Page 107 of 210 FirstFirst ... 75797105106107108109117157207 ... LastLast
Results 1,061 to 1,070 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1061
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வேறு வழியே இல்லை எனும்போது அந்த மாற்று அணி கும்பல் ஆற்றாமை, இயலாமை, முடியாமை, அளவில்லா ஆதங்கம் கொண்டு புலம்பி தீர்கின்றனர். அப்புறம் எந்தவித வழியும் இல்லாமல் அவர்கள் சார்ந்த தராத்தரதோடு ஆபாச விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நம் பக்கத்தில் அது போல தரகுறைவு தாக்குதல் நடத்த மாட்டோம் என நினைக்கிறார்கள் போலும். ஆனால் நிச்சயமாக தகுந்த பதிலடி அளிக்க வாய்ப்புண்டு...........CeeYem...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    From Mr.SaileshBasu...அப்புறம் சுப்பு, ஆங்கில நாளிதழில் அதாவது தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரத்தில் "முதல் முறையாக இல்லையே" சரிதானே? இது ரசிகர்கள் பிட் நோட்டீஸ் அல்ல!!!!!! உங்கள் தயாரிப்பாளர் திருவிளையாடல் 17வது வாரம் விளம்பரத்தை பார்த்தால் அதிலும் தவறான தகவல் உண்டு.

    அப்புறம் ஏதோ "அந்த மகா நடிகர் 1952முதல் 1978வரை 136 படங்களில் ஆறு படங்கள் தான் வெள்ளி விழா. சிவாஜி 199 படங்கள் "19" வெள்ளி விழா படங்கள்" என்று தங்களது அக்டோபர் ஒன்று காணொளி காட்சியை பார்த்தேன். எங்களுக்கு தான் அதை பார்த்து குபீர் சிரிப்பு வருகிறது சுப்பு. கணக்கில் நீங்கள் "புலி" மண்டைக்கு வெளியிலும் ஒன்றும் இல்லை உள்ளேயும் அதுவே!!!.....SB...

  4. #1063
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இதயம் கவர்ந்த மன்னன் நடிகர் ஆக இருந்து மன்னன் ஆக வழிகோலிய தினம் 17.10.1972.

    நேற்று வரை ஒன்றாய் கூடி கொஞ்சி குலாவி உயர்பதவி பெற்றவர்கள் ஒரே இந்த மாதத்தில் மலையாளி என்று மொழி சான்றிதழ் பெற்ற மாதம்.

    தமிழர் பாதுகாப்பு படை என்ற ஒன்று மதுரை முத்து தலைமையில் ஒரு போலி குடும்பம் காக்க புறப்பட்ட மாதம்.

    நம் கண்ணின் மணியின் உழைப்பை பெயரை பணத்தை சுரண்டி கொழுத்த கூட்டம் ஆட்சி அதிகாரம் கொண்டு நன்றி மறந்து பேயாட்டம் ஆடிய மாதம்.

    நேற்று வரை நல்லவர் ஆக தெரிந்த நம் மாணிக்கத்தின் படம் நேற்று இன்று நாளையை வீதியில் வீசி தூக்கி எறிய நினைத்து தோல்வி கண்ட கூட்டம்.

    ஒரு பத்து நிமிடம் ஆவது எங்கள் தொகுதிக்கு வந்து செல்லுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிய கூட்டம்..

    கூத்தாடி எம்ஜிஆர் என்று வஞ்சகம் கொண்டு வாய் கொழுத்து பேசிய நேரம்...

    நடிகன் நாடாள முடியுமா?....

    அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் ஆகுமா?...

    இது என்ன எம்ஜிஆர் நடிக்கும் திரைப்படமா?

    100 நாட்கள் ஓடுமா...

    அரைகால் ட்ரவுசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி....

    விசில் அடித்தான் குஞ்சுகளா...வெம்பி பழுத்த பிஞ்சுகளா என்று ஏளனம் பேசிய நாட்கள் அவை.

    பரம்பரை ரத்தம் உடம்புலதான்...அது முறுக்கேரி கிடப்பது நரம்புலதான் என்று வீறு கொண்டு எழுந்த வீரத்தலைவன் பட்டாளம்...

    உலக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய செய்தியை உலகுக்கு சொல்ல புறப்பட்ட தினம்..

    100 நாட்கள் ஓடுமா என்று கேட்ட நல்லவர்களுக்கு சொல்கிறோம் ...

    இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகி விரைவில் 50 வது ஆண்டை எட்ட போகிறோம்....

    நினைத்து பார்த்தால் நம்ப கூட முடியவில்லை.

    இன்றும் கோட்டையில் அவர் கண்ட கொடி பறந்து கொண்டு இருக்கிறது....

    எங்கள் நோக்கம் தெளிவானது... இடையில் ஏற்பட்ட தவறுகளுக்கு ஒரு நாளும் நாங்கள் காரணம் அல்ல.

    அதற்கு உண்மை எம்ஜிஆர் ரசிகர்கள் ஒரு நாளும் காரணம் அல்ல...

    மீண்டும் உரக்க சொல்லுவோம்.

    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.
    இப்படை இவர்படை தோற்கின் இனி எவர் படை வெல்லும்?

    வாழ்க தலைவர் புகழ்.

    நன்றி...உங்களின் குரலாக எண்ணம் ஆக உங்களில் ஒருவன்.

    தொடரும்.............

  5. #1064
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….net...

    ’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

    படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

    அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.vnd...

  6. #1065
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய திரையுலகின் இதிகாசத் தலைவரின்
    எழில்மிகு காவியமான நாடோடி மன்னன்
    இரண்டாம் வெளியீட்டில் திருவண்ணாமலை நகரில் 113 நாட்கள் ஒடியது.
    இலங்கையில் ஒரே நேரத்தில் 15 தியேட்டர்கள் வெளியிடபட்டது.
    வண்டன் பிரிட்டனில்
    8 வாரங்கள் ஒடியது.
    அதற்கான பரிசை நாவலர் நெடுஞ்செழியன் 1964 லண்டன் சென்ற போது அவரிடம் லண்டன் தமிழ்சங்கம் வழங்கியது.
    அந்த கேடயத்தை மக்கள் திலகத்திடம் சென்னை வந்த பின் விழா வைத்து வழங்கபட்டது. இன்றும் தி.நகர் தலைவரின் நினைவு இல்லத்தில் உள்ளது.
    மலேசியா நகரில் 5 இடங்களில் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
    இப்படி அடுக்கடுக்காண வெற்றிகளை படைத்த காவியம் நாடோடி மன்னன் ஆகும்.

    முதல் வெளியீட்டோடு
    தோல்விகளுடன் மூடப்பட்ட ....கரைசேராத அழுகை படங்களை கொண்டு வந்து இமாலயபடைப்புடன் ஒப்பிடும் தரங்கெட்ட சாதாரண நடிகரின் படங்களை நடிகர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும்
    முத்துராமன், சிவக்குமார் படங்களுடன் கணேசனாரின் பெறாத பிள்ளைகள் போய் ஒப்பிடட்டும்....

    உலக சரித்திரத்தில்
    வெள்ளித்திரையில்....
    ஒய்வில்லா வெற்றிகளை ஆண்டு தோறும் படைக்கும் படைப்பு
    நாடோடி மன்னன்....
    சென்னையில் 20 க்கும் மேற்பட்ட குளிர்சாதன அரங்கில் வெளியிட்ட
    ஒரே கறுப்பு வெள்ளை கலர் காவியமாகும்.

    ஆல்பட் (மூன்று முறை)
    ஒடிய நாள் 64
    (9 வாரங்கள்)
    பிருந்தா 3 முறை 21 நாள்
    சங்கம் 7நாள்
    பாரத் (மூன்று முறை)
    21 நாள்.
    உட்லாண்ட்ஸ் 7 நாள்
    எம்.எம்.தியேட்டர் 7 நாள்
    நூர்ஜகான் (ராஜ்)
    21 நாள் (3 முறை)
    தேவிபாரடைஸ்
    7 நாள் (1988)
    கணபதிராம்
    கோல்டன் ஈகிள்
    கோபிகிருஷ்ணா
    ரோகினி காம்பளக்ஸ்
    ராதா அரங்கு
    முரளிகிருஷ்ணா
    மற்றும் பலஅரங்குகள் சாதனைகள்.
    முறைபடி பொன்விழா
    வைரவிழா கொண்டாடிய புரட்சிக்காவியம்...
    நாடோடி மன்னன் ஆகும்....bsr...

  7. #1066
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நாடோடி மன்னன்" காவிய படம் எடுக்க மக்கள் திலகம் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?... பெரும் பொருட் செலவு, பானுமதியின் ஒத்துழைப்பு இல்லாதது, (அதனால் அவரை படத்தில் மக்கள் திலகம் கொன்றுவிட்டார். இருந்தாலும் எல்லாரையும் மன்னித்துவிடுவார். உங்களுக்கு இசை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட பானுமதியை மக்கள் திலகம் முதல்வரான பிறகு தமிழக அரசு இசைக் கல்லூரி முதல்வராக நியமித்தார். தலைவரின் தண்டனையே வித்தியாசமப்பா. பானுமதியும் வெட்கமில்லாமல் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்) காங்கிரஸ் அரசின் கெடுபிடிகள், காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க.. என்ற பாடல் படத்தில் இடம்பெறவில்லை. காளைமாடு காங்கிரஸ் சின்னமாம். படத்தை எடுக்க செலவு செய்தததற்கு ஈடாக படம் எடுக்கப்பட்டபோது படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் சாப்பிட மினி ஓட்டலையே ஏற்பாடு செய்துவிட்டார். ஓவல்டின் என்ற பானத்தை அண்டாவில் கலக்கி வைத்திருந்தார்கள் என்று வசனகர்த்தா ரவீந்தர் கூறியிருந்தார். பணக்காரர்கள் குடிக்கும் ஓவல்டின் பானத்தை பல தொழிலாளர்கள் அப்போதுதான் முதல் முறையாக குடித்திருக்கிறார்கள். அடிமைப் பெண் படப்பிடிப்பின்போதும் பாலைவனத்தில் குடிக்க தண்ணீர் கஷ்டம் என்பதால் கோககோலா குளிர்பான வேனையே மக்கள் திலகம் ஏற்பாடு செய்தார்.

    ‘நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்ஜிஆர் இனி உயரமுடியாத உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் ’ என்று கவிஞர் வாலி கூறினார். இரண்டு வருடம் முன் ஏ.சி.சண்முகம் நடத்தி வரும் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மக்கள் திலகத்தின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது ரஜினி பேசும்போது ‘நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்ஜிஆர் இதிகாசம் படைத்தார். சிவாஜியைவிட மார்கெட் பிடித்து அவரைவிட பெரிய படங்களில் நடித்து அவரை விட அதிக சம்பளம் வாங்கினார் எம்ஜிஆர்’ என்று கூறினார். ரஜினியின் பேச்சு இன்னும் யூடியூபில் உள்ளது. அவர்கள் என்ன பொய் சொல்லி கரடியாகக் கத்தினாலும் ஒன்றும் நடக்காது.... Swamy...

  8. #1067
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்..ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*14/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை* பொறுத்தவரையில்*அரசு அதிகாரிகளை அவ்வளவு அருமையாக*மரியாதை செய்து மதிப்பளிப்பார் . அதாவது சமீபத்தில் ஒய்வு*பெற்ற காவல்துறை*அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்.அவர்கள் சொல்லும்போது பல்வேறு அரிய தகவல்களை*எம்.ஜி.ஆர். குறித்து*சொன்னார் .* அவர் கோட்டைக்குள்*தலைமை செயலகம் உள்ளே நுழையும்போது பணியில்*இருந்த* ஒவ்வொரு காவலரையும் பார்த்து நீங்கள் சாப்பீட்டீர்களா என்று கேட்டுக்கொண்டே செல்வாராம் இவர் ஒரு அதிசய*மனிதர் என்று காவல்துறை வட்டாரத்தில் வியந்தது* உண்டு . அதே போல மறைந்த*திரு.ரவி*ஆறுமுகம்*அவர்களுக்கு கை*கடிகாரம் கொடுத்து*பாராட்டியுள்ளார் .எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே*தனக்கு*பிடித்தவர்களுக்கு எல்லாம் கைக்கடிகாரங்கள், புகைப்பட*நிபுணராக இருந்தால்*காமிராக்கள் பரிசளிப்பது என்பதை*ஒரு வழக்கமாக*வைத்திருந்தார் .


    ஒரு அதிகாரி எம்.ஜி.ஆரிடம் எந்த உதவியும்*பெறவில்லை . ஆனால் எம்.ஜி.ஆர். அவரை*தன் வீட்டுக்கு அழைக்கிறார் . நான் யார் யாருக்கோ*என்னவெல்லாமோ செய்திருக்கிறேன் . பலர் என்னிடம் உதவியை கேட்டு பெற்றிருக்கிறார்கள் . நீங்கள் என்னிடம் எதுவும்*கேட்டு பெற்றதில்லை .நான் கொடுத்ததுமில்லை .அது எனக்கு ஒரு குறையாக இருக்கிறது.* என்று அவர் சொல்கிறார் .* நான் உங்களை*பார்க்க வரும்போதெல்லாம் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களே . அதுவே*போதும் என்றார் .அதிகாரி .இல்லை. நீங்கள் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது .அந்த குறையும்*எனக்கு*இருக்கக்கூடாது .என்று சொல்லி*ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தாராம் .இப்படி ஒவ்வொரு மன* நிலையிலும் ஏதாவது , எப்போதாவது எதையாவது கொடுத்து*அவர்களின்*மனதில்*இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். என்பது*அவரது வள்ளல்தன்மைக்கு எடுத்துக்காட்டு .நல்லவனாக இருப்பது*என்பது*போதிப்பு**.*மட்டுமல்ல.நல்லவனா க வாழ்வது*அப்படி நல்லவனாக வாழ்வதன் மூலம் பல நல்லவர்களை உருவாக்குவது என்கிற*புதிய பாதையை, புதிய அத்தியாயத்தை வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.*


    திரு.கா. லியாகத்*அலிகான்*பேட்டி : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா*அவர்களிடம் எவ்வளவு அன்பு,பாசம் ,பற்று* வைத்திருந்தார் என்று எனக்கு*தெரியும்*.அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அரசியல் நெருக்கம் எப்படி என்றும் எனக்கு*தெரியும்*ஜெயலலிதா*அவர்கள்* நேர்மை , ஒழுக்க*கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடு மிகவும் கண்டிப்புடன் கடைபிடித்தார் .*10மணிக்கு ஒருவரை வர சொன்னால்*நாம் 5 நிமிடங்கள் முன்னதாக அங்கு இருக்கவேண்டும் .5 நிமிடம் தாமதமாக சென்றால் பார்க்க மாட்டார்*.அப்படி நேரத்தை*மிக சரியாக*கடைபிடித்தார் .நேரம் கடைபிடிக்கும் விஷயங்கள்*கூட*எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பண்பு . என்னை*பற்றி ஜெயலலிதா அவர்களிடம் எம்.ஜி.ஆர். அவர்கள் ,தனி உதவியாளர் பிச்சாண்டி அவர்களின்* முன்னிலையில் நல்ல முறையில்*பல தகவல்கள் சொல்லி இருக்கிறார் . கடலூர்*மாநாட்டில்*கலந்து*கொள்ள*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் செல்கிறார்கள் .பண்ருட்டியார் தலைமை தாங்க உள்ள மாநாட்டில்*நாங்கள் எல்லாம் ஒருநாள் முன்கூட்டியே சென்றுவிட்டோம் .அந்த துவக்க மாநாட்டிற்கு காரில்**வரும்போது*வழியில்*தனி உதவியாளர் பிச்சாண்டி*உடனிருக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் உனக்கு*பிரபல*கட்சி*பிரமுகர் லியாகத் அலிகான்*பற்றி தெரியுமா*என்று சொன்னதற்கு ஜெயலலிதா*தெரியாது*என்று சொன்னார் . அதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் மாநாட்டில்*நீ பேசிய பிறகு சில*மணி நேரத்தில் அவரும்*பேசுவார் .அவருடைய பேச்சாற்றலை கண்டால், கேட்டால்*நீயே*வியந்து போவாய் என்று சொல்லியுள்ளார் . பொள்ளாச்சி*ஜெயராமன் சில காலம் தொழில்துறை*அமைச்சராக இருந்தார் .நண்பர் என்ற முறையில்*ஜெயராமனை சந்திக்க*சென்றபோது அங்கு பிச்சாண்டி*வந்திருந்தார் . பிச்சாண்டி , ஜெயராமனிடம் அண்ணே*, இந்த லியாகத்*அலிகான்*மீது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வைத்திருக்கும் அன்பு அளவற்றது அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை*என்னிடமும் அவ்வளவு பெருமையாக பேசுவார் ..*.ஜெயலலிதா அவர்களிடம் அவரை*பற்றி என் முன்னே காரில்*மாநாட்டுக்கு செல்லும்போது* மிகவும் பெருமையாக அவர் பேச்சாற்றலை பற்றி புகழ்ந்து பேசினார் . அந்த மாநாட்டில்*ஜெயலலிதா அவர்கள் பேசியபின் ,லியாகத்*அலிகான் பேசினார்*.நீங்கள் பார்த்து* இருப்பீர்கள் என்றார் .ஆமாம் நானும்*பார்த்தேன்*என்றார்*ஜெயராமன் .* அந்த மாநாட்டின் இறுதியில் பேசிய*புரட்சி தலைவர் ,லியாகத்*அலிகான்*என்ற இளைஞரின்*பேச்சை*சுட்டிக்காட்டி*,நீங்கள் எல்லாம் மாநாட்டின் முற்பகுதியில்*லியாகத் அலிகான் என்ற இளைஞரின்*பேச்சை கேட்டிருப்பீர்கள் நீங்கள் உங்கள் ஊருக்கு*சென்றதும் நினைத்து பார்ப்பீர்கள், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள் .இவ்வளவு சிறிய வயதில்*இந்த இளைஞர்*எவ்வளவு ஆர்வமாக*அருமையாக பேசுகிறார் என்று . வெளியூரில் இருந்து வந்துள்ளவர்கள் அனைவரும் அவரை*பேச அழைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி*தலைவர் பேசியதை*ஜெயராமன் ,பிச்சாண்டிக்கு நினைவுபடுத்தினார் . அங்கு நடந்தது என்னவென்றால்* எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி அங்குள்ள ராஜேந்திரன்*என்பவரின்* படத்தை நான் திறந்து வைப்பதாக* ஏற்பாடு .மதியம் 12* மணியளவில் ஜெயலலிதா அவர்கள் பேசி முடித்துவிட்டார்கள் .அதன்பின் மாநாட்டில் மற்ற தலைவர்கள் கே.ஏ.கே.,குழந்தைவேலு, எஸ்.டி.எஸ் ,அரங்கநாயகம், அடியார், ராஜா முகமது பேசினார்கள் .* பின்புறம் ,நான், ஜெகத்ரட்சகன், வெள்ளைச்சாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் அமர்ந்துள்ளோம்*இனி நமக்கு பேச வாய்ப்பு கிடைக்காது என்று நாங்கள் பேசி கொண்டிருக்கும்போது பிற்பகல் 1.30 மணியளவில் பண்ருட்டியார் மேடையில்*அடுத்து லியாகத் அலிகான் ,ராஜேந்திரன் படத்தை திறந்துவைத்து ஒரு 5 நிமிடம் பேசுவார் என்று அறிவிக்கிறார் .மற்ற சில தலைவர்கள் எல்லாம் பேச இருக்கும் நேரத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை .நான் ராஜேந்திரன் படத்தை திறந்து வைத்துவிட்டு ,பேச முற்படும்போது, புரட்சி தலைவர் கைதட்டி என்னை அழைக்கிறார் .எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இரு பக்கங்களிலும் கே.ஏ.கே.,பண்ருட்டியார் அமர்ந்திருக்க,என்னை அருகில் வைத்து பண்ருட்டியார் 5 நிமிடம் என்று அறிவித்தது இருக்கட்டும் .நான் சொல்கிறேன் நீ 30 நிமிடங்கள் பேசு. அன்றைக்கு உடுமலையில் பேசிய பேச்சுக்களை* மறுபடியும் பேசு என்றார் .ஆனால் நான் பேசுவதற்கு முன்கூட்டியே திட்டமிடவில்லை .இருந்தாலும் சுதாரித்து கொண்டு மேடையில் சுமார் 35 நிமிடம் பேசினேன் .*


    பொதுவாக எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்கள் பேசும் கூட்டத்தில் என்னை போன்றவர்கள் பேச ஆரம்பித்தால் 5 நிமிடத்தில் நீ போய் உட்காரு என்பார்கள் .ஆனால் உடுமலையில் எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில் பேசும்போது இடைவிடாது ஆரவாரங்கள், கைதட்டல்கள் எழுந்ததால் தலைவரே பிரமித்து போனார் .* அதை நினைத்துதான் தலைவர் நீண்ட நேரம் பேச அனுமதித்தார் .நான் பேசும்போது கிட்டத்தட்ட 85 தடவைகளுக்கு மேல் பலத்த கைதட்டல்கள் எழுந்தன .அந்த மாநாட்டில் சுமார் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர் .அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை .தானாகவே கூட்டம் சேர்ந்துவிடும் .அவனவன் கட்டு சோறு எடுத்து கொண்டு ,வண்டி கட்டி வந்துவிடுவான் .அப்படி நான் பேசி முடிக்கும்போது ஒரே ஆரவாரம் .நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஆசி பெற்றபோது ,என் கன்னத்தில் லேசாக ஒரு தட்டு தட்டினார் .பின்னர் அண்ணன் காளிமுத்துவை இறுதியாக* பேச அழைத்தார்கள் .அவர் பேசி முடிந்ததும் கூட்டம் கலைகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் புறப்பட தயாராகிறார் .நான் திறந்து வைத்த ராஜேந்திரன் படத்தை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென ஆயிரம் ரோஜா பூக்கள் ஒன்று சேர்ந்து வருவது போல ஒரு நறுமணம்*அந்த நறுமணத்தை நுகர திரும்பும்போது ,புரட்சி தலைவர் என்னை அப்படியே கட்டி பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு போய்விட்டார் .இதை கண்ட பத்திரிகையாளர்கள் லியாகத் அலிகானுக்கு எம்.ஜி.ஆர். முத்தம் என்று மாலையில் செய்திகளுடன் புகைப்படத்தை போட்டார்கள் .முந்தைய தினம் இரவு எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை பாராட்டி உயர்வாக பேசியதும் செய்திகளாக வந்தது .லியாகத் அலிகான் போன்ற இளைஞர்கள் பிற்காலத்தில் பெரிய அமைச்சர்களாக, கட்சியின் நிர்வாக தலைவர்களாக ஏன் எதிர்காலத்தில் இவர்களை போன்றவர்கள் எல்லாம் முதல்வராக கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பேசினார் .அவர் பேசிய பின்னர் என்னுடன் நட்புடன் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்னை எதிர்க்கவும், ஒதுக்கவும் ஆரம்பித்தார்கள் .நான் உள்ளபடியே சொல்கிறேன் .ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்து ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் பேசும்போது*உடுமலையில் ஒரு அரைக்கால் சட்டை போட்டு கொண்டு வந்த இந்த லியாகத் அலிகானை அமைச்சர் என்ற அந்தஸ்தோடு ,15 ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் உள்ள ஒரு வாரியத்தில் என்னை தலைவராக நியமித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களே ,பத்திரிகைகளில் நான் அமைச்சர் என்ற வகையில் செய்திகள் வெளியாகின்றன .எனக்கு அந்த ஆசையே இல்லை .நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பும், பாசமும், பற்றும், நேசமும்தான் மிக பெரிய அமைச்சர் பதவியாக நான் கருதுகிறேன்.எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன் .அப்போது கோவை மேற்கு, துறைமுகம் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் நான் தோற்றுவிட்டேன் .உண்மையில் எனக்கு அந்த ஆசை உள்ளபடியே நிச்சயம் கிடையாது .யாரும் சொன்னாலும் நம்பமாட்டார்கள் .ஏனென்றால் பதவிக்காக நான் போராடியதில்லை .யாரையும் குறை சொன்னதுமில்லை .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார்*


    நல்லவன் வாழ்வான் என்ற அவரின் படத்தின் தலைப்பின்படி, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற* ஒரு ஜீவநதியாக எம்.ஜி.ஆர். இருந்தார் .இன்றைக்கும் அவரது பாடல்களை கேட்கும்போது ஒவ்வொருவரும் தான் பிறந்து வாழ்ந்த ஒவ்வொரு நிமிடத்திற்கும்* வாழ்க்கைக்கும்**பெருமைப்படுகிற மாதிரியாக ,ஒரு மகோன்னத மனிதராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி. ஆர் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------------
    1.மஞ்சள் முகமே வருக - வேட்டைக்காரன்*

    2..பட்டு வண்ண சிட்டு படகுத்துறை விட்டு- பரிசு*

    3.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

    4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*

    5.கட்டான கட்டழகு கண்ணா* - குடும்ப தலைவன்*

  9. #1068
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ராஜா தேசிங்கு". 1960 செப் 2 ந் தேதி வெளியான ஒரு அற்புதமான வரலாற்று படம். தேசிங்கு, தாவூத்கான் என்ற இரு வேடங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் திலகம் வேறு படுத்தி காட்டியிருப்பார்.
    தலைவருக்கு ஜோடியாக முதலில் பத்மினிதான் நடிப்பதாக இருந்தது. பாத்திரத்தின் தன்மை உணர்ந்து பானுமதியை கதாநாயகி ஆக்கினார்கள் என்ற பேச்சு உண்டு.

    Ssr க்கு ஜோடியாக பத்மினி நடித்திருப்பார். அவருக்கு அதிக வேலையிருக்காது. மக்கள் திலகம் மாறுபட்ட நடிப்பின் மூலம் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் என்றே சொல்ல வேண்டும். "மதுரை வீரனை" எடுத்த கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் எடுத்த படம். கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் எம்ஜிஆர் மீது மிகுந்த நன்மதிப்பை வைத்திருப்பவர்.

    இருப்பினும் படம் ஏதோ காரணத்தால் நீண்ட கால தயாரிப்பாக மாறியதாலும் இரண்டு எம்ஜிஆரில் ஒருவரை இழந்த சோகத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் நல்ல வசூலை எட்டிப் பிடிக்க முடிந்தது. படம் முடிந்து வந்த ரசிகர்கள் கனத்த மனத்துடனே வந்தார்கள். மறுவெளியீட்டில் கலக்கு கலக்கு என்று கலக்கிய படம்.
    இசை g ராமனாதன் என்றாலும் ஒரிரு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் மிகவும் பிரபலமடையவில்லை. கதை வசனம் கவிஞர் கண்ணதாசன். வசனத்தை மிக அருமையாக எழுதியிருப்பார்.

    'வனமேவும் ராஜகுமாரன்' என்ற பாடலை ஜிக்கியும், சீர்காழியும் பாடியிருப்பார்கள். அருமையான மெலடி பாடல். 'சரசராணி கல்யாணி' பாடல் சிதம்பரம் ஜெயராமனும், p.பானுமதியும் பாடியிருக்கும் மற்றுமொரு அற்புத பாடல். ரேடியோவில் "ராஜாதேசிங்கு" என்று சொன்னவுடனே இந்த பாடலைத்தான் போடுவார்கள் என்று முன்கூட்டியே யூகித்து கொள்ளலாம்

    முதல் வெளியீட்டில் சுமார் 40 அரங்குகளில் வெளியானது.
    சென்னையில் வெலிங்டன், கிருஷ்ணா, உமா, லிபர்ட்டி என்ற 4 திரையரங்குகளில் வெளியாகி சென்னையில் 56 நாட்களும் தமிழகத்தில் பிற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது...........ksr...

  10. #1069
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்

    அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.

    எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
    எம்.ஜி.ஆருடன் அவரது நேர்முக உதவியாளர் க.மகாலிங்கம். (பழைய படம்).

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-

    1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை), தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணியளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.

    கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.

    அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10-ந்தேதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார். தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவுகூறும்விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.

    எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்க.மகாலிங்கம்.

    எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.

    1977-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளனர்.

    எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கியபோது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50-வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகாது.............dr...

  11. #1070
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களால் "அரசவை கவிஞராக " நியமிக்கப்பட்ட கவியரசு கண்ணதாசன் நினைவு தினம் இன்று! அவா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களை பற்றி மனம்திறந்து சொன்ன செய்தி:
    மக்கள்திலகம் நடித்த நேற்று இன்று நாளை படம் வெளிவந்த நேரமிது!கவியரசா் கண்ணதாசன் ,லேனா செட்டியாாின் ம௫மகன் முத்தையா செட்டியாா் இவ௫டன் தி.நகா் நடேசன் பூங்கா அ௫கில் உள்ள தனது இல்லத்திலி௫ந்து மவுண்ட் ரோட்டிற்கு ஒ௫ வேலையாகப் புறப்படுகிறாா்கள். முத்தையா செட்டியாாின் மகன்
    கி௫ஷ்ணா காா் ஓட்ட முன் சீட்டில் கவிஞாின் மகன் கலைவாணன்,கண்ணதாசனின் நண்பா் பாக்யநாதன் என்பவ௫ம் அமா்ந்தி௫க்கிறாா்.
    எல்.ஐ.சி. கட்டிடத்தை தாண்டி காா் சென்று கொண்டி௫ந்த பொழுது கா௫க்கு வெளியே தலையை அண்ணாந்து அங்கு தேவி தியேட்டா் வாசலில் வைக்கப்பட்டி௫ந்த புரட்சித்தலைவா் எம்ஜிஆா் நடித்த நேற்று இன்று நாளை படத்தின் கட் அவுட்டைக் கவியரசா் கண்ணதாசன் பாா்க்கிறாா்.
    உடனே அ௫கில் அமா்ந்தி௫ந்த முத்தையா செட்டியாாிடம் எம்ஜிஆா் கட் அவுட்டைக்காட்டி,
    எல்லா௫ம் இவரை வாத்தியாா் வாத்தியாா்னு சொல்லாறங்க.நான்௯ட ஆரம்பத்துல இவா் எந்த ஸ்௯லுக்கு வாத்தியாா்னு கிண்டலடிப்பேன்.இப்ப சொல்றேன் முத்தையா உண்மையிலேயே இவா் வாத்தியாா்தான் இன்னும்சொல்லப்போனா இவா் எனக்கு எனக்குக்௯ட வாத்தியாா்தான் என்கிறாா்.என்ன சொல்றீங்க? முத்தையா செட்டியாா் இடைமறித்துக் கேட்கிறாா்.
    ஆமாய்யா அந்த மனுசன் நான் எழுதிய பாட்டுல௯ட தப்பை சிவப்பு மையில தி௫த்தியி௫க்கிறாா். சிவப்பு மையில தி௫த்துறவா் யா௫! ......mss...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •