Page 102 of 210 FirstFirst ... 25292100101102103104112152202 ... LastLast
Results 1,011 to 1,020 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1011
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலை மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டியல்* (06/10/20 முதல் 12/10/20* வரை )
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    06/10/20* - சன் லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * * மூன் டிவி* -பிற்பகல் 12.30 மணி - குடும்ப தலைவன்*

    * * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * கிங் டிவி* *- இரவு 10 மணி* - அன்பே வா*

    07/10/20 -சன்* லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * * * பாலிமர் டிவி -காலை 11 மணி - புதிய* பூமி*

    * * * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *தமிழ் மீடியா டிவி -பிற்பகல்* 2மணி - எங்க வீட்டு பிள்ளை*

    08/10/20 -வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி -தாயை காத்த தனயன்*

    * * * * * * * மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி -விவசாயி*

    * * * * * * * சன்* லைப் - மாலை 4 மணி -நினைத்ததை முடிப்பவன்*

    * * * * * * *புதுயுகம் டிவி* - இரவு* 7 மணி - முகராசி*

    09/10/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி -விவசாயி*

    * * * * * * * சன் லைப் - காலை 11 மணி* - எங்கள் தங்கம்*

    * * * * * * *மெகா 24 - இரவு 9 மணி -குடியிருந்த கோயில்*

    10/10/20 -சன் லைப் - காலை 11 மணி - கணவன்*

    * * * * * * * முரசு டிவி* -மதியம் 12 மணி /இரவு 7 மணி -வேட்டைக்காரன்*

    * * * * * * ராஜ் டிவி* -பிற்பகல்* 1.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

    * * * * * * வேந்தர் டிவி -பிற்பகல் 1.30 மணி - அவசர போலீஸ் 100

    11/10/20 - புதுயுகம் டிவி - இரவு 10 மணி* - மாட்டுக்கார வேலன்*

    12/10/20* ஜெயா டிவி - காலை 10 மணி - இதய வீணை*

    * * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி -குடும்ப தலைவன்*

    * * * * * * * சன்* லைப்* - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*

    * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - அரச கட்டளை*

    * * * * * * *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1012
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கல்லூரியில் காதலா?
    எம்.ஜி.ஆர். கண்டனம்

    கேள்வி : இந்த ஆண்டோடு எனக்குக் கல்லூரிபப் படிப்பு முடிகிறது. கலோரியில் என்னோடு படித்த ஒரு மாணவியை நான் உரியும் உயிராய் காதலிக்கிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள். பெற்றோரின் சம்மதத்தோடு இருவரும் அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் புரிந்து கொள்ளப்போகிறோம். காதலிலே வெற்றி பெற்ற எங்களுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் தாங்கள் கூறும் அறிவுரை என்ன அண்ணா?

    எம்.ஜி.ஆர். பதில் : பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போகிறோம், என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது தான், ஆனால் உங்களைப் போன்ற மாணவ இளைஞர்களுக்கு நான் விடுக்கும் அறிவுரையல்ல வேண்டுகோள் தான்:

    மாணவர்கள் அரசியலில் ஏன் பங்குகொள்ளக் கூடாது என்று பெரியார்கள் சொல்கிறார்கள்? மாணவர்கள் அறிவில்லாதவர்கள் என்றோ, அரசியலைத் தெரிந்து கொள்ளத் தகுதியில்லாதவர்கள் என்றோ பொருளல்ல. கல்வி பயிலும் நேரத்தில் தங்களை வேறு பிரச்சனைக்கு உட்படுத்திக் கொண்டு, கல்வியைப் பாழ்படுத்திக் கொள் ளக் கூடாது என்பதே காரணம். அரசியலைப் போலத் தான் காதலும், ஓர் ஆணோ , பெண்ணோ வயது வந்த பிற கு ( அல்லது தகுதியான நிலை வந்தபிறகு ) உடற் பசியைத் தீர்த்துக் கொள்ளவும் உள்ள எழுச்சியைத் தணித்துக் கொள்ளவும் வாழ்க்கையில் ஒரு நிறைவைப் பெறவும் மணஞ் செய்து கொள்ள வி கும்புவது கூடாத ஒன்றல்ல; தேவையற்றதுமல்ல, அனால் கல்வி பயிலும் நேரத்தில் இந்த உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்டால், பெரும்பால்னவர்களுக்கு அது வாழ்க்கையைச் சோக முடிவில் கொண்டு வந்து விட்டு விடலாம், அந்தக் கல்வித்துறையில்.

    எனக்குத் தெரிந்தவரை, வாய்ப்பும் வசதியுமுள்ள இட ங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மிகச் சிறு பான்மையினரே. கடன் பட் போ , இருக்கும் கொஞ்சம் சொத்துக்களை விற்று. தங்கள் குழந்தைகள் கல்வி பயின்று தங்களை வாழவைக்கு மென்ற ஆசையில் பெற்றேரால் கல்லூரிக்கு, அனுப்பி வைக்கப்படுவோரே பெரும்பான்மையினர். தந்தையற்ற மகன், தான் பயிலும் ஊன்றிப் படித்துத் தேர்த்தால்தான் தாய்க்கு ஆதரவாக இருக்கமுடியும்; தாயின் தம்பிக்கை மட்டுமல்ல ; அவளுடைய எல்லா எண்ணங்களுமே அந்த மகளின் கல்வி முன்னேற்றத்தின் அடிப்ப டையில் தான் உருவாகக்கின்றன.

    ஆதலால் இத்தகைய நிலையில் மாணவ இளைஞர்கள் கல்வி நேரத்தில் காதலுக்கு இடம் கொடுத்தால் கல்வியும் கெட்டுக் காதலும் தடைப்பட்டு , தாயையும், சார்த்த குடும்பத்தையும் காக்க முடியாத விளைவையே தருவதாகிவிடும்.

    நன்றி : நடிகன் குரல்.............

  4. #1013
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கமலஹாசன் என்ற ஒரு நடிகர் ... பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியில், கல்விக் கண் திறந்தவர் காமராசர் என்றும், அவரால் தான் மாணவர்கள் பள்ளியில் சேர ஆர்வமாக இருந்தனர் என்றும் கூறி இருக்கிறார்.

    தான் பேசுவது தனக்கு மட்டுமே புரியும் ரீதியில் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் இந்த கமலஹாசன். இவர் வி.சி. கணேசனின் ரசிகராக இருந்து விட்டு போகட்டும். ஆனால், உண்மையை மறைத்து பேசுவதுதான் நமக்கு கோபத்தை வரவழைக்கிறது.

    முகநூலில், சில நாட்களுக்கு முன்பு, காமராசரை விட பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மல் ஆட்சி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது... என்பதை நிரூபிக்கும் வகையில், ஆதராங்களுடன் நான் குறிப்பிட்டிருந்தேன்.

    இந்த கமலஹாசனுக்கு பதிலாக எனது முந்தைய பதிவை மீண்டும் மறு பதிவாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    பெருந்தலைவர் காமராசர் மதிய உணவு திட்டத்தை, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தினார். அதிலும், எல்லா மாணவர்களும் பயன் பெற வில்லை. மதிய உணவு என்பது ஒரு கலவை சாதமாகவே இருந்தது. அதுவும் நல்ல அரிசியில் சமைக்கப் பட வில்லை. ஆனால், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலோ மாநிலம் முழவதும், மதிய உணவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு, புதுமையான சத்துணவு திட்டத்தை அமல் படுத்தி, உலக நாடுகள் சபையால் பாராட்டப் பட்டார். காமராசர் ஆட்சி காலத்தில் இயற்கை வளம் மிகுந்து, மக்கள் தொகை சிறிய அளவில் இருந்தது. நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த போது இயற்கை வளம் குன்றி, மக்கள் தொகை பெருகி இருந்தது. இருப்பினும், பொற்கால ஆட்சியை வழங்கினார் பொன்மனச் செம்மல். காமராசர் ஆட்சி செய்த பொழுது அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சி புரிந்து வந்தது. இதனால், திட்டங்களை தமிழகத்துக்கு பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், புரட்சித் தலைவர் ஆண்ட போது மத்தியில் ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தது. தமிழக மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை போராடி போராடித் தான் பெற்றார், சமதர்ம சமுதாய காவலன் எம்.ஜி.ஆர்.

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, எந்த கட்சி ஆட்சி செய்திருந்தாலும், திட்டங்கள் பல தீட்டப்பட்டுதான் இருக்கும். இதில் ஒரு விந்தையும் கிடையாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்றவைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தான் ஒரு குடும்பத தலைவனின் கடமை. அது போன்றது தான் இதுவும். ஆனால், காமராசர் அதை செய்தார், இதை செய்தார் என்று சிலர் கூக்குரலிடும் பொழுதும், அதை மிகைப்படுத்தி கூறும் பொழுதும், இந்த குடும்பத்தலைவன் பொறுப்புக்கள் தான் நினைவுக்கு வருகிறது. தன் மனைவி மக்களுக்கு உணவளித்து, இடமளித்து, உடைகள் வாங்கி கொடுத்தது பற்றி பெருமை பீற்றிக் கொள்வது ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகா ?

    காமராசர் ஆட்சி செய்த காலத்தில், குறைந்த அளவில் மக்கள் தொகை இருந்த காரணத்தால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு ஓரளவு செயல்பட்டது.

    ஆனால், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்பட்டதன் காரணத்தால், கிருஷ்ணா நதி நீர் திட்டம் தீட்டப்பட்டு, அதன் மூலம் தலைநகர் வாழ் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்க வழி காணப் பட்டது. அரசு கஜானாவை தீயசக்தியும் காலி செய்தது வரலாற்று உண்மை. அண்டை மாநில அரசுகளுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக காவிரி நீர் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி கிடைத்தது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். (அப்போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவிலும், தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம் என்பது வேறு விஷயம்.

    அது போன்றே முல்லைப் பெரியாறு ஒரு பூதாகரமான பிரச்சினையாகி உள்ளது. - இப்போது காவிரி நீர் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு பிரச்சினையும் ஒரு தொடர்கதையாகி வருகிறது).

    நமது மக்கள் திலகம் ஆட்சியில்தான், மேட்டூரிலிருந்து ஈரோடு வரை 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய பாசன வசதிகள் பெருகின.

    அது மட்டுமல்லாமல், வால்பாறை அருகே காடம்பாறை நீரேற்று மின் நிலைம் உருவாகி மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் ஆட்சி புரிந்த பொழுது ஏன் செயல்படுத்தப்பட வில்லை. அது பற்றி ஏன் யோசிக்க வில்லை என்பதே நம் கேள்வி ?


    தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்கள் ஏன் உரி மை கொண்டாட வில்லை. அந்த பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்ததே இந்த காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    பள்ளிக் கல்வியை மட்டுமே பிரதானமாக கொண்டு கல்விச் சாலைகள் பல காமராசர் காலத்தில் திறக்கப் பட்டாலும், உயர் கல்வி (பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்வி) நிறுவனங்கள். மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஆட்சியில் பல தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் இன்று தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான பட்டதாரிகள் உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.

    நம் இதய தெய்வத்தின் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள் 1963ல் காமராசர் அவர்களை என் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்றும் , தி.மு.க.வில் இருந்த போதே தைரியமாக அன்புடன் கூறினார். ஆனால், பெருந்தலைவரோ, 1964ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், "வேட்டைக்காரன்" வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று வெறுப்புடன், தனி மனித தாக்குதலை தொடர்ந்தார்.

    மக்கள் நல திட்டங்கள் பல அமல் படுத்தியிருந்தால், சொந்த விருதுநகர் தொகுதியிலேயே மக்களால் காமராசர் ஏன் நிராகரிக்கப் பட்டார் ? இந்த 1967 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதான் தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது, கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, எலிக்கறி சாப்பிடச் சொனனதுதான் இந்த காங்கிரஸ் அரசாங்கம். இதனாலே காமராசர் தோற்ற சம்பவமும் அரங்கேறியது. படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று அகந்தையுடன் கூறிய காமராசர் தோற்றார்.

    தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும், வெற்றியே கண்டு, தமிழகத்தின் தொடர் முதல்வராக விளங்கி பெருமையை பெற்றார். நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அது மட்டுமல்ல, படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொல்லாத நம் மக்கள் திலகம் 1967 மற்றும் 1984 சட்டமன்ற பொது தேர்தல்களில் படுத்துக் கொண்டே இரு முறை வெற்றி பெற்று, உலக சாதனையை ஏற்படுத்தினார், எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.

    நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிதில், காமராஜரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு கூறியது நாகரீகமானதா ?

    தேசிய அளவில் எலியும் பூனையுமாக இருந்த இந்திரா காந்தியும், காமராஜரும், தங்கள் கொள்கைகளை கைவிட்டு, பொன்மனச் செம்மலின் வளர்ந்து வரும் செல்வாக்கை தாங்க முடியாமல், 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். இதை விட வெட்கக்கேடான செயல் இருக்குமா ?

    காமராசர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு உறுதுணையாக இருந்தவர் தான் காமராசர்.

    ஆனால், என் தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி, இனம், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்ப்பினராலும் எங்கள் வீட்டு பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.

    இவ்வாறு பல ஒப்பீடுகள் செய்யப் படும் போது, என் கண்களுக்கு தமிழகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, பொற்காலத்தை வழங்கியவர் புரட்சித் தலைவர் ஒருவரே என்றுதான் புலப்படுகிறது.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

    என்றென்றும் என் தங்கத் தலைவன் எம்.ஜி.ஆர். புகழ் மட்டுமே பாடும், சௌ. செல்வகுமார்.

    பின்குறிப்பு : இந்த தலைக் கணம் பிடித்த கமலஹாசன், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "நாளை நமதே" காவியத்துக்கு நடிகர் சந்திரமோகன் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், இதோ அதோ என்று கால்ஷீட் தராமல் ஒரு மாத காலமாக அலைக்கழித்தார். நம் தலைவரும் பொறுமையின் சிகரம் அல்லவா ! அவரும் அமைதி காத்தார். அடிப்படையில் இந்த நடிகன் திமிர் பிடித்தவர். அப்போது, வி.சி. கணேசனுக்கு துதி பாட, போலி யாளர்கள் கொண்ட ஒரு கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தில் இந்த நடிகனும் ஒருவர். நம் பொன்மனச் செம்மலுடன் நடிக்க தயக்கம் காட்டியவர். இவர் அரசியல் கட்சி நடத்துகிறார். இது போன்ற மாறுபட்ட விமர்சனங்களால்தான் இவர் விமர்சிக்கப் படுகிறார்.( தான் நடத்தும் கட்சிக்கு "நாளை நமதே" திரையுலக/ அரசியல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் தலைப்பை பயன் படுத்துகிறார். வேறு எந்த தலைப்பையும் சூட்ட யோசனைகள் வரவில்லையோ?!)...sk...

  5. #1014
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்துக்கு பொருந்தாத கதையமைப்பு. திரைக்கதை விறுவிறுப்பு இல்லாததால் இழுவையான காட்சிகள். மக்கள் திலகம் படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இதில் அதுவும் இல்லை. க்ளைமாக்ஸில் வழக்கமாக இவர் எல்லாரையும் காப்பாற்றுவார். இந்தப் படத்தில் போலீஸ் வந்து ( எம்.கே.முஸ்தபா) இடிபாடுகளில் சிக்கிய இவரைக் காப்பாற்றும். பாம்புக் கடி வேறு. படம் முடிவதற்கு 10 நிமிடம் முன்னால் மக்கள் திலகம் படுக்கையில் சீரியஸாக இருப்பார். ஒரு கட்டத்தில் அவர் இறப்பது போல் கண்பித்து பிறகு பிழைத்துக் கொள்வார். அவர் படுக்கையில் இருந்தபடியே படம் சப்பென்று முடியும். மக்கள் திலகம் படுக்கையில் இருந்தபடி முடியும் படம் இது ஒன்றுதான். படம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் ஏமாற்றினாலும் கிராமப்புறங்களில் சி செண்டர்களில் மக்கள் திலகத்தின் முகத்துக்காகவே படம் சுற்றிக்கொண்டே இருந்தது. எனக்குத் தெரிந்து திருக்கோவிலூரில் மளிகைக் கடை வைத்திருந்த ஒரு செட்டியார் இந்தப் படத்தை வாங்கி படப்பெட்டியை கடையிலேயே வைத்திருந்தார். அந்தப் பிரிண்ட் தேயும் அள்வுக்கு சுற்றுவட்டார ஊர்களில் அடிக்கடி மாடப்புறா திரையிடப்பட்டது. செட்டியாருக்கு வாங்கிய விலையைவிட அதிகமாகவே சம்பாதித்து கொடுத்தது. மக்கள் திலகத்தின் படங்கள் நஷ்டம் ஏற்படுத்தாது. மக்கள் திலகத்துடன் நடிகை வசந்தி இந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்தக் காலத்தில் ஆண்களே அதிகம் படிக்காத நிலையில் இவர் பி.ஏ. படித்தவர். டைட்டிலில் வசந்தி பி.ஏ. என்று போடுவார்கள். 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன் இவரை 2 ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.......... Swamy...

  6. #1015
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Malarum Ninaivugal
    1972
    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
    17-10-1972 ஆம் ஆண்டு உதயமானது.

    அது வரை மக்களின் மனங்களை தனது திரைப்படங்கள் வாயிலாக மகிழ்வித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் மக்கள் பணிக்காக முழுநேர அரசியலில் ஈடுபட தனிக்கட்சி தொடங்கிய நாள். அவர் தொடங்கினார் என்பதை விட தொடங்கிட தூண்டப்பட்டார் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதே பொருந்தும்.

    திராவிட முன்னேற்றக்கழகத்தில் பல்லாண்டு காலம் பாடு பட்டு அக்கட்சியை வளர்க்க அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

    தனது தயாரிப்பில் வெளிவந்த படத்தின் ஆரம்பத்தில் கட்சிக் கொடி, தனது கதாபாத்திரத்தின் பெயரில் உதய சூரியன், நெற்றியில் உதயசூரியன் வடிவில் திலகம், உடையில் கருப்பு சிவப்பு, படிக்கும் பத்திரிக்கையில் முரசொலி இப்படி ஒவ்வொரு வினாடியும் கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டவர் மக்கள் திலகம்.

    (நேற்று தற்செயலாக நம்நாடு படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஈ மொய்க்கும் பலகாரங்களை விற்பதை தடுத்து தூக்கி எறிந்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தேன். அந்தப் பணத்தை எடுக்கும் பர்சின் நிறம் கூட கருப்பு சிவப்பு). இப்படி பாடுபட்ட வளர்த்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கட்டாயத்தினால் உருவாக்கப்பட்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் மனங்களை மகிழ்வித்த மக்கள் திலகம் 1977 ஆம் ஆண்டு முதல் மக்கள் வாழ்வையும் வளப்படுத்த நல் ஆட்சி தந்தார். (அதற்கு முன்னும் தாம் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தில் பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்து உதவினார் அவர்கள் வாழ்வை மலரச் செய்தார் எனினும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் செய்ய உதவியது கட்சியே.

    இந் நாள் எம்.ஜி,ஆர். ரசிகர்கள் தொண்டர்கள் வாழ்வில் மறக்க இயலாத மறக்கக் கூடாத ஒரு நாள்
    Thanks Jaisankar sir..........VND...

  7. #1016
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

    இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

    எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

    மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

    இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக்
    பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

    பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

    courtesy - net...VND...

  8. #1017
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மீட்டா_ருங்ராட்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் "மக்கள் திலகத்துடன்" கொஞ்சு மொழியில்..
    "#பச்சைக்கிளி_முத்துச்சரம் #முல்லைக்கொடி_யாரோ.." என்ற அட்டகாசமாக டூயட்பாடிய அந்த தாயலாந்து பெண்ணை மறக்க முடியுமா?

    சும்சாய்..என்று நாகேஷ் கத்திய உடனே படகிலிருந்து அவ்வளவு அழகாக திரும்பிப் பார்த்தவர்...!!!

    உலகம் சுற்றும் வாலிபனில் மூன்று கதாநாயகிகள் ((லதா, மஞ்சுளா, சந்திரகலா)) இருந்தாலும், ரசிகர்களின் மனதை தன் கொஞ்சு தமிழினாலும், குழந்தைதனமான வெள்ளந்தியான நடிப்பில் கவர்ந்தவர்...

    உ.சு.வா படப்பிடிப்பு முடிந்தும் கூட மக்கள் திலகத்தின் மேல் ஆசைப்பட்டு அவருக்காக மீண்டும் தமிழகம் நோக்கி வந்தவர் ((என்று அந்நாளில் உறுதி செய்யாத கிசுகிசுவில் சிக்கியவர்))

    என் போன்ற மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனதில் இன்றும் தனி இடத்தை பிடித்தவர்...

    #மீட்டா_ருங்ராட்

    புகைப்பட உதவி:https://mydramalist.com/people/21915-metta-roongrat........ Sridhar Babu...

  9. #1018
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வெட்கத்தால் துள்ளுது சிட்டு 03 [ 13 - 10 - 2020 ]

    *** இப்பாடலைக் கேட்க விரும்பினால் கீழிருக்கும் இணைப்பு முகவரியை சொடுக்குங்கள்!! ***



    *** !! என்னென்ன நினைத்து வந்தேன் எத்தனை எடுக்க வந்தேன்
    எல்லாமே மறந்து போனதே!!
    கூறுங்கள் கேட்டுக் கொள்வேன் கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன் நான் உங்கள் சொந்தமல்லவா...( 2 )
    என்ன என்ன இது கன்னி மனசுக்குள் இத்தனை எண்ணங்களா
    மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா?? ( 2 ) ... [ பார்த்துக் கொண்டது...]

    எனக்குப் போதித்தவர் :- பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள்...
    நிருத்தியச்சக்கரவர்த்தி எம்.ஜி .ஆர் அவர்களை நேசிக்கும் அன்பர்கள் அனைவர்க்கும் இனிய 13 - 10 - 2020 செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள் உரித்தாகுக...சட்டசபையில் புரட்சித்தலைவர் பேசியது :

    மக்கள் கொடுக்கும் வரி பணம் மக்களின் நல்வாழ்வுக்காக பயன்பட வேண்டும். மக்களுடன் கூடியிரு ! மக்களுடன் பழகு ! அவர்களுடன் வாழ் ! அவர்களுக்காகத் திட்டம் தீட்டி செயல்பட்டு ! மக்களிடம் நீ போ செய் என்றெல்லாம் அமரர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் . அதைத்தான் நான் செய்கிறேன். இந்த அரசு செய்கிறது. அண்ணா அவர்களின் கொள்கையை நிறைவேற்றி வரிப் பணம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை மக்களுக்கு செலவு செய்வதுதான் எங்கள் பணி.

    தமிழரசு ( 16- 06- 1984 )

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....VR...

  10. #1019
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எங்க வீட்டு பிள்ளை" வரலாறு காணாத சாதனை வசூலிலும் நாட்களிலும் ஏற்படுத்தியதும் சிவாஜி ரசிகர்கள் அடுத்து வரும் கணேசன் படங்களை எப்படியும் "எ.வீ.பிள்ளை" சாதனையை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தனர். அதற்காக அப்போதே வடக்கயிறையும் ஸ்டெச்சரையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    அப்போது வந்த "திருவிளையாடல்" கொஞ்சம் சுமாராக போனதும் உடனே விளம்பரங்களை நாளிதழ்களில் அள்ளித்தெளித்த வண்ணமிருந்தனர். அப்போதே டிக்கெட் கிழித்தும் சொந்த தியேட்டரில் சிந்து பாடியும் சென்னையில் மூன்று திரையரங்கில் மட்டுமே வெள்ளி விழா ஓட்ட முடிந்தது.

    "எ.வீ.பிள்ளையை" பார்த்தவர்கள் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 6 மாதத்தில் மொத்தம் 12 லட்சம் பேர்.அதுமட்டுமல்ல தமிழகத்தில் கேளிக்கை வரியாக அரசுக்கு செலுத்திய தொகை மட்டும் 50 லட்சம் ரூபாய். இந்த கேளிக்கை வரியை கூட வசூலாக திருவிளையாடல் பெறவில்லை என்பதே உண்மை நிலை. சென்னையில் மட்டும் கேளிக்கை வரியாக ரூ 5.25 லட்சம் செலுத்தப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. அன்றைய இந்து பேப்பரில் வெளிவந்த ஒரு கட்டுரை சொன்னது. சென்னையில் மொத்த ஜனத்தொகையே 20 லட்சத்துக்குள்தான்.

    மறுவெளியீடுகளையும் சேர்த்தால் 20 லட்சத்துக்கு மேலே பல லட்சங்கள் அதிகம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் "திருவிளையாடல் இவர்கள் டிக்கெட் கிழித்ததை சேர்த்தும் பார்த்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சம் கூட வரவில்லை. இவர்கள் ஒரு 2 லட்சம் டிக்கெட்கள் வரை கிழித்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் மொத்த பார்வையாளர்கள் சுமார் 7 லட்சம்தான்.

    1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" மதுரையில் சுமார் 7.25 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது. அன்றைய மதுரையின் ஜனத்தொகை மொத்தமே அவ்வளவுதான் இருக்கும். மதுரை மொத்தமே உலகம் சுற்றும் வாலிபனை கண்டு களித்தது ஒரு மறுக்க முடியாத சாதனை என்றே சொல்ல வேண்டும். ஆனால் மாற்றுக்கட்சியினரின் படத்துக்கு ஆட்கள் பார்க்காமல் வெறும் டிக்கெட் மட்டுமே கிழிக்கப்பட்டது. அதுவும் கின்னஸில் இடம் பெற வேண்டிய கேவலம்தான்.

    எப்போதுமே முதலில் சாதனை செய்வது தலைவர் படம்தான். அதை முறியடிக்க சிவாஜி ரசிகர்கள் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக கிளம்பி விடுவார்கள். அதன்பிறகு வந்த
    "அடிமைப்பெண்" அடுத்த சாதனையை அரங்கேற்றியது. உடனே "சிவந்த மண்ணு"டன் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக கிளம்பினார்கள். வேறு எங்கும் நெருங்க முடியாமல் தூத்துக்குடியில் மட்டும் செய்து முடித்தார்கள். "சிவந்த மண்ணை" 101 நாட்கள் ஓட்டி தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டார்கள்.

    மற்ற ஊர்களில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாமல் துவண்டு விட்டனர். அடுத்து "ரிக்ஷாக்காரன்" வந்து விட்டான். புயலைக் கிளப்பி புது சாதனையை செய்து முடித்தான். அதைத்தொடர்ந்து வந்த "ராஜா" வை
    வைத்து "ரிக்ஷாக்காரனை" வெல்ல மீண்டும் பெரிய வடக்கயிறு மற்றும் ஸ்டெச்சர் உதவியுடன் டிக்கெட் கிழிக்கப்பட்டது. வழியில் வருவோர் போவோருக்கெல்லாம் இலவச டிக்கெட் வழங்கப்பட்டும் தியேட்டருக்கு மக்களின் வருகை குறைந்து ஆளேயில்லாமல் தொடர் hf. ஆனதாக ஸ்லைடு போட்டும் 143 காட்சியோட அதையும் நிறுத்தி விட்டார்கள்.

    50 நாட்கள் வசூலில் தேவிபாரடைஸில் தில்லுமுல்லு பண்ணி கூட காண்பித்தார்கள். 50 நாளுக்கு மேல் ஜீரம் கூடி விட்டதால் "ராஜா"வால் நடக்க முடியாமல் ஸ்டெச்சரில் வைத்து தூக்கி சென்று கரை சேர்த்தனர். இருந்தாலும் ஒரு "ரிக்ஷாக்காரனி"டம் வாங்கிய செருப்படி "ராஜா"வுக்கு உறைக்கவில்லை. ராஜாதான் மரித்து போய் விட்டாரே.

    அதன்பின்பு குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல "பட்டிக்காடா பட்டணமா" கொஞ்சம் சுமாராக போனதும் கிளம்பி விட்டார்கள். 6வார வசூலை விளம்பரத்தில் கொடுத்து அவமானப்பட்டார்கள். மதுரையில் பெண்கனின் உதவியால் வசூல் கொஞ்சம் அதிகம் பெற்றவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். "வசந்த மாளிகை"யும் "ரிக்ஷாக்காரன்" முன்னால் மண்டியிட்டது.

    அடுத்த சாதனையாக புரட்சி தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வந்தது.
    வசூலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலாக 4.55 கோடி வசூலாக பெற்று இந்திப் படங்களுக்கு சவால் விட்டது. அது இன்றைய மதிப்புக்கு சுமார் 150 கோடி என்று விக்கிபீடியா மதிப்பிடுகிறது.

    மூன்று சூலம் முந்தி விட்டது என்று பொய் பிரசாரம் செய்யும் கைபிள்ளைகளுக்கு மூன்று சூலம் மட்டுமல்ல எத்தனை சூலம் வந்தாலும் வாலிபனிடம் சரண் அடைந்தே தீரும் என்பதை மூன்று சூலத்தின் வசூலை(3.5கோடி) விக்கிபீடியா மதிப்பிட்டதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். 8 தியேட்டரில் வெள்ளிவிழா ஓட்ட வேண்டும் என்பதை முன்னமே தீர்மானம் செய்து ஓட்டினால் வெற்றி பெற்றதாகி விடுமா?. பொய்யான தகவல் மூலமாக புரட்சி தலைவரின் படங்களை வெற்றி பெற முடியாது என்பதை உணர்வார்களா கைபுள்ளைங்க.

    அந்த சாதனையை கண்டு மிரண்டு விட்ட கணேசன் ரசிகர்கள் "தங்கப்பதக்கம்" என்ற நாடக சினிமாவை தேர்ந்தெடுத்தார்கள் தலைவரின் சாதனையை முறியடிக்க. அந்தோ பரிதாபம் மீண்டும் படுதோல்வி அடைந்தனர். 100 நாட்களுக்கு பிறகு படம் சண்டி மாடு மாதிரி வாய்பிளந்து படுத்து விட்டது. அதன்பின் வழக்கம் போல் ஸ்டெச்சர் மற்றும் வடக்கயிறு உபயோகித்து கரை சேர்த்தனர்.

    "உலகம் சுற்றும் வாலிபனை"யே நெருங்க முடியவில்லை. அதற்குள் "உரிமைக்குரல்" வந்து விட்டது. சென்னையில் அரசியல் காரணமாக பெரிய தியேட்டர் எதுவும் கிடைக்காமல் ஓடியனில் வெளியாகி எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டாலும் கணிசமான இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை விஞ்சி நின்றது.
    அதனால் தலைவர் சினிமாவில் இருக்கும் வரை வடக்கயிறும் ஸ்டெச்சரும் பயன்படுத்தி பிரயோஜனமில்லை என்று தெரிந்து தினமும் பொழுது போக அவர்கள் படாத பாடு பட்டனர். எப்போதுமே முதலில் சாதனை செய்வது தலைவர் படமே என்பது தெள்ளத் தெளிவாகிறது..........ksr

  11. #1020
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற பிறகு, பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட சத்துணவுத் திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்திட கல்வி அதிகாரி வெங்கடசுப்பிரமணி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் வந்த காலங்களில் விடுமுறை தினங்களில் சத்துணவு வழங்கப்படாமல் போனாலும், அவரின் சிறப்பான வாழ்நாள் சாதனைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம்

    குழந்தை வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சிக்கலாக இருந்துவந்த காலத்தில் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். குழந்தைகள் 5 வயதை எட்டியபின்னரே பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதுவரை, உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் வகையில் கொண்டுவந்த திட்டம் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம். நடுவண் அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகமாக ஒதுக்கி அத்திட்டம், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கிறது.

    இட ஒதுக்கீடு

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சிறப்பான திட்டம் 2௦ சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டதால் பெருமளவிலான மக்களுக்கு பயனில்லாமல் போனது. அதை, தனது ஆட்சியின்போது 5௦ சதவிகிதமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். அதன்பின்னர், இன்று வரை பள்ளிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

    இப்படிப்பட்ட மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் மாபெரும் தலைவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றுவதால் புரட்சித் தலைவர் "ஆயிரத்தில் ஒருவன்", "லட்சத்தில் ஒருவன்", "கோடிகளில் ஒருவன்".........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •