Page 380 of 400 FirstFirst ... 280330370378379380381382390 ... LastLast
Results 3,791 to 3,800 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3791
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sugar doll, மெழுகு பொம்மை என்ற அளவில் தான் கதாநாயகியரின் பங்கு இருந்தது இந்திய படங்களில்...
    சலன படங்களில் துவங்கி, டாக்கியாக வளர்ச்சி பெற்று சமீப காலம் வரை கூட இதுதான் கதாநாயகிகள் கதி...
    கதாநாயகனை காதலிப்பது, முடிந்த வரை கவர்ச்சி காண்பித்தால் இன்னும் விஷேசம்...
    தயாரிப்பாளர், இயக்குனர் கதாநாயகர்கள் ஏன் சினிமா விசிறிகளின் விருப்பமும் கூட இதே ரீதியில் தான்...
    விதி விலக்காக ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அன்னை, மங்கம்மா சபதம் என்று சில அத்தி பூக்கள்...
    மாற்றி யோசிக்கவும் ஒரு கலைஞர் வந்தார்.. நடிகர் திலகம் என்று அவரை அழைத்தார்கள்... இருந்தாலும் நடிகையர்கள் பங்களிப்பு படங்களில் கவர்ச்சியோடு நில்லாமல் நடிப்பிலும் இருக்க வேண்டும் என்று நம்பியிருக்கிறார் அந்த நல்லவர்...
    V.C.கணேசனுக்கு முதல் நாயகி பண்டரிபாய்....
    அந்த படத்திலேயே அவருக்கு நல்ல வாய்ப்பு. சீர்த்திருத்தம் என்றால் என்ன, எங்கிருந்து அது துவங்க வேண்டும் என்று நாயகனுக்கு வகுப்பெடுக்கும் வனிதையாக தோன்றினார் பண்டரி பாய்...
    அடுத்த படம் அந்த நாள்...
    ஜப்பானியரோடு கை கோர்ப்பதில் தேச துரோகம் ஏதுமில்லை என்று எண்ணினான் காதல் கணவன்.
    அல்ல, அதுவும் தேச துரோகம் தான் என்று வாதம் செய்கிறாள் மனைவி.. மாற்ற முடியவில்லை மணாளனை..
    அவன் துரோகத்தை தடுக்கும் முயற்சியில் அவனையே கொல்லும் நிலை உண்டாகிறது...
    எந்த நடிகனுக்கு வரும் துணிவு, இந்த வேடத்தில் நடிக்க?
    துணிவு இருந்தது சிவாஜி கணேசனுக்கு...
    வெண் திரையில் அந்த நாளும் வந்தது...
    பத்மினி ! சிறு சிறு நடன காட்சிகளில் சகோதரிகளுடன் சேர்ந்து படங்களில் வருவார்.....
    நடிகர் திலகத்தோடு இணைந்தார்... அத்தனை படங்களிலும் அவருக்கு நல்ல வேடங்கள்...
    எதிர்பாராதது, தெய்வ பிறவி என்று நல்ல நல்ல படங்கள்..... சம வாய்ப்பு பத்மினிக்கு... யாரோடு? நடிகர் திலகத்தோடு.....
    தில்லானா மோகனாம்பாள் !
    பேரே எனக்கு பிடிக்க வில்லை ! மாற்றுக, சிக்கல் சண்முக சுந்தரம் என்று சொன்னாரில்லை சிவாஜி கணேசன்...
    தில்லானா மோகனாம்பாளாகத்தான் வெளியானது படம்... வெற்றியும் பெற்றது....
    பானுமதியோடு சில படங்கள் !
    அறிவாளி, அம்பிகாபதி, தெனாலி ராமன் என்று...
    ரங்கோன் ராதாவும் தான்.
    படம் பார்க்க வரும் தாய்குலத்தின் ஒட்டு மொத்த அனுதாபமும் ரங்கோன் ராதா மீதுதான் ....
    அத்தனை பேர் சாபமும் நடிகர் திலகத்திற்கு தான்...
    காரணம், கொடுமைக்கார கணவன்.
    மட்டுமல்ல, சமூகம் குறித்து அக்கறை இல்லா கள்ள சந்தை முதலாளி...
    இருந்தும் படுத்து விடவில்லை படம்..பாராட்டுக்கள் குவியத்தான் செய்தது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு...
    நடிகையர் திலகம் என்றே அவருக்கு பெயர்.. வேறு எந்த நடிகைக்கும் வழங்க பெறாத சிறப்பு....
    சாவித்திரி !
    பாசமலர், கை கொடுத்த தெய்வம், நவராத்திரி எல்லாம் பின்னாட்களில்...
    முதலில் பெண்ணின் பெருமைதான்..
    களிமண்ணாகத்தான் கட்டிவைக்கிறார்கள். அந்த களிமண் கணவனை உயர்த்தி ஜமீன் மக்கள் வணக்கத்திற்கு உரியவனாக மாற்றும் பெண்குல பெரு விளக்கு சாவித்திரி, அந்த படத்தில்...
    நடிகர் திலகத்திற்கோ வில்லன் வேடம்...
    தீய வழக்கங்கள் அனைத்திற்கும் உறைவிடம்...
    அனுதாபத்திற்குரிய அண்ணனை அடித்து உதைக்கும் தம்பி...
    மிக அருமையான நடித்தார் நம் திலகம்... அந்த வில்லன் வேடத்தில்...
    மூன்று முடிச்சு ரஜினி, ஆசை பிரகாஷ் ராஜ் இரண்டு பேரும் பெண்ணின் பெருமை யில் நம் திலகத்தின் நடிப்பை நிறையவே imitate செய்தனர் அந்த படங்களில்...
    பின் இருக்கவே இருந்தது பாசமலரும், நவராத்திரியும்.....
    காட்சிக்கு காட்சி சம வாய்ப்பு இரு திலகங்களுக்கும்....
    இன்றும் யார் performanc மேல் என்று கண்டவர் எவரும் விண்டிலர்....
    சாந்தி ! படத்திற்கு பெயர்...
    விஜயாகுமாரி ஏற்ற பாத்திரத்தின் பெயர் சாந்திதான்... ஆனால் வாழ்வில் சாந்தியே கிட்டாத பரிதாபத்திற்குரிய பாவை சாந்தி ..
    அந்த படத்தில் கதாநாயகன் நடிகர் திலகம்...
    அவருக்கும், விஜயகுமாரிக்கும் போட்டி நடிப்பில்...
    ஏன், பச்சை விளக்கில் கூட அப்படிதான்...
    மனப்புழுக்கம் மருந்துக்கு கூட இருந்ததில்லை அவருக்கு....
    அந்த திலகத்திற்கு ஆஸ்தான நாயகிதான் அபிநய சுந்தரி !
    ஆனாலும் அந்த திலகத்தின் படங்களில் அவர் sugar doll தான்....
    பாக பிரிவினை, ஆலய மணி, புதிய பறவை, இருவர் உள்ளம்..........
    இருவர் உள்ளம் படத்தில் ஒரு முக்கிய காட்சி ! சரோஜாதேவி, சிவாஜி இருவர் மட்டுமே அந்த காட்சியில்.....
    சரோஜாதேவி தன்னை மிஞ்சி விட கூடாது என்று அருமையாக நடித்தாராம் நடிகர் திலகம்..
    Cut சொல்லி விட்டு வந்த படத்தின் இயக்குனர் L.V.பிரசாத் சிவாஜி, நன்றாக செய்தீர்கள் இந்த காட்சியில்.... ஆனால் இந்த காட்சியில் மிளிர வேண்டியவர் சரோஜாதேவி. அப்படி இருந்தால் தான் படத்திற்கு ஜீவன், வெற்றி...
    நீங்கள் அவரை outsmart செய்தால் படத்தின் ஜீவன் செத்து விடும் என்றாராம்.
    வேறு எவராக இருந்தாலும் மாற்று டைரக்டரை என்றிருப்பார்கள்...
    ஆனால் நடிகர் திலகம் அடுத்த take இல் அபிநயசரஸ்வதிக்கு வழி விட்டு அடக்கி வாசித்தாராம்....
    எவருக்கு வரும் இந்த உயர்ந்த பண்பு?
    உத்தம குணம்...
    எங்கிருந்தோ வந்தாள் !
    அப்படி வந்தவள் மாற்றியமைக்கிறாள் மனநலம் குன்றிய ஒரு மகாகவியின் வாழ்வை.....
    தன் சீலத்தை, வாழ்வை எல்லாமே பணயம் வைக்க நேர்கிறது அந்த சீரிய பணியில்...
    ஒரு விதத்தில் பார்த்தால் சகுந்தலையின் சாயல் தான் ! ஆனால் சகுந்தலையை விட உயர்ந்த குணம், மனம் அந்த எங்கிருந்தோ வந்தவளுக்கு..... ஜெயலலிதாவிற்கு கிடைத்த மிக மிக அருமையான பாத்திரம் அது...
    புன்னகையுடன் ஏற்று கொண்டார் நடிகர் திலகம்......
    பாட்டும் பரதமும், அவன்தான் மனிதன் படங்களிலும் அருமையான வேடங்களே ஜெயலலிதாவிற்கு... இவரும் எதிர்முகாமில் இருந்து வந்தவர்தான்..
    அந்த முகாமில் அவருக்கு வாய்த்ததெல்லாம் ஜிகினா உடையும், குளுக்கு நடனங்களும் தான்...
    K.R.விஜயா.....
    நெஞ்சிருக்கும் வரை, சொர்க்கம், தங்க பதக்கம் ராமன் எத்தனை ராமனடி என்று அவருக்கும் வாய்த்த படங்கள், வேடங்கள் அருமைதான்....
    முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன் பாடலில்
    இன்று மட்டும், நாளை இல்லை
    என்ற சொல்லில் உண்மை இனி இல்லை என்று தீ கக்குவார் விஜயா... குன்றி, குறுகி நிற்பார் நடிகர் திலகம்...
    வாணி ராணியில் வாணிஸ்ரீ தான் எல்லாமே..
    முத்து ராமனுக்கும் நடிகர் திலகத்திற்கும் வித்தியாசமே இல்லை இந்த படத்தில்... இருந்தும் பார்த்து போ ! ஏய் ! பார்த்து போ ! பாடல் ஒன்றிலேயே ரசிகர்களை திருப்தி செய்து விட்டார் அவர்.
    வசந்த மாளிகையிலும் வாணிஸ்ரீக்கு சம வாய்ப்பு, யாரோடு? நம் திலகத்தோடு....
    வழங்கி விட்டு போட்டியில் வென்றார் நடிகர் திலகம்.....
    முன்னாள் extra நடிகர்கள் பேச வேண்டியதில்லை நடிகர் திலகத்தின் மாண்பை....
    பெரும் ரசிகர்கள், வாழ்வின் சகல நிலைகளிலும் இருக்கும் உயர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள் லட்சோப லட்சம் பேர். அவர்கள் பேசுகிறார்கள் நடிகர்திலகம் பற்றி... பெருமிதத்தோடு, கர்வத்தோடு,
    மகிழ்ச்சியோடு, மலர்ச்சியோடு.
    வேறென்ன வேண்டும் நமக்கு?



    Thanks Vino Mohan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3792
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி4
    கம்பூன்றி நடந்துவரும் வயதான ஒருவரைப் பார்த்துவிட்டு இவர் இளமைப் பருவத்திலும் இப்படித்தான் கோலூன்றி நடந்திருப்பாரோ என்று நினைப்பது எத்தனைப் பெரிய அபத்தமோ, அப்படித்தான் அபத்தத்திலும் அபத்தம் நடிகர்திலகத்தின் இறுதிக்கால படங்களின் ஓட்டத்தை வைத்து அவர் புகழேணியின் உச்சத்தில் நின்று கோலேச்சிய காலத்திலும் இப்படித்தான் ஓடியிருக்குமோ என்று நினைத்துக் கொள்வதும்.
    இன்றைக்கு பெரும்பான்மை திரைஆர்வலர்களின் எண்ண ஓட்டம் அப்படியாகத்தான் இருக்கிறது. அவர்களின் சிந்தை முழுதும் மசாலா ஹீரோக்கள்தான் திரையுலக மகாராஜாக்கள் என்று! அவர்களைப் போன்றவர்களுக்குத்தான் திலகத்தின் இந்த சாதனைப்பதிவுகள்.
    தமிழ்த்திரையுலகில் நடிகராகவும், நட்சத்திர நாயகராகவும் மின்னிய முதலும் கடைசியுமான நடிகர் நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே.
    இவர் ஒருவருக்குத்தான் சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், காதல் பாடல்கள் இல்லாவிட்டாலும், உடல் ஊனம்போல் இருந்தாலும், ஏன்... ஆண்மையின் அடையாளமாய் கருதும் மீசையே இல்லாவிட்டாலும் படங்கள் வெற்றி நடையிட்டன. படம் முழுதும் படுத்துக் கொண்டே நடித்தாலும் நூறுநாள் ஓடின. வசூல் முரசும் கொட்டின. மற்றவர்களை இப்படியெல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அப்படி வெல்வதற்கான அறிகுறியும் இல்லாத ஒன்று.
    அன்றைய சராசரி நாயகர்களிலிருந்து விலகி, தனக்கென்று தனிப்பாதையிட்டு அதில் வெற்றிநடையிட்டவர்தான் நடிகர்திலகம்.
    அன்றைக்கு ஆண்டுக்கு முப்பது நாற்பது படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் இவர் நாயகனாக நடித்தப் படங்களாகத்தான் அமைந்திருந்தன. ஆம். சினிமாவும் சிவாஜியும் ஒன்றாக வளர்ந்த காலமது.
    #அதுஒரு_பொற்காலம்!
    தமிழ்த்திரை வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நாயகனாக நடித்ததில் இவரே முதலாமவர் என்பது மட்டுமல்ல... ஒரே ஆண்டில் அதிக 100 + நாள் ஓடிய வெற்றிப்படங்களைத் தந்ததிலும் இவரே முதல்வராகவும் திகழ்ந்தார். இன்று வரையிலும் திகழ்கிறார். சான்றாக,
    1958ல் நடிகர்திலகம் நடித்த மொத்தத் திரைப்படங்கள் தமிழில் எட்டு; தெலுங்கில் ஒன்று. அவ்வெட்டுத் தமிழ்ப் படங்களில் 100 நாட்களைக் கடந்தவை 5.
    உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம், சபாஷ்மீனா மற்றும் அன்னையின் ஆணை ( திருச்சி நண்பர்கள் இதனை உறுதிப் படுத்தவும்)
    தமிழ்த்திரையுலகில் ஒரே ஆண்டில் (1958) ஐந்து நூறுநாள் படங்களைத் தந்த முதல் நாயகர் இவரே.
    இதில் மதுரையில் மூன்று படங்கள் நூறு நாள்களுக்கு மேலும், இரண்டு படங்கள் 70 நாள்களையும் கடந்தன.
    #அன்னையின்ஆணை கல்பனா 70 நாள்
    #காத்தவராயன் சிந்தாமணி 84 நாள்
    #உத்தமபுத்திரன் நியூசினிமா 105 நாள்
    #பதிபக்தி கல்பனா 102 நாள்
    #சம்பூர்ணராமாயணம் ஸ்ரீதேவி 165 நாள்
    மற்ற மூன்று படங்களும் மதுரையைப் பொறுத்தவரை 50 நாள்களுக்குக்கீழ்தான் ஓடின.

    இன்றைய நான்காம் பகுதியில் இடம்பெறும் வசூல் பட்டியலின் திரைப்படங்கள் பின்வருவன...
    #பதிபக்தி
    வெளியான நாள் : 14 மார்ச் 1958
    திரையரங்கம் : கல்பனா
    ஓடிய நாள் : 102 நாள்
    மொத்த வசூல் : ரூ.1,34,748.81
    வரி நீக்கிய வசூல் : ரூ.1,13,015.40
    வி.பங்குத்தொகை : ரூ. 61, 005.42

    #சம்பூர்ணராமாயணம்
    வெளியான நாள் : 14 ஏப்ரல் 1958
    திரையரங்கம் : ஸ்ரீதேவி
    ஓடிய நாள் : 165 நாள் ( ஷிப்டிங் முறையில் மதுரையில் 250 நாள்களுக்கும்மேல் ஓடியது)
    மொத்த வசூல் : ரூ. 1,81,592.76
    வரி நீக்கிய வசூல் : ரூ.1,35,701.41
    வி.பங்குத்தொகை : ரூ.77, 914.57
    .......தொடரும்
    மதுரை தகவல் உதவி : திரு. சிவனாத்பாபு
    பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்




    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3793
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks Veeyaar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3794
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பெருந்தலைவர் காமராஜர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர்.. கக்கன் அவர்கள்.. காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்.. அந்த சமயத்தில் கட்சி கூட்டம் காலை 10 மணிக்கு.. எல்லோரும் வந்தாச்சு.. தலைவர் வரவில்லை.. 10 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.. எல்லோரும் காரணம் கேட்கும் முன்னரே பஸ் தாமதமாகி விட்டது.. மன்னிக்கவும் என கைகூப்பி வருத்தம் தெரிவிக்க.. அருகிலிருந்து அய்யா சிவாஜிகனேசன் அவர்கள் மெதுவாக கக்கனிடம் பெரியவர்( காமராஜர்) 10 நிமிடம் முன்னாடியே வந்தாச்சு என சொல்லி இனிமேல் தாமதமாக வருவது தலைவனுக்கு அழகல்ல என்று சொன்னதோடு நில்லாமல் உடனே டிவிஎஸ் கம்பெனிக்குசென்று ஒரு அம்பாசடர் கார் வாங்கி கொடுத்திருக்கிறார் சிவாஜி அவர்கள். நான் தனி ஆள் எனக்கு கார் ஓட்ட தெரியாது. தினமும் பெட்ரோல் போட பணமில்லை என காரை ஏற்க மறுத்திருக்கிறார் கக்கன் அய்யா. சிவாஜி இது கக்கனுக்காக அல்ல காங்கிரஸ் தலைவனுக்கு.. அவர் தாமதமாக வருவது தவறான உதாரணம் என்றார்!
    இப்போதான் நான் தலைவர் இல்லையே எனக்கெதுக்கு கார் என தெரிவித்தாராம் போலீஸ் மந்திரியாக இருந்த கக்கன் அய்யா... எப்படி தூய்மையாக அரசியல் செய்திருக்கிறார்கள் பாருங்கள்.. அதனால் தான் அன்று தேசியகீதம் படம் எடுக்க முனைந்தேன்.. கக்கன் அய்யாவை நினைவு கொள்வோம் இளைஞர்களே... நன்றி.
    நடிகர் சேரனின் ட்விட்டர் பதிவு!




    Thankss Venkat Vpt

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3795
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று (22-06-2020)
    தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைப்பட மழை!!
    1) புதிய பறவை - காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,

    2) திருமால் பெருமை - காலை 10 மணிக்கு ஜெயா டிவியில்,
    3) நல்லதொரு குடும்பம் - பகல் 12 மணிக்கு முரசு சேனலில்,
    4) தாவனிக் கனவுகள் - பிற்பகல் 1:30 க்கு ஜெயா டிவியில்,
    5) அன்பே ஆருயிரே- பிற்பகல் 2 மணிக்கு கேப்டன் டிவியில்,
    6) ராஜபார்ட் ரங்கதுரை - மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்,
    7) நல்லதொரு குடும்பம்- இரவு 7 மணிக்கு மீண்டும் முரசு சேனலில்,
    8) எங்க மாமா - இரவு 7:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,


    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3796
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்ற ஆண்டு இதே நாளில் தமிழகமெங்கும் டிஜிட்டலில் மறு வெளியீடாகி வசூல் சாதனை படைத்த
    " வசந்த மாளிகை "



    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3797
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #சாதனைப்பட்டியல்
    #பகுதி5

    #1959ல்
    நடிகர்திலகம் நடித்து வெளியான மொத்தப்படங்கள் ஆறு. அதில், நூறு நாள்களைக் கடந்த திரைப்படங்கள் மூன்றாகும். மதுரையில் நூறு நாள்களைக் கடந்த படங்கள் இரண்டு. அந்த இரு படங்களுமே வெள்ளிவிழாவைக் கடந்து வெற்றி நடைபோட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று படங்கள் 50 நாட்களைக் கடந்த ஓடியவை.
    அதன் விவரம் வருமாறு...
    #தங்கப்பதுமை 10:01:1959/ லட்சுமி/94 நாள்.( இந்தப்படம் மதுரையில் அரங்கம் மாற்றி அரங்கம் இணைந்து வெள்ளிவிழா ஓடியது குறிப்பிடத்தக்கது)
    #நான்சொல்லும்ரகசியம்/07:03:1959/ஸ்ரீதேவி/64 நாள்
    #வீரபாண்டியகட்டபொம்மன்/16:05:1959/நியூசினிமா/181 நாள்
    #மரகதம்/21:08:1959/தங்கம்/67நாள்
    #பாகப்பிரிவினை/31:10:1959/சிந்தாமணி/216 நாள்

    தமிழ் சினிமாவில் முதல் #டெக்னிகலர் திரைப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் தென்னிந்தியாவிலேயே வெள்ளிவிழா ஓடிய முதல்படமாகும். பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு.
    சரவணா பிலிம்ஸ் தயாரிப்பான பாகப்பிரிவினை நடிகர்திலகம் நடித்து மதுரையில் அதிக நாள்கள் ஓடிய திரைப்படமாகும். இது மூன்று லட்ச ரூபாய்க்குமேல் வசூலித்த கருப்பு வெள்ளைப் படமாகும்.
    ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழாப்படங்கள் என்ற வரலாற்றுச் சாதனையை தியாகராஜ பாகவதற்குப்பின் நடிகர்திலகம் படைத்தது இந்த ஆண்டில்தான்.
    இவ்விரு படங்களைப் பற்றிய வசூல் சாதனைகள் நிழற்படத்தில் காண்க...



    Thanks Nilaa

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3798
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3799
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3800
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எம்ஜிஆர் இன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள நடிகர் திலகம் ரசிகர்களின் உதவியை நாடிய எழுத்தாளர் தமிழ்வாணன்,
    இந்தச் செய்தியை சுவைபட "மறக்க முடியாத திரைப்பட தயாரிப்பு அனுபவங்கள்" என்ற நூலில் திரு மின்னல்( உதுமான் முகையுதீன்) அவர்கள் எழுதி இருக்கிறார்,
    திரு மின்னல் அவர்கள் சினிமா துறையில் நிறைய அனுபவங்களை கொண்டவர்,

    'கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர், 'துணிவே துணை' என்று சிறுவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் ஊட்டிக் கொண்டிருந்தவர்,
    1970 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பார்ப்பதற்காக நான், தமிழ்வாணன் மற்றும் சிலர் சென்றிருந்தோம், வழியில் ஹாங்காங்கில் இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படக்குழுவினரும் தங்கியிருந்தனர், நாங்கள் சென்ற மறுநாள் எம்ஜிஆர் அங்கு வந்தார், அவரை சந்தித்துப் பேசலாம் என்று அவரது அறைக்கு தமிழ்வாணனை அழைத்துச் சென்றேன்,

    ' வாங்க, வாங்க என்று வரவேற்ற எம்ஜிஆர் பத்திரிக்கையாளர்களெல்லாம் எங்கே இவ்வளவு தூரம்?' என்று விசாரித்தார், ஜப்பான் செல்லும் விவரம் கூறினோம். இப்படி சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது , தமிழ்வாணன் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக , "நீங்கள் என்னைப் பற்றி 'தினமணிக் கதிரில் மோசமாக பதிலெழுதியிருக்கிறீர்களே, எதற்காக அப்படி எழுதினீர்கள்?" என்று கேட்டார், அந்த சமயம் தினமணி கதிரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு எம்ஜிஆர் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.
    ஓர் அன்பர் கேட்ட கேள்விகளுக்கு "தமிழ்வாணன் அவர்கள் நேரில் பழகுவதற்கு நல்லவர், பின்னால் பேசுவதில் வல்லவர்" என்று பதில் எழுதியிருந்தார்,
    இந்தப் பதிலால் தமிழ்வாணனுக்கு ஏற்பட்ட கோபத்தில், எம்ஜிஆரிடம் மேற்கண்டவாறு ஆத்திரத்தோடு கேட்டதும், எம்ஜியாருக்கு கோபம் உச்சிக்கு ஏறி விட்டது, சட்டென்று எழுந்த அவர், தமிழ்வாணனின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு அறைவதற்கு கையை ஓங்கி விட்டார், அருகிலிருந்த நானும் சித்ரா கிருஷ்ணசாமி என்பவரும் குறுக்கே விழுந்து இருவரையும் பிரித்து விட்டோம்.
    "ஒரு காரணமும் இல்லாமல், என்னை மலையாளி என்றும், வயதானவன் என்றும் மோசமான அரசியல்வாதி என்றும் பலவாறாக கீழ்த்தரமாக எழுதுகிறாய், நான் உன்னைப் பற்றி அப்படியொன்றும் கீழ்த்தரமாக எழுதவில்லையே" என்று சப்தம் போட்டார் எம்ஜிஆர்.
    சிறிது நேர சலசலப்புக்குப் பின் "நான் இதைப்பற்றி (அதாவது இந்த வன்முறை பற்றி ) எழுதப் போகிறேன் என்றார் தமிழ்வாணன்.
    " தாராளமாக எழுதலாம், நானும் எழுதப் போகிறேன்" என்றார் எம்ஜிஆர்.
    பின்னர் ஜப்பான் சென்றோம், தமிழ்வாணன் வீறாப்பாகப் பேசி விட்டாரே தவிர மனதுக்குள் ஒரு கிலி பிடித்துக்கொண்டது, ஊருக்குப் போனால் ஆள் வைத்து அடித்து விடுவாரோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டது, நீங்கள் போய் எம்ஜிஆரிடம் எப்படியாவது பேசி அவருடைய கோபத்தைப் போக்கி, சமாதானம் பண்ணி வையுங்கள்" என்று என்னைக் கேட்டுக் கொண்டார்,

    படப்பிடிப்பு முடிந்து மாலை வேளைகளில் எம்ஜிஆர் இந்தியன் பெவிலியனில் உள்ள கேண்டீனுக்கு டிபன் சாப்பிட வந்து விடுவார், நானும் அங்கு சென்று அவரிடம்.தமிழ்வாணன் விஷயத்தை பற்றி பேசியவுடன் எம்ஜிஆர் மிகவும் கோபப்பட்டதால் அந்தப் பேச்சை தொடரவில்லை,
    ஜப்பான், பயணத்தை முடித்துக்கொண்டு ஹாங்காங், பாங்காங், சிங்கப்பூர் வந்து சென்னை திரும்பினோம், ஒவ்வொரு நாட்டில் தங்கும் போதும், எம்ஜிஆர் தன்னை ஆள் வைத்து அடித்து விடுவார் என்பதைப் பற்றியே என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார் தமிழ்வாணன், நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவருடைய பயம் தெளியவில்லை.

    சென்னை வந்த பின்பும், தமிழ்வாணன் என்னை பலமுறை தொடர்பு கொண்டு இது குறித்தே பேசினார்.
    " நடிகர் திலகம் சிவாஜியிடம் போய் இதைச் சொல்லி, அவரது ரசிகர்களை எனக்கு பக்கபலமாக திருப்ப ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா " என்று கேட்டார், நான் இதுபற்றி நடிகர் திலகம் சிவாஜியை சந்தித்து ஹாங்காங்கில் நடந்த சம்பவத்தைச் சொல்லி, தமிழ்வாணனைப் பாதுகாக்க ஏதாவது செய்யலாமா என்று கேட்டேன், அவர் "இது அவர்கள் இருவருக்குமிடையேயான தனிப்பட்ட விஷயம், இதிலெல்லாம் நான் தலையிட மாட்டேன்" என்று சொல்லி விட்டார்,

    இருப்பினும் மறுநாள் நடிகர் திலகம் சிவாஜிக்கு நெருக்கமான பிரமுகர் மூலம் முயற்சி செய்தோம், ஆனாலும் அவர் திட்டவட்டமாக தலையிட முடியாது என மறுத்துவிட்டார்.



    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •