்றுவார் என்று நினைத்திருக்கமாட்டார்கள் .ஆனால் 20 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதல்வரானதும் தான் படத்தில் அறிவித்த திட்டங்களை படிப்படியாக காலத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் . படத்தில் தான்*அறிவிக்காத சில திட்டங்களையும் நிறைவேற்றினார் .*


    வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர். வெறுத்தார் என்பதற்கு ஒரு சம்பவம் உதாரணம் .ஒருமுறை பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சுகுமார் போட்டியிடுவதாக இருந்தது .எம்.ஜி.சுகுமார் ஒரு குங்குமம் கதை சொல்கிறது போன்ற சில படங்களில் நடித்துள்ளார் . இவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் ஏராளமான சுவரொட்டிகள் அந்த பகுதியில் ஒட்டப்பட்டன .இந்த தகவல்கள் அறிந்த எம்..ஜி.ஆர். உடனடியாக அண்ணா பத்திரிகை அலுவலகம் சென்று ,ஒரு செய்தியை வெளியிட ஏற்பாடு செய்தார் .என்னுடைய அரசியல் வாரிசு என்று யாரும் இருக்க முடியாது . நான் யாரையும் அறிவிக்கவில்லை .என் அனுமதியில்லாமல் என் வாரிசு என்று விளம்பரம் செய்து தேர்தலில் நிற்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்கிற செய்தியை பகிரங்கமாக வெளியிட்டு ,தன்னுடன் பிறந்த அண்ணன் மகன் என்றும் பாராமல்**அறிவிக்க செய்தவர் எம்.ஜி.ஆர். எப்படி நாடோடிமன்னன் படத்தில், அறிவித்தாரோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவர்தான் ஆட்சியில் அமரவேண்டும் என்று சொன்னாரோ, வாரிசு அரசியல் கூடாது என்று வாதிட்டாரோ, அதை செயலில் , உலக அளவில், நிரூபித்துக்காட்டிய ஒரே மாமனிதர், ஈடு இணையற்ற மக்கள் தலைவர்* இன்றுவரை எம்.ஜி.ஆர். தான் .


    எம்.ஜி.ஆர்.தி.மு.க.வில் இருந்தபோது தேர்தல் பிரச்சார குழுவிற்கு தலைவராக நியமிக்கப்படுகிறார் . ஒருமுறை தஞ்சை பகுதியில் காரில் மெதுவாக* செல்லும்போது* ஒரு குடிசை* வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது .உடனே காரை நிறுத்தச்சொல்லி, குழந்தையின் அழுகுரல் வந்த வீட்டிற்கு தான் மட்டும் நடந்தே சென்று ,குடிசையில் புகுந்து ,அழுகின்ற குழந்தையை வாஞ்சையுடன் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, அந்த சமயத்தில் ,குடிசையின் பின்புறம் இருந்த குழந்தையின் தாய் ஓடோடி வந்து பார்க்கிறாள் .குழந்தையின் அழுகுரல் நின்றதும், யாரோ ஒருவர் குழந்தையை தூக்கியிருப்பதை பார்க்க வந்தவர் எம்.ஜி.ஆரை பார்த்ததும், திடுக்கிட்டு, ஆச்சர்யத்துடன், கைகால்கள் நடுங்க ,பயத்தோடு பார்க்கிறார் . ஆனால் ஒரு கணம் எம்.ஜி.ஆர். அந்த குழந்தையை ஆசுவாசப்படுத்தி ,அழாமலிருக்க,தாலாட்டி*,கொஞ்சுகிறார் .சற்று தூரத்தில் குழந்தையின் தந்தை குடித்துவிட்டு* படுத்து கிடக்கிறார் .*அவரை எழுப்பி, இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி,*உங்கள் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள்.குடும்பத்தை நன்றாக கவனியுங்கள் என்று கூறி, குழந்தையின் கையில் ரூ.1,000/- கொடுத்து, வாழ்த்திவிட்டு வந்தார் .*அன்றுமுதல்* எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது .


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரிய பட முதலாளிகளுக்கு ஒருபோதும் அடிபணிந்து போனதில்லை .பெரிய பட முதலாளிகளுக்கு நிறைய படங்கள் ஒப்பந்தம் செய்து நடித்ததில்லை. உதாரணத்திற்கு ஏ.வி.எம்.குக்கு அன்பே வா,நாகிரெட்டிக்கு எங்க வீட்டு பிள்ளை, நம்நாடு, ஜெமினி வாசனுக்கு ஒளி விளக்கு,ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபைக்கு மாட்டுக்கார வேலன் , வீனஸ்* கிருஷ்ணமூர்த்திக்கு என் அண்ணன் ,ஊருக்கு உழைப்பவன் ,ஸ்ரீதருக்கு உரிமைக்குரல், மீனவ நண்பன் , எம்.ஜி.ஆர். உருவாக்கிய சிறிய பட தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் . குறிப்பாக தனது ஆத்ம நண்பர்*சின்னப்பா தேவருக்கு மட்டுமே 16 படங்களில் நடித்துக்கொடுத்தார் .தன்னை மட்டுமே நம்பி,கோவையில் இருந்து சென்னை வந்த தேவரை மிக பெரிய தயாரிப்பாளர் ஆகவும், தேவர் பிலிம்ஸ் என்கிற பெரிய நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான் .

    ஒவ்வொரு திசையில் இருந்து வரும் செய்திகளை தன்வசப்படுத்திக்கொண்டு,அதை ஒரு மாய சக்தியாக, மாய வில்லாக தனக்கேற்றபடி மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவர் எம்.ஜி.ஆர். அந்த வல்லமையோடு, தன் வாழ்க்கையின்*அடிச்சுவடுகளை காட்டிக்கொண்டு செல்லும் பக்கங்கள் வெளிச்ச பக்கங்களாக*மாறவேண்டும் என்பதற்காகத்தான் நாம் சகாப்தம் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி வருகிறோம் .இன்னும் சொல்ல போனால், ராமாயணம், மகாபாரதம்,சங்க இலக்கியங்களை படிக்காதவர் ,வாழ்க்கையில்* நெருக்கடிகள், பிரச்னைகள் சந்தித்து, அதிலிருந்து மீண்டு,வெற்றிகண்டு* இருப்பவர் எங்கோ உள்ளவர் அல்ல*சமீப காலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.அவர்கள்தான்*அந்த சாகச மனிதனின் சரித்திரம் நம்மை போன்ற சாமானியருக்கு எல்லாம் ஒரு பாடம் , படிப்பினை ,அந்த படிப்பினையை நாமும்,தொடருவோம்,வெல்வோம் ,வெற்றிப்பாதையை அடைவோம் . மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும்


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------
    1.சிரித்தாலும் போதுமே, செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

    2.உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -* பாசம்*

    3.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து - நேற்று இன்று நாளை*

    4.எம்.ஜி.ஆர். - பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*

    5. மன்னனாக எம்.ஜி.ஆர்.அறிவிக்கும் திட்டங்கள் -நாடோடி மன்னன்*

    6.குலேபகாவலியில் எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகள்*

    6.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*

    7.தர்மம் தலைகாக்கும் பாடல்* - தர்மம் தலைகாக்கும்*

    .**

  11. Likes orodizli liked this post
  12. #568
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வடசென்னையில் அகஸ்தியா திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகிறது*
    ---------------------------------------------------------------------------------------------------------------------தினத்தந்தி -31/08/20

    சென்னை தண்டையார்பேட்டை யில் இருக்கும்* பழமையான அகஸ்தியா தியேட்டர் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக நாளை* முதல்*(01/09/20) நிரந்தரமாக மூடப்படுகிறது . என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது .* இந்த தியேட்டர் 1967ல் 1004 இருக்கைகளுடன் திறக்கப்பட்டது .முதல் படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டது . எம்.ஜி.ஆரின் காவல்காரன் முதல் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் .உலகம் சுற்றும் வாலிபன் தினசரி 3காட்சிகளில் 25 வாரம் ஓடியது .* பல்லாண்டு வாழ்க 104 நாட்கள் .மீனவ நண்பன்*88 நாட்கள் - நினைத்ததை முடிப்பவன் 84 நாட்கள் ஓடியுள்ளன . அதிக அளவில் எம்.ஜி.ஆர். படங்கள் திரையிடப்பட்டன .* சிவாஜி கணேசனின் சிவந்தமண்,சொர்க்கம் ,ராஜா படங்கள் திரையிடப்பட்டு உள்ளன . ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி , ப்ரியா ,படிக்காதவன் , கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல் ,தேவர் மகன் ,விஜய்யின் குஷி, கில்லி , அஜித்தின் அமராவதி, தீனா, சூர்யாவின் காக்க காக்க உள்பட பல வெற்றி படங்கள் இங்கு திரையிடப்பட்டு உள்ளன .* சினிமா ரசிகர்கள் சங்கத்திடம் இருந்து குளிர்சாதன* வசதி இல்லாத சிறந்த திரையரங்கம்* விருதை பல தடவை பெற்றுள்ளது* .**வடசென்னை மக்களின் பொழுது போக்கோடு இரண்டற கலந்துவிட்ட அகஸ்தியா தியேட்டர் மூடப்படுவது அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது .* 3 மாதங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள மகாராணி, வடபழனியில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்குகள் மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டன .* சென்னையில் ஏற்கனவே, சாந்தி, வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட் , ஆனந்த், பாரகன் , பிளாசா, ராக்சி, ராஜகுமாரி, நாகேஷ், ஸ்டார், கிரவுன், கிருஷ்ணா,பிரபாத், பிராடவே, பாண்டியன் ,சித்ரா, அலங்கார, மிட்லண்ட்,கெயிட்டி*உமா, புவனேஸ்வ்ரி சயானி உள்பட 50க்கு மேற்பட்ட தியேட்டர்களை மூடி வணிக வளாகங்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி உள்ளனர் .

  13. #569
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.பக்தர்களுக்கு மிகவும் வருத்தமா ன
    செய்தி.வடசென்னையில் இந்த ஒரு அரங்கில்தான் தலைவர் படங்கள் வெளியாகி வந்தன. முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் காவல்காரன்.ஒளிவிளக்கு 35 நாட்கள். பிராட்வே யி ல் கூடுதலாக திரையிடப்பட்டு 92 நாட்கள் ஓடியது.
    தேடிவந்த மாப்பிள்ளை 61 நாட்கள். உலகம் சுற்றும் வாலிபன்- தினசரி 3 காட்சிகளில் 175 நாட்கள். மற்ற சில படங்கள் ஒரு காட்சியில் வெள்ளிவிழா ஓடின.
    நினைத்ததை முடிப்பவன் நல்ல வசூலுடன் 84 நாட்கள் ரகசிய போலீஸ் 115- 64 நாட்கள் ஓடியது
    பல்லாண்டு வாழ்க-104 நாட்கள்.மீனவ நண்பன் 88 நாட்களில் 4 லட்சம் வசூல். சாதனை புரிந்து ம் தீபாவளி வெளியீடு க்காக எடுக்கப்பட்டது
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 49 நாட்கள்.

    இவை தவிர படகோட்டி,ஒளி விளக்கு
    போன்ற சில படங்கள் மறு வெளியீட்டில் 2 வாரங்கள் ஓடின

  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  15. #570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன் படத்தில் முதன்முதலில் திமுக கட்சிக் கொடியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் லோகோவாக வைத்திருந்தார் அதனால் படத்தை வெளியிட சென்ஸார் அனுமதி வழங்கவில்லை ஆனால் தலைவர் கொடியின்றி படத்தை திரையிடப்போவதில்லை என்று கூறி மும்பை சென்ஸாரில் அனுமதி பெற்று கட்சிக் கொடியுடன் படத்தை திரையிடச் செய்தார் திமுக வளர்ச்சிக்கு தலைவர் பெரும் பங்காற்றினார். மேலும் அண்ணா மறைவிற்குப்பின்பு நாவலர் அவர்களே முதல்வராக தேர்வு செய்ய இருந்தார்கள் ஆனால் கருணாநிதி சூழ்ச்சி செய்து நம் தலைவரின் உதவியை நாடினார் தலைவரும் நண்பருக்கு உதவிட நினைத்து தனது ஆதரவு எம் எல் ஏ க்களை கருணாநிதிக்கு ஆதரவளிக்க வேண்டிக் கொண்ட காரணத்தால் அன்று கருணாநி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் தலைவர் ஆதரிக்கவில்லையென்றால் கருணாநிதி முதல்வர் ஆகியிருக்க முடியாது. இதுதான் உண்மை.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •