Page 244 of 400 FirstFirst ... 144194234242243244245246254294344 ... LastLast
Results 2,431 to 2,440 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #2431
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நன்றி மறவாத உயர்ந்த உள்ளம்.1960ல் பாசமலர் படப்பிடிப்பு நெப்டியுன் ஸ்டுடியோவில் நடந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் மாலை நடுத்தர வயதுடைய பிராமணர் ஒருவர் அந்தக்கால நாகரீகத்தை ஒட்டி விசிறி மடிப்பு ஜரிகை அங்கவஸ்திரத்தைகழுத்தில் சுற்றி அணிந்த வண்ணம் கால் மேல் கால போட்டு சிவாஜிக்கு நேரே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.நீங்க தம்பி சண்முகத்தைப் பாருங்க நான் அவனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லிடுறேன்என்று சிவாஜி சொல்லாவர் எழுந்து கும்பிட்டவாறு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அவர சென்ற பிறகு சிவாஜி என்னிடம் சொன்னார் இவர் பேரு கிருஷ்ணசாமி வேலூர்க்காரர்.அங்கே நாடகம் நடந்தபோது தினமும் வந்து என் நாடகத்தை பார்த்து நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து எனக்கு கைகொடுத்து பாராட்டுவார்.உங்களுக்கு சிறந்த வருங்காலம் இருக்குன்னு வாழ்த்துவார்.நான் கேட்க்காமலே எனக்கு நிறைய பொருளுதவி செஞ்சு இருக்கார்.அப்போ நல்லா வாழ்ந்தவரு இப்போ கொஞ்சம் கஸ்ட்டத்துல இருக்கார்.எவ்வளவு பணம் தேவைப் படும்னு கேட்டேன் பணம் எதுவும் வேண்டாம் வேலைக்கு எற்பாடு செய்தால் போதும்னு கேட்டார்.ஒரு காலத்தில் எனக்கு உதவி செய்தவர் நல்லா படித்தவர் அதனால் சிவாஜி ஃபிலிம்சில் அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து மாசா மாசம் ஒரு சம்பளம் போட்டுக்கொடுக்கும்படி சண்முகத்திடம் சொல்லி இருக்கிறேன்.அவர சொன்னபடி அந்த அய்யரூக்கு சிவாஜி ஃபிலிம்சில் வேலை கொடுத்தார் சண்முகம்.ஒரு வாரத்துக்கு ப்பிறகு செக் கில் சிவாஜியின் கை எழுத்து பெற வந்த அய்யர் ஒரு பணிவு மிக்க ஊழியர் போல் சிவாஜியின் அருகில் வந்து பவ்யமாக குனிந்து கை எழுத்து வாங்கி சென்றார்.நீண்ட லாலம் சிவாஜி ஃபிலிம்சில் பணியாற்றினார்.1964ல் வெளிவந்த புதிய பறவை ப்டத்துக்க்கான செட்டில்மென்ட் செக் அவர் கையால்தான் வாங்கினேன்.ஆரூர்தாஸ்

    Thanks Vijaya Raj Kumar- Nadigar thilakam Fans
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2432
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2433

  5. #2434

  6. #2435

  7. #2436

  8. #2437

  9. #2438

  10. #2439

  11. #2440
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    "சிங்கம் சிங்கந்தான்"

    நல்ல நல்ல படங்கள் நடிகர்திலகத்தின் படங்கள்
    இன்றைக்கு புதுமையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் அத்தனையும் அவரின் படங்கள் சொல்லிவிட்டன.

    *இப்படித்தான் நடக்கவேண்டுமென கருத்துக்கள் கொண்ட படங்கள்.
    *இப்படி நடக்கக்கூடாதென
    சொன்ன படங்கள்.

    நேர்மறை பாத்திரங்களை மட்டுமே நடிக்கும் அறிமுக வில்லன் நடிகர்கள் இன்றுமிருக்க...
    "அந்தநாள்" அவர் நடித்ததை கொஞ்சம் "திரும்பிப்பார்"க்க வேண்டிய காலம் இருக்கத்தான் செய்கிறது.

    தங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ள நெஞ்சுரமிக்க இன்றைக்குள்ள கதாநாயகர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே! என்பதைவிட, அப்படி ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல...

    நடிப்பென்று வந்துவிட்டால் கௌரவ வேடம் ஏற்கவும் தயங்காதவர். விந்தனையான நடிகர் நம் அய்யன் மட்டுந்தானென உறுதியிட்டு சொல்லலாம்.

    வில்லனாக நடித்த நடிகர் ஒருவரை விரும்பி மக்கள் ஏற்றார்கள் என்றால், அது நம்மவர் மட்டுந்தான்.

    அவர் பரிசோதனை செய்து பார்க்கவேண்டி நடிக்கவில்லை. அசட்டு தைரியமும் இல்லை. அவர் நடிப்பின் மேலுள்ள அவ்வளவு மரியாதை.
    வில்லன் நடிகன் பாத்திரம் ஏற்ற பிறகு அதேபோன்ற வேடங்கள் ஏற்கச்சொல்லி தனக்கு வில்லன் முத்திரை குத்தி விடுவார்களோ என்ற துளியளவும் இல்லாமல்தான் "துளிவிஷம்" என்ற படத்தில் நடித்தார். அவர் அழகு திருமுகத்தை கதாநாயகனாக பார்த்தவர்கள்
    அவ்வளவு சீக்கிரம் வில்லனாக ஆக்கிவிடுவார்களா?

    நடிகர்திலகம் படத்தில் மட்டும் நல்லவன் போல் நடிக்கும் கதாநாயகன் அல்ல, நடைமுறையிலும் அப்படித்தான். ஒரே வித்தியாசம் அவருக்கு நடிப்புலகில் மட்டுந்தான் நடிக்க தெரியும்.

    நடைமுறை வாழ்க்கையில் நடிக்க தெரிந்திருந்தால் நாடாண்டிருப்பார். நாடார் பின் போயிருக்க மாட்டார்.

    "பொன்னையும் நாடார்
    பொருளையும் நாடார்
    தன்னையும் நாடார்
    தன் வீடும் நாடார்
    அறுபது கோடி மாந்தரை நாடி
    அவர்களின் வாழ்வில் அமைதியை தேடி
    அல்லும் பகலும் சிந்தனை செய்தான்
    அவனம்மா...
    அவன் ஆக்கிய வழியில் ஆக்கிய தலைவன்
    எவனம்மா?"

    என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதுவதற்கு முன்பாகவே காமராஜரை நாடி, தேடி போனவர்தான் நடிகர்திலகம்.

    நடிகர்திலகமாவது நடிப்புலகத்தில் நடித்தார்.
    காமராஜர் அவர்களுக்கு இயல்புலகம் மட்டுந்தான். அவருக்கு நடிப்பென்றால் என்னவென்று தெரியாது. நடிகர்திலகம் படங்களை பார்த்து பின்புதான் நடிப்பென்றால்
    இதுதான் போலிருக்கிறதென தெரிந்துக்கொண்டார். ஆனால் நடிகர்திலகத்தின் பழக்கத்தில் போலி இல்லையென்று தெரிந்துக்கொண்ட பிறகே, அவரை தன் தொண்டனாக ஏற்றுக்கொண்டார்.

    ஒரு தலைவனுக்கு உதாரணம் காமராஜர்.
    ஒரு தொண்டனுக்கு உதாரணம் நடிகர்திலகம்.

    அப்படியாபட்ட நடிகர்திலகம் நடிப்புலகில்
    நடிப்பை எவ்வாறாக நோக்கினார்...?

    நடிப்பென்று ஒன்று வந்தால் நவரசமும் தெரிந்தவன் ஓர் நல்ல சிறந்த நடிகனாக போற்றப்படுவான் என்பதை ஆழ்மனதில் எந்த ஒரு தயக்கமும் இன்றி உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் உலகமெங்கிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிறந்த நடிகனாக புகழ் பெற்றார்.

    ஹாலிவுட் படங்களில் நடிக்காமலே ஹாலிவுட் நடிகர்களுக்கு பரீட்சயமானார். ஆசிய-ஆப்ரிக்காவின் சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவரை பெற்ற தாய் பெருமைகொண்டது முக்கியமல்ல. நாம் பெருமைகொள்வதுதான் முக்கியம். நாம் ஒரு தமிழரென பெருமை கொள்கிறோம். ஆனால் உலகம் ஒரு பெரும் நடிகனாகவும், பாரதம் நம் நாட்டில் பிறந்த பாரத பெரும் நடிகராகவும் பார்க்கிறது. நாம் எப்படி பார்க்கின்றோம்...?

    நம் தமிழ்நாடு எப்படி பார்க்கிறது? என்பது முக்கியமில்லையா? வேதனைதான் அவர் சிலையை எடுத்தது...

    என்றுமே மானமுள்ள தமிழனால் மறக்கமுடியாதது. தமிழை ஒவ்வொரு பெரியோர்களும் ஒவ்வொரு விதத்தில் வளர்த்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத ஒரு பாமர தமிழனையும் நற்றமிழ் பேசவைத்த பேராசிரியன் அய்யன் சிவாஜி!

    சிவாஜியை உயிராய் மதிக்கக்கூடிய ஒவ்வொரு பக்தருக்கும், 'மணிமண்டபம்' ஆலயமே ஆனாலும் அவரை அங்கு கொண்டுபோய் வைத்தது, சிறையில் அடைத்ததற்கு சமம்தான். சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்... அது 'சிங்கம் சிங்கந்தான்.

    "அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்."

    அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பேசியது வெள்ளையர்களை பார்த்து மட்டுமல்ல, இந்த கொள்ளையர்களையும் பார்த்துந்தான்.

    "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா"

    "நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
    யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா.."

    நடிகர்திலகத்தை நாமிருக்கும் வரை...

    "எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்"

    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

    Thanks ப.நடராசன்/:

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •