Page 369 of 400 FirstFirst ... 269319359367368369370371379 ... LastLast
Results 3,681 to 3,690 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3681
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3682
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3683
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று(26-05-2020) காலை 11 மணிக்கு சன் லை சேனலில், உயர்ந்த மனிதன்.


    இன்று (26-05-2020) இரவு 8 மணிக்கு மெகா டிவியில் " இரு துருவம்"
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3684
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வகுப்பில் முன் பென்ஞ் இருக்கையில் இருந்த நண்பர்கள் பாலாஜி,பாண்டியன், அருள் ஆகியோர் தெய்வமகனை பார்த்தது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள், அன்றைய முன் தினம் மாலைக் காட்சி தெய்வமகனை சங்கம் தியேட்டரில் பார்த்திருந்தார்கள், தெய்வமகனை நான் மேட்னி காட்சி பார்த்திருந்தேன், மூன்று காட்சி தெய்வமகனும் காலை காட்சியாக இப்போது 80 களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என சன் டிவி பினாத்திக் கொண்டிருக்கும் மோகன் நடித்த மௌன ராகமும் ஓடிக்கொண்டிருந்தது, மௌன ராகம் நல்ல படம் தான் சிறு நகரமான எங்கள் ஊரில் அது ஒரு காட்சி மட்டுமே,
    அப்போது நேரடி ரிலீஸெல்லாம் சிறு நகரங்களில் இல்லாமல் இருந்தது, எங்கள் ஊரில் அப்போது புதியதாக பஸ் நிலையம் எதிரிலேயே கனேசா திரையரங்க்கு உருவாக்கப்பட்டு அதில் மூன்று காட்சி ஜல்லிக்கட்டு ஓடிக்கொண்டிருந்தது, நடிகர் திலகத்தின் அட்டகாசமான கட்அவுட்டை தியேட்டர் நிர்வாகமே உருவாக்கி பெரிய அளவிலான மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தார்கள், அதே தியேட்டரில் காலை காட்சி திருமால் பெருமையும் ஓடிக்கொண்டிருக்கிறது, புதிதாக திறப்பு விழா கண்ட கனேசா திரையரங்கில் முதல் படமாக திருமால் பெருமை திரையிடப்பட்டு அது தொடர்ந்து காலை 11:30 காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது, அடுத்து இரண்டு டெண்ட் கொட்டகைகளும் இருந்தது ஒன்று விநாயகா டாக்கீஸ் மற்றொன்று குமரன் டாக்கீஸ், இதில் விநாயகா டாக்கீஸில் பெருமளவில் நடிகர் திலகத்தின் படங்களை அதிகம் திரையிடுவது வழக்கமாக இருந்தது இதே நாளில் பச்சை விளக்கு ஓடிக்கொண்டிருந்தது, மொத்தத்தில் அன்றைய நாளில் இருந்த திரையரங்குகளில் மூன்றில் நான்கு சிவாஜி படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வு,
    பிற்காலத்தில் இது போன்ற சோஷியல் மீடியாக்கள் வரும் என்று தெரிந்து இருந்தால் மொத்த நிகழ்வுகளையும் ஏதேனும் ஒரு போட்டோ ஸ்டுடியோ மூலம்.படம் பிடித்து வைத்து இருந்து இருக்கலாம்?

    வகுப்பறையில் நண்பர்கள் தெய்வமகனை பற்றி விவாதிக்கும் போது பாடல்களை வரிசைப்படுத்தினார்கள், " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ", "காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழிப் போகும் என்று" அன்புள்ள நண்பரே" என ஞாபகம் கொண்ட நண்பர்களுக்கு " தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே" பாடல் மட்டும் ஞாபகத்தில் இல்லாமல் நம்ம சிவாஜி சேகரை கூப்பிடுங்கள் என்றதும் நானாகவே முன்னாடி பென்ச்சிற்கு சென்று பாடலை பாடிக் காட்டும் தருணத்தில் வகுப்பாசிரியர் ஷாஜகான் நுழைந்து விட்டார், அவர் ஆங்கில ஆசிரியரும் வகுப்பாசிரியரும் கூட , எம்ஜிஆர் ரசிகர் என்பதை பெரும்பாலான தருணங்களில் வெளிப்படுத்திக் கொள்பவர்,
    ஜாலியாக பேசும் சுபாவம் கொண்டவர், "நான் உள்ளே நுழையும் போது பாட்டு சத்தம் கேட்டதே என்றார்",
    " சார் நேற்று தெய்வமகனை பார்த்தோம் அதிலிருந்து பாடலை பாடிப் பார்த்தோம்" என நண்பர்கள் சொல்ல ,
    மற்றுமொரு மாணவர் "சார் தெய்வமகனில் சிவாஜி மூன்று சிவாஜி என்றான், பயங்கரமான நடிப்பு சார்", "உங்களுக்கு பிடிக்குமா சார்" என்றான் அதிகப் பிரசங்கியாக
    நெளிந்தார் ஷாஜகான் சார் " சிவாஜி ஓவர் ஆக்டிங், எனக்கு மார்லன் பிராண்டோ தான் பிடிக்கும்" என்றார்,

    இங்கிலீஸ் வாத்தியாராச்சே??
    சட்டென்று நான் குறுக்கிட்டேன் " சார் மார்லன் பிராண்டோவே சொல்லியிருக்காரே "சிவாஜியால் என்னைப் போல நடிக்க முடியும், ஆனால் என்னால் சிவாஜியைப் போல நடிக்க முடியாது" என
    அதுவும் இல்லாமல் அறிஞர் அண்ணாவும் கூட இதையே தான் சொல்லியிருக்காரே?

    வகுப்பறையில் ஒரே சப்தம் எனது இந்தப் பேச்சுக்கு ஏகத்துக்கும்.ஆதரவு
    "சரி சரி பாடத்திற்கு செல்வோம் என சகஜ நிலைக்கு வந்தார் ஷாஜகான் சார்,

    இது போன்ற நிகழ்வைத் தான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் ' பொட்டில் அடித்தார்போல சொல்லியிருக்கோமா என்று" தற்போது எனக்கு அமைந்த நிகழ்வு ஞாபகத்தில் வந்தது,
    பகிர்ந்து கொண்டேன்,

    கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன் நடிகர் திலகம் மட்டுமே
    முன்பும் பின்பும் எவருக்கும் அந்த வரம் கிடைக்கப்பெறவில்லை
    எப்படி?
    ஒரே வரலாற்று உதாரணம்
    தனது சிறு வயதிலேயே கட்டபொம்மன் நாடகத்தை பார்த்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கட்டபொம்மன் போல நாமும் நடிக்க வேண்டும் என விருப்பம் தோன்றியமைக்கு முழுமையான கலை வரம் கிடைக்கப் பெற்றதனால் தானே 1760-1799 காலங்களில் வாழ்ந்த கட்டபொம்மனை தனது சீர்மிகு நடிப்பினால் 200 ஆண்டுகளுக்கு பின் 1959 ல் கட்டபொம்மனாகவே அவதரித்து அதை உலகம் முழுவதும் அறியப்பட காரணமாக அமைந்தார்,
    அமைந்ததோடு நின்று விடாமல் 1970 ஆம் ஆண்டின் போது தனது சொந்த செலவிலேயே கட்டபொம்மனுக்கு நினைவு சின்னத்தையும் எழுப்பினார்,
    உலகில் எந்த நடிகருக்கும்.இது போன்ற வரலாற்று ஒற்றுமை நிகழ்வுகள் அமையப் பெறவில்லையே?
    அதனால் தான் நடிகர் திலகம் மட்டுமே கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன்,

    கட்டபொம்மன் நினைவு நாள் 16-10-1799,
    பராசக்தி வெளியான நாள் 17-10-1952
    திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரில் நடிகர் திலகம் உருவாக்கிய கட்டபொம்மன் நினைவு சின்னம் திறப்பு விழா கண்டது 16-07-1970


    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3685
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    #நடிகர்திலகத்தின்_கெய்ரோநகர_
    #பயணக்கட்டுரை #பகுதி_1

    அந்நிய நாடுகளில் நடைபெறும் பட விழாக்களில் கலந்து கொண்டு பேறு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் ஒருவர்தான். கெய்ரோவில் நடை பெற்ற ஆசிய - ஆப்ரிக்க பட விழாவில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய பின்னர் அது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களைப் படியுங்கள்.
    டெலிபோன் மணி கணகணவென்று ஒலித்தது.
    தயாரிப்பாளர் பந்துலு அவர்கள் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். விரைந்து ஓடி ரிசிவரை கையில் எடுத்தேன்.
    " கட்டபொம்மன் படத்தை டெல்லியிலிருந்து கேட்கிறார்கள். கெய்ரோவுக்குப் போக வேண்டுமாம் அது. அனுப்பி வைக்கட்டுமா?"என்று பந்துலு அவர்கள் கேட்டார்கள்.
    நான் அவரிடம் முழுவிவரங்களையும் கேட்டு "அனுப்பி வையுங்கள்" என்று சொன்னேன்.
    இது நடந்த சில நாட்களுக்கு கெய்ரோவில் நடைபெறும் ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் கலந்துகொள்ள படத்தில் நடித்த என்னையும், தயாரிப்பாளர், டைரக்டர் பந்துலு அவர்களையும் பப்பியையும், ராகியையும் இந்திய சர்க்கார் அழைத்திருந்தார்கள்.
    என் மனதில் மட்டும் கெய்ரோவுக்கு போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வரும் நடிகர்கள் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லும்போதெல்லாம், உடனே பறந்து அங்கு செல்ல மாட்டோமா என்று எனக்குத் தோன்றும். இரவில் நான் படுக்கையில் படுத்த பிறகும் என் சிந்தனையைச் சுற்றி இக்கருத்துக்கள் வட்டமிடும்.
    இதற்கேற்ப அமெரிக்காவுக்கு வரும்படி எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆனால், என் தாயாரின் உடல் நலம் சரியில்லாததால் அந்த அழைப்பை அப்போது ஏற்க முடியவில்லை.
    கெய்ரோவுக்கு வரும்படி இந்திய சர்க்கார் அழைக்கிறார்கள் என்று சொன்னபோதும் என் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
    எனது தாயார் அப்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். இந்நிலையில் எனது அன்னையை விட்டு பிரிந்திருக்க நான் விரும்பவில்லை. நாம் வெளிநாடு செல்லும் சமயம் ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால்? - என்னால் கற்பனையில் கூட அந்தக் காட்சியை வடிக்க முடியவில்லை.
    " கெய்ரோவுக்கு நான் வரவில்லை" என்று முதலில் தீர்மானமாகச் சொல்லி விட்டேன். ஆனால் சர்க்கார் தரப்பில் வரும் அரிய அழைப்பை நிராகரிக்கக் கூடாது. உங்கள் தாயாருக்கு ஒன்றும் ஆகிவிடாது. நாங்கள் இருந்து அவர்களை கவனித்து வருகிறோம். நீங்கள் கவலை இன்றி போய்வரலாம்" என்று என் நண்பர்களும் உறவினர்களும் என்னைச் சமாதானப் படுத்தினார்கள்.
    இதற்கிடையில் பப்பி, ராகினி இருவரும் படப்பிடிப்பு காரணமாக முடிந்தால் பின்னர் வருவதாக சொல்லி விடவே, நான் இல்லாமல் தனியே கிளம்பிச் செல்ல முடியாது என்று பந்துலு அவர்களும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். கடைசியில் நம் நாட்டின் பிரதிநிதியாக விழாவில் கலந்து கொள்ள எவரும் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? எனவே என் நண்பர்களும், மற்றுமுள்ளோரும் அளித்த உற்சாகத்தில் தான் கெய்ரோ கிளம்ப முடிவு செய்தேன்.
    சென்னை விமான நிலையத்தில் எங்களை பலரும் வந்து வழி அனுப்பினார்கள். "நாம் என்ன காரியம் சாதித்து விட்டதாக இப்படி எல்லோரும் சேர்ந்து வழி அனுப்புகிறார்கள். உண்மையில் கெய்ரோவில் என்ன நடக்கப் போகிறதோ?" என்று எண்ணியபோது என் உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.
    எங்கள் இருவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் வந்தார். அவரது வரவு எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது என்பதை நான் சொல்லாமல் இருக்கமுடியாது. முதலில் பம்பாய்க்கு சென்று அங்கிருந்து கெய்ரோவுக்கு விமானம் ஏறினோம்.
    பம்பாயிலிருந்து செக்கோஸ்லோவாக்கியா விமானம் ஒன்று எங்களை சுமந்து சென்று மூன்றே மணி நேரத்தில் நைல் நதி நாட்டின் தலைநகரமான கெய்ரோ சென்று விட்டது. நான் இதுவரை பல முறை விமானப் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் செக் நாட்டு விமானத்தில் கிடைத்தது போன்ற பிரயாண சுகம் வேறெதிலும் கிடைத்ததாக சொல்ல மாட்டேன். விமானமும் சரி, விமானத்தில் பணியாற்றுபவர்களும் சரி 'முதல்தரம்' என்றுதான் சொல்ல வேண்டும்.
    மேற்கு நோக்கி செல்லச்செல்ல நமது கைக்கடிகாரத்தையும் நாம் திருப்பிவிட்டு கொண்டிருக்கவேண்டும். மணி குறைந்து கொண்டே வரும். எனவே கெய்ரோவில் இறங்குவதற்கு முன் முன்பாக எங்கள் கைக்கடிகாரங்களில், நாங்கள் அந்த நாட்டின் மணிக்கு ஏற்ப முட்களை திருப்பி வைத்துக் கொண்டோம்.
    விமான நிலையத்தில் ஆசிய ஆப்பிரிக்க பட விழாவை நடத்தும் முக்கியஸ்தர்கள் அனைவரும் எங்களை வரவேற்க வந்திருந்தார்கள். நமது இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்களும் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர். பெருமைப்படும்படியான வரவேற்பை எங்களுக்கு அளித்த அப்பெரும் மனிதர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
    கெய்ரோவில் விழாவிற்காக மிகவும் சிறந்த முறையில் எல்லா ஏற்பாடுகளையும் ஐக்கிய அரபுக் குடியரசு சர்க்கார் செய்திருந்தார்கள். இந்த விழாவை நடத்த முன்வந்த ஐக்கிய அரபுக் குடியரசு சர்க்கார் விழாவில் பங்கு கொள்ள வந்த ஒவ்வொருவருக்கும் சிறப்பான வசதிகளைச் செய்து கொடுத்திருந்தார்கள்.
    எங்களுக்கு என்று ஒரு தனி காரும், எங்களுடன் வந்து எங்களுக்கு உதவியாகப் பேசி, பணிபுரிய இரண்டு காரியதரிசிகளையும் கொடுத்திருந்தார்கள். எங்களுக்கு கிடைத்த காரிய கைதிகளில் ஒருவர் அரபு நாட்டின் செல்வாக்கு மிக்க பத்திரிக்கை ஒன்றில் உதவி ஆசிரியை. நைல் நதிக் கரையின் ஓரம் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்த கெய்ரோவில் மிகப் பிரபலமான 'செமிராமிஸ்' என்ற ஓட்டலில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் வெளியே செல்லும் போது எங்கள் காரியதரிசி உடன் வருவார். ஆங்காங்கே முக்கியமாகப் பார்க்க வேண்டிய வற்றை விளக்குவார்.
    எங்களைப் போலவே சீனா, ஜப்பான், இந்தோனேசியா, தாஷ்கண்ட் மற்றும் பல நாடுகளிலிருந்து விழாவிற்கு வந்திருந்த அவர்களுக்கு இம்மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்கள். எகிப்து நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களே வசதியும் செய்திருந்தார்கள்.
    கெய்ரோவில் சென்று இறங்கியதுமே என்னை முதலில் கவர்ந்தது அந்த நாட்டு மக்களின் நன்றி உணர்ச்சியோடு கூடிய அன்புதான். குறிப்பாக, இந்தியாவில் இருந்து வந்து இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் அன்பு அலாதியானதுதான்.
    நாங்கள் தங்கியிருந்த செமிராமிஸ் ஹோட்டல் பல மாடிகள் கொண்டது. ஆனால் கெய்ரோவில் பெரும்பாலான கட்டடங்கள் பல மாடிகள் கொண்ட, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நம் நாட்டிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடம் என சொல்லப்படும் இன்சூரன்ஸ் கட்டிடம் தான் அங்கு உள்ள மிகச் சிறிய கட்டிடம் என்று சொல்லலாம். இந்த நகரத்தில் எல்லோரும் மேல்நாட்டு பாணியிலேயே இருக்கிறார்கள். ஆண் பெண் அனைவரும் மிகவும் சகஜமாக பழகுகிறார்கள்.
    நகரத்தை விட்டு சற்று உள்நோக்கி பிரயாணம் செய்தால் ஒரே பாலைவனம் தான். கெய்ரோவில் நாங்கள் சென்று இறங்கியதுமே அங்கு நமது ஸ்தானிகராகப் பணியாற்றி வரும் உயர்திரு ஆர்கே. நேரு அவர்கள் எங்களை வசையாகப் பிடித்துக்கொண்டார்.
    "நம் நாட்டில் உள்ள உங்களுக்கு தேசாபிமானமே கிடையாது. இங்கே பாருங்கள், மற்ற நாட்டிலிருந்து எத்தனை நடிகர்கள் வந்திருக்கிறார்கள். நம் நாட்டில் இருந்து நடிகைகள் யாருமே வரவில்லை. இதெல்லாம் நமக்கு எப்படிப் பெருமைப்படும் விஷயமாக இருக்கும்?" என்றெல்லாம் சொல்லம்புகளாக எறிய ஆரம்பித்தார்.
    அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு பத்மினி, ராகினி, இருவரும் எங்களுடன் வர இயலாமைக்கான காரணத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் திரு. நேரு அவர்களை சமாதானம் அடையவில்லை. எங்கள் மீது இருந்த அன்புக்கோபமும் அவருக்குக் குறையவே இல்லை.
    எனவே இதையெல்லாம் பப்பி, ராகி இருவருக்கும் விளக்கிச் சொல்லி அவர்களை புறப்பட்டு வரும்படி சொன்னேன். அவர்களும் சீக்கிரம் வருவதாக வாக்களித்தார்கள். திரு. நேரு அவர்களும் பிரத்தியேகமாக இதை அவர்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.
    நான் மேலே தொடர்வதற்கு முன்பாக நாங்கள் கலந்துகொண்ட ஆசிய ஆப்பிரிக்க பட விழாவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். கெய்ரோவில் நடக்கும் இந்த விழா இரண்டாவது விழா. முதல் விழா 1958ல் ரஷ்யாவில் உள்ள ஆசிய பிரதேசமான தாஸ்கண்ட் என்ற இடத்தில் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த படவிழா அடுத்தபடியாக நமது நாட்டில் புதுடெல்லியில் 1961 இல் நடத்த விழாவின்போது முடிவு செய்யப்பட்டது.
    இந்தப் போட்டியில் முழுநீள படங்களுக்கு மொத்தம் நான்கு பரிசுகள் அதாவது ஆஸ்கர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன விழாவில் கலந்துகொள்ளும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, டைரக்டர் தவிர மற்றும் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஏதேனும் அதாவது பாட்டு, நடனம், கலைத்துறை போன்றவற்றிற்கு ஒரு பரிசு. ஆக ஐந்து பரிசுகள் கொடுக்கப்படுகின்றன டாக்குமென்டரிக்கு ஒன்று தனியாக கொடுக்கப்படுகிறது.
    - தொடரும்
    நன்றி : சினிமா ஸ்டார் 1968 / உயர்ந்தமனிதன் பட சிறப்பு மலர்.

    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்

    Thanks வான்நிலா விஜயகுமாரன்




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3686
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3687
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1967 ஆம் ஆண்டு எடுக்க பட்ட படம் இது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பக்கத்தில் தஞ்சை நகராட்சி சார்பில் சிவகங்கை பூங்கா நிறுவபட்டது இதன் அலங்கார நுழைவு வாயிலை அண்ணன் சிவாஜி அவர்கள் தனது சொந்த செலவில் கட்டி கொடுத்தார்கள் அதோடு இந்த சிவகங்கை பூங்காவை அன்றைய தஞ்சை நகர்மன்ற தலைவர் திருY. ஆரோக்கியசாமி நாடார் அவர்கள் தலைமையில் தஞ்சை நகராட்சியில் இருந்து.கிராமிய கலைஞர்களின் ஒயிலாட்டம் மயிலாட்டம் நாதஸ்வர இசை முழங்க அண்ணன் சிவாஜி அவர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கிய வெள்ளையம்மாள் யானை முன்செல்ல நான்கு குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியில் (சாரட் வண்டியில்) அண்ணன் சிவாஜி அவர்களையும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு Y. பரிசுத்த நாடார் அவர்களையும் அமர வைத்து தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து இந்த சிவகங்கை பூங்காவை அண்ணன் சிவாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள் (இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தி இன்றைய தஞ்சை வாழ் மக்களுக்கு தெரியவில்லை) இந்த படத்தில் பின்புறம் அண்ணன் சிவாஜி அமைத்த அலங்கார நுழைவு வாயில் அருகில் Yபரிசுத்த நாடார் M. L. Aஅவர்கள் மற்றும் அதன் வடிவமைத்த நகராட்சி கட்டிட கலை வல்லுனர் உடன் நமது வெள்ளையம்மா மற்றும் நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர் அடுத்த படம் அண்ணன் சிவாஜி அவர்களால் திறந்து வைக்கபட்ட அதே அலங்கார நுழைவு வாயிலின் பொழிவிழந்து காணப்படும் இன்றைய காட்சி அதற்கு அடுத்து உள்ளபடம் வெள்ளை சலவை கல்லில் (கிரைனட் வெள்ளை கல்) அண்ணன் சிவாஜி அவர்களால் திறந்து வைக்கபட்டதற்கான கல்வெட்டு ........ இது போல் தஞ்சையில் மாவட்டத்தில் அண்ணன் சிவாஜி அவர்களால் நாடகம் நடத்தி நிதி வழங்கி ஏராளமான கட்டிடங்கள் அவர்தம் வரலாறு கூறும் இன்றைய சூரக்கோட்டை சிவாஜி பன்னையும் தஞ்சை சாந்தி கமலா திரையரங்கம் கட்ட பட்ட இடமும்.திருவாளர்கள் நாடார் குடும்பத்தினரிடம் விலைக்கி வாங்கி உறுவாக்க பட்டவை................ தொடர்ந்து பார்ப்போம் என்றும் பிரியமுடன் ........ சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்







    Thanks Thoppumani Thoppiah
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3688
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3689
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3690
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
    கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
    எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
    சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
    ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
    இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
    பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.

    Thanks Gobalakrishnan Sundararaman

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •