Page 316 of 400 FirstFirst ... 216266306314315316317318326366 ... LastLast
Results 3,151 to 3,160 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3151
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    I, Dr.M.Davamani Christober, am the Principal of The American College, Madurai. I have been watching this group for the past many days. Great fan of Sivaji Ganesan from my childhood. The American college auditorium was opened by Sri Sivaji Ganesan, as he donates large amount. Happy to share this photo.



    Thanks..
    Dr.M.Davamani Christober (Nadigar thilkam sivaji Visirikal)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3152
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3153
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3154
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    காதல் படம் என்றாலே... நம் கண்ணுக்கு முன்னே வந்து நின்றது... அந்த பிரமாண்டமான, அழகான, அருமையான ‘வசந்தமாளிகை’.
    அழகாபுரி ஜமீன். அதில் இளைய மகன் ஆனந்த்... சிவாஜி. ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்பதுதான் அவரின் வாழ்க்கை. வாழ்க்கையை, அதன் போக்கில் விட்டிருப்பார். விமானப் பணிப்பெண் லதா... வாணிஸ்ரீ. சிவாஜியும் வாணிஸ்ரீயும் விமானத்தில்தான் சந்தித்திருப்பார்கள்.
    அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி என்றிருக்கிற பெரிய குடும்பத்தில், வாணிஸ்ரீயின் சம்பளம்தான் பலம். ஆனால் விமான வேலை என்று வீடு சொல்லுவதால், வேறு வேலைக்கு முயற்சி செய்வார். அங்கே, அவரைக் கற்பழிக்க முயலுவார் ராமதாஸ். பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சிவாஜி, வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவார். தன்னுடைய காரியதரிசியாகவும் வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்.
    தன்மானமும் சுயகெளரவமும் கொண்டிருக்கும் வாணிஸ்ரீக்கு அந்த அரண்மனையில் ஏகத்துக்கும் இடைஞ்சல். ஆனால் அப்போதெல்லாம் வேலைக்கார வி.எஸ்.ராகவன் தடுத்துவிடுவார். வேலையிலேயே இருக்கச் சொல்லுவார். சிவாஜிக்கு அம்மா உட்பட எவருமே பாசம் காட்டுவதில்லை. ஒருகட்டத்தில், குடித்துக்கொண்டே இருக்கிற சிவாஜிக்கு, வீட்டிலேயே அவமானம். ’இனி குடிக்கக்கூடாது’ என்று தடுக்க, பாட்டில்களை உடைக்க, பாட்டிலை எடுத்து வாணிஸ்ரீயின் மீது சிவாஜி வீச, வழிகிற ரத்தத்தைப் பிடித்து, ‘இதைக் குடிங்க. நல்ல போதையா இருக்கும்’ என்று சொல்ல... துக்கித்துவிக்கித்துப் போவார் சிவாஜி. அப்போது ஓர் ப்ளாஷ்பேக்.
    அம்மாவிடம் ஒட்டாமல், ஆயாவிடம் ஒட்டுதலாக இருக்கும் சிவாஜி... சின்னப்பையனாக இருக்கும்போது, தவறாகப் புரிந்துகொண்டு, சுட்டுக்கொல்லப்படுவார். அந்த ரத்தம், ஆயாம்மா இல்லாத தனிமை, அப்பா குடித்துக்கொண்டே இருக்கும் வெறுமை, இதையெல்லாம் பார்த்து குடியில் மூழ்கத் தொடங்கினேன் என்று சொல்லும் சிவாஜி, ‘இனி, குடிக்கமாட்டேன்’ என சத்தியம் செய்வார்.
    பிறகு மெல்ல மெல்ல இருவருக்கும் காதல் பூக்கும். தன் காதலிக்காக, மிகப்பெரிய வசந்தமாளிகை எழுப்புவார். காதலையும் சொல்லுவார். இந்தச் சமயத்தில் வாணிஸ்ரீக்கு திருட்டுப்பட்டம் கட்டி, அவரை அங்கிருந்து துரத்துவார்கள். உண்மையெல்லாம் தெரிந்து, நீ திருடியில்லை என்று நீருபணம் செய்துவிட்டேன் என்று சிவாஜி கெஞ்சுவார். ஆனால் தன்மானம்... மன்னிக்காது. சுயகெளரவம்... மனமிரங்காது.
    ஒருகட்டத்தில், சிவாஜிக்கு உடல்நலமில்லாமல் போகும். ‘தடக்கென்று குடியை நிறுத்துவதும் தப்பு. தினமும் மருந்து போல் பயன்படுத்துங்கள்’ என மருத்துவர் சொல்ல, சிவாஜி இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்’ என்று சொல்ல, இதைத் தெரிந்துக்கொண்டு வாணிஸ்ரீ வந்து, விஸ்கியைக் கொடுக்க, குடிக்க மறுப்பார். உடல்நலம் இன்னும் சீர்கெடும். ’இவர் நல்லா இருக்கணும்னா, நாம கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று வீடு பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள வாணிஸ்ரீ சம்மதிப்பார். மனம் நொந்து போன சிவாஜி, வாணிஸ்ரீயை ஒருமுறை பார்ப்பார். வீட்டுக்கு வருவார். விஷம் அருந்துவார். அங்கே கல்யாணம் தடைப்படும். வாணிஸ்ரீ சிவாஜியைக் காண ஓடோடி வருவார். மருத்துவத்தாலும் காதலாலும் பிழைத்த சிவாஜி, வாணிஸ்ரீயுடன் ‘வசந்தமாளிகை’யில் இல்லறத்தைத் தொடங்குவார் என்று படம் முடிய... சோகமும் ஆறுதலும் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.
    சிவாஜி, வாணிஸ்ரீ, பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சுகுமாரி, வி.எஸ்.ராகவன் என பலரும் நடித்திருந்த ‘வசந்தமாளிகை’ படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு தயாரித்திருந்தார். இயக்குநர் பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். தெலுங்கு ரீமேக் படமான இந்தப் படத்துக்கு, பாலமுருகன் வசனம். கே.வி.மகாதேவன் இசை. அத்தனைப் பாடல்களும் தேன். பாட்டெல்லாம் கண்ணதாசன்.
    1972ம் ஆண்டு, செப்டம்பார் மாதம் 26ம் தேதி, ரிலீசான ‘வசந்த மாளிகை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 100 நாள், 150 நாள், 200 நாள்... என வசூலில் சாதனை செய்தது.
    பணக்கார, ஏழை காதல்தான். அங்கே வில்லனாக, பிரச்சினையாக இருப்பதும் இதுதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, சுயகெளரவமும் தன்மானமும் காதலுக்கு முட்டுக்கட்டையாக, தடையாக இருப்பதைச் சொன்னதில் வித்தியாசம் பெறுகிறது ‘வசந்தமாளிகை’.
    ‘வேணாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. விருப்பம்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது’.
    ‘இதைத்தான் அவங்க பாசம்னு சொல்றாங்க. நீ மோசம்னு சொல்றே’.
    ‘உங்க அக்கா அகம்பாவம் பிடிச்சவ. வரமாட்டா. ஆனா உங்க அக்காகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்’.
    ‘இது இறந்து போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்தமாளிகை’... இப்படி படம் நெடுக, வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே போகும். வாணிஸ்ரீ பேசும் வசனங்களும் அப்படித்தான். அந்தக் காலத்தில் வாணிஸ்ரீக்காக நான்கைந்து தடவை படம் பார்த்தவர்கள் உண்டு. வாணிஸ்ரீ புடவைக்கட்டிலும் அவரின் கொண்டை ஸ்டைலிலும் ஈர்க்கப்பட்டு பெண்களே திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். நாகேஷ், ரமாபிரபா, வி.கே.ஆர் காமெடி கலகலக்கவைக்கும். இந்தப் படத்தில் வில்லன்களே இல்லை. அண்ணன், அம்மா வில்லத்தனம் செய்வார்கள். ஒருகட்டத்தில், தன்மானமே வில்லனாக விஸ்வரூபமெடுத்து நிற்கும்.
    சிவாஜியின் முக்கியமான படங்களில் ஒன்று இது. வாணிஸ்ரீக்கும்தான். ‘ஓ மானிட ஜாதியே’, ‘ஏன் ஏன் ஏன்...’, ‘குடிமகனே பெருங்குடிமகனே...’, ’கலைமகள் கைப்பொருளே...’, ‘மயக்கமென்ன..’, ‘இரண்டு மனம் வேண்டும்’, யாருக்காக இது யாருக்காக’ என்று எல்லாப் பாட்டுமே செம ஹிட்டு.
    ‘வசந்தமாளிகை’ உறுதியான அஸ்திவாரம் கொண்ட கோட்டை. காதல் கோட்டை. இன்னும் நூறு வருடங்களானாலும் சிவாஜியும் வாணிஸ்ரீயும் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ‘யாருக்காக’ ‘இரண்டுமனம் வேண்டும்’ என்றெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார்கள்.
    நன்றி! வி.ராம்ஜி
    இந்து தமிழ் திசை இணைய பகுதியிலிருந்து....

    Thanks Ganes Pandian
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகை வாணிஸ்ரீ அவர்கள் புரட்சி நடிகர் நடிப்பை பற்றியும், கொடை தன்மையையும் விவரிக்கும் காட்சி, பேட்டி.( முழுசாக பார்க்கவும்).நன்றி.

  7. #3156
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நன்றி மறந்த திரையுலகுக்கும்
    நன்மை செய்த நடிகர்திலகம்!



    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3157
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று 25-04-2020
    பிற்பகல் 1:30 க்கு
    வசந்த் தொலைக்காட்சியில்

    நான் பெற்ற செல்வம்,

    .................................................. ......................

    இன்று 25-04-2020, இரவு 7:30 க்கு
    வசந்த் தொலைக்காட்சியில் பாட்டும் பரதமும்

    .................................................. ....................

    இன்று மதியம் 1.30 க்கு நீதிபதி ராஜ் டிஜிட்டல் டிவியில்.

    .................................................. ..............................................


    இன்று 25/04/2020 பகல் 02.00 pm மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
    " தெனாலிராமன் " சிரிப்பு படத்தை கண்டு களியுங்கள். !!!
    இதில் சிவாஜி, ஜமுனா, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர் !!!
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3158
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஞாயிறும திங்களும்.
    நடிகர் திலகம் நடித்து வெளிவாரத திரைப்படம்.

    டோக்கியோவில் எடுக்கப் பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைக் கொண்ட ஞாயிறும் திங்களும் படம் திரைக்கு வராத படப்பட்டியலில் இணைந்து விட்டது. முழுவதும் முடிந்த நிலையில், இப்படத்தின் சில இறுதிக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவில்லை. தேவிகா ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக நடித்திருப்பார். இப்படத்தின் கதை தினமணிக் கதிர் இதழில் பிரசுரமாகியுள்ளது. ஞாயிறும் திங்களும் சேர்ந்தால் அமாவாசைதான் வரும். பெளர்ணமி போல் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டிய இப்படம், அமாவாசை போலாகிவிட்டது
    . நாயகனை (சிவாஜியை) காதலிக்கும் நாயகி (தேவிகா) ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனை. கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக நாயகி டோக்கியோ செல்கிறாள். அது சமயம் நாயகியின் பணக்கார தாய் (கே.பி.சுந்தராம்பாள்) ஏழை நாயகனை மகனாக ஸ்வீகாரம் எடுக்கிறாள். நாயகனுக்கும் தன்னை தத்து எடுப்பது நாயகியின் தாய் எனத் தெரியாது. டோக்கியோவிலிருந்து திரும்பிய நாயகி அனைத்தும் அறிந்து வேதனைப் படுகிறாள். வாழ்வை வெறுத்த நாயகி கிருத்துவ மதத் தொண்டுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள். இரு மலர்கள் படத்தில் பத்மினியை காதலித்த சிவாஜி விதி வசத்தால் கே.ஆர்.விஜயாவை மணப்பது போலவே, இந்தப் படத்திலும் தேவிகாவை காதலித்த சிவாஜி கே.ஆர். விஜயாவை மணக்கிறார். நாயகனின் தந்தையாக வி.கே.ராமசாமியும் நாயகனின் தங்கையை மணப்பவராக முத்துராமனும் நடித்தனர்



    Thanks ..R,Vijaya

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3159
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    படித்த உண்மை.... மீண்டும் சிவாஜி....
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்கள் நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்து இருக்கின்றன. ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச் சுற்றி உள்ள பலரும் 35 வயதை கடந்தவர்களே. ¶

    இவர்களில் பலர் இளையராஜா, ரஜினி, கமல் ரசிகர்கள், வெகு அபூர்வமாக மற்றவர்கள் அரட்டைகளில் இடம் பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் ரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள்.
    இப்போது நான் சொல்ல வருவது என்ன என்றால், கடந்த ஒரு மாதமாக இவர்களுக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன
    இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து.....முடங்கி..... வீட்டுக்குள் அமர்ந்திருக் கும் போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளை யும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம். ¶
    அதில் ஒன்றுதான் சிலர் நினைக்க மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும் தான். ¶
    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்து விட முடியாமல், சிவாஜி நம்மில் பலருக்குள் மீண்டும், உணர்வுப் பூர்வமாக அமர்ந்து விட்டார் என்பதை ஆணித்தரமாக மறுப்பதற்கில்லை. ¶
    Thanks to - SivajiGanesan ISR selvakumar.



    Thanks ..Jeyavelu Kandaswami

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3160
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று 25/04/2020 சன் லைப்ஃ டி.வி. யில் மாலை 04.00 p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். ¶
    " சித்ரா பௌர்ணமி " படத்தை கண்டு களியுங்கள். ¶
    இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •