Page 29 of 29 FirstFirst ... 19272829
Results 281 to 287 of 287

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #281
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?

  அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி...

  இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓட.

  விசில் அடிச்சான் குஞ்சுகளா...விரைவில் வெம்பி பழுத்த பிஞ்சுகளா.

  இவை எல்லாம் ரசிகர்கள் மன்றம் கண்ட தோழர்களுக்கு வழங்க பட்ட சர்டிபிகேட்கள்.

  அந்த பொன்மன செம்மல் ஆட்சியில்.

  1.முதன் முதலாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

  2....விவசாய விளைநிலங்கள் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக 10 ஆண்டுகளில் உயர்ந்தது.

  3....கரும்பு விளைச்சலில் இந்தியாவில் 10 ஆண்டுகள் முதல் இடம்.

  4...நெல் உற்பத்தியில் 2 ஆம் இடம்.

  5....மின் உற்பத்தியில் 3 ஆம் இடம்.

  6....ஆலயங்கள் தோறும் விளக்கேற்றி வைக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக இங்கே தமிழகத்தில்.

  7....விளைச்சல் இல்லாத நேரங்களில் விவசாயிகளின் சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை கடனுக்கு பதில் பறிமுதல் செய்யக்கூடாது என்ற சட்டம் முதலில் இந்தியாவில் இங்கே.

  8....குடிசை வீடுகளுக்கு குண்டு பல்பு இப்ப இருந்தா எல்.ஈ.டி.. போட்டு இலவச மின்சாரம்.

  9....முதன் முதலாக விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்.

  10....அரசு சார் ஓட்டுனர்களுக்கு உணவு படி.

  11....முதன் முதலில் குடும்ப ரேஷன் அட்டைகள் வழங்க பட்டது தலைவர் ஆட்சியில்.

  12..காவலர் உடை சீர்திருத்தம், மகளிர் காவல் துறை....கொண்டு வந்தார்.

  13....அறநிலையத்துறை மூலம் சிறப்பு திருமணம்..வசதி இல்லா ஜோடிகளுக்கு சீரவேட்டி, புடவை, தாலி மற்ற சீர்பொருள்கள் வழங்க பட்டு திருமணம்

  இன்னும் இருக்கு ஏராளம்....தொடரும்...

  வாழ்க எம்ஜியார் புகழ்.

  நன்றி...உங்களில் ஒருவன்..

  இந்திய அளவில் எந்த லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்காத ஒரு சில முதல்வர்களில் ஒருவர் நம் தலைவர்...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #282
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  #நெஞ்சமுண்டு #நேர்மையுண்டு

  1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில்அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து,சிலையைப் பார்த்து, குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர்.பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.

  எம்.ஜி.ஆருக்காக, கண்ணதாசன் வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்தவேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!

  “நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!
  ஓடு ராஜா!
  நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
  அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
  ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”

  எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?

  ‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும்இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோகாத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி,கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும்போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டுஓடுவதுபோல் எழுந்து ஓடு!’

  என்றல்லவா எம்ஜிஆர் வீர முழக்கமிடுகிறார்.

  அற்புதமான புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!

  “அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?

  கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….

  எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன?நியாயந்தானே!

  ‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்;நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்பவாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக்கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?'

  மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான்என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சிவினாக்களை எழுப்பி,வீரம் விளைவிக்கும்விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான்முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்!அப்படித்தானே!

  இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!

  “அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்அருகினில் ஓலை குடிசை கட்டி,

  பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்தபூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”

  அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?

  ‘உயர்ந்து நிற்கும் வானளாவிய மாளிகைகள்! அதன்ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானாபொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால்இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப்படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’

  இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?

  விடைகள் தரப் புறப்பட்டு வரும் கண்ணதாசன்வரிகள்இதோ!
  எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப் படுவதைக்காணீர்!

  “உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு

  உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!

  ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! –அதில்

  நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!

  விடைகளைக் கண்டீர்களா?

  ‘உறுதிகொண்ட நெஞ்சம் உள்ள இளைஞனே!
  உன்நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன்காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்தபூமியின் ராஜா!
  உன்னைப் போன்ற இளைஞர்களைவிட்டு விட்டு இந்த பூமி இயங்க முடியுமா?
  எனவேகவலையை விட்டுவிடு!

  வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப்பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத்தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’

  எல்லாம் சரிதான்! கண்ணதாசன், புரட்சித்தலைவர் இருவரும்கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோஇடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!

  ஆமாம்! கண்ணதாசன் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில்மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்லமுடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.

  அந்த ஈற்றடி இதுதான்….!

  “நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து! ” என்பதே.

  இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர்தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளைஉயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டியதீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!

  #மக்கள்திலகம் #மந்திரச்சொற்களுக்குக் #கட்டுப்பட்டமக்கள் #தானே, #பலரது #மனக்கோட்டைகளுயும் #தகர்த்தெறிந்து #விட்டு #அவரை #செயின்ட்ஜார்ஜ் #கோட்டையிலே #முதல்வர் #ஆசனத்தில் #அமரவைத்தனர்....

 4. #283
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,283
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில் வின் டிவியில்*திரு.துரை பாரதி*15/06/20* அன்று அளித்த*தகவல்கள்*
  -----------------------------------------------------------------------------------------------------------------------------

  *மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்* நடித்து, இயக்கி, தயாரித்த*உலகம் சுற்றும் வாலிபன் 1973 மே மாதம் வெளியாகி 25 அரங்குகளில் 100 நாட்கள் ,சென்னையில் 2 அரங்குகள், மதுரை, திருச்சி, கொழும்பு நகரங்களில்**வெள்ளிவிழா கண்டது .அதிகபட்சமாக மதுரையில் 217 நாட்களும், திருச்சியில் 203 நாட்களும் கொழும்புவில் 201 நாட்களும் ஓடியது . தமிழ் திரையுலகில் ,தமிழ்நாட்டில் எங்கும் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல், அன்றைய ஆளும் கட்சியின் எதிர்ப்புகளை முறியடித்து ,சுவரொட்டிக்காக அதிக வரி விதிக்கப்பட்ட மாநகராட்சிகள் முடிவை பொருட்படுத்தாது* 1973 வரை வெளியான அனைத்து தமிழ் படங்களின் சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றது .எப்போது வெளியிட்டாலும் மறுவெளியீடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்கிறது . விரைவில் டிஜிட்டல் வெளியீடாக வெள்ளித்திரைக்கு*வர உள்ளது .

  உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை பல சிரமங்களுக்கு இடையே , மிக உன்னதமாக தயாரித்தார் .படத்தில் நடித்த கலைஞர்களுக்கு கதை பற்றி ஒன்றும் தெரியாது இயக்குனர் எம்.ஜி.ஆர். அமைக்கும் காட்சிகளின்படி அவர்கள் நடிக்க வேண்டும்*.ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து [போன்ற நாடுகளில் படப்பிடிப்பு* நடத்திவிட்டு ,அதை சத்யா ஸ்டுடியோவில் படத்தொகுப்பாளர் உமாநாத் உதவியுடன்* அதை படமாக தொகுத்தார் வெள்ளித்திரையில் முழு படத்தையும் படத்தில் நடித்த கலைஞர்கள் பார்த்து பிரமித்து விட்டார்கள் . படம் வெளியான பின்புதான் இயக்குனர் எம்.ஜி.ஆரின் திறமை வெகுவாக பேசப்பட்டது இந்த திரைப்படத்தை தயாரித்தது பற்றி பொம்மை சினிமா மாத இதழில் , திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம் என்ற தொடரை எம்.ஜி.ஆர். வெளியிட்டு இருந்தார் ... சிங்கப்பூரில் டைகர் பாம் பூங்காவில் சிரித்து வாழ வேண்டும் என்கிற* பாடல் படப்பிடிப்பு நடந்தது . உள்ளூர் குழந்தைகள் கணிசமான அளவில்*காட்சியில் பங்கேற்றனர் . அந்த குழந்தைகளின் முகவரியை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு , படப்பிடிப்பு முடிந்து ஒய்வு நேரத்தில், ஒவ்வொரு குழந்தை வீட்டிற்கும் தன்* உதவியாளருடன்* சென்று* *விலையுர்ந்த பொம்மைகளை பரிசாக வழங்கி அவர்களின் அன்பை பெற்றார் .இதுதான் எம்.ஜி.ஆரின் சிறந்த குணம் .


  ஜப்பானில் எக்ஸ்போ 70 பொருட்காட்சியானது பல மைல் தூரம் விரிவாக்கம் உடையது .அந்த பொருட்காட்சியில் ,யாரவது தவறி போனால், யார் எங்கே இருப்பார்கள், எப்படி சந்திப்பது என்பது அந்த ஜனக்கடலில் தெரியாது* *அந்த சூழ்நிலையில் படத்தின் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர் ராவ் ஒரு இடத்தில போய் கொண்டிருக்கிறார் . அங்கே பள்ளி குழந்தைகள் வரிசையாக சென்று கொண்டிருக்கிறார்கள் . அதே இடத்தில நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு ,உறவினர் மனோகர் ஆகிய மூவரும் ஒரே சீருடையில்* எதிரே தென்பட்டார்கள் . அவர்களை சங்கர் ராவ் சந்தித்து நலம் விசாரிக்கிறார் . அவர்கள் பதிலுக்கு, எங்கள் பள்ளி மூலமாக* எக்ஸ்போ 70 பார்க்க வந்துள்ளோம் .மற்ற மாணவர்கள் வேறு இடத்தில உள்ளார்கள் ., நாங்கள் பொருட்காட்சியை சுற்றி பார்ப்பதுடன் , பெரியப்பா படம் படப்பிடிப்பு சிறிது நேரம் பார்க்க ஆசைப்படுகிறோம் என்று* சொன்னார்கள் , உடனே அவர்களை சங்கர் ராவ், அருகில் இருந்த எம்.ஜி.ஆரிடம் அழைத்து செல்கிறார் . எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்ததும் ,உற்சாகம் அடைந்து , நலம் விசாரித்து, எப்படி, யாருடன் வந்தீர்கள் .என்னென்ன பார்த்தீர்கள் . உணவருந்தாகி விட்டதா ,என்று கேட்டுவிட்டு, அவர்களை அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று சாப்பிட வைத்து,*பின்னர் படப்பிடிப்பு குழுவினரிடம் மேற்கொண்டு பணிகளை கவனிக்கும்படி சொல்லிவிட்டு,அவர்கள் மூவரையும்* பள்ளி ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் இருக்குமிடம் அறிந்து அவர்களை பத்திரமாக கொண்டு போய்* சேர்த்துவிட்டு வந்தார் . இந்த செய்கைக்கு காரணம், நடிகர் சிவாஜி கணேசனுடன் தொழில் ரீதியாக நட்பும், நல்லுறவும் ,பொதுவாக குழந்தைகளின் மீது உள்ள அபரிமிதமான அன்பும் ,** ஆரம்ப காலங்களில் நல்ல நண்பராகவும் பழகியதே .*


  பொதுவாக எம்.ஜி.ஆர்.* படப்பிடிப்புகளில் . நான்* குறிப்பிட்ட ஸ்டெப்புகளில் இடது புறத்தில் இருந்து வலது புறம் திரும்பி* *கையை தொட்டு* சிலம்பத்தில்*எட்டாவது அடி உனக்கு விழும் என்று ஸ்டண்ட் மாஸ்டருக்கு சொன்னார் என்றால் சரியாக எட்டாவது அடியில் அந்த ஸ்டண்ட்* மாஸ்டருக்கு அடி விழும்இது எம்.ஜி.ஆரின் கணித கணக்கு . இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் என்னவாகும் என்றால்உதாரணத்திற்கு ,ஒருமுறை அன்னமிட்டகை படத்தில் சிலம்பம் சுற்றும்போது பத்தாவது ஸ்டெப்பில் உனக்கு ஆடி விழும் என்று ஸ்டண்ட் நடிகருக்கு சொன்னதில்* பத்தாவது அடிதானே என்று அலட்சியமாக நடித்தபோது , பத்தாவது அடியில் ஸ்டண்ட் நடிகரின் சுண்டு விரல் அடிபட்டு ரத்தம் கொட்டியது . உடனே படப்பிடிப்பை எம்.ஜி.ஆர்.நிறுத்திவிட்டு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தன் சொந்த செலவில் செய்து**, எந்த தொழிலாக இருந்தாலும் அதில் கவனம் தவறினால் இப்படித்தான் காயப்பட்டு அவதிப்பட நேரிடும் , எனவே இனிமேல் சண்டை காட்சிகளில் மிகவும் எச்சரிக்கையாக நடிக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுருத்தினார் எம்.ஜி.ஆர்.*.


  ஒருமுறை சத்யா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் இருக்கும்போது ,சத்யா ஸ்டூடியோ மேலாளர் பத்மநாபன் எம்.ஜி.ஆர். காதில் ஏதோ விஷயம் ஒன்றை சொல்ல, எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஒப்பனை அறைக்கு செல்கிறார் . ஸ்டூடியோ வாசலில் எண்ணற்ற மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர் .அவருக்கு தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது .உடனடியாக எம்.ஜி.ஆர். கருணாநிதியின் உறவினர்களான ஒளிப்பதிவாளர் அமிர்தம் , வசன ஆசிரியர் சொர்ணம் ஆகிய இருவரையும் படப்பிடிப்பு குழுவில் இருந்து விலகி தங்கள் வீட்டிற்கு அவசரமாக திரும்பும்படி, தன் உதவியாளர்கள் மூலம் சொல்லி அனுப்புவதோடு , அவர்களை பாதுகாப்பாக காரில் அனுப்பி வையுங்கள் என்று உதவியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் .**.தனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, தன்னை நம்பி வந்தவர்களுக்கு எந்த ஆபத்தும், எந்த பிரச்னையும் நேரக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறை எடுத்துக்* கொண்டார் என்பதே எம்.ஜி.ஆரின் உயர்ந்த குணத்திற்கு சான்று .


  மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

  நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காட்சிகள் / பாடல்கள் விவரம்*
  -----------------------------------------------------------------------------------------
  1.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*

  2.சிரித்து வாழ வேண்டும்* - உலகம் சுற்றும் வாலிபன்*

  3.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*

  4.சண்டை காட்சிகள் - நினைத்ததை முடிப்பவன்*

  5. இரண்டு* எம்.ஜி.ஆர்.கள்* சந்திப்பு - குடியிருந்த கோயில்*

 5. #284
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,283
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*16/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
  -----------------------------------------------------------------------------------------------------------------------
  பெங்களுருவில் ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் கலந்து கொள்ளும் பாடல் காட்சி. காட்சியை காண வந்த கன்னட ரசிகர்கள் சிலர் நிர்மலாவை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதுமாக இருந்தனர் .* எம்.ஜி.ஆர். தன்* கருப்பு கண்ணாடியால் அதை கவனித்து விடுகிறார் .பாடல் காட்சி முடிந்ததும் அந்த இளைஞர்களை அழைத்து தன் காரில் ஏற்றிக்* கொள்கிறார் .* கார் மெதுவாக செல்லும்போது ஓரிடத்தில் தன் புறங்கையால் இளைஞர்களை அடித்து விடுகிறார் .அதில் மூவருக்கு முகத்தில் சரியான அடி. சிறிய ரத்த காயங்கள் . அடிபட்டதும் ,அந்த இளைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் . உடனே அவர்களுக்கு தலா ரூ.500/- கொடுத்து* தனது*டாக்டரின்*உதவியால் முதலுதவி பெற செய்து ,*இது உங்கள் ஊர் , நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள் என்று* நம்பித்தான்**படப்பிடிப்பை நாங்கள் இங்கு நடத்துகிறோம் .குறிப்பாக ஒரு பெண்ணிடம் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா , இதுபோன்று இனி எந்த படப்பிடிப்பிலும் நடந்து கொள்ளாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்தாராம் .  நவரத்தினம் என்கிற படத்தில் ஒரு சண்டை காட்சியில் எம்.ஜி.ஆரும், மும்பையில் இருந்து வந்திருந்த ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி என்பவரும் மோதும் காட்சி அமைப்பு . *ஸ்டண்ட் மாஸ்டராக சியாம் சுந்தர் அருகில் இருந்தார் . எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு, இவர் பெரிய ஸ்டண்ட் நடிகர், மாஸ்டர், வீரர், சூரர் என்று சொல்கிறார்களே ஆனால் தோற்றத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லையே, சண்டை காட்சியை வேடிக்கை பார்ப்பவர் போல் உள்ளாரே* என்று ஷெட்டி சொல்லிக் கொண்டிருந்தாராம் .அதை கேட்டு,பெரிதாக* காட்டிக் கொள்ளாத எம்.ஜி.ஆர். காட்சி ஆரம்பிக்கும்போது , ஷெட்டியை அழைத்து ,காட்சியில் நான் இரண்டு முறை என் கைகளால்**உங்களை தூக்குவேன் . மூன்றாவது முறை உயர* தூக்கி கீழே வீசும்போது நீங்கள் உங்கள் உடம்பை பேலன்ஸ் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான்** உங்களுக்கு காயம் ஏற்படாது .கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு ஷெட்டி, நான் பார்க்காத , செய்யாத சண்டை காட்சிகளா .பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் அலட்சியமாக , ஸ்டண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரும் ஷெட்டியிடம் காட்சியை பற்றி விளக்கினார் . பிறகு*நடிக்கும்போது ஷெட்டியின் அலட்சியத்தால் எம்.ஜி.ஆர். உயர தூக்கி கீழே போடும்போது விழுந்து ஷெட்டியின் விழா எலும்புகள் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஆறு மாத காலம் சிகிச்சையில் இருந்தார் .சிகிச்சைக்கான செலவு முழுவதையும் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்இனிமேலும் சண்டை காட்சியில் நடிக்கும்போது அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுரையும் சொன்னார் . .  அன்பே வா திரைப்படத்தில் ,நெல்லூர் காந்தாராவ் என்று ஒரு ஸ்டண்ட் நடிகர் எம்.ஜி.ஆருடன் மோதும் சண்டை காட்சி . காட்சியின் முடிவில் எம்.ஜி.ஆர். அவரை அலாக்காக தூக்கி, தன் தோளில் சில வினாடிகள் சுமத்தி , பிறகு கீழே போட வைக்கும் காட்சி .* 1959ல் ஒரு நாடக காட்சியில் குண்டுமணி என்கிற ஸ்டண்ட் நடிகரை இதே போல உயர தூக்கி கீழே போடும்போது , அவர் தவறி எம்.ஜி.ஆர். காலின் மீது விழுந்து* எலும்பு முறிவு ஏற்பட்டு** சில மாதங்கள் எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருந்தார் . அவர் குணமானதும் முன்போல் சண்டை காட்சிகளில் வழக்கமாக நடிக்க முடியாது , ஸ்டண்ட் நடிகர்களை உயர தூக்கி கீழே போட முடியாது என்று சிலர்* சினிமா உலகில் பேசிக் கொண்டிருந்தனர் .இந்த கிசுகிசு, வதந்தி, கருத்துக்களை எல்லாம் முறியடிப்பது போல தன்* உடல் வலிமையையும் மற்றவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு அன்பே வா படத்தில்*நெல்லூர் காந்தாராவை* இலகுவாக தூக்கி ,கீழே போடுவார் எம்.ஜி.ஆர்.*இந்த காட்சியை கண்டதும் ,எதிர்மாறாக பேசியவர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள் என்று பேசப்பட்டது .இதற்கு பின்னால் வந்த படங்களிலும் பல்வேறு விதமான சண்டை காட்சிகளில் புதுமையை புகுத்தி, முன்பை விட, வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடித்து ரசிகர்களிடம்*நல்ல வரவேற்பை பெற்றார் .  பொதுவாக எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சரி , அல்லது வெளிப்புற படப்பிடிப்பு நடந்தாலும் சரி, சக கலைஞர்கள் கண்ணியம், பாதுக்காப்பு ஆகியவற்றிற்கு எந்த பிரச்னையும் நேராமல் காப்பதில் வல்லவர்* ஒரு முறை உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே, எக்ஸ்போ 70ல்* சுற்றி வந்தபோது*,எம்.ஜி.ஆரும், சந்திரகலாவும் மஞ்சுளாவும்**சுமார்*10 அடி**தூரத்தில் இருக்கிறார்கள் .நடிகர் நாகேஷும்* சற்று அருகில் இருக்கிறார் . அந்த நேரத்தில் சுற்றுலா வேன்* அருகில் வந்து நிற்கிறது . அந்த வேனில் இருந்து இறங்கிய ஒருவர் நன்றாக குடித்து இருக்கிறார் . அவர் மஞ்சுளா*, சந்திரகலா இருவர் இருக்குமிடத்திற்கு* நெருங்கி**வந்து ஏதோ பேசுகிறார் . திடீரென்று சந்திரகலா தோளின் மீது கை வைக்கிறார் . இதை* கவனித்த எம்.ஜி.ஆர். மின்னலென பாய்ந்து வந்து அந்த நபரை*ஓங்கி அடித்து கீழே தள்ளி விடுகிறார் . இதை*எதிர்பாராமல் பார்த்த நாகேஷ,வியந்து** இதனால் என்ன விளைவுகள் வருமோ என்று பதறி போகிறார் .* அடிபட்ட நபர் தன் தவறை உணர்ந்து*ஜப்பானிய மொழியில் தலை குனிந்து*மன்னிப்பு கேட்டுக் கொண்டு விலகி செல்கிறார் .* தன்னை நம்பி* நடிக்க வந்திருந்த கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவது, அவர்களுக்கு எந்த ஆபத்தும், துன்பங்களும் நேராமல்*தானே தலையிட்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பது* என்பதில்**எம்.ஜி.ஆருக்கு நிகர் ஒருவருமில்லை .இதுபோல*பல சம்பவங்களில் தன் திரையுலக*வாழ்க்கையில்*பலருக்கு எம்.ஜி.ஆர். உதவியதுண்டு .


  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில், திரையுலகில் பல ஏற்றங்களையும், சரிவுகளையும் சந்தித்த அனுபவம் வாய்ந்த , பல பாடங்களை*கற்பிக்க கூடிய ஆசான் .* வாழ்வில்*பிடிப்பு இழந்தவர்களை ,எதிர்காலம் உங்கள் கையில்*இருக்கிறது. நம்பிக்கையோடு முன்னேறுங்கள், வெற்றி நிச்சயம் என்று அறிவுரை கூறும் ஒரு பல்கலை கழகம்*,* இந்த பல்கலை கழகத்தை பற்றி , பல அறிஞர்கள், ஆசிரியர்கள்* எழுதிய*சுமார்*470* நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் இதுவரை வெளிவந்துள்ளது என்றால் தமிழக தலைவர்களில் எம்.ஜி.ஆர். ஒருவருக்குத்தான் .* அவரை பற்றிய பல நூல்களும் , பல அரிய*தகவல்களும்* இன்னும்**வெளிவந்த வண்ணம் உள்ளன . இந்த அரிய தகவல்கள்*நாம் அர்த்தம் உள்ளதாக* வாழ்வதற்கான பாடங்களாக உள்ளன .


  தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

  நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
  --------------------------------------------------------------------------------------------------
  1.கண்ணில் தெரிகின்ற வானம் - ரகசிய போலீஸ் 115

  2.உலகம் அழகு கலைகளின் சுரங்கம்*-உலகம் சுற்றும் வாலிபன்*

  3. எம்.ஜி.ஆர். -நெல்லூர் காந்தாராவ்*சண்டை காட்சி*- அன்பே வா*

  4.தங்க தோணியிலே*தவழும் பெண்ணழகே*-உலகம் சுற்றும் வாலிபன்*

 6. #285
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,283
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்* *17/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
  ---------------------------------------------------------------------------------------------------------------------
  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் சிலர் அவரது படம் பார்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால், ரத்தம் கொடுத்து பணம் வாங்கி பார்ப்பதாக எம்.ஜி.ஆருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன . இதை அறிந்த எம். ஜி.ஆர். எனது ரசிகர்கள் எனது படத்தை பார்ப்பது மகிழ்ச்சிதான் .ஆனால் ரத்தம் கொடுத்து என் படம் பார்ப்பதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன் . ஏனென்றால் அவர்களது உடல்நலம் முக்கியம் . அவர்களை நம்பி குடும்பம் இருக்கிறது . அப்படி எனது படம் அவசியம் பார்த்துதான் ஆகவேண்டும் என்கிற முடிவில் இருந்தால் அவர்கள் என்னிடம் தங்கள்* முகவரியை அனுப்பி வைக்கலாம்* . நான் மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் எனவே , அவர்கள் தங்களின் உடல்நலம், குடும்ப நலம் கருதி அந்த தவறை இனியும் செய்யாமல், மேற்கொண்டு இதுபற்றி எந்தவித புகாரும் எனக்கு வராத அளவில் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார் .தான் அறிவித்தபடி சிலருக்கு பணம் அனுப்பியதாக வெளிவந்த தகவல்கள் உறுதி செய்தன .  எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் இருந்தாலும், கலந்து கொள்ளாவிட்டாலும் அரசியலில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற விஷயங்களை**,நுட்பமாகவும் ,உன்னிப்பாகவும் கவனித்து* செயல்பட்டு**வந்தார் . அதனால்தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் , பொருளாளர், சிறுசேமிப்பு துணை தலைவர் போன்ற பதவிகளில்* எல்லாம் அவர்* சிறப்பாக செயல்பட முடிந்தது .தி.மு.க. சார்பில்*பொதுக்கூட்டங்களில், தேர்தல் பிரச்சாரங்களில் துரிதமாகவும், நடப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு மக்களிடம் , கட்சியின் கொள்கைகளை, அரசின் திட்டங்களை எளிதில் சேர்க்க முனைப்புடன் செயல்பட முடிந்தது .இந்த செயல்கள்தான்* தி.மு.க.விற்கு* வெற்றியை தேடித்தர உதவியது .எம்.ஜி.ஆரால்தான் தி.மு.கவின் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை பட்டி, தொட்டியெல்லாம்* சினிமா மூலம் பரவியது .  எம்.ஜி.ஆர். தன்னை திட்டியவர்கள், எதிர்த்தவர்களை எல்லாம் அவர்கள் சொல்லாமலேயே வெற்றியடைய செய்தவர் . தேர்தல் பிரச்சாரங்களில் நடிகர் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்யும்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு,சிரித்துக் கொண்டே* தம்பி, சிவாஜி கணேசனுக்கு அரசியலில் போதிய அனுபவம் இல்லை .அரசியல் அவ்வளவாக தெரியாது என்று கருத்து தெரிவித்தார் .பதிலுக்கு சிவாஜி கணேசன் நான் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளேன் . எனக்கும் ஓரளவு அரசியல் தெரியும் என்றார் . ஆனால், எம்.ஜி.ஆருக்கு அரசியலில் இருந்த ஈடுபாடு, செயல்படும் விதம் , நடப்பு விஷயங்கள் பற்றி கருத்து கூறுவது , பொது காரியங்களில்*உதவுவது, காய் நகர்த்தும் திறமை போன்றவற்றில் சிவாஜி கணேசனுக்கு*அந்த அளவில் ஈடுபாடோ, அனுபவமோ கிடையாது என்பது உலகறிந்த விஷயம்அதனால்தான் சிவாஜி கணேசனால் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவியை கூட* .பெற முடியாமல் போனது .  எம்.ஜி.ஆர். தனது வாழ்நாளில் குடிப்பது என்பதை அனுபவிக்கவில்லை* . திரைப்படங்களில் குடிப்பது போல் நடித்ததுமில்லை .குடித்துவிட்டு வருபவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வதில்லை . அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதுமில்லை .எம்.ஜி.ஆர். தனது 100 வது படமான ஒளிவிளக்கு*படத்தில் குடிப்பது போல ஒரு காட்சி இருந்தது . ஒளி விளக்கு படம் இந்தியில் தர்மேந்திரா நடித்த பூல் அவுர் பத்தர் என்கிற படத்தின் தழுவல் . ஜெமினி அதிபர் வாசன் கதைப்படி அந்த காட்சி அமைய வேண்டும் என்று விருப்பப்பட்டார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு அதில் விருப்பமில்லை . குடிப்பது போல்* நடிப்பதை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . எனக்கு தர்மசங்கடமாக உள்ளது* என்று*கவிஞர் வாலியிடம் ஆலோசனை கேட்டாராம் .* கவிஞர் வாலி, அந்த காலத்தில் நடிகர் பி.யு. சின்னப்பா ஒரு வேடத்தில் குடிப்பது போல நடிப்பார் . இன்னொரு வேடத்தில் குடிப்பதை விமர்சனம் செய்து பாடல் காட்சியில் நடித்துள்ளார் . அதுபோல நீங்கள் குடிப்பது போல ஒரு வேடத்தில் நடியுங்கள் . இன்னொரு வேடத்தில் குடிப்பதனால் விளையும் தீமைகள் குறித்து ஒரு பாடல் காட்சி அமைத்து முடிக்கலாம் .என்று யோசனை சொன்னார் . அதை பலமுறை யோசித்து அரை மனதுடன் சம்மதித்து எம்.ஜி.ஆர். அந்த பாடல் காட்சியில்*ஒரு வேடத்தில் குடிப்பதுபோல் நடித்து , மற்ற நான்கு வேடங்களில் குடிப்பதன்*தீமைகளை விமர்சிக்கும் பாடல் பாடி, அசத்தியிருப்பார் . அந்த பாடல் வெள்ளித்திரையில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . தனது இமேஜ்*பற்றி மிகவும் கவலை கொண்டிருந்த எம்.ஜி.ஆர். படம் வெளியானதற்கு* பிறகு*எதிர்மறை கருத்துக்களோ, எந்த பிரச்சனைகளோ வராததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கவிஞர் வாலிக்கு நன்றி தெரிவித்தார் .


  மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*


  நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  -----------------------------------------------------------------------------------------
  1.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*

  2.நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை*

  3.புதிய வானம் புதிய பூமி* - அன்பே வா*

  4.ஏன் என்ற கேள்வி* - ஆயிரத்தில் ஒருவன்*

  5.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*

 7. #286
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,283
  Post Thanks / Like
  பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*18/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
  -----------------------------------------------------------------------------------------------------------------------
  சகாப்தம் நிகழ்ச்சி* சரித்திர சாதனை படைக்கும் வகையில் இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கிற**செயலாளர்கள் , அமைச்சர்கள் ,கல்வி வள்ளல்கள், கல்வி தந்தைகள் பலரையும் கவர்ந்துள்ளது . இவர்கள்* எல்லாம்* எம்.ஜி.ஆர். எனும்* ஒரு இமயமலை, மாமலையின் ஈகை தன்மையால் விளைந்த பயிர்கள் என்பதை தமிழகம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது .. இன்றைக்கு இந்த மாமலையின் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்வோம்*


  திரையுலகிலும்,அரசியல் உலகிலும் ,பல ஜாம்பவான்கள், சாதனையாளர்கள் உருவாகி இருந்தார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு சாமான்ய மனிதராக இருந்து*சரித்திரம், சாதனை, சகாப்தம் படைத்த ,மாமனிதராக* உருவானது ஒரு வரலாறு .ராமச்சந்திரன் எனும் இந்த சந்திரன் ஒரே நாளில் உச்சத்திற்கு சென்று வானில் ஜொலிக்கவில்லை .அந்த சிகரத்தை அடைய அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், சரிவுகள் , அனைத்தையும் வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி, படிப்படியாக உயர்ந்து உச்சாணி கொம்பில் ஏறினார் .உலக அளவில் ஒரு நடிகர் அரசியல், சினிமா என்கிற இரண்டு குதிரைகளை ஒரே சமயத்தில் சவாரி செய்து*வெற்றி எனும் சிகரத்தை அடைந்ததாக சரித்திரம் இல்லை . இவருக்கு பின்னால் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்த ரொனால்டு ரீகன், என்.டி.ராமராவ்*போன்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். தான் முன்னோடி .  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி அறிஞர் பெருமக்கள் எழுதிய சுமார்*160க்கு மேற்பட்ட புத்தகங்கள் தமிழிலும், சுமார் 10 புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன , இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன . எம்.ஜி.ஆரின்*புகழ் பாடும் புத்தகங்கள் மாதந்தோறும் , உரிமைக்குரல், இதயக்கனி* ஆகிய*பெயர்களில் வெளியாகி வருகின்றன .* கடந்த காலத்தில் மன்னாதி மன்னன், ஒளி விளக்கு என்கிற பெயரிலும் புத்தகங்கள் மாதந்தோறும் வெளியாகி வந்தன .எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தபோது, திரை உலகம், திரை செய்தி போன்ற இதழ்களில் சினிமா செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தன .எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் பிறந்த நாளை கொண்டாடியதில்லை . ஆனால் அவர் மறைந்த பிறகு, அவரது ரசிகர்கள் /பக்தர்கள் கடந்த 33 ஆண்டுகளாக நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடி, பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் மூலம் அன்னதானம் , சமூக நல திட்டங்கள் செயல்படுத்தி எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்து,அவரது மங்கா புகழை, மாண்பை**போற்றி வருகின்றனர் .  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிநாடுகளில் சுற்று பயணம் செய்யும்போதும், வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தபோதும்,பல்வேறு வகையான* விலையுர்ந்த காமிராக்கள் வாங்குவது வழக்கம். பல சமயங்களில் தானே* இயற்கை காட்சிகள், சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுப்பது வாடிக்கை . உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு* * பல**வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோதும்* ஏராளமான காமிராக்கள் வாங்கினார் .* பயண முடிவில் தன் அண்ணன் சக்கரபாணி, நடிகர்கள் நாகேஷ், அசோகன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் சங்கர் ராவ் ஆகியோருக்கு விலை உயர்ந்த காமிராக்களை பரிசளித்தார் . தான்* முதல்வரான பிறகு , சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாததால், தன்னிடம் இருப்பில் இருந்த பலவகையான காமிராக்களை , தன் வீட்டிற்கு விஜயம் செய்த பல புகைப்பட வல்லுனர்களுக்கு பரிசாக அளித்துள்ளார் .**  புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தான் சொந்தமாக தயாரித்து, நடித்து , இயக்கிய நாடோடி மன்னன் காலத்திலேயே, காமிரா கோணங்கள் வைப்பது பற்றி அறிந்து வைத்திருந்தார் . சில முக்கிய காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர்களுக்கு காமிரா கோணங்கள்* பற்றி* விளக்கி சொல்வதோடு, சில சமயங்களில் அவரே* காமிராக்களை இயக்கவும் செய்தார் .* பொதுவாக எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன்*படத்திற்கு பிறகு , தான் நினைத்தபடி பாடல்கள் அமையவேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார் .* அதன்படி பாடலாசிரியர்கள் எழுதும் பாடலை தனக்கு*திருப்தி வரும் வரை* தொடர்ந்து திருத்தங்கள் செய்து* தனது இமேஜ், கொள்கைகள் ,பாதிக்காத வகையில்,மக்களுக்கான சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் அவர்கள் மனதில் எளிதில் படியும்படி** எழுத வைத்தார் . இப்படி பல* பாடல்கள் சில நாட்களிலும் , சில பாடல்கள்* பல வாரங்களும் ஆகியுள்ளன ,*இப்படி பாடல்கள்மீது தனி அக்கறை கொண்டு பாடலாசிரியர்களை வேலை வாங்கியதன் பலன் திரைப்படம் வெளியான பின் தெரிந்துவிடும் . கவிஞர்களுக்கும் பேரும்* புகழும் கிடைத்துவிடும் . தொடர்ந்து பல படங்கள்*பாடல் எழுத வாய்ப்பும்* கிடைக்கும் . எம்.ஜி.ஆரின் . ஒரு படத்திற்கு பாடல் எழுதுவது மற்ற 10 படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு சமம் . இதே போலத்தான்*எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல .காமிரா கோணம், லைட்டிங் , இடம் , போன்றவை அவருக்கு திருப்தியாக இருக்க வேண்டும் .*எம்.ஜி. ஆரே ஒரு புகைப்பட வல்லுனர் .* ஆகவே, ஒழுங்காக, நல்லவிதமாக புகைப்படம் எடுப்பவர்க்கே, தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் .*அதனால்தான் சில ஒளிப்பதிவாளர்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது .* ஒளிப்பதிவாளர்களுக்கும்,பாடலாசிரியர்களுக்கும்*எம்.ஜ ி.ஆர். வேலை வாங்கும் விதம் சற்று கடினமாகத்தான் ஆரம்பத்தில் தோன்றும் . ஆனால் அந்த பணி, முழுமை பெறும்போது அதன் பலன் இரட்டிப்பு ஆகும் . அதனால்தான் எம்.ஜி.ஆர். பாடல்கள் காலத்தை வென்று ரசிக்கப்படுகின்றன . படங்களின் காமிரா கோணங்கள் ,ஒளிப்பதிவு* இன்றும் பாராட்டப்படுகிறது .


  பொதுவாக பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருக்கு குடிப்பவர்களை கண்டால் பிடிக்காது .எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆக்கபூர்வமான விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதி வந்தவர் இடதுசாரி சிந்தனையாளரான கார்த்தி என்பவர் .அவர் இயல்பிலேயே தொழிற்சங்க நிர்வாகி. காலப்போக்கில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்படுகிறது . ஒருநாள் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவிற்கு செல்லும்போது அருகில் உள்ள நடைமேடையில் வேட்டி சட்டையுடன் அலங்கோலமாக குடித்துவிட்டு ,படுத்துக் கிடக்கிறார் . அதை கவனித்த* எம்.ஜி.ஆர். காரை நிறுத்தி, தன்* உதவியாளரை அனுப்பி, தன சந்தேகத்தை உறுதி செய்கிறார் .* அது கார்த்திதான் என தெரிந்ததும் ,அவரை தன்* காரிலேயே ஏற்றி, கல்யாணி மருத்துவமனையில் அனுமதித்து , அங்குள்ள மருத்துவரிடம் இவர் என்னுடைய நண்பர் ,இவரை நல்லமுறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார் . அவரது வீட்டிற்கும் தகவல் அளிக்க சொன்னார் . அவர் சிகிச்சையில் உள்ள காலம் வரை சில மாதங்களுக்கு , குடும்ப* செலவிற்கான*மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி தருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தரும்படி தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை கேட்டுக்*கொண்டார் . இந்த கார்த்தி குணமாகி வந்த பிறகு பத்திரிகையாளர் சோலையிடம் சேர்ந்து பணி புரிந்து வந்தார் . கார்த்தி* தோற்றத்தில் எடுப்பானவர் .பெரிய மீசை வைத்திருப்பார் . எப்போதும் முழுக்கை சட்டை அணிவார் . இடதுகை சட்டையை மடித்து பார்த்தால், இந்த உயிர் எனக்கு எம்.ஜி.ஆர். அளித்தது என்று பச்சை குத்தி இருக்கும் .தொடர்ந்து ஜர்னலிஸம் படித்த அவர், எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக*விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தார் .* தன்னை எதிர்த்தவர்களையம் விமர்சனம் செய்பவர்களையும்* தனது ஆதரவாளர்களாக மாற்றும் திறமை, வல்லமை படைத்தவர்தான் எம்.ஜி.ஆர். அதனால்தான் காலம்கடந்து மக்கள் மனதில் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.*


  மேலும் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*


  நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  ------------------------------------------------------------------------------------------
  1.பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த -நினைத்ததை முடிப்பவன்*

  2.எம்.ஜி.ஆர்.- அசோகன் உரையாடல் - ரிக்ஷாக்காரன்*

  3.காஷ்மீர் பியுட்டிபுல்* காஷ்மீர் - இதய வீணை*

  4.நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற - இதயக்கனி*

  5.எம்.ஜி.ஆர். - நாகேஷ் உரையாடல் - அன்பே வா*

  6.எங்கே, என் இன்பம் எங்கே - நாடோடி மன்னன்*

  7.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா-லதா -உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*

  8.ஜவ்வாது மேடையிட்டு - பணத்தோட்டம்*

  9.சிலர் குடிப்பது போலெ நடிப்பார் -சங்கே முழங்கு*

  10.கடவுள் செய்த பாவம்* - நாடோடி*

  *
  *

 8. #287
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,283
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்* 19/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
  ------------------------------------------------------------------------------------------------------------------

  பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களை தனது தாயை போல மதித்து வந்தார் . ஒருமுறை கே.பி.எஸ்.அவர்கள்* தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம்* தொடர்பு கொண்டு உனக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விப்பட்டேன் என்று நலம் விசாரித்தார் . அதன் பிறகு எம்.ஜி.ஆர். திருமதி கே.பி.எஸ்.அவர்களை நேரில் சென்று பார்த்தார் . அப்போது தி.மு.க. ஆட்சியில் கோவை அருகில்,திருமதி கே.பி.எஸ்.அவர்களின் சொந்த ஊரான* கொடுமுடி அருகில் ஒரு கல்லூரி திறப்பதற்கு ,அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்திருந்தார் . அதே சமயத்தில் கொடுமுடியில் ,திருமதி கே.பி.எஸ்.அவர்கள் ஒரு திரையரங்கை கட்டி முடித்திருந்தார் . அந்த திரை அரங்கை அப்போதைய முதல்வர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., நடிகை ஜெயலலிதா மூவரும் ஒரே ஜீப்பில் தங்குமிடத்தில் இருந்து* **பயணம் செய்து** விழாவில் கலந்து கொண்டனர் .ஆக, மூன்று முதல்வர்கள் சேர்ந்து கலந்து கொண்ட நிகழ்ச்சியாக அந்த சம்பவம் பதிவானது .  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்கூட்டியே திருமதி கே.பி.எஸ். அவர்களிடம் அவரது பெயரில் கல்லூரி திறப்பதற்கான யோசனையை தெரிவித்திருந்தார் . அதன்படி* கொடுமுடியில் அவரது திரை அரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி திருமதி கே.பி.எஸ். அவர்களிடம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பணத்துடன்* அரசு சார்பாக ஒரு நிதியளித்து உங்கள் பெயரிலேயே கல்லூரி ஒன்று திறப்பதற்கு நண்பர் எம்.ஜி.ஆரும் ஆலோசனை கூறியபடி ஒரு திட்டம் இருக்கிறது என்று அறிவித்தார் .அதற்கு திருமதி கே.பி.எஸ்.உறுதி அளித்தார் .கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய மூவரையும் ஒரு சேர நிகழ்ச்சிக்கு ஒன்று கூட்டி**வரவழைத்தவர்**வசியக் குரலுக்கு சொந்தமான , நாம் வாழும் காலத்தில் அவ்வையாராக திரைப்படங்களில் வாழ்ந்த திருமதி கே.பி.எஸ். அவர்கள் பாராட்டுக்குரியவர்*திருமதி கே.பி.எஸ்.அவர்களுக்கும், மூன்று முதல்வர்களுக்கும் இந்த நிகழ்ச்சி* ஒரு மறக்க முடியாத பசுமையான நிகழ்வு .  புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1969ல் வெள்ளிவிழா படமாக தன் சொந்த தயாரிப்பில் அடிமைப்பெண் படத்தை ராஜஸ்தான் பாலைவனம், ஜெய்ப்பூர் அரண்மனை* போன்ற முக்கிய இடங்களில் படமாக்கி ,தொழில்நுட்ப* வளர்ச்சி ,*நவீன வசதிகள் இல்லாத காலத்தில் ஒருவித பிரமிப்பை படம் பார்க்கும்போது உண்டாக்கி இருந்தார் . அடிமைப்பெண் சிறந்த படமாக, மும்பையில்* பிலிம்பேர் விருது பெற்றது .இந்த படம் வெளியான காலத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் நடிகர் சிவாஜி கணேசன் காரில் அடிக்கடி ஒலித்ததாக அப்போது பேசப்பட்டது .அடிமைப்பெண் படத்தை பார்த்திருந்த நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியாவில்* எந்த திரையுலகிலும்*எந்த ஒரு தனி மனிதருக்கும்,நடிகருக்கும் இதுபோல காட்சிகள் அமைத்து, ரிஸ்க் எடுத்து நடிக்கும் தைரியம் கிடையாது என்று கருத்து தெரிவித்தாராம் .பாலைவன காட்சிகள், அரண்மனை காட்சிகள் , நீர்வீழ்ச்சி காட்சிகள்* படமாக்கம்**சிங்கத்தை தானே சுயமாக வளர்த்து ,திரைப்படத்தில் அதனுடன் சண்டை போடுவது , இவையெல்லாம் அண்ணன் எம்.ஜி.ஆரால்தான் முடியும். அதற்கு தனித்திறமை தேவை. வேறு யாராலும் இது* சாத்தியம் இல்லை என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் .


  அடிமைப்பெண் படம் பூஜையுடன் 1966ல் ஆரம்பிக்கப்பட்டது . ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன், சரோஜாதேவி, கே.ஆர். விஜயா இருவரும் நடிப்பதாக இருந்தது .1967ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டதும், ஒய்வு பெற்று* படத்தை மீண்டும் துவங்கியபோது* இருவரும் மாற்றப்பட்டனர் . அவர்களுக்கு பதிலாக ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்று நடித்தார் .1966ல் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் வரும் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்கிற பாடலில் விரைவில் வருகிறது அடிமைப்பெண் என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள் .எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டதும் 1967க்க பிறகு சில மாற்றங்களுடன் படத்தை துவக்கி 1969* மே மாதம் முதல் தேதியில் எம்.ஜி.ஆர். வெளியிட்டார் .தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் 4 அரங்குகளில்*கொளுத்தும் வெயிலில் 400* கொட்டகை நிறைந்த காட்சிகள் என்று தினத்தந்தியில் முழுப்பக்கம்* .விளம்பரம் வந்தது* தமிழகத்தில் 14 அரங்குகளில்*100 நாட்களும் , மதுரையில் வெள்ளிவிழாவும் கண்டது .1969ம்* ஆண்டில் வசூலில் சாதனை புரிந்ததில் முதல் படமாகவும், 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தின் வசூலை முறியடித்தும்* சாதனை புரிந்தது .  பெங்களுருவில் எம்.ஜி.ஆர். கன்னட நடிகர் ராஜ்குமாருடன் பார்வையற்றோர் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார் . விழாவில் நடிகர் ராஜ்குமார் பேசியபின் எம்.ஜி.ஆர். பேசுகிறார். எம்.ஜி.ஆர். பேசும்போது, இந்த பார்வையற்றோர்* பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50,000/- நிதி அளிப்பதாக அறிவித்தார் .* . மாணவ மாணவியர் , பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்,கண்ணீர் மல்க* கைதட்டி எம்.ஜி.ஆருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர் .நடிகர் ராஜ்குமார் அசந்து போகிறார் . ஏனென்றால் அந்த காலத்தில் இந்த பள்ளிக்கு இப்படிப்பட்ட ஒரு தொகையை யாரும் அளித்ததில்லை .நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ராஜ்குமார் ,எம்.ஜி.ஆரிடம் எப்படி இவ்வளவு பெரிய தொகையை இந்த பள்ளிக்கு*அளிக்க முன்வந்தீர்கள் .என்று கேட்டார் .அதற்கு பதில் சொன்ன எம்.ஜி.ஆர்., நான் குண்டடிபட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது , பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் என்னை பார்க்க முற்பட்டனர் . ஆனால் அவர்களுக்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை .எப்படியோ, தட்டுத்தடுமாறி, யாரையோ பிடித்து,அவர்களின் சிபாரிசின் பேரில் அனுமதி கிடைத்து என்னை பார்க்க வந்தார்கள் .அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன் .அவர்கள் என்னை பார்த்துவிட்டு, என் கைகளை தொட்டு வணக்கம் தெரிவித்தார்கள்,கண் கலங்கினார்கள்* .உங்களால் என்னை பார்க்க முடியாது . நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு , பூந்தமல்லியில் இருந்து வந்தீர்கள் என கேட்டேன் . நீங்கள் இருக்கும் நிலையில் எதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்றேன் பதிலுக்கு அவர்கள் நாங்கள் உங்களை பார்த்ததில்லை. வானொலி மூலம் உங்கள் குரலை கேட்டிருக்கிறோம் .*.திரைப்படங்களில் உங்கள் நடிப்பில் நீங்கள் பேசும் வசனங்களை நாங்கள் கேட்டு மகிழ்ந்துள்ளோம் .எங்கள் மனங்களில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். மெய் சிலிர்த்து போனாராம் .இந்த நிகழ்வு, எம்.ஜி.ஆர். மனதை நெகிழ செய்தது* மட்டுமல்லாமல் , நீங்காத நினைவாக* மனதில் பதிந்தது . அந்த பார்வையற்றோர் நினைவாகத்தான் இந்த பள்ளிக்கு உதவ என்மனம் முன்வந்தது .என்று எம்.ஜி.ஆர். நடிகர் ராஜ்குமாரிடம் சொன்னதும் ராஜ்குமார் கண் கலங்க நன்றி சொன்னாராம் .


  தி.நகர் ,ஆற்காடு சாலையில் தனி அலுவலகம் ஒன்று இருக்கிறது . அங்குதான்*கட்சி பிரமுகர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் எல்லாம் சந்திப்பது* எம்.ஜி.ஆருக்கு* வழக்கம் . அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். புறப்படும்போது, போக் ரோட்டில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் அங்குள்ள ஒரு பள்ளத்தில்*உணவருந்திய தட்டுக்களை கழுவுவது, அதிலேயே தண்ணீர் பிடித்து குடிப்பது*என்று செய்வார்கள் .எம்.ஜி.ஆர். கார் வரும்போது சில மாணவர்கள்* காரை மறித்து எம்.ஜி.ஆரை பார்க்க வருவார்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்க, ஒன்றுமில்லை* உங்களை பார்க்க ஆசைப்பட்டோம் என்று கூறுவார்கள் .சில நொடிகளில் கார் அங்கிருந்து புறப்பட்டுவிடும் , இந்த செய்கை சில நாட்கள் தொடர்ந்தது . இந்த பிரச்னையில் இருந்து விடுபட, எம்.ஜி.ஆரின் கார் டிரைவர் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ,உள்ளூர் தி.மு.க. கவுன்சிலரிடம் இதுபற்றி முறையிட்டார் .உடனே அந்த கவுன்சிலர் , பள்ளி தலைமை ஆசிரியரிடம் , தலைவர் காரில் செல்லும்போது, உங்கள் பள்ளி மாணவர்கள் காரை மறிக்கிறார்கள் .கூச்சலிடுகிறார்கள் . என்று புகார் தெரிவிக்கிறார் .ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து, கண்டித்து ,பிரம்பால் அடித்துவிடுகிறார் . அதன்பின் எம்.ஜி.ஆர். கார் செல்லும்போது சாலையில் காரை மறிக்க மாணவர்கள் வருவதில்லை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். என்ன ஆயிற்று மாணவர்களுக்கு, யாரையும் காணோமே என்று சொல்லியபடி, காரை நிறுத்தச்சொல்லி , மாணவர்கள் கூடுமிடத்திற்கு* கார் வந்து நிற்கிறது .மாணவர்கள் உணவருந்திய தட்டிலேயே* தண்ணீர் பிடித்து குடிப்பதை எம்.ஜி.ஆர். கவனித்து விடுகிறார் .அவர்களில் ஒரு சிலரை அழைத்து, உங்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் இல்லையா .ஏன் தட்டிலே பிடித்து குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ,எங்களிடம் டம்ளர் இல்லை என்று சொன்னார்கள் .சரி, ஏன் என்னை பார்க்க வருவதில்லை .என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு ,நீங்கள்தான் எங்கள் ஆசிரியரிடம் புகார் சொல்லி எங்களை அடிக்கவைத்து விட்டீர்களே* என்று சொன்னார்கள் .அப்போது எம்.ஜி.ஆர். சொன்னதாவது,நீங்கள் எப்போதும் என்னை பார்க்க அலுவலகத்திற்கு* வரலாம்*ஆனால் வகுப்பு நேரத்தில் அல்ல* உணவு இடைவேளையின்போது ,அல்லது*.வகுப்புகள்* முடிந்தபின் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் . மறுநாள்*.அந்த பள்ளி மாணவர்களுக்காக சுமார் 50 எவர்சில்வர் தட்டுகள், 50 சில்வர் டம்ளர்கள் ,ஒரு எவர்சில்வர் டிரம் ஆகியன எம்.ஜி.ஆரால்* கவுன்சிலர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரிடம்* வழங்கப்பட்டது .* பள்ளி மாணவர்களும், ஆசிரியரும் கவுன்சிலர் மூலம் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர் .


  மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  ----------------------------------------------------------------------------------
  1.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*

  2.இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி -நீதிக்கு தலைவணங்கு*

  3.எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதவுள்ள காட்சி** *எம்.ஜி.ஆர்.-சந்திரபாபு உரையாடல்* * - அடிமைப்பெண்*

  4.நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் -நான் ஆணையிட்டால்*

  5.ஏமாற்றாதே ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

  6.நாடு அதை நாடு - நாடோடி*

  7.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*


  8.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*
  Last edited by puratchi nadigar mgr; Yesterday at 08:30 PM.

Page 29 of 29 FirstFirst ... 19272829

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •