Results 1 to 10 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒண்ணாங்கிளாஸ் movie sir அது ! எப்படி நடித்திருக்கிறார் தெரியுமா? அந்த நடிகர் அல்லது நடிகை...... இப்படி பேசுவார்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை பற்றி ரசிகர்கள்.... கேட்டதுண்டு நான்.
    அப்படி ஒரு நட்சத்திரம் நடித்ததாலேயே ஒரு படம் வெற்றி பெற்றது அல்லது பெறும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை...
    இந்த படம் அப்படி அல்ல !

    உயர்ந்த படம் !
    அபாரமான படம் !
    மறுபேச்சே இல்லை..
    ஆனால் அவர் மட்டுமே நன்றாய் நடித்திருந்தார் என்று சொல்ல மாட்டேன் நான்...

    ஆனால் அதற்கு யாரையாவது பாராட்ட வேண்டுமெனில் இவரையே பாராட்ட வேண்டும். உயர்ந்த மனிதன் தான் இவர்..
    தமிழ் திரை கதாநாயகர்களில் வேறு எவராயினும் இந்த படத்தில் குறைந்த பட்சம் இரண்டு காட்சிகளை மாற்றியமைக்க செய்திருப்பார்கள்.
    பாரதி இறுதியில் இவரோடு மோதுவாரே... அம்மா ரொம்ப நல்லவங்க, கோபம் வரும் அவங்களுக்கு, ஆனா உங்களை போல பொய் சொல்ல மாட்டார்கள் என்று சீறுவாரே அந்த காட்சி.......
    ராஜூ !நீ ஒரு சுயநலகாரன் என்று சொல்லி விட்டு ஆமா, நானும் பார்வதியை காதலித்தேன் என்று மறுகுவாரே அசோகன், அந்த காட்சி....
    இவருக்கு தன்னம்பிக்கை உண்டு... அதையும் தாண்டி படம் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஆர்வமும் உண்டு...
    எங்கே ஒரு காட்சி ! ஒரே ஒரு காட்சி !
    விரல் மடக்கி சொல்லுங்கள் ! பார்ப்போம் !
    Over acting இந்த ஸீனில் என்று......
    துளி மிகையில்லை....
    மேஜரை வாக்கிங்கிற்கு அழைத்து போய் சிகரெட் கொடுத்து விட்டு தனக்கு குழந்தை இல்லா குறையை பற்றி சொல்வாரே.....
    சௌகாரை கை நீட்டி அறைந்து விட்டு தடுமாறி நாற்காலியை பற்றி நிற்பாரே,
    சிவகுமாரை பின்னி எடுத்து விட்டு, என்னை மறுபடியும் கோழையாக்காதே, அப்படி பார்க்காதே என்று சொல்லி எகிறி எட்டி உதைப்பாரே....
    நாகையாவிற்கு ஓய்வு பெறும் போது விடை கொடுத்து அனுப்புவாரே.....
    உயர்ந்த நடிகர் இவர்தான் என்று பறை சாற்றும் காட்சிகள் அல்லவா அவை !
    கிருஷ்னன் -பஞ்சு என்கிற உன்னத இரட்டையர்கள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.
    புதிய பறவை படத்தை விட இந்த படத்தில் சௌகாரை மிக பிடிக்கிறது எனக்கு....
    கிளாமர் இவரிடம் இருக்கிறது பூரணமாக.....
    G.சகுந்தலாவோடு சௌகார் பேசும் காட்சிகளை குறிப்பிட்டு சொல்லி வசனங்கள் பச்சை என்று முகம் சுளித்தான் விகடன்...
    பெண்களே மிக ரசித்தார்கள் அந்த காட்சிகளை என்பதே நிஜம்....

    வாலி வேறு கண்ணதாசன் வேறு என்று இனம் பிரித்து பார்த்தல் எளிதன்று என்று சொல்ல வைத்த படம் இது....
    அத்தனை பாடல்களுமே மயக்கத்தை தந்தன, இயற்றியவர் கண்ணதாசனோ என்கிற மயக்கத்தை.....
    வசன பாட்டு இது, சொல்லி கொள்கிறாற் போல இல்லை என்றது ஒரு விமர்ச்சனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாடலை பற்றி....
    இன்றும் பரவச படுத்தி கொண்டிருக்கிறது நம்மையெல்லாம் அந்த பாடல்....

    மீண்டும் எடுக்கவே முடியாத காவிய படம் என்பேன்....
    காரணம் அந்த உயர்ந்த மனிதன் இன்றில்லையே, இதே பாத்திரத்தில் வாழ்ந்து காட்ட... இன்னொரு உயர்ந்த மனிதன் கிடைப்பதும் ஆகிற காரியம் இல்லையே

    Thanks Vino Mohan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •