Page 370 of 400 FirstFirst ... 270320360368369370371372380 ... LastLast
Results 3,691 to 3,700 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3691
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3692
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3693
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3694
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தாய் இதழ்

    “சிவாஜி ஒரு சகாப்தம்”- பழ.நெடுமாறன்!
    https://www.thaaii.com/?p=38348

    “தமிழ்த் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகாலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சகாப்தமாகத் திகழ்ந்திருக்கிறது.
    1951 ஆம் ஆண்டில் ‘பராசக்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து திரையுலகில் ‘இமயம்’ என உயர்ந்து நின்றார்.
    அவரது ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்றவையாகத் திகழ்ந்தது. திரையுலகில் அவர் பதித்த முத்திரை என்றும் அழியாது.
    அவருக்குப் பின்னால் திரையுலகுக்கு வந்த இளம் நடிகர்கள் பலரின் நடிப்பிலும் சிவாஜியின் முத்திரை பதிவது இயல்பாயிற்று.
    அதிலிருந்து அவர்களால் விலகி நிற்க முடியவில்லை. நடிப்பாற்றல் மூலம், படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரின் உள்ளங்களிலும் அவர் அழியாத இடம் பெற்றார்.
    அறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்டு, தந்தை பெரியார் அவர்களால், சிவாஜி எனப் பாராட்டப்பெற்று, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அன்பிற்குரியவராக அவர் திகழ்ந்தார்.
    கலைஞர் கருணாநிதி அவர்களின் உணர்வுமிக்க உரையாடல்களுக்கு உயிர் ஊட்டியவர் நடிகர் திலகம். இந்த இருவரின் கூட்டு முயற்சி திரைக்காவியங்கள் பலவற்றை அளித்தது.
    தமிழ்த் திரையுலகனின் தன்னிகரற்ற கலைஞராக அவர் திகழ்ந்தார். தன்னுடைய நடிப்பாற்றலின் மூலம் தமிழக மக்களை மகிழச் செய்தார். கண் கலங்க வைத்தார்.
    அது வெறும் நடிப்பு தான் என்பதை மக்கள் உணர முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறி, மக்களையும் அவ்வாறே உணரச் செய்தார்.
    மக்கள் தன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து அதைத் திகட்டத் திகட்டத் தந்தவர் அவர்.
    இவ்வளவு சிறந்த கலைஞரை, ஒப்புயர்வற்ற நடிகரை தமிழ்த் திரையுலகம் இன்னும் நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தால், உலக மக்கள் பாராட்டும் அளவுக்குப் படங்களைத் தந்திருக்க முடியும்.
    ஆனாலும், அவரின் முழுமையான நடிப்பாற்றலை, திறமையை தமிழ்த் திரையுலகம் பூரணமாகப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் என் போன்றவர்களுக்கு உண்டு.
    இந்திய நாட்டில் கூட அவருடைய திறமையில் ஒரு பகுதி கூட இல்லாத நடிகர்கள், இந்திய அரசினாலும், மற்றவர்களினாலும் ஓகோ என்ற அளவுக்கு மீறிப் போற்றப்பட்டு இருக்கிறார்கள்.
    ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழனாகப் பிறந்துவிட்ட பாவத்தினால், பாராட்டப்பட வேண்டிய அளவுக்குப் பாராட்டப்படவில்லை. ஆனால் அரசுகள் செய்யத் தவறியதை மக்கள் செய்தார்கள்.
    சிவாஜி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்தபோது, தமிழகம் சோகத்தால் குலுங்கியது.
    அனைத்துத் தரப்பு மக்களும், படித்தவர்கள், பாமரர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி அணி அணியாக, மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த ஊர்ந்து சென்ற காட்சியும், அழுது புலம்பிய காட்சிகளும், அந்த மாமனிதருக்கு மக்கள் அளித்த மகத்தான விருதுகள் ஆகும்’’
    – 2001 ஜூன் மாதத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த போது, ‘தென் ஆசியச் செய்தி’ (01.08.2001) இதழில் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் எழுதிய சிறு கட்டுரை.
    #pazha_nedumaran #Actor_sivaji #sivaji_ganesan #கலைஞர்_கருணாநிதி #அரசியல் #தென்_ஆசியச்செய்தி #நடிகர்திலகம் #சிவாஜி #சினிமா #தமிழ்_திரையுலகம் #செவாலியர்_சிவாஜி #பழ_நெடுமாறன்

    Thanks mana mana

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3695
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3696
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3697
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று ஒட்டுமொத்த செய்தி ஊடகங்கள் அனைத்துமே கொரோனா கொடுமையையும் மறந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்லம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை பற்றியே விவாதம் செய்து முடித்தார்கள்,
    இது அரசியல் என்று யாரும் அவசரம் காட்டாதீர்கள்
    இந்த வேதா இல்லத்தின் இன்றைய மதிப்பீடு 100 கோடி என தோராயமாக மதிப்பிடுகிறார்கள்
    இந்த வேதா இல்ல இடத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய்க்குத்தான் அப்போது வாங்கினாராம்,

    அதே நாட்களில் தான் நடிகர் திலகம் அவர்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும் அளித்தார்,
    ஆனால் பாருங்கள் இன்று வரையிலும் கூட ஒரு கூட்டம் நடிகர் திலகம் உதவிகளை செய்யாதவர் என பொய் பிரச்சாரம் செய்து வருவதை நிறுத்தவே இல்லை,


    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3698
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்?"



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3699
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கடந்த ஆண்டு திண்டுக்கல் நகரில் பாகப்பிரிவினையின் 60 வது ஆண்டு பொன் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
    பொன் விழாவை பாகப்பிரிவினை 31-10-1959 அன்று ரிலீஸாகி 100 நாட்களை கொண்டாடிய திரையரங்குகளில் ஒன்றான திண்டுக்கல் nvgp திரையரங்கத்திலேயே கொண்டாடியது மிகவும் சிறப்பாககும்,

    இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை
    தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,

    1)காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் " படித்தால் மட்டும் போதுமா"
    2) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் "பாகப்பிரிவினை"
    3) பிற்பகல் 1:00 மணிக்கு ஜெயா மூவியில் "முதல் மரியாதை"
    4) பிற்பகல் 1:30க்கு ராஜ் டிஜிட்டலில் "மண்ணுக்குள் வைரம்"






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3700
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Ego ! சாதாரணர்களுக்கும் உண்டு இது..
    Image ! சாதனை புரிந்தவர்களுக்கு இயல்பாய் உருவாகும் விஷயம் இது.
    தனக்கு ஒரு இமேஜ் உருவாகி விட்டதென்று தவறாக அதனை தற்காத்து கொள்ள முனைந்தவரும் இருந்ததுண்டு தமிழ் திரை உலகில்......
    குன்றனைய புகழ் தனக்கிருந்தும் இருந்தும் சக கலைஞர்களுக்கு சம வாய்ப்பு தந்த இமயம் இருந்ததும் அதே தமிழ் திரை உலகில்தான்...
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி !
    கதைப்படி பள்ளிக்கூடம் அருகில் பொம்மை விற்று கொண்டே தங்கவேலு பாடும் பாடல்...
    நடிகரும் சரி, அவர் அந்த படத்தில் ஏற்றிருந்த பாத்திரமும் சரி, அந்த பாடலை பாட பொருத்தமே.....
    ஆனால் படத்தின் ஹீரோ வுக்கு அடங்கா சினம் பிறந்து விட்டது. ஆரூர் தாஸை அழைத்து இது போன்ற கருத்துக்களை கதாநாயகன் சொல்வதா, காமெடியன் சொல்வதா?
    பாடல் எழுதியவருக்குத்தான் தெரியவில்லை, உனக்கென்ன ஆனது?
    இதற்குத்தான் பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பது இல்லை என்று வெடித்தாராம்.
    பின் அவரும் அதே பாடலை தனியே இன்னொருமுறை பாடி படத்தில் இடம் பெற்றது.
    பாவம், அந்த நடிகருக்கு நினைவில்லை. இது போன்ற பாடல்களை திரை படங்களில் முதலில் பாடியவரே கலைவாணர் என்கிற காமெடியன் தான் என்று...
    அதே நடிகர்தான். கவிஞர் வாலியோடு போனார் அவர் நடிக்காத படம் ஒன்றின் பாடல் பதிவுக்கு.....
    பாடல் பதிவு செய்யப்பட்டது.
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ !
    நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ !
    பாடல் பதிவு முடியும் வரை நமது நடிகரிடம் பேச்சே இல்லை. பின், வாலியை அழைத்து கொண்டு காரில் செல்கிறார். நீண்ட மவுனத்திற்கு பின், வாலி ! மூன்று தமிழ் தோன்றியது மு. க. முத்து விடமா !
    மூவேந்தர் வழி வந்தவரா முத்து? என்று.....
    திகைத்து போன வாலி, என்னன்னே ! இது சாதாரண பாட்டு, நான் இதை விட நல்ல பாட்டெல்லாம் உங்களுக்கு எழுதியிருக்கிறேனே என்றார்.
    இந்த பாட்டை ஏன் எனக்கு தரவில்லை என்றே சினக்குறி காட்டினாராம் சின்னவர்...
    வாலியே எழுத்தில் சொன்ன செய்தி..
    ஆண்டவன் கட்டளை படம்.
    J.B. சந்திரபாபு காமெடியன்...
    ஆசை வார்த்தை காட்டு !
    கள்ள பார்வை பார்த்து
    காசை எடுத்து நீட்டு..
    உனக்கும் கூட ஒட்டு.... சிரிப்பு வருது சிரிப்பு வருது என்று சிரித்தார்...
    இன்றைய அரசியலை நையாண்டி செய்ய வேண்டியது நானா? ஒரு நகைசுவை நடிகனா? என்று காய்ந்தாரில்லை நடிகர் திலகம்..........
    இன்னொரு நடிகரை அவர் நடித்த படத்தில் மூன்று தமிழ் தோன்றியது உன்னிடம், மூவேந்தர் வழி வந்தவன் நீ என்று வர்ணித்ததையே பொறுக்க முடியாமல் போனது அவருக்கு...
    ஆனால் நம்மவர் எப்படி?
    அவர் நடித்த பச்சை விளக்கு ! அதிலே S.S.R ரும் நடிக்கிறார்...
    அவரை போற்றி ஒரு பாடல் ! அதுவும் எப்படியெல்லாம் !
    சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை...
    உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன்...
    அதே S.SR...சாந்தி படம்.....
    மானம் காக்க வேண்டும்....
    பெண்ணை மதித்து வாழ வேண்டும்.. என்று பாடுகிறார், நடிகர் திலகத்துடன் இணைந்து...
    கை கொடுத்த தெய்வம் படத்தில்
    மங்கல மேளம் கொட்டி முழங்கிட மணமகள் வந்தாள், தங்க தேரிலே என்றும் பாடல்...
    ஜெமினியோடு...
    அன்று ஊமை பெண்ணல்லோ !
    இன்று பேசும் பெண்ணல்லோ !
    பார்த்தால் பசி தீரும் படம் வந்த காலத்தில் மெகா ஹிட் பாடல் அந்த ஊமை பெண் பாடல்தான்..
    பொங்கவும் இல்லை, பொருமவும் இல்லை எங்கள் தங்க ராஜா...
    பறவைகளில் அவள் மணிப்புறா !
    பாடல்களில் அவள் தாலாட்டு ! பாவமன்னிப்பில் ஜெமினிக்கே இந்த சிறப்பு...
    ஜெமினி நீண்டநாள் நண்பர், சகோதரி சாவித்திரியின் கணவர் என்றெல்லாம் சொல்லலாம்..தன் படங்களில் அவருக்கு தரப்பட்ட இந்த சிறந்த பாடல்களுக்கு சப்பைக்கட்டுகளாக....
    முத்துராமன்....
    நெஞ்சிருக்கும் எங்களுக்கு, நாளை என்றும் வாழ்விற்கு
    வாழ்ந்தே தீருவோம் !
    O! எவ்வளவு சிறந்த பாடல்.... தன்னோடு சரி நிகர் சமானமாய் ஆட வைத்து...
    ஒரு பாடல் தானே, என்று எள்ளலாய் கேட்க தோன்றும்.
    இன்னொரு பாடலும் உண்டு அதே முத்து ராமனுக்கு..
    மகளை பிரிந்த தந்தையாக சிவாஜி...
    அதே மகள் காதலி முத்துராமனுக்கு... அவருக்கும் அந்த பிரிவு பொதுவே...
    இதயத்தில் பூட்டி வைத்தேன்.
    அதில் என்னையே காவல் வைத்தேன்
    அவள் கதவை உடைத்தாளே, தன் சிறகை விரித்தாளே....
    அதே படத்தில் மதுரா நகரில் தமிழ் சங்கம் பாடல்.....
    முத்துராமன் தனி நாயகனாக நடித்த படங்களில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்கு வழங்க பட்டதில்லை...
    ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்.
    ராஜ போகம் தர வந்தான்...
    அதே முத்து ராமனுக்கு தான் இந்த பாடலும்...
    பாலாஜி நடிகர் திலகத்தின் நண்பர்தான்.
    அந்த நட்பு ஆழ்ந்து வளர்ந்தது என்றால்....
    நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
    பழங்கால சின்னம்.
    பணிவான தெய்வம்... போன்ற படித்தால் மட்டும் போதுமா பாடல்கள்.
    மட்டுமா, ஊரை விட்டு ஓடி வந்த காதல்,
    இது உறவென்று எண்ணி வந்த காதல்.
    காவியத்தில் இல்லாத காதல்...
    உள்ளமெல்லாம் மிளகாயோ
    ஒவ்வொரு பேச்சுரைக்காயோ...

    அறிமுகம் ஆகி சில மாதங்கள் ஆன நிலையிலே ரவிச்சந்திரனுக்கு ஒருபாடல்..
    காத்திருந்த கண்களே !
    கதை அளந்த நெஞ்சமே !

    A.v.m.ராஜனுக்கும் இரு பாடல்கள்....
    கண்ணிரண்டும் மின்ன மின்ன
    காலிரண்டும் பின்ன பின்ன...
    கன்னி வேண்டுமா, கவிதை வேண்டுமா
    காதல் கவிதை சொல்லட்டுமா....
    இன்னும் சொல்லலாம்..... ஆனால் மிக நீண்ட பதிவாகி விட்டது ஏற்கனவே...
    என்ன செய்ய ! பொல்லாத மனிதர் நம் நடிகர் திலகம்....
    அவரை பற்றி சொல்ல துவங்கி விட்டாலே வளர்ந்துதான் போகின்றன பதிவுகள்...
    எவரையும் தாழ்த்தும் எண்ணமில்லை எனக்கு.
    நடந்தவைகளை எழுத்தில் இருப்பவைகளை சொன்னேன்...
    சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும்..... குற்றம் கடியாமல் குணத்தை மட்டும் கொள்க !!.
    எண்ணங்களை சொல்லுங்கள்..
    அன்புடன் Vino Mohan

    Thanks vijaya Raj Kumar fb
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •