Page 129 of 210 FirstFirst ... 2979119127128129130131139179 ... LastLast
Results 1,281 to 1,290 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1281
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #முதல்வரின் #சிலம்பாட்டம்

    தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "#தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
    ஆண்களும், பெண்களுமென அலைமோதியது..
    அதனால் நெரிசல் அதிகமாகியது...

    வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

    இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "#காவலர்கள் #தங்களிடமுள்ள #லத்திக்கம்புகளை #உடனே #மேடையில் #ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்...
    நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..

    நிகழ்ச்சி முடியும் போது #நம்ம #முதல்வர் என்ன செய்தார் தெரியுமா ?

    கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... #வேட்டியை #மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...

    இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தனர்...

    பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

    #முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #நமக்கு #பாசமிகு #வாத்தியார் #தான்.........bsm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1282
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்_வெற்றிப்படங்கள்...

    #உழைக்கும்_கரங்கள்...!!!

    கோவை செழியன் தயாரிப்பு- கே.சங்கரின் இயக்கம்-நாஞ்சில்.கி.மனோகரனின் வசனம்-மெல்லிசை மன்னரின் இசை ஆகியவற்றோடு 1976 ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.

    மக்கள் திலகம் தனி இயக்கம் கண்டு, 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ஏழைப்பங்களனாய் வருகிறார்.அசத்துகிறார்.

    ஊரை அடித்து ஊழல் செய்யும் சேர்மேன் நாகலிங்கத்தையும் (தங்கவேலு) அவரது கலப்பட தொழிலையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.

    நாகலிங்கத்தின் விதவை தங்கை கெளரி ((குமாரி பத்மினி)) ஒரு போலிச்சாமியார் கபாலியிடம் ((தேங்காய் சீனிவாசன்))தன்னை இழக்கும் போது, அவனுக்கே அவளை மணமுடித்து தன் தாய் போல மதிக்கும் அன்னம்மாளின் ((பண்டரிபாய்))குடும்ப மானத்தை காக்கிறார்

    தன்னை காதலிக்கும் கிராமத்து முத்தம்மா ((லதா)) விற்கு வாழ்வளிக்கிறார்.

    பக்தி வேண்டியதுதான்..ஆனால் பக்தி என்ற போர்வையில் போலிச்சாமியார்களுக்கு ((தேங்காய்-நாகேஷ்)) இடமளிக்கவே கூடாது என சொல்கிறார்.

    தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணை பங்கஜம்.. ((பவானி)) இசையரசியாய் வாழ வைக்கிறார்.

    விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை படம் முழவதும் கிராமத்து விவசாயியாய் வாழ்ந்து காட்டுகிறார்.

    இந்த படத்தில் அன்றும்-இன்றும்-என்றும் பேசப்பட்டது கோவில் திருவிழாவில் நடக்கும் அந்த மான் கொம்பு சண்டை, மக்கள் திலகத்தின் வேகத்தில், காமிராவே திணறுகிறது. அதே போல வைக்கோல் போரில் ஜஸ்டினுடன் போடும் சண்டையும ரசிகர்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டது.அப்போது மக்கள் திலகத்திற்கு 59 வயது, இந்த வயதிலும் மான் கொம்பு, சிலம்பாட்டம் என்று பட்டையை கிளப்பினார் மக்கள் திலகம்.

    "நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே" இந்த பாடலாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் இன்று வரை ஒலிக்கிறது. இதை தவிர "வாரேன்...வழி காத்திருப்பேன்", "கந்தனுக்கு மாலையிட்டாள்" பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.

    அருமையான கதை, நடிப்பு,பாடல்கள், வசனங்களை கொண்ட இப்படம் நூறு நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது..!!!

    Source :https://en.m.wikipedia.org/wiki/Uzha...ngal...Sr.babu...

  4. #1283
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த 10.11.2020 முதல் பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களே திரையிடப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி வீட்டில் ஏராளமான வேலைகள் உண்டு. கடைவீதிகளுக்கு செல்ல வேண்டும். கனமழை பெய்யும் காலம் இது. கொரோனா பீதி ஒருபக்கம். இத்தனை மோசமான சூழலில் திரையரங்கை திறந்தாச்சு எப்படி மக்களை தியேட்டர்பக்கம் வரவழைப்பது என்ற யோசனையில் ஆழ்ந்த திரையரங்கினர் எம்ஜிஆர் படம் ஒன்றால்தான் இத்தனை மோசமான நிலையை சமாளிக்க முடியும் என நல்ல முடிவெடுத்து எம்ஜிஆர் படங்களை திரையிட்ட வண்ணம் உள்ளனர். வேற ஒரு நடிகர் படம் திரையிடுவது என்பது நினைத்தே பார்க்க முடியாது. எனவே 'எம்ஜிஆர் படங்களைப் போடு...மக்களை திரட்டு...பணத்தை அள்ளு' என வழக்கமான பாணியை கையிலெடுத்தனர். எண்ணம் சரிதான்.... ஆனால்....ஆனால்...ஊர் முழுக்க போஸ்டர் விளம்பரம் முன்பைவிட அதிகமாக செய்யணுமா, வேண்டாமா? டிக்கெட் விலையை குறைக்க வேணுமா வேண்டாமா? டிஜிட்டலில் வெளிவந்த தலைவர் படங்களை களமிறக்க வேணுமா வேண்டாமா? நாளிதழில் விளம்பரம் கொடுக்கணுமா வேண்டாமா? (சில ஊர்களில் தியேட்டர் வாசலில் மட்டும் போஸ்டர் வைத்துள்ளனர்.) 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை' என்ற தலைவரின் வாக்கை நினைத்துப் பார்க்க வேணுமா வேண்டாமா? இதை வாசிக்கும் நீங்கள் உங்க ஏரியா தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட வலியுறுத்த வேணுமா வேண்டாமா? இந்த செய்தியை share பண்ண வேணுமா வேண்டாமா????????????
    இப்பொழுது தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது....திருச்சி- பேலஸ்-10.11.2020
    முதல் - உரிமைக்குரல் - தினசரி 4 காட்சிகள்.
    மதுரை வண்டியூர்
    கல்லானையி ல்
    11.11.2020 முதல்
    நினைத்ததை முடிப்பவ ன்- தினசரி 3 காட்சிகள் கோவை சண்முகா 11.11.2020 முதல் தர்மம் தலைகாக்கும். 10.11.2020 திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் நீதிக்கு தலை வணங்கு. 10.11.2020 முதல் தஞ்சை GV , கரூர் அமுதா, திருவானை காவல் வெங்கடேஷ்வரா, சீர்காழி osm, திருவாரூர் தைலம்மை ஆகிய நவீன வசதிகள் கொண்ட தியேட்டர்களில் 10.11.2020 முதல் திருச்சி ஶ்ரீரங்கம் வெங்கடேஸ்வராவில் நவீன திரையரங்கில் 12.11.2020 முதல் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டுள்ளது. காலை 11, பிற்பகல் 3, மாலை 7 மணி என 3 காட்சிகள். (இன்னும் பல்வேறு ஊர் தியேட்டர்களில் தலைவர் படங்கள் திரையிடப்பட்டிருக்கலாம்.).......SML...

  5. #1284
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தங்கப்பதக்கம்" சென்னையில் வசூல் மோசடி செய்த படம். ஒரு படம் வெளியான உடனே கைபிள்ளைங்க கணக்கு போட்டு விடுவார்கள். இந்தப்படத்துக்கு பிணந்தூக்க வேண்டியது வரும் என்று. உடனே சுறுசுறுப்பாக ஆக வேண்டிய காரியத்தை முன்னமே செய்து வைத்து விடுவார்கள். வடக்கயிறு, ஸ்டெச்சர் எல்லாம் ரெடியாக வைத்திருப்பார்கள்.

    படம் பிணமாக விழுந்தவுடன் அவர்கள் கண்காணிப்பு மிக அதிகமாக இருக்கும். சில பிணங்களை 50 நாட்கள் தூக்கி சுமக்க வேண்டியதிருக்கும். சில பிணங்கள் 75 நாட்கள் வரை தூக்கி சுமப்பதால் செலவு அதிகம் பிடிக்கும். அதெல்லாம் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அப்படி தூக்கி செல்லும் பிணங்கள் சிலதுகள் தாங்களாகவே தற்கொலை செய்து கொள்வதுமுண்டு.

    ஆனால் இந்த "தங்கப்பதக்கம்" பிணத்தை நெடுந்தூரம் தூக்கிசெல்ல வேண்டியிருந்ததால் ஸ்டெச்சர் உதவியுடன் தூக்கி செல்லும் வழியில் 23வது வாரத்தில் பிணம் தாங்கமுடியாத
    துர்நாற்றம் வீசியதால் இதற்குமேல் முடியாது என்று கைவிட்டவுடன் பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்து 23 வது வாரம் கடைசி என்று பத்திரிகை தகவல் முதற்கொண்டு அறிவித்தபின் பிணத்தின் சொந்தக்காரர் தலையிட்டு பிணத்தை சுத்தம் செய்து புதிய கட்டுக்கள் போட்டு சானடைசர் மற்றும் சென்ட் உதவியுடன் மீண்டும் பாடையில் ஏற்றி மேளதாளத்துடன் 176 வது நாள் அடக்கம் செய்த கதை யாருக்கு புரிகிறதோ இல்லையோ கைபிள்ளைகளுக்கு நிச்சயம் புரியும்.

    ஏன்னா பிணந்தூக்கியே அவர்கள்தானே. நான் சொன்னது சென்னையில் "தங்கப்பதக்கம்" ஓட்ட படாதபாடு பட்ட கதை. ஏற்கெனவே இழுத்து ஓட்டப்பட்டதால் வந்த வசூலோடு பிணத்தின் சொந்தக்காரர் போட்ட பணத்தையும் சேர்த்து வந்த பொய்வசூலை காட்டி ஊரை ஏமாற்றி பிழைக்கும் கைபிள்ளைகளே! உங்களுக்கு ஏற்ற ஐயன்தான் செளத்ரி பையனும். படத்திலே நேர்மையான போலீஸ் அதிகாரி. ஆனால் உண்மையில் கபட வேடதாரி.

    சாந்தியில் "தங்கப்பதக்கம்"
    168 நாளில் பெற்ற வசூல் ரூ 11,03,644.40 . 176 நாட்களில் பெற்ற வசூல் ரூ 11,65,185.50. அதாவது கடைசி 8 நாட்களின் வசூலான ரூ61,541.10 ஐ நடைபெற்ற 24 காட்சிகளையும் ஹவுஸ்புல்லாக்கி இந்த போலி சாதனையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடைசி 24 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடும் போது படத்தை ஏன் 176 நாளோடு தூக்க வேண்டும்.? இதுபோன்ற கேள்விகளை நீங்கள் கேட்க கூடாது. ஏன் தமிழ்நாடு முழுவதும் அதை செய்ய முடியவில்லை?. ஐயனின் பணம் தண்ணீராக செலவாகும் என்பதாலா? ஆனால் இதையெல்லாம் எம்ஜிஆர் கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால் மனசுக்குள்ளே தம்பி கணேசன் படும் பாட்டை எண்ணி சிரித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

    இப்படி ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட "உலகம் சுற்றும் வாலிபனி"ன் வெற்றியை பணநாயகத்தின் மூலம் விலைக்கு வாங்க நினைத்ததுதான் அரசியலில் சிவாஜி அடைந்த படுதோல்விக்கு அஸ்திவாரம் என்று கூட சொல்லலாம். சிவாஜி சினிமாவிலேயே இவ்வளவு தில்லுமுல்லு செய்து பணத்தால் வெற்றியை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று நினைத்த ஊழல்வாதிதான் என்பதை அவரே நிரூபித்து விட்டார். அதனால்தான் அவரை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட மக்கள் அவரை அரசியலை விட்டே விரட்டி அடித்தனர்..

    நீங்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். சிவாஜி படங்களை பார்த்து விட்டு வருபவர்களிடம் நாங்கள் கேட்கும் முதல் கேள்வியே தியேட்டரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதுதான். அவர்கள் சொல்லும் பதில் என்னையும் சேர்த்து ஒரு 20லிருந்து 25 பேர்கள்தான் இருந்தார்கள் என்றதும் புரிந்து விடும் இது பிணந்தூக்கிகளின் வேலை என்பது.
    இப்படி ஜனநாயகத்தை மதிக்காமல் ஒவ்வொரு படத்துக்கும் பிணந்தூக்கி நீங்கள் பெற்ற போலி வெற்றி எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து விட்டது. ஆனால் மற்ற ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் இது போன்ற வெறுப்பு அடையாமல் போட்டி மனப்பான்மையுடன் மட்டும் இருக்கிறார்கள் என்பதற்கு காரணம் இப்போது தெளிவாகிறதா?

    இதைப்போல் அரசியலிலும் கட்சி ஆரம்பித்து இந்த 'குல்மால்' வேலைகளை செய்து பதவிக்கு வந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட கணேசனை ஏமாற்றிய கைபுள்ளைங்க பிணந்தூக்கிகள் எஸ்கேப் ஆகி தீயசக்தியிடம் சரண்டர் ஆனதால் மானமிழந்த கணேசன் கைபிள்ளைகளை நம்பி ஏமாந்தேன் என்று அழுதது பழைய கதை. தப்பு செய்தவன் தண்டனை அடைவான் என்ற ஆண்டவன் கட்டளை இங்கு அரசியலில் வேலை செய்தது. 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என்று விரக்தியடைந்து எல்லாவற்றையும் துறந்து வீட்டிலேயே இருந்து ஓய்வு பெற்றார் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது..........ksr.........

  6. #1285
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ...........
    --------------------------------------------------------------------------------------------------------------------
    14/11/20-தீபாவளி முதல் சென்னை சரவணாவில் தேடி வந்த மாப்பிள்ளை*தினசரி 3 காட்சிகள்*

    14/11/20-தீபாவளி முதல் கோவை டிலைட்டில் -தேடி வந்த மாப்பிள்ளை**தினசரி* 2 காட்சிகள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    14/11/20* தீபாவளி முதல் சேலம் அலங்காரில்* *நம் நாடு -தினசரி 4* காட்சிகள்*

    *10/11/20 முதல் ஓமலூர் (சேலம் மாவட்டம் ) தங்கம் அரங்கில் -தினசரி 3 காட்சிகள்**ரகசிய போலீஸ் 115


    10/11/20- முதல்* மேட்டூர் - (அரங்கின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் _**ராமன் தேடிய சீதை - தினசரி 3 காட்சிகள்* நடைபெறுகிறது*


    11/11/20 முதல் சேலம் புறநகர் - ஜெயராம் (கொண்டலாம்பட்டி ) தர்மம் தலை காக்கும்* - தினசரி 3 காட்சிகள்* நடைபெறுகிறது .
    (முதல் நாளன்று அரங்கு முறையாக சுத்தம் செய்யப்படாமல், கிருமிநாசினி தெளிக்கப்படாமல் இருந்ததால் சேலம் மாநகராட்சி பணியாளர்கள் அரங்கை திறக்க அனுமதிக்கவில்லை . என்பதே உண்மை செய்தி .ஆனால் சன் செய்திகளில் 10/11/20 அன்று குறைந்த* ஆட்கள் வந்ததால்* காட்சி ரத்து ஆனதாக செய்தி தவறாக* ஒளிபரப்பானது )


    தகவல்கள் உதவி : திரு.சுப்பிரமணி, சேலம்*

    12/11/20 முதல் தூத்துக்குடி சத்யாவில்* (கண்டிப்பாக 2 நாள் மட்டும் ) சிரித்து* வாழ வேண்டும் - தினசரி* 2 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .*

  7. #1286
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 10/11/20 அன்று* திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------------
    இன்றைக்கும் இவ்வளவு பேர்* அவரது ரசிகர்களாக ,அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ,ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் உற்று கவனிப்பவர்களாக இருக்கிறார்கள்* என்றால் அந்த மகோன்னதம் வேறு ஒரு மனிதருக்கு இருக்கிறது* என்று*சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு ரத்த சாட்சியாக நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் .* அந்த ரத்த சாட்சியை நமக்கு வைத்து விட்டு போன பண்பாடுகள் ஏராளம் ஏராளம் . எம்.ஜி.ஆர். அவர்கள் பிறரை உயர்வாக நினைப்பது, தன்னை தாழ்த்தி கொள்வது என்கிற பணிவான பண்பை கொண்டவர் .ஒரு சிறிய பொறுப்பு, பதவி வந்தாலே, மற்றவர்களை ஏளனமாக பார்ப்பது, அவர்களை அலட்சியப்படுத்துவது, ஒருமையில் அழைப்பது போன்ற பண்புகள் கொண்ட மனிதர்கள் அன்றாடம் வாழ்க்கையில் நாம் பார்த்து வருகிறோம் .சாதாரண கவுன்சிலர் பதவியை பெற்றாலே, தலைக்கனம் பிடித்து அலைபவர்கள் இருக்கிறார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள்* எம்.எல்.சி.,யாக, எம்.எல்.ஏவாக, சிறு சேமிப்பு துறையின் துணை தலைவராக ஏன் முதல்வராகவே இருந்தார் .ஆனால் ஒரு போதும் அவர் கர்வம், தலைக்கனம் பிடித்தவராக நடந்து கொண்டதில்லை .* எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று தற்பெருமை பேசியதில்லை*


    பெரும்புள்ளிகள் காரில் செல்லும்போது கார் கதவின்* கண்ணாடியை மூடியபடி,பின்னால் உட்கார்ந்து கொண்டு* ஏதாவது புத்தகம் படித்து கொண்டு அல்லது ஏதோ மோனையில் சிந்தித்தபடியோதான் போவது வழக்கம் .**ஏனென்றால் அவர்கள் காரில் செல்லும்போது சாலையில் செல்லும்* பழைய நண்பர்கள் யாராவது* இவர்களை பார்த்துவிட கூடாது**என்பதற்காக அப்படி நடந்து கொள்வார்கள்.* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுத்தவரை**ராமாவரம் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு காரில் செல்லும்வரையில்*பின்னிருக்கையில் அமர்ந்தபடி, கார் கதவின் கண்ணாடியை இறக்கி விட்டு*சாலையில் செல்பவர்களை கவனித்தபடி பார்த்து புன்னகைத்துவிட்டு, தன்னை பார்த்து வணக்கம்*,சொல்வது போல கையை தூக்கி வணக்கம் சொல்லியபடி*செல்வதுதான் வழக்கம் .***அதனாலதான் அவர் மக்கள் திலகமாக கொண்டாடப்படுகிறார் .* ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் மக்களை சந்திப்பது, நேசிப்பது, அவர்களுடன் உரையாடுவது, அவர்கள் குறைகளை தீர்க்க முற்படுவது* மக்கள் தன்னை பார்க்க வருவதை ஆவலோடு எதிர்பார்ப்பது என்று சில நடைமுறைகளை வாழ்க்கையில் கடைபிடித்தார் .அதனால்தான் மக்களால் நேசிக்கப்பட்ட மக்கள் தலைவரானார் .


    திரு.கா. லியாகத் அலிகான் :* என்னை போல பல சகாக்கள், நண்பர்கள் பல பதவிகளை, பொறுப்புகளை அனுபவித்து உழைத்திருக்கிறோம் .* தலைவரின் பெருமைகள் பற்றி சொல்வதென்றால் ஒரு* நாளெல்லாம் சொல்லி கொண்டே இருக்கலாம் .* 1981ல் மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெற்ற நேரம்.*அப்போது மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் வருகை தருகிறார்கள்.* *பல அமைச்சர்கள்* சென்று வரவேற்றார்கள்* *நானும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தேன்.**இந்திரா அம்மையார் விமானத்தில் வந்து இறங்கியதும்*.என்னை கவனித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அருகில் வர** சொல்லி சைகை செய்து, அமைச்சர்களின் வரவேற்பு முடிந்ததும், என்னையும்* பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார் .* அது மட்டுமல்ல. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் அவர்கள் 1982ல் சென்னைக்கு வந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் .* அப்போது பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவரையும் ஒருசேர கண்ட போது ,தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சார்லஸை விட மிகவும் அழகாக , காட்சியளித்தார் .என்பதை நான் உணர்ந்தேன். இதை* *நான் மிகை படுத்தி சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த காட்சியை கண்ட பலர், அமைச்சர்கள் கூட பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்கள்.** அந்த இடத்திலே, சிரித்த முகத்தோடு, சிவந்த நிறத்தோடு , கருத்த*முடியோடு, கருப்பு கண்ணாடியோடு கூர்ந்த கண்களோடு, காட்சியளித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மென்மையான அணுகுமுறைகள்* அங்கு கூடியிருந்த அனைத்து கண்களையும், இதயங்களையும்* ஈர்த்தன என்பதுதான் உண்மை . தலைவரின் தோற்றம் எங்களை மட்டுமல்ல எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூட ஈர்த்தன என்று சொல்லலாம் . அந்த நேரத்தில் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலரை**உதாரணத்திற்கு துரை முருகன், ரகுமான்கான் போன்றவர்களை இளவரசர் சார்லசிடம் அறிமுகம் செய்து வைத்ததை நானே நேரில் கண்டேன் .*தலைவர் அவர்கள் கட்சி பாகுபாடின்றி, பேதம் இன்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி, அனைவரையும் சமமாக பார்த்தார் . மேலும் சற்று தூரத்தில் இருந்த என்னையும் அழைத்து இளவரசர் சார்லசுக்கு அறிமுகப்படுத்திய பெருந்தன்மை மிக்க தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* சாதாரண தொண்டனாக விளங்கிய என்னை மதித்து, மற்றவர்களை போல இவனும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவனுடைய பெருமைகள் இந்த உலகிற்கு தெரியட்டும் என்கிற வகையில், என் உணர்வுகளை புரிந்து கொண்டு* என்னை இளவரசர் சார்லசுக்கு அறிமுகம்* செய்த பெருமை படைத்த தலைவர்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் .****


    அதே போல ஏழை எளியோர்களிடத்தில்யாராக இருந்தாலும்* அன்பு காட்டுவதில், அவர்களை நேசிப்பதில், அவர்களின் குறைகளை தீர்ப்பதில் அவருக்கு இணையான ஒரு தலைவரை, ஒரு மகானை*, இனம் காணுவது* மிகவும் கடினமான காரியம் .* ராமாவரம் தோட்டத்தில் எடுத்து கொண்டால், அன்றாடம் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். நம்மைத்தான் தலைவர் முதலில் சந்திப்பார் என மனக்கோட்டை கட்டியபடி இருப்பார்கள் . ஆனால் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் தலைவர் அவர்கள் நேரடியாக தொண்டர்கள் காத்திருக்கும் பகுதிக்கு முதலில் சென்று, அவர்களை சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிந்து,ஏதாவது உதவி என்றால் அப்போதே செய்து முடித்து* , அவர்களின் குறைகளை தீர்க்கவல்ல பண்புமிக்க ஒரு தீர்க்கதரிசியாக திகழ்ந்தார் .* ஒருமுறை தற்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ள தமிழ் மகன் உசேன்* அவர்கள் தலைவரால் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் .* விவரம் அறிந்த தமிழ் மகன் உசேன் ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறார் .*அன்றைக்கு மற்ற முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் பலரை பார்த்தபின் தமிழ் மகன் உசேன் தலைவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார் .நான்தான் உன்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டேனே. இங்கு எதற்காக வந்தாய் என்று கேட்க, நான் முதல்வரை பார்க்க வரவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க வந்துள்ளேன் என்று ஒரு நண்பரை போல மிகவும் சாதாரண முறையில் தலைவரிடம் பேசினார் .* மிகவும் தைரியத்துடன் தமிழ் மகன் உசேன் பேசியதை*கண்டு கோபப்படாமல் தலைவர் சிரித்தார்* *சரி, எம்.ஜி.ஆரிடம் என்ன சொல்ல போகிறாய் என்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் தலைவர் கேட்டார் .*தமிழ் மகன் உசேன் பேச்சை கனிவோடு கேட்ட தலைவர் , ஒரு தொண்டனின்*எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மீண்டும் அவரை பதவியில் அமர்த்திஅழகு பார்த்தார் தலைவர் .* தொடர்ந்து ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்திலும், இப்போதைய எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி காலத்திலும் தமிழ் மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக* பதவியில் நீடித்து வருகிறார் .** **


    இன்றைக்கு சிறுபான்மை நல* பிரிவு துணை செயலாளராக நானும், செயலாளராக அன்பு ராஜாவும் பணியில் இருந்து வருகிறோம் .என்று சொன்னால் நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆட்பட்டு, பல்வேறு தரப்பினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை மானசீகமாக குருவாக ஏற்று கொண்டதோடு, தொடர்ந்து ஜெயலலிதா அவர்கள் தலைமையிலும் இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தி கொண்டு , இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் சமமாக பழகிய சகோதரர்களாக இருந்தாலும் கூட ,அவர்களுடைய தலைமையை ஏற்று, சொல்லுக்கு கட்டுப்பட்டு ,செயல்பட்டு, இந்த இயக்கம், தொடர்ந்து வளர்வதற்கு, வாழ்வதற்கு, ஆலமரமாக பெருகுவதற்கு நாங்கள் பாடுபடுவோம் என்று சொன்னால் இந்த இயக்கம் வளர்ந்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின், புகழும்,*வளரும் .ஏழை எளிய மக்கள் நலம் பெறுவார்கள், வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்கிற வகையில் நாங்களும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம், உழைத்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், புரட்சி* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் என் மீது காட்டிய அன்பை, பாசத்தை, பரிவை, கருணையை* எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை .* நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் . உங்கள் இளமைக்கு காரணம் என்ன என்று. என் இளமைக்கு காரணம் புரட்சி தலைவர்தான்.* அவருடைய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை பின்பற்றியதே அதற்கு காரணம் . உள்ளபடியே சொன்னால் என் வயதை சொல்ல கூடாது. நானும் அதை விரும்பவில்லை.பொதுவாக பெண்ணின் வயதை கேட்க கூடாது. ஆணின் வருமானத்தை கேட்க கூடாது என்று சொல்வார்கள் . ஆனால் இங்கு இளமையை குறிப்பிட்டு காட்டி* பேசுவதால் அதற்கும் காரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் .என்று சொல்லுவேன் .* அக்ரோ வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட எனக்கு டைபாயிடு காய்ச்சல் வந்தபோது நான் உயிர் வாழ்வேனா அல்லது செத்து மடிவேனா என்று சொல்ல முடியாத ஒரு நிலையில்* இருந்த கால கட்டத்தில், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நேரத்தில் ,சேலத்தில் போஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடைபெறுகிறது .அந்த மாநாட்டில் எனக்கே தெரியாமல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆலோசனையின் படி ,லியாகத் அலிகான் இந்த மாநாட்டில் பேசுவார் என்று துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்,பத்திரிகை விளம்பரங்கள்* தயார் செய்யப்பட்டன .***அந்த சமயத்தில் டைபாய்டு காய்ச்சலுடன் ஜாண்டிஸ் எனப்படும் மலேரியாவும் சேர்ந்து தாக்கியதில் மிகவும் அவதிப்பட்டேன் .* மிகவும் கடுமையான நோய் தாக்கத்தில் இருந்தேன்.* நான் கண்டிப்பாக சில மாதங்கள் ஒய்வு பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தது .* ஓரளவு நோய் தோற்று குறைந்து, 75 % காய்ச்சலின் தாக்கம் தீர்ந்து குணமாகியதும் இரண்டொரு நாளில்*சேலத்தில் மாநாடு துவங்க இருப்பதை*அறிந்தேன்*. அப்போது மாநாட்டின் தலைவராக*திரு.முசிறிபுத்தன்* அவர்கள் இருந்தார்கள் . இந்த சூழ்நிலையில் என்னால் மருத்துவமனையில் படுத்திருக்க முடியாமல்* நேரடியாக என் மாமா முஸ்தபா* வீட்டிற்கு சென்று*, காய்ச்சல் எப்படி இருந்தாலும் நான் மாநாட்டிற்கு சென்றாக வேண்டும் என்று கூறி ,என் மனைவி, பெற்றோர்களை வரவழைத்து சேலத்தில்*ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி ,அங்கிருந்தபடியே முசிறிபுத்தன்* அவர்களை தொடர்பு கொண்டு*, அண்ணே*எனக்கு காய்ச்சல் முழுவதும் குணமாகவில்லை ,இருப்பினும் மாநாட்டில்*கலந்து கொள்ள வந்துவிட்டேன்.என்ன செய்யலாம் என்று கேட்டபோது, அவர் தலைவரிடம் ,லியாகத் அலிகான் சேலத்திற்கு வந்து தங்கியுள்ளார். காய்ச்சல் முழுவதும் தீரவில்லை. குரலிலும் பாதிப்பு தெரிகிறது*என்ன செய்யலாம் என்று கேட்க, தலைவர்* வேண்டாம் காய்ச்சலுடன் அவர் ஏன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார். முழுவதும் குணமாகும் வரையில் மருத்துவமனையில் இருந்து இருக்கலாமே*.பரவாயில்லை .ஒய்வு எடுக்க சொல்லுங்கள் என்று கூறினாராம் .அதன்படி நான் உடுமலைப்பேட்டை சென்று*இரண்டு மாத காலம் ஒய்வு எடுத்த பின்* உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது .உடல்நலம் பெற்ற பின் அகோர* பசியெடுத்து* தேவைக்கு அதிமாக*உணவு உண்பது, அதிக நேரம் ஒய்வு கொள்வது என்று இருந்ததால் உடல் பருத்துவிட்டது* *மூன்று மாதம் கழித்து தலைவர் அவர்கள் சேலத்திற்கு 3 நாட்கள்*தங்கி , நடிகர் பாக்யராஜ் அவர்களின்*பாராட்டு விழாவில்*கலந்து கொள்ள* வந்திருந்தார் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

    நிகழ்ச்சியில் ஒளிபரப்பான*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------------------
    1.தொட்டுவிட தொட்டுவிட தொடரும்*- தர்மம் தலை காக்கும்*

    2.தர்மம் தலை காக்கும் பாடல்* - தர்மம் தலை காக்கும்*

    3.ஒருவன் மனது ஒன்பதடா*- தர்மம் தலை காக்கும்*

    4.நான் உங்கள் வீட்டு பிள்ளை* - புதிய பூமி*

    5.திரு. கா. லியாகத்*அலிகான் பேட்டி*

    *


    *

  8. #1287
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதள பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

  9. #1288
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Happy "Deepavali" Greetings to All of You...������������������

  10. #1289
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #என்றும்_எம்ஜிஆர் நினைவலைகள்.

    எம்ஜிஆர் பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    ‘மும்பையில் மாதுங்கா, டெல்லியில் கரோல்பாக் போல கொல்கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

    விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.

    எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.

    மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.

    எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.

    ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.

    அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.

    அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்

    அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.

    - தி இந்து .மீள்/...nsm.........

  11. #1290
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1974 ஆம் ஆண்டில் ஒரு இரவு நேரம் மணி 9 தாண்டி தலைவர் ஓய்வு எடுக்க செல்லும் நேரம் ஒரு அழைப்பு வருகிறது டெலிபோனில் தலைவருக்கு...

    எடுத்து பேசி விஷயம் அறிந்து கொண்ட மன்னவன் உடனே மாம்பலம் கட்சி அலுவலகத்தில் இருந்த ஐயா மகாலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு...

    எனது கட்சி அலுவலக ஓய்வறையில் பணம் இருக்கும் இடம் சொல்லி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொண்டு போய் ஒருவர் பெயர் சொல்லி அவர் வீட்டுக்கு உடனே போங்க..

    அவர் நெஞ்சுவலியால் துடித்து கொண்டு இருக்கிறேன் என்கிறார் என்னிடம் அவரை பிரபல இதய நோய் நிபுணர் மறைந்த திரு...ஆர்.எஸ். ராஜகோபால் அவரிடம் கூட்டி செல்லுங்கள் என்று சொல்ல மருத்துவருக்கு விவரம் சொல்லி விட்டு உங்களிடம் பேசுகிறேன் என்கிறார்.

    தேனாம் பேட்டை எல்லை அம்மன் கோவில் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு பதறி பணத்துடன் சென்ற மகாலிங்கம் ஐயா அவரை அள்ளி போட்டு கொண்டு மருத்துவர் இல்லம் நோக்கி பறக்கிறார்.

    அங்கே முழு சோதனைகள் செய்த ராஜகோபால் அவர்கள் இவருக்கு இருதயத்தில் எந்த குழப்பமும் இல்லை...பயந்து போய் சொல்லி இருக்கிறார் அது வயிற்று பிரச்னை என்று சொல்லி மருந்து மாத்திரைகள் கொடுத்து இருவரையும் திருப்பி அனுப்புகிறார்.

    சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் அவர் இல்லத்தில் விட்டு விட்டு தலைவருக்கு நடு இரவில் தகவல் சொல்கிறார் மகாலிங்கம் அவர்கள்.

    தலைவர் நிம்மதியுடன் உறங்க செல்கிறார்.
    பாதிக்க பட்ட அந்த நபரிடம் ஏன் இப்படி அவருக்கு தொலை பேசியில் சொன்னீங்க எனக்கு சொன்னால் நான் வரமாட்டேன் என்று சொல்லுவேனா என்று தலைவர் உதவியாளர் அவரிடம் கேட்க.

    அதற்கு அவர் சொல்கிறார்... நடு இரவில் கூட என்னை காப்பாற்றும் ஒரே மனித தெய்வம் அவர் என்றே என் மூளைக்கு எட்டியது....வேறு ஒன்றும் இல்லை என்கிறார் அவர்.

    அவர் வேறு யாரும் இல்லை...பிறப்பில் இஸ்லாம் மதத்தில் பிறந்தவர்....தன் பெயரை ரவீந்தர் என்று மாற்றி கொண்டு தலைவரின் கதை இலாகாவில் முக்கிய பங்கு வகித்த அந்த நல்லவரே அவர்.

    அவரை தெரியாத தலைவர் நெஞ்சங்கள் இருக்கமுடியாது.
    தலைவர் நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு அவரை கதை எழுத சொல்லி ஒரு மாபெரும் படத்தை தயாரிக்க எண்ணி அருமையான கதை உடன் அந்த படம் உருவாக விளம்பரம் கூட வந்தது.

    முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படம் ஆக்க திட்டமிட்ட அந்த படத்தின் பெயர் இணைந்த கைகள்.

    ஈரான் நாட்டின் புகழ் பெற்ற கதாநாயகி தலைவருக்கு ஜோடி ஆக நடிக்க அவர் ஒப்பு கொண்டு அந்த அரசாங்கம் அங்கே அந்த நாட்டில் இந்த கதையை படம் ஆக்க மறுப்பு சொல்ல தலைவரும் கதை ஆசிரியர் ரவீந்தர் அவர்களும் மனம் கொஞ்சம் வருந்த..

    அதன் பின்னே வேண்டாம் அந்த திசை என்று தலைவர் முடிவெடுத்து அங்கு இல்லாவிட்டால் என்ன உலகம் பெரியது என்று எண்ணி உருவான மாபெரும் வெற்றி படமே காலத்தால் அழிக்க முடியாத

    உ.சு.வா...உருவானது.

    தலைவர் தலைவரே என்றும்....

    தீபாவளி சிறப்பு பதிவில் மேலும் ஒரு கொசுறு செய்தி.

    தலைவர் படம் உ.சு வா. படத்துக்கு போதிய ஆடைகள் தைக்க இங்கே கால அவகாசம் இடம் கொடுக்காததால் தலைவரின் அட்டகாசம் ஆன உடைகள் அமைப்புடன் வந்த.

    1972 இல் வெளிவந்த ஜெயந்தி பிலிம்ஸ் ராமன் தேடிய சீதை படத்தின் தயாரிப்பாளர் அவர்கள் செய்தி அறிந்து இந்த படத்தின் சூப்பர் உடைகள் இருக்கு அள்ளி கொண்டு செல்லுங்கள் என்று தலைவரிடம் சொல்ல..

    அவரும் மிகவும் மனம் நெகிழ்ந்து அந்த உடைகள் உடன் வெளிநாடுகள் பறக்க உ..சு.வா...படத்தின் சில காட்சிகளில் தலைவர் அந்த படத்தின் உடைகளை பயன் படுத்தி இருப்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்..

    வாழ்க தலைவர் புகழ்.

    என்றும் தொடரும் உங்களில் ஒருவன்
    நன்றி நன்றி நன்றி...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •