Page 21 of 400 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #201
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும் மீண்டும் வந்து எங்கள் திரியை குப்பையாக்கும் கோமாளி நடிகரின் ரசிகரே --நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் பிழைப்பு தேடி தமிழகம் வந்த நாடோடி அட்டை கத்தி நாயகன் ரசிகரே --இந்த தலைமுறை மக்கள் காரி துப்பி ஒதூக்கிய டிஜிட்டல் வெளியீட்டில் தோல்வியை மட்டுமே கண்ட மொக்கை திலகத்தின் விசுவாசியே --கதாநாயகன் அந்தஸ்து பெறவே பல ஆண்டுகள் காத்திருந்த உங்கள் நடிகரின் பெருமையை சில நாட்கள் முன்னாள் நம் கமல் அவர்களே பிக் பாஸ் நிறைவு நிகழ்ச்சியில் கேவலப்படுத்தியது உலகம் பரவியது --தமிழ் சமுதாயத்தின் பெருமைகளை திரை வாயிலாக உணர்த்திய ஒரே உலகப்புகழ் சிவாஜி தமிழரை உங்கள் நடிகருடன் ஒப்பிட கூட முடியாது --உயிரோடு இருக்கும் போடும் சிவாஜி படங்களிடம் மண்டியிட்டு தோல்வியடைந்த உங்கள் நடிகருக்கு இறந்த பின்பும் மறு வெளியீட்டு படங்கள் மூலம் மரண அடி கொடுக்கும் எங்கள் சிவாஜியின் புகழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது --உங்கள் நடிகரின் மறு வெளியீட்டு படங்களுக்கு ஆயுட்கால அவகாசம் தருகிறோம் முடிந்தால் எங்கள் சிவாஜியின் கர்ணன் மற்றும் வசந்த மாளிகை சாதனைகளை முறியடித்து காட்டுங்கள் பார்ப்போம் திராணி இருந்தால் --

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே ஒரு படம் தமிழகத்தின் குறைந்த பட்சம் 5 ஊர்களிலாவது 2 வாரம் ஓடட்டும் அதன் பிறகு எங்களுடன் போட்டி போடுங்கள் --இதை விட்டு விட்டு டப்பா தியேட்டரில் ரூபாய் 20 கட்டணத்தில் 3 நாள் 4 நாள் ஓடுவதை தம்பட்டம் அடித்து கொள்ளும் கீழ்த்தரமான ரசனை கொண்ட உங்களுக்கு கடைசி வரை கொடுப்பினை இந்த நிலை தான் --உங்கள் படத்தை மேல் தட்டு மக்களும் மற்றும் குடும்பம் குடும்பமாக எந்த காலத்திலும் பார்க்கும் நிலை வராது --ஏனெனில் உங்கள் நடிகரின் அந்த கால சண்டை காட்சிகளையும் காட்சி அமைப்பையும் இந்த தலைமுறை ரசிக்கவே முடியாது --புது புது டெக்னாலஜி வந்து பல புதுமைகளுடன் இன்றைய நடிகர்களின் சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது -- இதனாலே தான் இந்த தலைமுறை உங்களை வெறுத்துவிட்டது --ஆனால் சிவாஜி அவர்களின் படங்களை போல் நடிப்பு திறமையுடன் இது வரை எந்த நடிகரும் தோன்ற வில்லை --ஆதலால் இன்னும் 50 வருடங்கள் கழித்தும் சிவாஜி படங்கள் ஜெயிக்கும் --கேவலமான வார்த்தைகள் உபயோகிக்கும் அன்பர்களே எங்களுக்கும் அதை விட மோசமான வார்த்தைகள் பதிவிட முடியும் என்பதை உணருங்கள்

  4. #203
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  5. #204
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் சக்கரவர்த்தி உலக ஸ்டைல் திலகம் திரையுலக மன்மதன் எங்கள் அடங்கா தமிழன் சிவாஜியின் ராஜா சென்னை அகஸ்தியா திரை அரங்கை புனித படுத்த அக்டோபர் 11 முதல் வெற்றி பவனி --

  6. #205
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபு :பின்னாடி இருக்கும் படம், இவங்க சிஸ்டர் உஷா மங்கேஷ்கர், 1961இல் வரைஞ்சது.எந்தப்படத்தைப் பார்த்தும் இதை வரையலை. மனசுல இருக்கற படத்தை அப்படியே வரைஞ்சது.ராம்குமார் :மனசில இருக்கற படத்தை, பென்சில் ஸ்கெட்ச் போட்டு, அப்புறம் அதில் வாட்டர் கலர் பண்ணினது.கீழே அவங்க கையெழுத்தைப் போட்டு, 1961 ன்னு எழுதியிருப்பாங்க.பிரபு :எங்க வீட்டுக் கல்யாண விசேசங்களுக்கெல்லாம் இந்தப் படம்தான்..*********விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில், மங்கேஷ்கர் சகோதரிகளில் ஒருவரான இசைக்குயில் ஆஷா போஸ்லே அவர்களுடன் கலந்து கொண்டு உரையாடிய போது.ஆஷா அவர்கள் நடிகர்திலகம் மற்றும் அவரது குடும்பத்தினரோடு தங்கள் குடும்பம் கொண்டுள்ள அற்புதமான உறவைப்பற்றி விவரித்தபோது கண்கள் கலங்கின..

  7. #206
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    -
    தெய்வ மகன் பொன்விழாக் கொண்டாட்டம்

    தலைமுறைகள் மாறலாம். நாகரீகம் மாறலாம். மறு சுழற்சி காணலாம். கலையும் கலாசாரமும் மாறலாம். ஆனால் மாறாத ஒன்று இவ்வுலகில் உண்டென்றால் அது நடிகர் திலகமும் அவருடைய ரசிகர்களின் உணர்வு பூர்வமான அன்பும். ஆண்டுக்கு ஆண்டு அவருடைய பிறந்த நாள் அன்று அவரை வணங்க வரும் மக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். 2019ம் ஆண்டு இதற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.
    சிவாஜி ரசிகர்களுக்கு இவ்வாண்டு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்தது. வழக்கமாக அக்டோபர் 1 அன்று நடைபெறும் சிவாஜி பிரபு அறக்கட்டளையின் விழாவோடு மறுநாள், அக்டோபர் 2 அன்று நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் தெய்வமகன் திரைப்படத்தின் பொன்விழாவும் சேர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை இரு மடங்காக்கியது.
    2ம் தேதி மாலை சாரை சாரையாக ரசிகர்கள் சென்னை தியாகராயநகர் வாணி மகால் நோக்கி அணிவகுக்கத் தொடங்கினர். நண்பர்கள் ஒருவருக்கொருவர் அன்று காலை முதல் பரிமாறிக்கொண்ட கேள்வி, சாயங்காலம் நிகழ்ச்சிக்கு அனுமதிச்சீட்டு இருந்தால் எனக்கு ஒன்று தரமுடியுமா என்பதே. காவிய நாயகனின் காவியமல்லவா, ஆர்வம் பன்மடங்கு பெருகியதில் வியப்பில்லையன்றோ.
    நடிகர் திலகத்தின் மூத்த மகன், அவரைப்போன்றே நேரம் தவறாமைக்கு இலக்கணமாக விளங்கும் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள் வருகை புரிந்தார். மற்றும் இயக்குநர் ஏ.சி.டி. அவர்களின் புதல்வியார், படத்தில் நடித்த அன்றைய மாஸ்டர் இன்றைய மிஸ்டர் திரு ராஜ்குமார், திரு காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோர் விழாவிற்கு வந்து சிறப்பித்தனர்.
    திரைச்சீலை மேலேறத் தொடங்கவும் காதல் மலர்க்கூட்டம் ஒன்று பாடல் இசைக்குழுவால் வாசிக்கப்படவும் சரியாக இருந்தது. ஓரிரு வரிகள் வாசித்து முடித்தவுடன் திரையில் நடிகர் திலகம் என்ற பெயர் மலர, அரங்கமே அதிரும் வண்ணம் ரசிகர்களின் ஆரவாரம் பலத்த வரவேற்பை அளித்தது. தெய்வ மகன் டைட்டில் கார்ட் திரையில் விரிந்து கொண்டே போக, மூன்று சிவாஜிகளும் மூன்று விதமான போஸ்களில் திரையில் Freeze ஆகி ஒரே ஃப்ரேமில் மூவரும் ஒரே சமயத்தில் தோன்ற, விழாவின் தொடக்கமே ஆர்ப்பாட்டமாய் அமைந்து விட்டது. அன்றும் இன்றும் என்றும் உலக கலாரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தெய்வமகன் என்ற Punch வரியுடன் டைட்டில் கார்ட் Freeze ஆகியது.
    தொடர்ந்து இரு கரங்களையும் தன் தலைக்கு மேல் உயர்த்தி ரசிகர்களுக்கு வணக்கம் கூறி மேடையில் தோன்றினார் ஒ.ஜி.மகேந்திரா அவர்கள். மிக பலத்த கரகோஷத்துடன் அவரை வரவேற்றனர் ரசிகர்கள். இந்த விழாவிற்காக தான் ஆவலுடன் காத்திருந்ததாக குறிப்பிட்ட அவர், இப்படம் முதன் முறை பார்த்த அனுபவங்களை நினைவு கூர்ந்தார். எங்கள் சிவாஜி கணேசனுக்கு மட்டும் தான் வைத்த ஒவ்வொரு டைட்டிலும் பொருந்தும் என அவர் கூறியபோது அரங்கமே ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சியின் சாராம்சத்தை விளக்கிக் கூறிய மகேந்திரா அவர்கள், இவ்விழாவிற்கு உதவியவர்கள் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். நன்றி கூறுவது முக்கியம் அதை விட அதை எப்போது கூறுவது என்பது இன்னும் முக்கியம் என்று சொல்லி, ஆடியன்ஸ் முழுமையாக இருக்கும் போது நன்றியுரை சொல்வதே சிறந்தது என்று குறிப்பிட்டார். இந்த விழாவில் திரையிடுவதற்காக காட்சிகளைத் தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய சவால் என்றும் முடிந்த வரை எதையும் மிஸ் பண்ணாமல் தேர்ந்தெடுத்திருக்கிறோம் எனக்கூறினார்.
    நிகழ்ச்சியில் திரு பாலாஜி அவர்களின் ஆராதனா இசைக்குழுவின் பங்களிப்பும் மிகப் பெரியது எனக் குறிப்பிட்டு அவரையும் பாராட்டினார் மகேந்திரா அவர்கள்.
    தொடர்ந்து படத்தின் இயக்குநர் சார்பாக அவருடைய புதல்விக்கு, அன்புச் சகோதரர் திரு ராம்குமார் அவர்களின் கரங்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடிகர் திலகத்தின் சார்பாக திரு ராம்குமார் அவர்களுக்கு திரு ஒய்ஜி.எம். அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார்.
    தொடர்ந்து நிகழ்ச்சியின் தொடக்மாக இசைக்குழுவின் திரு கர்ணா அவர்கள், காதல் மலர்க்கூட்டம் ஒன்று பாடலைப் பாடினார். பின்னணியில் பாடல் காட்சியின் நிழற்படங்கள் திரையில் மலர்ந்து ரசிகர்களின் நெஞ்சைக் கவர்ந்து, நினைவுகளில் மூழ்கடித்தன.
    அதற்கடுத்து விழாவிற்கு வருகை புரிந்த திரு நம்பியார் அவர்களின் புதல்வர் திரு மோகன் அவர்களையும் படத்தில் சிறுவன் கண்ணனாக நடித்த ராஜ்குமார் அவர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் மகேந்திரா அவர்கள். இதைத் தொடர்ந்து காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் பாடலை, திரு கர்ணாவுடன் சேர்ந்து திருமதி ஜானகி பாடினார். பின்னணியில் இப்பாடல் காட்சியின் நிழற்படங்கள் திரையிடப்பட்டன.
    இப்பாடல் முடிவுற்ற பிறகு விழாவிற்கு வருகை தந்த, மெல்லிசை மன்னர் அவர்களின் மருமகன், திரு மோஹன் நாயர் அவர்களை அறிமுகப்படுத்தினார் மகேந்திரா அவர்கள்.
    இதைத் தொடர்ந்து படத்தின் காட்சிகளுக்கு விழா பயணத்தைத் துவங்கியது.
    முதல் கட்டமாக, தந்தை மகன் இருவருக்கிடையேயும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் உள்ள ஒற்றுமையை விளக்கினார் மகேந்திரா. உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது இருவரும் கை விரலை சுட்டிக்காட்டி ஆவோசமாக பேசுவதும் கால்களை உதைத்துக்கொள்வதும் எந்த அளவிற்கு இந்த பாத்திரங்களை நடிகர் திலகம் உருவகப்படுத்தியிருக்கிறார் என்று விளக்கினார். அது மட்டுமின்றி, இதே போன்று சிறுவன் கண்ணனாக நடித்த மாஸ்டர் ராஜ்குமார் அவர்கள் உணர்ச்சியின் மேலீட்டில் இருக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, வேறொரு படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் அங்கே வந்த நடிகர் திலகம், அதே உடல்மொழியை ராஜ்குமார் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து செய்யச் சொன்னதாகவும் மாஸ்டர் ராஜ்குமார் கூறிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். இதைச்சொன்னபோது அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் எழுந்தது ரசிகர்களின் ரசனையை உணர்த்தியது.
    தொடர்ந்து மாஸ்டர் ராஜ்குமார் அவர்களின் காட்சி திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு திரு ராஜ்குமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. திரு ராஜ்குமார் அவர்களும் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
    இக்காட்சியைத் தொடர்ந்து திரு சோலார் சாய் அவர்கள் கேட்டதும் கொடுப்பவனே பாடலைப் பாடி ரசிகர்களை நினைவில் மூழ்கச்செய்தார். இப்பாடலைப் பற்றிய சுவையான செய்தி ஒன்றை மகேந்திரா அவர்கள் பகிர்ந்து கொண்டார். இப்பாடலுக்கு வேறு விதமாக வரிகள் எழுதி இசையமைத்தார்களாம். பாடல் தத்துவங்களின் உச்சமாக விளங்கியதாம். கவியரசருக்கு ஏனோ இது மிகவும் இலக்கிய நடையில் இருப்பதாகத்தோன்றியதாம். எளிமைப்படுத்த வேண்டும் என விரும்பினாராம். ஆனால் மற்றவர்களோ பரவாயில்லை எனக் கூற, அப்போது அங்கே வந்த டீ சப்ளை செய்த ஒரு சிறுவனிடம் அந்த வரிகளை சொல்லிக்காட்டினாராம். அவன் பேந்தப் பேந்த விழிக்க, உடனே பாடலை புதியதாக எளித தமிழில் எழுதினாராம் கவியரசர். அதுதான் கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா என்று மலர்ந்து.
    இப்பாடல் இசைக்கப்பட்ட்போது, பின்னணியில் காட்சியின் நிழற்படங்கள் ரசிகர்களுக்கு அந்தக் காட்சியை நினைவூட்டின. குறிப்பாக ஒரு சிறுவன் வாயில் விரலைச் சூப்பியவாறு ஏக்கத்துடன் பார்க்கும் நிழற்படத்திற்கு அரங்கில் அனைவருமே பலத்த கரகோஷத்தை எழுப்பியது எந்த அளவிற்கு சிவாஜி ரசிகர்கள் மற்றவர்களின் திறமையையும் பாராட்டக்கூடியவர்கள் என்பதற்கு அத்தாட்சியாய் அமைந்தது.
    இப்பாடல் முடிவுற்றதும் பாடகருக்கு மிகப் பெரிய பாராட்டை அளித்தனர் பார்வையாளர்கள். மகேந்திரா அவர்கள் மெல்லிசை மன்னரை உணர்ச்சிப் பெருக்குடன் பாராட்டியது நெகிழ்ச்சியூட்டியது.
    தொடர்ந்து கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னர் நட்பின் மகத்துவத்தை விளக்கிய மகேந்திரா அவர்கள், திரு காந்தி கண்ணதாசன் மற்றும் திரு மோகன் நாயர் இருவருக்கும், ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே நினைவுப் பரிசு வழங்கினார். திரு காந்தி கண்ணதாசன் அவர்களும் திரு மோகன் நம்பியார் அவர்களும் நடிகர் திலகத்தின் மேல் தங்கள் அனைவருக்கும் உள்ள அபரிமிதமான அன்பை சொல்லி நெகிழ்ந்தனர்.
    இதற்குப் பிறகு நடிகர் திலகத்தின் எளிமையைப் பறைசாற்றும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார் திரு மகேந்திரா அவர்கள். ஒரு முறை வெள்ள நிவாரண நிதிக்காக தமிழகம் முழுதும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கலைஞர்கள் ஒன்றாக பயணம் செய்து விழா நடத்தி வசூல் செய்து அரசிற்கு ரூ 2 கோடிக்கு மேல் அளித்தார்கள். அந்த விழாவில் அத்தனை பேரும் ரயிலில் 2ம் வகுப்பில் தான் பயணம் செய்யவேண்டும் என நடிகர் திலகம் சொல்லி அரசாங்கத்தின் செலவை எந்த அளவிற்கு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து தானும் விழா முடிந்து ஊர் திரும்பும் வரை அவர்களுடனே பயணம் செய்ததையும் சொல்லி முடித்த போது ரசிகர்களின் கைதட்டல் அடங்க வெகுநேரமானது.
    இதற்குப் பிறகு படத்தில் நடிகர் திலகம் நடித்த விஜய் பாத்திரத்தை மிகவும் சிலாகித்தார் திரு மகேந்திரா அவர்கள். மூன்றிலும் மிகவும் கஷ்டமானது அந்த பாத்திரம் தான் என்றும் அப்பாத்திரத்தின் மேனரிஸத்தை இயக்குநர் திரு ஸ்ரீதர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டதாகவும் நடிகர் திலகம் சொன்னதாக திரு மகேந்திரா அவர்கள் குறிப்பிட்ட போது மீண்டும் கைதட்டல் ஆரவாரம்.
    பணக்கார, படித்த திமிர் உடைய வாலிபனாக விஜய் கேரக்டரை மிகச் சிறப்பாக நடிகர் திலகம் வடிவமைத்திருப்பார் எனக் கூறிய மகேந்திரா அவர்கள், அதைத்தொடர்ந்து, தன் தாயாரிடமும் தந்தையிடமும் பணம் கேட்கும் காட்சியைத் திரையிட்டார். அமர்க்களமான இந்தக்காட்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக தந்தை சிவாஜி விஜயை, நெளியாதே வளையாதே என்றெல்லாம் கூறும் போது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. குறிப்பாக விஜயை சிரிக்காதே என சொல்லி விட்டு, தந்தை அந்தப் பக்கம் திரும்பி தானே சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பது பார்வையாளர்களின் கரகோஷத்தை அதிகப்படுத்தியது.
    இதைத் தொடர்ந்து திரு நாகேஷ் அவர்கள் அன்புள்ள நண்பரே பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். பின்னணியில் அப்பாடல் காட்சியின் நிழற்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இளமை அழகோடும் ஸ்டைலாகவும் இப்பாடல் காட்சியின் நடிகர் திலகத்தின் போஸ்கள் ரசிகர்களை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தின.
    தொடர்ந்து திரு எம்.என்.நம்பியார் அவர்களைப் பற்றிப் பேசினார் மகேந்திரா அவர்கள். திரு எம்.என்.நம்பியார் அவர்கள் பல்வேறு விதமான பாத்திரங்களோடு அதிக படங்களில் நடித்தது நடிகர் திலகத்துடன் தான் என்பதையும் கூறியபோது மீண்டும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. தொடர்ந்து விஜய் நம்பியார் காட்சி திரையிடப்பட்டது. காட்சி முடிந்த பின்னர், திரு நம்பியார் அவர்களின் புதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
    அடுத்த காட்சிக்குப் போவதற்கு முன், திரு சுனில் தத் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியதை நினைவு கூர்ந்தார் மகேந்திரா அவர்கள். பின்னர் விஜய் கண்ணன் இருவரும் சந்திக்கும் காட்சியைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் அதைத் தொடர்ந்து பங்களாவில் கண்ணன் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே வருவதும், விஜயின் அறைக்குள் வரும் போது விஜய் பார்த்து விட்டு சன்னமான குரலில் லேசான பயத்துடன் குரல் எழும்பாமல் கூக்குரலிடுவதுமான காட்சி திரையிடப்பட்டது. இதே காட்சியில் கண்ணனின் குரலில் சற்றே கம்பீரத்தைக் கொண்டு வந்து வாய்ஸ் மாடுலேஷன் மூலமாக பாத்திரங்களை வேறுபடுத்தும் நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்து கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
    இதைத் தொடர்ந்து திரு நாகேஷ் அவர்கள் தெய்வமே பாடலைப் பாட ஆரம்பிக்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பாடலை மிகவும் அருமையாக பாடினார் திரு நாகேஷ். பின்னணியில் பாடல் காட்சியின் நிழற்படங்கள் எதுவும் இடம் பெறவில்லை. பாடல் முடிவுற்றதும் இதைக் குறிப்பிட்டுக் கூறிய மகேந்திரா அவர்கள் அதற்கான காரணத்தைக் கூறியபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. ஒவ்வொரு டான்ஸிலும் உள்ள நுணுக்கங்களை கவனித்து அதைத் தன் பாடல் காட்சியில் கொண்டு வருவார் நடிகர் திலகம். இதைத் தொடர்ந்து மஹாபெரியவர் தொடர்பான செய்தியையும் நினைவு கூர்ந்தார் மகேந்திரா அவர்கள். மேலும் திரு டி.எம்.எஸ். அவர்களையும் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டினார்.
    ரசிகர்களின் விருப்பத்தை உணர்ந்து அதைப் பூர்த்தி செய்யும் வகையில் அப்பாடல் காட்சி முழுவதும் திரையிடப்பட்டது. பாடல் முடிவில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அடங்க வெகுநேரமானது. பாடல் காட்சியின் ஊடே நடிகர் திலகத்தின் உடல்மொழியை மகேந்திரா அவர்கள் சிலாகித்துப் பாராட்டினார்.
    பாடல் முடிவுற்றதும் மீண்டும் இப்பாடல் காட்சியைப் பற்றிக் கூறிய மகேந்திரா அவர்கள், அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் என்ற வரியின் போது நடிகர் திலகம் காட்டிய முகபாவத்தை வெகுவாக பாராட்டியபோது மீண்டும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.
    இதற்கடுத்து, சீர்காழி பாடிய கண்களால் பேசுதம்மா பாடல் காட்சியைப் பற்றிக் கூறினார் மகேந்திரா. முதலில் இந்தக் காட்சி எடுக்கப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பிறகு இங்கே ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்பியதாகவும் அதற்கேற்ப கடைசி நேரத்தில் சீர்காழியார் பாட கவியரசர் எழுதிக்கொடுத்த பாடலை மன்னர் இசையமைத்தார் என்ற தகவலைச் சொன்னார். இதைத் தொடர்ந்து திரு சோலார் சாய் அவர்கள் இப்பாடலைப் பாட பின்னணியில் இப்பாடல் காட்சி திரையிடப்பட்டது.
    பாடலின் முடிவில் ரசிகர்கள் அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாய் மாறி பலத்த கரகோஷத்துடன் தங்கள் பாராட்டைத் தெரிவித்தினர். பலர் Once More கேட்டது எந்த அளவிற்கு இதில் அவர்கள் Involve ஆகியிருந்தனர் என்பதை உணர்த்தியது. நெகிழ்வூட்டும் வண்ணம் பாடிய திரு சோலார் சாய் அவர்களுக்கு அனைவர் சார்பாகவும் பாராட்டைத் தெரிவித்தார் மகேந்திரா அவர்கள்.
    இந்தக் காட்சியின் முடிவில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரு மகேந்திரா அவர்கள் தடுமாறி கண்களில் சொரியும் கண்ணீரை துடைத்தபோது, அவர் மட்டுமல்ல, அங்கே இருந்து ஒவ்வொரு கையும் கண்களைத் துடைத்தது வரலாற்றில் பொறிக்கவேண்டிய உன்னதமான உணர்வு பூர்வமான நிகழ்வாகும். இதை உலகிலேயே நடிகர் திலகம் அவர்களால் மட்டுமே சிருஷ்டிக்க முடியும்.
    இதைத் தொடர்ந்து விழாவிற்குக் காரணமானவர்களை கௌரவிக்க வேண்டும் எனக் கூறி அதற்கு அன்புச் சகோதர் திரு ராம்குமார் அவர்களை மேடைக்கு அழைத்தார். விழாவை ஏற்பாடு செய்த திரு அப்பாஸ் கார்த்திக், நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பு நிர்வாகிகள் திரு ராகவேந்திரா, திரு முரளி, திரு சிவாஜி ரவி, திரு ஜே.கே.ஆர்., ஆராதனா இசைக்குழு சார்பில் திரு பாலாஜி, மற்றும் பி.ஆர்.ஓ. திரு நிகில் முருகன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
    இதையடுத்து Ms. சுஜாதா அவர்கள் கூட்டத்திலே யார்தான் பாடலைப் பாட அரங்கமே உற்சாகத்தில் மிதந்தது. பின்னணியில் பாடல் காட்சியின் நிழற்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மெல்லிசை மன்னரின் துள்ளல் இசை அனைவரையும் ஆட்டம் போட வைத்ததில் வியப்பென்ன. பாடல் முடிவில் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களைப் பாராட்டிப் பேசினார் மகேந்திரா அவர்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த அத்தனை படங்களுமே ஜெயலலிதா அவர்களின் நடிப்புத் திறமையைப் பறைசாற்றியவை என அவர் கூறியபோது அரங்கம் முழுதும் அனைவருமே கைதட்டி ஆமோதித்தனர்.
    இதைத் தொடர்ந்து விஜயும் நிம்மியும் காதலை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சியும், விஜய் தன் காதலியுடன் தந்தையை சந்திக்கும் காட்சியும், பார்க்கில் நிம்மி சிதார் இசையைப் பற்றிக்கூற விஜய் அலுத்துக்கொள்ளும் காட்சியும் திரையிடப்பட்டு, ரசிகர்களின் ஆரவாரத்துடன் வரவேற்பைப் பெற்றன.
    இதற்குப் பிறகு படத்தின் ஹைலைட்டான காட்சிகளில் ஒன்றான, சங்கர் டாக்டர் ராஜுவின் வீட்டிற்கு வரும் காட்சி திரையிடப்பட்டது. மேஜர் படிக்கட்டுகளில் இறங்கி வருவதைத் தன் கண்களாலேயே நடிகர் திலகம் உணர்த்தியைதக் குறிப்பிட்ட போது, குறிப்பாக காட்சியின் முடிவில் மகனைக் காணவேண்டும் என்கிற துடிப்பும் அதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்க முற்படுவதுமாக நடிகர் திலகத்தின் நடிப்பில் அரங்கம் முழுதும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பின் உச்சத்திற்கு சென்றனர். இக்காட்சியின் முடிவில் படத்தின் வசனகர்த்தா திரு ஆரூர்தாஸ் அவர்களை மகேந்திரா அவர்கள் சிலாகித்து நினைவு கூர்ந்தார்.
    தொடர்ந்து க்ளைமாக்ஸில் விஜயை நம்பியார் கட்டிப்போட்ட காட்சியில் நடிகர் திலகம் வசனம் பேசும் ஸ்டைலை மிகவும் பாராட்டிப் பேசினார் மகேந்திரா அவர்கள். இக்காட்சி திரையிடப்பட போது ரசிகர்களும் அதை பலத்த கைதட்டலுடன் ஆமோதித்தனர்.
    இதையடுத்து NTFANS சார்பாக திரு ராகவேந்திராவும் திரு முரளியும், திரு ஒய்ஜி.மகேந்திரா அவர்களுக்கு நினைவுப் பரிசினை திரு ராம்குமார் அவர்களின் கரங்களால் வழங்கி நன்றியைத் தெரிவித்தனர்.
    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தந்தை இரு மகன்கள் சந்திக்கும் காட்சியைப் பற்றி விளக்கினார் மகேந்திரா அவர்கள். டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் நடிகர் திலகத்தின் அபிநய முத்திரைகளைப் பற்றி ஆய்வு செய்ததையும் எடுத்துக்கூறினார். பரத முனி அவர்கள் வகுத்த, நாட்டிய கலைஞருக்குத் தேவையான இலக்கணம் அப்படியே நடிகர் திலகத்திற்கு பொருந்தியிருப்பதாக பத்மா சுப்ரமணியம் கூறியதை எடுத்துச் சொல்லியபோது அரங்கம் முழுமையிலும் உள்ள அனைவரும் மெய்சிலிர்த்தனர் என்பது உண்மை.
    இந்த உன்னதமான காட்சியுடன் தெய்வமகன் படக்காட்சிகள் நிறைவடைந்து, நடிகர் திலகத்தின் மற்ற படங்களிலிருந்து சில பாடல்களை இசைக்குழுவினர் பாடினர். பொன்மகள் வந்தாள், பாடலைத் தொடர்ந்து யாரந்த நிலவு பாடலை முழுவதும் தன் விசிலிலேயே இசைத்து அசத்தினார் மகேந்திரா அவர்கள். அதைத் தொடர்ந்து கண்ணுக்கு குலமேது பாடலை ஜானகி தத்ரூபமாக பாடினார். இதற்குப் பிறகு வெளியாகாத ஞாயிறும் திங்களும் படத்திலிருருந்து மெல்லிசை மன்னர் இசையில் பட்டினும் மெல்லிய பெண்ணிது பாடலை அருமையாக பாடினர் சோலார் சாய் அவர்களும் சுஜாதா அவர்களும்.
    அதைத் தொடர்ந்து இறுதியாக ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலை இசைக்குழுவைச் சார்ந்த பாடகர்கள் அனைவரும் இணைந்து பாடினர். மிகவும் அருமையாக அமைந்து பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றது இப்பாடல்.
    நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம். இது போன்ற விழாக்களில் பிரத்யேகமான அம்சமாக, நடிகர் திலகத்தின் நடிப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தேர்ந்தெடுத்து அவை வெவ்வேறு படங்களில் எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை காட்சிகளின் மூலம் விளக்கும் கட்டம். இவ்விழாவில் நடிகர் திலகம் படத்தில் இறக்கும் காட்சியில் திருமதி பண்டரிபாய் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப் பற்றி விவரித்தார் திரு மகேந்திரா அவர்கள். இந்த அம்சத்தைக் குறிப்பிட்டு இதைப்பற்றி விளக்குமாறு ஐடியா கொடுத்த, தூத்துக்குடியைச் சார்ந்த மூத்த ரசிகர் திரு நடராஜன் அவர்களைப் பாராட்டினார் திரு மகேந்திரா அவர்கள். திரு நடராஜன் அவர்கள் பராசக்தி படத்தை முதல் நாள் திரையரங்கில் பார்த்தவர் என்பதைக் கூறியபோது அரங்கம் மொத்தமும் கைதட்டி பாராட்டினார்கள்.
    இதைத் தொடர்ந்து அந்த நாள், அன்னையின் ஆணை, கௌரவம் படங்களின் காட்சிகள் திரையிடப்பட்டன.
    காலங்களைக் கடந்து நிற்கும் உன்னதமான நடிகர் திலகத்தின் நினைவுகளில் அனைவரையும் மூழ்கச் செய்த இவ்விழாவின் இறுதியாக, பண்டரிபாய் மடியில் கண்ணன் உயிர் துறக்கும் தெய்வமகன் படக்காட்சியுடன் விழா முடிவடைந்து வணக்கம் திரையில் தோன்றியபோது அந்த எழுத்துக்களை எத்தனை பேர் தெளிவாகப் பார்த்திருப்பர் என்பதை யாராலும் கூற முடியாது. காரணம்.
    கலையுலக சிரஞ்சீவி நடிகர் திலகம் அத்தனை பேர் மனதிலும் நீக்கமற நிறைந்து நினைத்தாலே நெகிழும் வண்ணம் கண்களில் நீர் சொரியச் செய்யும் அற்புதம், அன்றைய விழா முடிவில் அனைவருக்குள்ளும் மீண்டும் நிகழ்ந்ததே. உணர்ச்சிப் பிழம்பாக மக்கள் வெளியேறுவது அவர் வாழ்ந்த காலத்தில் அவர் படங்களில் மட்டுமல்ல, அவர் இல்லாத போது நடைபெறும் இது போன்ற நிஜங்களிலும் தான்.
    நெகிழ்வூட்டும் உன்னதம் உலகத்தில் ஒன்று உண்டென்றால் அது தெய்வமகன் சிவாஜி மட்டும் தான்.
    ..... வீயார்



    நன்றி வீயார்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #207
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எம் தலைவரின் செண்டிமென்டை பற்றி பேசும் நாதாரிகளே,ஊடகங்களே!இதை கேட்டுக்கோங்க!
    எம் தலைவர் சிவாஜியின் செண்டிமென்ட்:
    நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!
    1952... நாங்கள் அறிந்த குடும்பம் இன்று வரை கோவில்! அன்றும்-இன்றும் -என்றும் ரசிகர்களை குடும்பமாய் வாழவைக்கின்றர்.வாரி வழங்கும் குடும்பம் எம் தலைவரின் குடும்பம்,ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு எங்கள் அன்னை இல்லம்.வளர்ந்து வரும் எங்கள் அன்னை இல்லத்து வாரிசுகள் அவர்களும் சாதனை கொடியை நாட்டுவார்கள்,வருவோர்க்கு அன்னமிட்டு வாழ்பவர்கள் எங்கள் அன்னை இல்லம்.இன்று பல கட்சிகள் அங்கீகாரம் பெற்றிருப்பது எம்தலைவர் சிவாஜியால்! இன்று பல எம்.எல்.ஏ க்கள்,எம்.பி.க்கள் உருவானது எம் தலைவர் சிவாஜியால் தான்! அவரால் வாழ்ந்தவர்களுக்கு அவரை பற்றி பேச பாவம் நேரமில்லை!மூடர்களே அதனால் தலைவரை பற்றி பார்த்து பேசுங்க!பேசுறப்ப வாய் வலிக்குமேதான் நாங்க வருத்தப்படுறோம்.
    அ.தி.மு.க செண்டிமென்ட்:
    இதுல உள்ள யாருக்குமே குடும்பமோ வாரிசோ இருக்காதுங்க!1987 ல் இருந்து செம ராசிங்க பாவம் பல குரூப்பா பிரிஞ்சு தொங்குறாங்க !இவங்க நடிகர்திலகத்தை பற்றி பேசுறாங்க! இவ்வளவு பேசுறாங்களே அவங்க தலைவருக்கு நூற்றாண்டு விழா அறிவிப்பு! வரிசையாய் பார்ப்போம்! 1)ஜெயலலிதா மரணம்2)சசிகலா சிறைவாசம் 3)ஓ.பி.எஸ் பதவி இழப்பு 4)தினகரன் சிறைவாசம் 5)ஈ.பி.எஸ் பதவியோ அந்தரத்தில் நூல் இழையில் இருக்கிறது இப்பவோ அப்பவோ!....அதுமட்டுமா எம்.ஜி.ஆர் இறப்புக்கு பிறகு இரு அணியாம்!இப்ப ஜெயலலிதா இறப்புக்கு பின்னாடி நாலு அணியாம் ...இப்படி பட்ட நீங்க சிவாஜிய பற்றி பேசவே கூடாது...இந்த ஊர்வம்பு ,செண்டிமென்ட் போடுற ஊடங்களே! இதையும் கொஞ்சம் போடுங்களேன்..இல்லனா விபரீதம் ஏதாவது ஏற்பட்டுறப்போது...நம்ம தலைவர் சிவாஜியின் ரசிகர்களே! உங்க கண்டனத்தையும் பதிவிடுங்க! தலைவரை பத்தி இப்படி பேசுறத வேடிக்கை பார்க்காதீங்க!பழக்கடை ராஜா,திருச்சி மாவட்ட
    சிவாஜி மன்றம்.




    நன்றி Rajafruits
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #208
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பனிப்பூக்கள் வலையிலிருந்து..... 7-10-19ன் தொடர்ச்சி...


    ஒரே ஆண்டில் அவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வெளியானதைப் பற்றி அறிவோம். ஆனால் காலை, மாலை இரவு என மூன்று முரண்பட்ட கதாபாத்திரங்களில், மூன்று வேளையும் நடித்தவர். காலை 8 முதல் 1 மணி வரை கர்ணன், 2 மணி முதல் 6 வரை பச்சை விளக்கு இரவு 9 மணிக்கு மேல் ஆண்டவன் கட்டளை என்ற படங்களில் நடித்தாலும் மூன்றுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. அந்த மூன்று பாத்திரங்களில் வேறுபாட்டை நினைத்துப் பாருங்கள். வீரமான பாத்திரம் ஒன்று; குடும்பச் சிக்...கல்களை எதிர் நோக்கும் சமூகப் பாத்திரம் ஒன்று; எல்லாவற்றையும் வெறுத்துத் தேடல் கொண்ட பாத்திரம் ஒன்று. ஒவ்வொன்றிலும் எத்தனை வீச்சு!
    அது மட்டுமல்லாமல் ஏழு முறை, ஒரே நாளில் அவரது இரண்டு படங்கள் வெளியாகி இருக்கிறது! ‘சொர்க்கம் – எங்கிருந்தோ வந்தாள்’ ; ‘ஊட்டி வரை உறவு – இரு மலர்கள்’ என வசூல் சாதனைப் படங்களும் அதில் அடங்கும். ஒரு சமயத்தில் சென்னையில் மட்டும் அவரது 20 படங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
    திரிசூலம் திரைப்படம் மூன்று திரையரங்குகளில், நூறு நாட்கள், ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் என ஹௌஸ் ஃபுல்லாக ஓடியது. அவரது படங்களில் 120 படங்கள் நூறு நாட்களைத் தாண்டியவை. 20 படங்கள் வெள்ளி விழாப் படங்கள்.
    லூயிஸ் மாலே என்ற பிரெஞ்சு ஆவணப் பட இயக்குனர் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் ‘ஃபாண்டம் இந்தியா’ என்ற படம் இயக்க இந்தியா வந்திருந்த போது, இந்தியத் திரையுலகை, குறிப்பாகத் தமிழ்த் திரையுலகைக் கண்டு வியந்து போய் அவற்றைத் தனது ஆவணப் படத்தில் பதிவு செய்துள்ளார்.
    சராசரியான மக்களைக் கொண்ட நாட்டில், பல வித ஒப்பனைகள் புனைந்து வரும் திரையுலகினர் எப்படி ஏற்றுக் கொள்ளப் படுகின்றனர் என்பதைப் பற்றியும் வியந்துள்ளார். அறுபதுகளில் வந்த தில்லானா மோகனாம்பாள் படப்பதிவின் தளத்துக்குச் சென்ற அவர், சிவாஜியின் நடிப்பை ‘ஜான் பால் பெல்மாண்டோ’ என்ற நடிகருடன் ஒப்பிட்டுள்ளார். (அறுபதுகளில் ஜான் பால் பெல்மாண்டோ செய்ததை சிவாஜி 52ல் செய்து ள்ளார்). மேலும் சிவாஜியை ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து அபரிமிதமாகச் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    நன்றி Palaniapppan Subbu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #209
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இருமலர்கள்
    1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர்
    இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    ... கல்லூரி நாட்களில் தான் காதலித்த பத்மினியை திருமணம் செய்து கொள்ள முடியாத சூழலில் தன் முறைப் பெண் கே.ஆர்.விஜயாவை மண முடிக்கிறார் சிவாஜி. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அந்த குழந்தை பள்ளி செல்லும் போது அவள் படிக்கும் பள்ளிக்கே ஆசிரியையாக பழைய காதலி வருகிறார். இந்த சூழலில் ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு நடக்கிறது. இந்த காட்சியில் நடிகர் திலகமும் நாட்டிய பேரொளியும் பார்பவர்களை கலங்கடித்து விடுவார்கள். இந்த சூழ்நிலைக்கேற்ற ஒரு அருமையான பாடல் சோகமாக அங்கே ஒலிக்கிறது. நம் மனமும் கலங்கியது. பின்னனி குரல் கொடுத்து இந்த காட்சிக்கு மேலும் சுவையூட்டியவர்கள் இசையரசியும் ஏழிசை வேந்தரும். தமிழ் திரையுலகில் மிகவும் அருமையான இசை ஜோடி இவர்கள்.
    மன்னிக்க வேண்டுகிறேன் ஆசையைத் தூண்டிவிட்டேன் (சோகம்)
    படம் : இருமலர்கள் (01.11.1967)
    பாடியவர்கள் : டி .எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
    இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர் : வாலிபக்கவிஞர் வாலி
    நடிப்பு : நடிகர்திலகம் - பத்மினி
    இயக்கம் : ஏ.சி.திருலோகசந்தர்
    தயாரிப்பு : மணிஜே சினி புரடக்க்ஷன்ஸ்
    மன்னிக்க வேண்டுகிறேன்
    உந்தன் ஆசையைத் தூண்டி விட்டேன்
    என்னைச சிந்திக்க வேண்டுகிறேன்
    கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
    நான் கொடுத்து துடிதுடித்த
    மனதை என்னிடமே தருக..
    நீ கொடுத்த நினைவனைத்தும்
    திரும்ப உன்னிடமே பெறுக..
    அன்பு வைத்த பாவம்,,..
    யாரை விட்டுப் போகும்..
    நாள் முழுக்க நான் அலைந்து
    தேடும் நிம்மதியே வருக..
    மன்னிக்க வேண்டுகிறேன்
    உந்தன் ஆசையைத் தூண்டி விட்டேன்
    என்னைச் சிந்திக்க வேண்டுகிறேன்
    கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
    மன்னிக்க வேண்டுகிறேன்..



    நன்றி பத்மா பாலு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #210
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று 09/10/2019 மதியம் 1.30 மணிக்கு ராஜ் டி.வி.யில்
    நடிகர்திலகத்தின் -
    " நீதிபதி " கண்டு மகிழுங்கள் ........................



    நன்றி Jeyavelu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •