Page 82 of 400 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #811
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #812
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #813
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #814
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #815
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு "இந்தக் குறளுக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் இருக்கும் நெருக்கம் என்னவாக இருக்கும்?
    முதலில் குறளுக்கான தெளிவுரையைத் தெரிந்து கொள்வோம்,
    1) திரு.மு.வரதராசனார் அவர்களது உரை:-
    "எப்பொருள் எத்தன்மைதாய்த் தோன்றினாலும் ( அத்தோற்றத்தை மட்டும் கண்டு மங்காமல்)
    அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு "
    2) கலைஞர் கருணாநிதி உரை:-
    " வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அது பற்றிய தெளிவான உண்மையை அறிவதே மெய்யுணர்வு "
    3) திரு.சாலமன் பாப்பையா உரை:-
    " எந்தப் பொருளானாலும் அது எப்படிக் காட்சி தந்தாலும் அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல் உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளை காண்பதே மெய்யுணர்தல் "
    இப்போது சொல்லவந்த செய்திக்கு வருவோம்,
    1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக அவரது தலைமையில் திமுக ஆட்சி நடந்த போது சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான சீரிய பணிகள் நடைப் பெறத் தொடங்கியது,
    விழா சிறப்பாக நடைபெற பெருமளவு நிதியும் தேவைப்பட்டது,
    நிதி வேண்டி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்,
    அறிஞர் அண்ணா அவர்களது வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் எதிரணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும் கூட உடனடியாக ரூபாய் ஐந்து லட்சத்தை அளித்ததோடு
    ( ஐந்து லட்சம் என்பது இன்று 50 கோடி ரூபாயாகும் இதில் மாற்றுக் கருத்து கொள்பவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் எனில் அந்தத் தொகை அன்றைய நடிகர் திலகத்தின் ஏறக்குறைய இரு படத்தின் சம்பளமாகும் இன்று முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோரின் ஒரு படத்திற்கான சம்பளம் 20-25 கோடியாகும்)
    மாநாட்டின் முக்கிய பணிகளையும் ஏற்றுக் கொள்வதாக கேட்டுக் கொண்டார்,
    வழக்கம் போல நடிகர் திலகம் சிவாஜிக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது என எதிரணியினர் அறிஞர் அண்ணா அவர்களிடம் வாதிட்டு புளம்பினர், ஆனால் நடிகர் திலகம் அளித்த பெருந்தொகை எதிரணியினரின் புளம்பலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது,
    மாநாட்டில் பெருமைப் படுத்தும் விதமாக தமிழறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டு தமிழுக்கான சிறப்பு செய்தனர்,
    தமிழறிஞர்கள், தமிழக அமைச்சரவை என ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு தான் உலகப்புகழ்பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் தமிழறிஞர்களின் திரு உருவச்சிலைகள் அமைக்கபடுவதென, அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவிற்கான முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடிகர் திலகம் திருவள்ளுவர் திரு உருவச்சிலையை தனது சொந்த செலவிலேயே அமைத்து கொடுக்க முடிவு செய்தார், அறிஞர் அண்ணா அவர்களது யோசனைப்படி திருவள்ளுவருக்கான சிலை உருவத்தை நடிகர் திலகமே மாடலாக நின்று திருவள்ளுவர் சிலை அமைய காரணமாகவும் அமைந்தார்
    (நடிகர் திலகத்தின் சிலையை மெரினாவிலிருந்து அகற்றி விட்டார்கள் என நினைத்தாலுமே திருவள்ளுவராக அதே மெரினாவில் அதே கம்பீரத்துடனேயே இருக்கிறார்)
    தத்ரூபமாகவும் கம்பீர தோற்றத்துடன் எழில் வடிவிலான திருவள்ளுவர் சிலை அமைந்ததைக் கண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் மகிழ்ந்தார், நடிகர் திலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என வாதிட்டவர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் மேற்கோள் காட்டிய உதாரணம் தான் மேலேக் குறிப்பிட்ட திருக்குறள்
    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு,
    சிலை அமைந்திருக்கும் பீடத்தின் கல்வெட்டில் குறள் பொறிக்கப்பட்டுள்ளது,
    நடிகர் திலகம் எதிரணியில் இருந்தாலுமே தமிழெக்கென்று வரும்போது அவர்தான் முன்னாடி நின்றார்
    இதே ஆண்டில் தான் நடிகர் திலகம் நடிப்பில் வெற்றி வாகை சூடிய 125 வது திரைப்படமான "உயர்ந்த மனிதன்" வெற்றி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என நடிகர் திலகத்தை குறிப்பிட்டு வாழ்த்தினார்,








    நன்றி Sekar Parasuram (F BooK)
    Last edited by sivaa; 17th November 2019 at 05:22 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #816
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    Seeman Beautiful Speech about Sivaji Ganesan and Thiruvalluvar | Seeman Latest Speech
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #817
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவசியம் இல்லாமல் ரஜினி மற்றும் கமலுக்கு பதில் சொல்ல நடிகர் திலகம் சிவாஜியை பயன்படுத்தினார்,
    அவர் பேசும்போது சினிமாவில் நடிப்பில் எம்ஜிஆர்க்கு அடுத்த நிலையில் சிவாஜி இருந்தார் எனவும் வரலாறு தெரியாமல் கூறினார்,
    அவருக்காக சில ஆவணங்களைக் கொண்டு சுட்டிக் காட்டிடுவோம்,
    1952 ல் பராசக்தி வெளியான அன்றைய நாளில் இருந்தே சிவாஜிதான் உச்சம், ...
    1977 ல் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பை ஏற்கும் வரை நடிகர் திலகம் தான் பிரதானச் செய்தி,
    மக்களிடையேயும் ஆகட்டும் செய்தி பத்திரிக்கைகள் ஆகட்டும் சிவாஜி- எம்ஜிஆர் என்பது தான் வழக்கம்,
    திமுக அரசு அமைத்த 1967 களில் இருந்து பத்திரிக்கைகள் அச்சுறுத்தப்பட்டன எம்ஜிஆர்- சிவாஜி என மாற்றம் செய்து வழக்கத்தை மாற்ற வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன,
    அதற்கு அச்சாரம் போட்டுக்கொண்ட பத்திரிக்கைகளில் ஒன்று தினத்தந்தி,
    ஆனாலும் வரலாறு என்பதை முழுவதுமாக மாற்றிவிட முடியாத ஒன்று,
    தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் ஐ எப்படி வேண்டுமானாலும் கொண்டாடி பேசிக்கொள்ளட்டும்
    ஆனால் நடிகர் திலகம் சிவாஜி எம்ஜிஆர் ஐ அடுத்த நிலை என வரலாறு தெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,
    இனைப்பில் 1) அறிஞர் அண்ணா அவர்களது திருமண விழா தொடர்பான பத்திரிக்கை செய்தியில் சிவாஜி- எம்ஜிஆர்
    2) கூண்டுக்கிளி திரைப்பட விளம்பரம் சிவாஜி- எம்ஜிஆர்
    3) இந்தியாவின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் சிவாஜி- எம்ஜிஆர்
    4) 1976 ஆம் ஆண்டின் திரைப்பட வரிசை சிவாஜி- எம்ஜிஆர்
    5) மூன்று முக்கிய நடிகர்கள் நடிக்கும் திரைப்பட நடிகர்கள் வரிசையில் சிவாஜி- எம்ஜிஆர்
    6) 15 மைல் தூர அளவிற்கு நடந்த சிவாஜி மன்ற பேரணி
    7) முதன் முதலாக 30000 ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த சிவாஜி
    இன்னமும் எவ்வளவோ வரலாற்று ஆவணங்கள் இருக்கத் தான் செய்கிறது.
    வருங்காலத் தலைமுறையினருக்காவது சரியான வரலாற்றை எடுத்துச் சொல்லுவோம்,










































    நன்றி Sekar Parsuram (f Book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #818
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அரசியல் வரலாறு தெரியாமல், விபத்தில் பதவி வகித்துக் கொண்டிருக்கும், சிவாஜியை விமர்சிக்கும் அதிமுக அமைச்சர்களே, (விபரம் தெரிந்தவர்கள், சிவாஜியை பற்றி பேசுவதில்லை)
    1949, செப்படம்பர் 18ம் தேதி திமுக, அண்ணாதுரை தலைமையில் உதயமாகிறது.
    1952ல் அதாவது, பராசக்தி வருவதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
    ... பராசக்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பின்,
    சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
    பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
    நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
    சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
    மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
    அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
    1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
    ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
    முதன்முதலாக, திமுக ஆட்சியை கைப்பற்றியது
    1967ல், மேலும், முதல்வர் வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
    18 ஆண்டுகள் ஆனது...
    ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
    சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
    இது என்ன நியாயம்.
    சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.,
    இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்....



    நன்றி Sundar Rajan ( F Book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #819
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம்,
    * நடிகர்திலகம் சிவாஜி அரசியலில் தோற்றாரா?
    * தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணம் என்ன?
    * சிவாஜியை ஏன் சிறுமைப்படுத்த நினைக்கிறார்கள்?
    * அரசியலில் சிவாஜி சாதித்தாரா?...
    * ரஜினி - கமலுக்கு ஆதரவு உண்டா?
    * சிவாஜி குடும்பத்தினர் உங்களை ஆதரிக்கிறார்களா?
    - இதுபோன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தைத் தருகிறார் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன்.
    அவசியம் கேட்போம், அனைவருக்கும் பகிர்வோம்.
    - நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை, சென்னை.





    நன்றி Sivaji Peravai Chennai
    Sivajiperavai Chennai

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #820
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழக முதலவர் எடப்பாடி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள்.
    _________________________________
    உன் தலைவன் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் நோய் முற்றி சிகிட்சை எடுத்து கொண்டிருந்த போது, அண்ணனை (எம.ஜ.ஆர்) காண்பதற்கு எங்கள் அய்யன் தன் மனைவி கமலா அவர்களுடன் அமரிக்காவிற்கு சென்றார்கள்.
    தம்பியை (அய்யனை) பார்த்த உடன் எம்.ஜி.ஆர் அவர்களும், ஜானகி அவர்களும் கண் கலங்க நால்வரும்(அய்யனும்,கமலா அம்மை, ஜானகி அம்மை, எம்.ஜி.ஆர்) ஒன்றாக கண்ணீர் வடித்து கட்டி பிடித்து அழுது தங்களின் கரை இல்லா பாசத்தை கண்ணீராக வெளி படுத்தினார்கள்.
    மருத்துவர்களின் நிற்பந்தத்தால் இவர்களின் ஓய்வில்லா கண்ணீர் அடக்கப்பட்டன. இரண்டு நாட்கள் உடன் இருந்து விட்டு அய்யனின் குடும்பம் இந்தியா திரும்பியது.
    இந்தியா திரும்பிய அய்யனை எம்.ஜி.ஆர் அவர்கள் திரு. வீரப்பனுடன் மீண்டும் அவசரமாக அமெரிக்காவிற்கு அழைக்கப்படுகின்றார்கள்.
    இந்த அழைப்பின் விவரம், ரகசியம் ஏன் என்று, என்ன என்று, எதற்க்காக என்று கால் நக்கி பதவியில் ஒட்டி கொண்டிருக்கும் எடப்பாடியே தங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்.
    அழைப்பபை ஏற்று திரு.வீரப்பன் அவர்களுடன் அய்யன் செல்கின்றார்கள் மனம் கனத்துடன். இத்தனை அவசரமாக அண்ணன் என்னை அழைக்க காரணம் என்ன? விபரீதம் ஏதாவது? மனம் கனத்துடன் இருவரும் அமெரிக்கா செல்கின்றனர்.
    அங்கு சென்றதும் அய்யனுக்கு மனதிற்க்கு சிரிய சமாதானம். விபரீதம் எதுவும் இல்லை என்று.
    பிறகு அண்ணன்(எம்.ஜி.ஆர்) அய்யனை அழைத்ததின் அவசரம் என்ன? 4 பேரும்( எம்.ஜி.ஆர்,அய்யன், ஜானகி, வீரப்பன்) மருத்துவமனையில், அங்கிருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டு பேசப்படுகின்றது.
    தம்பி கணேசா உன் சகோதரி ஜானகிக்கு எதுவும் தெரியாது. என் கட்சியில்(அ.தி.மு.க) உள்ள எவர் மீதும் எனக்கு (எம்.ஜி.ஆர்) எள் அளவும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த இயக்கத்தை (அ.தி.மு.க) தலைமை ஏற்று நீதான் வருங்காலத்தில் வழி நடத்தி செல்ல வேண்டும் என்ற அய்யனின் கை பிடித்து அண்ணன் என்ற அன்பு கலந்த அதிகாரத்துடன் வேண்டடி கொண்டார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
    இதற்கான விழா (அய்யனிடம் இயக்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற விழா) சென்னையில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட வேண்டும் என்று விரப்பன் அவர்களிடம் கட்டளை இடப்படுகின்றது. இருவரும்(அய்யனும், வீரப்பனும்)முதலில் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி அம்மை, சில மருத்துவர்களுடன் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கு அய்யனை தலைமை ஏற்க சொல்லும் பிரமாண்ட விழாவிற்கு 2 தினங்கள் மட்டுமே இருந்த நிலையில் எங்கள் அய்யனின் பாச மிகு அண்ணன் (எம்.ஜி.ஆர்) இயற்கை எய்தினார்கள்.விழாவும் நடை பெறாமல் அனைத்துமே மரண ஓலத்துடன் அடங்கி விட்டது. அனைத்தும் மரண பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது.
    இதற்கு சாட்சி திரு.வீரப்பன் (அ.தி.மு.க அமைச்சர்) அவர்களே.
    ஏய் சசிகலாவின் கால் நக்கி எடப்பாடியே! உன் கட்சியில் எவனையும் நம்பாது எதிர் முகாமில் இருந்த எங்கள் அய்யனை மட்டுமே தங்களின் தலைவன் (எம்.ஜி.ஆர்)நம்பினார்கள். காரணம், அ.தி.மு.கவில் உள்ள நாய்கள் அனைவருமே கால் நக்கிகள் என்று அன்றே தங்களின் தலைவன் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
    அதை இப்போது மனசாட்சி இன்றி தவறாமல் செய்து, ஒரு விபத்து போல் ஆட்சியில் ஒட்டி கொண்டுருக்கும் சோமாரி நீ, மாசற்ற எங்கள் அய்யனை விமர்சிக்கின்றாய். தனது கட்சியில் உள்ள அத்னைபேரும் திருட்டு நாய்கள் என்று தனது தலைவனே முடிவு செய்து, இந்த உலகில் தனது(எம்.ஜி.ஆர்)தலைவனுக்கு நம்பிக்கை உள்ள ஒரே உத்தமன் எங்கள் அய்யன் மட்டுமே.
    இவைகளை நீ தெரிந்திருக்க வழி இல்லைதான். அன்று நீ உடம்பில் துணி இன்றி ஓடிய காலமாக இருக்கலாம். உலகில் உத்தமர்கள் ஒரு சிலரே தோன்றினார்கள் அதில் எங்கள் அய்யனும் ஒருவர் என்பது எவராலும் மறுக்க முடியாத சத்தியம்.
    எங்கள் அய்யன் மாற்று குறையாத இறை பிறவியாம் எங்கள் அப்பச்சியிடம்(காமராஜ்) பாடம் கற்றவர். உன்னை போல் சசியிடம் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி கொள்.
    ரஜனியும், கமலும் அரசியலில் வந்தால் உன் தலைவன் போல் வெற்றி பெற இயலாது என்று நீ கூறி இருந்தால் என்ன ம.......க்கு உன்னை நாங்கள் விமர்சிக்க வேண்டும். இதன் உண்மை, நீ உன் தலைவனை மறந்து என் அய்யனையே இப்போதும் உன் மனதில், நினைவில் வைத்திருக்கின்றாயோ? ஆட்சியின் அகங்காரத்தில் ஆடை இன்றி அலையாதே. உன் முடிவு வெகு விரைவில். அப்பச்சியே போற்றி. அய்யனே போற்றி.


    நன்றி Selvaraj Fernandez
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •