Page 96 of 210 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #951
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்பதை ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். அவ்வளவு ஏன்? ஒரு உதாரணம் போதும். மக்கள் திலகத்தின் 100 வது படமான ஒளிவிளக்கு 1969ல் முதல் வெளியீட்டில் யாழ்ப்பாணம் ராஜாவில் 160 நாட்கள் கடந்து ஓடி மகத்தான வெற்றி பெற்றது. 1979-ம் ஆண்டு இலங்கையில் ஒளிவிளக்கு மறு வெளியீட்டில் தினசரி நான்கு காட்சிகளாக அதே யாழ்ப்பாணம் ராஜாவில் மீண்டும் 100 நாட்கள் ஓடி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ( அதிகாரபூர்வ விளம்பர ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)இதை சிவாஜி கணேசன் படம் மட்டுமல்ல, எந்த நடிகரின் படமும் இலங்கையில் இன்றுவரை மறுவெளியீட்டில் 100 நாள் என்ற இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

    இலங்கையில் பைலட் பிரேம்நாத் திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்று வண்டி வண்டியாக பொய்யை அளந்து கொட்டுவார்கள். அப்படி அந்தப் படம் ஒரு வருடம் ஓடியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம்மிடம் வசூல் விவரங்கள் கேட்பார்கள். 100 நாள் விளம்பரம் கேட்பார்கள். ஆனால், அவர்கள் வாயிலேயே வடை சுட்டு வசூலைக் குவித்து விடுவார்கள். நம்மிடமாவது சில படங்களுக்கு 100 நாட்கள், வெள்ளிவிழா கடந்து ஓடியதற்கு விநியோகஸ்தர் வெளியிட்ட வசூல் விவரம் உள்ளது. அவர்களிடம் அதுவும் கிடையாது. ஒன்றிரண்டு படங்கள் தவிர, முதல் வார வசூல், இரண்டு வார வசூலோடு அடக்கம் காப்பார்கள். அதை 100 நாட்கள், 25 வாரத்தோடு பெருக்கிக் கொள்ள வேண்டுமாம். நாட்டாமை படத்தில் ஒரு பெண்ணை மயக்க செந்தில், ‘ஊட்டியில டீ எஸ்டேட் இருக்கு’ என்பார். மறைந்து நிற்கும் கவுண்டமணி ‘ஊட்டியில இருக்குடா. உனக்கு இருக்கா?’ என்பார். அந்த மாதிரிதான் இவர்களின் வெற்றிகள், வசூல்கள் எல்லாம். அடுத்த பதிவில் இவர்களின் இன்னொரு பொய்யை சொல்கிறேன்..........ஸ்வாமி.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #952
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க உரை - புரட்சித்தலைவர் [04-01-1981].

    5 - வது உலகத் தமிழ் மாநாடு ஓராண்டுக்கு முன்பேயே நடத்தியிருக்கவேண்டும்; தவறிவிட்டது, இப்போதுகூட குறிப்பிடப்பட்ட நடத்துவார்களோ, மாட்டார்களோ பலர் சந்தேகப்பட்டனர். தள்ளி வைத்துவிடுவார்கள் என்று கூடச் சிலர் கருதினர்.

    அறிஞர்கள், அதிகாரிகள் , இளைஞர்கள், பொறுப்பு மிகுந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுத்தால், எதையும், எங்கேயும் நடத்திக்காட்ட முடியும் என்பதைத்தான் 5 - வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழா எடுத்துக் காட்டுகின்றது.

    உலகத் தமிழ் மாநாடு என்னும் அரிய மாநாட்டை தமிழகத்தில் தொடங்குவதற்கு வித்திட்ட, ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களின் உழைப்பும், எனது தெய்வம், என் ஆசான் , பேரறிஞர் அமரர் அண்ணா அவர்கள் இரண்டாவது மாநாட்டில் ஏற்றிருந்த முழுமையான பொறுப்பும் என்னை ஆட்டிப் படைத்து இந்த மாநாட்டை நடத்துகின்ற வகையில் ஊக்கத்தைத் தருகின்றது. இன்று அமரர் அவர்கள் நம்மிடையே இல்லை; ஆனால், அவர் எனது இதயத்திலிருந்து எனக்கு ஊக்கத்தையும் நல்ல கருத்தையும் தந்து என்னை வழிநடத்திச் செல்கிறார் என்பதை நான் மறுக்க முடியாது; இது மூடநம்பிக்கை என சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இது நியாயமான நம்பிக்கையாகும்.

    பல பெரியவர்கள் இந்த மாநாடு கூடுவதற்கு ஆதரவு நல்கினார்கள் . இந்தி பேசும் மாநிலத்தவர்கள் , ஆந்திர மாநிலத்தவர்கள் , மராட்டிய மாநிலத்தவர்கள் , தொலைபேசியின் மூலம் அடிக்கடி தமிழ் மாநாடு எப்போது என்று என்னை வினவியவாறே இருந்தார்கள்.

    இங்கே தமிழ் குறித்து பிரச்சினைகள் பேசப்பட்டன . அவற்றிற்கு வழிகாணும் முறைடற்றியும் சொல்ல முயன்றார்கள் . வெவ்வேறு கருத்துகளைச் சொன்னார்கள். அதற்காகத்தான் 5 - வது உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது.

    குழந்தையைப் பெற்றவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . ஆனால் மற்றவர்கள், உற்றவர்கள் , இந்தச் சட்டையைக் குழந்தைக்குப் போடு , அந்தப் பள்ளிக் கூடத்தில் சேர், இந்த ஆசானைத் தேர்ந்தெடு என்றெல்லாம் கருத்துகள் தெரிவிப்பதுபோல, தமிழைப் பாதுகாக்க , தமிழை வார்க்க யோசனை சொல்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

    ஆராய்ச்சிக் கருத்தரங்கில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன . எல்லோரும் ஒரே எண்ணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்காக அல்ல மாநாடு ! அவர்கள் தங்களது ஆற்றலை, வலிமையைப் பயன்படுத்தி தமிழைப் பாதுகாக்கும் வழியைச் சொல்கின்ற மாநாடு இது.

    தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் தேவை என்று சிலர் குறிப்பிடுகின்றனர் . வரவேற்கிறேன். சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டு போகக்கூடாது . ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் தான் உள்ளன . அது உலக மொழியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது . எனவே, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், எழுத்துகளைக் குறைப்பதாக அமையவேண்டும் ; அதிகமாக்கக் கூடாது.

    தமிழ் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்று சிலர் குறிப்பிட்டார்கள் . இராமநாதபுரத்தில் ஒரு வகையாக, மதுார் மாவட்டத்தில் ஒரு விதமாக , நெல்லையில் ஒரு விதமாக, கோவையில் ஒரு விதமாக தமிழ் பேசப்படுகிறது . இவற்றை ஒன்று படுத்தவேண்டும் என்றால் , மிகப்பெரும் பணி செய்ய வேண்டும். தமிழக அரசு இதனைத் தக்க வகையில் செய்யும்.

    தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசக் கூடிய பொழி வேண்டும் என்றார்கள். ஏற்றுக் கொள்வோம்; ஆனால், இலக்கண ரீதியாக அந்த மொழி அமைய வேண்டும் என்பது மட்டுமல்ல, ஏழை மக்களின் உள்ளத்தைத் தொடும் மொழியாக, அது இருக்கவேண்டும். பேசும் மொழியும், எழுதும் மொழியும் ஒருங்கினையும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது சுமையானதோர் பொறுப்பு : அதனை உணர்ந்து ஏற்றுச் செயல்புரிய வேண்டும்.

    உலகத் தமிழ்ச் சங்கம் ஒன்றை இங்கே தமிழக அமைக்கும். போறிஞர்களிடம் அது ஒப்படைக்கப்படும்; நிருவாகத்தை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும். இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவேண்டும். செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளில் , பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்ச்சிக்கு விழா எடுக்கும்.

    தமிழ் ஆட்சி மொழியில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழ் வழக்கு மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக மட்டுமல்ல ; வழக்கு மன்றத்தில் நீதிமன்றத்தில் தீவிரமாக்கப்பட முயற்சி நடைபெறும்.

    உலகத்தில் பய நாட்டுப் பிரதிநிதிகளும் , தமிழைப் பாராட்டி பேச வந்திருக்கும் இந்த நேரத்தில் ஒன்றை நினைவுகூர்தல் வேண்டும். நாம் ஒரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். அந்தப் போராட்டம் யாரையும் எதிர்த்தல்ல; எந்த மொழியையும் எதிர்த்தல்ல; யாரையும் சிறையில் தள்ளுவதல்ல அந்தப் போராட்டம்; யாரையும் அழிவுப் பாதைக்கு அனுப்புவதல்ல அந்தப் போராட்டம்; நாமே நமக்குள் நடத்திக்கொள்ள வேண்டிய போராட்டம் அது, தமிழில்தான் எழுதுவேன் , தமிழில்தான் பேசுவேன் என்று நமது உள்ளத்து உணர்வுடன் போராடவேண்டும். நாம் "தமிழன் என்றொரு இனம் உண்டு" என்பதை திரைப்படத்தில் பாடிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், தமிழ் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    நான் முன்பு இலங்கை தி.மு.க. - வின் அழைப்புடன் இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கு என்ன பேசுவது என்பது குறித்து அமரர் அண்ணா அவர்களிடம் கேட்டேன். "இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நாக்கும் கலாச்சாரத் தொடர்பு உண்டே தவிர, அரசியல் தொடர்பு கிடையாது" என்று அண்ணா. அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், அதை அங்கு சென்று நாள் தெரிவித்தேன்; இலங்கை தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

    இலங்கைத் தமிழருக்கு எந்தெந்த வகையில் ஆதரவு தாமுடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் தருவோம். அந்த நாட்டின் ஆட்சி முறை குறித்து நாம் தலையிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பது என் நீங்காத கடமை என உணர்கிறேன்.

    அரசியல் சம்பந்தம் இன்றி முழுக்க முழுக்க தமிழுக்கு மட்டும் நடத்தப்படும் மாநாடு இது என்பதால், அரசியல் குறித்து நாம் கவலைப்படாமல், தமிழ் மொழி குறித்து, தமிழ் வளர்ச்சி குறித்து , இலக்கியம் குறித்து, கலாச்சாரம் குறித்து இம்மாநாடு கருத்துரை தெரிவிக்கிறது.

    உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம் ! உலகத் தமிழர் அனைவரும் அறிவினால் ஒன்று படுவோம் . தமிழ் இனத்தவரிடம் ஒருமை உணர்ச்சி ஏற்பட, ஏற்றத்தாழ்வு அகன்றிட , மத பேதங்கள் நீங்கிட, ஜாதி வெறி மறைந்திட நாம் பாடுபடுவோம்.

    தமிழைப் பயன்படுத்துவது குறித்து நாம் அக்கறை செலுத்தும்போது , சாதாரான உாழக்கும் மக்களுக்குத் தெரிந்த தமிழை நாம் உருவாக்குவோம். அப்படி உருவாக்கும் மொழியில் இலக்கியம் இருக்கவேண்டும்.

    "கண்டிராஜன்" என்னும் நாடகத்தில் ஒரு பாடல் வரும். அந்தப் பாடலில் நயம் இருக்கும். யாருக்கும் அதன் பொருள் எளிதில் புரியாது . அப்படி இருந்தால் பயன் என்ன?

    வாழ்க்கையில் அனைவரும் பேசும் ஒரே மாதிரி மொழியை அமைக்கவேண்டும். அதைச் செய்ய உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுவைத் தவிர வேறு ஒரு நிறுவனம் அந்தப் பணிக்கு நீங்கள் எல்லாரும் காட்டுகின்ற ஒத்துழைப்புக்கு அடையாளம்தாள் இந்த உலகத் தமிழ் மாநாடு.

    அண்ணா நாமம் வாழ்க..........sb...

  4. #953
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும் சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.

    'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.

    [
    ](https://www.facebook.com/photo.php?f...WUtH3WBaiBJGtQ)

    [
    ](https://www.facebook.com/photo.php?f...WUtH3WBaiBJGtQ)[
    ](https://www.facebook.com/photo.php?f...Q).........SBB...

  5. #954
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "என் அம்மாவின் ஆசைக்காக சொந்த வீடு வாங்கினோம். தாயின் ஆசை நிறைவேற காரணமாயிருந்த இந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்...

    'பட வாய்ப்பு கிடைக்காதா...?' என்று, ஏங்கி தவித்ததும், 'நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், நேரம் போதவில்லையே' என்று கவலைப்பட்டதும் இவ்வீட்டில் தான்.

    நண்பரிடம் கடன் வாங்கி, காலம் கழித்ததும், என்னை வைத்து படமெடுத்த பட முதலாளிக்கே, கடன் கொடுத்ததும் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்ததாளில் எப்படிப்பட்ட ஷரத்துக்களை குறிப்பிட்டிருந்தாலும், மறுப்பு கூறாமல் கையெழுத்திட்டதும், அதேபோன்று, என் இஷ்டத்துக்கு, 'ஷரத்து'க்கள் எழுதப்பட்டு, பட முதலாளிகள், என்னோடு ஒப்பந்தம் செய்து கொண்டதும் உண்டு.

    திரைப்பட கம்பெனி ஒன்றில், நானும் ஒரு பங்குதாரராக ஆனதும், படம் வெளியிடப்பட்டதும், அதிலிருந்து வெளியேறி, சொந்தமாக ஒரு திரைப்பட நிறுவனத்தை துவங்கி, படம் எடுத்து வெற்றி பெற்றதும், இங்கு வசித்த காலத்தில் நிகழ்ந்தவைகளே!

    ஒரே குடும்பமாக, நானும், என் அண்ணனும், பல ஆண்டுகள் வாழ்ந்த இவ்வீட்டில் தான், 'வாழ்வு அவ்வளவு தான்...' என, மருத்துவரால் கைவிடப்பட்ட என் மனைவி, பல ஆண்டுகள் உயிரோடு இருந்து, பின், இறந்து போனதும் இந்த வீட்டில்தான்.

    தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபட்டு, தமிழக சட்டசபையில், கழக உறுப்பினர்கள் இடம் பெற்றது; முதன் முதலில் நான், தமிழக மேல் சபை உறுப்பினன் ஆக்கப்பட்டதும், பின், அப்பதவியை ராஜினாமா செய்தது போன்றவைகள் இங்கு வாழ்ந்த போது நடந்தவையே!

    அதேபோன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதற்கு, கலைவாணர் தலைவரானதை கண்டு களிப்புற்று மகிழ்ந்ததும், பின், கலைவாணரை இழந்து, கண்ணீர் சிந்தியதும் இங்கு தான்.

    எம்.ஜி.ஆர்., நாடக மன்றம் துவக்கப்பட்டு, பின், அது நிறுத்தப்பட்ட நிகழ்வும், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறேன் என்று போற்றப்பட்டதும், விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட போது, 'கால் ஒடிந்து விட்டது; இனிமேல் நடக்கவே முடியாது...' என்று ஏளனங்களை கேட்டதும் இங்கு வாழ்ந்த போது தான்!

    ஆர்.எம்.வீரப்பன், என்னுடைய நாடகம் மற்றும் திரைப்பட நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, என்னிடம் சம்பளம் வாங்கி வேலை செய்ததும், பின், அவரே பட முதலாளியாகி, சத்யா மூவீஸ் நிறுவனத்தை அமைத்து, அதன் மூலம் தயாரித்த படங்களில், நான், அவரிடம் சம்பளம் வாங்கி, வேலை செய்தது என, ஏகப்பட்ட சம்பவங்களை என்னுள் பதிவு செய்தது, இவ்வீட்டில் வசித்த காலகட்டத்தில் தான்!

    'நல்லதையே நினைக்கிறேன்; நல்லதையே செய்கிறேன்...' என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு ஒரு யோசனையை, நிபந்தனையை விதித்தேன். ஆனால், அதுவே, பிற்சமயம் அவர்களால் எனக்கு விதிக்கப்பட, அதற்கு கீழ்ப்படிந்து நடக்க நேர்ந்த போது, நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா...

    'பாக்கெட் மார்' என்ற இந்திப் படத்தை எனக்கு காட்டிய ஏ.எல்.சீனிவாசன், அப்படக்கதையை தழுவி, தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனக்கும் அப்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தது.

    ஏற்கனவே, அவருடைய தயாரிப்பில், 'ரத்னாவளி' என்ற படத்தில், நடித்துக் கொண்டிருந்தேன்; இப்படத்தில் கதாநாயகி, பத்மினி. அத்துடன், அஞ்சலி தேவி மற்றும் பானுமதி போன்ற பெரிய நடிகையரோடு, வேறு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன்.

    மேலும், இப்போது உள்ளது போல், அப்போது, எனக்கு நிறைய படங்கள் இல்லை. அத்துடன், சம்பளமும் குறைவு.
    ஆனாலும், நிறைய நாடகங்களில் நடித்து வந்ததுடன், பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.

    அதனால், படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுப்பதில் கஷ்டம் இருந்தது.
    இந்நிலையில் தான், 'திருடாதே' எனும் அப்படத்தில் நடிக்க அழைத்தார், ஏ.எல்.சீனிவாசன்.

    எனது அருமை நண்பரான ஏ.எல்.எஸ்., எவ்வளவு கஷ்டம் என்றாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் குணமுள்ளவர்.
    எதிராளியை அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இல்லாமல், கள்ளம் கபடமின்றி, மனதில் பட்டதை பட்டென்று கூறி விடும் இயல்பு கொண்டவர்.

    இக்குணத்தால், அவரை விரோதியாக கருதுவோரைக் கூட வெறுக்க மாட்டார்.
    'விளையாட்டாக பேசினோம்; அதிலென்ன விபரீதம் வந்து விடும்...' என்று எண்ணும் வெள்ளை மனம் கொண்டவர்.

    இத்தகைய குண அம்சம் கொண்ட ஏ.எல்.எஸ்., என்னை, #திருடாதே படத்தில் நடிக்க அழைத்த போது, 'என்னை, கதாநாயகனாக போட நினைப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி; கதாநாயகி வேடத்திற்கு பெரிய நடிகையரைப் போட்டால் கால்ஷீட் பிரச்னை வரும். என் கால்ஷீட்டுகளை, வீணாக்காமல் பயன்படுத்தினால் தான் படம் விரைவில் எடுக்க
    முடியும்...' என்றேன்.

    'அப்படியே செய்றேன்... கதாநாயகியாக யாரை போடலாம், நீங்களே சொல்லுங்க; புதுமுகம்ன்னாலும் பரவாயில்ல...' என்றார். ஏ.எல்.எஸ்., அருகில் இருந்த இயக்குனர் ப.நீலகண்டன், 'புதுமுகத்தையே போடலாம்...' என்றார்.

    உடனே நான், 'அந்த புதுமுகம், நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து நடிக்க தயாராக இருக்கணும். சேர்ந்தாற் போல், பத்து நாட்கள் கால்ஷீட் தந்தாலும், நேரம் காலம் பாக்காமல் நடிக்க வரணும்; இந்த நிபந்தனையோட, அந்த புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யுங்கள்...' என்றேன்.

    என் நிபந்தனைக்கு சம்மதித்தார், ஏ.எல்.எஸ்., உடனே இயக்குனர், ப.நீலகணடன், 'பத்மினி பிக்சர்ஸின் தங்கமலை ரகசியம் படத்துக்காக, குரூப் டான்ஸ் காட்சி ஒன்றை இயக்கினேன். அதில் ஆடின ஒரு பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருந்தது...' என்று, என்னிடம் சிபாரிசு செய்தார்.

    யார் என்று விவரம் கேட்ட போது, 'அப்பெண்ணின் பெயர், சரோஜாதேவி; ஒருபுறம் பார்த்தா, வைஜயந்தி மாலா போன்றும், இன்னொருபுறம் பத்மினி மாதிரியான முகச் சாயல் இருக்கு.
    தாய்மொழி கன்னடம்; தமிழ் அவ்வளவாக தெரியாதுன்னாலும் நாளடைவிலே பேசிப் பேசி பழக்கிடலாம்...'என்றார்.

    அப்போது, சரோஜாதேவியை முதன் முதலில் பார்த்த நினைவு வந்தது; 'நாடோடி மன்னன்' படப்பிடிப்பு துவக்கியிருந்த நேரம்...

    - ' நான் ஏன் பிறந்தேன் ' தொடரில்
    மக்கள்திலகம் .............

  6. #955
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வள்ளல்தன்மைக்கே #தெய்வீகத்தன்மை #ஏற்படுத்தியவர்

    டாக்டர் முத்துலட்சுமி, நடிகர் ஜெமினிகணேசின் அத்தை...இவர் சென்னை அடையாறில் ஒரு மருத்துவமனை கட்டிவந்தார்... ஆனால் பணப் பற்றாக்குறை...!
    யாரைக் கேட்பது?
    யோசனையில் ஆழ்ந்தார்...

    ஜெமினி கணேசன் மூலமாக விஷயம் எம்ஜிஆர் காதிற்கு வர, முத்துலட்சுமியைச் சந்தித்து ரூ.30000/- (1960 களில் ��) தருவதாக வாக்களிக்கிறார்...
    டாக்டருக்கோ ஒரே பிரமிப்பு...
    இந்தக்காலத்திலும் இப்படியும் ஒருவரா? என்று...

    வாக்களித்த வாத்தியாருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவில்லை...என்ன செய்வது? வாக்களித்துவிட்டோமே என்ற உறுத்தல்...! சிறிது விநாடிகள் யோசித்த எம்ஜிஆர் தெரிந்தவரிடம் ரூ.30000/- பணத்தைக் கடனாக வாங்கி, டாக்டர் முத்துலட்சுமிக்கு அளித்தார்...

    சிறிது காலத்தில் எம்ஜிஆர் கடன் வாங்கி கொடுத்த வாக்கைக் காத்ததையறிந்த நடிகர் ஜெமினி கணேசன் சிலாகித்தது...

    "அண்ணன் எம்ஜிஆர் கொடைத்தன்மை நிறைந்தவர் என்பதை இந்த நாடறியும்... ஆனால் கடன் வாங்கியாவது கொடுத்த வாக்கைக் காக்கவேண்டும் என்பது எத்தகு உன்னதமான செயல்...! இதுபோன்ற ஒரு வள்ளல்தன்மையை அண்ணன் எம்ஜிஆரைத் தவிர வேறு யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது..."

    தன்னிடமுள்ளவற்றைப் பிறருக்குக் கொடுப்பது வள்ளல் தன்மை... ஆனால் கடன்வாங்கியாவது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்று அந்த வள்ளல் தன்மைக்கே ஒரு தெய்வீகத்தை ஏற்படுத்தியவர் நம்ம வாத்தியார்...

    ஆரம்பகாலங்களில் படங்களில் நடிக்கும்போது எம்ஜிஆரின் வருமானம் குறைவு. அந்தக்கால கட்டங்களிலும் தன்னிடமுள்ளவற்றைக் கொடுத்தோ, அல்லது தன் சம்பளப்பணத்தை அட்வான்ஸ் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவுவார்...இது கொடைத்தன்மையை விட உன்னதநிலை...

    கையில் இருப்பவற்றைக் கொடுப்பவர் கொடைவள்ளல் என்றால்...
    கடன் வாங்கியாவது அடுத்தவர் கஷ்டத்தைத் துடைக்கும் வாத்தியாரை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்...?????!!!!! Bsm...

  7. #956
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆகா சூப்பர்!. ஒரு வழியாக "சிவந்த மண்ணி"ன் வசூலை வெளியிட்டு நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்கள் சிவாஜியின் கைபுள்ளைங்க. இந்த வசூல் எந்த விளம்பரத்திலும் வரவில்லை. இருப்பினும் அவர்கள் தந்த வசூலை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளலாம்.. அது உண்மையா பொய்யா என்று நமக்குத் தெரியாது. ஏனென்றால் 72ம் ஆண்டு வெளியான வெள்ளி விழா ஓட்டிய "பட்டிக்காடா பட்டணமா"
    6 வாரத்தில் பெற்ற வசூல் 30 லட்சம் தான். மொத்த வசூலே 40 லட்சத்துக்குள் அடக்கம். ஆனால் 69 ல் வெளியாகி வெள்ளிவிழா ஓட்டாத "சிவந்த மண்" பெற்ற வசூல் சுமார் 44 லட்சமாம். சரி ஏற்றுக்கொள்வோம்.

    அதை வைத்துக் கொண்டு "சிவந்த மண்ணு"க்கு 6 மாதத்திற்கு முன்பு வந்த "அடிமைப்பெண்ணி"ன் வசூலை நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். "அடிமைப்பெண்" 100 நாட்கள் ஓடிய திரையரங்கின் வசூல் முன்னரே வெளிவந்த விபரங்கள் நம்மிடம் உள்ளன. இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு ஒரு சிறிய ஊரில் உள்ள தியேட்டர் முதற்கொண்டு வசூலை எந்த பேக்டரியில் போட்டு வருகிறார்களோ தெரியவில்லை.
    நமக்கு அப்படிப்பட்ட பேக்டரி எதுவும் தெரியவில்லை. தெரிந்தால் பழைய தலைவர் படங்களுக்கு புது வசூல் போட்டு கொண்டு வரலாம். ஆனால் அவர்களுக்கு தெரிந்த வித்தையை
    யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

    சரி இரண்டு வசூலையும் ஒரு தடவை நன்றாக பாருங்கள். அதில் ஏதாவது "சிவந்த மண்" "அடிமைப்பெண்ணை" முந்தியிருக்கிறதா என்றால், ஆம் ஒரே ஒரு ஊரில் மட்டும் முந்தியிருக்கிறது. அது தூத்துக்குடிதான். எங்க ஊர் கதையை உங்களுக்கு ஏற்கனவே தனியாக எழுதியிருக்கிறேன். சிவாஜி படங்கள் பொதுவாக திருநெல்வேலி வசூலுக்கு தூத்துக்குடி வசூல் 50 சதமானம்தான் வரும். இதை எந்த சிவாஜி படத்தை வேண்டுமானாலும் சோதனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் பார்த்தால் சிவந்த மண்ணின் ஒரிஜுனல் தூத்துக்குடி வசூல் சுமார் ரூ 68000 தான். மீதி உள்ள வசூல் தூத்துக்குடி சிவாஜி ரசிகர்கள் வீடு, காடுகரை வித்த பணம்தான். அதனால் தூத்துக்குடி வசூல் ரூ68000 என்று எடுத்துக் கொள்ளலாம். மற்ற எந்த ஒரு ஊரை உற்றுப் பார்த்தாலும் ஒரு ஊரில் கூட "அடிமைப்பெண்ணை" நெருங்க முடியவில்லை. "அடிமைப்பெண்ணி"ன் வசூல் விபரங்கள் தெரியாமல் "சிவந்த மண்ணு"க்கு வசூலை போட்டு கொண்டு வந்து விட்டார்கள் போலும்.

    "புதியபூமி"யில் காங்கேயன் பேசும் வசனம் இது. அங்கே "வேடன் வலையை விரித்து விட்டான், இங்கே நீ வெண்புறாவை பறக்க விடாதே" என்று. அருமையான வசனம். அங்கே "அடிமைப்பெண் "வசூல் என்ற வலையை விரித்து வைத்தவுடன் "சிவந்த மண்" வசூல் என்ற சிவப்பு புறாவே வலையில் சிக்கிக் கொண்டது. புறாவை பிடித்து
    இறக்கையை நீக்கி பார்த்தால் புறா எலும்பும் தோலுமாக இருக்கு என்ன செய்ய. அவர்கள் கொடுக்கும் பில்ட்அப் அப்படி.

    "உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது.". அவர்கள் ஐயன் உளறி வைத்த பாடல் ஒன்றே போதும் அவர்கள் நிலையை எடுத்தியம்ப. நாம் கொடுத்த வசூல் எல்லாம் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களின் வசூல். அனைத்து b, c சென்ட்டர்களின் வசூலை எடுத்தோமானால் கைபிள்ளைகளுக்கு தீராத கலக்கம் உண்டாகி விடும். எதிரிகளின் பலமறிந்து மோத வேண்டும். இருப்பதையும் இழந்து நிற்காதீர்கள்
    சக கைபிள்ளைகளிடம் எதையாவது பொய்யுரைத்து தேற்றுங்கள்.

    ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட வசூல் வித்தியாசம். அதிலும் குறிப்பாக நாகர்கோவிலில் வெறும் ரூ76000 தான் வசூலாகி இருக்கிறது. "அடிமைப்பெண்" வசூல் ரு1,30,000 .
    "குடியிருந்த கோயில்" 42 நாட்களிலேயே. ரூ 73000 பெற்று "சிவந்தமண்ணின்" வசூலை எட்டிப்பிடித்து விட்டது.
    "அடிமைப்பெண்ணிடம்" வெட்கக்கேடாக தோற்ற "சிவந்தமண்ணி"ன் அவலம்
    தற்போது கைபுள்ளைங்க மூலமாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இப்போது புரிகிறதா மக்கள் திலகத்துக்கு ஏன் உங்க ஆளைவிட அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று.

    அது மட்டுமா? "அடிமைப்பெண்"
    சில ஆண்டுகள் கழித்து வெளியான போதும் "சிவந்த மண்ணை" சீரழித்து விட்டது. 18 நாளிலேயே ரூ1லட்சத்துக்கும் அதிகமான வசூலை நாகர்கோவிலில் பெற்றது உச்சக்கட்ட ஆச்சர்யமே..
    இவ்வளவுக்கும் எந்த வெளிநாட்டிலும் "அடிமைப்பெண்ணை" படமாக்கவில்லை. "சிவந்த மண்ணை" சின்னாபின்னமாக்கி பெண்ணை பொன்னாக்கியவர் மக்கள் திலகம். அடிமைப்பெண்
    மறுவெளியீடுகளில்
    பொன் முட்டையிடும் வாத்தை போல்
    செல்வத்தை வாரி வழங்கியது
    அனைவரும் அறிந்ததே. 40 லட்சத்தில் எடுக்கப்பட்ட "அடிமைப்பெண்" வசூல் எங்கே? தமிழுக்கு மட்டுமே 80 லட்சத்துக்கும் மேலே செலவு செய்த "சிவந்த மண்" வசூல் எங்கே? வரி நீக்கி தியேட்டர் ஷேர் போக 20 லட்சம் ஸ்ரீதருக்கு தேறினாலே ஆச்சர்யம். மீதி 60 லட்சம். கணேசன் போட்ட கோவிந்தா!
    அடுத்தது. "கர்ணன்"

    "சிவந்த மண்" என்ற பிரமாண்டமான படத்தின் வசூல் விபரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்,

    100 நாட்களுக்கும் கூடுதல் ஓடிய அரங்குகள் 9

    1)சென்னையில் 4 அரங்குகளில் ஒட்டுமொத்த வசூல். ரூ 12,32,970- 21.
    அடிமைப்பெண் 13,60,256.82
    "

    5)மதுரை செண்ட்ரல்- ரூ.3,37,134-95. மதுரை சிந்தாமணி. ரூ. 4,34,643.75.
    6)கோவை ராயல் - ரூ. 3,56,453-59. . அ. பெண். 3,75,635.85
    7)சேலம். 2,28,740-60 ஓரியன்டல்ரூ.
    அ.பெண்.. ... . சேலம் சாந்தி 2,63,258.89

    8)திருச்சி
    ராஜா - ரூ 2,42,268 10. அ.பெண் 2,75,575.40
    9)தூத்துக்குடி
    பாலகிருஷ்ணா- ரூ. 1,07,531-90 (வடக்கயிறு வசூல்) (68000)
    அ.பெண். ... 1,05,816.13.

    50 நாட்களை கடந்த அரங்குகள் 23
    50 நாட்கள் வரையிலான வசூல் விபரங்கள்,
    1)நெல்லை
    செண்ட்ரல் 76 நாட்கள்- ரூ. 1,37,431- 25. ரூ 2,00,407.04
    2) ஈரோடு. - ரூ 1,12,043- 15. ரூ. 1,44,612.25
    3) வேலூர் - ரூ. 1,48,180- 85. ரூ.
    4) தஞ்சை - ரூ. 1,05,194- 27. ரூ. 1,57,726.00
    5) பாண்டிச்சேரி - ரூ 93,458- 70
    6) தாம்பரம் - ரூ 87,697- 42
    7) காஞ்சிபுரம் - ரூ. 82,050-50
    8) பொள்ளாச்சி- ரூ. 81,628- 62
    9) கும்பகோணம்- ரூ. 80,315- 52
    10) நாகர்கோயில்- ரூ. 76,575- 60. 1,30,836.36
    11) கடலூர் - ரூ 76,109- 20
    12) திண்டுக்கல்- ரூ. 72,676- 49. 1,39,006.59
    13) மாயவரம்- ரூ 62,698-00
    14) ஊட்டி - ரூ 61,720-66
    15) திருவண்ணாமலை- ரூ 61,454-10
    16) விருதுநகர்- ரூ 56,355-52
    17) ஆத்தூர் - ரூ. 51,834-46
    18) பட்டுக்கோட்டை- ரூ. 47,230-59
    19) காரைக்குடி- ரூ. 45,224-35
    20) தர்மபுரி- ரூ 42,328-89
    21) விழுப்புரம்- ரூ 78,358-43
    பெங்களூர்
    22) ஸ்டேட்ஸ்
    பிக்ஸர் அவுஸ்- ரூ 1,24,698-80
    23)அஜந்தா - ரூ. 96,437-00
    24) சிவாஜி 42 நாட்கள்- ரூ. 75,225-00.
    அ.பெண் ( 5,37,143.00 + 75,749.60 )

    33 அரங்குகளில் 100+ நாட்கள் மற்றும் 50 நாட்கள் வரையிலான வசூல் விவரப்படி

    மொத்தம் ரூ 44, 62,116- 72 ஆகும்,

    மேலும் 20 அரங்குகளில் 50 நாட்கள் கடந்த சில நாட்களின் வசூல் விபரங்கள் சேர்க்கப்படவில்லை

    ஒட்டுமொத்தமாக 50 இலட்சங்களை கடந்த வெற்றிப் படமாகும்,

    பெரும்பாலான ஓடிய ஊர்கள் அரங்குகளில் வசூலான தொகை அதுவே முதலான வசூல் சாதனை எனப் பதிவாகியும் இருக்கிறது,

    வசூல் சக்கரவர்த்தி என்றும் நடிகர் திலகமே!! இது கைபிள்ளைகளின் கூற்று.

    ஆனால் மண் சிவந்தது புரட்சிக்காரன் சிந்திய ரத்தத்தால் அல்ல. ஸ்ரீதர் மிதமிஞ்சிய நஷ்டத்தால் வடித்த ரத்தக் கண்ணீரால் பூமி சிவந்து, சிவந்த மண் உருவானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. யோசித்து பாருங்கள் கைபிள்ளைகளே சாதாரண "ரிக்ஷாக்காரன்" 51 நாளிலே 50 லட்சம் வசூல் குவித்தது எங்கே? மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட "சிவந்த மண்" ஓடி முடிய பெற்றதாக சொல்லப்படும் 50 லட்சம் வசூல் எங்கே? உண்மையிலே படுதோல்வி படம் சிவந்த மண் , இதோ கண்முன்னே ஆதாரங்கள்.

    நடிகப் பேரரசர், சினிமா உண்மை நிகழ்வுகளை ஆதாரத்துடன் கொடுப்பதால் அதை மாற்று தரப்பு ஆதாரத்துடன் மறுப்பதை விடுத்து கைபுள்ளைங்க தரக்குறைவாக
    விமர்சிப்பதை பார்த்தால் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில். அவர்கள் இல்லை என்றே தெரிகிறது. அதனால் அசிங்கமான கமெண்ட்ஸ் போடுவதை பார்க்கும் போது "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்பார்கள்.அதைப்போல் கைபிள்ளைங்க ஆபாச வார்த்தைகளில் கதறும் போது அவர்கள் ஐயனோட வளர்ப்பின் மீது நமக்கு சந்தேகம் எழுவதில் வியப்பில்லை..........ksr...

  8. #957
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சில ஆண்டுகளுக்கு முன் ஆதவன் என்ற தமிழ் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் நடித்தார்கள்.

    ஒரு நாள் படப்பிடிப்பின் நடுவில் பிரேக்கில் உணவு இடைவேளை போது அவர் கொண்டு வந்து இருந்த இரு பொருட்கள் உடன் இருந்த மற்ற அனைவரையும் கவர்ந்தன..

    அவர்கள் என்ன இது வெள்ளி தட்டு அத்துடன் ஒரு டம்ளர் போல அமைப்பில் மூடியுடன் ஒரு straa இணைக்க பட்டது போல ஒரு பாத்திரம்...என்று கேட்க.

    அவர் சொல்ல அனைத்து பட குழுவினரும் ஆர்வமுடன் கேட்க..

    எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்...ஜமீன்தார் வீட்டு மணமகன் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடன் நானும் என் அப்பா வேடத்தில் நடித்த ரங்காராவ் அவர்களும் நடித்த ஒரு காட்சி.

    ஒரு சூட்டிங் பார்க்க நாங்க போய் இருக்கும் போது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலில் அவர்கள் நடிக்க அதை பார்க்க போன நாங்கள் அந்த பாடலை தொடர்வதாக காட்சி அமைப்பு.

    இதே போல இடைவேளையில் விலை உயர்ந்த புடவை அணிந்து கொண்டு தலைவர் பக்கத்தில் நான் அமர்ந்து இருக்கும் போது குடிக்க காபி கொடுக்க பட்டது.

    நான் குடிக்க தலைவர் மறுக்க அப்போது ஒரு சொட்டு காபி என் புடவையில் சிந்தி விட பதறி நான் துடைக்க தலைவர் பார்த்து சிரிக்க.

    அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பில் இது எனது பரிசு உங்களுக்கு இனி எந்த பானமும் உங்கள் உடையில் சிந்தாது என்று இந்த கிளாஸ் போன்ற இதையும் தட்டையும் இரண்டும் வெள்ளியால் செய்ய பட்டவை...எனக்கு பரிசாக கொடுத்தார்.

    என்ன ஒரு மனது அவருக்கு....அன்று முதல் வெளிப்புற படப்பிடிப்பு எங்கு இருந்தாலும் இந்த இரண்டு பொருட்களும் என்னுடன் பயணிக்கின்றன இன்று வரை என்று சொல்லி முடிக்கிறார் அபிநய சரஸ்வதி சரோ அவர்கள்.

    சுற்றி அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் என்ன ஒரு அற்புத மனிதர் எம்ஜிஆர் அவர்கள் என்று மனதில் பேசி கொண்டது அரங்கம் முழுவதும் எதிர் ஒலித்தது சத்தியம்.

    தலைவருக்கு பக்கத்தில் படத்தில் இரு பக்கமும் கை பிடி உடன் கூடிய அந்த வெள்ளி கிளாஸ்.

    வாழ்க தலைவர் புகழ்.

    தொடரும்...உங்களில் ஒருவன்.....நன்றி......Mn...

  9. #958
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.

    புரட்சித் தலைவரை நம்பினோர் கைவிடப்படார்

    சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

    நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

    உடம்பை பார்த்துக்கொள்

    சாவித்திரி சிவாஜியை வைத்து சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

    திருமணம் செய்துகொள்

    ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார்...da.,

  10. #959
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*திரு.துரை பாரதி* 05/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    வெற்றி என்பது வானத்தில் இருந்து விழுகின்ற நட்சத்திரம் அல்ல . உழைப்பு ,,உண்மை, உறுதி, உயர்வு,ஆகியவற்றைத்தான் பாடமாக சொல்லி தந்துள்ளார்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இந்த சமூகத்திற்கு .அந்த வெற்றி என்பது அவருக்கும் அவ்வளவு சுலபமாக கிட்டி விடவில்லை .இதே சென்னை மாநகரத்திலே அவர் நடக்காத வீதிகள் இல்லை .பயணிக்காத இடங்கள் இல்லை அப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்காக அலைந்தவர்தான் அவர் .ஆனாலும் கூட மேடைகளில் அவர் அவமானப்பட்டார் .வார்த்தைகளால் அடிபட்டார் , குட்டுப்பட்டார் . .இத்தனை பிரச்னைகளை எல்லாம் கடந்துதான் அவர் வெற்றி என்ற சிகரத்தை அடைந்தார் .இந்த வெற்றி என்பது உங்களுக்கான பாடம், நமக்கான பாடம்* நமக்கான .வழிகாட்டி


    பசிப்பிணியை போக்குவதற்காகத்தான் வள்ளலார் அவர்கள் அவ்வளவுபெரிய தியாகத்தை**நடத்தினார்கள் . .இன்றைக்கும் அதற்கு அடையாளமாக வள்ளலார் வாழ்ந்த மரத்தின் கீழே அன்னதானம் செய்து வருகிறார்கள் .பசிப்பிணி என்பது எல்லோரும் அறிந்ததுதான் .உலகத்திலுள்ள எவ்வளவோ பெரிய தலைவர்கள் மட்டுமல்ல , மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பசி என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் .ஆனால் அந்த பசியை ஆற்ற வேண்டும் . பசியை தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ள மனிதர்கள்தான் மாபெரும் தலைவர்களாக உயர்ந்தவர்கள் .அந்த தலைவர்களின் வரிசையில் முக்கிய இடத்தில எம்.ஜி.ஆர். வருகிறார் .* **



    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும் இந்தியாவில்,தமிழகத்தில்**பிறக்காமல்*பிரான்ஸ், ஜெர்மனி, அமேரிக்கா*போன்ற நாடுகளில்*ஏதாவது ஒரு நாட்டில்*பிறந்திருந்தால் உலகமே*அவருடைய நூலை, வாழ்க்கையை*பாடமாக*வைத்து பல பல்கலை*கழகங்களில் டாக்டர் பட்டம் அளித்து இருப்பார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். என்கிற*மனிதர் தமிழை*நேசித்தார் .தமிழை*வாசித்தார்*, தமிழை*உயிர் மூச்சாக*நினைத்தார்*, தமிழர்களோடு வாழ்ந்தார் . தமிழ் மண்ணிலேதான் மறைய வேண்டும் என்று ஆசைப்பட்டார்*அதனால்தான் அவ்வளவு பெரிய இலட்சியங்கள் எல்லாம் இருந்தாலும் கூட*தமிழ் மக்கள் மீது இருந்த*ஈடுபாட்டால்தான் அவருக்கு*கிடைத்த பல்வேறு விஷயங்களை*உதறி தள்ளிவிட்டு தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்தார் .இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பான காலத்தில் மாத வாடகை ரூ.15க்கு வாழ்ந்து வந்தவர் 11 ஆண்டுகாலம்*தமிழகத்தையே ஆண்டார் என்பது*சரித்திரம், சாதனை, சகாப்தம்*..உலக இலக்கியங்களில் எங்கெங்கோ தேடுகிற வேதாந்திகள் எல்லாம் சொல்வார்கள் நான் அவ்வளவு புத்தகம் படித்தேன் .இவ்வளவு புத்தகம் படித்தேன் என்று .எந்த தத்துவ வாதியும்*சொல்லாத எந்த மனிதனும், எந்த*மேதையும்*சொல்லாத ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தார் .இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்னை என்பது* பசி. அந்த பசியை*போக்க வேண்டும் என்பதற்காகத்தான் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார் .இன்றைக்கு கோடிக்கணக்கான குழந்தைகள் ஒருவேளையாவது பசியாறுகிறது என்றால்**அந்த மாமனிதர் எம்.ஜி.ஆரின்*கொடைதான்*அந்த சத்துணவு திட்டம்*


    நீங்கள் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வியந்த ஒரு செய்தி என்ன*.

    திரு.கா. லியாகத் அலிகான்*:* *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.என்பவர் ஒரு வியப்புக்குரிய தலைவர் என்பதை*நான் மட்டுமல்ல தமிழகத்து பெரியோர்கள், தாய்மார்கள் அனைவரும்தான்*வியப்பாக பார்த்தார்கள் . ஏனென்றால் அவருடைய இளம் வயதிலேயே அவருடையான எடுப்பான*தோற்றம் , கட்டு மஸ்தான*உடற்கட்டு*அதை பாதுகாப்பது ,அவருடைய முகப்பொலிவு ,*அவருடைய தலைமுடியின் அளவு, அழகு ,அவற்றையெல்லாம் பார்க்கும்போது இளைஞர்களுக்கெல்லாம் ஒரு உந்துசக்தியாகவே திகழ்ந்தார் .வில்லன் நடிகர்*நம்பியார் சொல்லும்போது ஏன் சும்மா*லுங்கி அணிந்து கொண்டு வெளியே வரலாமே*.எதற்கு*வீணாக சிரமப்பட்டு உடைகள்*அணியவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார் .* அப்படியல்ல . என்னை*பார்ப்பவர்களுக்கு நான் தோற்ற பொலிவுடன் காட்சி*அளிக்க வேண்டும் .தோற்றப்பொலிவோடு இருந்தால்தான் அவர்களும்* அதை போல**சுறுசுறுப்பாக ,உற்சாகமாக*இளமை துள்ளலோடு*தங்களை*உருவாக்கி கொள்வார்கள் .* நான் எதற்குமே எடுத்துக்காட்டாக, ஒரு முன்னுதாரணமாக*இருக்க வேண்டும் என்பதிலேதான் மிகுந்த குறியோடு இருக்கிறேன் . .அதற்கு*காரணம் , இந்த பாமர*மக்கள், அல்லது படித்தவர்கள்* உட்பட**எல்லோரும்* என்னை பார்க்கிறபோது*சோம்பேறி தனத்தை*அறவே அகற்ற வேண்டும் .சுறுசுறுப்பை தனக்கு*தானே வரவழைத்து கொள்ள*வேண்டும் .தான் எடுத்த காரியத்தை நடத்தி முடிக்க கூடிய* தனது*தோற்ற பொலிவை* வரவேற்று கொள்ள வேண்டும் .அதைத்தான்* நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தோற்ற பொலிவு என்பது பிறருக்காக செய்வது*உணவு அருந்துவது நமக்காக*உண்பது .நான் ஏதாவது உணவை சாப்பிட்டுவிட்டு* வெளியே சென்று ,நான் அறுசுவை உணவு அருந்தினேன் என்று கூட*சொல்லலாம் .பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு கூட*வெளியில் வந்து நான் அறுசுவை உணவு அருந்தினேன் என்று சொன்னால் கூட*மக்களுக்கு தெரியாது .ஆனால் நீ தோற்ற பொலிவு இன்றி**காட்சி அளிப்பா*யேயானால்*அந்த காட்சியே*உன்னை*குந்தக*படுத்துவதோடு ,உன்னை பார்க்க வந்தவருக்கு மனசோர்வை உண்டாக்கும் .ஆதலால் நம்மை பார்ப்பவர்கள், தங்களின்*தோற்ற பொலிவை அதிகப்படுத்துவதோடு சுறுசுறுப்பையும், விடாமுயற்சியையும் உருவாக்கி* கொள்வதற்கு எம்.ஜி.ஆர். ஒரு உதாரணம் என்று அவர்கள் நம்ப வேண்டும் அதைத்தான் இப்போது நான் கடைபிடித்து வருகிறேன் .அதைத்தான் நபிகள் நாயகம் அந்த காலத்திலேயே 1460வருடங்களுக்கு முன்பாகவே* என்ன சொல்லி*இருக்கிறார் என்றால் வெளியே வரும்போது*ஒருவர் வாசனை திரவியங்கள் கூட*போட்டுக் கொள்ளலாம்.தவறில்லை*ஏனென்றால் ,உனக்கு*எதிர் வரும் நண்பர்களுக்கு நல்ல தோற்ற பொலிவுடன் நீ இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல மனமகிழ்வு ஏற்படும் . அத்தகைய*உணர்வுகளை எல்லோரும் கடைபிடிப்பதற்கு இஸ்லாம் மதம் வழிகாட்ட வேண்டும் என்று அவர் தன்* வாழ்க்கை சரித்திரத்தில் குறிப்பிட்டதைத்தான் புரட்சி தலைவர* எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய*வாழ்க்கையில் கடைபிடித்து*அதை எம்.என்.நம்பியார் அவர்களுக்கு விவரமாக சொல்லி இருக்கிறார் .தோற்ற பொலிவு என்பது*மிக முக்கியமானது . சர்வாதிகாரி என்ற திரைப்படத்தில்*நடிப்பதற்காக செல்லும்போது**சேலத்தில்*ஒரு நதிக்கரையில் ஓரத்தில்*கதாநாயகி அஞ்சலிதேவி*நடிக்க தயாராகி நிற்கிறார் .. அவருக்காக ஒரு சாரட்*வண்டி தயாராக வந்து நிற்கிறது .நதியின் மறு கரையில்*அஞ்சலிதேவி*இருக்கிறார் .இந்த பக்கத்தில் இருந்து சாரட்*வண்டி உள்ளே போகிறது .இந்த பக்கம் தரையில்*எம்.ஜி.ஆர். அவர்கள் நின்று கொண்டு இருக்கிறார் .சாரட் வண்டி ஆற்றங்கரையில்* நடுவழியில்**நின்றுபோய் விடுகிறது .உடனே எல்லோரும் வந்து வண்டியை*தள்ள முயற்சிக்கிறார்கள் .ஆனால் முடியவில்லை .உடனே எம்.ஜி.ஆர்தானே . அங்கு வந்து ,அனைவரையும் விலகி போக சொல்லி ,மாட்டிக்கொண்டு இருக்கிற சாரட் வண்டியின் சக்கரத்தை ,தன் பலம் கொண்ட*மட்டும் இரு கரங்களால்* தூக்கி தள்ளி விடுகிறார் .அப்போது அவரது புஜங்கள்*மிகவும் பலமாக இருப்பதை பார்த்த இயக்குனர் பிரமித்து போய்விட்டார் .அந்த சக்கரத்தை அப்படியே தூக்கி,வண்டியை*தள்ளி**கொண்டுபோய் அப்படியே*மறுகரையில் அஞ்சலிதேவி நிற்கும் இடத்திற்கு கொண்டு*செல்கிறார் . .பின்னர் சாரட்* ஓட்டுனரை வண்டியில் அமரச்சொல்கிறார் .இந்த காட்சிகளை பார்த்து பிரமித்து போன இயக்குனருக்கு ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது . புரட்சி கலைவர்*எம்.ஜி.ஆர்.,அஞ்சலிதேவி இருவரும் சந்திக்கும் காட்சியை*வேறு விதமாக படமாக்க நினைத்த*இயக்குனர் ,இதையே*காதலின் தொடக்க காட்சியாக*வைத்து கொள்ள முடிவு செய்து , மறுபடியும் வண்டியை பள்ளத்தில் விழுவது*போல செய்து*,அதை தூக்கி விடக்கூடிய நாயகனாக*மக்கள் திலகம்* எம்.ஜி.ஆர். அவர்களை காட்டி ,அவரது*புஜ*பராக்கிரமத்தை காட்டி அவரது முக பொலிவையும் காட்டி ,அங்கே காதல் அரும்புவது போல காட்சியை*அடிப்படையாக* அமைத்து கொடுத்தது இயக்குனரின் சிந்தனையே என்றாலும் ,அங்கே எம்.ஜி.ஆர். அவர்கள் காட்டிய வீரம், அந்த சக்கரத்தை அவர் தூக்கிய விதம், அந்த அற்புதமான*செயல்*அந்த இயக்குனரையே ஈர்த்தது*என்றால் சாதாரண*மக்களாகிய நம்மை போன்றவர்களுக்கு அந்த ஈர்ப்பானது எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் .



    ஆகவே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கற்று கொள்ள வேண்டியது*நம்முடைய உடம்பை கட்டு கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் .முக பொலிவைவெளியே வரும்போது**மிக சிறப்பாக காட்டி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை .நகத்திற்கு பாலிஷ்*போடுவது*வேண்டுமானால் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் முகத்திற்கு அழகுபடுத்துவது என்பது ஒரு அத்தியாவசியமான தேவை .அதற்காக*அனைவரையும் கவரும் விதத்தில்*சினிமா நடிகர்*,நடிகை* போல மேக்*அப்*செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை .தலை முடியை*நன்றாக சீவி, முகத்திற்கு தேவையான அளவு மட்டும் பொலிவை*ஏற்படுத்தி நல்ல செயல்கள் மட்டும் செய்து ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் முன் உதாரணமாக இருந்திருக்கிறார் . இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் நோய் வாய்ப்பட்டு*அப்போல்லோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில் கூட நீங்கள் அவரை*முகத்தில்*ஷேவ் செய்யாத*தாடியுடன்*பார்த்திருக்க முடியாது .வெளியில் கூட இரண்டுநாள்*முளைத்த தாடியுடன் கூட*பார்த்திருக்க முடியாது .அவரை மருத்துவமனையில் யாரும் சென்று பார்க்க முடியாதவகையில் கட்டுகாவல் கடுமையாக இருந்தது .மருத்துவமனையில் இருந்து நவம்பர் 5ந்தேதி 1984ல் சிகிச்சைக்காக அமேரிக்கா* புறப்படுகிறார் .* அந்த சமயம்*அவர் செல்லுகின்ற விமானம் ஒரு சிறிய* மருத்துவமனையாக மாற்றப்படுகிறது .அனைவரும் பயந்துகொண்டிருந்த நேரம் .நான் மட்டும் எப்படியோ* *கட்டு காவலை*மீறி ,தப்பி, வேறு ஒரு வழியாக சென்று*எம்.ஜி.ஆர். அவர்கள் தங்கியுள்ள அறைக்கு வெளியே நின்று கொண்டேன் .அப்போது ஒரு ஸ்ட்ரெச்சரில் எம்.ஜி.ஆர். அவர்கள் படுத்த நிலையில்*வெளியில் அழைத்து*வரப்படுகிறார் .அப்போது அவருக்கு*சுய*நினைவில்லை என்று சொல்கிறார்கள் .அவர்மீது*போர்வை போர்த்தப்பட்டுள்ளது . அப்போது அவரது*வலது தோள் .மற்றும் புஜங்கள் தெரிகின்றன .அந்த சூழ்நிலையில் கூட*வெளியில் வரும்போது*அந்த போர்வையை*தன்* இடது கையால் இழுத்து கழுத்து*வரையில் போர்த்தியபடி செல்வதை*நான் பார்த்தேன் .அதாவது அந்த நேரத்தில் கூட தன்னுடைய உடம்பு வெளிப்பார்வைக்கு தெரியக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே,அனிச்சை செயல் என்பார்களே அதுபோல* அவருக்கு இருந்துள்ளது .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    எம்.ஜி.ஆர். அவர்கள் தன் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை தான் நினைத்தது போல் நடத்தியவர் .நினைத்ததை எல்லாம் செய்தவர் . அவருக்கு தெரியாத தொழில்நுட்ப விஷயங்களே கிடையாது .எப்படி ஒரு மனிதனுக்கு ஜாதகத்தில் 12 ராசிகள், நட்சத்திரங்கள் இருக்கிறதோ அப்படி திரைப்பட துறையில் 12 தொழில் பிரிவுகள் இருந்தது .அத்தனை தொழில் பிரிவுகளையும் நேரடியாக அறிந்து தெரிந்து வைத்திருந்தார் .அன்னமிட்டகை படத்தில் பி.சுசீலா பாடிய பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல் உள்ளது .கவிஞர் வாலி முதலில் அந்த பாடலை 17 வயதிலே 18 பிள்ளையம்மா என்று எழுதி இருந்தார் .எண்* கணிதப்படி முதல் வரிசையில் 17 என்பதின் எண்ணிக்கை 8 வரக்கூடாது என்பதால் அதை மாற்றி 16 வயதினிலே என்று எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.***


    எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எண்* கணிதம் தெரியும் . புத்தகங்கள் மூலம் பல விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார் இங்குள்ள மேதாவிகள் சிலர் சொல்கின்றனர் அவர் வெறும் நடிகர் என்று .அவர் நடிகர் மட்டுமல்ல .அவரது ராமாவரம் தோட்டத்து இல்லத்தில் உள்ள நூலகத்தில் அந்த காலத்திலேயே*15 லட்ச ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் இருந்தன உலகத்தில் உள்ள சிறந்த ,அரிய புத்தகங்களை எல்லாம் வாங்கி* குவித்து வைத்தவர் . அதில் சில முக்கிய புத்தகங்களை தன்* உதவியாளரான ரவீந்தரை படிக்க சொல்லி விஷயங்களை கற்று இருந்தார் .அந்த ரவீந்தர்தான் எம்.ஜி.ஆரை பற்றி ,கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது* என்ற* நூலை எழுதினார் எம்.ஜி.ஆர். ஒரு வேதநாயகம் என்ற நூலையும் எழுதியுள்ளார் . எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர்*.இந்த மண்ணில்* வாழ்ந்ததனால் பல மேதாவிகளால் நினைவுபடுத்தப்படுகிறார் .* அதனால் அவர் ஒரு வாழ்க்கை, ஒரு தத்துவம் ,ஒரு பாடம் , ஒரு படிப்பினை , ஒரு பல்கலை கழகம் என்பதை புரிந்து கொண்டவர்கள் வெற்றிபெற்று வருகிறார்கள் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
    ----------------------------------------------------------------------------------
    1.உழைக்கும் கைகளே, உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*

    2.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

    3.அன்னமிட்டகை ,நம்மை ஆக்கிவிட்ட கை - அன்னமிட்டகை*

    4.எம்.ஜி.ஆர். - லதா உரையாடல் - சிரித்து* வாழ வேண்டும்*

    5.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*

    6.பதினாறு வயதினிலே _ அன்னமிட்டகை*

    7.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் -குமரிக்கோட்டம்*

  11. #960
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தவர் நம் இதயதெய்வம் ஆவார்..........

    தலைவர் நடிகர் சங்க தலைவர் ஆக இருந்த போதே சங்கத்துக்கு என்று இடம் வாங்க பட்டு அதன் பின் அவர் ஆற்றிய நன்மைகள் அனைவரும் அறிவோம்.

    இதை பற்றி தனி பதிவு ஆதாரங்கள் உடன் ஒருநாள்....கலை துறையினருக்கு வாரத்தில் 2 வது சண்டே விடுமுறை.

    படப்பிடிப்புகள் அன்று நடக்காது...முழு ஓய்வு அன்று அந்த துறை சார்ந்த அனைவருக்கும்..

    தலைவர் ஒருமுறை யோசித்து அந்த விடுமுறை நாள் அன்று அனைத்து நடிகர் நடிகையர் துறை சார்ந்தவர் அனைவரும் நடிகர் சங்க வளாகத்தில் கூட ஏற்பாடு செய்தார்.

    தலைவர் ஏற்பாடு என்றால் சும்மாவா..ம்
    காலை 7.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை நிகழ்வுகள்.

    விடுமுறை தினம் அன்று அவர்கள் வெளியே போய் அவர்கள் விரும்பும் பொருள்கள் வாங்குவது வழக்கம்.

    ஆனால் அன்று சங்கம் வந்த போது சென்னையில் இருந்த அனைத்து முன்னணி நிறுவனங்களும் அங்கே ஸ்டால் அமைத்து இருந்தன.

    துணிக்கடை நகைக்கடை விதம் விதம் ஆன சைவ அசைவ உணவே வகை அரங்கங்கள்....ஏதோ ஒரு மினி பொருள்காட்சி மைதானம் போல.

    வந்து சேர்ந்த அத்துணை பேரும் இது என்ன மாயாஜாலம் எப்படி இப்படி என்று வியக்க.

    அனைத்து வித விளையாட்டு போட்டிகள் ...ஆண்களுக்கு. ஜெமினி அவர்கள் தலைமையில் கிரிக்கெட் குழு, ஹாக்கி குழு...

    கயிறு இழுக்கும் போட்டி சாக்குக்குள் கால்கள் நுழைத்து ஓடும் போட்டி

    கோலம் போடுதல் போட்டி... விளக்கை கையில் கொண்டு அணையாமல் அடுத்த பக்கம் கொண்டு செல்லும் போட்டி.

    பேச்சு போட்டி கவிதை போட்டி அனைத்தும் இருந்தன அன்று.

    சிவாஜி ,எஸ்.எஸ்.ஆர்.மேஜர்...குணசித்திர நடிகர்கள் கோபால கிருஷ்ணன்....நாகேஷ்.

    சந்திரபாபு...தங்கவேலு. ரங்காராவ்...சுப்பையா அவர்கள்...

    சாவித்திரி ஜமுனா சரோ அஞ்சலிதேவி இன்னும் பல முன்னணி நடிகைகள்.

    அனைவரும் கலந்து கொண்டு ஒரு குடும்பம் போல அன்று இணைந்து அனைவரும் அன்று இரவு வீடு திரும்பும் போது...

    போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை சிவாஜி அவர்கள் கரங்கள் கொண்டு வழங்க வைத்து.

    வந்த அனைத்து துறை சார்ந்த ஒருவர் விடாமல் பணம் நகை புடவை மற்ற பரிசுகள் அனைத்தையும் கொடுத்து அவர்களை தேடி தேடி வந்து உபசரித்து..

    அவர்கள் அனைவரும் அன்று கலைந்து சென்ற பின் அனைத்து வகை செலவுகளுக்கும் பணத்தை அரங்க நிர்வாகிகளுக்கு கொடுத்து விட்டு..

    இரவு 11 மணி அளவில் வீடு திரும்பி மறு நாள் காலை படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் நம் தலைவர்.

    அடுத்த நிகழ்வுகளுக்கு கொடுக்க பணம் வேண்டுமே அதை சம்பாதிக்க அதிகாலை புறப்படுகிறார் நம் பொன்மன செம்மல்.

    அது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரை நடிகர் சங்கத்தில் இன்று வரை நடக்கவில்லை..இனிமேலும் நடக்க வாய்ப்பு இல்லை.

    ஏன் என்றால் அந்த தெய்வம் இன்று இங்கு இல்லை.

    வாழ்க தலைவர் புகழ்.

    நன்றி தொடரும்

    உங்களில் ஒருவன்...

    நடிகர்களில் நாம் பார்த்த முதல் மனிதர் தலைவர் மட்டுமே...

    படத்தில் எங்கள் தங்கம் படத்தின் 100 வது நாள் கேடயம்...இதுவும் அடுத்தவருக்கு நடித்து கொடுத்ததே............Mn...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •