Page 366 of 400 FirstFirst ... 266316356364365366367368376 ... LastLast
Results 3,651 to 3,660 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3651
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3652
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு..
    (தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)

    பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம் வட்டாரத்தில், அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன.
    "திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் .
    புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே !
    சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !..
    என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள்.
    சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்தைகள் இருக்கின்றன .ஆனால் திரையுலகம் கொண்டாடும் வாத்தியார் பற்றி தான் சந்தேகம் நிறைய இருக்கிறது. மனைவிகளின் எண்ணிக்கையை சொல்கிறார்களே தவிர ,சாட்சிக்கு ஒன்றுகூட இல்லை. சிவாஜி பற்றி ஆராய்வதற்கு முன் திரையுலக பிரகஸ்பதிகள் ,வாத்தியாரை முதலில் சோதிக்கட்டும்.அரசியலிலே கொள்கை ரீதியாக விமர்சிப்பதை யாரும் வரவேற்பார்கள். ஆனால் சிவாஜி பற்றி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தூற்றுதல் அதிகமாக இருக்கிறது .இன்னொரு ஏட்டிலே சிவாஜி சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதுகிறது.
    கன்னடத்து வலிப்பு நடிகனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதை பெருமையாக நினைத்து சிவாஜியை கேவலப்படுத்தி இருக்கிறது .இந்தப் போக்கு சரியில்லை .தேவையற்றதும் கூட.
    எந்தக் கலைஞனையும் மக்கள்தான் புறக்கணிக்க முடியுமே தவிர யாராலும் அழிக்க முடியாது .சுமார் 500 படங்களைத் தாண்டி பிரேம்நஸீர் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை பெருமையோடு கேரள மக்கள் பாராட்டுகிறார்கள் .50 வயதை தாண்டி அறுபதை நெருங்கும் ராமராவ் ,நாகேஸ்வரராவ் போன்றவர்களை ஆந்திரர்கள் பெருமையோடு ரசிக்கிறார்கள். கர்நாடகத்தில் ராஜ்குமார் வணங்கப்படுகிறார் .அதேபோல பம்பாயிலே அசோக்குமார் சாகும்வரை நடிக்க வேண்டும் என்று வரவேற்கிறார்கள்.வங்கத்திலே
    உத்தம்குமாருக்கு அந்த பெருமை இன்னும் இருக்கிறது. ரஷ்யாவில்
    பீட்டர் உஸ்டினோவ் -அமெரிக்காவில் மார்லன் பிராண்டோ ,எகிப்திலே
    ஹேமத் ஹமாதி...
    இப்படி எந்த நாட்டிலும் கலை தொண்டாற்றிய மாபெரும் கலைஞர்கள் ஒழிந்து போக வேண்டும் என்று யாரும் எழுதியது கிடையாது .
    தமிழகத்திலே தான் தமிழ் கலைஞனை மதிக்கிற எண்ணம் இல்லை. வேறு மொழி கலைஞர்களை தூக்கிவைத்துக்
    கொண்டாடுகிறோம்.
    மலையாளி -கன்னடர் என்று யார் யார் பின்னாலோ ரசிகர்களை இழுத்துக்கொண்டு போகும் எழுத்தாளர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள் .ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ,கேரளத்திலும் நம் தமிழர்களை வரவேற்கும் நல்லெண்ணமும் இல்லை!
    ஆனால் நாம் மட்டும் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
    தமிழ் நடிகர்களுக்கு என்று தனி சங்கம் உருவாகியிருக்கிறது .தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. விரைவிலேயே தமிழ் பத்திரிகையாளர் சங்கம் உருவாக இருக்கிறது .தமிழ் கலை காக்கப்படுவதோடு - தமிழ் கலைஞர்களை வளர்க்க நாம் பாடுபட வேண்டும் .அதை விட்டுவிட்டு சிவாஜி போன்ற நல்ல தமிழனை இழிவு படுத்துபவர்களை
    இந்த நாடு மன்னிக்கவே கூடாது.
    மதிக்கவே கூடாது.

    மதிஒளி
    01.11.79

    குறிப்பு:
    (...இந்த திரையுலகம் இந்த 2020லும் அப்படியே தானே இருக்கிறது.)
    நடிகர்திலகத்தின் வானாளவிய புகழ் மென்மேலும் வளர்வதைக் கண்டு பொறாமைப்படும் கூட்டம் அன்றுமுதல் இருக்கிறது.அவர்கள் செய்த சதி வேலைகள் கலையுலக சக்கரவர்த்தியான
    நடிகர்திலகத்திற்கு அதிகளவில் செய்யப்பட்டிருக்கிறது.
    நடிகர்திலகம் 45 வருடங்கள்.
    பின் இளையதிலகம் 1982ல் வந்தார் .
    அவரும் 25 வருடங்கள் முண்ணனி நாயகனாக.இப்போது விக்ரம் பிரபுவும்..
    என்ன இது! அன்னை இல்லமே இன்றளவும் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருப்பதா? என்று வயிற்றெரிச்சல் கூட்டம் பூதக் கண்ணாடி போட்டு ஏதாவது தவறுதெரிகிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. இளையதிலகத்தின் வளர்ச்சி, விக்ரம் பிரபுவின் வளர்ச்சியும் கண்டு பொறுப்பதில்லை அந்த வயிற்றெரிச்சல் கூட்டம்.இந்த கூட்டத்திற்கு
    அன்னைஇல்லம் தக்க பதிலடி கொடுத்திருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.அப்படி செய்யாததே அன்னை இல்லத்தின் பெருமை!
    காரணம்...
    தமிழ்நாட்டின் சிறந்த பிரபல குடும்ப தலைவராக வாழ்ந்து காட்டிய சிவாஜிகணேசன் அப்படி அன்னை இல்லத்தை வளர்க்கவில்லை.

    ...செந்தில்வேல் சிவராஜ்...


    Thanks Senthilvel
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3653
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    மீண்டும் ஒரு முறை அன்பின் இனியவர்களுக்கு.யாருடைய மனதையும் காயப்படுத்த இப்பதிவு வெளியிடவில்லை. அடுத்த தலைமுறை நண்பர்களுக்கே இந்த இறுதி பயணம் ரஷிய முன்னள் அதிபர் லெனின் அவர்களுக்கு கூட்டமல்ல! அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடிக்கு வந்த கூட்டமல்ல!இந்திய பெருந்தலைவர்களுக்கு வந்த கூட்டமல்ல!தமிழக முன்னாள் முதல்வர்களுக்கு வந்த கூட்டமல்ல! தலைவர்கள் இறந்த போது வந்த கட்சி தொண்டர்களுக்கு. அனைத்து ரயில்கள் இலவசம்.அனைத்து அரசாங்க பேருந்துகள் இலவசம் அனைத்து தனியார்பேருந்துகள்இலவசம்.அனைவருககும் சாப்பாடு இலவசம்.போதை ஆசாமிகளுக்கு.போதை பொருள் இலவசம்.கூட்டத்தினர்களுக்கு இலவசமாக.பிரியாணி இலவசம்.என்று கொடுத்து அழைத்து வரப்பட்டனர்...ஆனால் 21/07/2001.முதல்.23/07/2001.வரை வந்தவர்கள்.எல்லாம்.ரசிகரோ.தொண்டனாகவோ வரவில்லை.அண்ணன் சிவாஜி அவர்களின் இறுதி பயணத்தின் வந்தவர்கள்.எல்லாம் ஒரு தந்தையை பறி கொடுத்தவரகள் போல் தன் மகனை பறி கொடுத்தவர்கள் போல்.தனது தாய் மாமனை.பறிகொடுத்தது போல்.தனது ஆசானை பறி கொடுத்தது போல்.தனது உடன் பிறந்த சகோதரனை பறி கொடுத்தது போல். ஏதோ ஒரு உறவினரை பறிகொடுத்ததை போல்.தாய்மார்கள் தனது உடன் பிறப்பை பறி கொடுத்தவர்கள் போல் அலறி அடித்து புறண்டு அழுது துடித்தனர்.வந்தனர்.பார்த்தனர்.மேலும் அன்னை இல்லத்தில் இருந்து.பெசன்ட் நகர் மின் மயானம் வரை எறத்தாழ.எட்டு கிலோ மீட்டர் வரை.சாலை யோர இரு பக்கமும் நின்று கொண்டு.தங்களுது குடும்ப தெய்வத்திற்கு மலர்கள் தூவி இறுதி அஞ்சலி செய்தனர்..உலகில் எந்த தலைவனுக்கும் கிடைக்காத மரியாதையை தாங்கள் பெற்று வின்னுலகம் சென்று சொர்க்கத்தை அடைந்த முதல் மாபெரும் புனிதர் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வாழ்க புகழ்.ஓங்குக அவருடைய புகழ்...என்றும் உங்கள் பாதபூஜையில்.தஞ்சை காளிதாஸ்...


    Thanks Thanjai Kalidass
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3654
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் விசாரணைக்குப்பின் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சுமார் 47 சென்ட் தனது சொந்த செலவில் வாங்கி அதில் கட்டிடம் கட்டி கட்டபொம்மனுக்கு 1970ஆம் ஆண்டு ஒரு குடிமகனின் கடமையாக வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தார் நடிகர்திலகம் ...........
    கயத்தாறில் எங்கே இருந்து பார்த்தாலும் கட்டபொம்மனின் சிலை தெரியும் அளவுக்கு மிக உயரமான நிலையில் அமைத்து தந்தார் நடிகர் திலகம்.....
    .(இன்று கட்டபொம்மன் சிலை அருகில் பாலத்தைக் கட்டி கட்டபொம்மன் சிலை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டார்கள்... பாலம் கட்டுவதற்கு முன்பு கட்டபொம்மன் சிலையின் பீடத்தின் உயரத்தை அதிகரித்து பாலத்தை கட்ட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை அரசு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு வேதனையான விஷயம்) ........
    கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவுக்கு ஆந்திர காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த சஞ்சீவி ரெட்டி அவர்கள் தலைமை ஏற்க. ....
    சிலையை சிவாஜியின் அன்புக்குரிய தலைவர் காமராசர் அவர்கள் திறந்து வைத்தார்.....
    சிவாஜி சிலை அமைத்து தந்ததோடு கட்டபொம்மன் சிலையை பராமரிப்பதற்கு பஞ்சாயத்து யூனியனுக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்தார் ........
    கட்டபொம்மன் வாரிசுதாரர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாடை போர்த்தினார் ..சிலையை செய்த சுப்பையா ஆசாரி அவர்களுக்கு பட்டாடை போர்த்தி தங்க மோதிரம் பரிசளித்தார் ....
    .சிவாஜி நடத்திய பெருவிழாவில் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி ஆகியோரோடு கலை உலகைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் ..........
    பின்னர் இந்த இடத்தை அரசிடமே ஒப்படைத்து விட்டார் நடிகர் திலகம்....
    அது மட்டுமல்ல இந்த விழாவுக்கான முழுச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார்..................

    வீரபாண்டிய கட்டபொம்மனால் தான் தனக்கு உலக அளவில் பெரும் புகழும் கிடைப்பதாக தன்னடக்கத்தோடு நடிகர் திலகம் சொல்லிக் கொண்டாலும்........
    நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் பக்தியையும் அன்பையும் மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து உணர்த்தியவர் நடிகர் திலகம் தான்......
    நடிகர் திலகத்தின் வடிவிலேயே நாங்கள் கட்டபொம்மனை கண்டார்கள் மக்கள்.....













    Thanks Luxmanan







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3655
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like


    Thanks Thanjai Kalidass
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3656
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    அனைத்து இசைக் கருவுிகளுடனும் திலகம் அருமை.



    Thanka Gururo
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3657
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    சிவாஜி சினிமாவில்
    யாரையும் நோகடித்ததில்லை,
    நஷ்டப்படுத்தியதுமில்லை,
    அடுத்தவரை வளரவிடாமல் அழித்தவருமில்லை.

    சிவாஜி அரசியலில்
    அடுத்தவரிடம் பணம் வாங்கியதில்லை.
    கூட்டம் நடத்துபவர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அது இன்று வரை நடைமுறையில் இருப்பது.
    ஆனால் கூட்டத்திற்கான செலவையும் கொடுத்து, தனது சொந்த செலவிலேயே வருகை தந்தவர்
    சிவாஜி ஒருவரே.

    தனி அரசியல் இயக்கம் கண்ட போதும்,
    தனது சொத்தை விற்று செலவு செய்தாரே ஒழிய,
    எவரிடமும் அன்பளிப்பு பெற்றதில்லை.

    அரசியலில் பல ஆண்டு காலம் இருந்த போதும்,
    இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை எவராலும் சொல்ல முடியாது.

    இப்படி ஒரு தலைவரை அரியணை ஏற்ற தயங்கிய தமிழகமே....
    இன்று உன் நிலைமை.......
    இது போல் ஒரு தலைவரை இனி காண முடியுமா...


    Thanks Thoppumani

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3658
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளிவிழா நிறைவு செய்தபோது, மதுரை நியூசினிமாவில் நடிகர் திலகம், திரு பந்துலு மற்றும் கலைஞர்கள் ரெண்டு காட்சிகள் இடைவேளை நேரத்தில் ரசிகர் முன் தோன்றி நன்றி உரைக்கும் வழக்கம் இருந்தது. இந்த புகைப்படம் அப்போது எடுத்தது.
    பதிவு :திரு. சுப்பு. டிவிட்டர் பதிவு









    Thanks Senthilvel
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3659
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3660
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •