Page 82 of 402 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #811
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்பட இயக்குனர் விக்ரமனின் பேஸ்புக்-கிலிருந்து...

    1985ம் வருடம்... MGR அமெரிக்காவில் இருந்து கிட்னி ஆப்பரேஷன் முடிச்சுட்டு இந்தியா வரப்போறாரு. அப்ப சில சொந்த வேலை காரணமா திருநெல்வேலிக்கு போயிருந்தேன்.

    "ச்சே...தலைவர் வரும்போது நேர்ல பாக்கமுடியலையே"-ன்னு தவிப்பு எனக்கு....அந்த நேரத்துல தமிழ்நாடு முழுக்க ஒரே வதந்தி... "எம்.ஜி.ஆர். உயிரோடவே இல்லை...எலெக்சன்ல ஜெயிகிறதுக்காக ஆர்.எம். வீரப்பனும், ராஜிவ்காந்தியும் மக்களை ஏமாத்துறாங்க" அப்படி, இப்படின்னு வதந்தி...ஏன்...? தமிழ்நாட்டுல அ.தி.மு.க தலைவர்கள் சிலரே" தலைவர் உயிரோட இருக்காரா...இல்லையான்னு தெரியலே...என்று பேட்டியெல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க...மக்களுக்கோ ஒரே குழப்பம்...எதை நம்புறதுன்னு தெரியலே...
    இந்த நிலையில செய்தி வருகிறது.."எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து நாளை திரும்பிவருகிறார்" என்று.

    அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்

    ஒட்டு மொத்த இந்தியாவும் "ஆப்பரேசனுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்னு" ஒரே எதிர்பார்ப்பு.

    அப்பொழுது எங்கள் ஊரில் டி.வி. வரவில்லை...ஆகையால் ரேடியோவில் வர்ணனை செய்து கொண்டு இருந்தார்கள்.

    எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து பாம்பே வந்து அங்கிருந்து சென்னை வருவதாக திட்டம்.

    எம்.ஜி.ஆரை வரவேற்க கிண்டியில் உள்ள ராணுவப்படை மைதானத்தில் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்...

    காலை 7 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்பதால் முதல் நாள் இரவே லட்சோபலட்சம் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவிட்டனர். இரவு முழுவதும் மேடையில் ஆடல்...பாடல்...கலைநிகழ்ச்சிகள்...இடையிடையே தலைவர்களின் சொற்பொழிவுகள்...

    திருநெல்வேலியில் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள டீக் கடையில் ரேடியோவில் நேரடி வர்ணனையை நானும் நண்பர்கள் சிலரும் கேட்டுக்கொண்டு இருந்தோம்...நேரம் போகப்போக வர்ணனையை கேட்கும் கூட்டம் அதிகமாகிகொண்டே இருந்தது...அந்த அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டுவிட்டனர்...

    எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவருக்கு கை, கால் வேலை செய்யாது என்று சொன்னதாகவும் அதனால் விமானத்தில் இருந்து இறங்கும் அவரை ஒரு வீல்சேரில் அழைத்து ஆம்புலன்சில் ஏற்றி நேராக மேடைக்கு கொண்டு வந்துவிட வேண்டும்...என்பது R.M. வீரப்பன் அவர்களின் திட்டம்...

    மேடையில் ஆம்புலன்ஸ் ஏறுவதற்கு வசதியாக ஒரு ரேம்ப் அமைத்து இருந்தனர்...மற்ற தலைவர்கள் ஏற வலது பக்கம் படிக்கட்டுக்கள்...

    இப்பொழுது ரேடியோ வர்ணனை...

    மும்பையில் இருந்து எம்.ஜி.ஆர்., புறப்பட்டார்...

    வர்ணனையை கேட்ட அனைவரும் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம்...

    நேரம் செல்ல செல்ல அனைவருக்கும் டென்ஷன்...

    இனிமேல் எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார்...

    ஓடி, ஆடி சினிமாவில் சண்டை போட்டாரே இனிமேல் காலம் முழுவதும் வீல் சேரில் தான் இருப்பாரா...?

    பக்கம்,பக்கமாக வசனம் பேசினாரே...இனிமேல் அவரால் பேச முடியாதா...? இப்படி எல்லோர் மனதிலும் கவலை.

    மணி 7...

    மீண்டும் ரேடியோ வர்ணனை...

    "முதல்வர் வந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கும் என்று அறிவிக்க பட்டு இருக்கிறது..."

    மீண்டும் விசில், கைதட்டல், ஆரவாரம்...

    15 நிமிடங்கள் போய்இருக்கும்...

    மீண்டும் ரேடியோவில் செய்தி...

    "சென்னை விமான நிலையம் முழுவதும் ஒரே பனிமூட்டமாக இருப்பதால் M.G.R. வந்த விமானம் தரை இறங்க முடியவில்லை...ஆகவே விமானத்தை பெங்களூருக்கு திருப்பலாமா என்று விமானிகள் ஆலோசித்து வருகின்றனர்..." என்று ரேடியோவில் செய்தி...

    "ச்சே..என்னடா இது...தலைவர் வருவாரா...மாட்டாரா...?"

    "தலைவர் உண்மையிலேயே உயிரோடு இருக்காரா...?"

    "ஏதோ கோல்மால் நடக்குது..."

    என்றெல்லாம் விமர்சனங்கள்...இந்த ரேடியோ அறிவிப்புக்கு பிறகு.

    20 நிமிடங்கள் போயிருக்கும்...

    பனிமூட்டம் விலகி விமானம் தரை இறங்க போகிறது என்று அறிவிப்பு...

    இங்கு உற்சாகம்...கொண்டாட்டம்...

    எம்.ஜி.ஆரை அழைத்துவர ஓடுபாதைக்கே ஆம்புலன்ஸ் செல்கிறது.
    விமானத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., இறங்குகிறார்...

    "எதற்காக ஆம்புலன்ஸ்" என்று திட்டுகிறார்..?

    அவரது 4777 அம்பாசிடர் கார் வந்து இருக்கிறது... அதில் ஏறி உட்காருகிறார்...கார் புறப்டுகிறது...

    வழியெங்கும் மக்கள் வெள்ளம்...அவர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டே ராணுவ, மைதானத்திற்கு சென்றடைகிறார்.

    ஆம்புலன்சில் வருவார் என்று எதிர் பார்த்த தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர்., அம்பாசிடர் காரில் வருவதை பார்த்து அதிர்ச்சி...!

    இருந்தாலும் அதை சமாளித்துக்கொண்டு "காரிலேயே மேடைக்கு போய்விடலாம்" என்று ஆர்.எம்.வி சொல்கிறார்... எம்.ஜி.ஆர்., அவரை திட்டிவிட்டு வலது புறம் இருக்கும் படிக்கட்டுகளில் வழக்கம்போல வேகவேகமாக ஏறி ...

    மேடைக்கு வந்து அனைத்து திசைகளிலும் கைகாட்டுகிறார்...பின் பெண்களைப்பார்த்து தலையைகுனிந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்குகிறார்... அப்பொழுது வந்த கைதட்டல், விசில் சத்தம் சென்னை முழுவதும் எதிரொலித்து இருக்கும்.
    ரேடியோவில் வர்ணனையை கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிக்கொள்கிறோம்...

    இப்பொழுது தலைவர் பேசுவார் என்று அறிவிப்பு...

    ஒரே நிசப்தம்...

    எல்லோருமே தலைவரால் பேச முடியாது என்று நினைத்துக்கொண்டு இருந்த நேரம்...

    "பெரி......யோ...ர்....க......ளே, தா.....ய்....மார்....க.....ளே...."

    கொஞ்சம் வார்த்தை தடுமாறியது...பலரது கண்களில் கண்ணீர்...

    "என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..."

    தெளிவான உச்சரிப்பு. கம்பீரமான அதே குரல்...

    இப்பொழுது எழுந்த ஆரவாரத்தை பதிவு செய்து இருந்தால் கின்னஸ் சாதனையாகி இருக்கும்...அப்படி ஒரு கைதட்டல்...

    ரேடியோவில் கேட்டுக்கொண்டு இருந்த நாங்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும், கூச்சல் இட்டுக்கொண்டும் இருந்ததால் அதன்பின்பு எம்.ஜி.ஆர்., என்ன பேசினார் என்பதை கேட்க முடியவில்லை...

    வழக்கமாக காலை 6 மணிக்கு வரும் தினமலர் அன்று 11 மணிக்கு தான் வந்தது...பேப்பரை வாங்கிப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து திரும்பிய போட்டோக்கள். மேடையில் ஏறிய காட்சி, இரட்டைவிரலை காட்டிய காட்சி. பெண்களைப் பார்த்து தலைகுனிந்து வணங்குவது என்று முதல் பக்கம் முழுவதும் படங்களை போட்டு இப்படிதலைப்பு வைத்திருந்தார்கள்...

    நினைத்தேன் வந்தாய்...நூறு வயது....

    அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது எம்.ஜி.ஆர் அருகில் நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் ஸ்ரீ பாதராவ், பா.உ.சண்முகம், ஜானகி எம்.ஜி.ஆர்.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #812
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜு சார் இந்த மாதிரி
    நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா?
    கோஷ்டி சண்டைகளுக்கும் வேட்டி உருவல்களுக்கும் பெயர் போன இவர்களெல்லாம் பேசினால் என்ன ஆகி விடப் போகிறது, சமீபத்தில் கூட கராத்தே
    தியாக ராஜனும் கே. எஸ் அழகிரியும் மாறி மாறி நாறிக் கொண்டது
    ஊருக்கே தெரியும் அப்படியிருக்க இவர்களெல்லாம் பேச வந்து விட்டார்கள் , அந்தக் காலத்தில் இருந்தே திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி,
    சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்றெல்லாம் கோஷ்டி
    அரசியல் நடத்திக் கொண்டு அடுத்தவன் காலை எப்படா வாரலாம் என்று குழி பறிப்பதற்கு என்றே பிறந்த கூட்டம் தலைவரைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? விமர்சனம் என்பது பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்க முடியும், அது காந்தி ஆனாலும் சரி புத்தன் ஆனாலும் சரி ஆனால் அது வைக்கும் விதத்தைப் பொறுத்தது
    நான் மட்டும் யோக்கியன் அடுத்தவன் எல்லாம் அயோக்கியன் என்ற வகையில் விமர்சனம் செய்வது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது, சிவாஜிக்கு
    அந்தக் காலத்தில் குழி
    பறித்தது அவர்களின்
    ஆட்கள் தானே தவிர வேறு யாரும் கிடையாது திண்டிவனம் ராமமூர்த்தி, பழ. நெடுமாறன், போன்றவர்கள் சிவாஜிக்கு எதிராக என்ன உள்ளடி வேலை எல்லாம் செய்தார்கள் என்பதை " நான் கண்ட
    அரசியல்" புத்தகத்திலும் இன்னும் பல புத்தகங்களிலும்
    கண்ணதாசன் விலா வரியாக சொல்லி இருப்பார் ஏன் ஒரு படி மேலே போய் காமராஜர்
    எப்படிப் பட்ட புத்தி உள்ளவர் அடுத்தவன் மேலே வந்தால் அவனை அமுக்குவதற்கு என்ன செய்வார் எப்படி எல்லாம் பொறாமை அடைவார் என்பதையும் இதே கண்ணதாசன் தான் புத்தகத்தில் எழுதினார் இவ்வளவுக்கும் கண்ணதாசன் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர்
    தலைவர் பொய் சொல்லி ஜெயித்தார் என்ற வார்த்தைக்கு வருவோம், அப்போ அரசியலில் ஜெயித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லி ஜெயித்த வர்கள் அப்படித்தானே சரி காமராஜர் பொய் புரட்டு சொல்லித்தான் முதல்வர் ஆனாரா?
    மூதறிஞர் இராஜாஜி மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் பொய் சொல்லித்தான் முதல்வரும் பிரதமரும் ஆனார்களா? தோற் பவன் தான் காரணம் தேடுவான் , இதைத்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் உரையாற்றும் போது சொன்னார் " மக்கள் மன்றத்தில் தோற்றுப் போய் விட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து சொல்பவர்களின் வாக்கு என்பது முற்றிப் போன ஒரு பித்தனின் வார்த்தையைப் போன்றது காரணம் பித்தன் எதையாவது உளறிக் கொண்டேதான்
    இருப்பான் அதைப் பார்த்து நாம் பரிதாபப் படத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று
    அதைப் போல்தான் இந்த நாறிகளின் வார்த்தையும் புலம்பலும் பற்கடிப்பும்
    விட்டுத் தள்ளுங்கள் ராஜு சார்
    அடுத்ததாக இலவசம் கொடுத்து ஏமாற்றிய கதைக்கு வருவோம்
    ஆரம்பத்தில் இலவசத்தின் பிதாமகன் யார்? காமராஜர்தானே இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அப்போ அது மனிதாபத்தினால் அல்ல மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும்
    ஒரு தந்திரம் அப்படித்தானே, என்னய்யா இது நீங்கள் கொண்டு வந்தால் நலத்
    திட்டம் மற்றவன் கொண்டு வந்தால் ஏமாற்று வித்தை அப்படித்தானே?
    அடுத்தது சிவாஜி பெரிய வள்ளலாம் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாரா? அப்படி எத்தனைபேர் இவரால்
    பயன் பெற்றனர் என்று
    இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் படித்ததில்லை, தெரியாமலா மறைந்த
    முன்னாள் அமைச்சர்
    காளிமுத்து அவர்கள் சொன்னார்கள் சிவாஜியை ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று,
    எனவே ராஜு சார் இந்த
    மாதிரி விமர்சனங்களை வைக்கும் சூரியனைப் பார்த்து ஏதோ குரைக்குமாமே அந்த மாதிரி ஜென்மங்களாக
    நினைத்துக் கொண்டு
    விட்டுத் தள்ளுங்கள்
    இது போன்ற விமர்சனங்களால் தலைவரின் புகழ் இன்னும் சுடர் விட்டுப்
    பிரகாசிக்குமே தவிர
    குறைய ப் போவதில்லை
    Leave it Raju sir!........ Thanks wa.,

  4. #813
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தினமலரில் எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்து நினைத்து பூஜிக்க போகும் மகாசக்தியை மக்கள் சதவிகதத்தில் கோடியில் ஒரு சதவிகிதம் கூட இல்லாத ஒரு கும்பலின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிய விமர்சனம். நீங்கள் மக்கள் மத்தியில் அறியப்படும் நபராக விளங்கவேண்டுமா? உடனே புரட்சி தலைவர் என்ற பிரம்மாஸ்திரமத்தை கையில் எடுத்து அந்த மகானின் அறநெறிகளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யுங்கள்.உடனே ஒலிமூலமாகவோ.எழுத்துமூலமாகவோ பெரும் கண்டனங்கள் எழும்.உடனே ஒரு சில தினங்களில் மறைந்து விடும்.மறுபடியும் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அந்த நபர் இந்த பிரம்மாஸ்திரத்தை வேறுவகையில் கையில் எடுப்பார்.அவருக்கும் இதே கண்டனம்தான்.இதை எல்லாம் பார்த்து பார்த்து கேட்டு கேட்டு அலுத்து போய்விட்டது.
    இவர்கள் இந்த ஜென்மத்தில் திருந்தமாட்டார்கள்.உதாரணம் . காரணம் இருந்து விமர்சித்தால் அதற்கு பதில் கூறலாம்.இவர்களுக்கு தலைவர் மண்ணுலகில் இருந்த பொழுது இருந்த புகழைவிட விண்ணுலகில் இருக்கும் போது உலகில் எந்த தனிமனிதருக்கும் இல்லாத புனித புகழ் எகிறிக் கொண்டே போகிறதே என்கிற பொறாமையில் தன்னிலை மறந்து சுயநினைவு இல்லாமல் விமர்சனம் செய்பவர்களை கேட்பதற்கு தலைவர் உருவாக்கிய கழகமும் இல்லை.அவரால் பலன் பெற்ற பெரிய மனிதர்களுக்கும் நேரமும் இல்லை.சாதாரண தனிமனிதனுக்கு வசதியும் இல்லை.ஆகையால்பக்தர்களாகிய நாமும் வேறு வகையில் புரட்சி என்கிற பிரம்மாஸ்திரமத்திரத்தை கையில் எடுத்தால்தான்இவர்கள் அடங்குவார்கள். இல்லை என்றால் காலம் இப்படியேதான் இன்னும் பல விமர்சனங்களை கடக்கும்.அதில் காட்சிகளும் மாறாது.காரணமும்மாறாது.ஆகவே இதற்கு மௌனம் தான் பதில் கூறும்..கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தன்.ஷிவபெருமாள்............ Thanks wa.,

  5. #814
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உ.சு.வா நிறைவு பகுதி.

    டோக்கியோவில் குழு அந்த ஊரில் உள்ள மிகவும் பிரசத்தி பெற்ற டவரில் படம் எடுத்தது.இரவு நேரங்களில் ஜொலிக்கும் kinsaang வீதியில் அசோகன் லதாம்மா முதுகில் கை துப்பாக்கியுடன் செல்லும் காட்சி , வாத்தியார் சந்திரகலா நாகேஷ் நடித்த காட்சிகள் அருமையாய் வந்தன...

    ஹீமோரிலால் என்ற இடத்தில் தண்ணீரில் காட்சிகள் ஷோ ஒன்று நடந்து வந்தது. போய் பார்த்தால் அருமை.தண்ணீருக்குள் பெண்கள் குழு நடனம்.. சுவாசகுழாய்களை இடுப்பில் கட்டி கொண்டு மூச்சை அடக்கிக்கொண்டு பார்க்க பிரமிக்க வைத்தது.. தண்ணீர் ஊற்றுக்கள் காண கண் கோடி வேண்டும்.எப்படியும் ஒரு காட்சி எடுக்க பட வேண்டும் என்று அதன் சாயலில் அவளொரு நவரச நாடகம் பாடல் பிறந்தது....அந்த ஷோவின் உரிமையாளர் ஒரு பெண் என்ற தகவல் மேலும் ஆவலை தூண்டியது....

    மேல இருந்து தண்ணீருக்குள் பாயும் மரண ரயில் போல பயம் ஊட்டிய speed train ல் படம் பிடித்தது குழு..

    ஒரு இடத்தில் நம் தலைவரின் சுறுசுறுப்பை கண்ட ஒரு அமெரிக்க தம்பதியர் விரும்பி வந்து தலைவருடன் வண்ண புகைப்படம் எடுத்து கொண்டனர். நீங்கள் கண்டிப்பாக அமெரிக்கா வந்து அங்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள வாத்தியார் புன்னகையுடன் சரி என்கிறார்.

    மிகவும் சவாலான படப்பிடிப்பு என்றால் அது உலகம் அழகு பாட்டுத்தான்... எட்டு லட்சம் மக்கள் மத்தியில் அனுமதிக்க பட்ட நேரத்தில் உடை மாற்ற ஒரு இடம் என்று இல்லாத இடத்தில் காமெராக்களை அங்கும் இங்கும் தூக்கி கொண்டு வாத்தியாரே பல நேரங்களில் சுமந்து கொண்டு அவர் வைத்து இருந்த ஒரு zoomlence உதவியுடன் படமாக்கினார் வாத்தியார். ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி உழைப்பு அசாத்தியம்..

    தடித்த கண்ணாடி கூண்டுக்குள் வாத்தியார் மஞ்சுளா அதுவும் அந்தரத்தில். ஒரு புறம் 4 மைல் தூரத்தில் இவர்களை தேடும் அசோகன், நாகேஷ் வேறு அங்கும் இங்கும் தேடவேண்டும். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியாது.. அதோ பாரு என்று அண்ணன் தம்பியை தேட வாத்தியார் காண்பிக்க வேண்டும்...ஒரு வெளிச்சத்தை கூண்டுக்குள் இருந்து காட்டியவுடன் அனைவரும் நடிக்க வேண்டும் என்று முதலில்.... வெளிச்சம் காட்டப்பட்டபோது அது வெளியே தெரியவில்லை.ஒருவர் மூலம் சொல்லி அனுப்ப பட்டு நீங்கள் பாட்டு நடித்து கொண்டே இருங்கள் எல்லாவற்றையும் எடுத்து முடித்த பின் எல்லோரும் இணைவோம் என்று சொல்லி சுமார் 3 மணி நேரம் எல்லோரும் திருப்பி திருப்பி நடித்து கொண்டு இருக்க வாத்தியார் முருகன் ஆகவும் ராஜு வாகவும் உடை மாற்றி மாற்றி எடுக்க பட்ட காட்சிகள் எப்படி வரும் என்று ரஷ் போட்டு பார்க்க முடியாமல் நன்றாக வரும் என்று நம்பினார் வாத்தியார்....குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து முடிக்க பட அனைவரையும் கண்ணீர் மல்க பார்க்கிறார் வாத்தியார்.

    அடுத்து ஒரு பிரசவம் போல காட்சிகள் என்று போட்டு பார்க்க பட்டன.ஒரு குழந்தை பிறந்தது..நன்றாக இருந்தது....எந்தவித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக பிறந்தால் எப்படி ஒரு தம்பதியர் மகிழ்ச்சி அடைவார்களோ அப்பிடி இருந்தன காட்சிகள்.... இது ஒரு அதிசியமே....அதுதான் வாத்தியாரின் அனுபவம் உழைப்பு திறமை நம்பிக்கை..

    இங்கு தமிழகத்தில் அரசியல் மேகங்கள் மாறி வாத்தியாரை கட்சியை விட்டு நீக்கி எம்ஜியார் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றும் படி திமுக கிளை செயலாளர் வரை தீயசக்தி கடிதம் எழுதி விசில் அடித்த குஞ்சுகளை மிரட்டி உருட்டி இளம் கன்று பயம் அறியாது என்பதை மறந்து தீயசக்தி பதவி போதையில் ஆட எங்கள் உயிர் போனாலும் எம்ஜியார் வழி நடப்போம் என்று ரசிகர்கள் கொதிக்க..

    அந்த நாளும் வந்தது.அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன நடந்தாலும் உ.சு.வா.திரைப்படம் நடக்கும் அரங்கம் பக்கம் யாரும் போக போக கூடாது என்று மறைமுக உத்தரவுகள் வர.. தீயசக்தி மாவாட்டும் செயலர்கள் தடுக்க துடிக்க.

    மன்றம் கண்ட நெஞ்சங்கள் அதை தடுக்க வேறு மாதிரி யோசிக்க...மதுரையில் படம் வெளியாக வேண்டிய திரையரங்கம் கொளுத்த பட, படத்தை சுற்றும் ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட மே 10 1973 இரவு முதல் ஒவ்வொரு படம் வெளி வரும் திரை அரங்கம் முன்பும் 10 மடங்கு கூட்டம் விடிய விடிய காத்து நிற்க

    அனைவர் கண்களிலும் மண்ணை தூவி எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றியை நாளை சரித்திரம் சொன்ன பாடல் ஒலிக்க

    நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளி முக்கிய வாசல்கள் திறக்க படாமல் பெண்கள் முதல் வாரம் படம் பார்க்க முடியாமல் எறிகுதித்து உள்ளே போகணும்....படம் பார்த்து விட்டு ஏறி குதித்து வெளியே வரணும்....ஒரு காட்சியில் இத்துணை பேர் என்றால் அதை விட பல மடங்கு கூட்டம் நாடு எங்கும் கூட...

    அப்படி படம் 46 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த காட்சி டிக்கெட் 40 பைசா இன்னும் ஒன்று 3 ரூபாய் 35 காசுகள் மதிப்பில் பதிவில் பார்வைக்கு....

    எம்ஜியார் ஒரு மந்திரசக்தி...மக்கள் சக்தி...நடமாடிய எலெட்ரிக் பவர் ஹௌஸ் ...தொட்டவன் கேடு நினைப்பவன் தூக்கி எரியப்பட்டது வரலாறு....நன்றி

    இந்த தொடர் பதிவுகள் தலைவர் அவரே அன்று வந்த பொம்மை சினிமா இதழில் திரை கடல் ஓடியும் திரைப்படம் எடுத்தோம் என்பதில் இருந்து வந்தது.... ஒரு சின்ன ஆர்வத்தில் தொடங்கினேன் ஆதரித்த அத்துணை எம்ஜியார் நெஞ்சங்களுக்கும் பாதம் பணிந்த நன்றிகள். குறைகள் பிழைகள் இருந்தால் மன்னிக்க..... தொடரும்.

    விரைவில்.
    உங்கள் பேராதவுடன் அடிமை விலங்கை உடைத்து தாயின் பெருமையை உலகுக்கும் வழக்கம் போல் எடுத்து உணர்த்திய வேங்கையன் வீர வரலாறு...தொடரும்.

    பின்குறிப்பு....சொல்ல மறந்து விட்டேன் உ.சு.வா புது பாணியில் இறுதி சண்டை காட்சிகள் பனி மலையில் நடப்பது போல் மாற்றி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன...நன்றி....... Thanks...

  6. #815
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த ஒரு வாரமாக இயங்காமல்... இன்று மீண்டும் இயங்கும் மையம் இணைய நிர்வாகத்தினருக்கு அனைவரின் சார்பாக நன்றியும்... நல்வாழ்த்துக்கள்...

  7. #816
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உ.சு.வா பாகம் 10..

    படத்தை எடுக்க இந்திய அரசின் அந்நிய செலாவணி துறை அனுமதித்த தொகையை கொண்டு அத்துணை நாடுகளிலும் படம் எடுப்பது சவால்கள் நிறைந்தது...மணியன் அவர்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றிக்கடன் செலுத்த கூடியது என்கிறார் எம்ஜியார்.

    பாடல் காட்சிகளே சவாலாக இருந்தன.. வாத்தியாரும் மஞ்சுளாவும் அந்த கப் அண்ட் சாசருக்குள்ள உக்கார்ந்து அது சுழலும் வேகத்தில் கூட ஏறி இருந்த மற்ற சுற்றுலா பயணிகளுக்கும் தொந்தரவு செய்யாமல் எடுக்கப்பட்டது சவால்தான்...

    அதே போல பன்சாயீ பாடலில் கடலுக்கு அருகில் உள்ள பாலத்தில் போகும் ஒரு மின்சார ரயிலை படம் எடுக்க 2 மணி நேரத்துக்கு மேலே காத்து இருக்க வேண்டி இருந்தது...

    தங்கத்தோணியிலே பாடலில் படகில் வாத்தியார் கால்களுக்கு நடுவில் பறந்து செல்லும் விமானம் அடடா இன்றும் நினைத்தால் காட்சி கண் முன் ஓடும்.

    இந்த சவால்களுக்கு நடுவில் தமிழகத்தில் என்ன நடக்கிறது அரசியல் சூழ்நிலை எப்படி உள்ளது என்று எதுவும் தெரியாமல் ஏன் என்றால் தமிழ் பத்திரிகைகள் அப்போது அங்கு வருவது இல்லை..ஏர் பிரான்சில் வேலை செய்யும் கோபால் என்பவர் மொத்த பத்திரிகைகளையும் கொண்டு வர ஆர்வமாக படிக்கிறார் பொன்மனம்..


    ஒசாகாவில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் விமானத்தில் இருந்து பியூஜி எரிமலை புகைந்து கொண்டு இருப்பதை பார்த்து வியக்கிறார் வாத்தியார். இரவு 10 மணி நகருக்குள் தங்கினால் செலவு அதிகம். நகரை விட்டு தூரத்தில் சென்று குறைந்த கட்டணத்தில் தங்குகின்றது நம் குழு.

    மறுநாள் அங்கு உள்ள நாயர் கடையில் இந்திய உணவு வகைகள் கிடைக்கும் என்று தெரிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாடா நம் ஊரு சாப்பாடு என்று குழு சந்தோசமாக அங்கு செல்ல கடை வாசலில் மிக நீண்ட கியூ வரிசை அய்யோ இதுவும் இப்படியா என்று வரிசையில் நம் வாத்தியார் உள்பட அனைவரும் நிற்க 15 பேர் வெளியே வந்த 30 பேர் இடித்து கொண்டு உள்ளே போக.....சற்று நேரத்தில் உரிமையாளர் அடுத்து எம்ஜியார் குழு உள்ளே வாங்க என்று கூப்பிட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. வாசல் அருகில் குழு போக அதற்குள் 10 பேர் நுழைய இரண்டு பேருக்கு இடம் இல்லை அங்கு நிற்கும் எம்ஜியார் பண்பு.... பரவாயில்லை நான் பின்னால் சாப்பிடுகிறேன் நீங்க அனைவரும் உட்கார்ந்த இடம் விட்டு நகராமல் சாப்பிடுங்கள் என்று சொல்ல அட்டை பெட்டியில் பரிமாறும் கறி, மீன் குழம்பு, கெட்டி தயிர்..அதுவும் அட்டை பாக்ஸில்.....சுமார் சாப்பாடு.... கடை உரிமையாளர் பையன் வந்து குழுவுடன் பேச அவர் அப்படியே ஜப்பானியர் சாயலில் இருக்க பின்னால் தெரியவருகிறது நம்ம நாட்டு நாயர் அங்கே உள்ள ஜப்பானிய பெண்ணை மணந்து கொண்ட விவகாரம்.. சபாஷ்... நாயரே

    அதே போல ஹாங்காக் கடை வீதியில் ஒரு பாலம் ஒரு புறம் இருந்து மறுபுறம் போக....பாலத்தில் இரு புறமும் கண்ணாடி....அங்கு நின்று தலைவர் ஆராய்ச்சி குறிப்பின் அடுத்த பகுதி எங்கே இருக்கு என்று சொல்ல வர அதை அசோகன் கேட்க வரும் நேரத்தில் அப்புறம் என்று தலைவர் சொல்லும் ஸீன் எடுக்க பட்ட இடமும் சிறப்பு... அதுக்கு பக்கத்தில் இருந்த ஹில்டன் ஹோட்டலில் விருந்து கொடுத்தார் வாத்தியார்...

    நாளை உலகம் பாடலில் குழு அடைந்த சங்கடங்கள் அனைவரும் பொறுமை காத்த நிகழ்வுகள், இந்திய தூதரக அதிகாரிக்கு நன்றி சொன்ன வாத்தியார்.... நன்றி . உலகம் நாளையும் சுற்றும்... வாழ்க எம்ஜியார் புகழ் நன்றி.......... Thanks...

  8. #817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சேர்க்கவில்லை பணத்தை எம் ஜி ஆர்
    சேர்த்தார் மக்கள் அன்பை

    வாங்கவில்லை மனைகளை எம் ஜி ஆர்
    வாங்கினார் மக்கள் மனங்களை எம்ஜிஆர்

    சொந்தம் அக்கவில்லை ஊரார் சொத்துகளை எம் ஜி ஆர்
    சொந்தம் ஆக்கினார் மக்கள் மனங்களை எம் ஜி ஆர்

    ஊழல் செய்யவில்லை எம் ஜி ஆர்
    ஊழியம் செய்தார் ஊருக்கு எம் ஜி ஆர்

    சொந்தம் ஏதும் இல்லாமல் வந்தார் தமிழகத்துக்கு எம் ஜி ஆர்
    மொத்த தமிழ் குடும்பவுமே எங்க வீட்டு பிள்ளை என சொந்தம் கொண்டாடியது எம் ஜி ஆரை இன்று

    காலூன்ற ஒரு இடம் இல்லாமல் இருந்த எம் ஜி ஆர்
    காவல் தெய்வமாக மாறி எங்கும் நிறைந்தார்
    ....
    வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks...

  9. #818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தெய்வத்தின் #பணம்

    "ராமுவைக் காப்பாற்றுங்கள்"...
    இது 1974 ம் வருடத்திய 'குமுதம்' வார இதழில் வந்த தலைப்பு...

    சென்னை மயிலையைச் சேர்ந்த திரு.ராமு என்பவர் இருதயக்கோளாறினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என்பது தான் அந்தச் செய்தியின் கரு.

    இதைக்கேள்விபட்ட தேவர் பிலிம்ஸைச் சேர்ந்த கலைஞானம் என்பவர் மயிலாப்பூர் சென்று அவருக்கு உதவுவதாகக் கூறி தேவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

    முதல் மாடியிலிருக்கும் தேவரைக்காண இருவரும் படியேறிச்செல்லும் போது, தன் மார்பில் கைவைத்து திடீரென்று உட்கார்ந்து விடுகிறார் ராமு. ஆனால், சிலவிநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். தேவரின் முன்னால் சென்று கலைஞானம், ராமுவின் நிலைமையை விளக்குகுறார்...

    தேவர், ராமுவிடம் 'அமெரிக்கா செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும்? எனக்கேட்க, 'ரூ.10000/- தேவைப்படும் என்று ராமு சொல்கிறார்.

    ' இப்போதைக்கு இந்தா ரூ.5000/-, மீதிப்பணத்தற்கு வேறு யாராவது உதவுகிறார்களா? ன்னு பாரு...அப்படி வேறு யாரும் உதவவில்லையெனில் மீதிப்பணத்தையும் நானே தருகிறேன்...' என்று தேவர் கூறுகிறார்...

    ராமு அந்தப் பணத்தை வாங்கிச்சென்று, அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், தேவர் தழுதழுத்த குரலில், கலைஞானத்திடம் இப்படிக் கூறுகிறார்...

    "இந்தப் பணம் கூட என்னுடையதல்ல...என் தெய்வத்தினுடையது...." (வாத்தியார்)
    வாத்தியார் மேல எந்தளவு பக்தி பாருங்க தேவருக்கு...!

    நல்ல எண்ணத்தில் கொடுக்கப்படும் பணமானது நல்ல விஷயங்களுக்காத் தானே சென்றடைந்துவிடுமல்லவா...!!!........... Thanks...

  10. #819
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் விழா வெற்றிபெற இதே வாழ்த்துக்கள் ......
    " பாண்டிச்சேரி மாநிலத்தில் பாரதரத்னா
    புரட்சி தலைவர் 102ஆம் ஆண்டு பிறந்த
    நாள் விழா!!
    --------------------------------------------
    பார் போற்றும் உத்தமர் பாரதரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்தநாள் விழா ஆகஸ்ட் மாதம் 10-8-2019ஆம் நாள் சனிக்கிழமை பாண்டிச்சேரி காந்தி திடல் கடற்கரையில்
    புதுவை எம்ஜிஆர் பேரவை மற்றும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது!!
    விழாவிற்கு அண்ணன் பிரான்ஸ்
    Sp முருகு பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்!!
    சிறப்பு அழைப்பாளர்கள் :
    உலக எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் :
    மனித நேயர் அண்ணன் திரு சைதையார்
    அண்ணன் திரு AC சண்முகம்
    அண்ணன் திரு ஐசரி கணேஷ்
    கலாம் அய்யா அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு பொன்ராஜ்
    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு குறிஞ்சி வேந்தன்
    மற்றும் முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்!!
    திரு.நாமக்கல் எம்ஜிஆர் அவர்கள் தலைவர் பாடல்களுக்கு ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்துகிறார்!!
    பட்டிமன்ற நடுவர் திரு கலக்கல் காங்கேயன் அவர்கள் தலைவர் குறித்துப் பாடல்மன்றம் நடத்துகிறார்!!
    இசையரங்கம் உட்பட
    இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது!!
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண்ணில் நமது புரட்சி தலைவரின் புனித விழாவில் கலந்து கொண்டு அனைத்து நிகழ்வினையும் கண்டு மகிழ நமது புரட்சி தலைவரின் பக்தர்கள் அனைவரையும் அலைகடலென பாண்டிச்சேரி நோக்கி வாரீர்! வாரீர் என இருகரம் கூப்பி விழாக்குழுவினர் சார்பில் முகநூல் வழியே அன்போடு அழைக்கின்றோம்!!
    அனைவரும் வாரீர்!!
    ஆர்ப்பரிக்கும் பாண்டிச்சேரி கடல்
    அலைகளை மிஞ்சும் விதத்தில்
    நமது புரட்சி தலைவரின்
    பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியட்டும்!!
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!!
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!!
    என்று கவிதை எழுதிய பாரதிதாசன் பிறந்த பாண்டிச்சேரி தினறும் அளவில் அனைவரும் ஆங்கே சங்கமிப்போம்!!
    இடம் : பாண்டிச்சேரி கடற்கரை காந்தி
    சிலை அருகில்,
    நேரம் : மாலை 4 மணியில் இருந்து
    இரவு 9:30 வரை,
    நாள்: 10-8-2019 சனிக்கிழமை......... Thanks...

  11. #820
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    , பதிவிறக்கம் செய்யப்பட்டது. இது கட்டுரை அல்ல. 1972ம் ஆண்டு நடந்த அக்டோபர் புரட்சியில் ஒரு உத்தமத் தலைவனுக்காக,அவருடைய உண்மைத்தொண்டர்கள் நிகழ்த்திய உணர்ச்சிப்போராட்டம். இதைப் படிக்கும்போது நீங்களும் உணர்ச்சிவசப்படப் போவது உண்மை.

    போராட்டமே வாழ்க்கை!

    ”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறது!”

    இப்படிச் சொன்னவர், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!

    இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!

    ‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

    அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!

    அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!

    அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!

    ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!

    கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்

    ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

    நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

    ‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

    ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வாழ்க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

    சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

    ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

    ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸ்காரராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

    ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை.

    ஊரறிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

    கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!

    1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில் அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.

    அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முறிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதான் கூறினார்கள்.

    சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

    ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.

    குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்

    1967 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.

    அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?

    ”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.

    மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.

    அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?

    ”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!

    எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி ரசிகர்களும், உடன் பிறப்புக்களும் அக்குறையை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.

    1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

    அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.

    அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்தரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!

    அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.

    ‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.

    ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

    எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.

    புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1987இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.

    ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.

    முதல் போராட்டம்

    1967 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

    அப்போது கழுத்தில் கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலகத்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

    தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

    அதிக வாக்கு யாரால் கிட்டியது?

    அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

    ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

    தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

    தலைவரின் தவறான கணிப்பு!

    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத் தலைவராக உயர்த்திக்கொண்டார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டார். ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

    ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்

    இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி .ஆருக்கு வேதனை அளிப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

    நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நடவடிக்கைகள் புரட்சித்தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

    இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

    அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருணாநிதி அறிவித்தார்.

    மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.

    அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!

    இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

    ”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

    கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய் இருக்கும்.

    அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

    கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

    எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

    உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைஞருக்குக் கட்டுபட்டவர்கள்தாம் . இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

    தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

    ”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

    அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

    ”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

    அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

    கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

    இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

    புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

    அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

    அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

    நெஞ்சில் எழுந்த நினைவலைகள்

    சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

    தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

    அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

    அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

    முதன்முதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

    அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

    சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது; இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது.

    கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

    நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

    அருமை நண்பர்கள் எங்கே?

    வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

    என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

    ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

    தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடிகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
    நான்காம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

    அலை கடல் எழுந்ததோ?

    ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

    எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

    காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம், கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

    ”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

    சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

    ”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

    உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

    ”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

    செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

    புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

    புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

    அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!

    அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

    ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

    ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

    அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

    எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

    எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

    தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

    ‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

    நாங்கள் உங்கள் பின் இருப்போம்!

    அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

    அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

    அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

    கருத்தறியும் சுற்றுப்பயணம்

    எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

    ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

    அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

    பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

    அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

    மாலை 5 மணி?............. Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •