Page 141 of 210 FirstFirst ... 4191131139140141142143151191 ... LastLast
Results 1,401 to 1,410 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1401
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்_ஜி_ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.

    சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்

    ’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
    உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.

    புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.

    ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
    “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”

    சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்

    சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
    சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’

    நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”

    கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
    வேலாடுது”

    பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:

    திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”

    பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”

    காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”

    பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
    கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
    கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
    கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.

    solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
    ’உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக’
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
    ‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.

    அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    (என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
    பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
    உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.

    ”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.

    ’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’

    உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.

    ”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
    இது தான் எங்கள் வாழ்க்கை
    தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
    கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”

    ”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”

    “தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”

    அதே போல உற்சாகத்தையும்.

    ஏவிஎம் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் சம்பத் அன்று ”பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா ” பாடலின் பிரத்யேக விசேஷத்துவம் பற்றி சொல்வார் “ ’பேசுவது கிளியா’ பாடலில் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளின் இனிமையும் Sychronize ஆனது போல எந்த பாட்டுக்கும் ஆனதேயில்லை.”

    ”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”

    “முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”

    ”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.

    வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”

    குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
    நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”

    சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
    ’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
    மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
    முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
    அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
    ஆடப்பிறந்தவளே ஆடி வா!’

    ‘நான் செத்துப் பிழைச்சவண்டா
    எமனை பாத்து சிரிச்சவன்டா’

    சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
    முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.

    மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.

    தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
    “ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
    அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்

    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்

    ”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.

    தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது

    ‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
    அவளே என்றும் என் தெய்வம்’

    ’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
    தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’

    ’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’

    காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
    ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
    உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’

    ரொமான்ஸ்
    ‘காதல் ரோமியோ கண்ட நிலா
    கன்னி ஜூலியட் சென்ற நிலா
    பாவை லைலா பார்த்த நிலா
    பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’

    ’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
    நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’

    ‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
    பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’

    ‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
    கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
    கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
    ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
    பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
    ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
    வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’

    டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
    “ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

    ”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”

    “நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
    தலைவன் வாராது காத்திருந்தாள்”

    ஜேசுதாஸ் பாடல்கள்
    ”விழியே கதையெழுது
    கண்ணீரில் எழுதாதே’

    ”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
    ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”

    ”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
    செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.

    ”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
    அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
    ஒன்றே குலம் என்று பாடுவோம்
    ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”

    எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்

    ராஜநாயகம்............NS...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "படகோட்டி"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்.........
    ------------------
    இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள்

    மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம்

    தான் எவ்வளவு முயன்றும் இவர்களின் அறியாமையை போக்க முடியவில்லையென்ற ஆதங்கம்

    உழைத்தவர்கள் தெருவில் நின்று விட்ட விரக்தி

    தன் ஆற்றாமையை , மனக்குமுறலை முகபாவங்களாலும் தன் நடையினாலும் வெளிக் கொணரும் விதம் அபாரம்

    வார்த்தைகளையும் , வாக்கியங்களையும்
    தன் உடல் மொழியால் நம்மை முழுமையாக உணரவைக்கும் நடிகர் உலகிலேயே எம் ஜி ஆர் ஒருவர் தான் .

    குறிப்பு : இப்பாடலில் ஒரு முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று அம்முதியவருக்கு மக்கள் திலகம் பணம் இரண்டாயிரம் கொடுத்து உதவினார் ....Hyd...

  4. #1403
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள்

    மொழி எல்லைகளைக் கடந்து நின்ற எம்.ஜி.ஆர் மத எல்லைகளையும் கடந்து நின்றார். அவர் திமுகவில் இருந்த வரை இந்துச் சமயப் பழக்க வழக்கங்களை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. அண்ணா அவர்கள் சொன்ன ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்ற கொள்கையைப் பின்பற்றினார். அதுபோல கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களைத் தன் படங்களில் காட்டினாலும் அவற்றின் கொள்கைகளைப் பெரிதாக ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை.

    எம்.ஜி.ஆர்கிறிஸ்தவ மதமும் மக்களும்

    எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம் படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும். ரிக்*ஷாக்காரன் படத்தில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப் பிடித்து நிற்கும் காட்சி வரும்.

    எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு. பரமபிதா என்ற பெயரில் அவரை இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை சவுக்கால் அடித்து அவர் தலையில் முள்கிரீடம் வைத்து அழுத்துவதை ரசிகர்கள் காணப் பொறுக்க மாட்டார்கள். திரையைக் கிழித்து விடுவர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும் படம் கேரளாவில் பலர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி கொளுத்துகிறார்களா’ என்று சிரித்தாராம்.

    எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும்போது அந்த வீட்டில் திருவள்ளுவர் பாரதியார் அறிஞர் அண்ணா ஆகியோர் படங்களோடு இயேசு கிறிஸ்து படத்தையும் மாட்டியிருப்பார். இதனால் கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட் கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர் தனிக் கட்சி ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.

    எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நோவா அவரைப் பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும் சம்மதித்தார். அப்போது நோவா அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர் உடனே செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆர் காலத்தில்தான் சிறை கைதிகளின் அறைகளுக்குக் கழிப்பறை வசதி கிடைத்தது. அதுவரை அறையில் வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள் இரவில் சிறுநீர் மலம் கழித்தனர். மறுநாள் அதை கொண்டு போய் கொட்டிவிட்டு சுத்தம் செய்து கொண்டு வந்து வைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில் ஒரு மணி வரை உயிரோடு இருந்ததாக சில செய்திகள் வந்த போது கிறிஸ்தவர்கள் பலர் அவர் கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே கருதினர். எம்.ஜி.ஆர் மீதிருந்த நன்மதிப்பு காரணமாக அவர் கிறிஸ்தவர் அதிகமாக வாழும் சாத்தான் குளம் தொகுதியில் நீலமேகம் என்ற இந்துவை நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர்.

    Published: யாழ் இணையம்.
    20 September 2017 வண்ணத்திரை.

    Posted : MG.Nagarajan
    2 December 2020 2:19 AM

  5. #1404
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #m_g_r. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

    புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

    ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

    இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

    சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

    கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

    வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

    எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

    மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

    பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

    பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

    கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

    பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

    மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்........ns...

  6. #1405
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தாய் சொல்லை தட்டாதே" தேவர் பிலிம்ஸில் புரட்சி நடிகரின் 2வது படம். பெயரிலே புதுமை. பாடலில் புதுமை+இனிமை. இசையில் எழுச்சி, நடிப்பில் புரட்சி என்று சகல அம்சங்களும் நிறைந்து வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற சமூகப்படம். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல.

    "ஆயிரத்தில் ஒருவனில்" நம்பியார் ஒரு கொள்ளைக்காரன் கப்பலையே கொள்ளையடித்து கொண்டு வரும் ஆற்றல் உன்னைத்தவிர வேறு யாருக்கு வரும் என்று தலைவரை பார்த்து கூறுவாரே! அதைப்போல அதுவரை வெளியான தமிழ்ப்படங்களின் வசூலை ("மதுரை வீரன்" "நாடோடி மன்னனை" தவிர்த்து.) தூக்கி தூர எறிந்து விட்டு புதிய வெற்றியை பதிவு செய்த படம். கூட வந்த வி.சி.அய்யனின் படம் கடலில் கவிழ்ந்த போதிலும் தலைவர் படம் வெற்றிக்கொடி ஏந்தி வீரபவனி வந்தது விந்தைக்குறியது. வி.சி.அய்யன் நடித்த 300 படங்களில் மதுரையில் நன்றாக ஓடிய படங்கள் இரண்டே இரண்டுதான்.

    ஒன்று "பாகப்பிரிவினை" மற்றொன்று "பட்டிக்காட பட்டணமா".
    இரண்டுமே மதுரை நேட்டிவிட்டியை மையமாக வைத்து எடுத்ததால் மதுரையில் மட்டும் இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியது. மற்றபடி ஸ்டார் வேல்யூ எல்லாம் கிடையாது. "பாகப்பிரிவினை" மட்டும்தான் அந்தக்காலத்தில் 100 நாட்களில் 2 லட்சத்தை தாண்டி வசூல் செய்த படமாகும். ஆனால் தலைவருக்கோ "மதுரை வீரன்" "நாடோடி மன்னன்" "தாய் சொல்லை தட்டாதே" "தாயைக் காத்த தனயன்" என்று ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்கள் எளிதில் 2 லட்சத்தை தாண்டி வசூலை பெற்றது.

    ஆனால் அய்யனின் மற்ற இழுவை படங்களில் வெள்ளி விழா இழுவையான "கட்டபொம்மன்" போன்ற படங்கள் கூட 2 லட்சத்தை தொடவில்லை. ஆனால் கைபிள்ளைகள் நிறைய படங்களுக்கு பட்டறை வசூலை தயார் செய்து கப்ஸாவை அரங்கேற்றி வருகின்றனர். வி.சி. அய்யனின் படங்களை 6 மாதம் 1வருடம் என பெரும் பொருட்செலவில் எடுத்த எல்லாவற்றையும் 15 நாட்கள் 25 நாட்களில் எடுத்த தலைவர் படங்கள் எல்லாம் கால்பந்தாடி தள்ளி விட்டு சென்றதால் கைபிள்ளைகள் கலக்கத்துடன் கப்ஸா வசூலை பட்டறை மூலம் தயாரித்து திருப்தி அடைந்து வருகின்றனர்.

    பிளாசாவில் சாதனையாக தொடர்ந்து 100 காட்சிகள் hf ஆன படம். கைபிள்ளைகள் "கட்டபொம்மன்" என்பார்கள்,"பாவமன்னிப்பு" என்பார்கள் "பாசமலர்" என்பார்கள் "தாய் சொல்லை தட்டாதே" வெற்றியின் ஆழத்தை உணராதவர்கள். 1961 ம் ஆண்டிலே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தைரியமிருந்தால்
    "பாவ மன்னிப்பு" "பாச மலர்" வசூலை வெளியிடுங்கள் கைபிள்ளைகளே.

    "தாய் சொல்லை தட்டாதே" சென்னையில் குறுகிய காலத்தில் 7 லட்சத்தை கடந்து சாதனையை வெளிப்படுத்தியது.
    ஆனால் "பாவமன்னிப்பு" சென்னையில் 7 லட்சத்தை தொடவில்லை. இவ்வளவுக்கும் சாந்தியில் 177 நாட்கள் ஓடி ரூ4,01,696.46 வசூல் பெற்றும் 7 லட்சத்தை கடக்க முடியவில்லை.
    படம் பார்த்தவர்கள் சாந்தியிலேதான் அதிகம்.

    படத்தை பார்க்க வந்த கூட்டமல்ல. சாந்தி தியேட்டரை பார்க்க வந்த கூட்டம். சென்னைக்கு சென்று வந்த மக்கள் சாந்தியை சுற்றுலா தளமாக நினைத்து தியேட்டருக்கு சென்று வருவதையே பெருமையாக சொல்வார்கள். சென்னைக்கு சென்று வந்தவுடன் சாந்தியை பார்த்தாயா? என்பதுதான் சொந்தங்களின் முதல் கேள்வியாக இருந்தது. சாந்தியில் முதன்முதலாக வசூல் 4 லட்சத்தை தொட வைத்த பெருமை கைபிள்ளைகளையும்,
    சுற்றுலா பயணிகளையும் சேரும்.

    படத்தின் சிறப்புக்காக வந்த வசூல் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும். இதன் தொடர்ச்சியாக வந்த "பாலும் பழமும்" 3 லட்சத்தைதான் தொட்டது."பாலும் பழமும்" 127 நாட்களில் பெற்ற வசூல் ரூ 3,06,167.68. ஆனால் மதுரையில் "தாய் சொல்லை தட்டாதே" கல்பனாவில் வெளியாகி 126 நாட்களில் வசூலாக ரூ 2,33,251.08 பெற்று மாற்று நடிகரின் படத்தை தோற்று ஓட வைத்தது குறிப்பிடத்தக்கது.

    சிந்தாமணியில் வெளியாகி இருந்தால் வசூல் சிந்தாமல். சிதறாமல் கிடைத்திருக்கும். மேலும் வி.சி.அய்யனின் படங்கள் சிந்தாமணி சென்ட்ரல் நியூசினிமா அரங்கில்தான் ஓரளவு வசூலை காட்டுவார்கள்.ஆனால் தலைவர் படத்துக்கு தியேட்டர் பிரச்னை அல்ல.
    மீனாட்சி சினிப்பிரியா சிந்தாமணி சென்ட்ரல் கல்பனா அலங்கார் நியூசினிமா என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

    மாற்று நடிகரின்படங்களுக்கு போலியான பட்டறை வசூலை தயார் செய்து கைபிள்ளைகள் ஏமாற்றி வருகின்றனர். சென்னை சாந்தியில்
    "பந்தபாசம்" 55 நாட்கள் வசூல் ரூ 1,35,040.45 "அறிவாளி" "சாந்தி"யில் 28 நாட்கள் வசூல் ரூ
    84,087.61.பொதுவாக சாந்தியில் ஏற்படுத்திய வசூலை வேறு எந்த தியேட்டரும் பாதி கூட பெறுவது கடினம்.

    ஆனால் அதிலும் கைபிள்ளைகள் மதுரை வசூல் பட்டறையில் தயார் பண்ணிய "அறிவாளி" மதுரை சிந்தாமணியில் 77நாளில் ரூ 1,14,611.36 என்றும் "பந்தபாசம்" 77 நாளில் ரூ1,41,556.45 பெற்றதாக கண்மூடித்தனமாக கப்ஸா விடுகிறார்கள். "அறிவாளி" மதுரையில் ரூ 40,000, மும், "பந்தபாசம்". ரூ
    ரூ65,000 தான் வசூலாக பெற்றிருக்க முடியும்.

    சென்னை சாந்தியில் 10 லட்சத்துக்கு மேலே கணக்கு காட்டிய "தங்கப்பதக்கத்து"க்கு மதுரையில் கணக்கு காட்டிய தொகை ரூ 5 லட்சம்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும் கைபிள்ளைகளே. பொய் வசூல் தயார் பண்ணும் போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து கப்ஸாவை அவிழ்த்து விடுங்கள்.

    நன்றி: திரு சைலேஷ் பாசு............ksr.........

  7. #1406
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பிறந்த நாள் வாழ்த்து செய்தி .
    ------------------------------------------------
    மதுரை*மாநகர*மூத்த எம்.ஜி.ஆர். பக்தர்* திரு.எஸ். குமார்* அவர்கள்* 62 வது*பிறந்த நாள் விழா காணும்*இன்று (04/12/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* இன்று போல் என்றும் எல்லா*வளமும், எல்லா*நலமும்*பெற்று*பல்லாண்டு காலம் வாழ்ந்து, தொடர்ந்து* புரட்சி தலைவர்* அருமை, பெருமைகளை*புகழ்ந்து பாடுவார்* என்ற நம்பிக்கையுடன், என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சென்னை*சார்பிலும்*இனிய பிறந்த நாள்* நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் .**

    மதுரை*மற்றும் இதர மாவட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றிய நிகழ்ச்சிகள், மறு வெளியீடு , டிஜிட்டல் வெளியீடு திரைப்படங்கள் பற்றிய தகவல்களை*உடனுக்குடன் அனுப்பி, வாட்ஸ்*அப்*மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் . முகநூல்*ஆகியவற்றின் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*/ரசிகர்கள் /விசுவாசிகள் /அபிமானிகள்* அறிந்து கொள்ளும்*வகையில்*செயல்பட்டு வரும் திரு. எஸ். குமார்*அவர்கள் தொடர்ந்து*அவரது*பணியை*செவ்வனே செய்து வர வேண்டும் என்பது*அன்பு வேண்டுகோள் .

    இந்த நன்னாளில் , திரு.எஸ். குமார்*அவர்கள் இன்புற்று, இல்லற*வாழ்க்கையில்*மகிழ்ச்சியுடன்* இனிதே*வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை* தெரிவிக்கும்படி அனைத்து நண்பர்களையும் கேட்டுக்*கொள்கிறேன் .*

    ஆர். லோகநாதன்,ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .

  8. #1407
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் (27/11/20 முதல் 03/12/20* வரை ) ஒளிபரப்பான*பட்டியல்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    27/11/20* வசந்த்* - பிற்பகல் 1.30 மணி - தாயின் மடியில்*

    * * * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - என் கடமை*

    28/11/20* சன்* லைஃப் - காலை 11 மணி - கொடுத்து வைத்தவள்*

    * * * * * * * மீனாட்சி* - பிற்பகல் 1 மணி - வேட்டைக்காரன்*

    29/11/20- சன்* லைஃப் - காலை 11 மணி - மந்திரி குமாரி*

    * * * * * * * மீனாட்சி* *- மதியம் 12 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - தனிப்பிறவி*

    30/11/20 - சன் லைஃப் -* காலை 11 மணி - அன்பே வா*

    * * * * * * * * பெப்பேர்ஸ் -பிற்பகல் 2.30 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - குமரிக்கோட்டம்*

    01/12/20= வேந்தர் - காலை 10 மணி - தொழிலாளி*

    * * * * * * * முரசு* -மதியம் 12 மணி /இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

    * * * * * * * வேந்தர் - பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *சன் லைஃப் -மாலை 4 மணி - நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

    * * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - குடும்ப தலைவன்*

    02/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - திருடாதே*

    * * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*

    03/12/20* வேந்தர் - காலை 10 மணி - கன்னித்தாய்*

    * * * * * * * மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - காதல் வாகனம்*

    * * * * * * * சன் லைஃப் - மாலை 4 மணி - சந்திரோதயம்*

    * * * * * * * **

  9. #1408
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #மக்கள்திலகம்
    #இதயதெய்வம்
    #பாரத_ரத்னா_டாக்டர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள்
    #அனைவருக்கும்_இனிய
    #வியாழக்கிழமை_காலை_வணக்கம்..

    புரட்சி தலைவருக்கு
    கண்ணதாசன் அவர்கள் எழுதிய
    பாடல்களை தொகுத்து தொடர் பதிவிடும்
    இந்த பதிவில் இன்றைய பதிவை காண்போம்..

    பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்து 1962 – ஆம் ஆண்டில் வெளியான படங்கள் ஆறு. இவற்றில் சமூகப் படங்கள், ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத் தலைவன்’, ‘பாசம்’, ‘மாடப்புறா’ உள்ளிட்ட நான்கு படங்கள்.

    ‘ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

    இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

    முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

    ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

    இப்படத்தில் புரட்சி தலைவரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

    அதனை இப்போது காண்போமா?

    “இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
    உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

    இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

    அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

    ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

    இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருங்கள்!

    “புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
    பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
    பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
    இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
    உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

    அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

    பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

    இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

    நெஞ்சிருக்கும் வரைக்கும்
    ‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே...

    பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

    “சித்திரத்தில் பெண்ணெழுதி
    சீர்படுத்தும் மாநிலமே!
    ஜீவனுள்ள பெண்ணினத்தை
    வாழவிட மாட்டாயோ?”

    பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

    இவைபோன்ற பாடல்களைப் புரட்சி தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

    “நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
    நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
    நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
    நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

    நம் இதயதெய்வம்
    எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

    இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே...

    இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

    “கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
    குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

    – என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

    “வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

    என்றும்,

    “தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

    என்றும், வெற்றித்திருமகன்
    நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது....

    தாயைக் காத்த தனயன்
    “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
    நற்றவ வானினும் நனிசிறந்தனவே!”

    என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு, இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவரே புரட்சித்தலைவர்.

    தாய்ப்பாசத்தில் தன்னிகரற்று விளங்கியதுபோலவே, பிறந்த தாய்த்திரு நாட்டின்மீதும் அளவில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்தவரே நான் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்பதனை எல்லோரும் அறிவர்.

    அவரது தாய்ப்பாசத்தை நன்கறிந்த தேவர் திருமகனார், அவருக்கேற்றவாறே தனது படங்களில் பெயரினைச் சூட்டி மகிழ்வார் என்பதும் நாமறிந்த ஒன்றே.

    ‘தாயைக்காத்த தனயன்’ படம், 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் திரையிட்ப் பெற்று, பெரும் வெற்றியை ஈட்டியது.

    இப்படத்தின் இனிய பாடல்கள் அனைத்தையும் கவியரசரே எழுதினார்,

    “கட்டித் தங்கம் வெட்டி எடுத்து,
    காதல் என்னும் சாறு பிழிந்து,
    தட்டி தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! – அவள்
    தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!”

    என்று, என்றும் புதுமையாய்ப் பூத்துக் குலுங்கி, நிலைத்து நிற்கும் காதல் ஓவியப்பாடலை யார்தான் மறக்கமுடியும்?

    புரட்சி தலைவரும், ‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவியும் இணைந்து நடித்த அப்பாடல் காட்சியை இன்றும் இரசிக்காதவர் யாரேனும் உண்டா?

    “பேரைச் சொல்லலாமா?
    கணவன் பேரைச் சொல்லலாமா?”

    என்று வினாக்களை எழுப்பி,

    “பெருமைக்கு உரியவன் தலைவன் – ஒரு
    பெண்ணுக்கு இறைவன் கணவன்!”

    எனத் தமிழ்ப் பண்பாட்டைப் பதியம் போட்டுச் செல்லும் பாடலை இனி யார் தருவார்?

    “காவேரிக் கரையிருக்கு
    கரை மேலே பூவிருக்கு
    பூப்போலப் பெண்ணிருக்கு
    புரிந்து கொண்டால் உறவிருக்கு!”

    இப்படி மலர்ந்து;

    “காதலன் என்ற வார்த்தை
    கணவன் என்று மாறிவரும்!
    மங்கை என்று சொன்னவரும்
    மனைவி என்று சொல்ல வரும்!”

    என்றே, பிறந்த மண்ணின் மகிமையைக் கண்ணயத்தோடு, காதல் பாடலில் தந்தால் சுவைக்காத உள்ளங்களும் சுவைக்குமே!

    இன்னும் நம் இதயங்களை இனிமையாக்கும் பாடல்களோடு,

    “நடக்கும் என்பார் நடக்காது!
    நடக்கா தென்பார் நடந்துவிடும்!
    கிடைக்கும் என்பார் கிடைக்காது!
    கிடைக்கா தென்பார் கிடைத்துவிடும்!”

    என்ற, நாட்டு நடப்பை நன்றாகக் கணித்துக் கூறும் தத்துவப்பாடலையும் தந்து, புரட்சித் தலைவரின் படத்தில் வெற்றிக்குப் பக்கபலமாய்க் கவியரசர் நின்றதுண்டு.

    சரி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடல்களை மட்டும் பார்ப்போம் என்றீர்? இப்போது ஒரு படம் என்றால் அதில் வரும் பாடல்களை, ஏறத்தாழ எல்லாவற்றையும் குறிப்பிட்டு விடுகிறீர்களே! இது என்ன விந்தை? என்று நீங்கள் கேட்கலாம்!

    நான் என்ன செய்வது? புரட்சித்தலைவர் படத்திற்கென்று பாடல்கள் எழுதத் தொடங்கினால், கவியரசர் அனைத்துப் பாடல்களையும் நன்முத்துக்களாகவே படைத்து விடுகிறார்! நான் எதை விடுப்பது? எதைக் குறிப்பிடுவது?
    வாழ்க..புரட்சி தலைவர் புகழ்.........dr...

  10. #1409
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொஞ்சம் ரிலாக்ஸ்--30!
    ---------------------------------
    மன்னிக்கவும் 30 பதிவுகளில் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் நீள்கிறது!
    மறுபடியும் மன்னிக்கவும்--இன்றையப் பதிவு சற்றே நீளமாகும் வாய்ப்பு இருக்கிறது
    கண்ணதாசனுக்கும் வாலிக்கும் பாடல் எழுதும் பாணியில் இருக்கும் வேறுபாடுகளை முந்தையப் பதிவுகளில் சொல்லியிருந்தேன். எவ்வளவு பேர் அதைப் பரிசோதித்துப் பார்த்தார்களோ தெரியவில்லை!
    இன்றையப் பதிவில்--
    எம்.ஜி.ஆர்ப் பாடல்களில் இருவரின் வீச்சையும் பார்க்கலாம்!
    வாலி,,தன் சுய சரிதையில் தாமே சொல்லியிருந்தபடி-எம்.ஜி.ஆர் என்ற கரீஷ்மா என்னும் பிரம்மாண்ட ஈர்ப்பை வைத்தேப் பாடல்கள் எழுதியிருப்பார்!
    கொள்கைப் பாடல்களில் எம்.ஜி.ஆர் மட்டுமேப் பிரதானமாயிருப்பார் அவரது கட்சி சூரியனும் கூடிய வரையில் இடம் பெறும்

    கடவுள் வாழ்த்துப் பாடும்
    இளங்காலை நேரக் காற்றில்
    என் கைகள் வணக்கம் சொல்லும் கதிரவனைப் பார்த்து!!

    உதய சூரியனின் பார்வையிலே
    உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

    நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்

    நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்

    தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
    குருடர்கள் கண்ணைத் திறந்து வைப்பேன்
    தனியானாலும் தலை போனாலும்
    தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்--இப்படி நிறைய சொல்லலாம்!
    கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆரின் அழகைக் குறிப்பிடுவதில் தனி கவனம் இருக்கும்!
    எம்.ஜி.ஆருக்கானக் கொள்கைப் பாடல்களில் பொதுவாக அந்தக் காட்சியை தான் வார்த்தையில் கொண்டு வருவார்

    மானல்லவோ கண்கள் தந்தது
    மயிலல்லவோ சாயல் தந்தது--பாடலில்
    தேக்கு மரம் உடலைத் தந்தது --வரியைக் கூட விட்டுவிடலாம்--

    சின்னயானை நடையைத் தந்தது--இதில் தான் கவிஞர் தெரிவார்!
    வாலியாய் இருந்திருந்தால்,, இந்த வரியில் சிங்கம் என்னும் காட்டு ராஜாவைத் தான் உருவகப்படுத்தி இருப்பார்!
    மிரட்டல் கம்பீரமாக இல்லாமல் கண்ணுக்கினிய அழகைத் தருவது சின்ன யானையின் நடை!

    எம்.ஜி.ஆருக்கானக் காதல் பாடல்களை எடுத்துக் கொண்டாலோ--
    அழகான தமிழ் வார்த்தைகளின் அணி வகுப்பை வாலி உலா விடுவார் என்றால்--
    புதிய உவமைகளையும் நிதர்சன நிஜங்களையும் நீந்த விடுவார் கவிஞர்!
    கொண்டை ஒரு பக்கம் சரிய--சரிய
    கொட்டடி சேலை தழுவத் தழுவ
    கெண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க--பாடலில் நாயகி ஜெ,,எம்.ஜி.ஆரை இப்படிக் கூறுவார்--

    பொட்டிவண்டி மேலிருந்து
    தட்டி தட்டி ஓட்டும்போது
    கட்டிக் கொள்ளத் தோணுதய்யா கண்களுக்கு--உன்
    கட்டழகைக் காட்டாதே பெண்களுக்கு!!

    அதே படத்தில்--

    நீல நிறம் வானுக்கும் கடலுக்கும்
    நீல நிறம்--பாடலில்--
    எம்.ஜி.ஆர்,,ஜெவைப் பார்த்து--
    தாமரைப் பூவிலே
    உந்தன் இதழ்கள் தந்ததோ சிவப்போ--என்று கேட்கிறோர்
    சாதாரணமாகக் கவிஞர்கள் தாமரையை முகத்துக்கு ஒப்பிடும் போது உறுத்தாத,,வெண்மை கலந்த சிவப்பாக தாமரையின் உள் புறத்தை பெண்ணுக்கு ஒப்பிடுவது புதுமை தானே?

    பூ வைத்தப் பூவைக்குப் பூக்கள் சொந்தமா
    பூவுக்கும் தேனுக்கும் பூச்சிந்தும் போதைக்கும்
    ஈக்கள் சொந்தமா--பாடலில்--

    பசும்பாலோ பழத்துடன் தேன் கலந்துக்
    கன்னி வைத்தப் பொங்கலோ--அருமையான வீச்சு!
    இதைப் பாடும் நாயகன் மாட்டுக்காரன் என்பதால் இங்கே பொங்கலை உவமானம் காட்டியவர்--
    அதேப் பாடலில்--

    பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு
    நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன்
    காதல் வழக்கு--இன்னொரு எம்.ஜி.ஆர் இப்படிப் பாடுவார்!
    காரணம் அந்த எம்.ஜி.ஆர் வக்கீல் என்பதால் --
    வழக்குத் தொடுப்பதாய் வாய் மொழிகிறார்

    உலகம் சுற்றும் வாலிபனில்--

    லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
    உன்னைப் பார்த்ததிலே
    --பாடலில்--
    எம்.ஜி.ஆரும் மஞ்சுளாவும் வெளி நாட்டில் டூயட் பாடுவதால்--
    அந்த நாடுகளின் இயற்கையான--
    லில்லி மலரையும் செர்ரிப் பழத்தையும் ஒப்பிடுகிறார்!
    இதே பாடலில்--மஞ்சுளா எம்.ஜி.ஆரைப் பார்த்து--

    அந்த நூற்றாண்டு சிற்பங்களும்
    உங்கள் பக்கத்திலே
    வந்து நின்றாலும் ஈடில்லை என்று
    ஓடும் வெக்கத்திலே!!
    சாதாரணமாக சிற்பங்கள்--சிலைகளைப் பெண்களின் பேரழக்குக்குக் கூறுவார்கள்!
    அந்த சிற்பத்தை எம்.ஜி.ஆருக்கு உவமானமாக்கி--
    எம்.ஜி.ஆரின் அழகைக் காட்டுகிறாரல்லவா கவிஞர்!!
    இன்னமும் வரும்...vt.........

  11. #1410
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புலம்பல், பொய் பி.சேகர் கழகத்தினர் சரியாக தான் சொல்கிறார்கள் உனக்கு தான் உண்மை தெரியாமல் இப்படி பிதற்றுகிறாய்"

    "1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்,

    அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்,
    அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,

    காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,

    மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,"

    உங்கள் அய்யன் சுயசரிதையில் என்ன சொல்லியிருக்கிறார் "“நான் பெற்ற வாக்குகள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது உண்மைதான்"

    மற்ற மாட்சி என்றால் திமுக, காங்கிரஸ் கிடையாது பிறகு அதிமுக தானே"

    "பி" சேகர் நீ அழுதுபுரண்டாலும், உளறினாலும் கணேசமூர்த்தி தோல்வி அவரது கட்சியில் ஆள் இருந்தால் தானே வாக்கே பெறுவதற்கு? https://sangam.org/2008/11/Sivaji_Ga......Saileshbasu.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •