Page 55 of 140 FirstFirst ... 545535455565765105 ... LastLast
Results 541 to 550 of 1394

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #541
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  #மக்கள் திலக*த்துட*ன் நாகேஷ் ப*லப*ட*ங்க*ளில் ந*டித்து பிஸியாக இருந்த காலம்!

  அப்போதெல்லாம் எம்ஜிஆர் ப*ட*ங்க*ளில் ந*டிப்ப*தாயின் முத*லில் அவ*ர் ச*ம்ப*ந்த*ப்ப*ட்ட* காட்சிக*ளை முடித்து அனுப்ப* சொல்லிவிடுவார் எம்ஜிஆர்.

  காஷ்மீரில் சித்ரா ப*வுர்ணமி ஷூட்டிங்கின்போது ச*ரிவ*ர உண*வு கிடைக்காம*லும், வ*யிற்றுவலியாலும் நாகேஷ் அவ*திப*ட்ட*போது எம்ஜிஆர் அப்போது காஷ்மீரில் நேற்று இன்று நாளை, நினைத்த*தை முடிப்ப*வன் ப*ட*ப்பிடிப்பில் இருந்தார். விஷ*ய*ம் அறிந்த* எம்ஜிஆர் நாகேஷின் ரூமிற்கே நேரில் வ*ந்து ந*ல்ல* ம*ருத்துவ* வ*ச*தி, உண*வு ஏற்பாடு செய்து கொடுத்து கையில் 30 ஆயிரம் ப*ணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தார்.

  வெளிநாட்டில் உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*ப்பிடிப்பின்போது நாகேஷே எதிர்பாராத வ*கையில் அவ*ரின் பிற*ந்த* நாளை சிற*ப்பாக கொண்டாடி த*ங்க* மோதிர*ம் அணிவித்தார் எம்ஜிஆர்.

  நாகேஷ் திரைய*ர*ங்க*ம் க*ட்டும் வேளையில் இருந்த சிக்க*ல்க*ளை நீக்கி தானே முன்னின்று தீர்த்து வைத்து திற*ந்தும் வைத்தார். அப்போது பாண்டி ப*ஜாரில் நாகேஷ் தியேட்ட*ருக்கு எதிரே பிர*ப*ல
  மான த*னியார் ப*ள்ளி ஒன்று இருந்த*து.. தியேட்ட*ர் உருவானால் மாண*வ*ர்க*ள் க*ட் அடித்துகொண்டு ப*ட*த்திற்கு செல்வார்க*ள் என்ப*து அவ*ர்க*ள் வாத*ம்..என*வே கார்ப்ப*ரேஷ*னில் ப*ர்மிஷ*ன் கிடைப்ப*தில் இழுப*றியாக* இருந்த*து.. எம்ஜிஆர் அந்த* ப*ள்ளி முத*ல்வ*ரை அழைத்து உங்க*ள் ப*ள்ளிக்குதான் இர*ண்டு வ*ழி உள்ளதே. ம*ற்றொரு வாச*லை உப*யோகியுங்க*ள்..தியேட்ட*ர் எதிர்புற* வாச*லை அவ*சிய*த்திற்கு மட்டும் உப*யோகியுங்க*ள்..மேலும் க*ட் அடித்து ப*ட*ங்கள் செல்ல வேண்டும் என ஒரு மாண*வ*ன் நினைத்தால் எதிரில் உள்ள தியேட*ருக்கு எப்ப*டி செல்வான்..பாண்டி ப*ஜார் அருகில் வேறு தியேட்ட*ர்க*ளே இல்லையா? என*வே ந*ம்மையெல்லாம் சிரிக்க* வைத்த* நாகேஷ் அவ*ர்க*ளை நாம் அழ*விட*லாமா? என்று அன்போடு கேட்க* அப்போதே அந்த* பிர*ச்ச*னை தீர்க்க*ப்ப*ட்ட*து.

  1980ல் நாகேஷ் உட*ல் ந*லிவுற்று உயிருக்கு ஆப*த்தான நிலையில் ம*ருத்துவ*ம*னையில் இருந்தார். எம்ஜிஆர் மருத்துவ*ம*னைக்கு சென்று வெளிநாட்டிலிருந்து ம*ருந்துக*ளை உட*னே வ*ர*வ*ழைத்து நாகேஷை காப்பாற்றினார்.

  நாகேஷ் எம்ஜிஆரைப்ப*ற்றி கூறிய*து " எம்ஜிஆருக்கு அவ*ரே ஒரு விள*ம்ப*ர*ம்தான்! த*னியாக வேறு விளம்ப*ர*ம் தேவையில்லை என்று".........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #542
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  #கேள்வி : தாங்கள் வரி பாக்கிக்காக மத்திய அரசிடம் தங்களுடைய வீட்டை அடகு வைத்திருக்கிறீர்கள். தாங்கள் ஒரு வார்த்தை கூறினால் தங்களுடைய ரசிகர்கள் நொடிப்பொழுதில் அந்தக் கடனை அடைத்து விடுவார்கள் தாங்கள் இதற்கு ஆவன செய்வீர்களா ?

  #புரட்சித்தலைவரின் #பதில் : எனக்கு என் உடம்பில் இன்னும் உழைக்கும் சக்தி இருக்கிறது. வேலையும் கிடைக்கிறது. பணமும் வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் கடனைத் தீர்க்க வரும் நீங்கள், தமிழக அரசின் கடன்காரர்களாக லட்சக்கணக்கான நெசவாளர்கள், விவசாயிகள் துன்பச் சூழ்நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்களே , அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமா ? அதற்கு என்ன செய்வது என்பது பற்றி, என் உடன்பிறப்புகளோடு ஆலோசித்து வருகிறேன். விரைவில் நற்காலம் மலரும் அவர்களுடைய கடனை தீர்ப்போம்.

  நான் தமிழகத்திலே மூன்று, நான்கு பருவத்திலே அடியெடுத்து வைத்தபோது இத்தகைய வீடும் இல்லை. காரும் இல்லை. வேறு எந்த வசதியும் எனக்கில்லை. எனக்கு இருப்பதாக சொல்லப்படுகின்ற வீட்டையோ, சொத்துக்களையோ இந்தியப் பேரரசு எடுத்துக்கொள்ளுமானால் , அந்த வீடு அலுவலகமாக மாறி, அதில் குடியேறுபவர்களோ , வசிப்பவர்களோ தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியுண்டு. எனவே ஏமாற்றம் அடையும் நிலையில் நானில்லை.

  - நாடோடி மன்னன், ஆகஸ்ட் 1975

  கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

 4. #543
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  நன்றி மறவா நல்ல மனம் போதும் அதுவே என் மூலதனம் ஆகும்
  எம்ஜிஆர்

  சத்தியா தாய் ஈன்றாள்
  தமிழ் தாய் ஆளாக்கினாள்
  அந்த தமிழ் தாய்க்கு ஒரு பல்கலை கழகம் வேண்டும் என தமிழ் அறிஞர்கள் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பதாம் ஆண்டு முதலே கோர எவ்வளவோ ஆட்சிகள் வந்தன எத்தனையோ முதல்வர்கள் வந்தார்கள் வரவில்லை தமிழுக்கு பல்கலைகழகம் தமிழ் அன்னை வளர்த்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வர் ஆகிறார் அழைக்கிறார் அறிஞர்களை உடனே அமையுங்கள் தமிழ் அன்னைக்கு பல்கலைகழகம் ஐநூறு ஏக்கர் வேண்டும் என கேட்க அன்னைக்கு ஆயிரம் ஏக்கரில் மிகபிம்மாண்டமாக கட்டுங்கள் மேல் பார்வைக்கு தமிழ் நாடு என குறிக்கும் வகையில் கட்டங்கள் கட்டுங்கள் என கட்ட வைத்து திறக்கிறார் எம்ஜிஆர்

  பெண்களை தெய்வமாக தன்னை வாழவைத்த பெண்களுக்கு தனியாக ஒரு பல்கலை கழகம் வேண்டும் என அமைக்கிறார் அதற்க்கு தன் தாய்யின் பெயரை சூட்டவில்லை எம்ஜிஆர் ஏழைக்காக வாழும் அன்னை தெரசா பெயர் சூட்டி அவரையே திறக்க வைக்கிறார் அதில் காஷ்மீர் முதல்வர் கலந்து கொள்ள் மதம் தாண்டி ஒரு மனிதநேய சங்கமத்தில் அன்னை தெரசா பல்கலை கழகம் தொடங்கியது எம்ஜிஆரால்

  கன்னியாகுமாரியில் ஐயன் வள்ளுவனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க அன்றைய பிரதமர் மொராஜி தேசாயயை கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் எம்ஜிஆர்
  ஆண்டுகள் பல ஆனதால் எம்ஜிஆருக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆகி திருவள்ளுவர் சிலை திறக்க எம்ஜிஆர் கல்வெட்டை நீக்கி விட்டு

  சுயநலம் இல்லாமல் தற்ப்பெருமை இல்லாமல் மனிதநேயத்தோடு ஒரு பொற்கால ஆட்சியை எம்ஜிஆர் தந்ததால் இன்றும் உலகம் எங்கும் எம்ஜிஆர் புகழ் பாடபடுகிறது

  வாழ்க எம்ஜிஆர் புகழ்.........

 5. #544
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  தமிழக அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு சட்டமன்ற பொது தேர்தலிலும் எதிர்க் கட்சியை தொடர்ந்து பலமிழக்க செய்த ஒரே தலைவர் என்ற பெருமையை நம் மக்கள் திலகம் அவர்கள் பெற்றுள்ளார்.

  1977 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 48 இடங்களை கைப்பற்றியது.

  1980 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 37 இடங்களை கைப்பற்றியது.

  1984 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 28 இடங்களை கைப்பற்றயது.

  புரட்சித் தலைவர் அவர்கள் ஆட்சி செய்த போழ்து, எதிர்க் கட்சியாக இருந்த தி.மு.க. பலம் வாய்ந்ததாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

  ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !.........

 6. #545
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  #புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.

  சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார்.

  அவர்கள் திறமையாளர்களாக இருந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

  மக்கள் திலகம் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘#ஆயிரத்தில்_ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல்.

  அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

  அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.

  ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று #எம்ஜிஆர் கூறியதில்லை.

  'எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன்' என்று அந்த கவிஞரும் சொன்னதில்லை.

  மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர்.

  அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

  ‘#ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது.

  படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

  அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

  ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

  அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

  எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘#மாட்டுக்கார_வேலன்’ படத்தில்,

  ‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

  என்ற இனிமையான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

  ‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

  -என்று வரும்.

  பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

  -என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன்.

  நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

  கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

  ‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

  நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

  ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார்.

  இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

  எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார்.

  ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

  எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

  ‘#அரசவைக்_கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன்,

  ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

  அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார்.

  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.

  கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.

  கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்.,

  ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

  எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர்.

  என்றாலும்கூட கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

  சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

  ‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

  -என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

  எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘#நீதிக்குப்_பின்_பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

  ‘தேக்கு மரம் உடலைத் தந்தது

  சின்ன யானை நடையைத் தந்தது

  பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

  பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

  இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

  எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘#மன்னாதி_மன்னன்’ படத்தில் அவர் எழுதிய

  ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்.

  காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்..........

 7. #546
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,453
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*07/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
  --------------------------------------------------------------------------------------------------------
  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சி உங்களுடைய பேராதரவுடன்**மனமார்ந்த , நெஞ்சார்ந்த பாராட்டுக்களுடன் தொடர்கிறது .சென்னையில் ஒரு காலத்தில் நாடகப்புலி என்று பேசப்பட்ட திரு.கே.பி.கேசவன் நடித்த படம் திரை அரங்கில் வெளியானது .அதை பார்க்க செல்கிறார் .படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டு, கைகளை பிடிக்கிறார்கள், கன்னத்தை கிள்ளுகிறார்கள் .ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட ,எம்.ஜி.ஆர்*அவரை தன் தோளில் சுமந்து கொண்டு வெளியே வந்து, ஒரு டாக்சியை பிடித்து*அவரை பாதுகாப்பாக ஏற்றி அனுப்புகிறார் .எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைப்படம் சில வருடங்கள் கழித்து வெளியாகிறது .எம்.ஜி.ஆருடன், கே.பி.கேசவன் படம் பார்க்க செல்கிறார் . இடைவேளையில் ரசிகர்கள் எம்.ஜி.ஆரை பார்த்ததும் மொய்த்துவிடுகிறார்கள் .அவரை கட்டிப்பிடிக்கிறார்கள்,கன்னத்தில் கிள்ளுகிறார்கள்,கைகளை தொட்டு பார்க்கிறார்கள் .அன்பு தொல்லையால் அவதிப்படுகிறார் . ஆனால் அதே ரசிகர்கள் கே.பி.கேசவனை கண்டு கொள்ளவேயில்லை .எம்.ஜி.ஆர். அருகில் இருந்த கேசவனை பார்த்து ,பழைய நினைவுகளை நினைத்து சிரித்துக் கொண்டாராம் .வாழ்க்கையில் யாருக்கும்* எந்த விஷயமும், எப்பொழுதும் நிரந்தரம் இல்லை .எந்த புகழும், பெருமையும், பெயரும் யாருக்கும், எப்பொழுதும் கிடைத்துக் கொண்டு இருக்காது .எப்பொழுது வரும்,நிலைக்கும்* எப்பொழுது போகும் ,என்பது நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்து* தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்கிற தொடரில் எழுதியவர் மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வையும், தாழ்வையும் சமமாக பாவிக்க தெரிந்த அதிசயிக்கத்தக்க திறன், அனுபவத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர்.


  1980ல் எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் மத்திய அரசான காங்கிரஸ் அரசால்*தி.மு.க. வின் நிர்பந்தத்தால் கலைக்கப்படுகிறது . அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.*ராமாவரம் தோட்டத்தில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி திரைப்படம்*பொதிகை டிவியில் ஒளிபரப்பானதை பார்த்துக் கொண்டிருந்தார் .அரசு அதிகாரிகள் மெல்ல தயங்கி தயங்கி எம்.ஜி.ஆரிடம் சென்று அவர் காதில் விவரத்தை தெரிவிக்கிறார்கள் .பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்த ஆட்சியை கலைத்துவிட்டார்களா, வீட்டில் என்ன இனிப்பு இருக்கிறது .உடனே*அனைவருக்கும் இனிப்பு வழங்குங்கள். கூடிய சீக்கிரத்தில் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி மீண்டும் அமையும் .என்று கூறி தொடர்ந்து படம் பார்க்கிறார் .


  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் எப்பொழுதும்*அதில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் .உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக குன்னக்குடி வைத்யநாதனை இசை அமைக்க ஒப்பந்தம் செய்துவிட்டார் .படத்திற்கு பாடல்கள் எழுத கவிஞர் கண்ணதாசன் வரவழைக்கப்படுகிறார் .பாடல்கள் எழுதுவது பற்றியும் ,இசை அமைப்பாளர் பற்றியும் எம்.ஜி.ஆருடன் பேசி கொண்டிருந்த கண்ணதாசன்*வீட்டுக்கு போய் எழுதி கொண்டுவருகிறேன் என்று புறப்பட்டார் . கண்ணதாசனுக்கு எப்பொழுதும் வெள்ளை மனம் .அதாவது உள்ளதை உள்ளபடியே சொல்லும் குணம் உண்டு . வீட்டுக்கு சென்ற கண்ணதாசன் எம்.ஜி.ஆரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தின் பாடல்கள் ,இசை அமைப்பு குறித்து உங்களிடம் தனியே பேசவேண்டும் என்று கேட்டு கொண்டார் .இருவரும் சந்தித்தனர் .அப்போது கண்ணதாசன் எம்.ஜி.ஆரிடம் ,நீங்கள் எடுக்கப்போகும் படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது . மேலைநாட்டு இசைக்கு* முன்னுரிமை தரவேண்டியது அவசியம், அதற்கு குன்னக்குடி வைத்யநாதன் சரிப்பட்டு வரமாட்டார் . தமிழ் திரைஉலகில் உச்சத்தில் உள்ள இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால்தான் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியும் .ஆகவே என் கருத்தை நன்றாக யோசித்து*முடிவு செய்யுங்கள். உங்களது படம் நன்றாக வரவேண்டும் .இசை, பாடல்கள் நன்றாக அமையவேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்கிறேன் குன்னக்குடி வைத்யநாதனுக்கு வேண்டுமென்றால் வேறொரு படத்திற்கு வாய்ப்பு அளியுங்கள் .என் மனதில் பட்டதை வெளிப்படையாக, உங்களின் நன்மைக்காக சொல்கிறேன் .தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார் .*.அதன்பிறகு இருவரும் ஒரு மாதகாலம் சந்திக்கவேயில்லை . கண்ணதாசனின் நண்பர்கள் கண்ணதாசனை கடிந்துகொண்டார்கள் .இவருக்கு இது வேண்டாத வேலை.எம்.ஜி.ஆர். யாரையாவது வைத்து இசை அமைக்கட்டும் .கவிஞருக்கு*இந்த படத்தில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்க போவதில்லை என்று பேசி கொண்டார்கள் . ஆனால் ஒரு மாத காலத்திற்கு பிறகு கவிஞர் கண்ணதாசனை*தொலைபேசியில் அழைத்து எம்.ஜி.ஆர். பேசினார் . நீங்கள் அளித்த யோசனைகளை பற்றி சிந்தித்து பார்த்தேன் . உங்களின் கருத்தும், வாதமும் சரிதான் .நல்ல நேரத்தில் அளித்த யோசனைக்கு நன்றி என்று கூறி பாடல்களை விரைவாக எழுதும்படியும் , இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்து உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார் . ஏற்கனவே ஒப்பந்தம் செய்த இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதனை அழைத்து ,உங்களுக்கு வேறு படத்திற்கு கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் .இந்த படத்திற்கு எம்.எஸ்.வி. இசை அமைக்கட்டும் என்று கூறி ,சில ஆண்டுகள் கழித்து ஏ.பி.என்.தயாரித்த நவரத்தினம் படத்திற்கு வாய்ப்பு அளித்தார் .உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தக்க சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு யோசனை தெரிவித்தார் கண்ணதாசன் .அதே சமயத்தில் தான் ஒப்பந்தம் செய்த இசை அமைப்பாளரை மாற்ற மனமில்லாமல் வேறொரு படத்திற்கு வாய்ப்பு அளித்ததோடு , கவிஞர் கண்ணதாசன் அளித்த சரியான*யோசனையையும் நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது .


  அண்ணா பத்திரிகை நாராயணன் மற்றும் சில பத்திரிகையாளர்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார் எம்.ஜி.ஆர். அவர்கள் எல்லோரும் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்தனர் .சிறிது நேரம் பேசிய பிறகு யாருடைய கையிலும் அண்ணா உருவம் பொறித்த பச்சை குத்தப்படாததை எம்.ஜி.ஆர். அறிந்து கொள்கிறார் .நீங்கள் எல்லாம், ஒருவரும்* பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் கொள்வதில்லை போலும் . அப்படித்தான் பத்திரிகையாளர்கள் இருக்க வேண்டும் என்று பாராட்டினாராம் . பத்திரிகையாளர்கள் யாவரும்* எந்த விஷயத்திலும், எந்த நேரத்திலும் ஒரு சார்பு நிலையில் இருக்க கூடாது . நடுநிலையில்தான் இருக்கவேண்டும் என்று அறிவுரை சொன்னாராம் .


  எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான ஒரு மூத்த அமைச்சர் அவருடைய பேச்சுக்கள் அண்ணா பத்திரிகையில் பிரசுரம் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் .இந்த செய்திகள் வெளிவர சில நாட்கள் தாமதம் ஆவதால் அமைச்சருக்கு கோபம் வருகிறது .ஒருநாள் ஒரு கூட்டத்தில் அண்ணா பத்திரிகையை சார்ந்த சில ஊழியர்கள் முதல் வரிசையில் அமர்ந்துள்ளார்கள்*அந்த சமயம் அந்த மூத்த அமைச்சர் ,பத்திரிகை ஊழியர்களிடம் ,இப்போதெல்லாம் உங்கள் பத்திரிகையில் வரும் செய்திகள் நன்றாக இல்லையாமே என்றாராம் .எந்த பத்திரிகை என்று ஊழியர்கள் கேட்க, அண்ணா பத்திரிகை பற்றித்தான் சொல்கிறேன் என்றாராம் பலர் முன்னிலையில். ஊழியர்கள் முகம் வாட்டம் கொள்கிறது .இந்த சம்பவம் பற்றி எம்.ஜி.ஆர்**எப்படியோ .தகவல்களை அறிந்து கொள்கிறார் . மறுநாள் அந்த மூத்த அமைச்சர்* பத்திரிகை அலுவலகம் வரும்போது எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார் ..எம்.ஜி.ஆரை பார்த்ததும் அமைச்சர் அதிர்ச்சியடைந்து, நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் நமது நண்பர்கள்தானே என்று கொஞ்சம் ஜாலியாக பேசி விட்டேன் என்றுவருத்தம் தெரிவித்தாராம் .அப்போது எம்.ஜி.ஆர். கூறியதாவது,பத்திரிகையாளன் பத்திரிகையாளன்தான் எந்த கட்சியிலே, எந்த பத்திரிகையிலே,எந்த ஊடக அலுவலகத்தில்**வேலை பார்க்கிறான்* என்பது முக்கியமல்ல பத்திரிகையாளனுக்கு ஒரு மரியாதை இருக்கிறது .மரியாதைக்காவது இப்படி நீங்கள் பேசியிருக்க கூடாது என்று சொன்னவுடன் அமைச்சர் மிகவும் வருத்தப்பட்டாராம் .ஆகவே, எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்து, தன் கட்சி பத்திரிகை அலுவலகத்தில் , தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மீது அபாண்டம் கற்பிப்பதை அனுமதிக்க முடியாது என்கிற வகையில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள்,திறமை வாய்ந்தவர்கள், உண்மை ஊழியர்கள் ,நல்ல செய்திகளை பிரசுரம் செய்யக்கூடிய புத்திசாலிகள்,என்பதை மதித்து, அமைச்சரிடம் வலியுறுத்தி சொல்லி ,ஊழியர்களிடம் வருத்தம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதுதான் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் சிறந்த பண்புகளில் ஒன்று .


  *.ஆகாயத்தில் இருந்து ,விழுந்து கிடைக்கப்பெற்ற ஒரு சூரிய சிதறல்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் .அந்த சூரிய சிதறல்களில் இருந்து நாம் சில நட்சத்திரங்களை பொறுக்கி நம்பிக்கை வாசல்களை திறந்து வைக்கிறோம்.*அந்த நம்பிக்கை வாசல்களில் இருந்து நடந்துகொண்டு, நாம் வெற்றியை நோக்கி பயணப்படுவதற்கான வழிகாட்டியாகத்தான் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சியை* தொடர்ந்து வருகிறோம் . தொடர்ந்து மற்ற செய்திகளை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .

  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  ----------------------------------------------------------------------------------
  1.வீரமகன் போராட, - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்*

  2.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் - நினைத்ததை முடிப்பவன்*

  3.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

  4.லில்லி மலருக்கு கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன்*

  5.எம்.ஜி.ஆர்.-எம்.ஆர்.ராதா உரையாடல் - சந்திரோதயம்*

  6.நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர்.பேட்டி - அன்பே வா*

  7.பேசுவது கிளியா ,இல்லை பெண்ணரசி மொழியா-பணத்தோட்டம்*  .**

 8. Thanks suharaam63783 thanked for this post
 9. #547
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  முதலாவதாக, " மாடி வீட்டு ஏழை " படத்திற்கான காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே படம் பிடிக்கப்பட்டன.
  இரண்டாவதாக, படத்தில் நடிக்க கதா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அவர் சரியாக நடிக்க வில்லை என்ற காரணத்துக்காக படத்திலிருந்து விலக்கப்பட்டிருக்க முடியாது. வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்க வாய்ப்புண்டு.
  மூன்றாவதாக நடிகர் சந்திரபாபு தனது சொந்தப் பணத்தில் படம் எடுக்க வில்லை. நிதியுதவி அளித்த ஒரு முதலீட்டாளர் அளித்த பணத்தில் தான் படம் எடுத்தார்.
  இது குறித்து, நடிகர் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ரவீந்திரன் என்பவர் தெரிவித்த கீழ்க்கண்ட தகவல் :
  "மாடி வீட்டு ஏழை" படத்துக்கு நிதியுதவி செய்த முதலீட்டுதாரரின் குடும்பத்தாருடன் சந்திரபாபு கொண்ட தொடர்பினால், அந்த முதலீட்டுதாரர் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நிகழ்ந்தது. விஷயம், நமது பொன்மனச்செம்மல் அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்த போது, சந்திரபாபுவை கண்டித்தார். சந்திரபாபு அதை அலட்சியபடுத்தியதின் விளைவே - ஒன்றிரண்டு காட்சிகளுடன் எடுக்கப்பட்ட "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் கைவிடப்பட்டது.
  சந்திரபாபுவின் சொந்த சகோதரர் ஒருவர் பல மாதங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் தெரிவித்த தகவல் வருமாறு :
  "ஒரு கிருஸ்துமஸ் திருநாளன்று, நடிகர் சந்திரபாபு பட வாய்ப்புக்கள் இன்றி சோகத்தில் தனிமையில் வாடிய போது, மக்கள் திலகம் அவர்கள் தன் உதவியாளர் மறைந்த குஞ்சப்பன் அவர்கள் மூலம், ஒரு பெரிய பார்சலை நடிகர் சந்திரபாபுவுக்கு கொடுத்தனுப்பினார். பொன்மனசெம்மலின் வாழ்த்துக்களுடன் கூடிய அந்த கிருஸ்துமஸ் தின அன்பளிப்பாகிய பெரிய பார்சலை பிரித்து பார்த்ததில் புத்தாடையுடன், கேக் மற்றும் இனிப்புக்களுடன், பெருமளவு ரொக்கத் தொகையும் காணப்பட்டது.
  சந்திரபாபு, அந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அடைந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
  அன்றையை கிறிஸ்துமஸ் தினமே, சில மணி நேரம் கழித்து, தயாரிப்பாளர் - இயக்குனர் ராமண்ணா அவர்கள், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது "பறக்கும் பாவை" படத்துக்கு, சின்னவர் (எம். ஜி. ஆர்.) சிபாரிசின் பேரில் அவரை ஒப்பந்தம் செய்யவிருப்பதாகவும், அதற்கு சம்பளமாக, சின்னவரின் ஏற்பாட்டின்படி ரூபாய் ஒரு லட்சம் (இத்தொகை அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தொகை) தரவிருப்பதாகவும் கூறி, மேலும் அவரை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
  இதற்கு முன்பு இந்த தலைப்பில் நடிகை டி.வி. குமுதினி, இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன், கவியரசர் கண்ணதாசன் மற்றும் நடிகை பானுமதி ஆகியோருக்கு மக்கள் திலகம் உதவிய நிகழ்ச்சியினைப் பற்றி குறிப்பிட்டு, இத்திரியில் வெளியிட்டு, பார்வையிடுவோரின் கவனத்துக்கு கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் சந்திரபாபு அவர்களுக்கு நமது மக்கள் திலகம் உதவிய சம்பவம் ஒன்றினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
  ================================================== ==== ===============
  நடிகர் சந்திரபாபு ஷீலா என்கின்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார். மணமான சில நாட்களில், கணவன் - மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், மணமாவதற்கு முன்பு தனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை சந்திரபாபு கூறியிருக்கிறார். அந்த பெண்ணும், மணமாவதற்கு முன்பு தனக்கும் இரண்டொரு இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். வந்தது கோபம் சந்திரபாபுவுக்கு மூர்க்கனாக மாறி அந்த பெண்மணியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஷீலா என்கின்ற அந்த பெண்மணியும் எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்க வில்லை. இரவு நேரம். என்ன செய்வதென்று அறியாத ஷீலா தற்கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இருந்தாலும் சந்திரபாபு அவர்கள் அதிகமாக மதிக்கும் இயக்குனர் சுப்பிரமணியம் (நாடோடி மன்னன் - இயக்குனர் மேற்பார்வை) அவர்களை தொடர்பு கொண்டு தனது முடிவை சொல்லி அழுதிருக்கிறார். அவர் உடனே ஒரு ஆளை அனுப்பி ஷீலாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து "எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம், முதலில் நீ தூங்கு" என்று சமாதனம் செய்தார். மறுநாள் சந்திரபாபுவை அழைத்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்திருக்கிறார் சந்திரபாபு இணங்கவில்லை. சுப்பிரமணியம் தொடர்ந்து வற்புறுத்தவே, நீங்கள் வற்புறுத்தினால் நான்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறியிருக்கிறார். வேறு வழியின்றி, இயக்குனர் சுப்ரமணியம் அவர்கள் ஷீலாவிடம் "நடந்ததை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்குவதை தவிர உனக்கு வேறு வழியில்லை. லண்டனில் உள்ள உன் அன்னைக்கு செய்தி அனுப்புகிறேன். அவர்கள் வந்து அழைத்துப்போகும் வரை நீ இங்கேயே என் மக்களோடு மக்களாக இருக்கலாம் என்று கூறி சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து ஷீலாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அந்த ஒரு மாத காலமும் இயக்குனர் சுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினர் ஷீலாவை கண் போலக் காத்தார்கள்.
  ஆதாரம் : வலம்புரி சோமநாதன் எழுதிய "தமிழ்ப்பட உலகின் தந்தை கே சுப்பிரமணியம்" என்ற நூல்.
  நாகரீகம் கருதி சந்திரபாபுவின் வேறு சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.
  ================================================== ==============================
  சந்திரபாபுவின் இது போன்ற நடவடிக்கைகள் பிடிக்காமல், நமது பொன்மனச்செம்மல் அவர்களுக்கும், - சந்திரபாபுவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், சந்திரபாபுவின் சொந்தப் படமாகிய "மாடி வீட்டு ஏழை" என்ற படத்தில் தொடர்ந்து நடிக்க தயக்கம் காட்டி வந்தார் நம் எழில் வேந்தன் எம் ஜி ஆர். அவர்கள். அதற்குள், நமது மக்கள் திலகத்தின் வளர்ச்சியிலும், புகழிலும், பொறாமை கொண்ட சிலர், உண்மை நிலவரத்தை திரித்து, தமிழ் திரைப்பட உலகில் வதந்திகளை உலாவ விட்டனர். இதில் சந்திரபாபுவின் பங்கு பெருமளவு உண்டு.
  ஆனால் இவற்றையெல்லம் மறந்து விட்டு, சந்திரபாபு அவர்கள் படங்கள் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவருக்கு, பறக்கும் பாவை, அடிமைப்பெண், கண்ணன் என் காதலன் போன்ற தனது படங்களில் தொடர் வாய்ப்புக்கள் அளித்து உதவினார். அடிமைப்பெண் படத்துக்காக நடிக - நடிகையர் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அப்போது சந்திரபாபுவும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் அவரது காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டும் கூட, சென்னை திரும்பும் வரை அவருக்கு, சம்பளம் போக தினசரி ஒரு பெரும் தொகை வழங்கி, அவரை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டார் நம் புரட்சித் தலைவர் அவர்கள்..........

 10. #548
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 100 படங்களின் நெகடிவ் பத்திரமாக தமிழக அரசின் பெட்டகத்தில உரிய பாதுகாப்புடன் வைக்கப்படும் .
  .
  1957 முதல் 1987 வரை மக்கள் திலகம் பங்கேற்ற அரசியல் கூட்டங்களின் நிழற் படங்கள் , கலந்து கொண்ட விழாக்களின் நிழற் படங்கள் அனைத்தும் பிரமாண்ட ஸைசில் டிஜிட்டல் படங்களாக மாற்றி பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .

  தமிழக அரசின் செய்தி துறை வசம் உள்ள மக்கள் திலகத்தின் 11 ஆண்டு அரசியல் விழாக்கள் வீடியோ பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு மக்களுக்கு காணொளியாக காண்பிக்கப்படும் .

  மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் பொது மக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும் .

  அதி நவீன வசதிகள் கொண்ட ''மக்கள் திலகம் எம்ஜிஆர் ''இலவச மருத்துவ மனை 234 சட்ட மன்ற தொகுதிகளிலும்
  நிறுவப்படும் .

  மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெகா சிறப்பு மலர்

  இப்படிப்பட்ட அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு நாளே மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் கனவு நிறைவேறும் நாள் .

  கனவு நிறைவேறுமா ?!.........

 11. #549
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

  ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

  தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

  நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

  அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

  பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

  எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.

  - தி இந்து ..........

 12. #550
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,586
  Post Thanks / Like
  MGR the legend..��������

  இவர்கள் #எதிர்காலத்தூண்கள்

  தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...

  போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...

  டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!

  'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
  'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...

  உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.

  பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...

  அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...

  முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???

  அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...

  மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...

  வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்..................

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •