Page 361 of 400 FirstFirst ... 261311351359360361362363371 ... LastLast
Results 3,601 to 3,610 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3601
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3602
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3603
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1984ஆம் ஆண்டு தினமணிகதிர் வார இதழில் அட்டை படமாக வந்த படம் இது.
    இந்த படத்தை கண்டவுடன் என் நினைவுக்கு வந்தவர் மனோரமா தான்......
    நடிகர் திலகம் மறைந்து விட்டார்.
    நினைவேந்தல் நிகச்சி நடை பெற்றது...
    அந்த நிகழ்ச்சியில் மனோரமா சொன்னது...
    அண்ணன் சிவாஜிக்கு கண்கள் மிக்க சக்தி வாய்ந்தது....அந்த பார்வை ! அதில் இருக்கும் கம்பீரம் !
    யாருக்காவது அந்த விழிகளை தானமாக கொடுத்திருக்கலாம்.... எப்படித்தான் மனம் வந்ததோ அந்த கண்களை எரிக்க?
    மனோரமாவின் அந்த ஆதங்கம் சரியென்றே அப்போது எனக்கு தோன்றியது....
    ஏன், இப்போதும் தான்....


    Thanks Vinomohan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3604
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
    இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புகழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,
    நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிக் கொண்ட சத்யா ஸ்டுடியோ, எம்ஜிஆர் கார்டன் என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..

    நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் பரப்பிய செய்தி மட்டும் உண்மையாக இருந்து இருந்தால் இன்றைய நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முன் வரிசையில் அன்னை இல்லம் இருந்து இருக்க வேண்டும்











    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3605
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகம் அவர்களுக்கு ஐரோப்பாவை சேர்ந்த பிரான்சு நாட்டின், சக்கரவர்த்தியாக இருந்த மாவீரன் நெப்போலியன் தோற்றுவித்த உயரிய சேவை விருதான செவாலியர் விருது நடிகர்திலகத்திற்கு நடிகர்களில் முதல் முதலாக வழங்கப்பட்டது. அதை முன்னிட்டு குமுதம் 01-09-94 இல் திரைபிரபலங்களிடம் பேட்டி கண்டது
    நன்றி :https://t.co/SBi3rfUYEb


    Thanks Raja Luxmi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3606
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3607
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3608
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3609
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3610
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பாகப் பிரிவினை - 1959
    பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
    அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.

    இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
    பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.

    ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.
    இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.
    பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
    பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.
    பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.
    வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.
    இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள்,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை,எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.
    முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும். சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.
    பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.
    வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?
    கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)
    இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.
    எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).
    சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.
    படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.
    1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?
    இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)
    இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.


    Thanks Gopalakrishnan Sundararaman
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •