Page 73 of 402 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #721
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "#எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் #எம்ஜியார்.

    அங்கேயே பொமரேனியன் ஆண், பெண் நாய்களையும் வளர்த்தார்.

    ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது.

    அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார்.

    அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்:

    ’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை.

    இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை”

    என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல்.

    ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து

    “மிஸ்டர் எம்.ஜி.ஆர்.

    நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை.

    மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும்.
    ஸ்மோகிங் இல்லை.
    காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை.
    என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா?
    அது அறவே கிடையாது.நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.

    அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.

    எம்.ஜி.ஆரின் சுபாவம் மற்றும் அவருடைய பண்பட்ட குணநலன்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக நம் மனதைக் கவர்கிறது.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் தாய் மொழி தமிழா..மலையாளமா..?
    இரண்டும் இல்லை...

    இறைவனின் தாய் மொழி எதுவோ...
    எம்.ஜி.ஆரின் தாய் மொழியும் அதுதான்...!

    அது ...அன்பு மொழி ..!!!

    எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் ...பேச்சு வராமல் பெரும்பாடு பட்டார்...
    அப்போது அவருக்கு பேச்சு சிகிச்சை அளிக்க , மனோகரன் என்ற மருத்துவர் நியமிக்கப்பட்டார்..
    எம்.ஜி.ஆரோடு பழகிய அந்த நாட்களைப் பற்றி டாக்டர் மனோகரன் பின்னர் ஒருமுறை அளித்த பேட்டி...

    “ஒருமுறை கோவைக்குச் சென்றிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, எம்.ஜி.ஆர்.., என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து "குடிங்க" என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது.
    பக்கத்தில்தான் எம்.ஜி.ஆரின் சொந்த ஊரான பாலக்காடும் இருந்தது. அங்கு கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.

    நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
    பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, "ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே"...என்று கூறியவர், "உடம்ப பார்த்துக்கங்க.." என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், "மனோகரனை கவனிச்சுக்கங்க" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்...... நான் உருகிப் போனேன்...!!!”

    # எப்படி உருகாமல் இருக்க முடியும்..?

    எம்.ஜி.ஆரைப் பற்றி முன்னர் ஒருமுறை எழுதியது இப்போதும் நினைவுக்கு வருகிறது..!!

    “ஆண்மைக்கும் தாய்மை உண்டு..”
    அந்த தாய்மையின் தனி வடிவம் ..எம்.ஜி.ஆர்..!!!.......... Thanks...

  4. #723
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த பல ஆண்டுகளாக தமிழ் படங்களின் தலைப்புகள் மிகவும்

    பொருத்தமில்லாமலும் - ஆபாச பெயர்களும் - சமூக விரோதிகளின் பெயர்களையும் தாங்கி வருவது வேதனையான
    தகவல் என்று நீதிபதிகள் கூறும் அளவிற்கு இன்றைய சினிமா
    உலகம் உள்ளது .

    மக்கள் திலகம் தன்னுடய படங்களின் பெயர்களை என்ன ஒரு

    தீர்க்கதரிசனமாக , மங்களகரமான பெயர்களை வைத்து மக்கள் மனதில் பதியும் படி வைத்து வெற்றி கண்டார் .

    மக்கள் திலகத்தின் படங்களின் மனம் கவரும் தலைப்புகள் .

    இன்று போல என்றும் வாழ்க

    பல்லாண்டு வாழ்க

    உழைக்கும் கரங்கள்

    ஊருக்கு உழைப்பவன்

    உரிமைக்குரல்

    சிரித்து வாழ வேண்டும்

    நல்ல நேரம்

    அன்னமிட்ட கை

    ஒரு தாய் மக்கள்

    நம்நாடு

    ஒளிவிளக்கு

    காவல்காரன்

    தொழிலாளி

    எங்க வீட்டு பிள்ளை

    ஆயிரத்தில் ஒருவன்

    தர்மம் தலைகாக்கும்

    என்று மக்கள் மனம் கவரும் பெயர்கள் தாங்கி படம் வந்ததால் இன்றும் அவர் படங்கள் பேசப்படுகிறது .

    சத்யராஜ் (நடிகர்)
    நீங்கள் யாரோட ரசிகர்?

    ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.

    'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.

    இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரதநாட்டியம் - மேலைநாட்டு நடனம் இரண்டிலும் தன்னுடைய தனி முத்திரையை காட்டி ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை அடித்திருப்பார் .

    மக்கள் திலகத்தின் நடனத்தின் போது அவருடைய முக பாவங்கள் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம் .நடன அசைவுகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும் .

    எனக்கு தெரிந்த வரையில் மக்கள் திலகம் ஒரு ஆல் ரவுண்டர் .

    பெரிய இடத்து பெண்- அன்று வந்ததும் அதே நிலா

    தெய்வத்தாய் - ஒரு பெண்ணை பார்த்து

    பணத்தோட்டம் - ஒருவர் ஒருவராய் பிறந்தோம்

    என்கடமை - யாரது யாரது சொந்தமா

    தொழிலாளி - வளர்வது கண்ணுக்கு ....

    எங்கவீட்டு பிள்ளை - பெண் போனால் ........

    கலங்கரை விளக்கம் - பல்லவன் பல்லவி ....

    ஆசை முகம் - என்னை காதலித்தால் மட்டும் ....

    அன்பே வா - நாடோடி ..ஓடி .....

    நான் ஆணையிட்டால் - நல்லவேளை நான் பிழைத்த கொண்டேன்

    பறக்கும் பாவை - சுகம் எதிலே ..... மது ரசமா

    தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு

    காவல்காரன் - நினைத்தேன் வந்தாய்

    குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை கேட்டு

    ரகசிய போலீஸ் 115 - என்ன பொருத்தம் இந்த .....
    நினைத்தை நடத்தியே ....

    தேடிவந்த மாப்பிள்ளை - தொட்டு காட்டவா

    எங்கள் தங்கம் - ஒரு நாள் கூத்துக்கு ...

    சங்கே முழங்கு - பொம்பளை சிரிச்சா போச்சி

    ராமன் தேடிய சீதை - திருவளர் செல்வியோ

    உலகம் சுற்றும் வாலிபன் - பச்சைக்கிளி .. முத்துச்சரம் ..

    உரிமைக்குரல் - நேற்று பூத்தாளே ......

    நினைத்தை முடிப்பவன் - தானே .. தானே ,, தானே மேனி ....

    நாளை நமதே - நானொரு மேடை பாடகன் ...

    நீதிக்கு தலை வணங்கு - கனவுகளே .. ஆயிரம் ....

    இன்றுபோல் என்றும் வாழ்க - என் யோக ஜாதகம்

    மேற் கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றமும் , சுறுசுறுப்பான நடனமும்
    என்றென்றும் மறக்க முடியாத பாடல்களாகும் .

    உலக திரைப்பட வரலாற்றில் நம் மக்கள் திலகம் படைத்த சாதனைகள் இந்த தலை முறை
    மட்டுமல்ல எதிர்கால தலைமுறையினரும் கண்டு மகிழ்வார்கள் என்பதற்கு இந்த பாடல்
    காட்சிகளே சான்று ........... Thanks...

  5. #724
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தாமதம் #ஏன்?

    புரட்சிதலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதறகாக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக் கிடப்பதைப் பார்த்து அந்த நபரை தன் காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நிகழ்சசிக்கோ நேரமாகிவிட்டது.

    எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுத்தான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
    அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார்...!

    தொடர்ந்து பேசிய புரட்சித்தலைவர் ... "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."

    ஆனால்...!

    "இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய #மனிதாபிமானம் #உள்ளவர்கள் #உலகிலேயே #எங்கள் #தமிழ்நாட்டினர்தான்...#என்று #பெருமையோடு #தெரிவித்துகொள்கின்றேன் ..."

    என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது... .................. Thanks...

  6. #725
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளிமலர் -சினிமா செய்திகள் -old is gold
    --------------------------------------------------------------------------------------------
    1.நிஜ தம்பதிகளான என்.எஸ்.கிருஷ்ணன்,-டி.ஏ.மதுரம் ஜோடி 75 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் .

    2.1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    3.தமிழில் " வயது வந்தவர்களுக்கு மட்டும் "சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் படம்
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "மர்மயோகி " திகில் காட்சிகளுக்காக கொடுக்கப்பட்டது .

    4.மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து தயாரித்த படம் "நாம் "
    மேகலா பிக்ச்சர்ஸ் தயாரிப்பு

    5.பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு " திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது .முதலில் இதை நாடகமாக எழுதிய அண்ணா முழு திரைக்கதையை ஒரே இரவில் எழுதி முடித்தார்

    6.நடிகர் சிவகுமாரின் முதல் படம் காக்கும் கரங்கள். 100 வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி . 100 வது படத்தின் வெற்றி விழாவிற்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.
    கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் சிவகுமார் காவல்காரன், இதயவீணை படங்களில் நடித்துள்ளார் .

    7.மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை சரோஜாதேவி 26 படங்களிலும் ஜெயலலிதா 28 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்

    8.தமிழில் ஜனாதிபதி பரிசு (வெள்ளி பதக்கம் ) பெற்ற முதல் படம் மலைக்கள்ளன்

    9.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொந்தமாக எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் பெயரில் 3 படங்களை தயாரித்தார் . அதில் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார் . இரண்டும் வெள்ளிவிழா படங்கள். மூன்றாவது படமாகிய அடிமைப்பெண் இயக்குனர் கே.சங்கர் டைரக்ட் செய்தார் .அடிமைப்பெண் படமும் வெள்ளிவிழா கொண்டாடியது .

    10.1936ல்ல திரையுலத்திற்கு அறிமுகமாகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
    1947ல் கதாநாயகனாக உயர்ந்து 1977 வரை தொடர்ந்து திரையுலகில் 41 ஆண்டுகள் பணியாற்றி வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் .

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #726
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சபாஷ் மாப்பிளே 14-7-1961 வெளியானது 58 ஆண்டுகள் நிறைவு பெற்றது . சென்னை பிளாசா பாரத் மகாலட்சுமி 48 நாள் நல்லவன் வாழ்வான் வரும் 31-8-1961 வரை ஓடியது.
    : இப்படத்தில் மருதகாசி இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிரிப்பவர் சில பேர் அழபவர் பல பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ ? உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை உழைப்பவர் உயர்ந்தால் போதுமையாஎன்ற அருமையான கருத்துள்ள ஏழைகள் உழைப்பாளர்கள் பற்றி எம்ஜிஆர் அவர்கள் படத்தில் தான் இந்த கருத்துக்கள் வரும். மக்கள் மனதில் படிப்படியாக இடம் பெற்றார். அதனால்தான் மற்றவர்கள் அவரை கிண்டல் கேலி பேசிய போதும் மக்கள் அதை நிராகரித்து தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.[படத்தையும் மக்கள் திலகத்தின் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பையும் பார்த்துவிட்டு அறிஞர் அண்ணா, 'சபாஷ் எம்ஜிஆர் ' என்று பாராட்டிய படம்.


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முழு நீள நகைச்சுவை படத்தில் கதாநாயகனாக
    நடித்திருந்தார் . நடிகவேள் எம்.ஆர். ராதா முதன் முறையாக மக்கள் திலகத்துடன்
    இணைந்து நடித்தார் . அதன்பின் பல படங்கள் 1966ல் பெற்றால்தான் பிள்ளையா
    படம் வரையில் நடித்தார் .

    1975ல் முதன் முறையாக ராம் தியேட்டரில் பார்த்தேன் . அதன்பின் பல முறை
    பிரபாத், சரவணா , பத்மநாபா , பிளாசா அரங்குகளில் பார்த்துள்ளேன்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நகைச்சுவை வேடத்திலும் தன்னால் நடிக்க
    முடியும் என்று நிரூபித்த படம் . மும்பையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #727
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #728
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #729
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  16. #730
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •