Page 192 of 400 FirstFirst ... 92142182190191192193194202242292 ... LastLast
Results 1,911 to 1,920 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #1911
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1912
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜ ராஜ சோழனுக்கும் அவன் கட்டிய உலகப்புகழ் பெற்ற ப்ரகதீஸ்வர் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் உருவம் கொடுத்த எங்கள் தமிழ் கடவுள் சிவாஜி அவர்கள் கம்பபீரமாக தமிழ் வளர்த்த தஞ்சையில் சிலை வடிவமாக வீற்றிருக்கும் தோற்றம் --இந்த பெருமை எந்த நடிகனுக்கு கிடைக்கும்

  4. #1913
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    படித்ததில் ரசித்தது / தெரிந்துக் கொள்வோம். ¶~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~'THE MAN WITH THE IRON MASK’ என்ற ஆங்கில கதையைத் தழுவி மாடர்ன் தியேட்டர் ஸ் P.U.சின்னப்பாவை வைத்து 1945 ல் ‘உத்தமபுத்திரன்’ என்று தமிழில் முதல் இரட்டை வேடப் படத்தை எடுத்தார்கள். ¶15 ஆண்டுகளுக்கு பிறகு அதே தலைப்பில் மீண்டும் சிவாஜியை இரு வேடங்களில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்து ‘உத்தமபுத்திரன்’ என்று விளம்பரம் கொடுத்தார் கள். விளம்பரம் வந்த அன்று அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ¶அதே நாளில் பத்திரிகையில் இன்னொரு விளம்பரம். எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடிக்கும் ‘உத்தமபுத்திரன்’ என்று வந்திருந்தது, பலர் திகைத்துப்போனார்கள்.¶பிறகு N.S.K. கிருஷ்ணன் எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து, அவர் படத்திற்கு வேறு ஒரு படத்தலைப்பு மாற்றிக் கொள்ள சொன்னார். ¶உத்தம்புத்திரனுக்கு ஸ்ரீதர் கதை, வசனம் எழுதினார். இயக்கியவர், டி.பிரகாஷ்ராவ். படத்தில் பாடல்கள் அனைத்தும் அசத்தல். அதில் ஒன்று: 'உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே' பாட்டு.ஆரம்பத்தில் மிருதுவாக பியானோ ஸ்வரங்களை இசைக்க பாடல் தொடங்கும். பத்மினியின் துள்ளாட்டம், சிவாஜியின் தள்ளாட்டம் இரண்டுக்கும் ஈடு கொடுக்கும் வயலினின் சுகமான அருவி இசை… மறக்க முடியாது. ¶நன்றி : இணையதளம். ¶

  5. #1914
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திகைக்கவைக்கும் திறன்பாடுகள்! பிரமிக்கவைக்கும் பல்சுவைப் படைப்புகள், சிலிர்க்கவைக்கும் சிங்கநாதக்குரல்! சொக்கவைக்கும் அங்க அசைவுகள்! கதிகலங்கவைக்கும் கனல்வசனங்கள்! நிமிரவைக்கும் நின் நடையுடை பாவங்கள்(Bhaavam) தேன்தமிழ் சொல்லாளும் உன்னத உரையாடல்கள்! இவையாவும் நாளை வேறொருவரிடம் என சொல்லவியலாத ,சமனற்ற,நிகரில்லாத, ஈடிணையற்ற, எதிரிணை எட்டவியலாத சரித்திரம் படைத்த பார்புகழ் கலை ஞானனே! ஏழேழு பிறவியிலும் ஏற்றமிகு ஏகனாக! தனித்துவத் தீரனாக, ஈடு கொடுக்க இறையாலும் இயலாத, ஆண்டவனே அதிசயிக்கும் அற்புதனே!! அகிலத்திரையுலகத் தலைமகனே! தவப்புதல்வனே! தெய்வப்பிறவியே! தெய்வமகனே! ஞான ஒளியே! உத்தமபுத்திரனே! இல்லற ஜோதியே! அமரதீபமே! கலையுலகின் விடிவெள்ளியே! சாதனை சரித்திர நாயகனே! அன்னை இல்லத்தின் ஆலயமணியே! சிரஞ்சீவியான திருவருட்செல்வனே! தமிழ் தந்த தங்கச்சுரங்கமே! வைரநெஞ்சமே! மனிதருள் மாணிக்கமே! இன்று(திறன்) உன்னுடையது!! நாளை வேறொருவருடையது என சொல்லவியலாத, எட்டமுடியாத பெரும் திறன் புகழ்கண்ட கலையுலகத்தின் பல்கலைக்கழகமே!! திரையுலகக் கலங்கரை தீபமே! தெவிட்டாத தெள்ளமுதனே! செவாலியே சிவாஜிகணேசனே! என்றென்றும் நீங்கா நினைவில் திரைக்கலையுலகமும், ரசிகமணிகளும்.— with Subramanian Ganeshan.

  6. #1915
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1916
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக் கலைஞனாகும் கனவுகள் அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி, சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய் பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன். அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய், தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.பாசமலராக இருந்தாலும் படையப்பாவாக இருந்தாலும் சவமாக நடிப்பதிலும் சிவாஜி சிகரம். அண்ணனை மரணத்திலும் துரத்திய சாவித்ரியும் பிணமாகவே கிடந்தார். இம்மி அளவும் கண்களை இமைக்காமல், இறந்து பின்னும் நடிப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இரு திலகங்களும். பன்னீரின் நறுமணம் வீசும் பீம்பாயின் கைக்குட்டைகள் கண்ணீரில்குளித்தன நாள் முழுவதும்....நன்றி!"நவீனன்யாழ் இணையம்சாவித்திரி தொடரிலிருந்து

  8. #1917
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1918
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1919
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1920
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம் உறவுகளே !

    கணனி சரியாக இயங்காத காரணத்தால் பதிவுகள் இடமுடியவில்லை.
    மிகவிரைவில் பதிவுகள் தொடரும்....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •