Page 194 of 400 FirstFirst ... 94144184192193194195196204244294 ... LastLast
Results 1,931 to 1,940 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #1931
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Today's Chennai Times Supplement of Times of India
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #1932
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1933
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    We thank The Hindu, The Chennai Times, The Hindu Tamil for including our NTFANS Programme Notification in their esteemed dailies.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1934
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1935

  7. #1936
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பராசக்தி” படம் வெளியானபோது, அந்த திரைப்படத்தை எவ்வாறு ரசிகர்கள், திரையரங்குகளில் வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக, படத்தின் தயாரிப்பாளரான பெருமாள் முதலியார், இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு, சிவாஜி கணேசன் ஆகிய மூவரும் திரையரங்கிற்கு சென்றிருந்தனர். இவர்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில், ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். சிவாஜி அவர்களுக்கு நேர் எதிரில் உட்கார்ந்து இருந்த அந்த சிறுவன், தனக்குப் பின்னால் உட்கார்ந்து இருந்த சிவாஜிகணேசன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.திரை...யில் படம் ஓட தொடங்கியவுடன், தனக்குப் பின்னாலே அமர்ந்திருப்பது யார் என்பதை, அந்தச் சிறுவன் புரிந்து கொண்டான். அதன்பிறகு அவன் திரையில் ஓடும் படத்தை பார்ப்பதும், பின்னால் திரும்பி சிவாஜிகணேசன் அவர்களை பார்ப்பதுமாக, மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் படத்திலேயே, கடைசி கட்சியான நீதிமன்றக் காட்சியில், தனது அனல் பறக்கும் வசனங்களால் சிவாஜிகணேசன் அழுத்தம் திருத்தமாக, பதிவு செய்து முடித்தவுடன், அதைப் பார்த்து பிரமித்துப் போன அந்தச் சிறுவன், அவரை பாராட்ட வேண்டும் என்பதற்காக சிவாஜிகணேசனை நோக்கி ஓடிவந்தான்.
    சிவாஜியின் கரங்களை பிடித்த அந்தச் சிறுவன் அழுத்தமாக முத்தம் கொடுத்தான். சிவாஜி அவர்களை நேரில் பார்த்து தனது பாராட்டை அழுத்தமாக தெரிவித்த அந்த சிறுவன்தான் பட்டு சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற தற்போதைய “நல்லி குப்புசாமி செட்டி” அவர்கள்.
    வார்த்தைகள் : சித்ரா லக்ஷ்மணன்
    நன்றி : ஹிட் சினிமாஸ்

    நன்றி Raja Luxmi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1937
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1938

  10. #1939

  11. #1940
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எம் ஜீ ஆர் ரசிகர்களின் பொய் பித்தலாட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு
    ஆதார ஆவணப்பதிவு .

    Originally Posted by sivajidhasan திரு. பம்மலார் அவர்களுக்கு,

    கர்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் செய்த சாதனைப் பட்டியலை ஆனித்தரமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் அந்த திரைப்படம் முதல் வெளியீட்டில் சரியாக போகவில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாளடைவில் அதுவே உண்மையாகிவிடும். எனவே அந்த குறையை தாங்கள் தான் போக்கவேண்டும்.

    நட்புடன்,
    டியர் சிவாஜிதாசன் சார்,

    தங்களின் அன்பிற்கும், பாராட்டுக்கும், இந்த எளியவன் மேல் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் தலையாய நன்றிகள் !

    நமது ஹப்பர், நடிகர் திலகத்தின் பக்தர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள், "கர்ணன்" வெற்றி குறித்து வினவிய ஒரு கேள்விப்பதிவுக்கு, பதிலாக 'வெற்றிக்காவியமே கர்ணன்' என்கின்ற தலைப்பில் ஒரு பதிவை அடியேன் அளித்தேன். இது நிகழ்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 20.3.2010 அன்று. நமது நடிகர் திலகம் திரியின் ஆறாவது பாகத்தில் 276வது பதிவாக இது பதிவாகியுள்ளது. அடியேன் அளித்த அந்தப்பதிவு மீண்டும் இங்கே மறுபதிப்பாக (சற்று கூடுதல் தகவல்களுடன்) தங்கள் மற்றும் அனைவரின் பார்ர்வைக்கு:

    ///////Originally Posted by J.Radhakrishnan
    பம்மலார் சார் உங்கள் தகவல்கள் அருமை. கர்ணன் படம் 108 நாள் ஓடியதா? யாரோ அது தோல்வி படம் என்று சொன்னார்களே ?

    ராதாகிருஷ்ணன் (NT Devotee)
    வெற்றிக்காவியமே கர்ணன்

    "கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:

    கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?

    பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாகத்தான் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

    மாபெரும் வெற்றிவீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக்கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றியாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனைத் தோற்கடிக்க, எத்தனை குறியாக இருந்திருக்கிறார்கள்.

    முதல் வெளியீட்டில், வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற விண்ணை முட்டும் வெற்றியைக் கர்ணன் பெறவில்லை என்பது உண்மை. ஆயினும், திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

    கலைக்குரிசிலின் 94வது காவியமான கர்ணன், 14.1.1964 பொங்கல் திருநாளன்று, சென்னை மற்றும் தென்னகமெங்கும், 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

    அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)

    1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்

    2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்

    3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்

    4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
    (ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)

    [இன்றைய தினங்களில், 400 திரையரங்குகளில் திரையிடப்படும் பிரம்மாண்ட படங்களெல்லாம், 4 திரையரங்குகளில் கூட 100 நாட்களைத் தொட முடியாமல் மண்ணைக் கவ்வுகின்றனவே!?]

    மேலும், கர்ணன் காவியம், திருச்சி, சேலம், கோவை போன்ற பெரிய நகரங்களில், 80 நாட்கள், ஒவ்வொரு நகரத்திலும் ஓடி, அபார வெற்றி பெற்றது.

    கும்பகோணத்தில் 68 நாட்கள் ஓடி குதூகலமான வெற்றி !

    நாகர்கோவிலில் 65 நாட்கள் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிய கர்ணன், திருநெல்வேலியில் 59 நாட்கள் வெற்றி நடை போட்டது.

    திண்டுக்கல்லில் சூப்பர்ஹிட் ரேஞ்சில் 50 நாட்கள்.

    ஆக, ஏ சென்டர்களில் எல்லாம் 80 நாட்களும் அதற்கு மேலும்,

    பி சென்டர்களில் 50 நாட்களும் அதற்கு மேலும் மற்றும்

    சி சென்டர்களில் எல்லாம் 3 வாரங்களிலிருந்து 6 வாரங்கள் வரை

    வெற்றிகரமாக ஓடியுள்ள கர்ணன் ஒரு அபார வெற்றிக் காவியம்!!!

    அன்புடன்,
    பம்மலார்.///////

    அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)

    1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்

    2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்

    3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்

    4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
    (ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)

    பம்மலார் அவர்களே,

    நீங்கள் போட்ட கர்ணன் பட 100 நாள் ஓடிய குறிப்பில் சென்னை ,பிரபாத் ,மற்றும் சயானி இப் படம் 100 நாட்கள் ஓடவில்லை பொய்யான தகவல் ரெண்டு அரங்கிலும் எட்டு வாரம் மட்டுமே ஓடியது ,அது மட்டுமல்லாமல் ஒம்பது அரங்கில்தான் ஐம்பது நாள் ஓடியது தவறை திருத்திகொள்ளவும் .

    m g r Raju bs

    Originally Posted by Mgr Raju B S அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)

    1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்

    2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்

    3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்

    4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
    (ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)

    பம்மலார் அவர்களே,

    நீங்கள் போட்ட கர்ணன் பட 100 நாள் ஓடிய குறிப்பில் சென்னை ,பிரபாத் ,மற்றும் சயானி இப் படம் 100 நாட்கள் ஓடவில்லை பொய்யான தகவல் ரெண்டு அரங்கிலும் எட்டு வாரம் மட்டுமே ஓடியது ,அது மட்டுமல்லாமல் ஒம்பது அரங்கில்தான் ஐம்பது நாள் ஓடியது தவறை திருத்திகொள்ளவும் .
    டியர் திரு. Mgr Raju B S,

    தங்கள் வருகைக்கு நன்றி..!

    பொய்யான தகவல்களையோ, சந்தேகத்துக்குட்பட்ட தகவல்களையோ, எனது பதிவுகளில், எனது அறிவுக்கு எட்டியவரை, நான் என்றுமே அளித்ததில்லை, அளிக்கப்போவதுமில்லை.

    "கர்ணன்" காவியம், சென்னை 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 100 நாட்கள் ஓடவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிகமிகத் தவறான தகவல். ஏனென்றால், "கர்ணன்" 100வது நாள் சென்னை விளம்பரத்தை என் கண்களால் பார்த்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு நூலகத்தில் [இப்போது அந்த நூலகம் இல்லை], 1964-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் 'THE MAIL' ஆங்கில மாலை நாளிதழின் தொகுப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் "கர்ண"னின் 100வது நாளன்று [22.4.1964 : புதன்], சென்னையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் [சாந்தி, பிரபாத், சயானி], 100 நாட்கள் ஓடுவதாக மூன்று அரங்குகளின் சார்பாகவும் மூன்று தனித்தனி விளம்பரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஒவ்வொரு விளம்பரத்தின் அளவும், Book-Notebookக்கு நாம் ஒட்டும் Labelலின் அளவைவிட சற்றுகுறைவாக இருக்கும். அந்த விளம்பரத்தில் என்ன இருந்தது என்பதையும் கூறி விடுகிறேன்.

    முதல் விளம்பரத்தில்,
    SHANTI
    Deluxe Air-Conditioned
    TODAY 100TH DAY
    Padmini Pictures
    KARNAN.

    இரண்டாவது விளம்பரத்தில்,
    PRABHAT
    TODAY 100TH DAY
    Padmini Pictures
    KARNAN.

    மூன்றாவது விளம்பரத்தில்,
    SAYANI
    TODAY 100TH DAY
    Padmini Pictures
    KARNAN.

    இத்தகைய தகவல்கள் அந்த விளம்பரங்களில் இருந்தன.

    இன்னொன்று, காலை நாளிதழ்களில் வரப்போகும் திரைப்பட விளம்பரங்கள் பெரும்பாலும் மாலை நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாளே வந்துவிடும். ஆனால், "கர்ண"னைப் பொறுத்தவரை, அதன் 100வது நாள் விளம்பரங்கள், 'THE MAIL' மாலை நாளிதழில் 22.4.1964 அன்று மாலைதான் வெளியானது. அந்த நூலகத்தில், பார்த்தவற்றை, குறிப்புகள் எடுத்து எழுதிக் கொள்ளலாமே தவிர, நகல் (xerox) எடுக்க அனுமதிக்கமாட்டார்கள். அப்படி எனக்கு நகல் கிடைத்திருந்தால், "கர்ண"னின் வெற்றி குறித்த கேள்வியே எங்கும் எழாது.

    "கர்ணன்", 22.4.1964 அன்று, சென்னையில் இந்த மூன்று திரையரங்குகளில் [சாந்தி, பிரபாத், சயானி] 100 நாட்கள் ஓடியதோடு நிறைவு. 23.4.1964 வியாழன் முதல், இந்த மூன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்:

    சாந்தி - Son of Samson(English)

    பிரபாத் - ஆத்மபலம்

    சயானி - Mere Mehboob(Hindi).

    மேலும், "கர்ணன்", 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 56 நாட்கள் மட்டுமே ஓடியதாக கூறினீர்களே..எப்படி சார்..?

    "கர்ணன்", 50வது நாளைப் பூர்த்தி செய்தது 3.3.1964 செவ்வாயன்று. 100வது நாளைத் தொட்டது 22.4.1964 புதனன்று. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எந்தப் புதிய தமிழ்த் திரைப்படமும் இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.

    3.3.1964 முதல் 22.4.1964 வரை வெளியான புதிய தமிழ்த் திரைப்படங்கள்:
    (சென்னையில் வெளியான அரங்குகளுடன்)

    அல்லி - 5.3.1964 - கெயிட்டி, ஸ்ரீமுருகன், ராக்ஸி, ராம்

    நல்வரவு - 5.3.1964 - வெலிங்டன், மஹாராஜா, கிருஷ்ணவேணி

    என் கடமை - 13.3.1964 - பிளாசா, கிரௌன், புவனேஸ்வரி, சீனிவாசா

    பச்சை விளக்கு - 3.4.1964 - வெலிங்டன், மஹாராணி, ராக்ஸி, நூர்ஜஹான்

    சித்ராங்கி - 10.4.1964 - பாரகன், மஹாராஜா, புவனேஸ்வரி

    நானும் மனிதன் தான் - 13.4.1964 - காமதேனு, மஹாலக்ஷ்மி, பிரைட்டன், ஜெயராஜ்

    தவிர, எந்தவொரு வேற்றுமொழித் திரைப்படமோ அல்லது டப்பிங் படமோ கூட, இந்த காலகட்டத்தில், இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.

    "கர்ணன்", முதல் வெளியீட்டில், சென்னையில் 'சாந்தி', 'பிரபாத்', சயானி' ஆகிய மூன்று திரையரங்குகளில், ஒவ்வொன்றிலும் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மேலும் மதுரை 'தங்க'திலும் 108 நாட்கள் ஓடி சூப்பர்ஹிட். இதுவே மிகமிகச் சரியான தகவல்.

    "கர்ணன்" சென்னைப் பதிப்பு 100வது நாள் விளம்பரத்தை தேடும் எனது தொடர் முயற்சிகளில் வெற்றி கிட்டியவுடன் தாங்கள் அளித்த தகவல் தவறு என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.

    மேலும், 11 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் உணமை. சில வருடங்களுக்கு முன்னர் அந்தந்த ஊர்களிலுள்ள திரையரங்குகளைத் பலமுறை தொடர்பு கொண்டு, அதற்குப்பின்னர் அவர்கள் சொன்ன தகவல் சரிதானா என்பதனைப் பலமுறை சரிபார்த்து அதன்பின் பதிவிடப்பட்ட தகவல் இது. மேலும், வேலூர் முதற்கொண்ட இன்னும் 4 ஊர்களில், "கர்ணன்" 50 நாட்கள் ஓடியுள்ளதாக தகவல் உள்ளது. அவை இன்னும் சந்தேகத்துக்குட்பட்டவையாக இருப்பதால், வெளியிடப்படவில்லை.

    தாங்கள் அளித்த தவறான தகவல்களைத் திருத்திக் கொள்ளவும்.

    அன்புடன்,
    பம்மலார்.

    மேலே காணப்படும் பதிவுகள் 2012 ல் பதிவிடப்பட்டவை

    ..............

    கர்ணன் 2012ல் மறு வெளியீடு கண்டு மாபெரும் வரலாற்று வசூல் சாதனை படைத்தவேளை
    அதன் சாதனைகளை பொறுக்கமுடியாமலும் ,மறுதலிக்கமுடியாமலும் எம் ஜீ ஆர் ரசிகர்களால்
    அள்ளிவிடப்பட்ட பொய் புரட்டுத்தான் கர்ணன் முதல் வெளியீட்டில் சென்னை சாந்தியில் மட்டும்தான் 100 நாட்கள்
    பிரபாத் சயானி ஆகியவற்றில் 100 நாட்கள் இல்லை 8 வாரங்கள் மட்டும்தான் படம் தோல்வி
    என்பதுபோன்ற கட்டுக்கதைகள்.

    எம் ஜீ ஆர் ரசிகர்களின் பொய்யான கட்டுக்கதைகளுக்கு திரு பம்மலார் அவர்கள்
    விபரமாக விளக்கம் கொடுத்திருந்தார்.

    ஆனால் அவரிடத்தில் ஆவணப்பதிவு இருந்திருக்கவில்லைபோலும் ஆதலால்
    கர்ணன் 100 நாட்களுக்கு பின் பிரபாத் சயானி தியேட்டர்களில் வேறு படங்கள் திரையிடப்பட்டன என
    விபரமாக படங்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

    இது சம்மந்தமாக சயானி தியேட்டர் ஆவண விளம்பரம் ஒன்று அண்மையில் எனக்கு கிடைத்தது.
    அதன்படி திரு பம்மலார் அவர்கள் குறிப்பிட்ட விபரம் அப்படியே ஒத்துப்போகின்றது.

    இதோ அந்த ஆவணப்பதிவு

    Last edited by sivaa; 18th February 2020 at 09:09 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •