Page 81 of 402 FirstFirst ... 3171798081828391131181 ... LastLast
Results 801 to 810 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #801
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    நண்பர்களே
    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று
    ஊர் சொல்ல வேண்டும்

    இது நீண்ட பதிவு
    தயவு செய்து பொறுமையா படித்து
    பாருங்கள்

    மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..

    ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!

    நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்

    ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..

    எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..

    நிலவைப் போலே.. பளபளங்குது
    நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது

    மலரை போலே.. குளுகுளுங்குது
    மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது

    பளபளங்குது கிறுகிறுங்குது
    குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...

    ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.

    எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.

    எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.

    135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.

    எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.

    எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.

    எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.

    ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.

    அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?

    'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.

    எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.

    அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.

    முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.

    இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?

    52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.

    இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.

    அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.

    'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.

    ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.

    சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.

    ’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

    நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?

    சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.

    கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.

    எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.

    நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.

    அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.

    எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.

    அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.

    எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

    படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.

    அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.

    இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

    நான் புதுமையானவன்
    உலகை புரிந்து கொண்டவன்
    நல்ல அழகை தெரிந்து
    மனதை கொடுத்து
    அன்பில் வாழ்பவன்
    ஆடலாம் பாடலாம்
    அனைவரும் கூடலாம்
    வாழ்வை சோலை ஆக்கலாம்

    இந்த காலம் உதவி செய்ய
    இங்கு யாரும் உறவு கொள்ள
    அந்த உறவை கொண்டு
    மனித இனத்தை அளந்து பார்க்கலாம்

    இசையிலே மிதக்கலாம்
    எதையுமே மறக்கலாம்
    இசையிலே மிதக்கலாம்
    எதையுமே மறக்கலாம்

    என்னை தெரியுமோ
    நான் சிரித்து பழகி
    கருத்தை கவரும்
    ரசிகன் என்னை தெரியுமோ

    உங்கள் கவலை மறக்க
    கவிதை பாடும் கவிஞன்
    என்னை தெரியுமா

    ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...

    நன்றி sendra சார்
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி����........... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1980 நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தது !!

    ""எம்.ஜி.ஆர் இரட்டைவிரலை காட்டினார் !
    மக்கள் இரண்டு இடங்களை கொடுத்துள்ளார்கள் ""
    என்று கிண்டல் செய்தார் கருணாநிதி !!

    இந்திராவுக்கு அழுத்தம் கொடுத்து கழக ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டது !!

    கழக முன்னனி அமைச்சர்கள்
    நாஞ்சிலார் சுப்புலட்சுமி உள்ளிட்டவர்கள் திமுக வுக்கு ஓடினர் !!

    தேர்தலை சந்திக்க எம்.ஜி.ஆர் க்கு கடும் பண நெருக்கடியில் 17 இலட்சம்
    நிதி தந்து உதவினார் ஜி.வி.என்ற வரதராஜ் நாயக்கர் !
    (பிஎஸ்ஜி நிறுவனங்களின் தலைவர் )

    மக்களிடம் நேரில் நியாயம் கேட்டார் தலைவர் !!!
    (அப்போது மீடியா பலம் இல்லை )

    ஒரே வார்த்தைதான்

    ♦" நான் என்ன தவறு செய்தேன் ?♦

    ♦'ஏன் எனக்கு ஓட்டு போடவில்லை ?♦

    இந்த கேள்வியை தைரியமாக மக்களிடம் கேட்ட ஒரே தலைவன்
    உலக அரசியல் வரலாற்றிலேயே
    #புரட்சிதலைவர் மட்டுமே !!!

    மக்கள் அலைஅலையாய் திரண்டு
    தலைவரை மீண்டும் முதல்வராக்கினார்கள் !!

    தலைவர் பிரசாரம் செய்த கடைசி பொது தேர்தல் அதுதான் !!...............நன்றி........

  4. #803
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புராண காலத்திலிருந்து ....
    இன்று வரை ...
    கொடைவள்ளல்கள் ....
    என்றாலே ...
    இருவர் பெயர்தான் ..
    மக்களின் நினைவில் வரும் !!

    ஒருவர் கர்ணன் !
    இன்னொருவர் எம்.ஜி.ஆர் !!

    கர்ணன் கூட கொடையாளி என்பதை தவிர்த்து மிகவும் மோசமானவன் !!

    திரௌபதியை அஸ்தினாபுர அரசவைக்கு இழுத்துவர சொல்லி உத்தரவிட்டது கர்ணன் தான் !!

    சமாதானம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ..

    துரியோதனனை தூன்டிவிட்டு
    போருக்கு வித்திட்டது கர்ணன்தான் !!

    ஆனால் புரட்சிதலைவர்
    ஈ எரும்புக்கு கூட தீங்கு நினைக்காத
    பொன்மனம் படைத்தவர் !!

    எனவே நான் கண்ட மனிதரில் சிறந்தவர்
    புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !!

    #இனிய_காலை வணக்கம் !!!........... Thanks...

  5. #804
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொடுத்து கொடுத்து சிவந்த கரம் தலைவர் ஒருவரே;-..........

    எம்ஜிஆரிடம் துணை மந்திரியாக பதவி வகித்த ஐசரி வேலன், 14-06-1987ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலே மாரடைப்பால் இறந்து விடுகிறார்அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீடு ஜப்திக்கு வருகிறது...

    பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ஐசரி கணேஷ் மிகுந்த கஷ்ட நிலைக்கு ஆளாகிறார் இதிலிருந்து மீள ஒரே வழி எம்ஜிஆரை சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்

    வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்

    மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் "எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாமல் யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கிறதை எழுதிக் கொடுத்திட்டு போ என்கிறார்

    இரண்டாவது நாள் ஜசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரத் தோட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்

    உதவியாளர் மாணிக்கத்தை அழைத்த எம்ஜிஆர் அந்த பையை எடுத்திட்டு வா என்கிறார்

    எம்ஜிஆர் ஐந்து விரலை காட்டி "இதிலே ஐந்து லட்ச ரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சு மிச்சம் இருக்கிற ஓரு லட்ச ரூபாயைக் கையில வச்சுகிட்டு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்" என்று வார்த்தையாலும் சைகையாலும் சொல்லி அந்த பணப்பையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

    ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை கண்ணால் பார்த்த ஐசரி கணேசிற்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது

    உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேசை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர்.முதலில் ஜீப் நேராக புரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்கு செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தை கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேசிடம் தருகின்றனர்

    பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடி கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்சியரிடம் கடனை திருப்பி அடைக்கின்றனர்

    உடன் வந்த உதவியாளர்களே எல்லா கடன்களையும் செட்டில் செய்து விட்டு மீதமிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.

    எம்ஜிஆர் கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வைத்து கன்ஸ்டிரக்சன் வேலையை தொடங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகி , வேல்ஸ் கல்லூரியையும் நிர்வகித்து வருகிறார் ஐசரி கணேஷ்.......... Thanks...

  6. #805
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1973 APRIL மாதம் மக்கள் திலகம் ஒரு PRESS MEETING ல் கூறினார். நான் நடிக்க ஒப்பந்தமான படங்கள் 18 படங்கள் கருணாநிதியின் மிரட்ட லின் பேரில் நிறுத்தப்பட்டிருக்கிறது. என்னை வைத்து படம் எடுக்கும் PRODUCER களை கருணாநிதி மிரட்டுகிறார். என்னை படத்தை வாங்கும் DISTRIBUTORS மிரட்டப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். MGR ரசிகர்கள் இந்த விஷயங்களை இன்றைய தலைமுறையினருக்கு தயவு செய்து எடுத்துக் கூறவும். இது என் பணிவான வேண்டுதல். YOURS V.SUNDAR........ Thanks...

  7. #806
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது கதை அல்ல நிஜம்
    ------------------------------------------------
    பாகனேரி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தற்போதும் அதிமுகவில் இருக்கிறார் ;

    ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.

    எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால் எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார். எம்ஜியாரை எதிர்த்து கடுமையாக பொது கூட்ட மேடைகளில் விமர்சிப்பார் ;

    தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை அடித்து தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாண செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு , நான் கல்யாணத்துக்கு வந்தா வரவேற்ப்பு,க ட்சிக்காரனுக்கு சாப்பாடு அது-இதுன்னு
    எக்கச்சக்கமா செலவு வரும். நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி என தனது நரி சிரிப்பை உதிர்த்து விட்டு இருக்கிறார். .

    உடைந்து போனார் அந்த சிவகங்கை திமுக காரர் ; தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்ச கொடுத்தவர்.
    பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... புரட்சி தலைவரை பாப்போம் " என இழுத்திருக்கிறார்.

    சிவகங்ககாரருக்கோ எம்ஜியாரை வச்சு
    நாடகம் போட்ட காலத்துல பழக்கம்.

    அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தொடர்பு விட்டு போச்சு ; அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும் என தயங்கியிருக்கிறார்.

    நீ வா மாமா... தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.. என தைரியம் சொல்லி அழைத்து சென்றார். முதல்வர் எம்ஜியாரை வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர். காரை நிறுத்தி அருகில் அழைத்து இங்கேயே இருந்து சாப்பிட்டு வெய்ட் பண்ணுங்க ; கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன் என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

    மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில் ஒரு குட்டித்தூக்கம். தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

    வந்தவர்களை வரவேற்று சாப்பிட்டீங்களா எனக்கேட்டு , என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
    திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
    ஏழாயிரம் கேட்டு கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார். புரட்சி தலைவர் ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு... தனது உதவியாளரிடம் சொல்லி...
    20,000 ரூபாய் வரவழைத்து கொடுத்து விட்டு , அந்த கட்சியிலேயே இரு... நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் பொன்மனச்செம்மல் .

    ஊருக்கு வந்த சிவகங்கை காரரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிலும் சேராமல் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்தும் போய் விட்டார்.

    சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத இந்த கோபாலபுரத்து கோயபல்ஸ் தமிழினத்திற்காக ரத்தம் சிந்துவேன் என்று புழுகு மூட்டையை இன்னமும் அசராமல் அவிழ்த்து விடுகிறார்...

    புரட்சி தலைவர் மணக்கும் சந்தனம்.
    கருணாநிதி நாற்றமடிக்கும் சாக்கடை
    என்பதற்கு இந்த உதாரணமே போதும் !........... Thanks...

  8. #807
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்று ரசிகர்களுக்கு
    இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்...
    இதை படித்தாவது
    எங்கள் புரட்சித் தலைவரின் பொன்மனத்தை புரிந்து கொண்டு
    திருந்துங்க...

    நடிக்க மாட்டேன்??
    ---------------------------------
    தன் கொள்கைக்கு ஏற்ற வண்ணமும் தன் ரசிகர்கள் விரும்பும் வண்ணமும் இருந்தால் மட்டுமே அந்தப் படத்தின் வாய்ப்பை ஏற்பது பற்றி சிந்திக்கும் எம்.ஜி.ஆர்----
    தன்னை வைத்துப் படம் எடுக்க விரும்பி தம்மிடம் வந்த--
    தயாரிப்பாளர்கள் இருவரிடம் தொடுத்த பதில்----
    உங்கள் பேனரில் நடிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்??
    அது!!--ராஜாமணி பிக்சர்ஸ்!!
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னையின் பெயரில் துவக்கப்பட்ட நிறுவனம்!!
    தேடி வந்தது----
    இப்போதைய சந்தான பாரதியின் தந்தை- சந்தானமும்---பிரபாத் திரையரங்கின் மேனேஜரின் மகனான மோகனும்!!
    ராஜாமணி பிக்சர்ஸ் என்னும் உங்கள் நிறுவனத்தின் பெயரை மாற்றிக் கொண்டு வாருங்கள். நான் நடிக்கிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர்!!
    அது எப்படி முடியும்?? என்ற அவர்களின் கேள்வி முடியும் முன்னரே எம்.ஜி.ஆர்.பதில் சொல்கிறார்??
    அப்படின்னா என்னாலும் அந்த பேனரில் நடிக்க முடியாது??
    எம்.ஜி.ஆரின் வேகம் தணியவில்லை---
    எவருடைய தாயார் பெயரில் பேனர் வச்சிருக்கீங்களோ எவருடைய தயவால நீங்க ஒசந்திருக்கீங்களோ அவரையும் [அதாவது சிவாஜி ] கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
    அவரோட படம் ஒண்ணுல நீங்க நஷ்டம் அடைஞ்சிருக்கலாம். ஆனால் அவரை வச்சு மறுபடியும் படம் எடுக்கறது தான் முறை!!---
    நான்--வேலுமணி படங்களில் நடிக்கறேன்னா--அவரை எனக்கு ஜூபிடர் ஃபிலிம்ஸ் லேர்ந்து தெரியும்.
    நான் ராமண்னா படத்துல நடிக்கறேன்னா--அவர் என்னை வச்சு கூண்டுக்கிளி குலேபகாவலி ஆகிய படங்களை எடுத்துருக்கார்.
    விளக்கம் தந்தவரிடம் மேலும் அவர்கள் கெஞ்சவே---

    இறுதியாகவும் உறுதியாகவும் பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்!1 சிவாஜி கிட்டே இருந்து ஒரு சிபாரிசு லெட்டர் வாங்கிண்டு வாங்க???
    எம்.ஜி.ஆரின் ஆணித்தரமான பதிலால் திக்கித்தும் விக்கித்தும் போன அந்த இருவரும் இடத்தை காலி செய்ய-
    ஏங்க !! பேசாம ஒத்துக்கிட்டிருக்கலாமே?? என்ற தன் நண்பர்களின் கேள்விக்கு பதில் தருவதன் மூலம் தான்--தன்-- பெருந்தன்மையில்-- உச்சம் தொடுகிறார் எம்.ஜி.ஆர்!!!
    எனக்கு வரும் பல லட்ச லாபத்தை விட ஒரு தாய் மனதின் சிறு வருத்தம் ஏற்படுத்தும் நஷ்டமே பெரியது!!
    என் அம்மாவா இருந்தா என்ன--சிவாஜி அம்மாவா இருந்தா என்ன !!!!
    இது தான் இன்றுவரை நம்முள் எம்.ஜி.ஆரை உலா வரச் செய்கிறதோ????.......... Thanks...

  9. #808
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவருக்கு அறந்தை உலகப்பன் கொடுத்தப்பட்டம் புரட்சி நடிகர். மு.க.கொடுத்ததாக வதந்தி காலாகாலமாக பரவி வருகிறது. கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆர்எம்வீ தலைமையில் தலைவர் சிலை திறப்புவிழாவிலும் மு.க. தான்தான் எம்ஜிஆருக்கு புரட்சிநடிகர் பட்டம் வழங்கியதாக பேசினார். ஆனால் அன்று தலைவர் வரலாறு கட்டுரையை தினகரன் நாளிதழில் நான் எழுதி இருந்தேன். அதில் அறந்தை உலகப்பன்தான் தலைவருக்கு புரட்சிநடிகர் பட்டம் கொடுத்ததாக எழுதி இருந்தேன்....... Thanks...

  10. #809
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்கலந்துகொள்ளும்விழாஒன்றுஅறந்தைஉலகப்ப ன்செய்திருந்தார்அதில்சிறப்புஅழைப்பாளராக கருணாநிதிகலந்துகொண்டார்,அதில்தான்புரட்சிநடிகர்என்ற பட்டத்தைத்தலைவருக்குத்தருவதற்குதயார்செய்துஎழுதியபே ழையைகருணாநிதியிடம்தந்துதலைவரிடம்அறந்தைஉலகப்பன்கொடு க்கச்செய்தார்என்பதுதான்உண்மை,கருணாநிநிதியேவிரும்பி தனதுயோசனையில்தரவில்லை........ Thanks...

  11. #810
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

    A. . உலக சாதனைகள் :

    1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

    2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

    3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

    4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

    5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

    6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

    7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !

    8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

    B. ஆசிய சாதனைகள் :

    1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

    2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]

    C. இந்திய சாதனைகள் :

    1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

    2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

    4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

    5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

    7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

    8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    D. தமிழக சாதனைகள் :

    1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

    2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

    3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

    4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)

    5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

    6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

    7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

    8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

    திரையுலகின் முடி சூடா மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட) பட்டியல் இன்னும் தொடர்கிறது.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •