Page 131 of 210 FirstFirst ... 3181121129130131132133141181 ... LastLast
Results 1,301 to 1,310 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1301
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பன்சாயி...

    நேற்று இரவு வழக்கம் போல தொலைக்காட்சி சேனல்களை துழாவிக் கொண்டே சென்றேன். திடீரென இன்ப அதிர்ச்சி. டி.வியில் உலகம் சுற்றும் வாலிபன் படம். கண்டு களித்தேன். இதுதவிர, நேற்று பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வியில் அரச கட்டளை. இரவு 7.30க்கு முரசு டி.வியில் தாயின் மடியில். இன்று காலை சன் லைப் டி.வியில் தாய் சொல்லை தட்டாதே. ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா....’ என்று பாடிய பாரதியார் இன்று இருந்திருந்தால் ‘எங்கெங்கு காணிணும் எம்ஜிஆரடா, தம்பி, ஏழு கடல் அவன் வண்ணமடா.... விண்டுரைக்க முடியாத விந்தையடா’ என்று பாடியிருப்பார்.

    பாரதியார் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாரதியார் மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னர் தலைவர் ஆட்சியின்போதுதான் அவரது குடும்பத்துக்கு தியாகிகள் பென்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், முதல் மாத பென்ஷன் வந்த அன்று அதை வாங்கிக் கொள்ள பாரதியாரின் மனைவி செல்லம்மாள் இல்லை. அன்று காலையில்தான் அவர் இறந்திருந்தார். ஏன்? சுதந்திர வீரனின் வரலாற்றை விளக்கும் திரைப்படமான திரு.சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கூட தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் (1983 அல்லது 84 என்று நினைக்கிறேன்) வரிவிலக்கு தரப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சியையோ ,ஆட்சியையோ குறை கூறுவதற்காக சொல்லவில்லை. தியாகிகளுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் உரிய மரியாதை அளிப்பவர் தலைவர் என்பதை, அதுவும் பாரதியார் பற்றி பேச்சு வந்ததால் குறிப்பிடுகிறேன்.

    சரி.. உ.சு.வா.வுக்கு வருகிறேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். விரைவில் டிஜிட்டலில் பெரிய திரையிலும் காணப் போகிறோம். இந்த படத்தை பற்றி இதுவரை புத்தர் கோயில் மற்றும் ஹோட்டல் துசித் தானி ஆகியவை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். எழுத நிறைய உள்ளது. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது எழுதுவேன். இப்போது, பன்சாயி பாடலை பார்ப்போம்.

    அணுசக்தி குறிப்பின் அடுத்த பகுதி ‘ஜப்பானில் உள்ள புத்த பிட்சு வீட்டில் இருக்கிறது’ என்ற ரகசிய குறிப்பை சந்திரகலா படித்ததுமே உடனே நாகேஷ், ‘அண்ணே, ஜப்பானுக்கு போலாம்ணே’ என்றதும் அடுத்த காட்சியே இந்தப் பாடல். மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையமைப்பில். படத்தின் கதையும் ஜப்பானிலேயே முடியும். இரண்டாம் உலகப் போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் முறையே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகள் வீசிய நாள். லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த உலக வரலாற்றின் கறுப்பு நாள். அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிலேயே, அழிவுக்கு காரணமான அணுசக்தி குறிப்பை எதிரிகளின் கைகளுக்கு கிடைக்காமல் தலைவர் கைப்பற்றி அணுஆயுத ஆபத்தில் இருந்து உலகை காப்பாற்றுவது போன்ற கதையமைப்பும், அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு ஏற்றார் போல அங்கு நடத்த எக்ஸ்போ 70 விழாவும், அதை காட்சிப்படுத்திய தலைவருக்கும், இப்போதும் கண்டுகளிக்கும் நமக்கும் இயற்கை அளித்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    பன்சாயி பாடலின் ஆரம்பத்தில் சந்திரகலா அணிந்து வரும் உடைதான் ஜப்பானின் தேசிய உடை. புத்த பிட்சு வீட்டில் குறிப்பு உள்ள சங்கேத வார்த்தைகளான தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்று வருமே. அதில் கடைசியாக வரும் ‘கிமோனா’தான் சந்திரகலா அணிந்திருக்கும் உடை. தலைவர் செம ஸ்மார்ட் என்று திரும்ப திரும்ப நான் சொல்லப் போவதில்லை, தெரிந்ததுதானே.

    பாடலை படமாக்க தலைவர் தேர்ந்தெடுத்துள்ள லொகேஷன்கள் அற்புதம். ‘தொட்டிலைப் போல நானும்... பிள்ளையைப் போல நீயும்..’ என்ற வரிகள் வரும்போது காட்டப்படும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசம் கண்களுக்கு விருந்து. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடத்தில் ஆறு. அந்த இடத்தில் அன்னபட்சி போன்ற பிரம்மாண்ட படகு போன்ற ஒரு கட்டமைப்பு. அந்த வரிகள் இடம் பெறும்போது மேலே ஓடும் மோனோ ரயில். அந்த இடத்தை தேர்வு செய்ததுடன் மோனோ ரயிலுக்காக காத்திருந்து, நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்தில் அதற்குள் காட்சியை அழகாக எடுக்க எத்தனை திட்டமிடலும் டைமிங் சென்சும் வேண்டும்?

    இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜப்பானில் இந்தக் காட்சி 1970ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு வீச்சுக்குப் பின் 25 ஆண்டுகளில் ஜப்பான் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு எக்ஸ்போ 70யும் இந்தக் காட்சியில் காட்டப்படும் மோனோ ரயிலுமே சான்று. சிங்காரச் சென்னையிலே இன்னும் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பாடில்லை. மோனோ ரயில் இன்னும் திட்ட வடிவிலேயே இருக்கிறது. இதற்கு மாநில அரசை குறை சொல்லி அர்த்தமில்லை. இரண்டரை ஆண்டுக்கு முன் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை உலகத் தமிழர்களுக்கு ‘மகிழ்ச்சியுடன்’ தெரிவிக்கிறோம்.

    அந்தப் பாடலில் வரும் டால்பின் கண்காட்சி. இதற்கு முன் தமிழ் படங்களில் வந்ததில்லை. தலைவர் படம் எடுக்கும்போது சிறப்பானவற்றை எல்லாம் கேமராவுக்குள் அடக்கியுள்ளார். சரியான இடங்களில் அந்தக் காட்சிகளை இணைத்து நமது கண்களுக்கு விருந்தாக்கிய அவரது மேதைமையையும் தொழில்நுட்பத் திறனையும் என்னென்பது? மீன் கண்காட்சியின்போது தலையில் தொப்பியுடன் தடுப்பு கம்பியில் கைகளை ஊன்றியபடி தலைவர் கொடுக்கும் இரண்டு அட்டகாச போஸ்கள் அற்புதம்.

    கடைசி பாராவின் போது ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற எரிமலையை காட்டியிருப்பார்கள். படகில் தலைவரும் சந்திரகலாவும் செல்லும் இந்த காட்சியை இன்னொரு படகில் இருந்து படமாக்கியிருப்பார்கள். கேமரா தலைவரையும் சந்திரகலாவையும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிமலையை காட்ட விட்டு விட்டால் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். கேமராக்காரருக்கு நினைவுபடுத்துவதுபோல எரிமலையை நோக்கி தலைவர் சிரித்தபடியே கை காட்டுவார். அவரது கையை தொடர்ந்து செல்லும் கேமரா எரிமலையை காட்டும். இந்த காட்சியை பாடலில் பார்க்க முடியும். இதயம் கவர்ந்த பாடல்களில் ஒன்று..

    Courtesy
    KALAIVENDHAN...........Vnd...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1302
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # கம்ப ராமாயணத்தில் கம்பர் தன்னுடைய கவித் திறமையால் படிப்பவர்கள் அனைவரையும் அந்த இதிகாச காவியத்தில் கரைந்து போய் விடும் அளவுக்கு உருகச் செய்யும் பகுதி ஒன்று உண்டு,

    அதுதான் "சிறந்த சிவபக்தன் ராவணன்
    ராமனால் வீழ்த்தப்பட்ட பிறகு அவனுடைய மனைவி
    மண்டோதரி அவனைப் பிரிந்த துக்கத்தை அழுகையோடு கூடிய புலம்பலாக வெளிப்படுத்திய புலம்பல் காண்டம்,

    இந்த புலம்பல்தான் கம்ப ராமாயணத்தில் மிகச் சிறந்த கவித் திறன் கொண்டதாக போற்றப்படுகிறது,


    அதே மாதிரியான புலம்பல்கள் தான் இப்போது கணேசன் பிள்ளைகள் புலம்பும் புலம்பல்களும்,

    தினமும் ஏதாவது ஒரு பெயரில் பதிவு என்ற பெயரில் தலைவரை தரமற்ற முறையில் திட்டுவது,

    "டோப்பா"வாம் , பரவாயில்லை , மல்லாந்து படுத்துக் கொண்டு இப்போதா எச்சில் துப்புகிறீர்கள்?

    காலம் காலமாக உங்களின் இயலாத் தன்மையை, கேவலமான தோல்வியை, அழுகையை, ஆற்றாமையை இப்படி ஏதாவது ஒரு பெயரை சூட்டி அர்ச்சனை செய்வதில் உங்களுக்கெல்லாம் ஒரு ஆத்ம திருப்தி,

    ஆனால் தலைவரின் பக்தர்களாகிய நாங்கள் ஒருகாலமும்
    கணேசனை "குடிகாரப்பய, கருங்குரங்கு, அண்டா வயிறன், டிக்கி தள்ளி என்றெல்லாம் ஒரு காலமும் சொல்வதில்லை அது உங்களுக்கே தெரியும்,

    இந்த "படித்துறைபாண்டி " எங்குள்ள ராசாவோ தெரியவில்லை,
    யாருக்கும் தெரியாத ரகசியம் இந்த அல்லக்கைக்கு தெரிந்திருக்கிறது,

    தலைவர் "ஜென்டாவின் கைதி " என்ற ஒரு கதையின் பின்னணியில் நாடோடி மன்னனை இயக்கியதை அவரே பல தடவை வெளிப்படுத்திய ஒரு விஷயம் ( இந்த புண்ணாக்கு, ட்யூப்லைட் இப்போ வந்து கேணத் தனமா தகவல் சொல்றார்
    அதுல இளிப்பு வேற,
    சகிக்கல சுட்ட அப்பள கூமுட்டை )
    "ஸ்லேவரி மதர் " நாவலை தழுவி " அடிமைப்பெண் "படம் எடுத்தாராம்,

    இது யாருக்கும் தெரியாதா அண்டிப்பருப்பு?

    இன்னொரு கதை வேற விட்டுருக்கான் சல்லிப்பய " நாடோடி மன்னன் " படத்தின் இறுதியில் எமது அடுத்த தயாரிப்பு " அடிமைப் பெண் " என்று டைட்டில் காட்டப்பட்டதாம்,

    எனக்கு தெரிந்து " நான் ஆணையிட்டால் " படத்தில் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடலின் இடையில் அடிமைப்பெண் விளம்பரம் காட்டப்பட்டது,

    ஆனால் இந்த புண்ணாக்கு, தவிட்டு மட்டை இப்படி சொல்றான் ( ராத்திரி போட்டது தெளியாம வந்து எழுதிருப்பான் போல)

    சரி நீயா அந்த நாவல்களின்
    authorized person?
    இல்ல உனக்குத்தான்
    Power of attorney தந்திருக்குதா என்ன?

    அடுத்து இன்னொரு மரியாதை ராமன்
    அவரே கேள்வியும் கேட்டு அவரே பதிலும் சொல்லியிருக்கிறார்.

    கருப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் பட்டிக்காடா பட்டணமா படத்துக்காம், கலர் படங்களில் திரிசூலம் படத்துக்கு அதிக வசூலாம்,

    விக்கிபீடியா காரனே
    திரிசூலம் படத்தின் வசூல் விபரம் என்ன என்பதை தெளிவாக கொடுத்து விட்டான்,

    அப்புறம் 40 லட்சம் கூட வசூல் வராத பட்டணம் படம் அதிக வசூலாம்?
    ஏற்கனவே 50 நாள் வசூல் விபரம் அருண் பிரசாத் மூவீஸ் சார்பில் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விபரம் தெரிந்து கொண்டே இப்படி ஒரு பீலா,

    மதுரை, சேலம் இந்த ஊர்களைத் தவிர எங்கேயாவது இந்த
    படம் "ரிக் ஷாக்காரன் பக்கத்துல கூட வர முடிந்ததா? இதுக்கு இடையில் முழுப் பூசணிக் காயை இந்த ராசு சோத்துல அமுக்கியிருக்கிறார்

    அது மட்டும் இல்லாமல் இவர் தலைவரை வசூல் சக்கரவர்த்தி என்று ஒத்துக் கொள்ள மாட்டாராம்,

    ஆமா உன்னை யார் ஒத்துக்க சொன்னது?...

    அகிலமே சொல்லும்,
    இந்தியா முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க எங்கெல்லாம் தமிழ் திரைப்படங்கள் விநியோகம் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் இன்றும் உரத்த குரலில் சொல்கிறார்கள் யார் வசூல் சக்கரவர்த்தி என்று, அப்படியிருக்க வண்டு முருகன்களும், படித்துறை பாண்டிகளும், போண்டா மணி, லொள்ளு சபா மனோகர், கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு கூட்டத்தை யார் ஒத்துக்க சொன்னது?

    நம் நண்பர் ஒருவர் சொன்ன தகவலில் விட்டுப் போன ஒரு விஷயம் " உயர்ந்த மனிதன் "படத்துக்கு மெய்யப்ப செட்டியார் கணேசனுக்கு கொடுத்த தொகை வெறும் ஒரு லட்சம் மட்டும்தான், அதற்கு மேல் 25000 தன் தம்பி சண்முகம் மூலம் கேட்டு அனுப்பிய போது செட்டியார் அவமானப்படுத்தி அனுப்பியது வரலாறு
    அப்படியிருக்க வசூல் பற்றி பேச வந்திருக்கார் லபக்கு தாஸ்,

    தலைவரின் சம்பளம் என்பது பெரும் பாலும் சென்னை நகர விநியோகம் போக பேசப்படும்,
    அது போக படத்தில் வரும் லாபத்தில் ஷேர் கொடுக்கப்படுவது உண்டு
    இதை எல்லாம் கணக்கில் எடுத்தால் எவ்வளவு சம்பளம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்( இந்த தகவல்கள் எல்லாமே சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் கொடுத்த பேசும் படம் பத்திரிகையில் வந்த தகவல், இதை ஊர்ஜிதப்படுத்தி தான் கண்ணதாசன் கூட ராணி வார இதழில் 1974 இல் எழுதினார்

    1968 இல் வெளி வந்த தலைவரின் "ஒளி விளக்கு " படத்துக்கு எஸ். எஸ் வாசன் எப்படி சம்பளம் கொடுத்தார் என்பதை மறைந்த எழுத்தாளர் மணியன் அவர்கள் தன் " இதயம் பேசுகிறது " இதழில் விரிவாக 1990 களின் துவக்கத்தில் எழுதினார், அந்த படத்துக்கு தலைவர் அது வரை வாங்கிய சம்பளம் இரு மடங்கு கொடுக்கப்பட்டது,

    " பறக்கும் பாவை படத்துக்கு 1966 இல் ஏழு லட்சம் சம்பளம், 1965 இல் "பணம் படைத்தவன் " படத்துக்கு நான்கு லட்சம் சம்பளம் கொடுத்ததை ராமண்ணா "இதயக் கனி" விஜயனிடம் நேரடியாக சொன்னதை விஜயன் தன் " எம்ஜிஆர் கதை " புத்தகத்தில் எழுதியுள்ளார், சந்தேகம் இருப்பவர்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளட்டும்
    ( அவர் தலைவர் பெயரில் பத்திரிக்கை நடத்தினாலும் அவரும் ஒரு சிவாஜி ரசிகர்தான் )

    ஒரு நடிகரின் வியாபாரத்தை வைத்தே அவரின் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்,

    1991 ஆம் ஆண்டு வெளி வந்த " ராசாவின் மனசிலே " படத்தின் வெற்றிக்குப் பிறகு திரு. ராஜ்கிரண் அவர்களின் சம்பளம் எங்கேயோ போனது,

    முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான், ஆனால் கால ஓட்டத்தில் அதே சம்பளம் அவரால் வாங்க முடிந்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் வரும்,

    " மாணிக்கம் " என்ற படத்தின் மூலம் தன் அனைத்து செல்வங்களையும் இழந்ததோடு தன் மார்க்கெட்டையும் இழந்தார் ( அதற்கு பல காரணங்கள் அது நமக்கு தேவையில்லை )

    " மக்கள் நாயகன் " ராமராஜன் கரகாட்டக்காரன் படத்துக்குப் பிறகு அப்போது இருந்த நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிப் போனார்,
    தொடர்ந்து அவர் படங்கள் வசூல் குவிப்பதைப் பார்த்து
    அவருடைய படங்களுக்கு அதி அற்புதமாக பாடல்கள் போட்டுக் கொடுத்த இளையராஜா அவர்களுக்கு கட்டுமரம் நெருக்கடி கொடுத்த சம்பவங்கள் எல்லாம் அப்போதைய பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த ஒன்று,

    பின்னாளில் உடம்பு பெருத்து நட்சத்திர அந்தஸ்து இழந்தபோது அந்த சம்பளம் அவரால் வாங்க முடியவில்லை,

    " வசந்த மாளிகை " படத்துக்குப் பிறகுதான் சிவாஜி இரண்டு லட்சம் வாங்கியதாக "தினத்தந்தி " பத்திரிக்கையில் செய்தியே வந்தது,

    " மீனவ நண்பன் " படத்துக்கு சடையப்ப செட்டியார் எவ்வளவு சம்பளம் கொடுத்தார் என்பதை தலைவரின் மெய்க்காப்பாளர் திரு. K.P.ராமகிருஷ்ணன் பேட்டிகளில் சொன்னது இந்த சொளவ ராசுக்கு தெரியுமா?

    சிவாஜியை வைத்து படம் எடுத்த முக்தா.வி. சீனிவாசன்தானே சொன்னார் " எம்ஜிஆரின் ஒரு படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம்,
    எம்ஜிஆர் சாதாரண படம் ஒன்று 50 லட்சம் வரி செலுத்துகிறது என்றால் அவரின் பெரிய படம் ஒரு கோடி ரூபாயை வரியாக செலுத்துகிறது,
    எனவே சர்க்காரின் மிகச் சிறந்த நண்பராகவே எம்ஜிஆர் விளங்குகிறார் "

    இந்த பேச்சு அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது, குறிப்பாக" இந்து " பத்திரிக்கை இந்த செய்தியைப் பெரிய அளவில் வெளியிட்டது,

    கணேசன் இந்த செய்தியைப் பார்த்து நிரம்பவும் வருத்தப் பட்டதாகவும் செய்திகள் வந்ததை இங்கே நினைவு கூறுகிறேன்,

    சிவாஜி முகாம் எழுத்தாளர் என்று பேசப்படும் திரு. ஆரூர் தாஸ் அவர்கள் தினத்தந்தியில் சொன்ன விஷயம் 2015 கால கட்டத்தில் வெளி வந்தது
    " எம்ஜிஆரின் தோல்விப்படம் என்று சொல்லப்படுபவைகள் கூட வசூலைப் பொறுத்தவரை " யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்கிற கதைதான் என்று சொல்லியிருந்ததை கண்டிப்பாக அனைவரும் படித்திருக்கலாம்,

    இந்த மாதிரி தலைவரை வசூல் மன்னன் என்று சொன்ன நடிகர் விவேக் நாயாம்,

    சரி அண்மையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசியது இது ...

    " சிவாஜியை விட மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்து, சிவாஜியை விட மிகப்பெரிய சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் யாரும் பிடிக்க முடியாத உயரத்தில் எம்ஜிஆர் அவர்கள் இருந்தார்கள், அவரைப் பற்றி தெரியத் தெரிய நான் அவருடைய முழுமையான ரசிகனாகவே மாறி விட்டேன் "

    சரி இவருக்கு என்ன பட்டம் கொடுப்பார்களோ தெரியவில்லை?!

    எங்கள் தலைவரின் வானளாவிய செல்வாக்கு என்ன என்பதை கொரோனா
    தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்த பிறகு தமிழகம் முழுவதும் தலைவரின் படங்கள் எப்படி கொடி கட்டிப் பறக்கிறது என்பதை சன் டி. வி செய்திகளிலும் மற்ற சமூக வலை தளங்களிலும் பார்த்திருப்பீர்கள் ...( ஏகப்பட்ட கணேசன் குஞ்சுகளுக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்,
    வயிறு அதிகமாக எரிந்தால் gelusil குடிப்பது நல்லது என்று சொல்லுகிறார்கள் )

    ஓடிக்கொண்டிருக்கும் காரை சில சமயம் ஆக்ரோஷமாக சில தெரு நாய்கள் விரட்டு வதை பார்த்திருக்கலாம்
    அதனால் காருக்கு என்ன நஷ்டம்?
    தெரு நாய்தான் அடிபட்டு சாகும்,

    எனவே ராசுகளே இந்த மாதிரி பாப்பா கதையை எங்கள்ட்ட ஓட்ட வேண்டாம்,

    ஓரமா தள்ளிப் போய்
    விளையாடுங்க சரியா?


    தலைவரின் பக்தன் ...


    ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

  4. #1303
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/11/20* அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------
    நடிகர்கள் பாலாஜியும் ,நாகேஷும் காரில் பயணிக்கிறார்கள் .ஒரு ஊரில் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த குடிசையில் தங்கியிருந்த* பெண்களிடம் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள்.* ஒரு மூதாட்டி ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் . அதை குடித்த பின் நடிகர் பாலாஜி அந்த மூதாட்டியிடம் நன்றி தெரிவித்து ரூ.100/- தருகிறார் .* அதை பெற்று கொண்ட அந்த மூதாட்டி* ரொம்ப நன்றி, எம்.ஜி.ஆர். வாழ்க என்கிறார் .* நடிகர் நாகேஷ் அந்த மூதாட்டியை கேட்கிறார் .என்னம்மா பணம் கொடுத்தது நாங்கள். நீங்கள் எம்.ஜி.ஆர். வாழ்க என்றால் என்ன அர்த்தம் என்கிறார் . ஆமாம் ஐயா, அவர் இப்படி கொடுத்து பழகியதால்தான் நீங்கள் எல்லாம் கொடுக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு மனம் வருமா என்று கூறி,மீண்டும் எம்.ஜி.ஆர். வாழ்க என்கிறார் .* நாகேஷ், பாலாஜியிடம் மீண்டும் காரில் பயணிக்கும்போது, ஒரு நடிகர்** நல்ல சிவப்பு நிறத்துடன் வந்து ஏழை எளியோருக்கு பணம் கொடுக்கிறார்* என்றால் அநேகமாக அவர் எம்.ஜி.ஆர். அல்லது அவரது உதவியாளராகத்தான் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதை மாற்ற நம்மால் முடியாது என்றாராம் . அதே போல சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை எந்த ஊர், எந்த கிராமத்திற்கு சென்றாலும் மனமுவந்து ஏழை எளியோருக்கு ஒருவர் உதவி செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் எம்.ஜி.ஆராகத்தான்* இருப்பார் என்கிற விதையை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு போன வற்றாத ஜீவநதி, அமுதசுரபி, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். மறைந்தும் மறையாமல் இன்னும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் .


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த புதிதில், கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையுடன் கருப்பு சிவப்பு நிறம் கலந்து துண்டு ஒன்று தோள்களில் அணிந்து இருப்பது* ஒரு ட்ரேட் மார்க் ஆக இருந்தது . டீக்கடை தொழிலாளர்கள், ஓட்டலில் வேலை செய்பவர்கள், மூட்டை தூங்குபவர்கள் ,ரிக் ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் , தொழிலாளி வர்க்கத்தினர் அனைவரின் தோள்களிலும் அந்த துண்டுகள் காணப்பட்டன . அதனால்தான் ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்தபோது, திருச்சிக்கு செல்வதற்கு* மட்டும் 12 மணி நேரம் தாமதம் ஆனது . . வழக்கமான பயண* நேரம் 5 மணி 30நிமிடம்* ஒவ்வொரு பெரிய ஊரிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் பயணித்த ரயில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு வழி நெடுக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரவேற்பு கொடுத்ததால் இந்த நிலை ஏற்பட்டது .ரயில்வே வரலாற்றில்*ஒரு ரயில் திருச்சிக்கும், மதுரைக்கும் இவ்வளவு தாமதமாக சென்று சேர்ந்த வரலாறில்லை .*


    ஒவ்வொரு ஊரிலும் அப்போதுதான் கட்சி தொடங்கி இருப்பார்கள் . அந்த ஆர்வத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை வரவேற்கும் பொருட்டு, தங்கள்* மார்பில், குண்டூசியால் குத்தி ரத்தம் வழிய அண்ணாவின் உருவத்தை ,மாரியம்மன் ,மற்றும் முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது போல மக்கள்**கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களுக்கு படையெடுத்து தங்கள் தங்க தலைவருக்கு மகத்தான வரவேற்பு அளித்தார்கள் .* அப்படிதான் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்* *இப்படி ஒவ்வொரு தொண்டனும் ரத்தம் சிந்தி ,கட்சியை வளர்த்தது மட்டுமின்றி தங்களின் அபரிமிதமான ஆதரவை ,அன்பை ,பாசத்தை, ,மழை போல் தங்கள் தலைவர்மீது பொழிந்தனர் .**எம்.ஜி.ஆர். அவர்களும் மக்கள் மீது மாறாத அன்பையும், பாசத்தையும், காட்டி*மக்கள் வெள்ளத்தில், கூட்டத்தில், மிதந்து, நீந்தி வந்தார் என்று செய்திகள்*தெரிவித்தன.**


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களுக்காக எந்த அளவிற்கு துன்பங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் தாங்க முடியுமோ, அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் எதையும் சாதிக்க துணிந்து கட்சியை ஆரம்பித்து மக்கள் ஆதரவை திரட்டினார்* *அதனால்தான் இன்றைக்கும் அவர் மக்கள் திலகமாக இருந்து மக்கள் தலைவராக உயர்ந்து நிற்கிறார் . தன்னம்பிக்கை,* மக்கள் மீது நம்பிக்கை* வைத்து , ஜெயிக்க முடியும்** என்பதில் நம்பிக்கை கொண்டவர் .ஏழ்மை, வறுமை, அவமானம், கிண்டல், கேலி, பரிகாசம் எல்லாவற்றையும் தாங்கியவர்**,அனைத்தையும் மீறி, ஒரு சாதாரண, சாமான்ய மனிதன், மிக பெரிய படிப்பில்லாமல் , எந்த ஒரு ஜாதி பாகுபாடில்லாமல்,**மிக பெரியவர்கள் ஆதரவில்லாமல், போதிய பணவசதி இல்லாமல்,**மிக பெரிய நிலை இல்லாமல்*இப்படி எதுவும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்* தன்னம்பிக்கை என்று ஒன்று இருந்தால் போதும், மக்கள் ஆதரவுடன், செல்வாக்குடன் நினைத்ததை சாதிக்கலாம், வெற்றி பெறலாம், ஏன் இந்த நாட்டையே பலர் அதிசயிக்கத்தக்க வகையில் பல ஆண்டுகள் ஆளலாம் .என்பதற்கு சாகாவரம் பெற்ற ஒரு மந்திரச்சொல்தான் எம்.ஜி.ஆர். .**


    திரு.கா.லியாகத் அலிகான்*:* *சேலத்தில்*நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக நான் கலந்து கொண்டு*பேச முடியாமல் போனதை*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மனதில் நிலை நிறுத்தி, ஓராண்டுக்கு பிறகு கடலூரில் நடைபெற்ற* அ . தி.மு. க. மாநில மாநாட்டில்*பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கியபோது , எனக்கே தெரியாமல், லியாகத்*அலிகான் பேசுவார்*என்று தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிபாரிசு செய்துள்ளார் . அந்த மாநாட்டில்*பொது செயலாளராக இருந்த*ப.உ.சண்முகம் அவர்கள் ,மேடையில்*லியாகத் அலிகான் தற்போது ராஜேந்திரனின் படத்தை*திறந்து வைத்து பேசுவார்* என்று அறிவிப்பு செய்தார் . ஏனென்று இதை சொல்கிறேன் என்றால் ,சேலம் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக ஒருவன் பேச முடியவில்லை,வாய்ப்பு கிடைக்கவில்லை*. அவனுக்கு இந்த கடலூர் மாநாட்டிலாவது பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று*மனதளவில் நினைத்து, ஓராண்டுக்கு பிறகு அந்த வாய்ப்பை அளித்ததோடு,சேலத்தில்*பேச முடியாமல் போனதால் அவனுடைய உள்ளம் வருத்தம் அடைந்திருக்கும். அந்த வருத்தம் தீரவேண்டும் என்றால் அவன் பேசியாக வேண்டும் என்று கருதி வாய்ப்பு அளித்தவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.* அந்த கடலூர் மாநாட்டில்*தான் செல்வி ஜெயலலிதா அவர்கள்*அ. தி.மு.க.விற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். ஜெயலலிதா அவர்கள் மாநாட்டில் பெண்ணின் பெருமை ,மற்றும் மகளிர் சிறப்பு*பற்றியும்*விவரித்து பேசினார்கள் . அந்த அம்மையார் பேசும்*அதே மேடையில் என்னையும் பேச வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், என் பேச்சை கேட்டு 86 தடவைகள் பார்வையாளர்கள் கைதட்டியதை நேரில் கண்டு, நான் பேசி முடித்ததும் ,என்னை தேடி வந்து கன்னத்தில் ஒரு தட்டு தட்டியதோடு,**மாநாடு முடிந்ததும்* என் அருகில் வந்து என் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திய* தலைவரின் நெஞ்சத்தை**இன்று நினைத்தாலும் என். உள்ளமெல்லாம் பூரிக்கிறது, புல்லரிக்கிறது.*


    இன்னொரு சம்பவம்*ஒன்றை சொல்கிறேன்.* அடிமைப்பெண் படத்தில்*இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா என்கிற பாடலை*பாடுவதற்கு*மறைந்த*திரு.எஸ்.பி.பாலசுப்ரம ணியம் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது .ஆனால் பாடல் பதிவிட இருந்த நேரத்தில் அவருக்கு*டைபாய்டு காய்ச்சல் வந்துவிடுகிறது .அவரால் பாட முடியவில்லை.**அவர் நல்ல முறையில் குணமாகி வந்தபின்*பாடல் பதிவை வைத்து கொள்ளலாம். படப்பிடிப்பையும் தள்ளி வைக்கலாம் என்று தலைவர் எம்.ஜி.ஆர். முடிவு செய்கிறார் .* இடையில் சிலர்*வேறு யாரையாவது வைத்தோ, அல்லது டி.எம்.எஸ்.அவர்களை வைத்தோ பாடல் பதிவு செய்யலாமே என்று யோசனை தெரிவிக்கிறார்கள்.* ஆனால் தலைவர் அவர்கள், நாம் ரிகர்சல் செய்து அறிமுகம் செய்துவிட்டதால் ,அவருடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், எம்.ஜி.ஆர்.படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதுபாடலை நன்றாக பாடியுள்ளேன். நன்றாக வந்திருக்கிறது* என்றுபெருமையாக* சொல்லியிருப்பார் .* வேறு யாரையாவது வைத்து பாடல் பதிவு செய்துவிடலாம்.* அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. ஆனால்* எஸ்.பி.பி* ஒரு . இளைஞர். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய நம்மை போன்றவர்கள்தான் வழி காட்ட வேண்டும்.* அவரது முன்னேற்றத்திற்கு நாமே*இடையூறாக, தடையாக இருப்பது தவறு. கொஞ்ச காலம் பொறுத்திருப்பதில் தவறு ஒன்றுமில்லை. என்று கூறினார் . பின்னர் அவர் குணமாகியதும், மீண்டும் அழைத்து பாடல் பதிவில்*பாடியதும்*,அந்த பாடல் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் உலக புகழ் பெற்றார்*என்பது வரலாறு. அந்த பாடலை*பாடிய பின் எஸ்.பி.பி. அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பணிவாக சில கேள்விகள் கேட்டு திருப்தி அடைந்தார். அதாவது இந்த சிறிய வனுக்காக நான் குணமாகும்வரை*இத்தனை நாட்கள்*காத்திருந்து வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.**ஆனால் இடையில் நீங்கள் வேறு யாரையாவது வைத்து பாடல் பதிவை*முடித்து இருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன். எனக்காக படப்பிடிப்பையும் சில மாதம் தள்ளி வைத்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு மிகவும் பெரிய மனது. உங்களுடைய பெருந்தன்மைக்கு நன்றி கூறி, இந்த இளைஞனின் எதிர்காலம் சிறப்பாக அமைய*தாங்கள் வழிகாட்டியதற்கு வணக்கம் தெரிவிக்கிறேன் என்று நெகிழ்வுடன் பேசியுள்ளார் .* சேலம் மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக**பேச முடியாத எனக்கு*கடலூர் மாநாட்டில் ஓராண்டுக்கு பிறகு ஞாபகத்தில் வைத்து கொண்டு மீண்டும் பேச வாய்ப்பு அளித்த*பெருந்தகைதான்*திரு.எஸ்.பி.பி.க்கு*1969 ல்* தன் சொந்த படத்தில் பாட வாய்ப்பளித்து, அவர் உலக புகழ் அடைய காரணகர்த்தாவாக திகழ்ந்த வற்றாத ஜீவநதி, எட்டாம் வள்ளல், காடம்பாறை நீரேற்று திட்டததை அமுல்படுத்திய கருணை கடல், ஓடும் பாம்பை மிதிக்கும் உள்ள துணிவு, வாழும் தொண்டனின் பரவச சிரிப்பாக வாழ்ந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்து பார்க்கின்றபோது, நான் மட்டுமல்ல, ஏழை எளியோர்கள், அற்புதமான தொண்டர்கள் என அனைவரும் எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்து இன்றைக்கு எங்களை நாங்கள் உற்சாகப்படுத்தி கொண்டு,*ஆசுவாசப்படுத்தி கொண்டு 2021ல் மீண்டும் புரட்சி தலைவர் எம்ஜி.ஆர். ஆட்சி அமைய இ .பி.எஸ்.அவர்கள், ஓ.பி.எஸ்.அவர்கள் இணைந்து பாடுபட வேண்டும் என்றும் அதற்கு தொண்டர்கள் பட்டாளம் தேனீக்கள் போல சுற்றி வந்து கட்சிக்காக பாடுபட தயாராக உள்ளார்கள் என்பதோடு, குற்றம் , குறைகள் சொல்வது ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சிகளின் வேலை. அவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் . நாம் நமது பணியினை செவ்வனே செய்வோம் என்று*கவிஞர் பாரதிதாசன் வார்த்தைகளான* போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்* என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எம்ஜி.ஆர்.அவர்களை மனதில் நினைத்து, நாம் எல்லோரும் பணியாற்றவேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே உங்களுக்கு எடுத்து சொல்லி*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் முன்னாள் ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் உரையாடியதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .*


    முன்னாள் குடியரசு தலைவர் திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்தபோது,மரியாதை நிமித்தம்* அவரை சந்திக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விருப்பம் தெரிவிக்கிறார். அதற்கு சம்மதம் கிடைத்தவுடன் சந்திக்கிறார் .* திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் உலக விஷயங்கள் அறிந்த ஒரு தத்துவ மேதை .* அவர் அன்றைய கால கட்டத்தில்*ஹிட்லர் இருந்தபோது* ஹிட்லரின் தோள்மீது*தட்டியபடி, ஹலோ என்று* குரல் கொடுத்து*உரையாடி இருக்கிறார் என்று சொல்லுவார்கள் .* ஹிட்லரும் இவர் மீது பாசம் வைத்துள்ளதாக* நான் படித்திருக்கிறேன் . அப்படிப்பட்டவரை புரட்சி தலைவர் சந்திக்க செல்கிறார் .* அப்போது ஜனாதிபதி அவர்கள் தலைவருக்கு*தேனீர் அருந்தும்படி கேட்டு கொள்கிறார். தலைவர் அவர்கள் தேனீர்*காபி போன்ற பானங்கள் அருந்தமாட்டார் என்பது பொதுவாக அனைவரும் அறிந்தது .* தேனீர் வழங்கப்பட்ட போது தலைவர் அவர்கள் ஐயா* நான் தேனீர்*அருந்துவதில்லை .வேறு ஏதாவது பானங்கள் இருந்தால்*கொடுக்க சொல்லுங்கள் என்றார் .*பேரறிஞர் அண்ணாவின் தி.மு.க.வில் தலைவர் இருந்த சமயம் அது .அவருக்கு குடிக்க பால் தரப்படுகிறது . அதற்குள் இரண்டாவது முறை ஜனாதிபதி அவர்கள் தேனீர் அருந்துகிறார் . பின்பு தலைவர் அவர்கள் தான் சந்திக்க வந்த நோக்கம் ,மற்றும் பொதுவான விஷயங்கள்*பற்றி பேசுகிறார் .அப்படி பேசும்போது*மூன்றாவது முறை தேனீர்*அருந்துகிறார் .***அப்போது தலைவர் அவர்கள் ஐயா, நான் தவறாக கேட்பதாக தாங்கள் நினைக்க கூடாது*என்று தயங்கியபடி, குறுகிய நேரத்தில் இத்தனை தேனீர்* பல முறை அருந்துவது உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காதா என்று கேட்கிறார் .* தேனீர் பலமுறை அருந்துவது உடலுக்கு கெடுதல் என்று நீங்கள் கருத்து சொல்கிறீர்கள் .ஆனால் பல விஷயங்களுக்கு நமக்கு*டீ தேவைப்படுகிறது .* முதலில் ட்யூட்டி*நம் எல்லோருக்கும் அவசியம் . டிக்னிட்டி , பங்க்சுவாலிடி , எபிலிட்டி , எலிஜிபிலிட்டி**இவை எல்லாம் கூட நமக்கு தேவையானவை . இவற்றோடு நமக்கு*போதிய பப்ளீசிட்டி* கிடைத்தால் அதுவே*நமக்கு*பல நன்மைகளும், பதவிகளும், உதவிகளும், பல நேரங்களில்**கிடைப்பதற்கு ஏதுவாகும் .எனக்கு*மேற்கண்ட இந்த 5 டீக்களும் உள்ளது என்று நான் நம்புகிறேன்.* உங்களுக்கு இந்த 5 டீக்களுடன் முக்கியமானதொரு டீ இருக்கிறது என்று**தெரியுமா என்று கேட்கிறார் . எனக்கு தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் என்கிறார் தலைவர் .அதுதான்*உங்களுடைய பர்சனாலிட்டி . ஆனால் எனக்கு அது இல்லை. இந்த பர்சனாலிட்டி உள்ள உங்களை இந்த உலகமே போற்றும்*அளவில் ஒரு உயர்ந்த நிலையை*நீங்கள் அடைவீர்கள் என்று அன்றைக்கே*ஜனாதிபதி அவர்கள் ஆருடம் சொன்னார் .* இந்த செய்திகளை நான் ஒரு நூலில் படித்திருக்கிறேன்*


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் உரையாடிவிட்டு*விடை பெறுகிறார் .* திரு.ராதாகிருஷ்ணன் நினைவு தினத்தை ஆசிரியர் தினமாக*அனுஷ்டிக்கப்படுகிறது .* ஒரு சாதாரண ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் நாட்டின் உயரிய பதவியான*குடியரசு தலைவர் பதவிக்கு*உயர்ந்து*பெருமை சேர்த்தவர் .* ஜனாதிபதி அவர்களிடம் விடை பெற்று வணக்கம் தெரிவித்து காரில் பயணிக்கும்போது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உதவியாளரிடம் ஜனாதிபதி அவர்களுக்கு 5 டீக்கள் இருக்கின்றன என்று அவரே குறிப்பிட்டார் . எனக்கு*அந்த 5 டீக்களுடன் ஆறாவது*டீயான*பர்சனாலிட்டி இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அந்த ஆறாவது*டீ எனக்கு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவருக்கு அந்த ஆறாவது*டீயான பெண்டாட்டீ* அமைந்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் .*கலோக்கியலாக சகஜ நிலையில்*பேரறிஞர் அண்ணா பேசுவதை போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அந்த பண்பு நிறையவே இருந்தது . அவருடைய நண்பர்களாக நேசித்தவர்கள் கூட,* பதவி வந்த உடனே, பயந்துபோய் அப்படியே ஒதுங்கி, ஒதுங்கி*நின்றவர்களை எல்லாம் அருகில் அழைத்து, உட்கார வைத்து* ஒரு நண்பனை போல் பேசக்கூடிய பண்பாளர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இவ்வாறு, திரு.லியாகத் அலிகான் பேசினார் .*



    1.

  5. #1304
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.ஜேம்ஸ் வாட்*அவர்களுக்கு வணக்கம்.

    மாற்று முகாம் நண்பர்களுக்கு தாங்கள் அளித்து வரும் சூடான, சுவையான,பதில்கள், கண்டு மகிழ்ச்சி.* தாங்கள் குறிப்பிட்ட படி இந்த அகிலமே*சொல்லும்*அவர் வசூல் சக்கரவர்த்தி.* என்று .* திரைப்பட*உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரியாததா*. மீரான் சாஹிப் தெருவில்*சென்று*தலைவரின்*படங்களுக்கு உள்ள மார்க்கெட், மவுசு, இத்யாதிகள் பற்றி விசாரித்து*, இதர நடிகர்களுக்கு உள்ளவற்றோடு ஒப்பிட்டு*கொள்ளட்டும்.* அப்போதும்.அவர்கள் இதே*தேய்ந்து போன ரிகார்டைத்தான் போடுவார்கள்.* கொரோனா காலத்திற்கு பிறகு ,தமிழக அரசின்*அனுமதியின்படி அரங்குகள் திறக்கப்பட்டதும், தலைவரின்*படங்கள்தான் பெருநகரம், மாநகரம், துணை நகரம், கிராமங்கள் அனைத்தையும்*ஆக்கிரமித்து உள்ளன. எல்லாம் தெரிந்தும்*நாங்கள் அப்படித்தான் புலம்புவோம். தெரியாத மாதிரி நடிப்போம், தூங்குவது போல பாசாங்கு செய்வோம்*என்பவர்களை திருத்த நம்மால்*முடியாது .தொடரட்டும்*உங்களின்*தாக்குதல்கள் .நன்றி .* **
    பாகப்பிரிவினை சாதனையை*ஒரு நாள்* அதிகமாக ஒட்டி உ.சு.வாலிபன் படத்தை*சாதனை*என்று புலம்புவதாக கூறும்*அய்யனின் பிள்ளைகளே , எங்க வீட்டு*பிள்ளை வெள்ளிவிழா* 7 அரங்குகளில் சாதனையை*1965ல்* நிகழ்த்தியது . 14 ஆண்டுகள்*கழித்து தலைவர் திரை உலகை விட்டு முதல்வரான பின்புதான்*ஒரு அரங்கு அதிகப்படுத்தி 8 அரங்குகளில் தெருசூலம்*படத்தின்*வெள்ளிவிழா சாதனையை*நிகழ்த்த முடிந்தது .வேலூரில்*வடக்கயிறு, ஸ்ட்ரெச்சர் எல்லாம் வைத்து இழுத்தார்களே அதை என்னவென்று சொல்வது .பைத்தியக்காரன்*பத்தும் சொல்வான்*போகட்டும் விட்டுவிடு .**

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #1305
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் !
    ---------------------------
    இது ஓர் உலகச் சாதனை படம்

    போஸ்டர் ஒட்டாமலே இமாலய வெற்றி தேவி பேரடைசில் 213 -ம் நாள் 80 சதவீத கூட்டம் ஏற்கனவே அமிதாப்பின் ஹீராபேரி படம் புக் ஆனதால் எடுக்கப்பட்டது

    ஷிப்டிங்கில் பல திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த படம் .
    அதிக திரையரங்குகள் பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் .

    ஆளும் கட்சியின் சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்கிய படம் .

    ஒர் அரசாங்கத்தையே மாற்றிய படம் .

    இயக்குனர் எம் ஜி ஆரால் காட்சிகள் செதுக்கப்பட்டன .

    இப்படி சாதனைகளை சொல்லிக் கொண்டு போனால் வாரக்கணக்கு தாண்டி வருடகணக்காகிவிடும் .

    படத்தின் வெளிப்பற படப்பிடிப்பால் வண்ணக் கனவுகளில் மிதந்தோம் .

    கிள்ளை மொழி , வெள்ளை மனம் . கொஞசும் குமரியின் பிள்ளைத் தமிழ் கேட்டு பித்தனாகியோர் ஏராளம் .

    ஆம் தாய்லாந்து நடிகை
    மேத்தா ரூங்ரேட்டா இன்றும் நம் நினைவில்
    இளமை மாறாமல் வலம்
    வருகிறார் .

    இப்பாடலின் துள்ளல் இசைக்கு மயங்காதவர்
    இலர் .

    பச்சைக்கிளி முத்துச்சரம் ..........Hd...

  8. #1306
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1968 லயே மக்கள் திலகம் வசூல் சக்ரவர்த்தி என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த ரகசிய போலீஸ் விளம்பரம். அதை நிரூபிக்கிறா மாதிரி 10 நாளில் சென்னயில மட்டும் 2 லட்சத்து 37 ஆயிர ம் வசூல். வெறும் 10 நாளில். 1969 ல் வெளியான மாற்று முகாம் படம் ஒன்று விளம்பரம் பாத்தேன்.சென்னையில் 4 வாரம் (28 நாள் )ஓடியே 3 லட்ச்த்து 65 ஆயரம்தான் வசூல். ரகசிய போலீஸ் 4 வாரத்தில சென்னையில்் 4 லச்சத்தை தாண்டிவிட்டார். தமிழ்நாடு பூராம் 4 வாரத்தில் கணக்கு போட்டு பாருங்கள். விளம்பரத்தில் உள்ளபடி மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்று புரியாதவங்களுக்கும் புரியும்.rrn...

  9. #1307
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பது உறுதியானதும் தலைவர் பக்தர்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கத்தினர் தலைவர் படங்களில் எதை திரையிடுவது என பரபரப்பாகினர். ஒரு மாதம் முன்பே மதுரையிலிருந்து உறுதிபடுத்தினர் உலகுக்கு சத்தமாக! போஸ்டர் விளம்பரங்களை ஒட்டி அமர்க்களத்தை தொடங்கி வைத்தது மதுரை. அடுத்து கோவையில் இரண்டு தியேட்டர்களில் உறுதியானது. தலைவர் படங்கள் அனைத்தையும் டிஜிட்டலில் தயாரிக்க வேண்டும் என்ற நமது வேண்டுகோளை தினமலர் அறிவித்தது. அடுத்தடுத்து பல ஊர்களில் தலைவர் படங்கள் ஆரவாரமாக திரையிட தயார் என அறிவித்தனர் திரையரங்க நிர்வாகத்தினர். அந்த நாளும் விடிந்தது. பெருமழை வரும் முன் இடி இடிப்பது போல தீபாவளிக்கு முன் 10 ம்தேதி பல ஊர்களில் தலைவர் காவியங்களால் திரையுலகம் அதிர உலகமே தமிழகத்தை திரும்பி பார்த்தது.தினமும் நேரில் சென்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கொரோனா விழிப்புணர்வை கடைபிடித்து தலைவரை தரிசித்து உலகுக்கே முன் உதாரணமாக நடந்து காட்டினர் புரட்சித் தலைவர் பக்தர்கள். எனக்கு இந்த தியேட்டருக்கு சென்று வீடியோ , புகைப்படம் வேண்டும் என்றவுடன் மூத்த அண்ணன்கள் மற்றும் 17 வயது தம்பிகள் வரை தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு உடனே எடுத்து அனுப்பினர். படம் பார்க்க முதல் ஆளாக சென்று 100 ரூபாய் டிக்கெட்டுடன் தலைவர் முகம் பார்க்க நவீன திரையரங்கில் நுழைந்த மூதாட்டி நம்மை எல்லாம் பரவசப்படுத்திய நிகழ்வை மறக்க முடியுமா? மூத்த அண்ணன் ஒருவர் குடும்ப சகிதமாக சென்று நம்மை போல ஆர்வத்துடன் பலவித கோணங்களில் புகைப்படம் வீடியோ எடுத்து 2 நாட்களாக நம்மை ஆச்சரியப்பட வைத்ததை பதிவிடவா...கூலி தொழிலாளி ஒருவர் இரண்டு தியேட்டர்களில் பேனர் வைத்து பூஜை வழிபாடு நடத்தியதை பதிவிடவா...வெளியூர் சென்று தலைவர் படத்தை கண்டுகளித்த சகோதரர்களைப் பற்றி பதிவிடவா... எங்கு தலைவர் படம் திரையிடப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரங்களை உடனுக்குடன் தந்த, தந்து கொண்டிருக்கிற சகோதரர்களைப் பற்றி பதிவிடவா...சுவர் விளம்பரம் உள்பட தியேட்டரை சுழன்றடித்து தகவல் தந்த சகோதரர் பற்றி பதிவிடவா...தென்மாவட்டத்தில் எழுப்பிய வாழ்த்து கோஷம் தீபாவளி சத்தத்தை தோற்கடித்து இன்றும் நம் காதுகளில் அதிர்கிறதே அதற்கு காரணமான மதுரையை வணங்கி மகிழ்வதை பதிவிடவா...தங்கள் ஊரில் தரிசிக்க முடியாவிட்டால் என்ன முத்து நகரத்தில் தலைவரை தரிசிப்போம் என கடல் அலையென பொங்கி சென்ற நெல்லை அடலேறுகளின் உணர்ச்சியை விவரிக்கவா... சென்னையில் நடந்த வழிபாட்டால் தீயகிருமி விடைபெற்றதோ என நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளதே...எதை விவரிப்பேன்...யாரைப் பாராட்டாமல் விட்டுவிட்டேன்...என எண்ணி எண்ணி வியந்தபடி இத்தொகுப்பை தற்காலிகமாக நிறைவு செய்கிறேன்...நன்றி வணக்கத்துடன் சாமுவேல்....

  10. #1308
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்_திரையுலக_பயணம்

    #ஊருக்கு_உழைப்பவன்...

    ராஜா (மக்கள் திலகம்) பெரும் செல்வந்தர் ..கொள்ளைக்கூட்டத்தாரால் கடத்தப்படுகிறார். ஏற்கனவே அந்தக்கூட்டத்தினை பிடிக்க பெரும் முயற்சி காவல் துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பலனாக ராஜாவை போலவே தோற்றம் கொண்ட ரகசிய போலீஸ் அதிகாரி செல்வம் (மக்கள் திலகம்-இரு வேடத்தில்) வருகிறார். அவர் கொள்ளையர்களை பிடித்து ராஜாவை மீட்டாரா என்பதே படத்தின் கதை.

    இந்த படத்தை வித்தியாசப்படுத்துவது மக்கள் திலகத்தின் அசத்தலான நடிப்பு . துப்பறியும் ஏஜண்ட் செல்வம், எதிர்பாராமல் மல்லிகாவை (வாணிஸ்ரீ) யை திருமணம் செய்கிறார். அதே சமயத்தில் எந்த அதிர்ச்சியையும் தாங்கமுடியாத செல்வந்தர் ராஜாவின் மனைவி காஞ்சனா (வெ.ஆ.நிர்மலா)விற்கும் கணவனாக நடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இதனால் ஏற்படும் குழப்பத்தில் தன் ஒரே மகனையும் இழக்க நேரிடுகிறது. இந்த காட்சிகளெல்லாம் அந்த காலத்தில் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை கவர்ந்தது.

    கொள்ளைக்கூட்டம்-சண்டடைக்காட்சிகள்-கொலை, கொள்ளை என காட்சியமைக்காமல்,படத்தின் பெரும்பகுதி மக்கள் திலகம்-வாணிஸ்ரீ-வெ.ஆ.நிர்மலா ஆகியோரிடையேயான குடும்ப நிகழ்வுகளை காட்சிகளாக அமைத்திருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

    படத்தில் க்ளைமேக்சில் வரும் ஹெலிகாப்டர் சேசிங் நன்றாக படமாக்கப்பட்டிருந்தது. மெல்லிசை மன்னரின் இசையில் முதல் முறையாக டி.எம்எஸ் இல்லாமல் பாடல்கள் முழுவதையும் மக்கள் திலகத்திற்கு ஏசுதாஸ் பாடினார். "இது தான் முதல் ராத்திரி" "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்" "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" "அழகென்னும் ஓவியம் இங்கே" போன்ற பாடல்கள் இன்றைக்கும் கேட்க வைக்கின்றன.

    மக்கள் திலகத்தோடு...வீரப்பா, தேங்காய் சீனிவாசன், குமாரி பத்மினி ஆகியோரும் நடித்திருந்தனர்.

    உலகம் சுற்றும் வாலிபன்,, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களைப்போல் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையாவிட்டாலும், வசூலில் வெற்றி பெற்ற படமானது "ஊருக்கு உழைப்பவன்".........Sr.babu...

  11. #1309
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் மனதை கவர்ந்த நடிகர் -Makkal Thilagam MGR

    எத்தனையோ பல மொழி திரைப்படங்களை பார்த்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்ஜிஆர் தான் என்பதை பெருமையுடன் கூறுகிறேன் . எம்ஜிஆரின் ஆரம்ப கால படங்களில் அவரின் வசீகர தோற்றம் ,வெண்கல குரல் ,

    வீர தீர விளையாட்டுக்கள் நிறைந்த சாகசங்கள் ,என்று ராஜா -காலத்து கதைகளாக இருந்தது . ராஜகுமாரி - மருதநாட்டு இளவரசி -மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மர்மயோகி -குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன்
    புதுமை பித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி -விக்கிரமாதித்தன் - காஞ்சித்தலைவன் போன்ற படங்களில் எம்ஜிஆர் அவர்கள் அரச உடையில் ஒரு நிஜ மன்னராகவே
    தோற்றமளித்தார் .

    எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லா படங்களிலும் காணலாம் . எம்ஜிஆர் ஒரு சகலாகலாவல்லவர் என்பதை
    நாடோடிமன்னன் - அடிமைப்பெண் - உலகம் சுற்றும் வாலிபன் படங்கள நிரூபித்தது .

    என் தங்கை - மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - நல்லவன் வாழ்வான் - பாசம் - பெற்றால்தான் பிள்ளையா படங்களில்
    அவரின் சோக நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது .

    பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - குடியிருந்த கோயில் -மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - உரிமைக்குரல் - இதயக்கனி போன்ற படங்களில் எம்ஜிஆரின் நடிப்பும் காட்சிகளும்
    பாடல்களும் சிறப்பாக இருந்தது . சண்டை பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம் .எல்லாவிதமான சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆரின் ஸ்டைல் தனி சிறப்பு இருந்தது.

    எம்ஜிஆர் பட பாடல்கள் - தேனிசை விருந்து . காதல் பாடல் - அறிவுரை தத்துவ பாடல் - சோக பாடல் என்று இவரின் பாடல்கள் என்றுமே தோற்றதில்லை .எம்ஜிஆர் ஒரு புதுமை விரும்பி என்பதை அவரின் பல படங்களில்அணிந்திருந்த
    உடைகளே சாட்சி .மாறு வேட காட்சிகளில் எம்ஜிஆரை போல் வேறு எந்த நடிகரும் இது வரை நடித்ததில்லை .
    பெரும்பாலான படங்களில் எம்ஜிஆர் ஓடி வரும் அழகே தனி அழகு . சண்டை காட்சிகளில் அவர் அடிக்கும் டைவ்
    எதிரிகளை பந்தாடும் பாங்கு ,சிரித்து கொண்டே சண்டை போடும் முக பாவம் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

    காதல் காட்சிகளில் அவரின் புன்னகை தோற்றம் , காந்த விழிகள் , நம்மை மயக்கி விடும் . எம்ஜிஆரின் காதல் பாடல்கள்
    எல்லாமே படு சூப்பர் . எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தது 115 படங்கள் .குறைந்தது 100 படங்கள் இன்று பார்த்தாலும்
    மனதிற்கு நிறைவாகவும் , தெம்பாகவும் , புத்துணர்ச்சியும் அளிக்கிறது .

    இப்படி பல பெருமைகளை திரை உலகிற்கு வழங்கிய எம்ஜிஆரை நான் என் மானசீக குருவாக ஏற்று கொண்டது என் வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் . Vnd.........

  12. #1310
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'Age cannot wither her', 'Her infinite variety of Cleopatra' என்று Antony &
    Cleopatra வில் Shakespeare கிளியோபாட்ராவை வர்ணித்திருப்பார். தமிழில் சொன்னால் வயது 'அவளை வாட்டாது'. 'அவள் ஒரு நவரச நாடகம்'
    என்று எங்கள் ஆங்கில கல்லூரி பேராசிரியர் பாடம் நடத்தியது என் ஞாபகத்துக்கு வருகிறது.

    அவர், 'அவள் ஒரு நவரச நாடகம்' என்று சொல்லி நிறுத்தியவுடன் நாங்கள் அனைவரும் கோரஸாக 'ஆனந்த கவிதையின் ஆலயம்' என்று பாட ஆரம்பித்தவுடன் ஸ்டாப் ஸ்டாப் என்று 5 நிமிடம் நிறுத்தியவுடன்தான் மாணவர்கள் நிறுத்துவார்கள். பாடம் நடத்தும் ஒவ்வொரு முறையும் இதே மாதிரிதான் நடக்கும். மாணவர்கள் உற்சாகத்தின் விளிம்புக்கே சென்று விடுவார்கள்.

    ஆம். காலங்கள் எத்தனை கடந்தாலும் கிளியோபாட்ராவின் அழகு குறையவில்லை என்பதை ஷேக்ஸ்பியர் மிக அருமையாக சொல்லியிருப்பார். இதையே கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சர்வர் சுந்தரம் படத்தில் 'சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு' பாடலில் அற்புதமாக சொல்லியிருப்பார். 'அன்னமிவள் வயதோ பதினாறு ஆண்டுகள் போயின ஆறுநூறு.
    இன்னும் இவள் முதுமை எய்தவில்லை, என்னதான் ரகசியம் தெரியவில்லை' என்ன ஒரு கற்பனை நயம். ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் சொன்ன அந்த வசனம் உலகபிரசித்தி பெற்றது. அதற்கு சற்றும் குறையாத வார்த்தை ஜாலம்.

    காலங்கள் பல கடந்தாலும் சிலைவடிவில் நின்றிருக்கும் பெண்ணின் வனப்பு சற்றும் குறையவில்லையாம். அதேபோல் 'காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன'? என்று கவிஞர் பாடிய அத்தனையும் காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்த உயிரோவியங்களின் வர்ணனை என்றே சொல்ல வேண்டும்.

    அதைப்போல் காலங்கள் கடந்தும் நிலைபெற்றிருக்கும் காவியம் யாவும் புரட்சி தலைவரின் வண்ண ஓவியங்களான அவரது திரைப்படங்கள்தான். மற்ற திரைப்படங்கள் யாவும் காலத்தில் மறைந்து மலரும் நினைவுகளாக இருக்கும் வேளையிலே புரட்சி நடிகரின் வண்ணக் காவியங்கள்
    யாவும் அழியா சிரஞ்சீவியாக இன்றும் மக்கள் விரும்பக்கூடிய திரைப்படங்களாக திரையில் வலம் வருவதை பார்க்கும் போது கவிஞர் பாடிய காலம்தான் நினைவில் நிழலாடுகிறது.

    'பராசக்தி', 'மனேகரா'வின் காலங்கள் மங்கி விட்டன. 'கட்டபொம்மன்', கெட்ட கனவாகி விட்டான். 'பாகப்பிரிவினை', 'பாசமலர்' மக்களின் நேசம் இழந்து நிற்கிறது. 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்' யாவும் பக்தியின் பரிணாமத்தில் நவீனமாகி விட்டது.
    'வசந்த மாளிகை', 'தங்கப்பதக்கம்', 'திரி சூலம்' யாவுமே நூலிழந்த பட்டம் போல எங்கோ சென்று மறைந்தது.
    ஆனால் ஆண்டுகள் போயின 62. இன்னமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற "நாடோடி மன்னனை" மறக்க முடியுமா?

    எத்தனை இளந்தளிர் வந்தாலுமே காலத்தால் மறையா என்றும் "எங்க வீட்டு பிள்ளை" யாய் திகழும் காவியத்தை மறக்க முடியுமா? "படகோட்டி" "ஆயிரத்தில் ஒருவன்" "அன்பே வா" "குடியிருந்த கோயில்" "ஒளிவிளக்கு" "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" "உலகம் சுற்றும் வாலிபன்" "உரிமைக்குரல்" "இதயக்கனி" போன்ற படங்கள் மக்கள் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்கிறது.

    அதுபோல் இன்னும் பல கலர் காவியங்கள் மட்டுமல்ல கருப்பு வெள்ளை காவியங்களும் சேர்ந்து ரவிவர்மன் ஓவியமாய் இன்றும் மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கின்றன. கொரானாவை தாண்டி திரைக்கு வந்த படங்களில் மதுரை சென்ட்ரலில் வெளியான "தர்மம் தலைகாக்கும்" தீபாவளியன்று ரூ30 டிக்கெட்டில் 146 பேரும் ரூ40 டிக்கெட்டில் 90 பேரும் பார்த்து ரூ9000 ஒரு காட்சியின் மொத்த வசூலாக பெற்றது மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்தாலும் எங்களுக்கு அது அதிசயமில்லை. அன்றைய தினத்தில் பல படங்களுக்கு 2,3 பேர் கூட இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையும் கைபுள்ளைங்க கண்டிருப்பார்கள். கவிஞர் பாடியதைப்போல் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் வலம் வருவது உலக வரலாற்றில் காணமுடியாத விந்தை எனலாம்.

    நமது கைபிள்ளைகளுக்கு ஒரு படமும் வெளியாகவில்லையா?
    கொரானாவுக்கு பயப்படாதவன் கூட கணேசனின் படங்களுக்கு பயப்படாமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். கொரானா கொல்வதற்காக 15 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நம்ம கணேசன் படங்கள் அவ்வளவு கால அவகாசம் கொடுப்பதில்லை என்று கேள்வி..........KSR.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •