Page 368 of 400 FirstFirst ... 268318358366367368369370378 ... LastLast
Results 3,671 to 3,680 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3671
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3672
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    என் பாட்டிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை, என்றார் ஹேமநாத பாகவதர்.
    அவரே ,விறகுவெட்டியின் பாட்டு கேட்டு பின் அவருக்கு அடிமையானதாக சாசனம் எழுதித் தந்தார்.நடிகர்திலகத்தின் பாதிப்பால் முன்னேறிய இந்த தமிழ் திரையுலகம் நடிகர்திலகத்திற்கு அடிமையே!
    அவர் ஜம்மென்று வழி அமைத்துக் கொடுத்த பாதையில் ,பின்னால் வந்தவர்கள் சுகமான பயணம் செய்து விட்டு அதை தங்களின் வெற்றி பவனியாக கூறிக் கொள்வதில் என்ன
    பெருமையோ?
    தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவிலும் ஒரு தூயதமிழ் வலம் வந்தது உண்டென்றால், நடிகர்திலகத்திடம் இருந்துதான் வந்திருக்கிறது.
    தமிழ்நிலத்தில் அதிகம் பதியப்பட்ட காலடித் தடமும் அவரையன்றி யாரை சொல்ல முடியும்?
    திரையுலகம் பெரும் சாம்ராஜ்யமாய் பின்னாளில் விரிய யார் மூல காரணம்?
    அதிகார வர்க்கத்தை தாங்கி நடிக்கும் எந்த நடிகனின் படைப்பிற்கும் முன்னோடியாக நடிகர்திலகத்தின் பாத்திர படைப்புகள் தானே முன்னுதாரணமாய்
    காட்டப்படுகிறது?
    யாராலும் அடக்க முடியாத காட்டாற்று வெள்ளமென சென்று கொண்டிருந்த நடிகர்திலகத்தின் நடிப்புக்கு தீனி ஓரளவே போடப்பட்டிருக்கிறது.
    தெனாலிராமன் படத்தை பாருங்கள்! என்ன அழகான நடிப்பு! சரித்திர கதைகளில் எந்த நடிகனும் சகஜமான நடிப்பை செய்திருக்க மாட்டான்.
    ஆனால் தெனாலிராமனில் அதை சர்வ சாதாரணமாக செய்திருப்பார்.
    வணங்காமுடியில் சிற்பியின் பாத்திரமும் அதே போல்தான்.
    நடிகர்திலகத்திற்காக எப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்குவது என்று படைப்பாளிகள் தங்களின் நூறு சதவீத கற்பனை திறனையும் மூளையை கசக்கி உருவாக்கப்பட்ட கதைகளும் கூட நடிகர்திலகத்தின் நடிப்புக்கு போதவில்லை.அதனால் தான் தன் சில படங்களை வேகாத சோறு, இதை தயாரித்திருக்கவே வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
    சம்பூர்ண ராமாயணத்தில் பரதன் வேடத்தை செய்து மொத்த படத்தையும் தன்பால் இழுக்க செய்திருப்பாரே, இதுவே அவருடைய நடிப்பின் வெற்றி.
    அதனால் தான் கதாநாயனுக்கு உரிய பாத்திர படைப்புக்களை தாண்டி வெரைட்டி நடிப்பகளை தேர்ந்தெடுத்து அதை ஜெயமாக்கினார்.எதிர்பாராதது, அந்தநாள் திரும்பிப்பார் கூண்டுக்கிளி என்று ஏனைய கதாநாயர்கள் செய்யாததை துணிவுடன் செய்து நடிப்பின் மேல் தான் கொண்ட வேட்கையை உணர வைத்தார்.
    பின்னாளில் நடிக்க வந்தவர்கள் வித்தியாசமான வேடங்களை செய்கிறோம் என்று ஏதோ ஒப்புக்கு செய்வதற்கு தைரியம் வந்து செய்தவைகள் எல்லாம் அவர் பாதை அமைத்துக் கொடுத்து பாத்திரங்கள் தான்
    அவர்களுக்கு டிக்ஸனரியாக வழிகாட்டின.
    பார்த்தால் பசி தீரும் பாகப்பிரிவினையில்
    கை ககால் ஊன வேடங்களை கடைசிவரை மாறாமல் செய்திருப்பார்.அதிலென்ன சிறப்பென்றால் அவர் அந்த படங்களை மட்டும் அதே காலகட்டத்தில் செய்து கொண்டிருக்கவில்லை.
    அதனூடே பல படங்களில் ஷிப்டிங்கில் செய்து கொண்டே இந்த வேடங்களையும் செய்திருக்கிறார்.
    "பல படங்களுக்கான உழைப்பை தன் ஒரு படத்தில் செய்பவர் நடிகர்திலகம்."
    நவராத்திரியில் அவருக்கு ஒன்பது பட உழைப்பு.மேலே கூறிய கருத்தை வைக்கும்போது இதை என்னவென்று சொல்வது?
    இப்படிப்பட்ட வேடங்களை எல்லாம் இரவு பகலாக செய்துவிட்டு, வீட்டுக்கு சென்று கதராடையுடன் நெற்றியில் விபூதி பூசி டென்ஷன் இல்லாமல் இயல்பாக வருகிறவர்களிடத்தில் பேசி பழக எப்படி அவரால் முடிந்தது?
    உயர்ந்த மனிதன் படத்தை நினைக்கையில் அது ஒரு பிரமாண்டமாக இன்னும் நெஞ்சில் நினைவு வர என்ன காரணம்?
    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
    அவர் வழியமைத்துக் கொடுத்த வழிகள் நடிகர்கள் எல்லோரும் சுகமாக பயணிக்க உதவுகிறது.பயணங்கள் தான் வீண்!

    Thanks Senthilvel Sivaraj
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3673
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நேற்றைய தினம் எனது அருமை நண்பர் கயத்தார் சென்ற போது எனது வேண்டுகோளின் படி எடுத்து அனுப்பிய படங்கள்........
    நடிகர் திலகத்தின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட பிரமாண்டமான நினைவு தூண்...
    அதில் அண்ணாந்து பார்த்தால் கட்டபொம்மனின் திருவுருவச் சிலை....
    மணிமண்டபம்...
    கட்டபொம்மனின் குல தெய்வம் வீரசக்கம்மாள் ஆலயம்........
    பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்......
    பாலம் மட்டும் மறைக்காமல் இருந்தால்...
    அந்த இடத்தை கடப்பவர்கள் கட்டபொம்மனை தரிசிக்காமல் போக மாட்டார்கள்......

    நடிகர் திலகத்தின் கொடைத் தன்மையையும் கண்டு வியந்திருப்பார்கள்.............
    கயத்தார் செல்பவர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள்.....

    Thanks Lakshmanan Lakshmanan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3674
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3675
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று 25/05/2020 மதியம் 01.30 p.m. மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் நடிகர்திலகம் நடித்த " சந்திப்பு "
    படத்தை காண தவறாதீர்கள். ¶
    இதில் நடிகர்திலகம், பிரபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3676
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    'மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்...வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார் முகிலா..காதல் மழை பொழியும் கார் முகிலா..காதலன் நான் இருக்க பேரெழிலாய்...'

    இன்று 25/05/2020 சன் லைப்ஃ டி.வி.யில் மதியம் 04.00 p.m. மணிக்கு நடிகர்திலகம் நடித்த "இரு மலர்கள்"
    படத்தை கண்டு மகிழுங்கள். ¶
    இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர். விஜயா, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3677
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழ்மகன் கூறுகிறார்…..
    தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
    https://i1.wp.com/archives.chennaionline.c…/…/06mar-ph01.jpg
    அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
    எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
    72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.
    https://i1.wp.com/…/…/2005/10/06/images/2005100600670301.jpg
    கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
    வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
    “ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.
    “அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.
    மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
    -இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
    இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?
    தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
    Thiru Jivaajeyan Govindarajoo அவர்கள் பகிர்ந்து கொண்து

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3678
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3679

  11. #3680

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •