Page 293 of 400 FirstFirst ... 193243283291292293294295303343393 ... LastLast
Results 2,921 to 2,930 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #2921
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தமிழ் நாட்டில் ஒரு திரைப் படத்திற்க்கான மிக உயர கட் அவுட் அமைக்கப்பட்டது நடிகர் திலகம் நடித்த வணங்கா முடி படத்திற் க்காகதான் வைக்கப்பட்டது.சென்னையில் பழம் பெரு ம் சித்ரா தியேட்டரில் தான் அது நடந்தது .சிவாஜிக்கான அந்த 80 அடி உயர கட் அவுட்டை உருவாக்கியவர் ஆர்ட்ஸ் மோகன்
    இதில் வணங்கா முடி தான் முதலில் என்றும் மகாதேவி தான் முதலில் கட் அவுட் வைத்தது என்றும் ஒரு சர்ச்சை வந்ததுண்டு
    வணங்காமுடி 12/4/1957ல் வந்தது
    மகாதேவி 22/11/57ல் வந்தது

    Thanks Vijaya Raj Kumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2922
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2923

  5. #2924
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பொக்கிஷம்

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2925
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஏழை மாணவர் இல்ல நிதிக்காக 2/2/75ல் சென்னை பல்கலை கழக மண்டபத்தில் சாம்ராட்அசோகன் நாடகம் ஓரங்க நாடகமாக முதன் முதலில் நடத்தப்பட்டது
    ஆக்கு சிங்கப்பூர் நேசனல் ஸ்டேட்டியத்திலும் நடத்தப்பட்டது.
    எம்ஜிஆர் முதல்வரான போது 1977ல் தமிழகத்தில் ஏற்ப்பட்ட புயல் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய சிவாஜி நாடகம் நடத்தி 1கோடியே 28லட்சம் ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்

    Thanks Vijaya Raj Kumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2926
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தாய்
    கதைச்சுருக்கம்
    மேஜர் சுந்தராஜன் சூதாடி +குடிகாரர்.மனைவி வரலட்சுமி.கணவனின் குடிப்பழக்கம் எந்த மனைவிக்கு பிடிக்கும்? குடிப்பழக்கத்தை நிறுத்த கண்டிப்புடன் சத்தியம் வாங்குகிறார்.
    அவர் அப்போது நிறைமாத கர்ப்பிணி.
    மீண்டும்
    சூதாட்டம் ஆடி,
    பிரச்சினை ஆக,
    போலீஸ் தேட,
    மனைவி கண்டிக்க,
    ஆத்திரம் மேஜருக்கு...
    மனைவியை அடிக்க,
    இறந்து விட்டதாக பயந்து,
    சகோதரியிடம் அடைக்கலம் ஆகிறார்
    மேஜர்.
    சிங்கப்பூரில் ...

    இறக்காத வரட்சுமி
    இட்லி கடை நடத்தி
    மகனையும், மகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்.
    அவருக்கு ஆதரவு கொடுப்பவர் வி.கே.ராமசாமி.
    மகனாக நடிகர்திலகம்.
    மகளாக குமாரி பத்மினி.
    தவறைக் கண்டால் தட்டிக்கேட்கும் சுபாவம், நேர்மையை எதிர்பார்ப்பதும், தாய்மையை போற்றுவதும் கொண்ட காரெக்டர் ஆனந்தன் (நடிகர்திலகம்) .
    பொழுது போக்குக்காக தாயம் விளையாடும் பழக்கம் உண்டு.

    சிங்கப்பூரில் இருந்து பெரும் பணக்காரராக மெட்ராஸ் வரும் மேஜர், தன் கடைசி காலத்தை நல்ல கிராமத்தில் கழிக்க விரும்பி வாடிப்பட்டி கிராமத்திற்கு வருகிறார்.ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் அவரிடம் தொடர்பு ஏற்படுகிறது ஆனந்தனுக்கு.ஆனந்தனின் நல்ல குணம் அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது.மேஜருக்கு ஒரு மருமகன். நம்பியார்.
    ஆகாத குணங்களே அவரின் பழக்க வழக்கங்கள்.
    வீகேஆரின் மகள் சிவகாமியாக ஜெயலலிதா.
    ஆனந்தனும் சிவகாமியும் அவர்களின் மனம் ஒத்த ஜோடிகள்.
    நம்பியாருக்கு சிவகாமியை மணமுடிக்க ஆசை.மேஜர் தன் மனைவியை கொன்ற விஷயமறிந்து அதை வைத்தே மிரட்டி மேஜரை வைத்து சிவகாமியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
    நிச்சயத்தின் போது சிவகாமி மேஜரிடம் தான் அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று சொல்ல, மேஜரும் உண்மையுணர்ந்து திரும்புகிறார்.
    ஆனந்தன் அவரைப் பார்க்க வீட்டிற்கு செல்கிறார்.அப்போது தன்தாயின் போட்டோவை அவர் அறையில் பார்த்து அதிர்ச்சியடைய, மேஜரும் நடந்ததைச் சொல்லி ஆனந்தப்படுகிறார்.
    பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதே இக் கதையின் கரு.

    நடிகர்திலகம்
    சாதாரண கிராமத்துக் கதை.பிரமாண்டம் இல்லை.ஆயினும் அவர் போதுமே.
    ஆரம்பமாகும் அறிமுக காட்சியில் தாயம் விளையாடுவது என்று சாதாரணமாக இருந்தாலும் காட்சி முடிவில் வயோதிகரை ஓட விட்டு தான் மட்டும் வண்டியில் செல்லும் மிராஸ்தார் உசிலைமணியிடம் மிரட்டி வாதம் செய்து வயோதிகரை வண்டியில் அமர்த்தி கூட்டி செல்ல வைப்பதில் நடிகர்திலகத்தின் நடிப்பு அச்சாணி.
    தாய் வரலட்சுமி மகனின் முரட்டுத்தனத்தை கண்டித்து உம்மென்று இருப்பதும் அவரும் பதிலுக்கு அவ்வாறே இருப்பதும் அதன்பின் சாப்பிட மறுக்கும் தாயை சமாதானம் செய்வதும் போன்ற காட்சியும் ரசனைதான்.
    முதலாளியாக வரும் செந்தாமரையின் பெண் மோகத்திற்கு சவுக்கடி கொடுப்பது போல் அமைந்த காட்சிகளில் நல்ல ருசிகரம்.
    குடித்து விட்டு ஆடும் மக்களின் குணங்களை தாயிடம் சொல்லும் காட்சிகளிலும் இயல்பான வசன நடைகளுக்கு தன் நடிப்பின் மூலம் நம்மை நல்ல ரசனைக்கு கொண்டு செல்கிறார்.
    தெரியாமல் குடித்து விட்டு சகுந்தலாவுடன் ஆடும் நடனத்தில், சகுந்தலாவின் வலது கையை மேல்தூக்கி இடது காலால் தரையை தட்டி ஒரு ஸ்டெப் போடும் நடன அசைவில் தூள் கிளப்புவார்.
    MRR வாசுவுடன் செய்யும் சண்டைக்காட்சியில் சினிமாத்தனங்கள் இல்லாத சண்டை அசைவுகள் நேரிடையான சண்டையை பார்ப்பது போலிருக்கும்.நடிகர்திலகத்தின் அடி உண்மை சண்டையை பார்ப்பது போலிருக்கும்.
    ஜெயலலிதாவுடனான ரொமான்ஸ் காட்சிகள் நல்ல காட்சிகளை விரும்புவர்கள் கூட ஏற்று அது ரசிக்கும்படி இருக்கும்.அவர் கொடுக்கும் லுக்குகள், அசைவுகள் வெகுவாக கவரும்.

    நம்பியார் திலகத்தை வம்புக்கு இழுக்கும் முதல் காட்சியில், அவமரியாதை செய்யும் நம்பியாரை பதிலுக்கு அவமரியாதை செய்யும் காட்சிகளில் வெகு இயல்புத்தனம்.அது படமாக்கப்பட்டது அன்னை இல்லம் என தெரிந்த அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் வெகுசுவாராஸ்யத்தை கூட்டும்.
    மேஜருடன் சந்திக்கும் முதல் காட்சியில் அவரின் காட்டும் பவ்யமான நடிப்பு பேச்சு நடிப்பு எல்லாம் ஒரு சாதாரண காட்சியை மேம்படுத்துகின்றன.
    அதைத் தொடர்ந்து வரும் கிளப் சண்டை அட்டகாசம் தான்.பயங்கர சுறுசுறுப்பு.சிறிது தவறினாலும் தன் மேல் விழும் அடி என்ற கோணங்களில் அவரின் மூவ்மெண்ட்கள் விழி விரிய வைக்கின்றன .மேடையில் இருந்து ஜன்னலுக்கு பின்பக்கமாக தாவும்அந்த குறிப்பிட்ட படு வேகமான ஷாட்டில் பிரமாதப்படுத்தியிருப்பார்.பத்துபட சண்டைக் காட்சியை அந்த ஒன்றில் பார்த்த நிறைவு நமக்கு. பாட்டில்ககளை எறிந்து அடிக்கும் அடிகளில் துல்லியம்.சமீபகால படம் ஒன்றின் பாட்டில் சண்டை காட்சிக்கும் இதுவே முன்னோடி.

    திருட்டு பழி விழும் நிலையில், மேஜரிடம்,
    "நான் என்னத்தையா பேசறது? இது உங்க
    பங்களா, நானோ அன்னியன் , பணம் வேற கையிலே! என்னத்தையா பேசறது "
    என்று பேசும் காட்சியில் கண்களில் அந்த உண்மையை காண்பித்து, வசனங்களில் வேறு வகையாக சொல்லி நடித்து சிலிர்ப்பூட்டுவார்.இந்த ஒரு காட்சி அமைப்பு வேறு படங்களில் அமைந்திருப்பதாக நினைவில்லை.

    'பாத்தாலும் பாத்தேண்டி மதராச பட்டணத்தை '
    பாடலில்,
    'தெருவெங்கும் பிராந்திக்கடை தொறந்திருக்காங்க, என்ற வரிகளுக்கு
    குடிகாரரர்களின் குணத்தை அந்த ஒரு ஸ்டெப்பில் காண்பிப்பாரே! அமர்க்களம் தான்.
    இரண்டு முட்டிகளை இணைத்து கால்களை அகற்றி கைகளை தூக்கி ஆடும் நடன அசைவுகள் வித்தியாசமான கற்பனை .

    கிராம பஞ்சாயத்து :
    தலைமை வகிக்கறதுக்கு ஒரு தகுதி வேண்டாம்,
    நித்ய குடிகாரன் மது விலக்கு மாநாட்டுக்கு தலைமை வகிச்சானாம்,
    பரம்பரை, பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு தெரிஞ்சவனெல்லாம் இன்னைக்கு விலாசமே இல்லாமே திரிஞ்சுகிட்டு இருக்கான்,
    அரசியல் கலந்த இது போன்ற வசனங்கள் இந்த காட்சியில் நடிகர்திலகம் பேசுவார்.
    விசிலடிப்போர்க்கு, கை தட்டுவோர்க்கு சரியான தீனி இந்த காட்சி.
    அக்கால அரசியலை சாடியது இக்காலத்துக்கும் பொருந்துவது பொருத்தம்.

    மேஜரை வரவேற்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் பாடலான
    "நாடாள வந்தாரு "பாடல் காமராஜரின் பெருமைகளை ஒரே பாடலில் வடித்திருப்பது அருமை.காங்கிரஸ் கட்சி ஏன் இதை பயன்படுத்துவதில்லை?

    "பாண்டிய நாட்டுச் சீமையிலே ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
    அது பாலுக்காக அழவில்லை
    படிப்புக்காக அழுததடி
    மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு மனதும் உடலும் துடித்ததடி
    வளரும் பிள்ளை தற்குறியானால் வாழ்வது எப்படி என்றதடி "
    என்ற வரிகளில் ஒரு சரித்திரத்தையே கண்முன் நிறுத்தும் பாடலாக அமைந்தது.
    கிராமிய இசையையும், வெஸ்டர்ன் மியூசிக்கையும் கலந்து பிரமாதப்படுத்தியிருப்பார் இசை மன்னர்.ஆடல், பாடல் அற்புதத்தில் ஒரு உற்சாகத் துள்ளலான பாடல்.இது போன்ற பாடல்களில் இசை மன்னரை விட யாரும் சிறப்பு சேர்த்ததில்லை.

    தங்கையின் காதல் தெரிந்து அது தெரியாதது போல் அவளை உசுப்பேற்றுவதும் போன்ற காட்சியில் நடிகர்திலகம் செய்யும் காமெடிகள் ரசனை.
    தாயை பழிக்கும் மேஜரிடம் கொந்தளிக்கும் நடிகர்திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு
    தாய் படத்தின் ஜீவன்.

    தாய் -
    நடிகர்திலகத்தின்
    எதார்த்த,
    உணர்ச்சி பூர்வமான,
    ஜீவனுள்ள,
    கண்ணியமான,
    ரசனையான,
    நடிப்பை தந்த படம்.
    நிறைவு...

    தாய் படத்தின் முழுப்படத்தை காண கீழே காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

    Thanks Senthilvel Sivaraj
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2927
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2928
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாளை (17/04/2020 ) - காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " கிரஹபிரவேசம் "
    இந்த படத்தில் நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
    படத்தை காண தவறாதீர்கள்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2929
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2930

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •