Page 83 of 111 FirstFirst ... 3373818283848593 ... LastLast
Results 821 to 830 of 1104

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #821
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  பணத்தோட்டம் அற்புதமான த்ரில்லர், சஸ்பென்ஸ் படம். எலக்ட்ரிக் சேர் எல்லாம் அப்போது புதிது. அதில் உட்கார்ந்து எஸ்.வி. சுப்பையா கடைசியில் தற்கொலை செய்து கொள்வார். மறுபடி மறுபடி காட்சியை எடுத்த டைரக்டர் சங்கரிடம் ‘‘என்னிடம் என்ன மாதிரி நடிப்பை எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கு ஒரு நடிப்பு பாணி உண்டு. மற்றவர்களின் நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்’’ என்று மக்கள் திலகம் சொன்னது உண்மைதான். இதை சங்கரே சொல்லி இருக்கிறார். மக்கள் திலகத்துக்கென்று இயற்கையான நடிப்பு பாணி உள்ளது. அதை சங்கர் புரிந்து கொண்டார். அதன் பிறகு மக்கள் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

  மக்கள் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த டைரக்டரும் கூட. தனது சொந்த படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார். என்றாலும் கே.சங்கரின் உழைப்பையும் திறமையையும் நேர்மையையும் தெய்வபக்தியையும் பார்த்து தனது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு தந்தார். அவரை தனது சம்பந்தியாகவும் ஆக்கிக் கொண்டார். .........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #822
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  நாம் அடிக்கடி சொல்வது போல மக்கள் திலகத்தின் வள்ளல் தன்மை, சினிமாவில் அவரது சண்டைக் காட்சிகள், இயக்கம், எடிட்டிங், வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தது, மக்கள் செல்வாக்கு, அரசியல் வெற்றிகள் பேசப்பட்டதுபோல அவரின் நடிப்புத் திறன் பேசப்படவில்லை. நாமும் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

  பணத்தோட்டத்தில் மக்கள் திலகம் சிறையில் இருந்து தப்பி சரோஜா தேவி வீட்டுக்கு மாடி வழியே ஏறி வீட்டுக்குள் வந்து அவரை சந்திப்பார். சத்தம் கேட்டு சரோஜா தேவியின் தந்தை எஸ்.வி. சுப்பையா அங்கு வந்து மக்கள் திலகத்தை விசாரிப்பார். திருமணமாகாத பெண்ணை இப்படி சந்திப்பது தவறு என்றும் உனக்கு ஒரு தங்கை இருந்து இதே மாதிரி நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்? என்றும் ஒரு பெண்ணின் தந்தையாக நியாயமான கேள்வியை கேட்பார்

  மக்கள் திலகம் பதில் சொல்ல முடியாமல் தவறை நினைத்து வருந்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்பார். அப்போது, தன் நிலையை எண்ணி லேசாக விம்முவார். அற்புதமான நடிப்பு. தவறு செய்துவிட்ட மனசாட்சியுள்ள அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான். மன்னிப்பு கேட்டுவிட்டு சட்டென திரும்பி வந்தவழியே போக முயற்சிப்பார். அப்போது, சுப்பையா, ‘போகும்போதாவது இப்படி போ’ என்று வாசல் வழியை காட்டுவார். அவமானம் தாங்காமல் சுப்பையாவின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்து இடது கையால் ஒரு கண்ணை மூடியபடி கூனிக்குறுகி மக்கள் திலகம் வெளியேறுவார். இன்னும் கண்ணிலேயே நிற்கும் காட்சி அது..........ஸ்வாமி...

 4. #823
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  நடிகப்பேரரசர், பதிவு அருமை. நான் ஏற்கெனவே நமது இந்தப் பக்கத்தில் கமெண்ட் பகுதியில் ரிக் ஷாக்காரன் வசூல் விவரம் பற்றி விளக்கம் கொடுத்து, மக்கள் திலகம் குழுக்களிலும் பதிவிட்டுவிட்டேன். சந்தடி சாக்கில் ராஜா திரைப்படம் சென்னை அகஸ்தியாவிலும் 100 நாள் ஓடியது என்று பொய் சொல்லும் அளவுக்கு போய்விட்டார்கள். உண்மையில் அது தேவி பாரடைஸ் மற்றும் ராக்ஸியில்தான் 100 நாள் ஓடியது. ஆனால், ரிக் ஷாக்காரனை வசூலில் மிஞ்சியதாக காண்பிக்க அகஸ்தியாவிலும் 100 நாள் ஓடியதாக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள்? நம்மிடம் 4 , 5 படங்களின் வசூலை மட்டுமே போடுகிறோம் என்று சொல்பவர்கள் இருதுருவம், பாதுகாப்பு, தங்கைக்காக, போன்ற பல படங்களின் வசூலை டி.சி.ஆர் காப்பியுடன் வெளியிட்டுவிட்டு நம்மிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்....ஸ்வாமி......

 5. #824
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  #வாத்தியார் #ஸ்டைல்

  #புதியசூரியனின் (உதய) #பார்வையிலே என்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடலின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது...

  எம்ஜிஆருக்கு பின்புலமாக சூரியன் தெரியும் வகையில் ஷாட் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நானும், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அங்கிருந்த உயரமான மலைக் குன்றின் ஏறி நின்றால் தான் அந்த ஷாட்டை எடுக்க முடியும்.

  ஏற்கனவே உயரமான
  பகுதியில்தான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம். இன்னும் உயரமானப் பகுதிக்குச் சென்றால், ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் என்பது பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

  அப்போது ‘#நான் #ரெடி’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, நானும், திருலோகசந்தரும் கூறிய இடத்தில் நின்று கொண்டிருந்தார் #எம்ஜிஆர். படத்தில் ஒரு பிரேம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவர் அந்த அளவுக்கு முயற்சி எடுத்துக் கொண்டது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது...

  #avmசரவணன்
  --------------------------------------------------------------------
  வாத்தியாரின் தொழில்நுட்ப அறிவு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. எந்த நவீன வசதியும் இல்லாத அக்காலகட்டத்திலேயே இன்றைய திரைப்படங்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பிரமிக்கத்தக்க வகையில் காட்சிகளை அமைத்திருப்பார். அதற்காக மெனக்கெடுவார்.

  வாத்தியாரே ! நீ வசனமே பேசவேண்டாம்...பாட வேண்டாம்...ஆட வேண்டாம். ஸ்டைலா உன் பாணியில் ஒரு கையை மட்டும் உயர்த்து...அதுக்காகவே எங்க உயிரையே விட்டுடுவோமே!

  இன்றைய காலகட்டத்தில் நம்ம வாத்தியார் மட்டும் இருந்திருந்தால்...

  உலக திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தையே படைத்திருப்பார்............bsm...

 6. #825
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  மலரும் நினைவுகள் ...
  முதல் வெளியீட்டில் 1960 - 1978

  மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் , திரைப்பட விளம்பரங்கள் , படப்பிடிப்பு செய்திகள் படித்தது .

  எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் ஒட்டப்படும் ''வருகிறது '' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது
  .
  எம்ஜிஆர் படம் ''வருகிறது '' போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டதை கண்டு பரவசம் அடைந்தது .

  வேறு படங்களுக்கு சென்று எம்ஜிஆர் புதுப்படம் வருகிறது என்ற ஸ்லைடு கண்டு ரசித்தது .

  எம்ஜிஆர் படம் ''இன்று முதல் '' விளம்பரம் கண்டு ஆனந்தமடைந்தது
  .
  எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் வைக்கப்பட்ட ஸ்டில்ஸ் களை பார்த்து வியந்தது .

  எம்ஜிஆர் படம் வெளிவரும் திரை அரங்கில் ஸ்டார் மற்றும் தோரணங்கள் அலங்கரிப்பை கண்டு வியப்படைந்தது.

  எம்ஜிஆர் படம் வெளிவரும் நாளில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு பரவசமடைந்தது

  எம்ஜிஆர் ரசிகர்கள் நடத்திய பிரமாண்ட அலங்கார ஊர்வலத்தை பார்த்து ஆனந்தமடைந்தது .

  எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக விநியோகித்த வரவேற்பு நோட்டீஸ் மற்றும் இனிப்புகள் வழங்கிய காட்சிகளை மறக்க முடியாதது .

  எம்ஜிஆர் படத்தின் பெட்டியை திரை அரங்கில்; எடுத்து செல்லும்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரங்கள்

  இடைவேளை நேரத்தில் எம்ஜிஆர் படத்தின் பாடல் புத்தகத்தை வாங்க ரசிகர்கள் முண்டியடித்த காட்சிகள்
  .
  எம்ஜிஆர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் திரை அரங்கில் ரசிகர்களின் விசில் மற்றும் கைதட்டல்கள்

  எம்ஜிஆர் படம் - சென்சார் காட்சி தொடங்கியதும் துவங்கிய காட்சி முதல்
  எம்ஜிஆர் படத்தின் டைட்டில் தொடர்ந்து எம்ஜிஆர் அறிமுக காட்சிகள் , பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் சிறந்த நடிப்பு காட்சிகள்
  என்று படம் இறுதி காட்சி வரை ரசிகர்களை மகிழ்வித்த எம்ஜிஆரை பாராட்டி வெளியே சிரித்த முகத்துடன் வெளிவந்தது
  படம்
  பிரமாதம் என்று வர்ணித்த ரசிகர்களின் உணர்வுகளை மறக்கவே முடியாத நாட்களாகும்......... .vh....

 7. #826
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  "ஒளி விளக்கு" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின் வண்ணக்காவியம்தான் "ஒளிவிளக்கு". ரசிகர்களின் கனவுப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது.

  1968 செப் 20 ந்தேதி தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வெளியான ஒரு அற்புதமான ரசனை மிகுந்த காவியம். எம்ஜிஆரின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் வண்ணமிகு நேர்த்தியான ஆடை வடிவமைப்புக்கும், அலங்காரத்துக்கும்
  எத்தனை முறை பார்த்தாலும் இன்னோரு சொர்க்கலோகம் போல கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் எழில்மிகு ஓவியம்.

  எம்ஜிஆரின். ஸ்டைலோடு கலந்த சுறுசுறுப்பை படத்தில் காணலாம். தீபாவளி ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது போல தமிழ் நாட்டில் "ஒளிவிளக்கு" திரையிடப்பட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் முந்தைய நாளே திரையரங்கின் முன் குவிந்ததால்
  ஊரில் ஜனநடமாட்டம் அதிகம் காணப்பட்டது.

  தூத்துக்குடியில்
  தியேட்டர் வாசலில் டெலிவிஷன் மாடலில் செய்யப்பட்ட பெட்டியில் எம்ஜிஆரின் திரு உருவத்துடன் "ஒளிவிளக்கு" எம்ஜிஆரின் 100 வது
  படம் என்ற வாசகத்துடன் கலர் விளக்குகளை சுழல விட்டு எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர் எம்ஜிஆர் மன்றத்தினர். அதை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்து தியேட்டர் வாசலை நிரப்பி விடுவார்கள்.

  "ஒளிவிளக்கு" படத்தின் வால் போஸ்டர் புதுமையான முறையில் கறுப்பு பார்டர் வைத்து மிக உயர்ந்த பேப்பரில் அடித்திருப்பார்கள். அதை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பு தெரியாது. அதை பார்க்க எத்தனை கூட்டம் டிராபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு. முதல் மூன்று நாள் தியேட்டர் முன்பு டிராபிக் தடை செய்யப்பட்டது.

  சிலர் புலம்பிக் கொண்டே செல்வதை பார்த்திருக்கிறேன் சே! இந்த எம்ஜிஆர் படம் போட்டால் இந்த வழியில் வரவே முடியவில்லை.சிவாஜி படம் போட்டா எந்த பிரச்னையும் கிடையாது. இனிமேல் இந்த மாதிரி தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட அனுமதிக்க கூடாது என்று "பாலகிருஷ்ணா" தியேட்டரை வசை பாடிச் சென்ற அந்த பகுதி மக்களின் கஷ்டம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் கொடுத்ததில்லை என்பதை நினைக்கும் போது அவர்களின் சமூக சேவை வெகுஜன பாராட்டுதலுக்கு உரியது.

  சென்னையில் 5 தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஓடாமலேயே 9,28,171.28. ரூ வசூலாக பெற்று சாதனை செய்தது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மொத்தம் 64 தியேட்டரில் வெளியாகி 63 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் "ஒளிவிளக்கு"தான். இதை நாங்கள் ஒரு நாளும் சொல்லி தம்பட்டம் அடித்ததில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்
  "சிவந்த மண்" 37 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதாக விளம்பர பேப்பரை காட்டி இணையத்தில் சவால் விட்டதை பார்த்துதான் இந்த பதிவை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிவாஜி ரசிகர்களை கேட்கிறேன், உங்களின் எந்த படமாவது 50 தியேட்டரிலாவது வெளியாகி இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். அதன் பிறகு 50 நாளை பற்றி பார்க்கலாம்.

  அந்த மாதிரி பிரமாண்ட செயல்களை செய்யக்கூடிய "ஜெமினி" நிறுவனத்தையே
  "விளையாட்டு பிள்ளை"யால் மூட வைத்த பெருமை பெற்றவர்களே
  இனி ஒரு சாதனை இதைப்போல் கிட்டுமோ?. அரிச்சந்திரா வில் ஒரு வசனம் சிவாஜி பேசுவார் முடி சூடிய மன்னனும் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. அது அவரை வைத்து படம் எடுத்துதான் என்பதை உணர்ந்தோம்.

  நம்ம வடிவேலு பாணியில் சொல்வதானால் அய்யா! அய்யா! "எமனுக்கு எமன்" படம் நடிச்சீங்களே அய்யா! அந்த எமன் யாருன்னு தெரியாம உங்களை வைச்சு படமெடுத்து அழிஞ்சுட்டாங்களே அய்யா! இன்னும் உங்க கண்ணுல படாம நிறைய பேர் தப்பிச்சு இப்ப எங்க கழுத்தை அறுக்கிறானுவளே அய்யா!. நீங்கதான்யா நம்ம ரசிகனுவளை காப்பாத்தணுமய்யா. அவனுவளை அன்றே நீங்க கவனித்திருந்தால் இன்றைக்கு எங்களுக்கு இந்த நிலை வருமா அய்யா? சரி விஷயத்துக்கு வருவோம். இன்று வரை அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாதனை "மதுரை வீரனு"க்கே. அதேபோல் அதிக தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய சாதனை "ஒளி விளக்கு" படத்துக்குக்குதான் என்பதை உணருங்கள்.

  எல்லா சாதனையும் தன்னலம் கருதாத எங்கள் தலைவனுக்கே எனும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் முதல் வெளியீட்டில் மட்டும் 8 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதை நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை. அடுத்தடுத்து பலமுறை 50 நாட்களும் 100 நாட்களும் ஓடியதை கணக்கில் சேர்க்கவில்லை. "ஒளிவிளக்கு" Houseful போர்டை பார்த்தே மிரண்டு நம்ப மறுக்கும் நீங்கள் உண்மை என்பது கபசுர குடிநீர் போல மிகவும் கசப்பானது என்பதை உணர்ந்து அதை குடித்து உங்கள் எதிர்ப்பு நோயை தீர்த்துக் கொள்ளுங்கள்.

  "ஒளிவிளக்கி"ன் மறு வெளியீட்டு சாதனையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது என்பதால் உங்கள் நோய் தீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விழைகிறோம்.........KS.,

 8. #827
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  தலைவரின் 100 வது படம் அதுவும் ஜெமினி நிறுவன படம் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து வெற்றி பெற்ற சிறந்த படம் ! புதுவையில் அக்காலத்தில் நவீனா என்ற திரையரங்கில் படம் வெளிவந்தது ! எங்கள் மன்றத்தின் சார்பாக திரையரங்கின் வெளிமுகப்பு முழுவதும் செஞ்சி கோட்டை போல 50 அடி அகலம் செட் போட்டு அலங்கரித்து மலர் வெளியிட்டு வழக்கம் போல இனிப்புகள் வழங்கி விழாக்கோலம் பூண்டு அமர்கலப்படுத்தினோம் ! மறக்க இயலாத மலரும் நினைவுகள் ! அருமையான பதிவு ! நன்றிகள் பல ! ...spmp.,

 9. #828
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  இந்த காலங்களில் கை கால் உதறுனா ஸ்டைல் என்று சொல்கிறார்கள் அந்த காலங்களில் எங்கள் புரட்சித்தலைவர் படங்களில் ஸ்டைல்கள் அற்புதமாக அழகாக இருக்கும் அதில் "ஒளிவிளக்கு" திரைப்படத்தில் மின்னும் அழகில் புரட்சித்தலைவர் ஸ்டைல்கள் சூப்பர் ஆக இருக்கும் அதை கண்கோடி மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இப்பொழுதும், எப்பொழுதும் மகிழ்ச்சி தான்������.........அருமை... "ஒளிவிளக்கு" காவியத்தின் அன்றைய சரித்திர சாதனை அளவீடுகள் நுட்பமாக சொன்னீர்கள். அன்று மட்டுமல்ல, இன்றும்...என்றும் இப்படத்தின் டிஜிட்டல் விநியோக உரிமைகள், தொலைக்காட்சி உரிமைகள் வாங்க போட்டா போட்டி நடந்தேறி வருகின்ற முக்கியமான தகவல்கள் நிச்சயம் எடுத்து சொல்ல வேண்டும். முக்கிய விநியோகஸ்தர்கள்(மிக பெரிய அளவில்) மும்பை (பம்பாய்) சென்று வாங்கிவிட பெரும் முயற்சிகளை இன்னும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை எல்லோருக்கும் தெரிய படுத்துவோம்..........தஞ்சை கிருஷ்ணா திரை அரங்கில் வெளியானது!
  அப்போது நான் தஞ்சை
  St. Antony's High school ல்
  படித்து கொண்டிருந்தேன்!

  அந்த
  " தைரியமாக சொல் நீ மனிதன் தானா" பாடலும்
  5 MGR களின் ஸ்டைலும் , வாவ்!
  நான் பள்ளி நாட்களில் பார்த்து ரசித்து பரவசமாகி, நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்த நாட்கள் இன்னமும் நினைவில் பசுமைமாறாமல் உள்ளன!.........

 10. #829
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  நடிகை பேரரசு என்ற எம்ஜிஆரின் ஆவலைத் தூண்டும் அன்பருக்கு வணக்கம் இந்தப் படம் ரிலீஸானபோது அந்த சினிமா தியேட்டர் திருப்பூர் உள்ள டைமண்ட் தியேட்டர் என்ற சிறப்பு பெற்ற திரையரங்கம் அந்த தியேட்டரில் ஓனர் தோள் மேல் கை வைத்து விட்டால் படம் பார்த்துவிடலாம் நாங்கள் போனது 10:00 10 மணிக்கு போய் இரண்டு மணி டிக்கெட் கிடைக்கவில்லை இரண்டு மணி டிக்கெட் முடிந்த பத்து மணி டிக்கெட் கிடைக்கவில்லை திரும்ப ஒருமுறை டிக்கெட் மட்டுமே என்னை தொட முடிந்த அவர் நாள் ஆகையால் 32 ஷோ முடிந்து மூன்றாவது பாட்டு வந்த அந்த நிலையில் அந்த தியேட்டரில் மதிப்பில் பைசா முடிந்து என்று நினைக்கிறேன் அஞ்சனா 31 காசுகள் கொடுத்து அந்தத் திரைப்படம் பார்த்த ஞாபகம் எனக்கும் இன்னும் உள்ளது ஒன்பது வயதில் அந்த படத்தை திரையிட்டார் அப்போது முதல் இன்று வரை அந்த தியேட்டருக்கு என்று திருப்பூரில் நல்ல மதிப்பும் இன்றும் உள்ளது ஆகையால் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை உண்மை என்று சொல்லி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வணக்கம் ஐயா... 1984ல் மறு வெளியீட்டில் சென்னையில் திரையிடப்பட்ட அத்தனை தியேட்டரிலும் இரண்டு வாரம் ஹவுஸ் புல்லாக ஓடியது. அப்போது சென்னையில் புயல் கனமழை காரணமாக அண்ணா சாலையில் அத்தனை திரையரங்கிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பாரகன் திரையரங்கில் கூடிய கூட்டம் காரணமாக ஒளிவிளக்கு படம் மட்டுமே திரையிடப்பட்டது என்பது கூடுதல் தகவல்.........

 11. #830
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,341
  Post Thanks / Like
  வாத்யாருக்கு வாத்யார்!
  ---------------------------------------
  எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் இன்றையப் பதிவை அலங்கரிக்கிறார்கள்!
  "நாடோடி மன்னன்!"
  எம்.ஜி.ஆரின் கை வண்ணத்தால் தமிழ் திரையுலகம் கண்ட பிரம்மாண்ட வளர்ச்சி!
  இந்தப் படத்தைச் சார்ந்த சுவையான தகவல்களைச் சொல்லுமாறு என்னிடம் கேட்ட ஜெயசுதாவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
  இந்தப் படத்துக்கு முதலில் கண்ணதாசனைத் தான் வசனம் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்!
  உதிரம் சிந்தி நீங்கள் உருவாக்குவீர்கள்! நானோ
  உட்கார்ந்த இடத்தில் முழுப் படத்துக்குமான வசனங்களையும் எழுதித் தர இயலாத அளவுக்கு எனக்குப் பணிச் சுமை! ரவீந்திரனை வைத்தே வசனம் எழுதிக் கொள்ளுங்களேன் என்று கவிஞர் கேட்டுக் கொண்டதற்கு ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர்,,கூடவே கவிஞருக்கு ஒரு அன்புக் கட்டளையிட்டார்!
  முக்கியமான பதினைந்து இடங்களை நான் குறித்து வைக்கிறேன். அந்த இடங்களில் மட்டுமாவது நீங்கள் தான் வசனங்களை எழுத வேண்டும்!!
  கவிஞர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து--
  கவிஞர்--ரவீந்திரன் இருவராலும் வசனம் எழுதப்ப்பட்டது!
  கவிஞரிடம் இருந்த ஒரு பழக்கம் அன்றையத் திரையுலகத்தில் வெகுப் பிரசித்தம்!
  அது??
  பாடல் எழுத எந்தக் கம்பெனிக்கும் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சென்றதே கிடையாது! அதாவது--
  நேரம் தவறிச் செல்வதையே அவர்-
  தவறாமல் கொண்டிருந்தார்!
  அன்று,,எம்.ஜி.ஆர்,,கவிஞரிடம் சொல்கிறார்--
  ஆண்டவனே,, நாளைக்கு பாடல் கம்போஸிங்குக்கு நேரம் தவறாமல் வந்துடுங்க!
  அந்த விஷயத்துல தான் உங்கக் கிட்ட எனக்கு பயமே??
  நாளைக்கு எட்டு மணிக்குத் தானே கம்போஸிங்? நான் கரெக்ட்டா 7.50க்கு இருப்பேன்.போதுமா??
  கவிஞர் உறுதியுடன் சொல்கிறார்--
  மறு நாள்--
  எட்டாயிற்று,,ஒன்பதாயிற்று,,பத்தும் ஆயிற்று--
  கவிஞர் தம் கொள்கையை விட்டுக் கொடுப்பாரா என்ன??
  பத்தே முக்காலுக்கு வேக வேகமாக வருகிறார்--
  எம்.ஜி.ஆர்,,கவிஞரை வரவேற்கிறார்--
  வாங்க ஆண்டவனே,,சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே??
  அசட்டு சிரிப்புடன் எம்.ஜி.ஆரின் குத்தலை வாங்கிக் கொள்கிறார் கவிஞர்!
  ஆண்டவனே,,இவ்வளவு நேரமா வெயிட் பண்ண நேரத்தை வீணாக்க வேணாமேன்னு,,நம்மப் பட்டுக்கோட்டையார் கிட்டே ஒரு பாட்டு எழுதி வாங்கினேன். எங்கயாவது திருத்த வேண்டியிருக்கான்னு பாருங்க??
  அதாவது--
  பதிவின் தலைப்பு?
  தம்பி பட்டுக்கோட்டையோட தமிழை நான் திருத்தறதா?? அதை விட அவரையும் அவர் தமிழையும் வேற எப்படியும் அவமானப்படுத்த முடியாது??
  மறுக்கின்ற கவிஞரிடத்தில் தான் எத்தனைப் பெருந்தன்மை?
  எம்.ஜி.ஆரும் விடுவதாய் இல்லை--
  எனக்காகக் கொஞ்சம் பார்த்துடுங்களேன்??
  கவிஞரும் அந்தப் பாடல் வரிகளில் விழியை ஓட விடுகிறார்!
  ஆம்! தூங்காதே தம்பி தூங்காதே பாடல் தான் அது!
  எம்.ஜி.ஆர் சுட்டிக் காட்டிய இடத்தில் படித்தக் கவிஞர்,,இதுக்கு லேட்டா வந்த என் கன்னத்துலே நீங்க அறைஞ்சிருக்கலாமே என சிரித்துக் கொண்டே கூற--குழந்தையைப் போல் குலுங்கிச் சிரிக்கிறார் எம்.ஜி.ஆர்--
  எம்.ஜி.ஆர்,,கவிஞரிடம் காட்டிய அந்த வரிகள்--

  போர்ப் படை தனில் தூங்கியவன்
  வெற்றி இழந்தான்--உயர்ப்
  பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
  கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்டக்
  கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்?
  இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்--பல
  பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!!
  என்ன தோழமைகளே??
  ரசிக்கும்படி தானே இருக்கிறது???!!!.........

Page 83 of 111 FirstFirst ... 3373818283848593 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •