Page 108 of 140 FirstFirst ... 85898106107108109110118 ... LastLast
Results 1,071 to 1,080 of 1394

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #1071
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  தமிழக மக்கள் தங்களை ஆட்சி செய்ய அதிக முறை வாய்ப்பளித்த கட்சி.
  அரை நூற்றாண்டை தொட்ட கட்சி, அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுக்கொண்டிருக்கும் ஒரே கட்சி.

  வழக்கமாக தலைவர்கள்தான் கட்சியை தொடங்குவார்கள். வழக்கத்திற்கு மாறாக தொண்டர்கள் கட்சியை தொடங்கி, அதற்கு தலைவராக எம்.ஜி.ஆரை அழைத்தார்கள்.

  #அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்

  தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

  சமூக நீதிக்கு அடையாளமாக 49% இருந்த இட ஒதுக்கீட்டை 68% ஆக உயர்த்திய கட்சி.

  69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதை சேர்த்த கட்சி.

  ஆண்ட சாதிகளின் பரம்பரை சொத்தாக இருந்த மணியக்காரர் பதவிகளை ஒரே இரவில் பிடுங்கி சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து சாதியினரையும் கிராம நிர்வாக அலுவலராக ( VAO) அரசு ஊதியம் பெற வழிவகை செய்த கட்சி.

  தனியாரிடமிருந்த ரேஷன் கடைகளை ஒழித்து அரசின் சார்பில் பொது விநியோகத்துறையை நிறுவிய கட்சி.

  சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த கட்சி.

  கல்விப் புரட்சிக்கு ஏதுவாக தமிழகத்தில் அதிக பல்கலைக்கழகங்களையும், மருத்துவக் கல்லூரிகளையும், சட்டக் கல்லூரிகளையும் அமைத்த கட்சி.

  தமிழ் மொழிக்கென்று தனியாக பல்கலைக்கழகம் அமைத்து, இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய ஒரே திராவிட கட்சி.

  திருவள்ளுவர், அண்ணா, அன்னை தெரசா, பாரதியார், பாரதிதாசன் பெயர்களில் தனித்தனியே பல்கலைக்கழகங்களை கட்டிக்கொடுத்த கட்சி.

  காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் நீதிமன்றத்தின் வழியே சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய கட்சி.எளிய மக்களின் அடையாளமாக இன்றும் திகழும் அதிமுகவின் 49வது பிறந்த தினம் இன்று(நேற்று)... ......Smul...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1072
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972

  48 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .

  திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .

  கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .

  கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி

  ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்

  மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை

  கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி

  இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .

  மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்

  என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .

  ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று

  லட்சக்கணக்கான ஆதரவாளர்கள், கோடிக்கணக்கான பொது மக்கள், மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .

  திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு

  உலக புகழ் நாயகனாக ..., சக்கரவர்த்தி ஆக வெற்றிவலம் வந்த தினம்... துவங்கிய திருநாள் இன்று ....17-10-1972...17-10-2020.........vnd...

 4. #1073
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  #மகாசக்தி

  நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்...
  அந்த அளவு தீவிர சிவாஜி ரசிகன்...!

  நான் சினிமாத்துறையில் நுழைந்தபோது தொடரந்து எம்ஜிஆர் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்டபோது , "இப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரையா வெறுத்தோம்" என வருந்தினேன். அன்றிலிருந்தே எம்ஜிஆர் அவர்களை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருசமயம் அம்மன் கோவில் கிழக்காலே படஷூட்டிங்கிற்கு சென்றிருந்தேன்.. இரவு என் ரூமிலுள்ள டீவியில் 'ஒலியும் ஒளியும்' பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...

  அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், "என்ன ஒரு பேரழகுய்யா", நான் திடுக்கிட்டு பின்னால் பார்க்க அங்கே இசைஞானி இளையராஜா...!
  'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே...'

  திரையில் எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் சாங் ஓடிக்கொண்டிருந்தால் நான் எம்ஜிஆரைத் தான் ரசிப்பேன்...இப்படி பத்மினி, சாவித்திரி யாருடன் டூயட் சாங் நடித்தாலும் என் கண்கள் அனிச்சையாக எம்ஜிஆரை ரசிக்க ஆரம்பித்துவிடும்...
  அப்படிப்பட்ட பேரழகன் அவர்... அப்பேர்ப்பட்ட ஈர்ப்புசக்தி எம்ஜிஆருக்கு மட்டும் தான்...

  நான் பாடியதால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக ஆனார் என்று ஒரு மேடையில் டிஎம்எஸ் சொன்னார்... அப்படிப் பார்த்தால் சிவாஜிக்குப் பாடியுள்ளாரே? ஏன் அவர் முதலமைச்சராகவில்லை??? ஏன் டிஎம்எஸ்ஸே சில படங்களில் ஹீரோவாக நடித்துப் பாடியும் உள்ளாரே?? அவர் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டுமல்லவா???

  எம்ஜிஆர் அவர்கள் ஒரு தனிப்பட்ட மகாசக்தி...
  ஒப்பீடு செய்ய இயலாத தனிப்பிறவி...

  எம்ஜிஆர் 100 வது பிறந்தநாள் விழாவில்
  இயக்குனர் திரு. ஆர்.சுந்தர்ராஜன் பேசியது............bsm...

 5. #1074
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  ராஜா தேசிங்கு நல்ல படம். மக்கள் திலகம் அற்புதமாக நடித்திருப்பார். தாவூத் கானுக்கும் தேசிங்குக்கும் நடை, உடை, பாவனையில் வேறுபாடு காட்டியிருப்பார். கானாங் குருவி காட்டுப் புறா... பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடியிருப்பார். பாடல் முடிந்ததும் சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் வீச்சு பொறிபறக்கும். அப்போது தம்பி தேசிங்கு ராஜாவை கொல்வதற்காக ஈட்டியை கையிலெடுக்கும் தாவூத்கான், அவர் சண்டையிடும் அழகைப் பார்த்து ரசிப்பது நம்மையும் இருவரையும் ரசிக்க வைக்கும். தேசிங்கு ராஜா அரண்மனைக்கு வைர வியாபாரி போல வேவு பார்க்க வரும் தாவூத்கான், மோதிரத்தைக் கொடுப்பதும் அதை தேசிங்கு கையில் வாங்கி விரலில் மாட்டிக் கொள்வதும் தொழில்நுட்ப வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமான படமாக்கம், எடிட்டிங். கடைசியில் இரு மக்கள் திலகமும் மோதும் சண்டைக் காட்சியிலும் எடிட்டிங் திறமையாக இருக்கும்.

  பானுமதிக்கு எப்போதுமே வாய்த்துடுக்கு அதிகம். மக்கள் திலகம் வயதில் மூத்தவர் என்றாலும் பலரின் முன்னிலையிலும் ‘என்ன மிஸ்டர் எம்ஜிஆர்’ என்றுதான் அதிகாரமாக கூப்பிடுவார். அதை எல்லாம் மக்கள் திலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். அதனால்தான் அவரை சொந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். ‘இசையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றும் நாடோடி மன்னன் பாடல் ஒலிப்பதிவின்போது பானுமதி கேட்டார். நாடோடி மன்னன் படத்தில் காட்சிகள் சிறப்பாக வருவதற்காக மக்கள் திலகம் மீண்டும் மீண்டும் காட்சிகளை எடுத்ததைப் பார்த்த பானுமதி, ‘வேறு நல்ல டைரக்டரை வைத்து படம் எடுங்களேன்’ என்று சொன்னதால் கருத்து வேறுபாடு அதிகரித்து படத்திலிருந்து பானுமதி விலகினார். படம் வெளியாகி, தான் நல்ல டைரக்டர் என்பதை மக்கள் திலகம் நிரூபித்தார். அந்தக் கோபம் ராஜாதேசிங்கு, காஞ்சித் தலைவன் உள்ளிட்ட படங்களிலும் எதிரொலித்து படம் தாமதமானது. பழைய வஞ்சத்தை மனதில் கொண்டுதான் அரசின் சிறந்த நடிகர் தேர்வுக்கு கூட மக்கள் திலகத்தை தேர்வு செய்ய பானுமதி எதிர்ப்பு தெரிவித்தார். நம்ப ஆளு எல்லாரையும் மன்னித்து விடுவார். தமிழக முதல்வரான பிறகு பானுமதிக்கு இசைக் கல்லூரி முதல்வர் பதவியைக் கொடுத்தார்.

  ராஜா தேசிங்கு படத்துக்காக பாற்கடல் அலைமேலே.. என்ற பத்மினியின் நடனத்துடன் பாடல் காட்சி தசாவதாரத்தை விளக்குவதாக இருக்கும். திமுகவின் கடவுள் மறுப்புக் கொள்கை தீவிரமாக இருந்த நேரத்தில் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற மக்கள் திலகம் எதிர்ப்பு தெரிவித்தார். படத்துக்கு வசனம் எழுதிய கண்ணதாசனே அப்போது தீவிர நாத்திகர். லேனா செட்டியார் பத்மினியின் ரசிகர். அந்தப் பாடல் காட்சியை இடைவேளையின்போது தனியே காட்டினார். என்றாலும் மறுவெளியீடுகளில் அந்தப் பாடல் காட்சி இடம்பெறவில்லை. இப்பவும் யூடியூப்பில் பாற்கடல் அலைமேலே... பாடல் காட்சி காணக் கிடைக்கிறது. என்ன இருந்து என்ன? நமக்கு மக்கள் திலகம் இறப்பதை தாங்க முடியாது. அதுவும் தாவூத் கானை ராஜாதேசிங்கே கொன்று உண்மை தெரிந்தபிறகு தானும் தற்கொலை செய்து கொள்வார். இது நமக்கு பிடிக்குமா? அது படத்தின் வெற்றியை பாதித்தது.... Swamy...

 6. #1075
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  மக்கள் திலகத்தின் சரித்திர படைப்பில் வெளியான ராஜாதேசிங்கு திரைப்படம் எல்லா சிறப்புகளும் இருந்து மதுரைவீரன் காவியம் பெற்ற இமாலய வெற்றியை பாதி பெற்றிருந்தால் கூட சிறப்பாக இருக்கும்.
  ஆனால் மதுரைவீரனில் தலைவர் மரணிக்கும் காட்சியை ஏற்றவர்கள்
  ராஜாதேசிங்கில் ஏற்க முடியவில்லை.

  1960 ல் இப்படைப்பு வெளியானது ...
  இந்து மூஸ்லீம் என மதங்கள் சார்ந்த கதை அமைப்பு ...
  அண்ணன் தாவுத்கான் மூஸ்லீம்...
  தம்பி தேசிங்கு இந்து வாக இருப்பார்.
  தலைவர் கதை மாற்றத்தை சரி செய்ய முற்பட்டார்.
  1958 ல் நாடோடி மன்னன் திரைப்படம்
  1959 ல் இன்பகனவு நாடகத்தில் கால்முறிவு..
  1960 ல் பாக்தாத் திருடன் காவியத்தை அருமையாக முன் நின்று முடித்த வெற்றியை தந்தது.

  ராஜா தேசிங்கில்
  இரட்டை வேடமிட்டும்
  கதை அமைப்பு அன்று இந்து முஸ்லீம் மக்கள் மனதை பாதித்தது என்றே சொல்லலாம்.

  லேனா செட்டியார் பின்பு ஒரு நாள் ஏ.எல்.சீனிவாசன் அவர்களின் வீட்டுக்கு சென்று ராஜாதேசிங்கு பட நிலவரம் பற்றி பேசினார்.
  எம்.ஜி.ஆர் இன்னும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் என்றார்.
  படத்தின் இழப்பு என்று சொல்லாமல் சொல்லிய லேனா அவர்களின் பேச்சை எப்படியே அறிந்த மக்கள் திலகம்
  தாய் வீட்டில் அன்று இருந்து உள்ளார்.

  உடனே
  ஏ.எல் சீனிவாசன் அவர்களின் விட்டிற்கு உடனே காரில் பணத்துடன் வந்துள்ளார்.

  ஏ.எல் எஸ் வீட்டு மாடியின் மேலே லேனா இருப்பதை அறிநத மக்கள் திலகம் கீழே உள்ள பணியாளரை அழைத்து நான் ராமசந்திரன் வந்திருக்கின்றேன் என காகிதத்தில் எழுதி முதலாளி ஏ.எல். எஸ்ஸிடம் கொடுங்கள் என்று சொல்லி உள்ளார் மக்கள் திலகம் அவர்கள்.
  காகிதத்தை பார்த்த Als அவர்கள் லேனாவிடம்....
  Mgr வந்திருக்கிறார் என்றார்.

  உடனே லேனா நான் வந்தது Mgr க்கு தெரியவேண்டாம் என்று பக்கத்து ரூம்மில் போய் உட்கார்ந்துள்ளார்.

  ஏ.எல்.எஸை யார் பார்க்க வந்தாலும் அவர் சொன்ன பிறகு தான் மேலே போகவேண்டும்..
  ஆனால் மக்கள் திலகம் ஒருவருக்காக மட்டுமே கீழே வந்து என்ன விபரம் என கேட்டுள்ளார்.

  மக்கள் திலகம் சொன்னார்...( ஏ.எல் எஸ்ஸை முதலாளி என தான் அழைப்பார்) முதலாளி எனக்கு நடந்தது தெரியும்..
  அவரிடம் இந்த பெட்டியை கொடுங்கள்..
  என்னால் அவருக்கு நஷ்டம் வரக்கூடாது.. நீங்கள் கொடுங்கள்...
  நான் கொடுத்தால் வாங்கமாட்டார் என்று சொல்லி விட்டு (தான் நடிக்க வாங்கிய ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை) மக்கள் திலகம் அவர்கள் கொடுத்து விட்டு சென்றார்.

  இந்த உண்மையை மறைந்த ஏ.எல்.எஸ். மகன் கண்ணப்பன்
  பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

  தன்னால் ஒரு தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரகூடாது என்று எண்ணி வள்ளல் மக்கள்திலகம் அவர்கள் லேனா செட்டியாருக்கு செய்த உதவி வரலாற்று சிறப்பாகும்.
  மேலும் ராஜாதேசிங்கு திரைப்படம் அதன் பின் பலமுறை திரைக்கு வந்து வசூலை படைத்துள்ளது.
  மக்கள் திலகத்தின் பெருந்தன்மையை போல் வேறு எந்த நடிகரும் சினிமா உலகில் இல்லை....UR...

 7. #1076
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,453
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
  ----------------------------------------------------------------------------------------------------------------
  சகாப்தம் ஒரு மறுமலர்ச்சி. ஒரு உற்சாக ஊற்று. ஒரு தன்னம்பிக்கை முறை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டு இருக்கிறது .ஆரம்பத்தில், திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவில்லை . வதைப்பட்டார். அவமானப்பட்டார். சிரமப்பட்டார் .இந்த முகம் சினிமாவிற்கு ஏற்ற முகமில்லை என்று விமர்சிக்கப்பட்டார் .இவரை ஹீரோவாக நடிக்க வைத்தால் படம் வெற்றி பெறாது என்று கருத்து வெளியிட்டனர் ஒரே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு கணைகள் வந்தவண்ணம் இருந்தன .ஒவ்வொரு நாளும் அவர் தூங்க போகும்போது நாளை விடியாதா என்ற கனவுடன் இருந்தார் .ஆனால் நாளை விடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது . நாடோடி மன்னன் படத்திற்காக கை நிறைய பணம் முன்வைத்து ,ஒரு நாளைக்கு 3 ஷெட்யூல் என்று பிசியாக இருந்த நேரத்தில் தன்னுடைய சொந்த* கருத்தை, கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்லுவோம். எடுபடுமா இல்லையா என்று கவலைப்படாமல் கடைசிவரையில் பணத்தை இறைத்து, மூன்று முறை வெளியிடும் தேதிகளை தள்ளிப்போட்டு ,உத்தமபுத்திரன் படம் வெளியானதும் அதன் நகல் என்று சொல்லி விடுவார்களோ என்ற கவலையில் மீண்டும் சில மாற்றங்கள் செய்து .வெளியிட்டபின் ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லையானால் நாடோடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் .1958ல்* 25 லட்சம் செலவிடப்பட்டது .பிரம்மாண்டம் ,மெகா ஹிட் என்று சொல்லப்படும் படங்களுக்கு சமமானது .இந்த படத்தில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு லட்சிய புருஷனாக ,தான் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக தன்னுடைய உயிரினும் மேலான நடிப்பை ,கௌரவத்தை, நேரத்தை ,காலத்தை,குடும்ப சம்பாத்தியம் அத்தனையையும்**மூலதனமாக வைத்தார் .அப்படி ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கு இப்போது அத்தனை தைரியமிக்க ,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒருவரும் தயாராக இல்லை .


  நாடோடி மன்னன் படத்தில் அவர் பாடியிருப்பார் . நானே போடப்போறேன் சட்டம். பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் .எங்க வீட்டு பிள்ளையில் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்*தெய்வத்தாய் படத்தில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் மூன்றெழுத்து என்பதற்கு கடமை, தி.மு.க. ,சினிமா, அண்ணா ,எம்.ஜி.ஆர். வெற்றி இப்படி சொல்லி கொண்டே போகலாம் .சில பாடல்கள் அவருக்காகவே எழுதப்பட்டது . அவருக்கு மட்டுமே பொருந்தும் .குறிப்பாக சொல்ல போனால் ,நான் செத்து பொழைச்சவன்டா ,எமனை பார்த்து சிரிப்பவன்டா எல்லா கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எல்லாம் சொல்லிய கொள்கைகள், தத்துவங்களை நான்கு வரி,ஆறு வரி* பாடல்கள் மூலம் சொல்லி முடித்து இருக்கிறார் .அரசிளங்குமரியில் ,பட்டு கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா என்ற பாடல் இன்றைக்கும் காலம் கடந்து பொது உடமை தத்துவ* கருத்தாக மக்களிடம் இவர் மூலம்* சென்று அடைந்துள்ளது ..கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களுக்கு சிலை வைக்க வேண்டி நிதி கேட்டு எம்.ஜி.ஆரை* சந்திக்க பால தண்டாயுதம், தா. பாண்டியன் இருவரும் செல்கிறார்கள் .அந்த ஜீவா என்ற தலைவரின் உருவச்சிலை அமைக்கும் செலவினை முழுவதும் தானே எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார் .அப்படி பொது உடமை கருத்துக்கள்,தத்துவங்கள் பற்றி பேசிய தலைவர்களை மதித்தவர் .பொது உடமை சிந்தனை உள்ள மணிப்பூரி எழுத்தாளர்களை மதித்தவர் .அதனால்தான் தன வீட்டு நூலகத்தில் லட்சக்கணக்கான ருபாய் மதிப்பில் புத்தகங்களை வாங்கி சேர்த்து , பி.எஸ்.ராமையா, ரவீந்தர் போன்றவர்களை வைத்து படிக்க சொல்லி அறிந்தவர் .அதற்காகவே வாழ்க்கையில் சிறிது நேரம் ஒதுக்கியவர் .* அவர்களுக்கும் தலா ரூ.1,000/- மதிப்பிலான புத்தகங்கள் அளித்து , அந்த கால கட்டத்தில் அவர்களின் குடும்ப நிர்வாக செலவிற்கான பண உதவிகளையும் செய்து சில முக்கியமான திரைப்படங்களையும் பார்த்தார் திரைக்கதையை தேர்வு செய்வதில் திறமையாளராக இருந்தார் .அதனால்தான் கதைகளை முடிவு செய்வதில் அவரின் தலையீடு இருந்தது .கதையை தேர்வு செய்தபின் கம்பெனியின் பெயர் வைப்பது ,பெயர் எத்தனை எழுத்துக்களில் இருப்பது ,பெயரில் உள்ள கதை எப்படி இருப்பது ,கதையில் எந்தெந்த இடங்களில் திருப்பங்கள் வருவது ,பாடல்கள் அமைவது எப்படி ,பாடல்களில் அரங்க அமைப்பு, பாடல் வரிகளில் அர்த்தம் எப்படி இருப்பது ,என்ன சொல்வது*,பாடுபவரின் தேர்வஎடிட்டிங் செய்வது எப்படி,சண்டை காட்சிகள் அமைவது எப்படி , எந்த லொகேஷன் ,வெளியூரில் படம் பிடிப்பது , படப்பிடிப்பை எந்தெந்த காட்சிக்கு எப்படி நடத்துவது ,எத்தனை நாள் கழித்து படம் வெளியிடுவது ,எந்தெந்த ஏரியாக்களுக்கு எப்படி விலை நிர்ணயிப்பது ,நடிகர், நடிகைகள் சம்பள நிர்ணயம் செய்வது என்று ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான அனைத்து விவரங்களும் நூலிழையில் அறிந்து வைத்திருந்தவர் திரைப்பட களஞ்சியம் ஆகிய எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு* சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் 1971ல் நடித்த ரிக்ஷாக்காரன் படத்திற்காக கொடுக்கப்பட்டது .பரத் என்றால் உருதுவில் நிறைவு என்று அர்த்தம் .திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர். நிறைவானவர் என்பதற்காகவே பாரத் பட்டம் வழங்கப்பட்டதாக அவருடன் இருந்த ரவீந்திரன் பேட்டி அளித்துள்ளார் .*


  திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி " புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும்*ஜெயலலிதா*அவர்களுக்கு ம் உள்ள மாறுபாடுகள் என்னவென்றால் தலைவரிடம்*ஜனநாயகத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் சாதிக்க எண்ணியவர் .ஜெயலலிதா அவர்கள் ஜனநாயகம் கலந்த*அதிகாரத்தை பயன்படுத்துவார் .ஜனநாயகம் பற்றி பேசுவார் .அதன்படி*வேலைகள்*நடக்கவில்லை*என்றால் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த கூடியவர் .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொறுத்தவரை*சர்வாதிகாரம் செய்து முரசொலி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சித்திரவதை செய்தார்*என்று கண்டபடி*முரசொலியில் எழுதுகிறார்கள் .ஜெயலலிதா அவர்கள் ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்தார்*என்பதை வைத்து திரு.நடராஜன் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து கடிதத்தை*பறிமுதல் செய்து முரசொலியில் பிரசுரம் செய்யும்படி செய்தார்*கருணாநிதி .இந்த செயலை*சர்வாதிகாரம் என்று நாங்கள் சொன்னால்*தி.மு.க.வினருக்கு*கோபம் வரும் புரட்சி தலைவரும், ஜெயலலிதாவும் சட்ட*ரீதியாக எந்த செயலை செய்தாலும்* அது சர்வாதிகாரம் என்று விமர்சிக்க கூடிய*தி.மு.க.வினர் இன்றைக்கும் இருக்கிறார்கள் .* இன்றைக்கு கருணாநிதியை பற்றி நாங்கள் குறை சொல்வதில்லை .ஜெயலலிதா*பற்றியோ*.[புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றியோ*யாரும் எந்த குறையும்*சொல்வதில்லை . காரணம் அவர்கள் எல்லாம் அமரர் ஆகிவிட்டார்கள்*


  ஜெயலலிதா அவர்களை பொறுத்தவரையில் நமது விருப்பத்தை சொல்ல வேண்டும் . நமக்கு அந்த தகுதி இருக்கிறது என்று தெரிந்தால் கொடுத்துவிடுவார்கள் .நானும் ,பொள்ளாச்சி ஜெயராமனும் வாரிய தலைவர்கள் பதவியை*.தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் பெற்றிருக்கிறோம் என்று சொல்லியபோது ஜெயராமனை டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் தலைவராகவும்*என்னை வணிகவரித்துறை துணை* தலைவராக நியமித்தார்கள் .ஜெயலலிதா அவர்கள் அந்த துறைக்கு தலைவராக இருந்தார் .* 2 ஆண்டுகள் பதவியில் இருந்தோம்* 1996ல் தி.மு.க.தேர்தலில் வெற்றி பெற்றதும் சிலர் கட்சி தாவினர்கள் .அப்போது* உடுமலையில் இருந்து தொலைபேசியில் நீங்கள் தைரியமாக இருங்கள். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்* .அச்ச படாதீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம் என்று ஜெயலலிதா அவர்களுக்கு சொல்லுமாறு அவரது உதவியாளர் மூலம் சொல்ல சொன்னேன் .அவர் அதை தெரிவித்திருந்தாரா என்பது தெரியாது .பிறகு 1996 இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்தார்கள் தி.மு.க.ஆட்சியில் .அவருக்காக போராடி ,சென்ட்ரல் அருகில் உள்ள மத்திய சிறை சாலையில் அவரை பார்க்க சுமார் 100 பேர்கள் வந்திருக்கிறோம் என்று எழுதி கொடுத்தோம் .* அந்த 100 பேர்களில் எனக்கு,முன்னாள் அமைச்சர் பட்டாபிராமன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆகிய மூவருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது அவர் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததால் ,சிறை அதிகாரிகள், காவலர்கள் மரியாதையாகத்தான் நடத்தினார்கள் .அவர்கள் மிகவும் வருத்தமாக இருந்த நேரம் .எங்களிடம் ஆலோசித்து செய்யவேண்டிய வழிமுறைகள் பற்றி சொன்னார்கள் .அப்போது ராயப்பேட்டையில் சுல்தான் என்பவன் ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் தீ குளித்துவிட்டான் .அது விஷயமாக என்னையும் ,சுலோச்சனா சம்பத் அவர்களையும் சிறைக்கு வரச்சொல்லி, கலந்து ஆலோசித்தார் .சுல்தான் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும்படி உத்தரவிட்டார் .தொகை எவ்வளவு என்று நினைவில்லை .அவர் வீட்டிற்கு இருவரும் சென்று நிதி அளித்தோம் .பின்னர் கழக பணியில் ஈடுபட்டிருக்கும்போது* ஜெயலலிதா* அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனபின் ,அண்ணன் காளிமுத்து ,சி.எஸ். ஆனந்தன் என்பவரை எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கும்படி*வேண்டுகோள் வைத்தார் .உடனே ஜெயலலிதா ,அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் திரு.லியாகத் அலிகான் தான் என்று சொன்னதும் காளிமுத்து சரி,அப்படியே செய்யுங்கள் .அவர் பொருத்தமானவர்தான் என்றார் ..அந்த பதவியை நான் கேட்காமலேயே ஜெயலலிதா கொடுத்தார் .அதிலும் சில முக்கிய பணிகளை செய்ய சொன்னார்*


  .1986லேயே, ஜெயலலிதா அவர்கள் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும்போது தலைவரின் அனுமதியோடு ,தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு பணிக்கப்பட்டனர் . அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு முன்பாக இதுபற்றி பேசி கொண்டிருக்கிறேன் .அப்போது ஒரு ஹாட்லைன் உண்டு .அதாவது தலைவர் போனை எடுத்தால் ஜெயலலிதா பேசுவார் . ஜெயலலிதா போனை எடுத்தாரேயானால் தலைவர் பேசுவார் .அப்படி ஒரு சிஸ்டம் இருந்தது .என்னை முன்னே வைத்து கொண்டு ஜெயலலிதா ,தலைவரிடம் ஹாட்லைனில் தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்ய யாரை அழைத்து கொண்டு செல்வது என்று கேட்டபோது , லியாகத் அலிகானையும், ஜெ.சி.டி.பிரபாகரனையும் அழைத்து செல் என்றார் .அந்த சூழ்நிலையில் கூட எங்களை தலைவர் ஞாபகம்*வைத்து சிபாரிசு செய்தார் .நாங்கள் ஒருவாரம் பிரச்சாரத்திற்கு சுற்றுப்பயணம் செய்தோம் .முதலில் மதுரையில் இறங்கி, நவநீத கிருஷ்ணன், செல்லூர் ராஜு, சேடப்பட்டி முத்தையா , திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு ,போகிற வழியில் நவநீத கிருஷ்ணன் வீட்டிற்கும் ,பிறகு நான் அழைத்ததின் பேரில் என் வீட்டிற்கும் வந்தார் .அப்போது உடன் சசிகலாவும் வந்தார் .அவர் படி ஏற முடியாத சூழலில் காரிலேயே அமர்ந்துகொண்டார் .ஜெயலலிதா மேல் மாடியில்* உள்ள என் மாமனார் வீட்டிற்கு செங்குத்தான படியில் சிரமம் பார்க்காமல் ஏறி வரும்போது கால் செருப்பு தடுக்கி கீழே விழும் சமயம் ,பின்னால் வந்த கரூர் நாகராஜன் என்பவரும் , எனது மைத்துனர் சையது தாஜுதீன் என்பவரும்நல்ல வேளையாக* சட்டென அவரை பிடித்து கொண்டனர் .எங்கள் இல்லத்திற்கு வந்து என் மாமனார், மாமியார் ,உறவினர்கள் அனைவரையும் சந்தித்து எனக்கு பெருமை சேர்த்தார் .அப்படி தொண்டர்களை மதித்த தலைவியாக திகழ்ந்தார் .அப்போது என் மனைவி உடுமலையில் இருந்தார் .எங்கள் வீட்டில் ஜெயலலிதா அவர்கள் அரை மணி நேரம் மேலாக இருந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது*எங்கள் இல்லத்திற்கு முன்பாக இரண்டாயிரம் பேர் கூடிவிட்டனர் . இந்த நிகழ்வு என் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நினைவு. நாங்கள் அளித்த ஸ்னேக்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் அருந்தினார் .பின்னர் லியாகத் ,நான் சென்ற பின்னர் ,உங்கள் மனைவிக்கு உங்களால் பதில் சொல்லமுடியாது .அவர்கள் இல்லாத நேரத்தில் இங்கு என்னை அழைத்து வந்து விட்டீர்கள். பரவாயில்லை சென்னைக்கு வரும்போது என் இல்லத்திற்கு உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார் .அதன் பிறகு, ராமநாதபுரம், சிவகாசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் செய்து அவர் பேசுவதற்கு முன்பாக நானும் , ஜெ.சி.டி.பிரபாகரனும் பேசி ,அந்த பேச்சுக்களை டேப் ரிக்கார்டரில் பதிவிட்டு தலைவருக்கு அனுப்பி ,அதை கேட்டு அன்றன்றைக்கே அவர் திருத்தங்கள் சொன்னால் ஜெயலலிதா அவர்களின் யோசனைப்படியும் நாங்கள் பேசிய காலமெல்லாம் உண்டு .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .


  திருடாதே படத்தில் பட்டுக்கோட்டை* கல்யாண சுந்தரம் எழுதிய திருடாதே பாடலில் வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே என்ற வரிகளை எம்.ஜி.ஆர் பாடி நடித்தார் . இந்த வரிகள் மற்றவர்கள் மறந்தாலும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் தன் வாழ்க்கையில் மறக்கவில்லை .அவர் பணநெருக்கடியை சந்தித்து இருந்தாலும், அவரை தேடி உதவிக்காக வந்தவர்கள் வெறும் கையோடு திரும்பி சென்றதாக வரலாறே இல்லை .காரணம் என்னவென்றால் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல அவர் கொடுக்க கொடுக்க பணம் ஒரு பக்கம் சுரந்து கொண்டே இருந்தது .ஒவ்வொருவரையும் தேடி தேடி அழைத்து கொடுத்தார் என்று பல வரலாறுகள் சொல்லுகின்றன .ஏனென்றால் அவரிடம் கொடுக்கும் குணம் இருந்தது .தன்*வாழ்நாளெல்லாம் கழித்த ராமாவரம் தோட்டத்தின் ஒரு பகுதியை தன்னால் சரியாக பேசமுடியாத காலத்தில், வாய்ப்பேச்சும், காதால் கேட்பதை அறிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததால்*வாய்பேசமுடியாத ,காது கேளாத மாணவ மாணவியருக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து ,இலவச கல்வி அளித்து, அதை பராமரிக்க வேண்டிய உதவிகள், வழிவகைகள் கூட தன்* உயிலில் குறிப்பிட்டு இருந்தார் . இன்றைக்கும் அந்த பள்ளிக்கூடம் ஒரு வரலாற்று ஆவணமாக நம் கண் முன்னே இயங்கி கொண்டுவருகிறது .அதனால்தான் அவர் மறைந்தும் மறையாத மாமனிதராக திகழ்கிறார் .*


  கடைஏழு*வள்ளல்கள் பற்றி நாம் புத்தகங்களில் படித்து அறிந்துள்ளோம் . ஆனால் வாழ்ந்த* எட்டாவது வள்ளல் என்ற பட்டத்திற்கு உதாரணமாக ஒருவரைத்தான்* குறிப்பிட முடியும் அவர்தான் எம்.ஜி.ஆர். குற்றால*சாரல், குறவஞ்சி பாட்டு ,வாசலுக்கு வந்து வானமே கேட்டாலும் மழை போல் பொழியும்*எட்டாவது வள்ளல் என்று சொல்வார்களே அது அவருக்கு*எத்தனை பொருத்தம் என்பது*அவரோடு*வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல ,அவரால்* இன்றைக்கும்*அவர் பெயார் கொண்டு* ஏன்* என் போன்றவர்கள் எல்லாம் அவரால் வழிகாட்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதுதான் சகாப்தம் நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி, சாதனை .அந்த சாதனைகள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*;/காட்சிகள் விவரம்*
  ------------------------------------------------------------------------------------
  1.ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது*- மாடப்புறா*

  2.எங்கே, என் இன்பம் எங்கே* - நாடோடி மன்னன்*

  3.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை*- நேற்று இன்று நாளை*

  4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

  5.சம்மதமா,நான் உங்கள்கூட வர சம்மதமா -நாடோடி மன்னன்*

 8. #1077
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  தலைவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் "நீரும் நெருப்பும்".
  ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் மறுபதிப்பு தான் "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் உருவானது. இரட்டை வேடங்களில் தலைவர் பிரமாதமாக நடித்திருப்பார். ஆனாலும் ஜனரஞ்சகமான படத்தில் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடு சிறுவர்கள் கேட்கும் சந்தேகத்தை விளக்க முடியாமல் பெரியவர்கள் சிறுவர்களுடன் படம் பார்ப்பதை தவிர்த்தனர். அதனால் மாபெரும் வெற்றியை இழக்க நேரிட்டது நமக்கு பெரிய வருத்தம்தான்.

  படம் வரும் போது "ரிக்ஷாக்காரனை" காட்டிலும்அதிக வரவேற்பு இருந்தது. படம் பார்த்த சிறுவர்களுக்கு கரிகாலனைத்தான் அனைவருக்கும் பிடித்தது. அந்த கரிகாலன் இறந்ததும் படம் வேண்டாம் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவர் ஏன் செத்தாரு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகளால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய வெற்றியை அது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். கதையை எப்படி மாற்றினாலும் எம்ஜிஆர் சாகாமல் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியாகி விடும்.

  "நீரும் நெருப்பும்" பெயரைக் கேட்டவுடனே கைபுள்ளைங்க கலக்கம் அடைந்தார்கள். ஏற்கனவே "ரிக்ஷாக்காரனின்" வெற்றியில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தவர்கள் மேலும் "நீரும் நெருப்பும்" வந்து என்ன செய்யப் போகுதோ என்ற கலக்கம். ரிசர்வேசனுக்கு குதிரை போலீஸ் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதை கண்டு மனம் வெதும்பி பிதற்றலானார்கள். அந்த பதட்டத்தில்தான் "நீரும் நெருப்பும்" மீது சொல்ல முடியாத கோபம்.

  அந்தப் படத்தின் பெயரை கேட்டாலே காய்வார்கள். அதனால் அப்போதே அதனோடு வந்த
  "பாபு" வில்"ரிக்ஷாக்காரனை" பிச்சைக்காரன் போல இழிவாக காட்டியிருப்பார்கள். ஏதோ ஒரு "ரிக்ஷாக்காரனை" பார்த்து காப்பியடித்து மிகையாக நடித்து நம்மை பெருத்த இம்சைக்கு உள்ளாக்கிவிடுவார். ஏதோ சிவகுமார் வந்ததால் படம் பெருந்தோல்வியில் இருந்து பிழைத்தது. படத்தை 100 நாட்கள் ஓட்ட முடிவு செய்து சாந்தி கிரவுன் புவனேஸ்வரி யில் திரையிட்டு 100 நாட்கள் வடக்கயிறு உதவியுடன் ஓட்டினார்கள். வழக்கம் போல் அந்த மூன்று திரையரங்கில் ஓட்டி விட்டு "பாபு" வெற்றி என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

  பரீட்சைக்கு ஒருவன் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டு தடவி தடவி எழுதி விட்டு நான் பாஸ் என்பதை போல இருக்கிறது. குறுகிய காலத்தில் "நீரும் நெருப்பும்" அதிக வசூலை பெற்றதை போற்றாமல் குடும்ப தியேட்டரில் திரையிட்டு மனம் குதூகலிப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறதய்யா!. சென்னையில் தேவிபாரடைஸில்
  நாட்கள் 67 416715.90
  கிருஷ்ணா. " 67. 265278.45
  மேகலா. " 53. 187112.65
  ---------------------------
  மொத்தம் 187. 869107.00

  ஆனால் "பாபு" 300 நாட்கள் கஷ்டப்பட்டு ஓட்டி இழுவை வசூல் 10 லட்சத்தை தொட்டதாக சொல்லுகிறார்கள். மேலும் மதுரையில் "நீரும் நெருப்பும்" சென்ட்ரலில் 84 நாட்களில் ரூ. 239171.39 .
  வசூலாக பெற்றது. ஆனால் "பாபு", அவர்கள் பட்டரை வசூல்படி 89 நாட்களில் ஸ்ரீதேவியில் ரூ. 189491.55 வசூலாக பெற்று தோற்று தெற்கு சீமையிலே தலைவர் புகழை நிலை நாட்டியது. "பாபு" படத்தின் முழு வசூலை வெளியிட்டால் "நீரும் நெருப்பும்" "பாபு" வின் உண்மையான வெற்றி தெரிந்து விடும் என்பதால் வசூலை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.

  "எங்கிருந்தோ வந்தாள்" 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1021000 தான். அதனால் "பாபு" நிச்சயம் 10 லட்சம் வந்திருக்காது.
  சாந்தி 100 நாட்கள் வசூல் "நீரும் நெருப்பும்" 67 நாட்கள் வசூலை முறியடித்திருக்க வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் 8 லட்சத்தை தொட்டால் அதுவே மிகப் பெரும் ஆச்சர்யமே. முதல் நாள் தீபாவளி அன்றே தூத்துக்குடியில் அனாதை போல் கிடந்த "பாபு" அன்று 6 மணி காட்சி கூட நிதானமாகத்தான் நிறைந்தது. அதனால் பாபுவும் ஒரு. 100 நாள் இழுவை படம்தான் என்பது உறுதியாகிறது.

  "பாபு"வுக்கு வசூல் பட்டரையில் இன்னமும் பட்டி டிங்கரிங் முடியாமல் வசூல் தயாராகவில்லை போலும். "நீரும் நெருப்பும்" 44 அரங்கில் திரையிட்டு 22 தியேட்டரில்
  50 நாட்கள் ஓடியது. ஓடி முடிய கிட்டத்தட்ட 50 லட்சத்தை வசூலாக பெற்று சாதனை படைத்தது. ஆனால் கணேசனின் "பாபு" மொத்தம் வெளியானதே 28
  அரங்கில்தான் அதில் 50 நாட்கள் 8 திரையரங்கில் ஓடி மொத்த வசூலாக 22 லட்சத்தை கூட பெற முடியாத பரிதாப "பாபு" எங்கேயப்பா "நீரும் நெருப்பை" வென்றது.

  50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "தர்மம் எங்கே"?
  படத்தின் வசூல் தெரியுமா? மொத்தம் 4 தியேட்டர்களில் வெளியாகி (ஓடியன் மகாராணி மேகலா ராம்) 50
  நாட்கள் கூட ஓட முடியாமல் மொத்தம் ரூ 378112 வசூலாக பெற்று சினிமா உலகத்துக்கே அவமானமாகி கேவலமாக தோற்றது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

  "நீரும் நெருப்பும்" தேவி பாரடைஸில் பெற்ற வசூலை கூட மொத்த வசூலாக பெறமுடியாத படத்தின் கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூவே கிடையாதா? நீங்கெல்லாம் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லலாமா? அதற்கான அருகதை இருக்கிறதா? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்துக் சொல்லுங்கள்..........ksr...

 9. #1078
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  # கோயபல்ஸ் கூட்டத்தின் புனை சுருட்டுகளும், புதுக்கதைகளும் #  சாதனை என்ற பெயரின் மற்றொரு பெயரே தலைவர் என்ற
  சொல்தான் என்பது அகில உலகுக்கே தெரியும்,

  ஆனால் இப்போது முகநூலிலும், மற்ற சில
  ஊடகங்களிலும் இதிலெல்லாம் பதிவுகள் போட்டால் யார் நம்மை கேட்கப் போகிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில்
  தமிழில் 288 படத்துக்கு மேல் நடித்தும் �� எவனும் பைசாவுக்கு மதிக்காத கணேசன் உயிரோடு இருந்த காலத்திலே கிடைக்காத
  பெருமை ( அது சரி இருந்தால் தானே ) புகழ்? இவற்றை சேர்க்க
  ஒரு சில கோயபல்ஸ் பதர்கள் இப்போது புதிதாக கிளம்பியிரு க்கிறார்கள் அதுவும் எப்போதிலிருந்து?
  கர்ணன் படத்தை டிசிட்டல் செய்து ஸ்கூல்
  பிள்ளைகளுக்கு இலவச டிக்கெட் கொடுத்து பார்க்க வைத்து ஒரு காட்சி இரண்டு காட்சியாக ஒரு
  150 நாள் தள்ளி கரை சேர்த்த பின்பு கொஞ்சம் பேர் தலையெடுத்திருக்கிறார்கள்,

  அதிலும் குறிப்பாக கர்ணனுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த பரசுராமர் பெயரில் எழுதும் ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் எழுதும் எழுத்துக்களைப் பார்த்தால் அதைப் படிக்கும் நாலைந்து பேருக்கும் தலை சுற்ற லே வந்து விடும் போல்
  இருக்கிறது,


  கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்ட ஒரு பதிவில் "திரிசூலம் "படம் 6கோடி ரூபாய் வசூல் செய்தது என்று ஜீரணிக்க முடியாத ஒரு
  பதிவை போட்டிருந்தார்
  இந்த புளுகு மூட்டை யின் அடையாளம்,

  தினத்தந்தி யில் கூட 2கோடியோ 3கோடியோ
  தான் போட்டிருந்தா ர்கள், விக்கிபீடியா கூட அதை உறுதி செய்துள்ளது, ஆனால் இந்த புண்ணியவான் போட்ட கணக்கை பார்த்தீர்களா அறிவுல க நண்பர்களே,

  எவன் சொன்னாலும் சரி நாங்க ஒரு கணக்கு போடுவோம் அதுதான் உண்மை என்று கொடி பிடிக்க நாலைந்து பேர்,

  இது எப்படி இருக்கிறது என்றால் "கல்யாணப் பரிசு " படத்தில் தங்கவேலு மன்னாரன் கம்பெனியில் மேனேஜர் வேலை பார்ப்பதாக மனைவி யிடம் புளுகியிருப்பார்
  ஒரு நாள் நிஜமான மேனேஜரான சரோஜா வின் மாமனாரிடம் வசமாக மாட்டிக் கொள்வார், அப்போது உண்மையானவர் கேட்பார் நீங்கள் எந்த கம்பெனியில் வேலை
  பார்க்கிறீர்கள் என்று, உடனே சரோஜா சொல்லுவார் மன்னாரன் கம்பெனி யில் மேனேஜராக இருக்கிறார் மாமா என்றதும் அவர் தி டுக்கிட்டு சொல்லுவார்
  நான்தானே அந்த கம்பெனியில் மேனேஜராக இருக்கிறேன் என்றதும்
  இடி விழுந்தது போல் ஜெமினி கேட்பார் சார் நீங்க எந்த மன்னாரன் கம்பெனியை பத்தி சொல்றீங்க என்றதும் அவர் சொல்லுவார் என்னப்பா இது மெட்ராஸ்ல இருக்கிறதே ஒரு மன்னாரன் கம்பெனி தானே என்றதும் தங்கவேல் அடிப்பார் பாருங்கள் ஒரு டூப்பு
  அதப்பத்தி நமக்கென்ன டா நீ நம்ம கம்பெனியப்
  பத்தி சொல்லேண்டா
  என்று அசராமல் சொல்லுவார்,

  அதே போல் இவர்களாக என்னவோ சிவாஜி சினிமா உலகத்தில் இருந்த போது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரிய சாதனைகளை செய்தது மாதிரி இவர்களாக எல்லா படங்களுக்கும் புதுசாக வசூல் தயாரித்து ( தகவல் உதவிக்கு ஒரு அல்லக்கை) அதை வேறு வெட்கமில்லா மல் வெளியிட்டு அவர்களே மாலை போட்டு அவர்களே கை தட்டிக் கொண்டு மித மிஞ்சிய மதி மயக்கத்தில் ( மது மயக்கம் அல்ல ) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  கேட்டால் உலகத்தில் மற்ற எல்லோரும் பொய் சொல்பவர்கள், இவர்கள் மட்டும் அரிச்சந்திரன் அய்யா பக்கத்து வீட்டுக் காரர்கள் மாதிரி வசனம் பேசுவது,
  என்ன பொழப்புடா உங்கள் பொழப்பு?

  இந்த பக்கத்தில் எங்கள்
  சங்கர் சார் மூஞ்சி யிலேயே குத்துவது மாதிரி ஆதாரங்களை அள்ளி தெளித்தாலும்
  எரும மாட்டுல மழை பெஞ்சது மாதிரி திரும்ப த் திரும்ப அதே பல்லவி யை பாடிக் கொண்டிருப்பது

  இந்த மாதிரி இருட்டுல இருந்து கத்தி சுழற்றுவதற்குப் பதில் பொது வெளியிலோ அல்லது வெகு ஜனப் பத்திரிக்கைகளிலோ உங்கள் அய்யனைப் ஏதாவது ஒரு செய்தி வருவதுண்டா?


  நீங்கள் இப்படி எல்லாம் செய்தி கொடுத்தால் அவனவன் காறித் துப்ப மாட்டான்?

  வசூல் விபரம் கொடுக்கிறார்களாம் அதி புத்திசாலிகள்

  ஏதாவது ஒரு படம் ஏதாவது ஒரு இடத்தில் (நன்றாக கவனியுங்கள் ஏதாவது செண்டரில் அல்ல ) தப்பித் தவறி தலைவர் படத்தின் வசூலை கொஞ்சம் முந்தி விட்டால் போதும்
  உடனே வாந்தி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது ( உதாரணம் மதுரை யில் மண்ணின் மணப் படம் ஒன்று தலைவரின் ஒரு படத்தை விட கொஞ்சம் வசூலில் கூடியது உடனே வெறியுடன் அதை மட்டும் எடுத்துப் போட்டு அல்ப்பைகள் அற்ப சந்தோஷம் அடைவது அதே நேரம் தமிழ் நாடு முழுக்க வசூலை வெளியிடுங்கள் என்று சொன்னால் உடனே பதுங்கு குழியில் போய் பதுங்கிக் கொள்வது

  இப்படித்தான் சென்னையில் மட்டும் திருவிளையாடல் படத்தை வசூலை கூட்டிக் காண்பிப்பது,
  தங்கப்பதக்கம் படத்தையும் சென்னையில் மட்டும்
  கூட்டிக் காண்பிப்பது ( இவ்வளவுக்கும் இந்த இரண்டு படமும் அவர்களின் சொந்த வாந்தியிலும், குத்தகை அரங்குகள் கிரவுன், புவனேசுவரி யிலும் வெற்றி கரமாக ஓட்டப் பட்டது, அதுவும் தகரத்தின் கதையை கேட்டால் நமக்கு தலை மட்டுமல்ல உலகமே சுற்றியது மாதிரி இருக்கும், அது என்னடா சிதம்பர ரகசியம் என்று பார்த்தால் கடைசி நாள் காட்சியில் கூட அரங்கம் நிறைந்திருக்கிறது, (175)

  எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்

  ஆனால் மற்ற ஊர் அரங்குகளில் பார்த்தால் "தகரத்தை " பழைய இரும்பு எடுத்துக்கிட்டு கிழங்கு கொடுக்கிறவன் கூட வாங்க தயாராயில்லை
  இப்படி ஒரு பில்டப்பு,
  அட அல்ப்பைகளா )

  அப்புறம் கொஞ்ச காலம் கணேசன் ரசிகர் மன்ற வேலை பார்த்த சித்ரா லட்சுமணன் எந்த ஆதாரமும் இல்லாமல் "வசந்த மாளிகை " படம் முதன் முதலாக �� 200 காட்சிகள் அரங்கம் நிறைந்த சாதனையை செய்தது என்று சொல்லி விட்டால் உடனே அதை எடுத்துப் போட்டு சிலிர்த்துப் போவது,

  ஆனால் அதே சித்ரா லட்சுமணன் வேட்டைக்காரன் கர்ணனை விட அதிக வசூல் செய்தது என்று சொன்னால் மண்ணை வாரித் தூத்துவது,
  விக்கி பீடியா காரன் சொல்லுவதையும் நம்ப மாட்டோம்,
  யூ டியூப் செய்திகள் சேனலில் 1947 முதல் 1978 வரை பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி யார் என்று பட்டியல் இட்டால் எல்லா ஆண்டையும் தலைவருக்கு கொடுத்து விட்டால் பாவம் கணேசன் பிள்ளைகள் என்று இரக்கப் பட்டு ஒன்றிரெண்டு இடங்களை ( உண்மையை சொல்லப் போனால் அதுவும் ஜெமினிக்கு
  போக வேண்டியது )
  கணேசனுக்கு கொடுத்திருக்கிறது,
  அதையும் ஏற்பார்களோ என்னவோ இந்த கோயபல்ஸ் கூட்டம்,

  கணேசன் படங்களின் நிலவரம் என்ன என்ற விபரத்தை அவர்களே பதிவிட்டு உள்ளார்கள்,

  மீரான்சாஹிப் தெருவில் உள்ள விநியோக அலுவலகம் ஒன்றில் போய் ஒரு கணேசன் படம் கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம்,
  சிவாஜி படத்தை எவனும் பார்க்க மாட்டான் அதெல்லாம் அந்த மூலையில் கிடக்கிறது, எனவே நீங்கள் "சங்கே முழங்கு,
  ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்களாம்,

  இதை விட ஒரு அவமானம் உலகத்தில் உண்டா?

  இதனால்தான் ஆரூர் தாஸ் சொன்னார் " எம். ஜி. ஆர் படம் தோல்வி என்று சொல்லப்பட்டாலும் அது " யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்பதைப் போன்றது " தோல்வி என்று அவருக்கு எந்த படமும் இல்லை என்று
  ஆணித் தரமாக எழுதினார்,

  முக்தா சீனிவாசன் ஒருபடி மேலே போய்

  "ஒரு எம். ஜி. ஆர் படம் மற்ற நடிகர்களின் 25 படத்துக்கு சமம் " என்று
  கணேசனின் மூக்கை உடைத்து கதற விட்டார்,


  அடுத்தது எங்கள் தரப்பு
  கொடுக்கும் ஆணித் தரமான ஆதாரங்களுக்கு தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு காமெடி செய்வது போல
  செய்து தன் தோல்விகளை மறைக்க ப் பார்ப்பது ( இதை விட
  கேவலம் எதுவும் இல்லை )

  இன்னும் ஒரு முக்கியமான விஷயம்
  தலைவரைப் பற்றி ஆபாச பதிவுகள் போடுவது,

  ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், இந்த மாதிரி கைப்பிடி இல்லாத கத்தியை வைத்து விளையாட்டுக் காட்டுவது மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்,

  உடையவனையே பதம் பார்த்து விடும் கவனம்

  எங்களுக்கும் "ரத்ன" சுருக்கமாக " பப்பி " ஷேமில் தொடங்கி " காம தேனுவும், சோம பானமும் பாடி "ஸ்ரீ " யே என்று "சி.ஐ. டி "போட்டு
  பதிவு போட முடியும்(இதில் இடைச் செருகல்கள் வேறு நிறைய இருக்கிறது ) என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்

  அந்தக் கால மஞ்சள் பத்திரிக்கை செய்திகளை இந்த மாதிரி அரங்கேறச் செய்வது " புலியின் கடுங் கோபம் தெரிஞ்சிருந்தும் வாலைப் புடிச்சி ஆட்டுவதற்கு சமம் " என்பதை சொல்லிக் கொள்கிறேன்.


  அன்புடன்

  தலைவரின் பக்தன்,
  ஜே.ஜேம்ஸ் வாட்..........

 10. #1079
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,453
  Post Thanks / Like
  பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/10/20அன்று அளித்த*தகவல்கள்*
  -------------------------------------------------------------------------------------------------------------
  நாளுக்கு நாள், நாடு ,கடல் தாண்டி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரவேற்பு பெருகி கொண்டே இருக்கிறது .எம்.ஜி.ஆர். திரைப்படங்களை பார்க்க வருபவர்கள் அதை கேளிக்கை அரங்கமாக நினைக்காமல் திருக்கோயிலாக நினைத்தார்கள் .அதனால்தான்1962ல்* அவர் நடித்த பாசம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். இறுதியில் இறந்துபோகும் காட்சியை ரசிகர்கள் ஏற்க மனமில்லாமல் துவண்டு போனார்கள். படம் சராசரி வெற்றியை பெற்றது . 1953ல் வெளியான நாம் திரைப்படம் ,எம்.ஜி.ஆருடன்*மற்றவர்கள்* கூட்டு சேர்ந்து தயாரித்து இருந்தாலும் அதில் எம்.ஜி.ஆர். மிக கொடூரமான முகம் கொண்டவராக நடித்ததால் ரசிகர்களின் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லைஏனென்றால் எம்.ஜி.ஆரை ஒரு அலங்கார கடவுளாக நினைத்தார்கள்*.எப்படி தங்களின் கடவுளை ஒருவர் அலங்கரித்து ,தங்களுக்கு வேண்டிய மாதிரி மேளதாளத்துடன், உற்சாகத்துடன் கொண்டாடுவார்களோ அப்படிதான் கொண்டாடினார்கள் . ஒரு கால கட்டத்தில், எம்.ஜி.ஆரின் படப்பெட்டிபேருந்து நிலையத்திற்கு வந்ததும் ,அங்கிருந்து* ,யானை மீதோ, குதிரை வண்டி* மீதோ வைத்து,தாரை ,தப்பட்டை முழங்க* ஊர்வலமாக திரை அரங்கிற்கு* கொண்டுவந்த** காலம் ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும் .*

  மக்களை காப்பாற்றத்தான் சட்டங்கள் இருக்கின்றனவே தவிர சட்டத்தை கொண்டு மக்களை துன்புறுத்த கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிக தெளிவாக இருந்தார் .அதனால் தான் நாடோடி மன்னன் படத்தில் அவர் பேசும் வசனங்களில்* சட்டங்கள் இயற்றுவது மக்களுக்காகத்தான் என்பார் .* எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போது, திருச்சியில் உள்ள கடை தொழிலாளர்களுக்கு அண்ணா தொழிற்சங்கம் என்று ஒரு அமைப்பு இருந்தது .அவர்களுக்கு வார விடுமுறை கிடையாது .இ.எஸ்.ஐ.,பி.எப். போன்ற பல்வேறு சலுகைகள் கிடையாது .இந்த பிரச்னைகளை விவரித்து மனு ஒன்றை ,அண்ணா தொழிற்சங்க தலைவராக இருந்த ரங்கநாதன் என்பவர் ,எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து கொடுக்கிறார் .திருச்சி ரயில் நிலையத்தில் . இறங்கும்போது*அந்த மனுவை வாங்கிய* எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் வைத்து கொள்கிறார் .ஒருவேளை முதல்வர் எங்கே மனுவை படிக்காமல், பார்க்காமல் போய்விடுவாரோ என்று அவரை தொடர்ந்து தேடி போய் மன்னார்புரம் என்கிற அரசு விடுதியில் எம்.ஜி.ஆரை சந்திக்கிறார் .நீங்கள் ஏற்கனவே மனுவை கொடுத்துவிட்டீர்களே.என்ன விஷயம் என்று கேட்க,,இல்லை ஐயா, அது கடை தொழிலாளர் பிரச்னை பற்றியது என்றவுடன் ,எம்.ஜி.ஆர். குறுக்கிட்டு நீங்கள் என்னிடம் மட்டுமா மனு கொடுத்துள்ளீர்கள்,அன்பில் தர்மலிங்கம் மற்றும் சிலரிடம் கொடுத்துள்ளீர்கள் .உங்கள் மனுவை நான் பார்த்துவிட்டேன் .நிச்சயம்*நடவடிக்கை எடுப்பேன் முதல்வர் எங்கே தனக்குள்ள பரபரப்பான செயல்பாடுகளில் மனுமீது நடவடிக்கை எடுக்காமல் போய்விடுவாரோ என்ற*கவலையில் பதற்றத்தோடு திரும்புகிறார் .ஒரு சில நாட்களில் ஒரு கடையில் நண்பர்களுடன் தேநீர் அருந்தும்போது ,ஒரு நண்பர் ஓடி வந்து ரங்கநாதா நீ கொடுத்த மனு சட்டமாகிவிட்டது என்கிறார் .கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை .மருத்துவ விடுப்பு, இ .எஸ்.ஐ.,பி.எப் என்பது போன்ற சலுகைகளை சட்டமாக்கி, முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானமாக* அறிவித்து இருக்கிறார் .சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆரால்* தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ,அந்த செய்தி கிடைத்ததும் ,கடை ஊழியர்கள் ,தலைவர் ரங்கநாதனை தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .தான் நினைத்ததை, அளித்த மனுவை சட்டமாக்கி,தீர்மானம் நிறைவேற்றி கடை ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்திய ரங்கநாதன் பெருமகிழ்ச்சி அடைந்தார் . இப்படி மக்களுக்கான சட்டங்களை, மக்களுக்காக, மக்களுக்கே ,இயற்றி நிறைவேற்றியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதும், தனிக்கட்சி அண்ணா தி.மு.க. என்று ஆரம்பித்தார் .துக்ளக் பத்திரிகையில் ஒரு வாசகர் கடிதம் எழுதுகிறார் .எம்.ஜி.ஆர். முதல்வராவது போல எனக்கு ஒரு கனவு வந்தது என்று .அதற்கு பதில் சொன்ன ஆசிரியர் சோ, நாடு எவ்வளவு விபரீதமாக போய்க்கொண்டிருந்தால்* உங்களுக்கு இப்படியான ஒருபயங்கர* கனவு வரும் என்று பதில் சொல்லி கேலி செய்கிறார் .அதே சோதான் .எம்.ஜி.ஆர்.முதல்வராகிய பின்னர் எம்.ஜி.ஆர். மக்களால் நேசிக்கப்படும் ஒரு மாபெரும் தலைவர் என்று கருத்து வெளியிட்டார் .இப்படி வேடிக்கையாக பேசியவர்கள் கிண்டல் கேலி செய்தவர்களை எல்லாம் வாயடைக்க செய்தவர் எம்.ஜி.ஆர். ஏனென்றால்,இவர்களெல்லாம் நினைப்பது போல எம்.ஜி.ஆர். பள்ளி படிப்பில் முழுமை பெறாவிட்டாலும் ,தன்* வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம் அறிவுத்திறனை பன்மடங்கு பெருக்கி படிப்பாளியாகி விட்டார் .அதனால் ஒன்றும் தெரியாதவர்.விஷயங்கள் புரியாதவர் என்று சொல்வதற்கில்லை .*அதுமட்டுமல்ல எந்த நிகழ்ச்சியிலும், எந்த துறையிலும் எந்த விழாவிலும் எந்த விஷயம் குறித்தும் சிறிது நேரம் உரையாற்ற கூடிய ஆற்றல் அவரிடம் இருந்தது* 1954ல் கூண்டுக்கிளி படத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த போது படப்பிடிப்புக்கு வரும் சமயம் எம்.ஜி.ஆர்.அவர்களின் கைகளில் குறைந்த பட்சம் சில புத்தகங்கள் இருக்கும் .* இருவரும் மிக பிரபலமாக இருந்தாலும் மரியாதை விஷயத்தில் இருவரும் சோடை போனவர்கள் அல்ல .படப்பிடிப்பின் இடைவேளையில் சில சமயம் எம்.ஜி.ஆர். புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பார் . அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் இருந்து சுமார் 100 அடி தூரம் தள்ளியிருந்து* சிவாஜிகணேசன் புகை பிடிப்பாராம் . காரணம் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது இருந்த மரியாதை .எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்குமோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அறிவுத்திறன் வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் படிப்பாராம் .எம்.ஜி.ஆரும் ,எஸ்.எஸ்.ஆரும்* ஒரு காலத்தில் தி.மு.க.வில் இருந்தபோது மயிலை காவல் நிலையத்தில் சிறையில் சில நாட்கள்*இருக்கும்போது தன் உதவியாளரிடம் வயிற்று பசிக்கு உணவு கேட்க,அவரும் ரொட்டியும், பழங்களும் வாங்கி தந்தார் .வயிற்று பசி தீர்ந்தது .இப்போது அறிவுப்பசி எடுக்கிறது .என்று உதவியாளரிடம் சொன்னார் .இப்படி ஒய்வு நேரங்களில்* புத்தகங்கள் படித்து புத்தகப்புழுவாக இருந்தார் எம்.ஜி.ஆர்*இந்த விஷயங்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் மிக பெரிய தத்துவங்கள்,விஷயங்களை தன் திரைப்படத்தில்அவர்* புகுத்துவதற்கு வழிகாட்டியாக ,வசனங்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக இருந்தது*


  திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னிலையிலேயே எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .ஆனால் சில நாட்கள் கழித்து தலைவரிடம் பத்திரிகை நிருபர்கள் ,நீங்கள் வலம்புரி ஜானுக்கு, லியாகத் அலிகானுக்கும் அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்படுகிறதே, உண்மையா* என்றுகேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர்.* .வலம்புரி ஜான் தாய் வார இதழின் ஆசிரியராக இருக்கிறாரே அவருக்கு எப்படி தர முடியும் என்று பேட்டியை முடித்துவிட்டார் .என்னை பற்றி ஒன்றும் குறிப்பிடாததால் எனக்கு மந்திரி பதவி தரப்போவதாகத்தானே அர்த்தம். அந்த வகையில் நிருபர்கள் என்னை கேட்டார்கள் .நான் அக் ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருக்கும் பட்சத்தில் தலைவர் நியமித்த பதவியில் நிறைவாக இருக்கிறேன் .எனக்கு மந்திரி பதவியில்* உண்மையில்**நாட்டம் இல்லை .எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய பேச்சுக்கள் அடங்கிய கேசட் என்னிடம் உள்ளது .நண்பர் தேவநாதன் என்பவருக்கு அனைத்தும் தெரியும் .நான் முன்பே சொன்னது போல கடலூர் மாநாட்டில் என்னை பற்றியும்* ,ஜெயலலிதா பற்றி யும் தலைவர் பேசிய கேசட்டை நான் யாருக்கும் காண்பித்ததில்லை .காரணம் அந்த பேச்சுக்களால் நான் உயர்வு அடைந்திடுவேனோ என்ற அச்சத்தில் சிலர் என்னை விட்டு விலகி சென்றார்கள். நட்பில் இல்லை .என்னை ஒதுக்கவும் ஆரம்பித்தார்கள் .ஆனால் சிலர் என்னை ஆதரித்தார்கள் . நான் எப்போதும் கட்சியில் ஒரு பிடிப்பாக இருப்பவன் .டான்சி வழக்கில் ஜெயலலிதா அவர்களை கைது செய்தபோது என்னையும் பிடித்து அடித்து உதைத்தார்கள் .அப்போது அடித்த அடி சாதாரண அடியல்ல .* நான் பொதுவழியில்ஐ.ஜி.உத்தரவு மீறி* பேசிக்கொண்டிருந்தபோது டி.சி.ஒருவர் வந்து கலைந்து போங்கள் என்று சாதாரணமாக பேசியவர் திடீரென கண்களை சிமிட்டி உத்தரவிட காவலர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தியதால் கை .கால்களில் பலத்த காயங்கள், கண்ணில் வீக்கம் . தினசரியில் கூட செய்திகள் வெளியாகின .அப்போது தினகரன் முக்கிய இடத்தில உள்ளார் .தினகரன் சொன்ன தகவலின்படி அறந்தாங்கியில் இடைத்தேர்தல் வருகிறது .அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசின் சக நண்பர் அன்பரசன் போட்டியிட, நானும் பிரச்சாரத்திற்கு புறப்பட தயாராக இருந்த நேரத்தில் உங்களை கைது செய்து ,சித்ரவதை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன .ஆகவே நீங்கள் தலைமறைவாக இருங்கள் .சிக்கி கொள்ளாதீர்கள் என்று தகவல் தருகிறார் .பின்னர் என் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு* வாய்தா வாங்கி வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ,என்னை விடுதலை செய்ய காரணமாக இருந்தவர் சேகர் பாபு ,தற்போது அவர் தி.மு.க.வில் இருக்கிறார்  *.கருணாநிதியை நான் சந்திக்கும்போது கூட எம்.ஜி.ஆர். இயக்கம் என்றுதான் பெயர் வைத்திருந்தேன் .கருணாநிதி கூட என்னிடம் நீ கட்சி நடத்த முடியாமல் அவதிப்பட்டு தி.மு.க.வில் இருப்பாய் என்று நினைத்திருந்தேன் என்று சொன்னதற்கு அண்ணே ,நான் எம்.ஜி.ஆருக்காக தான் உயிர் வாழ்கிறேன் .எம்.ஜி.ஆர்.தான் உயிர் மூச்சு. எனவே அவர் பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி* வருகிறேன் .அந்த இயக்கம் வளர்ந்தாலும், தொய்வுற்றாலும் எனது செயலில்* மாற்றம் இருக்காது,எம்.ஜி.ஆர்.தான் எனக்கு மிக முக்கியம்* என்று சொன்னேன் .ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது வாயிலில் சுமார் 50 பேர்கள் நின்றுகொண்டு அவரை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தவர்களிடம் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட வண்ணம் இருந்தனர் .உள்ளபடியே யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை .உள்ளே போனவர்கள் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இட்ட பின்னர் திரும்பி வந்தனர் .நான் எம்.ஜி.ஆர். இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்தால் கூட ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அவருடன் தொடர்பு கொண்டு ,பழகி வந்த காலங்கள் மறக்க முடியாத நினைவுகள் .இப்போது எப்படி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி பேசும்போது கண்ணீர் வருகிறதோ அதுபோல ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை இப்படி இருப்பதை எண்ணி தாங்க முடியாத துயரம் .நேரடியாக சென்று அவரை பார்க்க அனுமதி* கேட்டபோது பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது .அந்த நேரத்தில் சசிகலா அவர்களை சிலர் அணுகி பேசினர் .அருகில் இ.பி.எஸ்.,மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் அவருக்கு துணையாக இருந்தனர் . ஓ.பி.எஸ். அப்போது பொறுப்பு முதல்வராக உள்ளார் .வருகை பதிவேட்டை சசிகலாவும்,இ .பி.எஸ்.இருவரும் பார்த்து பெரும்பாலான நபர்களை அனுமதிக்கவில்லை .* நான் தனிக்கட்சி தலைவர் ,எம்.ஜி.ஆர். இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் எப்படியோ என்னை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள் .இ .பி.எஸ்.அவர்கள் வருகை பதிவேட்டின்படி யாரெல்லாம் வந்தார்கள் என்று தனி லிஸ்ட் எடுக்க சொன்னார் .அப்போது அங்கே அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ,,தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அங்கு கூடியிருந்தார்கள் . அவர்களிடம் விசாரித்தபோது ஜெயலலிதா அவர்கள் சகோதர உணர்வுடன் நன்றாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர் . நானும் இ .பி.எஸ். அவர்களும் ஒன்றாக அமைப்பு செயலாளர்களாக இருந்தவர்கள் .இப்போது அவர் முதல்வராக இருந்து நட்பு, பாசத்தின் அடிப்படையில், நான் கேட்காமலேயே என்னை ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக நியமித்தார் .இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பி.எஸ். அவர்களும் எத்தனை பேர் கூடியிருந்தாலும் என்னை பார்த்ததும் ,வணக்கம் தெரிவித்து ,தனியாக நலம்* விசாரித்து* அன்பு பாராட்ட கூடியவராக இருக்கிறார் .இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்றால் புரட்சி தலைவர் என்,மீது வைத்திருந்த அளவற்ற அன்பு, பற்று, பாசம் என்று சொல்லி கொண்டே போகலாம் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


  வாழ்க்கையில் நான் கஷ்டப்படும்போது* இவர் உதவினாரா இல்லை. நான் பட்டினியாக இருக்கும்போது இவர் உதவினாரா .இல்லை .என்பதெல்லாம் மனிதனுக்கு இயல்பாக தோன்றுவது .அவர்கள் பெரிய பணக்காரர்களாக ,லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாளிகைக்கு பின்னால் இருந்து பழைய நண்பர்களை பார்ப்பதை தவிர்ப்பார்கள் .இவர்களுக்கு உதவுவதை தவிர்த்து ,இவர்களெல்லாம் நமக்கு உதவாதவர்கள் என்று எண்ணி பழி வாங்குவார்கள், கேவலப்படுத்துவார்கள் .இதுதான் நடைமுறையில் இருந்து வரும் வாழ்க்கைமுறை .ஆனால் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு எல்லாம் வித்தியாசமானவர் .அவர் முதல்வராக இருந்தபோது உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்து ,தன்னால் இயல்பாக பேச முடியாமல் அவதிப்பட்ட மூன்று வருட காலத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் திக்கி திணறி பேசுவதை பலர் கேலியாகவும் , கிண்டலாகவும் மேடையில் பல நிகழ்ச்சிகளில் பேசினால்* கூட ,அந்த இயல்பாக பேச முடியாத துயரம், மன அழுத்தம் இருக்கிறதே அதை புறந்தள்ளி, தான் வாழ்க்கையில் ஈட்டிய சொத்துக்களில்* ஒரு பகுதியை வாய் பேச முடியாத , காது கேளாத சின்னஞ்சிறார்களுக்கு அவர்களது வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம்*எழுதி வைத்தார் .* அதாவது தன் துயர் பிறர் படட்டுமே என்ற மனிதர்கள் இருந்த உலகத்தில் ,தான் பட்ட, அனுபவித்த துயர், மன* அழுத்தம் போல பிறர் துயர் பட கூடாது என்று நினைத்த ஒரு தாயுள்ளம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இருந்தது*என்பதால் இன்றைக்கும் ராமாவரம் தோட்ட வளாகத்தில் அந்த பள்ளி உயிர்ப்புடன் வளர்ந்து ,பெருகி ,நம் கண் முன்னால் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சேவை செய்து வருகிறது என்பது எம்.ஜி.ஆர்.அவர்கள் காலம் கருதி செய்த உதவியால் அவர்களின் வாழ்வில் கலங்கரை விளக்கமாக ,ஒளி விளக்காக திகழ்கிறார் .

  ஒவ்வொரு நாட்டிற்கும், மண்ணிற்கும் நதி என்பது ஆதாரம் .அப்படி திரையுலகம் மட்டுமல்ல, உலக தமிழர்கள் உள்ளங்களில் எல்லாம் ஒரு வற்றாத ஜீவநதியாக அந்த மன்னாதி மன்னனின் நினைவுகள் வாழ்வாதாரமாக ஓடி கொண்டிருக்கிறது*என்பதற்கு நமக்கு வருகிற வரவேற்பு செய்திகளும் நமக்கு தொடர்ந்து அந்த உற்சாகத்தை அளித்து கொண்டிருக்கிறது .* அந்த உற்சாக பெருவெள்ளமான சகாப்தம் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .

  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  -------------------------------------------------------------------------------
  1.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

  2.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்ஷாக்காரன்*

  3. நான் ஆணையிட்டால்* - எங்க வீட்டு பிள்ளை*

  4.வாங்கய்யா வாத்தியாரய்யா - நம் நாடு*

  5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

  6.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

 11. #1080
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,453
  Post Thanks / Like
  வி.சி.கணேசன் பிள்ளைகளுக்கு சரியான*பதிலடி கொடுத்த*தலைவரின்*பக்தர்கள்*திரு.ஜேம்ஸ்*வாட்*,மற்று ம் கே.எஸ்.ஆர்.ஆகியோருக்கு அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற*கூட்டமைப்பு சார்பில்*ஏகோபித்த நன்றி . அதை பதிவிட்ட*நண்பர் சுகாராம்*அவர்களுக்கும் கனிவான*நன்றி .தொடரட்டும்*தீவிர*தாக்குதல்கள் .........!!!!!!!!!!!!

 12. Thanks suharaam63783 thanked for this post
  Likes suharaam63783 liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •