Page 116 of 210 FirstFirst ... 1666106114115116117118126166 ... LastLast
Results 1,151 to 1,160 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969 ல் இரண்டு காவியங்கள் தென்னகத்தில் மகத்தான சாதனை....
    அடிமைப்பெண்..... நம்நாடு.... ஆகும்!
    *************************************
    " நினைத்ததை நடத்திய
    முடிப்பவன் நான்...நான்...நான்."........

    1969 ல் 2வது வண்ண முத்து....
    தொண்டன் துரையின் முழக்கம்...

    52 திரையில் 50 நாட்களை முழங்கிய
    சேர்மன் துரையின் வெற்றியில்....

    அடுத்து ....
    மெக்னஸ் கோல்டன் ராபர்ட்...
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
    நம்நாடு படைத்த....
    75 நாட்கள் கடந்து ஒடிய
    சாதனை திரையரங்குகள்....
    ********************************
    சென்னை சித்ரா 105 நாள்
    சென்னை கிருஷ்ணா 105 நாள்
    சென்னை சரவணா 105 நாள்
    சென்னை சீனிவாசா 77 நாள்
    மதுரை மீனாட்சி 133 நாள்
    திருச்சி வெலிங்டன் 119 நாள்
    சேலம் பேலஸ் 109 நாள்
    கோவை ராஜா 105 நாள்
    குடந்தை விஜயலட்சுமி 100 நாள்
    பட்டுக்கோட்டை 96 நாள்
    மயிலாடுதுறை 96 நாள்
    ஈரோடு 91 நாள்
    தஞ்சாவூர் 85 நாள்
    கரூர் 85 நாள்
    பாண்டி 83 நாள்
    வேலூர் 80 நாள்
    நெல்லை 76 நாள்
    நாகர் கோவில் 76 நாள்
    திண்டுக்கல் 76 நாள்
    இலங்கை வெலிங்டன் 100 நாள்
    இலங்கை கெப்பிட்டல் 98 நாள்
    +++++++++++++++++++++++++++
    1969 ல் அடிமைப்பெண்....
    காவியத்திற்குப்பின் அதிக அரங்கில் அதிக நாட்கள் ஒடிய நம்நாடு.....காவியத்தின் முன்
    செம்மண்....அழுகிய ஆஸ்கார் மகன்
    சரணாகதியாகும்....
    ++++++++++++++++++++++++++++++...ur...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # கனடா மன்னாரன் கம்பெனி புளுகு மூட்டை, சங்க காலக் குடிலன், புரூட்டஸ்,
    புல்லுருவியின் அடுத்த வாந்தி #


    இந்த புளுகு மூட்டை வசனம் பேசியிருக்கிறது

    பதிவு போடும் நமக்கு
    வெளியுலகம் தெரியாதாம், இப்போது பெருங்கடலை பார்த்ததும் திகைத்து விட்டோமாம்,

    வாடா புளுகு மூட்டை
    எங்கிருந்து கொண்டோ சொகுசாக உட்கார்ந்து கொண்டு
    சரடு திரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் உனக்கு இவ்வளவு இருக்கும் என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?


    மாரித் தவளைகளாம்,
    யார் மழைக் காலத்து தவளைகள் என்பதை உன் மனசாட்சியிடம் நீயே கேட்டுப்பார் ( அது சரி அப்படி ஒன்று இருந்திருந்தால்
    இப்படியெல்லாம் புளுகு மூட்டையை தினசரி அவிழ்த்துக் கொட்டுவாயா? )

    உனக்கு திராணி இருந்தால் எந்த இடத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள்,

    அதற்குண்டான செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்
    எந்த சப்ஜெக்ட்டை வைத்து விவாதிக்க வேண்டுமோ அந்த பொருளில் விவாதிக்க நான் தயார், நீ தயாரா?

    இதை சவாலாகவே விடுக்கிறேன், முடிந்தால் சென்னைக்கு வந்து உன் அறிவுத் திறமையை காட்டு பார்ப்போம்,

    வெளி உலகத்தைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தை வேண்டாம், சதா சர்வ காலமும் அய்யன் அப்படி நடித்தார், இப்படி நடித்தார் என்று பதிவு போடுவதைத் தவிர பொய்யன் செய்த வேறு ஏதாவது ஒரு செயலைப் பற்றி இப்படி நான்கைந்து
    அல்லக்கைகள் உங்களுக்கு நீங்களே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டு
    இருப்பதைத் தவிர இது வரை பதிவிட்டது உண்டா?

    எப்பப்பாரு அய்யஹோ எங்க அய்யன் நடிப்பை வேறு யாரும் நடிக்க முடியுமா என்று திரும்பத் திரும்ப பதிவு போடுவதைத் தவிர வேறு ஒரு சுக்கு ம் தெரியாது,

    பெரிய நடிப்பு கடலாம் கடல்,
    ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உலக சினிமா வெளி வந்து 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி வெளியிட்ட சிறப்பு புத்தகத்தில் இந்த மிகைநடிப்பின் சிகரத்தைப் பற்றி மருந்துக்குக் கூட ஒரு செய்தியையும் காணோம்,

    ஆனால் இயல்பான நடிப்போடு அடக்கத்துடன் ஏறு முன்னேறு என்று எட்டுத் திக்கும் ஜெயக்கொடி நாட்டிய எங்கள் தங்கத்தை அட்டையிலே போட்டு
    தகவலையும் கொடுத்து விண் முட்டும் பெருமையை அளித்தது ஆக்ஸ் போர்டு,

    அந்த புத்தகத்தின் அட்டையில் அமிதாப்பச்சனுக்குக் கூட இடம் ஆனால் இந்த அதி நடிப்பு பிரசங்கிக்கோ?
    ( அதை நாங்கள் சொல்ல மாட்டோம், ஊரே காறித் துப்பட்டும் )

    இலங்கையில் ஓடாத படங்களை எல்லாம் ஓடியதாக பதிவிடும்
    டுபாக்கூர், மன்னாரன் கம்பெனி தங்கவேலுவே உனக்கு வெட்கம் என்பது சிறிதளவும் கிடையாதா?

    "சத்தியம் " இதெல்லாம் ஒரு படம்
    அது 100 நாள், பட்டாக் கத்தி அது 100 நாள்
    இப்படி ஒரு 16 படத்தின் லிஸ்ட் வேறு (100 நாளாம் )

    சரி புளுகு மூட்டையின் கூற்றுப் படியே எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் பன்றி கணக்கில்லாமல் போட்ட குட்டிகள் போல கணேசன் நடித்த(? ) படங்களின் எண்ணிக்கை 300 அடுக்க ( இதுவும் எங்கள் குமரி சொல் வழக்குதான் ) இவ்வளவு படத்திலும் நீ குறிப்பிட்ட 16 படம்தான் 100 நாள் ஓடியது என்றால் அதை சொல்லுவதற்கு நீ வெட்கப் பட்டிருக்க வேண்டாமா?

    சாதனையாம் சாதனை,

    ஒரு படத்தில் ஒரு இளம் நடிகை தங்கச்சியா நடிச்சிட்டா போதும் அடுத்த ஏதாவது ஒரு படத்தில் புக் செய்து காதலி வேடத்தில் அந்த நடிகையை காதல் காட்சி என்ற பெயரில் இடியாப்பம் பிழிவது, ( ஜெய சுதாவும் அப்படி மாட்டினவர்தான் )


    " உயர்ந்த மனிதன் " படத்தில் சிவகுமாருக்கு நடிகை பாரதி ஜோடியாக நடித்ததும்
    " அமைதிப் படை அமாவாசைக்கு தாங்க முடிய வில்லை
    அதனால் அடுத்த படமான " தங்க சுரங்கத்தில் கிணத்துலேயும், சேற்றில் தள்ளி விட்டும், இறுக்கமான உடைகளை கொடுத்தும் டூயட் என்ற பெயரில் அவரையும் பணியாரம் ஆக்கி தமிழ் நாட்டு பக்கமே வரவிடாமல் ஆக்குவது,
    ஸ்ரீ தேவியைப் பார்த்து ஜொள்ளு விட்டதன் விளைவு
    விஸ்வரூப சந்திப்பில்
    அவரும் உளுந்த வடை ஆனார்,
    அம்பிகாவும் பாவம்,

    இதுதான் சாதனை,
    16 படம் இலங்கையில் 100 நாள் ஓடியது என்று பில்டப் கொடுக்கத் தெரிந்த உனக்கு தலைவரின் ஒரே படமான "ஒளி விளக்கு " படத்துக்கு நீ சொன்ன அனைத்து படங்களுமே ஈடு கொடுக்க முடிந்ததா?

    ஒளி விளக்கு முதல் வெளியீட்டு சாதனையைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத உங்களால் அதன் அடுத்தடுத்த வெளியீட்டு சாதனைகளைப் பற்றி
    பேசக்கூட தகுதி கிடையாது,

    அது மட்டுமல்ல " உலகம் சுற்றும் வாலிபன் " படத்தின் வசூல் பிரளயத்தின்
    சுழலில் சிக்கி கணேசனின் அத்தனை படங்களும் சின்னா பின்னமானதை மறைத்து வாந்தியா எடுக்குற?

    " ஒளி விளக்கு " படத்தின் சாதனை விளம்பரத்தில் கூட தலைவரின் பழைய படமான " விக்கிரமா தித்தன்" படம் செய்த வசூல் சாதனையை குறிப்பிட்டிருந்தார்களே அது தெரியுமா குடிலா?

    " நாடோடி மன்னன் " படம் முதன் முறையாக இலங்கையில் 17 திரை அரங்கில் வெளியான வரலாறு
    புளுகு மூட்டையே நினைவிருக்கிறதா?

    வாலிபன் படம் மட்டும் இலங்கையில் செய்த வசூலை இடிந்த மாளிகையோ, ஊத்த மன், தங்க ராசாவோ கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது
    என்பதை புளுகு மூட்டை, டுபாக்கூர் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் உதார் விட்டுக் கொண்டே காலம் தள்ளுவது தான் உன் விதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும்?

    இன்னும் தொடரும் உன் புலம்பலுக்கும்
    என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் புளுகு மூட்டையே !...


    தலைவரின் பக்தன்...

    ஜே.ஜேம்ஸ் வாட்!.........

  4. #1153
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் கண்ணதாசனின் கடைசீ நாட்கள்

    -சித்ரா லட்சுமணன்

    அமெரிக்காவிற்கு சென்ற கவிஞர் கண்ணதாசன் அங்கே முதலில் என்ஜினீயர் சிவானந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.சிவானந்தத்தின் மனைவி ஈஸ்வ்ரி ஒரு மருத்துவர்.கண்ணதாசனுக்கு அலர்ஜி எதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த அவர் கவிஞரின் உடலில் பெரிதாக குறையேதும் இல்லை என்று நற்சான்று வழங்கினார்.சிவானந்தத்தை அடுத்து மருத்துவர் ஆறுமுகம் வீட்டில் கவிஞர் தங்கியிருந்தபோது அவரது சிந்தனை முழுவதும் சென்னைக்கு எப்போது திரும்பப் போகிறோம் என்பதிலேதான் இருந்தது. கவிஞருக்கு மதுப்பழக்கம் உண்டு என்பதால் அவரது நுரையீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா எண்பதைப்பற்றி மருத்துவரான ஆறுமுகம் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினார். கவிஞருக்கு அதிலே உடன்பாடில்லை.அந்தப் பரிசோதனையை தள்ளிப்போட அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிந்த அரை மணி நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் சிறிது நேரத்திலேயே தன்னுடையை நினைவை இழந்தார்.

    கண்ணதாசன் நினைவை இழந்து விட்டார் என்ற செய்தி இடியென தமிழகத்தைத் தாக்கியது.அந்தச் செய்தி அறிந்த அடுத்த கணமே கவிஞரின் மனைவி பார்வதி அம்மாள், மகன் கலைவாணன், கண்ணதாசனின் மூன்றாவது மனைவியான வள்ளியம்மாள் அவரது மகள் விசாலி ஆகியோர் அமெரிக்கா விரைந்தார்கள்.

    கவிஞரின் வாழ்நாளோடு காலம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்ததால் அவருக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது. அப்படி நினைவு திரும்பியபோதெல்லாம் "விசு அந்த டியுன் போடுடா" என்றும், "இந்த பல்லவி நன்றாக இருக்கிறதா பார்" என்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக மாறி மாறி பிதற்றத் தொடங்கினார் கண்ணதாசன். நினைவு தப்பி தப்பி வந்த அந்த கணத்திலும் தப்பாமல் அவர் மனதில் பதிந்திருந்தது மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே என்ற செய்தி அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை எட்டியது. உடனடியாக எம் எஸ் விஎஸ்வநாதனைத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் "கவிஞர் உன் நினைவாகவே இருக்கிறாராம். நீ போய் அவரிடம் பேச்சு கொடுத்தால் அவரது நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் . அதனால் நீ ஒரு முறை அமெரிக்கா போய் வந்து விடுகிறாயா?"என்று கேட்டபோது தான் அப்போது இருந்த நெருக்கடியான சூழ்நிலையைப்பற்றி எம்.ஜி.ஆருக்கு விஸ்வநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

    உடனடியாக எம். ஜி. ஆருக்கு ஒரு யோசனை பிறந்தது. எம் எஸ் விஸ்வநாதனின் குரலை பதிவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பி கண்ணதாசனை அந்தக் குரலை கேட்கச் செய்யலாம் என்று முடிவெடுத்த எம். ஜி. ஆர், "நீங்க டியுன் போடற மாதிரியும், கவிஞர்கிட்டேயிருந்து பல்லவி எழுதி வாங்கற மாதிரியும், அவர் எழுதிய பல்லவியை மாத்தித் தரச் சொல்கிற மாதிரியும், கவிஞர் இங்கே இருந்தால் எப்படி கிண்டலும் கேலியுமாக பேசுவீர்களோ அப்படி பேசி அதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொடுங்கள். அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம். உங்களது குரலைக் கேட்டு கண்ணதாசன் ஆறுதல் அடையவும்,குணமடையவும் வாய்ப்பிருக்கிறது" என்று விஸ்வநாதனிடம் கூறினார்.அவ்ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மெல்லிசை மன்னார் தன்னுடைய குரலைப் பதிவு செய்து எம். ஜி. ஆருக்கு அனுப்பினார்.

    ஆனால் விஸ்வநாதனின் குரல் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி நாடா அமெரிக்காவை அடையும் முன்பே கண்ணதாசனின் நாடித் துடிப்பு முழுவதுமாக அடங்கி விட்டது

    1981ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மகா கவிஞன் 85 நாள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி இந்திய நேரப்படி பகல் 1௦.45 க்கு இயற்கையோடு கலந்துவிட்டார்.

    "கன்னியின் காதலி" என்ற படத்தில் "க" என்ற எழுத்தில் தொடங்கும் "கலங்காதிரு மனமே" என்ற பாடல் வரிகளோடு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அந்த கவிச்சக்ரவர்த்தியின் கடைசி பாடலும் "க" என்ற எழுத்தில் தொடங்கிய "கண்ணே கலைமானே" என்ற பாடலாகவே அமைந்தது.

    அக்டோபர் 21ஆம் தேதி விமானம் மூலம் கண்ணதாசனின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது விமான நிலையத்துக்கு வந்து அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம். ஜி. ஆர் ,"அரசவைக் கவிஞரான கண்ணதாசனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவித்தார்.

    கண்ணதாசன் இறந்து இப்போது முப்பத்தி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அந்த மரணம் அவரது உடலுக்குத்தானே தவிர அவரது எழுத்துக்கு இல்லை என்பதை அவரது படைப்புகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன .

    தன்னைப் பற்றி பிறர் விமர்சிக்க இடம் கொடுக்காமல் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நடு நிலையோடு தானே எழுதிய மாபெரும் கவிஞர் கண்ணதாசன்

    "நிச்சயமாக என் வாழ்க்கை பரபரப்பான ஒரு நாவல்தான். இவ்வளவு திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது. அதே நேரம் நானே வெட்கப்பட்டு மறைத்துக்கொண்ட விஷயங்களும் என் வாழ்க்கையில் உண்டு. இருப்பினும் என்னை யாரும் எப்போதும் மறந்து விட முடியாது என்ற நிம்மதி சாவதற்கு முன்னாலேயே எனக்கு வந்து விட்டது
    உலகில் பலருக்கு இல்லாத நிம்மதி எனக்கு உண்டு. தங்களது வாழ்நாளில் எழுதிக் குவித்த பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே மதிக்கப்பட்டார்கள்.
    அந்த வகையில் வாழும்போதே மதிக்கப்பட்டதற்காக இந்த தமிழ் மண்ணை விழுந்து முத்தமிடுவதே நான் செலுத்தும் நன்றிக் கடன்.
    பெற்றவள் நினைத்தாளா பிள்ளை இப்படி வளருவான் என்று? தமிழ் இலக்கிய வரலாற்றில் என் பெயரை சேர்த்துக் கொடுத்த தெய்வத்துக்கு என் நன்றி.

    நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம். ஆனால் நான் எழுதியதே அதிகம் என்று மற்றவர்களுக்குத் தோன்றுகிறது. என்னைப் பிறரும் கெடுத்து நானும் கெடுத்துக் கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை நான் ஆதங்கப் பட்டதுண்டு “ என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டவர் கண்ணதாசன்.

    தன்னுடைய ஆருயிர் நண்பனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல்
    "கண்ணதாசா ! என்
    எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா"
    என்று கண்ணீருடன் தனது கவிதாஞ்சலியைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி
    "அடடா! அந்த இளமைக் கழனியில்
    அன்பெனும் நாற்று நட்டோம்
    ஆயிரங்காலத்து பயிர் நம் தோழமையென
    ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்
    அறுவடைக்கு யாரோ வந்தார்
    உன்னை மட்டும் அறுத்து சென்றார்
    நிலையில்லா மனம் உனக்கு !ஆனால்
    நிலை பெற்ற புகழ் உனக்கு
    எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
    இயற்கைத் தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் "
    என்று தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பட்டிருந்தார்

    "எத்தனைக் கவிஞர் நாங்கள்
    இருந்தாலும் கவிஞன் என்றால்
    அத்தனை பேருக்குள்ளும்
    அவனையே குறிக்கும் என்று
    முத்தமிழ்க் கவிதை நாட்டின்
    முடிசூடிக் கொண்டான்"
    என்று கவிதை பாடி தனது சோகத்தைத் தீர்த்துக் கொண்டார் கவிஞர் புலமைப்பித்தன்

    ஆனால் இந்த கவிஞர்கள் எழுதிய எல்லா வரிகளையும் தாண்டி தான் உயிரோடு இருக்கும் போதே தன்னைப்பற்றி ஒரு கவிதை எழுதியது மட்டுமின்றி அதை ஒரு திரைப்படத்திலே பாடியும் இருந்தார் கவிஞர் கண்ணதாசன்

    "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
    என்ற அந்த வரிகள் சத்தியத்தின் வாக்கு என்பதை இன்றுவரை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது காலம்........ns...

  5. #1154
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 20/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்*அவருடைய தாயார் மறைந்துவிடுகிறார் . அந்த நேரத்தில் தாயாரின் இறுதி சடங்குகள் விஷயமாக செலவிற்கு பணம் தேவை. அதற்காக ராமாவரம் தோட்டத்திற்கு விரைகிறார்* ஆனால் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது .எம்.ஜி.ஆர். கோட்டைக்கு செல்லும் சமயம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது .ராமாவரத்தில் நேரில் காண இயலாத இயக்குனர் வருத்தத்துடன் தன்* வீட்டிற்கு செல்கிறார் .ஆனால் அங்கு தாயாரின் இறுதி சடங்கிற்கான தேவையான பணம் வந்து சேர்ந்துள்ளதை அறிந்து கொள்கிறார் . பிறர் சொல்லாமலேயே, கேட்காமலேயே உதவி செய்யும் வள்ளல் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்*எம்.ஜி.ஆர்..இதைத்தான் ஒருமுறை* நடிகர் சோ* கருத்து தெரிவிக்கையில் வீட்டில் உலை வைத்துவிட்டு அரிசிக்காக ஒருவர் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் நிச்சயம் அது எம்.ஜி.ஆர். ஒருவரின் வீடாகத்தான் இருக்கும் என்று பேசி இருக்கிறார் .


    பழம்பெரும் நடிகர் என்னத்தே கன்னையா என்பவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர் . ஒருமுறை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு சென்றுள்ளார் .எம்.ஜி.ஆர். அப்போது முதல்வர் .அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றிருக்கிறார் .எம்.ஜி.ஆர். மாடியில் இருந்து இறங்கி வந்து காரில் அமர்ந்ததும் பறந்துவிடுகிறது .காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த கூட்டத்தில்* என்னத்தே கன்னையா என்பவர் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டு அவரை காரில் கோட்டைக்கு அழைத்து செல்கிறார். கோட்டையில் எம்.ஜி.ஆர். அறைக்குள் நுழைந்ததும்* அவரை எம்.ஜி.ஆர். அமர சொல்லி , வீட்டில் இருந்து மதிய* உணவு வந்துள்ளது .நாம் இருவரும் சேர்ந்து உண்ணலாம் என்கிறார் மதிய உணவருந்தியதும் என்னத்தே கன்னையாவை அவர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் . தலைவர் உணவருந்த வைத்த பிறகு, நானும் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரும் ஒன்றும்* சொல்லவில்லையே என்ற கவலையோடு வீட்டுக்குள் நுழைந்தார் .வீட்டுக்குள் நுழைந்த பின்னர்தான் விவரங்கள் தெரிய வருகின்றன .* இவரது மனைவிக்கும், மகனுக்கும்.அரசு வேலைக்கான கடிதம் , லாயிட்ஸ் காலனியில் அரசு சார்பில் இவர் குடும்பத்திற்கு வசிப்பதற்கான வீடு ஒதுக்கீடு உத்தரவு ஆகியவை .இப்படி குசேலன் கண்ணனை பார்க்க போனபின்பு,குடும்பமே* நிவர்த்தி பெற்றது போல வாழும் கண்ணனாக இருந்து உதவிகள் செய்து ஆசீர்வதித்தார் எம்.ஜி.ஆர். என்று என்னத்தே கன்னையா ஒரு பேட்டியில்* தெரிவித்து இருந்தார் .


    இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆரை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தவர்*மயில்வாகனன் என்பவர் .* எம்.ஜி.ஆர். திரைப்படங்களை கடுமையாக சாடி ,விமர்சித்து வந்தார் . அவர் தன் மனைவியின் பிரசவத்திற்காக சென்னைக்கு*அழைத்து வருகிறார் . அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான* போதிய பணம் இல்லாததால் நடிகர் சோவிடம் விஷயத்தை தெரிவிக்கிறார் .நடிகர் சோ ,இந்த* நிலையில் உங்களுக்கு உதவக்கூடியவர் எம்.ஜி.ஆர். ஒருவரே என்கிறார் .பதிலுக்கு மயில்வாகனன் நான் எம்.ஜி.ஆரை கடுமையாக சாடி இருக்கிறேன் .அவர் படங்களை விமர்சித்து உள்ளேன்* இந்த நிலையில் நான் எப்படி அவரிடம்*முகம் கொடுத்து பேசமுடியும், உதவிகள் கேட்க முடியும் என்கிறார் .எனக்கு தயக்கமாக உள்ளது என்று கூறிவிட்டு பல இடங்களில் அலைந்து திரிந்து மருத்துவமனைக்கு வருகிறார் . நடிகர் சோ முன்கூட்டியே இதுபற்றி எம்.ஜி.ஆருக்கு தகவல்கள் அளிக்கிறார் . மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். நேரடியாக வந்து மயில்வாகனன் மனைவிக்கு சிகிச்சைக்கான பணம் முழுவதும்*நான் அளிக்கிறேன் என்று ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது .தன்னை எதிர்ப்பவர்கள்,கடுமையாக சாடியவர்கள், விமர்சிப்பவர்களின்* கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ,வாழும் வள்ளலாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.*


    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சி பொறுப்பேற்றவுடன் உயிருடன் இருப்பவர்களின் பெயரை எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கோ, அல்லது அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கோ வைக்க கூடாது என்பதை சட்டமாகவே இயற்றி இருந்தார் .* 1987 டிசம்பரில் சென்னையில் உள்ள பல்கலை கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள் கூடி, சென்னையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகம் ஒன்றை உருவாக்க திட்டமிடுகிறார்கள் .இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது .ஆனால் எம்.ஜி.ஆர். அதை திட்டவட்டமாக நிராகரித்து விடுகிறார் . பல்கலை கழக வேந்தர்கள் ,நாங்கள் ஏக மனதாக முடிவெடுத்து உள்ளோம் . நீங்கள் தான் மருத்துவ துறைக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளீர்கள் .எனவே மருத்துவ பல்கலை கழகம் உங்கள் பெயரில் அமைவதுதான் சால சிறந்தது என்று வாதிடுகிறார்கள் .இவர்களின் வற்புறுத்தல் காரணமாக அரைமனதுடன் எம்.ஜி.ஆர். சம்மதிக்கிறார் . அதற்கான அரசு விளம்பரங்கள் தயாராகி செய்திகள் வெளியாகின்றன .டிசம்பர் 24ம்* தேதியன்று*குடியரசுத்தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் தலைமையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகம் திறப்பு விழா நடைபெறுகிறது என்ற அரசு விளம்பரம் எம்.ஜி.ஆர்.மேற்பார்வைக்கு அனுப்பப்படுகிறது .அதை பார்க்க மனமில்லாமல் எம்.ஜி.ஆர். நிராகரித்து திருப்பி அனுப்பிவிடுகிறார் . பல்கலை கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள் மனமுடைந்து அரைகுறையாக பணிகளை முடுக்கி விடுகிறார்கள் .சென்னை நகரமெங்கும் விழாக்கோலம் பூண்டபடி ,பேனர்கள், பதாகைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகின்றன .விழாவும் நடைபெறுகிறது .ஆனால் விழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை உடல்நல குறைவு என்று சொல்லப்படுகிறது .அன்று இரவே எம்.ஜி.ஆர். மறைந்து விடுகிறார் . கொள்கை ரீதியாக* தன் [பெயரில் மருத்துவ பல்கலை கழகம் அமைவதை ஏற்காமல் தன் உயிரையே தியாகம் செய்தார் எம்.ஜி.ஆர். என்று**பெரிதாக* பேசப்பட்டது .இது ஒரு வரலாற்று பதிவு, சாதனை .


    திரு..லியாகத் அலிகான் பேட்டி* :* சிறுபான்மை பிரிவின்*மாநில இணை செயலாளராக அன்வர்*ராஜா அவர்களுக்கு அடுத்தபடியாக நான் இருந்தேன். பணியாற்றி வந்தேன் . சபாநாயகர் தனபால்*அவர்களை நீங்கள் உணவு பரிமாறுங்கள் என்றுஅவரது ஊரில் நடைபெறும்** ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவர்கள் சொல்ல ,பதிலுக்கு தனபால் அவர்கள் பட்டியல் இனத்தை சார்ந்தவர் ஆதலால் , என்னுடைய வீட்டில் அவர்களெல்லாம் வந்து உணவருந்த மாட்டார்கள் .அவர்கள் உயர்தர வகுப்பினர் என்று ஜெயலலிதா அவர்களிடம் சொன்னார் .இப்படி அவர் சொன்ன சில நாட்களிலேயே அவரை உணவு அமைச்சராகவே ஜெயலலிதா மாற்றிவிட்டார் .இவ்வாறு* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் புரியாத புதிர் கொண்ட தலைவர், தலைவிகளாக*உருவெடுத்து வாழ்ந்த காலம் அது .கோவை மாவட்ட செயலாளர் மருதாசலத்தை ஒரு சமயத்தில் கண்டித்தாலும், பலர் முன்னிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலில் எப்படி எம்.ஜி.ஆர். அவர்கள்* காட்டினாரோ* அது போல ஜெயலலிதா அவர்கள் தனபால் அவர்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் ,அவரை பிறர் மதிக்கும் வண்ணம் உணவு அமைச்சர் ஆக்கி, பின்னர் சட்டசபையின் சபாநாயகராக*பணியாற்ற உத்தரவிட்டார் . அதேபோல தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த வரகூர் அருணாசலம் என்பவரை அந்த காலத்தில் துணை சபாநாயகராக பணியாற்ற செய்தார் .இப்போது பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக உள்ளார்*ஆக , எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா என்கிற இரு தலைவர்களும் புரியாத புதிர்களாக இருந்தாலும், பொதுமக்களுக்காகவே உழைத்து வாழ்ந்தவர்கள் என்கிற அடையாளத்தை இழக்காதவர்கள் .

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றலாக* அவருடன் ஒட்டி ,உறவாடி, தி.மு.கழகத்தில் இணைந்து அடிப்படையில் அண்ணாவின் கொள்கைகளை உள்வாங்கி,தன்னுடைய ரசிகர்கள், பக்தர்கள் எந்தவகையிலும் துன்பப்படக்கூடாது என்பதை சொல்லித்தான் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை 1986ல் நடத்தினார் .அப்போதுதான் அவருக்கு செங்கோல் தரப்பட்டது .சேடப்பட்டி முத்தையா அவர்களிடம் சொல்லி ,என்னிடம் மாணவர் பட்டியலை வாங்க சொல்கிறார் எம்.ஜி.ஆர். நான் அவரிடம் அதை கொடுத்தேன் . எனது வேண்டுகோளின்படி கடலூர் முருகுமணி என்பவரை மாநாட்டு**தலைவராகவும்,*பொள்ளாச்சி ரவீந்திரனை மாநாட்டு கொடியேற்று விழாவிற்கு போட்டு .கோவையில் உள்ள செல்வி மணிமேகலையை மாநாட்டு திறப்பாளராக நியமித்தார் .என் வேண்டுகோளை நிராகரிக்காமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.செய்த பணிகள் இவை. இவர்களெல்லாம் எங்கள் ஊரை சார்ந்தவர்கள்தான் .மனதில் கேசம் இல்லாமல் நம்மை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் கொடுத்திருக்கிறானே ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நமது வேண்டுகோளை ஏற்று*உத்தரவுகள் இட்டாரே என்ற பெருமகிழ்ச்சிதான் நமக்கு இருக்குமே ஒழிய, இவர்களை விடக்கூடாது , அவர்களை ஒதுக்கவேண்டும் என்று சொல்லாத* அந்த பண்பை உருவாக்கியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*

    2.எம்.ஜி.ஆர் -எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

    3.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*

    4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*

    5.எம்.ஜி.ஆர். -கரிகோல் ராஜு உரையாடல் - நல்ல நேரம்*

    6.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு*

  6. #1155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு..

    சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்...

    ஆனால் தன் பொன் பொருள் அனைத்தையும் அடகு வைத்து அதையும் தாண்டி கடன் வாங்கி அவர் எடுத்த முதல் சொந்த படம் நாடோடிமன்னன் நாம் அறிவோம்...

    சுப்பிரமணி என்ற பெரியவர் தலைவர் உடன் நாடக குழுவில் பயணித்து பின் தலைவர் இடமே பணிக்கு சேர்ந்தார்.

    வயதில் மூத்தவர்...அரங்க நிர்மாண பொறுப்புகளை கவனித்து வந்தவர்....
    ஆயிரம் தடங்கல்கள் தாண்டி அந்த படம் தயார் ஆகி கொண்டு இருந்தநேரம்.

    படத்தில் பானுமதி சிறையுள் இருக்கும் தலைவரை மேலே அறையில் இருந்து பார்ப்பது....

    மன்னன் நாடோடி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஆகியவை அந்த காலத்தில் ஸ்டாண்ட் வைத்து நாலு பேர் சேர்ந்து உருட்டி கொண்டு கொண்டு வரும் அளவுக்கு கணம் வாய்ந்த ஒரு காமெரா வைத்து எடுக்க பட்ட காட்சிகள் அவை.

    ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் சம்பந்த பட்ட காட்சிகளுக்கு தயார் ஆக ஆட்கள் வர தாமதம் ஆனதால் அந்த கேமராவை அந்த வயதானவர் மணி மட்டும் உடன் ஒருவர் இருக்க அவரும் தள்ளி கொண்டு வர...

    தரையில் இருந்த விரிப்பில் தட்டி கேமரா குப்புற கவிழ்ந்து கீழே விழுந்து சுக்கல் சுக்கல் ஆக லென்ஸ் நொறுங்கி போக அங்கே சத்தம் கேட்டு அனைவரும் விபரீதம் அறிந்து உறைந்து போயினர்.

    தலைவர் சுறுசுறுப்புடன் வர எடுக்க பட வேண்டிய காட்சிக்கு தயார் ஆக போக மற்ற அனைத்து முகங்களும் மாறி போய் இருப்பதை அரை நொடியில் கணித்து விடுகிறார் மன்னன்.

    என்ன விஷயம் என்று கேட்க.....ஒருவர் மட்டும் தயங்கி தயங்கி சம்பவம் சொல்ல...
    இதற்கு காரணம் யார் என்று தலைவர் கேட்க.

    அவர் பதில் சொல்ல.
    நடுங்கிய படி அந்த மூத்தவர் இன்றுடன் இங்கே சரி என்ற முடிவுடன் தலைவர் அருகில் நடுக்கத்துடன் செல்ல.

    வாங்க....இது சரியா..

    உங்க வயதுக்கு ஏற்ற வேலையை நீங்க செய்ய வேண்டும்...
    உங்கள் மேலே அல்லது காலில் விழுந்து அடி பட்டு இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு?

    போகட்டும் விடுங்கள். இனி நீங்கள் மற்றவரை இங்கே வேலை வாங்க வேண்டும்...இதே போல ஒன்று விரைவில் நாளைக்குள் தயார் செய்கிறேன்....யாரும் அவர் மீது கோவம் கொள்ள வேண்டாம்.

    என்று அந்த பெரியவர் தோள் மீது கை போட்டு கொண்டு ஓய்வரை நோக்கி ஒன்றும் நடக்காதது போல நடந்து கடந்து செல்கிறார் பொன்மனம்.

    சும்மா இல்லை நாம் அவரை பற்றி இந்த நிமிடம் வரை பேச எழுத அதை பலர் ரசிக்க.

    இந்த உலகில் அன்றும் இன்றும் என்றும் ஒரே மன்னன் மனிதாபிமானி என்றால் அது நம் தங்க தலைவர் மட்டும் தானே?...

    கருத்துக்கள் வரவேற்க படுகின்றன....நன்றி.

    உங்களில் ஒருவன்.

    வாழ்க தலைவர் புகழ்..........
    தொடரும்.............

  7. #1156
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் இருந்திருந்தால்.....!
    ��������������������������
    நான் கிட்டத்தட்ட 350 படங்களில் நடித்திருக்கிறேன்.எனக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.நான் பல படங்களுக்கு குரூப் நடனம் மற்றும் நடனப் பாடல்களுக்கு மட்டும் ஆடியிருக்கிறேன்.என்னை பல பேருக்கு தெரியாமலே இருந்தேன் காரணம் எங்கள் குல விளக்கு எம்.ஜி.ஆர் மறைந்ததுதான் என் துரதிர்ஷ்டம். அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால் நான் இன்று மிகப் பெரிய நடிகையாக இருந்திருப்பேன்.என் தந்தை எந்த முடிவு எடுத்தாலும் புரட்சித் தலைவரைக் கேட்டுத்தான் எடுப்பார்.அப்படி எங்கள் குடும்பத்தின் அனைத்து நன்மைகளும் புரட்சித் தலைவரால் வந்தது.
    எப்போது 24.12.1987 வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் அனாதையாக்கப் பட்டோம்.எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடிருந்திருந்தால் எங்கள் வாழ்க்கை வளமாக இருந்திருப்போம்.அவர் இல்லாத வாழ்க்கை என்றுமே வெறுமைதான்.
    என்று கண்ணீர் மல்க கூறியவர் புரட்சித் தலைவருடன் பல படங்களில் சண்டைக் கலைஞராக நடித்த ஜஸ்டின் மகள் பபிதா ஜஸ்டின் 1998ல் ஒரு பத்திரிக்கையில் அளித்த பேட்டி.

    கை சிவக்க அள்ளிக் கொடுப்பதில் கர்ணனையும் மிஞ்சியவர் எம்.ஜி.ஆர்.
    ������������������������������.........

  8. #1157
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் புரட்சித்தலைவரானார்
    ********************************
    சென்னை கடற்கரையில் பல லட்சம் பேர் கலந்து கொண்ட அண்ணா திமுகவின் பிரம்மாண்டமான துவக்கவிழா பாராளுமன்ற உறுப்பினர்கள்
    ka கிருஷ்ணசாமி
    s t சோமசுந்தரம் முசிறி பித்தன் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்தது
    கட்சியின் கொள்கைகள் கட்சியின் கொடி அண்ணா கண்ட கருப்பு சிவப்புதான் நடுவில் அண்ணா படம் இருக்கும் என்றும்
    வருங்கால திட்டத்தை பற்றியும் அண்ணாவின் திட்டங்கள் அண்ணாவின் கொள்கைகள் அண்ணாவின் லட்சியங்கள் என்று
    மக்களின் பெருத்த ஆரவரத்திற்கு நடுவில் பேசிய எம்ஜிஆர்

    கருணாநிதி அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சட்களை சுமத்தினார்.
    கருணாநிதி மீதும் அமைச்சர்கள் மீதூம் விரைவில் கவர்னர் இடத்தில் ஊழல் பட்டியல் கொடுப்போம் .
    உன்மையான அண்ணாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று உணர்ச்சி பொங்க பேசினார் எம்ஜிஆர்

    முன்னர் பேசிய k a கிருஷ்ணசாமி
    கட்சி ஆரம்பித்து 13 நாட்களில் தமிழ்நாடு புதுவையில் 6 ஆயிரம் கிளை கழகங்களும் 10 லட்சம் உறுப்பினர்களும் சேர்ந்து உள்ளதாக அறிவித்து

    mgr அவர்கள் புரட்சி நடிகர் அல்ல
    இன்று முதல் அவர்
    புரட்த் தலைவர்
    எனறு சொல்லவும்
    விண்னைப் பிளந்த கரகோசமும் விசில் சத்தமும் அடங்க வெகு நேரம் ஆனாது.

    அன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள்
    grஎட்மன்ட். முனுஆதி,காளிமுத்து.
    Smதுரைராஜ்
    நாஞ்சில் மனேகரன்.
    கவிஞர் முத்துலிங்கம்.
    கவிஞர் நா.காமராசு
    ஆகியோர் அண்ணா திமுகவில் தன்னை இனைத்து கொண்டார்கள்
    புரட்சி நடிகர்
    புரட்ச்சி தலைவரானர்
    அவரது
    அரசியல் பணி ஆரம்பமானது...
    அரசியல் தெடரும்
    *எம்ஜிஆர்நேசன்*...

  9. #1158
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம் -1
    தமிழ்த் திரைப்பட உலகம் இன்று புதிய பொலிவுடன் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது காரணம் 1974 - ம் ஆண்டில் மாநில அரசின் திடீர் வரித் தாக்குதலுக்கு உட்பட்டு அதனால் ஏற்பட்டதொரு குழப்பமான நிலை மாறி செழிப்பாக இயங்கி வரும் படஉலகம் வருங்காலத்திலும் வளமாக இயங்கும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது தான்.
    1974 - ல் அப்போதைய தி.மு. அரசு யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென்று காட்சி வரியினை ரூ . 10 - ல் இருந்து ரூ . 150 என்று ஏற்றிவிட்டது. கிராமப்புறத் திரை அரங்குகளுக்குக்கூடத் காட்சிவரி மிகவும் அதிகமான அளவில் ஏற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த வரியினால் அனுமதிச் சீட்டு ( ticket ) விலையும் ஓரளவு அதிகமாக்கப்பட்டது!
    இதன் காரணமாகத் திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வசூலும் குறைய ஆரம்பித்தது. எனவே ஏற்கெனவே நலிந்திருந்த திரைப்படத்துறை - இந்த மாற்றத்தின் காரணமாக வெளியிடப்படும் புதிய படங்கள் கூட குறைந்த வசூலையே தரமுடிந்தது. மேலும் படங்கள் பல வசூலில் தோல்வியையே தழுவின. தமிழ்த் திரைப்பட உலகின் "மூச்சு" திணற ஆரம்பித்தது. ஆகவே படஉலகம் துரித மாக தெளிவான ஒரு முடிவுக்கு வந்தது.
    திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்த படத் தயாரிப்பு நிலைய உரிமையாளர்கள் , தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதிகமான வரி விதிப் பினை எதிர்க்கும் வண்ணம் குறுகிய காலத்திற்குத் திரை அரங்கங்களை மூடிவிட்டனர்.
    இந்த நிலையில் மாநில அரசு திரைப்படத் துறையுடன் கலந்து ஆலோசித்து ஒரு சமரச முடிவுக்கு உட்பட முடிவு செய்தது. காட்சி வரி பெரிதும் குறைக்கப்பட்டது. அதே சமயம் ஒவ்வொரு ஓட்டிலும் கூடுதல் வரி ( additional surcharge ) விதிக்கப்பட்டது. திரைப்பட உலகம் குறிப்பிடும் அளவுக்குப் புதிய பெரிய மாற்றமாக இது அமையாவிட்டாலும் "மூச்சு"த் திணறல் மட்டும் ஓரளவு குறைந்தது.
    தமிழக அரசின் வருமானம் வரி விதிப்பினால் ஆண்டுக்கு ரூ. 2 கோடி அளவுக்கு அதிகரித்தது. திரைப்படத்துறையின் வருமானமோ ஆண்டுக்கு ஆண்டு மிகவும் குறைய ஆரம்பித்தது. 1973-74 ஆம் ஆண் டில் அரசுக்கு வந்த வருமானம் கேளிக்கை வரியினால் 13 கோடி என்றிருந்தது. 1977-78 ஆம் ஆண்டில் ரூ . 21 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டும். திடீரென்று ஏற்பட்ட வரி அதிகரிப்பினால் அதன் கொடுமைகளால் திரை உலகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை அ.தி.மு.க. வும் அதனுடன் உடன்பாடு கொண்டிருந்த கட்சிகளும் மாநில சட்டமன்றத்தில் விளக்கி உரிமைக்குரல் எழுப்பின.
    மாநில அரசு உடனே திரைப்பட உலகின் இந்தப் பிரச்சனைகளை ஆராயும் பொருட்டு திரை அனுவபம் வாய்ந்த கிரு.பி. நாகிரெட்டி, கிரு. ஏ .வி.மெய்யப்பன் உட்பட முக்கியமான தயாரிப்பாளர்கள், வெளி யீட்டாளர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்க முடிவு செய்தது . இந்தக் குழுவின் முக்கிய மான பணிகளில் வரி விதிப்பினை எவ்விதம் ஒழுங்குபடுத்தலாம் என்பது ஒன்றாக இருந்தது.
    இந்த ஆலோசனைக் குழு பஞ்சாயத்துக் கிராமங்களில் உள்ள திரை அரங்குகளில் குறிப்பிட்ட சதவீதம் காட்சி வரியினை மட் டும் வசூல் செய்தால் போதும் என்று தன் யோசனைகளில் ஒன்றாகக் கூறியது . இவ்வாறு செய்தால் வரி ஏய்ப்பு இல்லாது போய் விடும் என்றும் அதே சமயம் அரசுக்கும் அதன் பங்கான வரியும் கட்டாயம் வந்து விடும் என்றும் திரை அரங்க உரிமையாளர்கள் பிற தொல்லைகளுக்கு உட்படாது சுதந்திர செயல்பட உதவும் என்றும் இந்தக் குழு கருதியது.
    தொடரும்..........SB...

  10. #1159
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் மங்காப் புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கும் மாசு குறையாத மாணிக்கமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கும் மகானாக போற்றப்படும் எங்கள் மன்னவரே !

    கோடிக்கணக்கான இதயங்களில் வீற்றிருக்கும் தமிழ் வாழ் மக்களின் மூச்சிலும் பேச்சிலும் நிரந்தரமாக அன்றாடம் பவனிவரும் பார் புகழ் போற்றும் பகவனே !

    ஜாதி மத பேதங்களை கடந்து வாழ்ந்து வரும் வள்ளலே தங்களால் வாழ்வும் வசதியும் பெருக்கிக் கொண்டு வாழும் சுயநல ஆத்மாக்கள் மறைந்தாலும் என்றும் தங்களின் புனித கட்டளைகளை ( கருத்துக்களை ) ஏற்று தங்களின் பொற்பாதம் சென்ற இடங்கள் எல்லாம் புனிதமிகு புகழை நாங்கள் வாழ்கின்ற காலம் வரை இப்புவி மீது பரப்பி தங்களின் ஓங்கு புகழை உலகிற்கு பரப்புவோம் !

    எங்கள் உயிர் மறைந்த பின்னும் தங்கத் தலைவா ! தங்களின் அற்புதமான திரைக்காவியங்களும் நல்லாட்சி தந்த நாயகரே தங்களின் பொற்கால ஆட்சியையும் அள்ளிக் கொடுத்த கொடைத் தன்மையையும் ஆண்டுகள் பல கடந்தாலும் யுகங்கள் பல கடந்தாலும் இவ்வுலகில் இருக்கும் அனைவராலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

    மாபெரும் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.......

  11. #1160
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய வ*ண*க்க*த்துட*னும், வாழ்த்துக்க*ளுட*னும்...

    புர*ட்சித்த*லைவ*ர் த*ன*து சொந்த* ப*ண*த்திலிருந்து வாரி வ*ழ*ங்குவ*து அனைவ*ரும் அறிவோம். அதேபோல த*மிழ*க* முத*ல்வ*ரான*தும் ந*லிந்தோர்க்கு எண்ணற்ற* ந*லத்திட்ட*ங்க*ளையும், உத*வித்தொகையினையும், வேலை வாய்ப்புக*ளையும் வ*ழ*ங்கியுள்ளார். அவை த*விர* த*ன*து க*ட்சி நிதியிலிருந்து ஏழைத்தொண்ட*ர்க*ளுக்கும் ப*லவ*கையில் நிதியுத*வி, பொருளுத*வியும் செய்துள்ளார். அப்ப*டி த*ன*து இறுதிக்கால*த்தில் ஏழை தொண்ட*ர்க*ளுக்கு க*ட்சி நிதியிலிருந்து இல*வ*ச* ரிக்சாக்களை வ*ழ*ங்கும் காட்சியே இது..ரிக்சா வ*ண்டியின் ப*க்க*வாட்டில் வெற்றிச்சின்ன*மாம் இர*ட்டை இலை இட*ம்பெற்றுள்ள*தை பாருங்க*ள்..ஆனால், த*ன*து ப*ட*த்தை தேவையின்றி விளம்ப*ர*ப்பொருளாக* ப*ய*ன்ப*டுத்த அனும*தித்ததே இல்லை.......

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •