Page 126 of 210 FirstFirst ... 2676116124125126127128136176 ... LastLast
Results 1,251 to 1,260 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1251
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் சிவாஜியிடம் பட்ட பாட்டை பார்க்கலாம். பாகவதர் கதாநாயகனாக நடித்த "சிந்தாமணி" "அம்பிகாபதி" ஆகிய படங்கள் 1937 ல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்று பாகவதரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று கொடுத்தது. அப்படி சூப்பர் ஸ்டாரான பாகவதரை சிவாஜியை வைத்து ஏஎல்எஸ் தயாரித்த "அம்பிகாபதி"யில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க கேட்டதற்கு பாகவதர் நடிக்க மறுத்து விட்டார்.

    சிவாஜியை விட அதிகமாக ரு10000 வரை அதிக சம்பளம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டியும் பாகவதர் நடிக்க மறுத்து விட்டார். அவர் காலத்தில் அவர் பார்க்காத பணமா? புகழா?. புது பணக்காரன்தான் பவுசோடு அலைவான். அவர் மவுசோடு வாழ்ந்தவர். ஏற்கனவே சிவாஜியின் ராசியை அறிந்துதான் அவர் இந்த முடிவெடுத்தார் என்று சொல்பவர்களும் உண்டு. அவர் அதற்கு சொன்ன காரணம் சிவாஜிக்கு தந்தையாக நடிக்கிறேன்.
    ஆனால் "அம்பிகாபதி"க்கு தந்தையாக
    என்னால் நடிக்க முடியாது என்று.

    அவரை "அம்பிகாபதி"யாக பார்த்த அவரது ரசிகர்கள் எப்படி அவரது தந்தையாக பார்ப்பார்கள் என்ற ரசிகர்களின் உணர்ச்சியை மையமாக வைத்துதான் மறுத்தார். அவரில்லாமல் வெளியான "அம்பிகாபதி" படத்தில் பாகவதரின் நடிப்பில் இருந்த திருப்தி கணேசனின் நடிப்பில் இல்லாமல் படம் எடுபடாமல் போனதோடு மிகுந்த அறுவை படமாகவும் அமைந்ததால் படம் படுதோல்வி அடைந்தது.

    அதன்பிறகு சிவாஜிக்கு தந்தையாக நடிக்க தயார் என்பதை காட்ட சிவாஜியை வைத்து "பாக்ய சக்கரம்" என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார் பாகவதர். ஆனால் சிவாஜி "அம்பிகாபதி"யில் பாகவதர் நடிக்க மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு "பாக்ய சக்கரத்தி"ற்கு கால்ஷீட் தராமலே இழுத்தடித்தார். அதனால் பாகவதர் தனது கைபொருளையும் இழந்து,
    அதிர்ச்சியில் கண்பார்வையும் இழந்து, முடிவில் வறுமையையும், மரணத்தையும் ஒருசேர தழுவிக் கொண்டது அனைவரும் அறிந்ததுதான்.

    ஆனால் எம்ஜிஆர் அவர்களோ திருm.k. ராதாவை தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்ட உயர்பண்பை பெற்றவர்.
    அது மட்டுமல்ல கண்ணாம்பாவுக்கு பணம் பெற்றுக் கொள்ளாமலே "தாலி பாக்கிய"த்தை முடித்துக் கொடுத்தார்.
    ஒரு சமயத்தில் அவர்கள் இழந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார். கே.பி.எஸ் போன்ற சீனியர்களை மதித்து அவர்களுக்கு உதவி செய்தார். இன்னும் எண்ணிலா உதவிகள் செய்து பலரை இன்னலிலிருந்து மீட்டார்.

    இதைதான் அன்றே சொன்னேன் பாராண்ட மன்னனும் கணேசனுடன் கைகோர்த்தால் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. இதையெல்லாம் கணேசன் ரசிகர்கள் பேச மாட்டார்கள், சந்திரபாபு என்ன ஆனான்? என்று கேள்வியெழுப்புவார்கள். ஆனானப்பட்ட முதல் சூப்பர் ஸ்டாரையே இல்லாமல் செய்து விட்ட கணேசனின் ராசி பல தயாரிப்பாளர்களை சிதைத்து வதைத்தது ஒன்றும் பெரிய கதை இல்லை என்கிறார்களா? கைபிள்ளைங்க.

    நன்றி: திரு சைலேஷ் பாசு.........ksr.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1252
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் வெறும் நடிகராக மட்டுமல்ல.அனைவரது கஷ்டத்தையும் உணர்ந்து தன்னால் ஆன உதவியை தயங்காமல் செய்பவர்.இதெல்லாம் நாடகம் என பொய்புரட்டிகள் சொல்வார்கள்.அப்படியானால் அவர்கள் செய்த நற்காரியம் சொல்லுங்க டா என சொல்ல சொன்னால் கால் பிடரியில் அடிக்க ஓடிருவானுக. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கஷ்டம் நஷ்டம் வந்த போதெல்லாம் இவர் படங்கள் தான் அவர்களை காப்பாற்றி உள்ளது. அதனால் தான் அவர் பொன்மனச் செம்மல்��...ssk...சந்திர பாபு அழிந்தது குடி கூத்தியாள் சகவாசத்தால் தான் எம்ஜியார் எல்லாவாற்றையும் மறந்து தன் அடிமை பெண்ணில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னரும் எம்ஜியாரை பத்தி வசை பாடினான் நன்றி இல்லாமல் .......சந்திர பாபு கடைசியாக நடிச்ச படம் கனேசனின் அவன்தான் மனிதன் தான்.........ap....

  4. #1253
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��புரட்சித் தலைவர் பெயரில் வெளிவந்த
    ஏடுகள் :

    திரையுலகம் - திரைச் செய்தி- புரட்சி ஏடு
    மக்கள் திலகம் - புரட்சியார் ரசிகன் -
    ஜேம்ஸ்பாண்டு - கலைப் பூங்கா - சத்திய
    புதல்வன் - இதயக்கனி - உதய சூரியன்
    உரிமைக்குரல் - உழைக்கும் கரங்கள்
    நாடோடி மன்னன் - மன்றம்.

    �� தினசரி பத்திரிகைகள் :

    தென்னகம் - மன்றமுரசு - மக்கள் குரல்
    போர் முரசு - திரையுலகம் - அலைஓசை
    நீரோட்டம் - தினத்தூது - அண்ணா
    பொன்மனம்.

    அது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை அவர் பெயரில் வெளிவந்த மாத இதழ்கள்
    கணக்கிலடங்காதவை.அவரைப் பற்றி எழுதிய தனி நபர் வரலாற்று நூல்களும்
    எண்ணிலடங்காதவை.மேலும் அவருடைய தாக்கங்கள் இல்லாத செய்தித்தாள்கள் இன்றுவரை இல்லை.அப்பேர்ப்பட்ட வரலாறு
    வாழும் வரலாறு என்பது இவர் ஒருவருக்கே பொருந்தும்.
    வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் புகழ்!!!.........
    ������������������������������

  5. #1254
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய "நாடோடி மன்னன்" காவிய படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..

    ‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..


    நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..


    எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..


    ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.

    1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..

    அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.


    இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..


    படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..

    கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.


    இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..

    நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..

    நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.

    திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.

    நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்து.

    புரட்சித் தலைவரின் திரை துறை அரசியல் வெற்றிக்கு காரணம் அவரின் தனிப்பட்ட அறிவு திரன் உழைப்பு மட்டுமே இதில் வேறு யாருக்கும் பங்கில்லை.
    புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக..........kn...

  6. #1255
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1974 நவ 7 ம் தேதி திரைக்கு வந்த "உரிமைக்குரல்" "உலகம் சுற்றும் வாலிபனை" ஒரு சில இடங்களில் முந்தியது ஒரு ஆச்சரியமான ஆனந்தமான தகவல். அதிலும் திரைக்கு வந்து 23 நாட்களிலே ஆன நிலையில் புரட்சி தலைவரின் மற்றொரு படமான "சிரித்து வாழ வேண்டும்" படமும் வெளியாகி இரண்டும் 100 நாட்களை தாண்டினாலும் "உரிமைக்குரல்" யாரும் எட்ட முடியாத சாதனையாக வெள்ளிவிழா கண்டதுடன் வசூலில் புதிய புரட்சியை உண்டாக்கியது.

    மதுரை,கோவை,நெல்லை. உள்ளிட்ட நகரங்களிலும் மேலும் பல ஊர்களிலும் உலகம் சுற்றும் வாலிபனை பிரேக் செய்து புதிய ரெக்கார்டு ஏற்படுத்தியது. மக்கள் திலகம் முதல்வர் ஆகும் வரை அந்த சாதனையை வேறு எந்த படங்களாலும் நெருங்க முடியவில்லை.

    உதாரணமாக கோவையில் "உரிமைக்குரல்" 150 நாட்களில் கீதாலயாவில் சுமார்₹869000 வசூலாக பெற்றது. சென்னையை தவிர்த்து வேறு எந்த ஊரிலும் எந்த தியேட்டரிலும் எந்த நடிகரின் படமும் ஒரே திரையரங்கில் 8 லட்சத்தை தாண்டி இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியது கிடையாது. எட்டக்கூடிய வசூலாக இருந்தால் முயற்சி செய்து பார்ப்பார்கள். ஆனால் இது பல சொத்துக்களை விற்றாலும் எட்டாக்கனி என நினைத்து பிள்ளைகள் அடங்கி போய் விட்டனர்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" 152 நாட்களில் . ₹ 701000 வசூலாக பெற்றது. ஆனால் "தங்கப் பதக்கம்" 100 நாட்களில் ₹ 496000 தான் வசூலாக பெற முடிந்தது. அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர முதல்வராகவே இருந்தார். மக்கள் அன்பு என்ற நூலைக் கொண்டு ஏற்றிய பட்டம் அல்லவா? எப்போதும்
    யாராலும் வீழ்த்த முடியாமல் வானில் வலம் வந்தது ஒரு அபூர்வமான நிகழ்வு என்றே சொல்லலாம் 7.11.1974 ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆன நாள்...

  7. #1256
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்_திரைபயணத்தில்

    #மக்கள்_என்_பக்கம்...

    எவ்வளவோ தயாரிப்பாளர்களுக்கு ((சத்யா மூவீஸ், தேவர் பிலிம்ஸ், தன் சொந்த எம்.ஜி.ஆர் புரொடக்ஷன்ஸ், விஜயா புரொடக்ஷன்ஸ்)) படம் நடித்து கொடுத்த மக்கள் திலகத்திற்கு, "முழுக்க முழுக்க தன் ரசிகர்களுக்காக மட்டுமே ஒரு படம் செய்ய வேண்டும், அதில் வரக்கூடிய வசூல் நலிவடைந்த தன் ரசிகர்களை சென்றடைய வேண்டும்" என்று இந்தியாவில் யாருமே செய்யாத ஒரு முயற்சியை தொடங்கினார் மக்கள் திலகம். தன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவரும், தன் முரட்டு பக்தருமான முசிறிப்புத்தன் தயாரிப்பில் இப்படம் துவக்கப்பட்டது.

    சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவன், தமிழக மக்களின் உதவியோடு உயர்ந்த இடத்தை அடைவது போன்ற கதையமைப்பில் படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படம் தயாராகி வெளிவந்திருந்தால், நவரத்தினம் படத்திற்கு அடுத்து வெளிவந்திருக்கவேண்டும். ஆனால் மக்கள் திலகத்தின் அரசியல் பணிகள் குறுக்கிட்ட படியாலும், அன்றைய அரசியல் சூழ்நிலைகளினாலும் இப்படம் சில அடிகள் படப்பிடிப்போடு நிறுத்தப்பட்டது.

    பின்னாளில் சத்யராஜ், அம்பிகா நடிக்க, கே.பாலாஜி தயாரிப்பில் இதே பெயரில் படம் வெளியானது. ஆனால் அது மக்கள் திலகத்துக்காக உருவாக்கப்பட்ட கதையா? என்பது தெரியவில்லை.

    இந்த படம் வெளிவராவிட்டாலும் கூட இன்று வரை மக்கள்-மக்கள் திலகத்தின் பக்கம்தானே இருக்கிறார்கள்...........

  8. #1257
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------

    மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தாலும் , சிறந்த*நடிகர்*என்று பரிசு பெற்று பலரால்*பாராட்டப்பட்டாலும், தன்னை*எம்.ஜி.ஆர். என்று அழைப்பதையே தான் அவர் பெரிதும் விரும்பினார் .* அதனால்தான் சொந்த*படம் தயாரிக்கும்போது அந்த நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் என்று பெயரிட்டார் .கண்ணனை எப்படி, கோபிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் என்று அழைத்தார்களோ, அப்படி பலர் பலவாறு எம்.ஜி.ஆரை* அழைத்தார்கள்.* சின்னவர், தலைவர், ராமச்சந்திரன், புரட்சி தலைவர், மக்கள் தலைவர் என்று பல பேர்* அழைத்தாலும்* வாழ்நாள் முழுவதும்** எம்.ஜி.ஆர். என்று அழைப்பதையே* அவர் பெரிதும் விரும்பினார் .***


    கவிதைநயமிக்க ஒப்பாரிகளில் மிக சிறந்தது*எதுவென்றால் கம்ப ராமாயணத்தில் வரும் ஒப்பாரியை சொல்வார்கள். ராவணன்* மாண்டுவிட்டான்* ராமனுடைய அம்பு துளைத்து , காயங்களால் உடம்பு புண்ணாகி*கிடக்கிறான்.* அப்போது மண்டோதரி சொன்னதாக கம்பன்*ராமாயணத்தில் சொல்கிறார்.* உன் இதயத்தில் என்னை வைத்திருப்பதாக* சொன்னாயே, ராமன்*பானத்தை*விட்டபோது, உன் இதயத்தை*துளைத்த*போது ,நான் அல்லவா இறந்து*கிட க்க வேண்டும்* அண்ணா*ஏன்* பொய் சொன்னாய். என்று சகோதரனை கட்டிப்பிடித்து அழுகிறாள் .அப்படி ஒப்பாரி* விடுவதற்கான துக்க*சம்பவம்*எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் நடந்தது . அதாவது பேரறிஞர் அண்ணா*நோய்வாய்ப்பட்டு இறந்து*போகிறார் .அவரது இறுதி ஊர்வலம் நடந்து , வங்க*கடலோரம், மெரினா*கடற்கரையில் அண்ணாவின் நினைவிடம் அமைகிறது .* எம்.ஜி.ஆர்.அவர்கள் சில*நாட்கள்*தனிமையில் வாடுகிறார் .* அப்போது உடன் இருந்த*உதவியாளர் ரவீந்தர்*, பேரறிஞர் அண்ணாவின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்புதான் என்கிறார் .* அப்போது எம்.ஜி.ஆர். சொல்கிறார். அண்ணா*அவர்கள் மேடையில்*பேசி கொண்டே* மூன்று பக்கமும்*பார்த்தபடி*வேட்டி கட்டி கொண்டு*நடக்கிற அழகை*பார்த்து கொண்டே இருக்கலாம் .* மேடைக்கு முன்னாள் லட்சோப*லட்சம் மக்கள் முன்னிலையில் யாருக்கும் தெரியாமல்* அவர் பொடி போடும் லாவகம் .என்னை*தம்பி என்று அழைக்கும்போது அடி வயிற்றில்*இருந்து எழுகின்ற உணர்ச்சி மிக்க* பாசம் , அன்பு,* இவற்றையெல்லாம் பற்றி நினைக்கும்போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது .*என் தந்தையார்*இறந்த விவரம் பற்றி எனக்கு*தெரியாது . என் தாயாரின்* மறைவு எனக்கு* மிக பெரிய துக்கம் .* என்னை*அளவற்ற*அன்புடன், பாசத்துடன் தம்பி என்று அழைத்து*வந்தாரே, அதை எப்படி என்னால்*மறக்க முடியும்**என்று வாய்விட்டு கதறி அழுகிறார் .* ராவணனின் மறைவுக்கு*எப்படி மண்டோதரி ஒப்பாரி வைத்தாரோ, அதற்கு*நிகராக* அண்ணாவின் மறைவிற்கு*எம்.ஜி.ஆர். அவர்களின்*ஒப்பாரியை ரவீந்தர்*அவர்கள் தன் நூலில்*எழுதியுள்ளார் .**


    1968ல்* சென்னையில் உலக தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி, கடற்கரை சாலையில் வரலாற்று சிறப்பு* *வாய்ந்த தலைவர்களுக்கு 10 சிலைகள்*வைக்கப்படுகின்றன .* அதே*போல பேரறிஞர் அண்ணாவிற்கு அண்ணா சாலையில் தன் சொந்த*செலவில்*எம்.ஜி.ஆர். அவர்கள்* சிலை**வைக்க முற்படுகிறார் .* அப்போது அண்ணாவை*அமர செய்து அந்த சிலையை*அவர் முன் வடிவமைத்தார்கள் . அந்த சமயம்*அண்ணா* அவர்கள் தம்பி எம்.ஜி.ஆரின் அஸ்திவாரத்தில் நான் நிற்போது*போலுள்ளது இந்த சிலை என்று குறிப்பிட்டாராம் .தி.மு.க.வின் அஸ்திவாரமாக எம்.ஜி.ஆர். அவர்களை கருதித்தான் அன்றே*பேரறிஞர் அண்ணா சொன்னார். ஆனால் அவருக்கு*பின்னால் முதல்வரான கருணாநிதி அந்த அஸ்திவாரத்தையே தூக்கி எறிந்தார் . அதன் பலனாக*கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வனவாசம் சென்றது போல*ஆட்சியை*அவரால்*எட்டி பிடிக்க இயலவில்லை .**


    திரு. கா. லியாகத்*அலிகான் பேட்டி : பெருந்தலைவர் காமராஜார் ஆட்சி காலத்தில் தமிழக அரசு பட்ஜட்,அனைத்து துறைகளுக்கும் சேர்த்து** எடுத்து கொண்டால்*47 கோடி*ரூபாய்தான் .* பிறகு* பேரறிஞர் அண்ணா*காலத்தில் அதுவே*90 கோடி*ரூபாயாக*இருந்தது .* 1968 பிப்ரவரி மாதம் தமிழக அரசு பட்ஜட்* தாக்கல் செய்யும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்போது சட்ட மன்ற*உறுப்பினராக இருந்த*காங்கிரஸ் கட்சியை சார்ந்த*திரு.சி.சுப்பிரமணியம் அவர்களிடம் நான் சதம்* அடிக்க போகிறேன் . அதாவது 100 கோடி*ரூபாய்க்கு பட்ஜட்*தாக்கல் செய்கிறேன் என்று சொன்னாராம்*.* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து*பட்ஜட்* தாக்கல் செய்யும்போது ரூ2,000* கோடி*ருபாய், ரூ.3,000 கோடி*ருபாய் என்ற அளவில் இருந்தது*.* அப்போது அரசு அதிகாரிகளிடமும், என்.ஜி.ஓ .சங்க தலைவராக இருந்த சிவ*.இளங்கோவிடமும் நேரடியாகவும், பத்திரிகைகள் மூலமும் அறிக்கை* வெளியிட்டு கேட்டார். அதாவது வருகின்ற வருமானம் அரசுக்கு இவ்வளவுதான் .அதில் பாதிக்கு மேலாக அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளமாக*போய்விடுகிறது .* நான் மக்களுக்கு*எப்படி அரசு இயந்திரம் மூலம் பணியாற்றுவது . மக்களுக்கான நல திட்டங்களில் எப்படி முடிவெடுப்பது .தயவு செய்து நீங்களே*இதற்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அவர்கள் . 1980 [படஜெட்டுக்கு பிறகு பொருளாதார முன்னேற்றம்* மாநில அளவிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டு* வருமானங்கள் பெருகிய*காலத்தில் அதிகமாக நிதி ஒதுக்க முடியாத சூழலில்*, சத்துணவு திட்டத்தை அமுல் படுத்த முடிவெடுத்த நேரத்தில், இந்த திட்டத்தின்* மூலம் 60 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தர வேண்டும் என்று சொல்கிறீர்கள், அது எப்படி சாத்தியம்**இது முடியாத காரியம் என்று அரசு அதிகாரிகள் மறுத்தபோது, என்ன ஆனாலும் சரி, இதை அமுல்படுத்தியே தீர வேண்டும்.* பெருந்தலைவர் காமராஜர் மதிய* உணவு திட்டத்தை கொண்டுவந்தார்* இது சத்துணவு திட்டமாக இருக்கட்டும்.அவர் வசூலித்தது போல* நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வசூல் செய்து குழந்தைகளின் படிப்பிற்காக*, உணவிற்காக ,கல்வி நிலையங்களுக்கு குழந்தைகள் வர முடியாத நிலையை மாற்றி எல்லோருக்கும் கல்வி தர வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை நிலை, பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்று முடிவெடுத்த தலைவர் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


    நான் வீடு வீடாக பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை* நிறைவேற்றுவேன் என்று சொன்னார். அதையே எதிர்க்கட்சியினர் இது பிச்சைக்கார திட்டம் என்று கிண்டலும் கேலியும் செய்தனர் . குறிப்பாக தி.மு.க. வினர் ஏளனம் செய்தனர் .*அதே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தபோது, இந்த திட்டத்தை நிறுத்த முடியாமல்,மாற்ற முடியாமல்**மேற்கொண்டு சத்துணவுடன் முட்டை அளித்த சம்பவங்களும் நிகழ்ந்தன .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சத்துணவு திட்டத்தை இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிக சிறப்பாக*நடத்தி வருகிறார் . 1982ல்* சத்துணவு திட்டத்தின் குழுவின் உறுப்பினராக செல்வி ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார் .புரட்சி தலைவர்* உருவாக்கிய திட்டத்தை மேலும் மேம்படுத்தி, ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஆட்சி புரிந்த காலத்தில் சிறப்பாக நடத்தி வந்தார் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தமிழகம்* முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்களை முக்கிய நகரங்கள், கிராமங்களுக்கு அனுப்பி, பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடத்துவதை கண்காணிக்க* வேண்டியும் அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார் .***புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த திட்டத்தை திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி யில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.* *குழந்தைகள் இளம் பருவத்தில் பள்ளிக்கு*செல்லும் காலத்தில் பசியால் வாடக்கூடாதுஎன்று கருதி**.நானே*போட போறேன் சட்டம். .பொதுவில்*நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும்*திட்டம்* .என்று நாடோடி மன்னன் படத்தில் பாடியது*போல , சட்டங்களை எல்லாம் கொண்டு வந்து இந்த மக்களுடைய மறுமலர்ச்சிக்காகத்தான் அவருடைய வாழ்க்கை இருந்தது,நடந்தது என்பதை*நாமும் நினைத்து பார்த்து நாமும்*எல்லோரும்***அமைச்சராக, முதல்வராக, அதிகாரியாக வேண்டும் என்று வாழ்க்கையின் வசந்தங்களை இழந்துவிடாமல் நாம்* எந்த இடத்தில*, எந்த நிலையில் இருக்கிறோமோ, எப்படி வாழ்கிறோமோ, அந்த வாழ்க்கை நெறிமுறையில்* யாருக்காவது ஒருவருக்கு*உதவி செய்ய முடியுமேயானால் ,அந்த உதவியை செய்வதற்கு நாம் உறுதி எடுத்து கொள்ள வேண்டும். சிறிய*உதவியாக கூட இருக்கலாம் .**


    கர்ணன் என்பவர் மிக பெரிய கொடை வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த*கரம் உடையவர் .* அந்த* வாரி வழங்கிய**கர்ணன்*சொர்க்கத்திற்கு போகும்போது*அவருக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது . ஏனென்றால் அவர் கொடைத்தன்மை*பெற்றிருந்தாரே ஒழிய வயிற்று பசியை*போக்கவில்லை .**போதிய அளவு அன்னதானம் செய்யவில்லை. எனவே சொர்க்கத்தில் இடம் மறுக்கிற*நிலை வரும்போது , அவருக்கு வேண்டியவர்கள் ஒரு உதவியை செய்கிறார்கள். கர்ணன் ஒரு உதவியை செய்திருக்கிறார் .* பசியோடு வந்த ஒரு முதியவர்*அன்னதானம் நடக்கும் இடம் எங்கே என்று கேட்டபோது ,தன் ஆள்காட்டி விரலால்*,அந்த இடத்தை காண்பித்து*நீங்கள் அங்கு சென்று உணவருந்துங்கள் என்று சொல்லி, வயிற்று பசியை போக்கியதால்*, நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்தில் இடம் தரவேண்டும் என்று சிபாரிசு*செய்தார்களாம்* இந்திரனுக்கு கர்ணன் மீது ஒரு கோபம் வந்தது .* கடவுளிடம் சென்று இந்திரன் முறையிடுகிறார் . நானும் வாரி வாரி கொடுக்கிறேன் .* கர்ணனும் வாரி வாரி கொடுக்கிறார் .* ஆனால் என்னை யாரும் வள்ளல் என்று அழைப்பதில்லை .இந்திரன் என்றுதான்*அழைக்கிறார்கள். கர்ணனை வள்ளல் என்று குறிப்பிடுகிற இதே* சமூகம் என்னை ஏன் அவ்வாறு அழைப்பதில்லை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் பல நடிகர்கள் , தலைவர்கள் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை எல்லாம்* வள்ளல் என்று குறிப்பிடாமல்* ஏன்* எம்.ஜி.ஆர். அவர்களை மட்டும் வள்ளல் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு நான் கண்ட* உதாரணம் இதுதான்*.இந்திரனின் கேள்விகளை கேட்ட*கடவுள், பதிலுக்கு நான்* ஒன்றை**காட்டுகிறேன்* .கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்லி*அவரை பக்கத்தில் இருக்கவைத்து, அருகில் உள்ள**மலையை பார்த்து கடவுள்* தன்* கையை காட்டுகிறார் .* உடனே அந்த மலை தங்கமாக மாறிவிடுகிறது .* உனக்கும், கர்ணனுக்கும் ஒரு போட்டி. நீ இந்த தங்கத்தை*இந்த காலை நேரத்தில் இருந்து , மாலை சூரியன்*அஸ்தமனம் ஆவதற்குள்* சிறு பகுதிகளாக* வெட்டியெடுத்து*மக்களுக்கு*, ஏழை எளியோருக்கு* கொடுத்துவிடு .*. உடனே இந்திரன்* என்ன செய்கிறார் என்றால் அதற்குரிய உபகரணங்கள் ஆகிய கோடாரி,கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றை எடுத்து கொண்டு, அருகில் உள்ள ஊர் மக்களை அழைத்து, தங்கமலையை வெட்டி எடுத்து, வாரி, வாரி கொடுக்கிறார். மக்களும்* மகிழ்ச்சியோடு வாங்கி செல்கிறார்கள். அப்படி கொடுத்தும் கூட, மலையில் பாதிகூட* தீரவில்லை* அப்படியே இருக்கிறது .இந்திரனை சற்று தூரத்தில்* உட்காரவைத்துவிட்டு, கர்ணனை*அழைக்கிறார் கடவுள்*. கர்ணனுக்கு அருகில் உள்ள** மலையை காட்டி, தங்கமாக்கிவிட்டு*இன்று காலையில் இருந்து ,மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இந்த மலையை முழுவதும் வெட்டி எடுத்து, ஊர் மக்களுக்கு , கிராமங்களுக்கு கொடுத்துவிடு என்கிறார் .* கர்ணன்*அந்த ஊரில்*போய் நிற்கிறார் . ஊரில்*இரண்டுபட்ட*போன மக்கள் இரு பிரிவுகளாக உள்ளார்கள். அவர்க ளுக்கு இரு தலைவர்கள் உள்ளார்கள். அந்த தலைவர்களை அழைத்து, நீங்கள் இந்த தங்க மலையை*வெட்டி உங்கள் ஊர் மக்கள் அனைவருக்கும்**சரிசமமாக, பாகுபாடு இல்லாமல். தாராளமாக, வேண்டிய அளவில் எடுத்து கொடுத்து விடுங்கள்*என்கிறார் .இன்று மாலைக்குள்*முழுவதையும் வெட்டி எடுத்துக்கொண்டு மலையே இல்லாத அளவிற்கு நிறைவு செய்துவிடுங்கள் என்கிறார் .* இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து, ஊர் மக்களை வரவழைத்து,*அந்த மலையை*வெட்டி எடுத்து ,அன்று மாலைக்குள்*மலையே இல்லாத அளவிற்கு** செய்துவிடுகிறார்கள் .* இந்திரன் சற்று தூரத்தில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கிறார் .* பிறகு கர்ணனை*கடவுள் போகச்சொல்லிவிட்டு, இந்திரனை அழைத்து*சொல்லும்போது, கர்ணன்* தன்னுடைய ஆழ்மனதில் இந்த தங்க மலையானது*தனக்குரியது என்று கொஞ்சம் கூட*நினைக்கவில்லை.. ஆனால் நீ இந்த தங்க மலையானது*எனக்குரியது என்று உன் ஆழ்மனதில் நீ நினைத்தாய்.* அதன் காரணமாக அதை வெட்டி கொடுப்பதில் நீ பேதம் பார்த்திருக்கிறாய் .* அதனால்தான் அந்த தங்க மலையை முழுவதும் வெட்டி எடுத்து தீர்க்கமுடியவில்லை .உன்னுடைய எண்ணத்திற்கு மாறான எண்ணம் கர்ணன் கொண்டிருந்ததால் ,அந்த மலையை*மதியத்திற்குள்ளாகவே,ஏழை எளியோர்கள் தாங்களாகவே, வேண்டிய அளவு வெட்டி எடுத்து கொள்ளும்படி செய்துள்ளான்**எனவே தன் ஆழ்மனதில் எந்த பொருளையும் தனக்குரியது என்று எண்ணாத*கர்ணன்*கொடை வள்ளலாக வாழ்கிறான். நீ இந்திரனாக வாழ்கிறாய். இதுதான் உண்மை என்கிறார் கடவுள் .**

    அதை போல தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆழ்மனதில் எந்த பொருளையும், பணத்தையும்*தனக்குரியது அல்ல, ஏழை எளியோருக்கானது, மக்களுக்கானது என்று நினைத்து* வாழ்ந்த*மாபெரும் கொடை வள்ளல், வற்றாத ஜீவநதி, ஏழைகளின் இதயவேந்தன் , புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் ,கதையை,வாழ்க்கை வரலாறை*நாம் பேசி கொண்டே இருந்தால், நம் இதயமெல்லாம் சுத்திகரிக்கப்பட்டு* நம் இதயத்தில் இந்த பொருட்கள், பணம் எல்லாம் நமக்குரியது என்கிற* ஆசைகள் எல்லாம் குறைந்து, உழைத்தாக வேண்டும் ,ஊருக்கெல்லாம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உற்பத்தி ஆகும்போது நமக்கெல்லாம் அவருடைய* வாழ்க்கை முறையானது, அடிப்படையாக*அமையும் என்பதை இந்த நல்ல நேரத்திலே*உணர்ந்து**,நம்முடைய எண்ணங்களை எல்லாம் எளிமையாக்கி கொண்டு, யார்மீதும் பகைமை பாராட்டாமல் , பொறாமைப்படாமல் ,நமக்கு உள்ள நிலையிலே*என்ன செய்து* முன்னேற**முடியும் என்பதை நினைத்து பார்த்து ,*மன ஆறுதலோடு, அமைதிப்படுத்தி கொண்டு*வாழ்க்கை முறையை*அமைத்து கொண்டோமேயானால், எம்.ஜி.ஆர். அவர்களுடைய நடைமுறையில் கொஞ்சமாவது பின்பற்றுவோமேயானால்,நிச்சயமாக*நாம் மனமகிழ்ச்சியோடு, மனநிறைவோடு வாழ முடியும் என்பதை*கடந்த காலங்களில் பலபேர் நிரூபித்து இருக்கிறார்கள் . அந்த எண்ணங்களை எல்லாம் நாம் மனதிலே கொண்டு*வாழவேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே,வின் டிவியின் உரிமையாளர் திரு.தேவநாதன்*அவர்களுடைய அன்பால், ஒத்துழைப்பால் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி கூறி, உங்களுக்கும் நன்றியை*கூறி,இவற்றையெல்லாம் நாம் வாழ்விலே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி* பணிவோடு கேட்டு கொண்டு*,இந்த நிகழ்ச்சியில் யார் பெயராவது விடுபட்டு இருக்கும் என்றால், வேண்டுமென்றே நடந்திருக்காது சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் அல்லது மறதியின் காரணமாக*இருந்திருக்குமே தவிர, மற்றபடி அனைவரை பற்றியும்*சொல்லக்கூடிய வாய்ப்பு படிப்படியாக வரும்*என்பதை*தெரியப்படுத்தி, இந்த வாய்ப்புக்கு அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் .நன்றி, வணக்கம்.* இவ்வாறு திரு.லியாகத் அலிகான்*பேட்டி அளித்தார் .**

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------

    -1. ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் - தாய் சொல்லை தட்டாதே*

    2. பேரை சொல்லலாமா, கணவன் பேரை*-தாயை காத்த*தனயன்*

    3.நான் செத்து பிழைச்சவன்டா* -எங்கள் தங்கம்*

    4.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*

    .*** **

  9. Likes orodizli liked this post
  10. #1258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள் பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மறுவெளியீடு* ஆரம்பத்தில் புதிய சாதனை தொடர்கிறது*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    கோவை சண்முகா - 11/11/20 முதல் -தர்மம் தலை காக்கும் -தினசரி 3காட்சிகள்*

    கோவை சண்முகா -14/11/20 முதல் -காவல்காரன் -தினசரி 3 காட்சிகள்*

    10/11/20* முதல் தஞ்சை* ஜி.வி.** திருவானை காவல் -வெங்கடேஸ்வரா***சீர்காழி - ஓ.எஸ்.எம்.

    * திருவாரூர்* தைலம்மை* அரங்குகளில்*

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல்* வெளியீடு .

    மதுரை -சென்ட்ரல் சினிமா -14/11/20* (தீபாவளி முதல் ) மக்கள் தலைவர்*
    எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    மற்ற நகரங்கள் பற்றிய தகவல்கள் தொடரும் ..............!!!!!!!

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #1259
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தேவாரம் கண்டிப்பான அதிகாரி தலைவர், எப்பவுமே 2 அடுக்கு பாதுகாப்பு போட்டுவருவார் அது ரொம்ப பேருக்கு தெரியாது முதல் அடுக்கு ஸ்டண்ட் குழுவினர்கள் 2வது அடுக்கு போலீஸ் பாதுகாப்பு இதை கவணித்த தேவாரம் அப்ப நாங்கள் எதற்கு என கேட்க அவர் புன்முறுவலுடன் நீங்கள் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அவர்கள் சம்பவமே வராமல் பார்த்துகொள்ளும் பிரதிபலன் எதிர்பார்க்காத என் உயிரை காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் .......நான் நியமித்தவர்கள் அல்ல அவர்கள் 4 கோடி தமிழ் நாட்டுமக்களின் பாதுகாவலனாக எனை நினைக்கிறார்கள் ஒன்று செய்யுங்கள் முடிந்தால் நீங்களே அவர்களை அனுப்பிவிடுங்கள் என சொல்ல மறுநாள் தேவாரம் அப்படியே சொல்ல அவர்கள் சிரித்துக்கொன்டே ஐயா நாங்கள் அவ்வாறு செய்தால் எங்கள் அனைவரையும் தமிழ் நாட்டு மக்கள் கண்டிப்பதுடன் தலைவரை வீட்டிற்கு ஒருவராக பட்டியல் போட்டு பாதுகாப்பார்கள் அவர்கள் அப்போது தினமும் இதை சொல்லமுடியுமா என கேட்க தேவாரம் அவர்கள் தலைவரின் திருபுகழை நினைத்து பெருமைபட்டவுடன் ....இவரை பின்னாளில் தலைவருக்கு பாதுகாவல் அதிகாரியாக நியமிக்க சொன்னது அன்னை இந்திரா காந்தி என தெரிந்த உடன் மனிதர் ஆடிப்போனதுடன் இந்திரா மறைவிற்கு பிறகும் தலைவர் மறைவுநாள் வரை பாதுகாவல் படை பிரிவு அதிகாரியாக நியமித்தது ராஜீவ்காந்தி அவர்கள் என்னே கரிசனம் தலைவர்மீது இந்தபாக்கியம் என் தங்க தலைவனுக்கு தவிர வேறு எவருக்கும் கிடைக்கவில்லை...Vairam...

  13. #1260
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தலைமுறையாய் #தொடரும் #பக்தி

    #சோ, தன் துக்ளக் பத்திரிகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தை மிக வியப்புடன் குறிப்பிட்டிருப்பார்...

    அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார்.

    அவனை அழைத்து ` இப்ப என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `#எம்ஜிஆரை #கும்பிட்டால் #நல்லா #படிப்பு #வரும். #அதனால #கும்பிட்டுட்டுப் #போறேன்' என்றதும் சோ அதிர்ந்திருக்கிறார்...

    இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி பெருமிதம் கொள்வான்...

    அவர்களும் `என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படி எம்ஜிஆர் மீதான அன்பு, பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது...

    எம்ஜிஆரைத் தவிர வேறு ஒருவரும் உலகில் இப்படி இருந்ததில்லை..
    இருக்கப்போவதுமில்லை...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •