Page 139 of 210 FirstFirst ... 3989129137138139140141149189 ... LastLast
Results 1,381 to 1,390 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1381
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #mgr_அவர்களின்_தமிழ்ப்_புலமை

    m.g.r. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.

    சினிமா, அரசியல் என்று இருதுறைகளிலும் முதல் இடத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங்கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக்கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.

    பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங்களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    ‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:

    ‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்

    கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’

    பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.

    ‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத்தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர்களுக்கு ஆசிரியர் திருக்குறளை கரும்பலகையில் எழுதி பாடம் நடத்துவது போல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவனித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.

    நீதியரசர் மு.மு.இஸ்மாயிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறுவடிவமாக விளங்கிய நடுநிலை தவறாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

    ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்பராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

    எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம்பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட்டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்பராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேசமுடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.

    இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.

    விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.

    பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங்களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!

    எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.

    அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத்துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...

    ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;

    சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’

    நன்றி : இந்து தமிழ் நாளிதழ்.........vsk.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1382
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜியார்.
    மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்.
    இளமையில் வறுமையில் வாடினாலும் திரைத்துறைக்கு வந்தபின் செல்வச் செழிப்பில் மகாராஜாவாகவே வாழ்ந்தார்.
    தமிழகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் கூட்டம்.அவர் படங்கள் திரையரங்கத்துக்கு வந்தால் அது ஒரு திருவிழா.
    அரசியலிலும் வெறித்தனமான தொண்டர்கள்.அவர் கட்சிக்கு மட்டுமே ஓட்டுப்போடும் வழக்கம் கொண்டவர்கள். யார் எந்த விமர்சனம் வைத்தாலும் அது உண்மையா பொய்யா என அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.ஓட்டு அவர் கட்சிக்குத்தான்.
    திரையுலகையும் சரி அரசியலையும் சரி தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.அவர் எது சொன்னாலும் அதுவே இறுதி முடிவானது.பத்தரை ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்துள்ளார்.
    இவ்வளவு செல்வாக்கு,பணம்,புகழ்,பதவி, படைபலம் என அவ்வளவும் இருந்தும் இவர் தனது பிறந்தநாளை தன் வாழ்நாளில் கொண்டாடியதே இல்லை.இவருடைய தொண்டர்களும் ரசிகர்களும்கூட இவர் மறையும்வரை இவருடைய பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை.
    இன்றைய இளைஞர்களுக்கு இது நம்ப முடியாத தகவலாக இருக்கும்.ஆனால் இதுதான் உண்மை.
    இவரின் மறைவுக்குப் பிறகே இவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் இவருக்கு வெகு விமரிசையாகப் பிறந்தநாள்விழா கொண்டாடப்படுகிறது........ Rajendran Raj

  4. #1383
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் வாங்கிய சத்தியம்!

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக நம்முடன் பகிர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் சிவகுமார்.

    சிவகுமாரின் தாயார் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த மரியாதை, குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் “அம்மா எப்படி இருக்காங்க?” என்று கனிவுடன் விசாரித்த பண்பு என ஒவ்வொரு வாரமும் பல உருக்கமான சம்பவங்களை விவரித்து வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆரை முதன்முறையாக சந்திக்க தன் தாயாரை அழைத்து சென்றதை பற்றியும், எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்போது அவரை பார்க்க வந்த இந்திராகாந்தி அடைந்த அதிர்ச்சி குறித்தும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் கலையுலக மார்கண்டேயன்.

    “எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் நாகப்பட்டணத்தில் புயல் வீசி பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செய்து வந்தது தமிழக அரசு. என் பங்காக முதல்வரிடம் 10,000 ரூபாய் கொடுக்க விரும்பினேன்.

    அப்போது என் சம்பளம் 25,000 ரூபாய். என் வீட்டுக்கு பின்னாடி தெருவில் தான் எம்.ஜி.ஆர். அலுவலகம் இருந்தது. போன் செய்து புயல் நிவாரண நிதி தரணும்ணே என்று சொன்னதும். “நீ இப்ப எங்க இருக்க” என்று கேட்டார். “வீட்டுல தான்ணே இருக்கேன்” என்றேன்.

    “இங்க கூட்டம் அதிகமா இருக்கு. நீ கோட்டைக்கு வந்திடேன்” என்றார்.

    எம்.ஜி.ஆரை பார்க்கணும்னு எங்கம்மா ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருந்தது ஞாபகம் வர, “அம்மா… எம்.ஜி.ஆரை பார்க்க போறேன் வர்றியா”ன்னு கேட்டேன்.

    அன்னைக்கு அவங்களுக்கு காய்ச்சல் வேற. எதுவுமே பேசல. கடகடனு உள்ள போச்சு. முகத்தை கழுவி, புடவையை மாத்திகிட்டு, நெத்தி நிறைய விபூதியை பூசிக்கிட்டு, கண்ணாடி போட்டுகிட்டு ரெடியாகி வந்து நின்னுட்டாங்க.

    கோட்டைக்கு போய் தகவல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். முதல் மாடியில் தான் முதல்வர் அறை. சிவகுமார் தன் அம்மாவோடு வந்திருக்கார்னு தகவல் சொல்லி இருக்கிறார்கள். சொன்னா நம்பமாட்டீங்க… அடுத்த அஞ்சாவது நிமிஷம், எம்.ஜி.ஆர். மேலே இருந்து இறங்கி வந்தார். அம்மாவை கையெடுத்து கும்பிட்டு எங்களை அவரே மாடிக்கு அழைத்துச் சென்றார்.

    பெரியவர்களை வரவேற்கையில் தங்கள் பிருஷ்ட்டத்தை (பின் பகுதி) காட்டக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் படிக்கட்டுகளில் ஏறும்போது கூட வாங்கம்மா… வாங்க…. என்று அம்மாவை வரவேற்றபடி ரிவர்ஸிலேயே படியேறினார். அவரது அறைக்கு சென்றதும், அம்மா தன் கையால் எம்.ஜி.ஆர் இடம் செக்கை கொடுத்தார்.

    அம்மாவைப் பார்த்து, “அம்மா… இதமாதிரி ஒரு பிள்ளை உங்களுக்கு கிடைக்க மாட்டான்மா…” என்றார்.

    என்னைப் பார்த்து, “டேய்… தம்பி, இதமாதிரி உனக்கொரு அம்மா கிடைக்க மாட்டாங்க. அவங்கள நல்லா பார்த்துக்க” என்றார்.

    அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.

    அதன்பிறகு 1979-ல் என்னுடைய 100-வது பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். மேடையில் என் அம்மாவையும் அமர வைத்திருந்தேன்.

    அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பேசும்போது, “இந்தக் கோலத்திலே ஒரு தாய் வீட்டில் இருந்தால், அந்தத் தாயாரை அழைத்து வந்து இந்த மேடையிலே அமர்த்துகின்ற துணிவு, தைரியம் இங்கு இருக்கும் எத்தனை பேருக்கு இருக்கிறது.

    தான் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு காரணமான தெய்வம், அன்னையை மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் வேறில்லை என்ற எண்ணம் கொண்ட ஒருவரால் தான் இப்படி செய்ய முடியும். சிவகுமாரை நான் போற்றுகிறேன்” என்று பேசினார்.

    இப்படி என் அம்மாவை சந்தித்த இரண்டு சந்தர்பங்களிலும் அவர் மீதிருந்த பெரும் மதிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்” என்று சொன்ன சிவகுமார், அடுத்து சொன்ன சம்பவம் எம்.ஜி.ஆரின் மன உறுதியை இந்தத் தலைமுறையினருக்கு விளக்கும் ஒரு அற்புதமான அனுபவம்.

    “எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு போவதையே சுத்தமாக வெறுத்தவர் அவர். ஒருமுறை கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னபோது அந்தக் கருவிகளையெல்லாம் வீட்டுக்கு எடுத்துவர சொன்னார்.

    “சார்…. அதெல்லாம் நட், போல்ட் பதியம் போட்டு தரையோட தரையா நிரந்தரமா ஃபிக்ஸ் பண்ணின மிஷின்ஸ்” என்றதற்கு, “அப்படி தூக்க முடியாம உலகத்துல ஒன்னு இருக்குதா? எடுத்துட்டு வரசொல்லுய்யா. என்ன செலவோ நான் கொடுத்திடறேன்” என்றார். ஒரு கண் ஆபரேஷனுக்கே ஆஸ்பத்திரியை தூக்கி வர சொன்னவர், வேற வழி இல்லாம அன்னிக்கி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போனார்.

    அதன் உரிமையாளர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியிடம், “என் முழு ரகசியத்தையும் நான் உங்க முன்னாடி வைக்கிறேன். இது எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே போகக்கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் அட்மிட் ஆனார்.

    ஜானகி அம்மாவைத் வேற யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டார் ரெட்டி. ஜானகி அம்மாவைத் தவிர ரெண்டாவதா உள்ளே சென்று எம்.ஜி.ஆரை சந்தித்த வெளி ஆள் இந்திராகாந்தி ஒருவர் மட்டும் தான்.

    உடல் மெலிந்து, கண்களில் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய், சோர்ந்து போன மனிதராக ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். படுத்திருந்த நிலைமையைக் கண்டு அதிர்ந்து போனார் இந்திரா.

    நான்கு மாதங்களுக்கு முன்னால் தெலுங்கு கங்கா திட்டத்தில் கையெழுத்திடுவதற்காக இந்திரா சென்னை வந்திருந்தபோது பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அந்த விழா மேடையின் மிக நீண்ட படிக்கட்டுகளில் அன்று இளைஞனைப் போல துள்ளிக் குதித்து படியேறி வந்த எம்.ஜி.ஆர். இன்று ஆஸ்பத்திரியில் கிடக்கும் கோலத்தைக் கண்டு, “இஸ் ஹி த சேம் மேன், ஐ மெட் ஃபோர் மன்த்ஸ் பேக்?” என்று அதிர்ச்சியில் கேட்டார் இந்திரா.

    “எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை, அமெரிக்காவுக்கு மாத்துங்க” என்று சொல்லிவிட்டு சென்றார். உடனடியாக ஒரு நாள் நள்ளிரவில் டாக்டர்கள் குழுவோடு எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கும் புரூக்ளின் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இனி எம்.ஜி.ஆர். பிழைத்து வர மாட்டார் என்று தமிழகத்தில் செய்தி பரவத் தொடங்கியது. அவரது அமைச்சரவையைச் சேர்ந்தவர்களே நம்பிக்கையின்றி இருந்தனர்.

    எனவே, அவருக்கு பிறகு யார் முதல்வர், யார் நிதியமைச்சர், யார் கல்வி அமைச்சர் என்று அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசி ஒரு உடன்படிக்கையை கூட எட்டிவிட்டிருந்தனர். அவர்கள் யார் யார் என்று இப்போது பெயர் சொல்ல விரும்பவில்லை.

    சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. ஆம்புலன்சில் படுத்தபடுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்த கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.

    யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.

    புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.

    ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்…!
    தாய் வார இதழ்
    Published – அருண் சுவாமிநாதன்

    Posted : MG.Nagarajan .........

  5. #1384
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பெயர் #எம்ஜிஆர்

    எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

    எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம் வடபழனியில் உள்ள பிரபல மண்டபத்தில் காலையில் நிகழ்ச்சி
    காலையில் கோட்டைக்கு சென்றிருந்த எம்ஜிஆர் கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது மண்டபத்தில் இருந்தவர் மத்தியில், எம்ஜிஆர் வருகிறார் என்று ஒரே பரபரப்பு/

    ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் வந்தவுடன் பாலத்தின் மேல் செல்லாமல் முன்னே செல்லும் கான்வாய் கார்களுக்கும் தெரியாமல் திடீரென உஸ்மான் ரோடு திரும்பி தியாராய நகர் வழியாக முதலமைச்சரின் கார் பயணிக்கிறது நேராக சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலதுபுறம் திரும்பி சலவைத்தொழிலாளார்கள் குடியிருப்புக்கு செல்கிறார் எம்ஜிஆர்

    ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது ஆனால் எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கொண்டு சரசரவென ஒரு சந்தில் கால்நடையாக செல்கிறார்.. பாதுகாப்பு அதிகாரிகளும் புரியாமல் அவர் பின்னே ஓடுகிறார்கள்.

    கடைசியில் அங்கே ஒரு வீட்டில் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது
    எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் அவசரமாக நாற்காலியை தேடுகிறார்கள் ஒரு காலுடைந்துபோன நாற்காலிக்கு நான்கைந்து செங்கற்களை முட்டுக்கொடுத்து அதிலே எம்ஜிஆரை உட்கார வைக்கிறார்கள்.

    எம்ஜிஆரும் மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் யாருமே எதிர்பார்க்காத பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதனபிறகு அவர் கோட்டைக்கு மீண்டும் பறந்துவிடுகிறார்.
    முதலமைச்சர் எம்ஜிஆர் போன திருமணம் வேறு யாருயுடையதுமல்ல, அவருக்கு வழக்கமாக துணிகளை சலவைசெய்துகொடுப்பவரின் குடும்பத்துடையது.

    அப்படியே, சின்ன பிளாஷ்பேக்

    அந்த சலவைத்தொழிலாளி தன் குடும்பத்து திருமண அழைப்பிதழை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார் ஜானகியும் அதை வாங்கிக்கொண்டு அப்போதே ஒரு தொகையை திருமண சீதனமாக கொடுத்திருக்கிறார்
    முடிந்தால் மட்டுமே தலைவர் திருமணத்துக்கு வருவார் என்று சொல்லிஅனுப்புகிறார்.

    அப்போது சலவைத்தொழிலாளி, தலைவர் திருமணத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை
    பத்திரிகையையாவது பார்க்கும்படி செய்துவிட்டால் அதுவே போதும் என்கிறார். ஜானகியும் உடனே வாக்குறுதி அளித்துவிட்டு எம்ஜிஆர் தினமும் எழுதும் டைரியில் தேதிக்கேற்ற இடத்தில் அந்த பத்திரிகையை வைத்துவிடுகிறார் அதைப்பார்த்துதான் முதலமைச்சர் எம்ஜிஆர் திருமணத்திற்கு போயிருக்கிறார்.........sk...

  6. #1385
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பதவி ஆசை ...
    கோடிகள் சேர்த்த பின் ஆசை... முதல்வர் ஆக நடிகர்களுக்கு

    சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை...
    நடிகர்களுக்கு

    வயதாகி மார்கெட் போன பின் பொழுதை கழிக்க தமிழக அரசியலில் இறங்கும் நடிகர்கள் நினைப்பது கிடைத்தால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் பொழுது போகுமே என்று

    நடிக்க வரும் முன்னே கதர் உடையுடன் நாட்டு சுதந்தரம் வேட்கையோடு வாழ்ந்து கொள்கையால் ஈர்க்க பட்டு தி மு க வில் இணைந்து பொருள் கொடுத்து உழைப்பை கொடுத்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்த எம் ஜி ஆர் கருணாநிதி ஊழல் ஆட்சி செய்ததால் தனியாக கட்சி கண்டு முதல்வர் ஆகி ஒரு பொற்க்கால ஆட்சி கொடுத்தார் ,தன் பொருள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்ததார் எம் ஜி ஆர் தமிழகத்தில்

    எம் ஜி ஆரை கண்டு எம் ஜி ஆர் ஆக துடிக்கும் நடிகர்களுக்கு
    எம் ஜி ஆர் போல் பதவி இல்லாத பொழுதும் மக்கள் சேவை செய்து மக்களை காக்காத உங்களை மக்கள் துரத்தி அடிப்பார்கள் ...

    வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்.........am.........

  7. #1386
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தி௫க்கும் சாதனை மனிதா் மக்கள்திலகம் எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக
    இ௫ந்தவா் தோட்டத்தம்மா என்று அழைக்கப்பட்ட தி௫மதி ஜானகி எம்ஜிஆா் !தி௫.பி .நாராயணனின் உடன்பிறந்த மூத்த சகோதாிதான் தி௫மதி ஜானகி ராமச்சந்திரன் கேரள மாநிலம் வைக்கம் எனும் ஊாில் பொன்மனச்சோி இல்லத்தில் 1923ஆம் ஆண்டு நவம்பா் 30ம்தேதி (30/11/1923) ராஜகோபால் அய்யா் வைக்கம் நாராயணி தம்பதிய௫க்கு மகளாய்ப் பிறந்தவா் வி.என்.ஜானகி .இவரது தந்தை கும்பகோணத்தை பூா்விகமாக கொண்டவா்!
    சிறந்த தமிழாசிாியரான இவா் பல திரைப் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளாா்.இவரது தம்பி தமிழ்த்தியாகராஜா் என்று அழைக்கப்பட்ட பாபநாசம் சிவன் ஆவாா்!ராஜ
    கோபால் அய்யா் ஜெமினி ஸ்டுடியோ மாா்டன் தியேட்டா்ஸ்உள்பட இடங்களில் பணியற்றியவா் அவ௫டைய மனைவி வைக்கம நாராயணி கேரள மாநிலம் வைக்கத்தை பூா்விகமாகக்
    கொண்டவா் !
    கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த வி.என்.ஜானகி.தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராட்டியம் ஆங்கிலம் என பன்மொழிப் புலமைப்பெற்றவா் தென்னிந்திய
    நடனக்கலை
    கலைகளான பரத நாட்டியம் மோகினி ஆட்டம் குச்சிப்புடி போன்றவற்றில் சிறப்பான பயிற்சி பெற்றவா் !
    இயக்குநா் கே.சுப்பிரமணியம் தோற்றுவித்த நி௫த்யோதயா நடனப் பள்ளியின் முதல் மாணவி ,நடன கலாசேவா என்ற நாட்டியக்
    குழுவில் சோ்ந்து பல ஊா்களில் ஏராளமான நாட்டிய நாடகங்களில் நடித்துள்ளாா் . அது தவிர சிலம்பம் கத்திச சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலைகளிலும் இவா் கைதோ்ந்தவா் !
    1937 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவா் 25க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா் !
    திரைத்துறையில் இ௫ந்த காலங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவா்!எம்ஜிஆா் திரைத்துறை
    யிலும் அரசியலிலும் வளரத் தொடங்கிய காலக்கட்டத்தில் இ௫ந்தே தோட்டத்தம்மா எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக இ௫ந்தாா் .சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் வீட்டிலி௫ந்து உணவைக் கொண்டுவரச்
    சொல்லி அதையும் தோட்டத்தம்மா கையால் பாிமாறிச்
    சொல்லி சாப்பிடுவதையே வி௫ம்பி இ௫க்கிறாா் எம்ஜிஆா் !
    உண்மையில் எம்ஜிஆா் கொடுக்கும் குணத்திற்கு சற்றும் சளைத்தவரல்ல தோட்டத்தம்மா உதவி கேட்டு வந்தவரை எம்ஜிஆா் வீட்டுக்கு அனுப்பினால் வந்தவாின் சூழ்நிலைப்புாிந்து எம்ஜிஆா் சொன்ன தொகையை விட ௯டுதலாகவே கொடுத்து அனுப்புவாராம் தோட்டத்தம்மா !
    1950 களில் சென்னை லாயிட்ஸ் சந்தில் உள்ள ஒ௫ வீட்டில் எம்ஜிஆ௫ம் தோட்டத்தம்மாவும் வசித்து வந்தனா் .அப்போது தோட்டத்தம்மாவின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது
    தான் தற்போதைய அஇஅதிமுக வின் தலைமை அலுவலமாகவுள்ள இடம் !
    1956ல் எம்ஜிஆா் பிக்சா்ஸ் தொடங்கப்பட்ட போது எம்ஜிஆ௫டன் தோட்டத்தம்மாவும் எம்ஜிஆாின் சகோதரா் எம்ஜி.சக்ரபாணியும் நிறுவனத்தின் இயக்குநா்களாக இ௫ந்தனா்!எம்ஜிஆா் தயாாித்து இயக்கிய "நாடோடி மன்னன் " வெற்றித்திரைப்
    படம் உ௫வாக மிக முக்கியக்காரண
    மாக இ௫ந்தவா் தோட்டத்தம்மா !
    எம்ஜிஆ௫ம் ஜானகி அம்மையா௫ம் திரை உலகில் உச்சம் தொட்டி௫ந்த காலத்தில் எம்ஜிஆாின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப்பின் 1962 ஆம் ஆண்டு எம்ஜிஆ௫க்கும் ஜானகி அம்மையா௫க்கும் தி௫மணம் நடைப்பெற்றது ! தி௫மதி ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று ! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சா் இவரே ! ������������������������ --எம்.எஸ்.சேகா்
    கோவை-641103.

  8. #1387
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
    எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

    போட்டி மனப்பான்மை வளரவேண்டும்
    அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

    இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பணத்தை வழங்கி இசைப்பட வாழலாம். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி இசைபட வாழலாம். நல்ல எண்ணங்களை வழங்கியும் இசைபட வாழலாம்.

    நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

    எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

    தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
    அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.! "

    ( டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய சென்னை
    அவ்வை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்ஜியார்
    ரூ.30 ஆயிரம் நன்கொடை வழங்கிய விழாவில்
    அறிஞர் அண்ணா . விழா தலைவர் , அப்போதைய
    நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் , 30 - 01 - 1961).........sk...

  9. #1388
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'நான் பார்த்தால் பைத்தியக்காரன் கைபிள்ளைகளுக்கும் வைத்தியம் பார்ப்பேன்', அப்படி வைத்தியம் பார்த்து கைபிள்ளைகளுக்கு உண்மை என்ற கசப்பு மருந்து கொடுத்ததால் எதிரில் பார்ப்பவர்களை எல்லாம் மனநிலை தவறியவர் போலவும் ஒருவரே 10,15 ஐடி வைத்திருப்பவராக தெரிவதும் கைபிள்ளைகளுக்கு சகஜமே.! மேலும் சில நாட்கள் உண்மை என்னும் கசப்பு மருந்து குடித்தால் எல்லாம் சரியாகி விடும்.

    "ஒளிவிளக்கு" தலைவரின் 100 வது படம். சென்னையில் ஒரு திரையரங்கில் கூட 100 நாட்கள் ஓடவில்லை. ( ஓட்டுவதற்கு கிஞ்சித்தும் முயற்சிக்காத மஹான்) ஆனால் 1968 ல் வெளியான "ஒளிவிளக்கு" எண்ணற்ற சாதனைகளை குவித்து வசூலில் இந்தியாவிலும் இலங்கையிலும் நிகரற்ற சாதனையை செய்தது.

    அதே நேரத்தில் மாற்று நடிகரின் 100 வது படம் "நவராத்திரி". சென்னையில் திரையிட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாட்கள் முரட்டு வடக்கயிற்றின் உதவியால் ஓட்டப்பட்டு கண்ணுக்கு தெரியாத வசூலை சாதனையாக சமர்ப்பித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டப்பட்டு மொத்தம் 6 திரைகளில் 100 நாட்கள் ஓட்ட......ப்பட்டது.. ஒரு வேடத்தில் நடித்தாலே மிகை நடிப்பில் பதறும் பாமரர்கள் அய்யன் 9 வேடத்தில் வந்தால் தாங்குவார்களா? மேக்கப்புக்கு பெருந்தொகை பிலிம்சுருளுக்கு பெரும்தொகை என்று மிகவும் கஷ்டகாலத்தில் நாகராஜன் சிக்கி அதில் இருந்து படிப்படியாக முழுவதுமாக கடனில் மூழ்கிய சோகம் பரிதாபகரமானது.

    மதுரை தேவியில் 108 நாட்கள் ஓட்டப்பட்டு மொத்த வசூலாக ரூ 187738.13 பெற்றது. இதுவும் அவர்கள் அளித்த சினிமா பட்டறை வசூல்தான். ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் மொத்தம் 3 திரையரங்குகளில்தான் 100 நாட்கள் ஓடியது. இலங்கையில் முதல் வெளியீட்டில் 4 திரையரங்கில் 100 நாட்களை கொண்டாடியது. 2வது 3வது மற்றும் 4வது வெள்யீடுகளில் தலா 1 தியேட்டரில் 100 நாட்களும் ஓடி 9 திரையரங்கில் 100 நாட்கள் ஓடி யது.

    இருப்பினும் சென்னையில் 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டப்பட்ட "ஆலயமணி""நவராத்திரி" "கை கொடுத்த தெய்வம்" போன்ற படங்களின் மொத்த வசூலை வெறும் 40 நாட்களில் ஒளிவிளக்கு தூக்கியெறிந்தது கைபிள்ளைகளுக்கு பேரதிர்ச்சியாக இருக்கத்தானே செய்யும்... 9 வேடமல்ல, 100 வேடங்கள் போட்டு பாமர மக்களை விரட்டி அடித்தாலும் புரட்சி நடிகரின் ஒரே முகமான தன் திருமுகத்தை காட்டி மீண்டும் வரவழைக்க முடியும் என்பதை நிரூபித்த படம்தான் "ஒளிவிளக்கு".

    மதுரையில் மீனாட்சி திரையரங்கில் 147 நாட்கள் ஓடி ரூ316714.80 ஐ வசூலாக பெற்றது. தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் அதிகமாக அரங்கு நிறைந்து சாதனையை தொடர்ந்தது. நெறி கெட்டு 100 நாட்கள் ஓட்டிய அய்யனின் படத்தை தறி கெட்டு ஓடி புழுதி பறக்க வெற்றிக் கொடியை பறக்க விட்ட படம்தான் தலைவரின் "ஒளிவிளக்கு".

    சென்னையில் 100 நாட்கள் ஓடாமலே "ஒளிவிளக்கு" பெற்ற வசூல் ரூ928171.28 ஆனால் 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டப்பட்ட "நவராத்திரி" பெற்ற வசூல் 6 லட்சத்தை கூட
    எட்டவில்லை என்பது கைபிள்ளைகளின் சோகம்.
    இப்படித்தான் தகுதியில்லாத படங்களை 100 நாட்கள் ஓட்டி தியேட்டர் முதலாளிகளை வாழ வைத்த தெய்வங்கள்தான் அய்யனின் கைபிள்ளைகள்.

    ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் மொத்தம் 64 அரங்குகளில் 50 நாட்களும் இலங்கையில் 8 அரங்குகள் சேர்த்து மொத்தம் 72 அரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்ததே 100 வது படங்களில் செய்த அதிகபட்ச சாதனையாக திகழ்கிறது. கைபிள்ளை நாயகனின் சாதனை கையளவே, ஆனால் மக்கள் திலகத்தின் சாதனை மலையளவு என்பதை மனதில் கொண்டு மனம் வெம்பாமல் புரட்சி நடிகரை நினைத்து பெருமை படுங்கள் கைபிள்ளைகளே.

    இப்படி வடக்கயிறு போட்டு ஓட்டியே அய்யன் தனக்கு ஆதரவு இருப்பதாக நினைத்து ஏமாந்து தேர்தலில் தான் படுதோல்வி அடைந்ததுடன் தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட்டை பறிகொடுத்தது அவரது கட்சியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
    அந்த டெப்பாசிட்டையாவது திரும்ப கொடுத்திருந்தால் வேட்பாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். அதை செய்தாரா உங்கள் அய்யன்?....(அதோடு அன்னை திருமதி ஜானகி அம்மையாரையும் ஏரு கட்ட வைத்தது)

    அனைத்திந்தியாவிலும் வசூலில் தன்னிகரற்று விளங்கிய "சக்கரவர்த்தி திருமகனை" நினைத்து பெருமைபடுவதை விடுத்து அவரிடம் போட்டி போட கனவிலும் எண்ண வேண்டாம். நாம் தகுந்த ஆதாரங்களோடு பதிவிடுவதால் கைபிள்ளைகள் கதறுவதும் பதறுவதும் தெளிவாக தெரிகிறது..........ksr.........

  10. #1389
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .

    1. பிரஹலாதா 12.12.1939

    2. ரத்னகுமார் 15.12.1949

    3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.

    4.தாயின் மடியில் 18.12.1964.

    5. ஆசைமுகம் 10.12.1965

    6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.

    7. ஒரு தாய் மக்கள் 9.12.1971..........vs...

  11. #1390
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பதவி ஆசை
    கோடிகள் சேர்த்த பின் ஆசை முதல்வர் ஆக நடிகர்களுக்கு

    சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை
    நடிகர்களுக்கு

    வயதாகி மார்கெட் போன பின் பொழுதை கழிக்க தமிழக அரசியலில் இறங்கும் நடிகர்கள் நினைப்பது கிடைத்தால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் பொழுது போகுமே என்று

    நடிக்க வரும் முன்னே கதர் உடையுடன் நாட்டு சுதந்தரம் வேட்கையோடு வாழ்ந்து கொள்கையால் ஈர்க்க பட்டு தி மு க வில் இணைந்து பொருள் கொடுத்து உழைப்பை கொடுத்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்த எம் ஜி ஆர் கருணாநிதி ஊழல் ஆட்சி செய்ததால் தனியாக கட்சி கண்டு முதல்வர் ஆகி ஒரு பொற்க்கால ஆட்சி கொடுத்தார் தன் பொருள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்ததார் எம் ஜி ஆர் தமிழகத்தில்

    எம் ஜி ஆரை கண்டு எம் ஜி ஆர் ஆக துடிக்கும் நடிகர்களுக்கு
    எம் ஜி ஆர் போல் பதவி இல்லாத போதும் மக்கள் சேவை செய்து மக்களை காக்காத உங்களை மக்கள் துரத்தி அடிப்பார்கள்

    வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்..........va...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •