Results 1 to 10 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான தினம் இன்று,
    மீண்டும் பழைய நினைவு வந்து விடுகிறது,

    1984 ல் நான் ஏழாவது வகுப்பு படித்து வந்த காலம், அது கிராமத்தில் இருந்த நடுநிலைப் பள்ளி எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அண்ணாமலை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் அதனால் காங்கிரஸ்காரர், பள்ளி நேரம் முடிந்த பின் இரவு நேரங்களில் பள்ளியிலேயே இலவச டியூசன் சொல்லிக் கொடுப்பார், ஒரு சில நாட்களில் எங்களுக்கு கட்டபொம்மன், மனோகரா, பராசக்தி,திருவிளையாடல், ஆகிய படங்களில் இருந்து வசனங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார், அது பள்ளியின் ஆண்டு விழாவில் அரங்கேற்றம் செய்யப்படும், இதில் விஷேசம் மாணவிகள் கட்டபொம்மனாக நடிப்பது
    கட்டபொம்மன் வசனங்களை நாங்கள் பேசி நடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு சில திருத்தங்களை செய்து எங்களை பழக வைத்திருந்தார், அந்த ஒரு சில மாற்றங்கள் கொண்ட வசனங்கள் எனக்கு இன்னமும் மனதில் ஞாபகம் இருக்கவே செய்கிறது
    பானர்மேன்:- யாரங்கே இருமாப்பு கொண்டு இருக்கும் அந்த வீரபாண்டிய கட்டபொம்மனை இரும்புச் சங்கிலியால் இருக பிடித்து இழுத்து வாருங்கள் "
    நான் கொஞ்சம் குண்டாக இருந்ததினால் என்னை பானர்மேனாக நடிக்க வைத்து விட்டார்கள்,
    எனக்கு கட்டபொம்மன் வேடம் கொடுக்காமல் போனதில் பெரிய ஏமாற்றம் இருக்கவே செய்தது, அது பத்தாம் வகுப்பு படித்த போது நிறைவேற்றிக் கொண்டேன்,
    மீண்டும் ஏழாம் வகுப்பிற்கே வருகிறேன், வகுப்பில் மொத்தம் 35 பேர் வரை இருந்த ஞாபகம், அப்போதெல்லாம் சிவாஜி அணி, எம்ஜிஆர் அணி மட்டுமே, அதுவென்னவோ தெரியவில்லை சிவாஜி அணிக்குத் தான் பெரும்பான்மையானவர்கள், அதனால் தான் என்னவோ பள்ளியின் மூலம் காண்பிக்கப்பட்ட அத்தனை திரைப் படங்களுமே சிவாஜி படங்கள் மட்டுமே, எங்கள் வகுப்பில் இஸ்லாமிய தோழன் ஜான் பாஷா. எம்ஜிஆர் அணிக்காரன், நாடோடி மன்னன் படத்தை டெண்ட் கொட்டகையில் பார்த்து விட்டு வந்து வகுப்பறையில் காட்டிக் கொண்ட அளப்பறை கொஞ்சம் நஞ்சம் கிடையாது,
    அவனுக்காக வந்தது போல் இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன், அடுத்த வாரத்திலேயே டெண்ட் கொட்டகைக்கு வந்து விட்டது, ஸ்பெஷல் பள்ளியின் மூலமே செல்வது, மாணவர் ஒருவருக்கு தலா ஒரு ரூபாய் வசூலித்தாகிவிட்டது, ஐந்து வகுப்பு மேல் படிப்பவர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப் பட்டனர், காசு கொடுக்க முடியாத 40 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொண்டார், ஆர்ப்பரிப்போடு. பார்த்தோம். எனச் சொல்கிறார்களே அது நாங்கள் கட்டபொம்மனை தரிசரித்தோமே அதுதான், படம் பார்த்த முடிந்தபின் எங்களை எல்லாம் விட ஜான் பாஷா அதிகம் நேரம் அழுத படியே இருந்தான், சக மாணவர்கள் தேற்றியும் அழுகை நின்ற பாடில்லை, மறுநாள் வகுப்பிற்கும் கூட வரவில்லை, இரண்டு நாட்களுக்குப் பின் வந்த ஜான் பாஷா நான் இனி நாடோடி மன்னன் கிடையாது, கட்டபொம்மன் போல வாழப் போகிறேன் அன்னியர்களுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டேன், இந்த இந்திய்த் திருநாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று வீர முழக்கமிட்டான், அந்த ஆண்டின் பள்ளி ஆண்டு விழாவில் கட்டபொம்மனாக நடித்து எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம் பிடித்தும் கொண்டான்,

    இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான நாள்
    61வது ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுவோம்

    Thanks Sekar Parasuram

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •