Page 371 of 400 FirstFirst ... 271321361369370371372373381 ... LastLast
Results 3,701 to 3,710 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3701
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒண்ணாங்கிளாஸ் movie sir அது ! எப்படி நடித்திருக்கிறார் தெரியுமா? அந்த நடிகர் அல்லது நடிகை...... இப்படி பேசுவார்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை பற்றி ரசிகர்கள்.... கேட்டதுண்டு நான்.
    அப்படி ஒரு நட்சத்திரம் நடித்ததாலேயே ஒரு படம் வெற்றி பெற்றது அல்லது பெறும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை...
    இந்த படம் அப்படி அல்ல !

    உயர்ந்த படம் !
    அபாரமான படம் !
    மறுபேச்சே இல்லை..
    ஆனால் அவர் மட்டுமே நன்றாய் நடித்திருந்தார் என்று சொல்ல மாட்டேன் நான்...

    ஆனால் அதற்கு யாரையாவது பாராட்ட வேண்டுமெனில் இவரையே பாராட்ட வேண்டும். உயர்ந்த மனிதன் தான் இவர்..
    தமிழ் திரை கதாநாயகர்களில் வேறு எவராயினும் இந்த படத்தில் குறைந்த பட்சம் இரண்டு காட்சிகளை மாற்றியமைக்க செய்திருப்பார்கள்.
    பாரதி இறுதியில் இவரோடு மோதுவாரே... அம்மா ரொம்ப நல்லவங்க, கோபம் வரும் அவங்களுக்கு, ஆனா உங்களை போல பொய் சொல்ல மாட்டார்கள் என்று சீறுவாரே அந்த காட்சி.......
    ராஜூ !நீ ஒரு சுயநலகாரன் என்று சொல்லி விட்டு ஆமா, நானும் பார்வதியை காதலித்தேன் என்று மறுகுவாரே அசோகன், அந்த காட்சி....
    இவருக்கு தன்னம்பிக்கை உண்டு... அதையும் தாண்டி படம் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஆர்வமும் உண்டு...
    எங்கே ஒரு காட்சி ! ஒரே ஒரு காட்சி !
    விரல் மடக்கி சொல்லுங்கள் ! பார்ப்போம் !
    Over acting இந்த ஸீனில் என்று......
    துளி மிகையில்லை....
    மேஜரை வாக்கிங்கிற்கு அழைத்து போய் சிகரெட் கொடுத்து விட்டு தனக்கு குழந்தை இல்லா குறையை பற்றி சொல்வாரே.....
    சௌகாரை கை நீட்டி அறைந்து விட்டு தடுமாறி நாற்காலியை பற்றி நிற்பாரே,
    சிவகுமாரை பின்னி எடுத்து விட்டு, என்னை மறுபடியும் கோழையாக்காதே, அப்படி பார்க்காதே என்று சொல்லி எகிறி எட்டி உதைப்பாரே....
    நாகையாவிற்கு ஓய்வு பெறும் போது விடை கொடுத்து அனுப்புவாரே.....
    உயர்ந்த நடிகர் இவர்தான் என்று பறை சாற்றும் காட்சிகள் அல்லவா அவை !
    கிருஷ்னன் -பஞ்சு என்கிற உன்னத இரட்டையர்கள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.
    புதிய பறவை படத்தை விட இந்த படத்தில் சௌகாரை மிக பிடிக்கிறது எனக்கு....
    கிளாமர் இவரிடம் இருக்கிறது பூரணமாக.....
    G.சகுந்தலாவோடு சௌகார் பேசும் காட்சிகளை குறிப்பிட்டு சொல்லி வசனங்கள் பச்சை என்று முகம் சுளித்தான் விகடன்...
    பெண்களே மிக ரசித்தார்கள் அந்த காட்சிகளை என்பதே நிஜம்....

    வாலி வேறு கண்ணதாசன் வேறு என்று இனம் பிரித்து பார்த்தல் எளிதன்று என்று சொல்ல வைத்த படம் இது....
    அத்தனை பாடல்களுமே மயக்கத்தை தந்தன, இயற்றியவர் கண்ணதாசனோ என்கிற மயக்கத்தை.....
    வசன பாட்டு இது, சொல்லி கொள்கிறாற் போல இல்லை என்றது ஒரு விமர்ச்சனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாடலை பற்றி....
    இன்றும் பரவச படுத்தி கொண்டிருக்கிறது நம்மையெல்லாம் அந்த பாடல்....

    மீண்டும் எடுக்கவே முடியாத காவிய படம் என்பேன்....
    காரணம் அந்த உயர்ந்த மனிதன் இன்றில்லையே, இதே பாத்திரத்தில் வாழ்ந்து காட்ட... இன்னொரு உயர்ந்த மனிதன் கிடைப்பதும் ஆகிற காரியம் இல்லையே

    Thanks Vino Mohan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3702
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று 30/05/2020 நடிகர்திலகம் படங்கள். ¶
    1. மெகா டி.வி.யில் மதியம் 12.00 மணிக்கு " அன்பை தேடி"
    2. கேப்டன் டி.வி.யில் மதியம் 3.30 மணிக்கு "நீலவானம்" - கண்டு களியுங்கள்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3703
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வாக்குக்காகவோ...
    விளம்பரத்திற்காகவோ அல்ல...
    வறியவர்களின் வயிற்றுப்பசியை
    ஒரு பொழுதேனும் தீர்த்துவைக்க முயற்சிக்கும் அறம் சார்ந்த திருப்பணியின் 52- வது நிகழ்ச்சி...









    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3704
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இம்மண்ணையும் மக்களையும் தன்னைவிட அதிகம் நேசித்த எங்கள் தவப்புதல்வன் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் நடைபெறும் தொடர் அன்னதானத்தின்
    51 -வது நிகழ்ச்சி...






















    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3705
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    30-05-2020
    தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,

    1)முதல் மரியாதை-.................................................. .... அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவியில்,
    2) பாலும் பழமும் -.................................................. ....... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
    3) அன்பளிப்பு -.................................................. ............. நண்பகல் 12 மணிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்,
    4) அன்பைத் தேடி -.................................................. ....... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
    5) கருடா சௌக்கியமா-............................................... பிற்பகல் 2:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்
    6) நீல வானம் -.................................................. .............. பிற்பகல் 3:30 க்கு கேப்டன் டிவியில்,
    7) சந்திப்பு .-.................................................. ..................... இரவு 7:30 க்கு வசந்த் டிவியில்,.

    ( இனைப்பில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் -கும்பகோணத்தில் திரு சிவாஜி சேகர் )




    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3706
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நேற்றைய பதிவில் கேட்டிருந்த புதிருக்கான பதில்
    நடிகர் திலகம் அணிந்திருக்கும் இந்த பாரம்பரிய மிக்க தலைப்பாகையை நீலகிரி கொல்லிமலை ஆதிவாசிகள் 50 பேர்கள் வரை சிவாஜி மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்த போது நடிகர் திலகமும் மேடையிலேயே அவர்களது இசை நடனத்திற்கு ஏற்றவாறு ஆடி மகிழ்ந்தாராம்,
    பிறகு தங்களது பாரம்பரிய தலைப்பாகையை அணிவித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்து இருக்கிறார்கள்,



    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3707
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கற்பனை வளம் கொஞ்சம் இருக்கிறது. பொழுது நிரம்ப இருக்கிறது... இரண்டையும் வைத்து கொண்டு சும்மாயிராமல் பழைய பெருங்காய டப்பாவை முகர்ந்து கொண்டிருக்கிறாய் நீ என்று சோகையாய் சில முனகல்கள் கேட்கத்தான் செய்கின்றனர்... நன்றாய், நல்லவைகளை, நம்பகத்தன்மையுடன் பேசுகிறீர் நீர், நிறுத்தி விடாதீர் என்று நேசக்குரல்கள் பலவும் செவிகளில் விழுகின்றன...
    நேரில் காணும் நண்பர்கள் சிலர் அந்த முனகல்களை குறித்தே பேசுகின்றனர், தேவையா உங்களுக்கு இது?
    என்றும் விசனிக்கிறார்கள்.
    விந்தையாய் இருக்கிறது..
    நிந்தைக்கு வணங்கி நில் என்று அறிவுரை சொல்கிறவர்களை காணும் போது விந்தையாகதான் இருக்கிறது.
    பாராட்டு வார்த்தைகள் ஏன் இவர்கள் இவர்கள் பார்வையில் படுவதில்லை?

    நடிகர் திலகம் குறித்தே இந்த பதிவும்....
    1967 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மாதங்கள் சென்று காமராஜர் வருகிறார் அன்னை இல்லத்திற்கு .
    கணேசன், கமலா தம்பதியிடம் மனம் விட்டு பேசி கொண்டிருக்கிறார்...
    கட்சி நடத்த கூட பணம் இல்லை. எத்தனை பேர்கள், கட்சியால், காங்கிரஸ் ஆட்சியால் பலனடைந்தவர்கள்....
    ஒருவர் கூட முன் வருவதில்லை துணை நிற்க என்று சொல்லும் போதே கர்மவீரர் விழிகளில்
    கண்ணீர் நிறைகிறது...
    மனம் தாளாமல் நடிகர் திலகம் வெளி கிளம்புகிறார்.... காமராஜரை அன்னை இல்லத்திலேயே விட்டு விட்டு.
    நண்பர்கள் சிலரை சந்தித்து விட்டு திரும்புகிறார்.... நல்ல தொகையுடன்...
    ஆளுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நண்பர்கள் கொடுத்திருந்தனர் நடிகர் திலகத்தின் முகத்திற்காக.
    சிவாஜிகணேசன் உறுதியாக சொல்கிறார் காசு கொடுத்த நண்பர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் அல்லர் என்று....
    பின் யாராம் அவர்கள்?
    காமராஜர் என் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த ராஜாஜியின் அன்பர்களாம் அவர்கள் அத்துணை பேரும்..
    நடிகர் திலகமே அழுத்தமாய் பதிவு செய்த செய்தி இது...
    தன் கை பணம் கொஞ்சமும் போட்டு காமராஜரிடம் தருகிறார் நம் கணேசனார்.
    எவ்வளவு தொகை தெரியுமா?
    மூன்று லட்சம் ரூபாய்.
    நண்பர்களே !அறிவீரோ நீவிர் !1967 ஆம் ஆண்டில் மூன்று லட்ச ரூபாய் சாமான்ய தொகை அல்ல..
    அந்த ஆண்டில் நடந்த பொது தேர்தல் நிதியாக மாநிலம் முழுக்க நடையாய் நடந்து, அலையாய் அலைந்து கலைஞர் திரட்டி, விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணாவிடம் கொடுத்த தொகை 11 லட்சம்.
    ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் காமராஜர் கவலைக்கு மருந்தாக நடிகர் திலகம் சேர்த்து தந்தது மூன்று லட்சம் ரூபாய்.

    எந்த கலைஞனும் அரசியல் தலைவனும் திரட்டி தர முடியாத பெருநிதி அது அன்று..
    கட்சி நடத்தவே கையில் காசில்லை என்று
    கண்ணீருடன் நின்ற காமராஜர் களிப்புடன் அன்னை இல்லத்தை விட்டு அன்று வெளியேறினாராம்..
    வெளியில் தெரியாமல் நடிகர் திலகம் செய்திருந்த பெரும் உதவிகள் இவ்வளவு அவ்வளவு அல்ல !

    காலி பெருங்காய டப்பா என்று கதைப்போருக்கும், ஜாதிக்காய் பெட்டி, மணக்கிறது என்று மகிழ்வோருக்கும் பொதுவில் வைக்கிறேன் இந்த பதிவை..
    Vino Mohan.V.


    Thanks Vino Mohan.V

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3708
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3709
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    Thanks Joe
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3710
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதத்தில் வெளியான படங்கள்

    1)14.மனோகரா( தெ)-3/6/54

    2) 15- மனோகரா( இ) 3/6/54

    3)32- அமரதீபம்-29/6/56

    4)40. தங்கமலை ரகசியம்-29/6/57.

    5)63- படிக்காதமேதை-25/6/60

    6)88- குலமகள்ராதை-7/6/63

    7)96- ஆண்டவன்கட்டளை-12/6/64

    8)114- பாலாடை-16/6/67

    9)121- என் தம்பி-7/6/68.

    10)129- குருதட்சனை-14/6/69.

    11)130- அஞ்சல்பெட்டி 520-27/6/69.


    12)139- எதிரொலி-27/6/70

    13)163- பொன்னூஞ்சல்-15/6/73

    14)171- தங்கப்பதக்கம்-1/6/74

    15)184- உத்தமன்-25/6/76.

    16)196. ஜெனரல்சக்ரவர்த்தி-16/6/78

    17)210- ரத்தபாசம்-14/6/80

    18)227- நிவுருகப்பின நிப்பு( தெ)-24/6/82

    19)235-சந்திப்பு-16/6/83

    20)245- சிம்மசொப்பனம்-30/6/84.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •