Page 59 of 402 FirstFirst ... 949575859606169109159 ... LastLast
Results 581 to 590 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #581
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  2 வருடத்தில் 4 வது தடவையாக தற்போது கோவை - சண்முகா DTS., தினசரி 4 காட்சிகள்...ஆர்ப்பரிக்கும் கூட்டத்தால் நாளை மாலை ரசிகர்கள் விழா எடுக்க உள்ளனர்.( 1969 லிருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகூட இடைவெளியில்லாமல் திரையிடப்படும் காவியம் அடிமைப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது......... Thanks to mr. Samuel... Covai...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #582
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  அன்புக்கு நான் அடிமை , தமிழ் பண்புக்கு நான் அடிமை என்னும் பாடல் வரிகளில் குடிக்கும் நீரை விலைகள் பேசிக் கொடுக்கும் கூட்டம் அங்கே என்று 1976-77 ல் லேயே பாடி வைத்தார். .....உண்மையை அன்றே சொல்லிவிட்டு சென்ற ஒரே தலைவன்... யார் எங்க M. G R., ........ Thanks...

 4. #583
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  நண்பர்கள்... பகைவர்கள் ... யாரென்றும் நல்லவர் கெட்டவர் யாரென்றும் பழகும்போது தெரிவதில்லை பாழாய் போன இந்த பூமியில் அருமையான வைர வரிகள்... " நாடோடி" காவியத்தின் புரட்சி நடிகர் பாடல் இறவா புகழ் நவரத்தின வரிகள்........

 5. #584
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  ஆளே இல்லாத கடையில் ... டீ ஆத்துவது போல்...☺️ மிக குறைந்த ஆட்களை வைத்து �� படம் ஓட்டுவது ,பிரியாணி போடுவது ,புடவை தருவது இப்படி எல்லாம் செய்தும் எதிர்பாராத வெற்றியும் /,வசூலும் இல்லாத பட்சத்தில் இந்த விழா அவசியமா ,யாருக்கு புகழ் சேர்க்க பாடுபடுகிறார்கள் தெரியவில்லை... (இது மக்கள் திலகம் சார்ந்த பதிவல்ல....)

 6. #585
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  ஒரே வசூல் சக்கரவர்த்தி .......... எம்ஜிஆர்! .........
  பொன்விழா ஆண்டில் "அடிமைப்பெண்! " (14.07.2019 கோவை சண்முகா DTS., வெற்றிவிழா சிறப்பு தொகுப்பு)...
  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வரலாறு படைத்த காவியம் ...அடிமைப்பெண். 1969ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பொன்விழா ஆண்டில் பயணிக்கிறது. எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், ஜே.பி.சந்திரபாபு, சோ, ஜோதிலட்சுமி, ராஜஸ்ரீ, பண்டரிபாய், ஓ.ஏ.கே.தேவர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆர் தயாரித்திருந்தார், அன்றைய பிரமாண்ட இயக்குனர் கே.சங்கர் இயக்கி இருந்தார்.

  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக அறிமுகமான படம். "ஆயிரம் நிலவே வா..." பாடல் இன்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. "அம்மா என்றால் அன்பு..." என்ற பாடல் மூலம் ஜெயலலிதாவும் பாடகியாக அறிமுகம் ஆனார். இதுதவிர "காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ...", "தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை...", "உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...", "ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே...", போன்ற இனிமையான பாடல்களை கொண்ட காவிய படம். ........

  இன்றைக்கு பிரம்மாண்ட படமாக கொண்டாடப்படும் படங்களுக்கு சற்றும் குறைவில்லாத முன்னோடி படம் ...அடிமைப்பெண். இன்றைக்காவது கிராபிக்ஸ் வசதிகள் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத காலத்தில் பிரமாண்டமாக தயாரான படம் அடிமைப்பெண். மன்னரான தந்தை கொல்லப்பட்ட பின்னர் மகன் அதற்குப் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் தனது தாயை மீட்கிறான். இதுதான் அடிமைப்பெண்ணின் கதை.

  முதன் முதலாக எம்.ஜி.ஆர் ஒரு நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டார். இதற்காக அவர் அந்த சிங்கத்தை தனது வீட்டில் வளர்த்து அதனுடன் பழகினார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தார்.

  அதேப்போல மிகப் பெரிய அரண்மனை செட் போட்டும் பிரமாண்ட சண்டைக் காட்சியையும் சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கியிருந்தார். எம்.ஜி.ஆர். போட்ட கத்திச் சண்டை இந்தப் படத்தில் ரொம்ப பிரபலம். எம்.ஜி.ஆர் இதில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார்.

  1969 ல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளடங்கிய தென் இந்தியாவில் 46 ஏ சென்டர்களில் முதல் வெளியீட்டில் ரூ.1 கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்த வெள்ளிவிழா காவியம். சென்னையில் திரையிட்ட முதல் நாள் தொடங்கி 400 காட்சிகள் ஹவுஸ்புல் ஆன முதல் காவியம். பல ஊர்களிலும் இதே புரட்சி செய்த காவியம். மதுரை 175 நாட்களும் கோவை, திருச்சி, சேலம், சென்னை ( 4 சென்டர்) நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ,வேலூர் , ஈரோடு , கர்நாடகா ( 7 சென்டர்) கேரளா (6 சென்டர்) ஆந்திரா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் 100 நாட்களை தாண்டி வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என மீண்டும் நிரூபித்த காவியம். தொடர்ந்து 1970 ல் பி மற்றும் சி சென்டர்களில் 100 நாட்கள், 50 நாட்கள் என ஓடி வசூல் பிரளயத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இன்றுவரை 50 ஆண்டுகாலமாக திரையரங்குகளில் அடிமைப்பெண் வெற்றிச் சரித்திரம் படைப்பது உலகம் அறிந்தது. 35 எம்எம், சினிமாஸ்கோப், டிஜிட்டல் போன்ற பல வெளியீடுகளில் புரட்சிசெய்து வந்த இக்காவியம் 2017 ல் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டு 100 நாட்கள் ஓடியது. 2 ஆண்டுகளாக ஊர்கள்தோறும் வெற்றிச் சரித்திரம் படைத்துவரும் அடிமைப்பெண் 2 ஆண்டுகளில் கோவைக்கு இதோ 4 வது தடவையாக வந்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இன்றும் தம் காவியங்கள் மூலம் பலபேர் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் காலத்தால் அழிக்க முடியாதவர்- நம் புரட்சித்தலைவர் ஆங்கில படங்களுக்கு இணையாக தந்துவிட்டுச் சென்ற அடிமைப்பெண் காவியம் என்றும் பேசப்படும். புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. எம்ஜிஆர் பக்தர்கள் வாழ்க, வளர்க......... அன்புடன் சாமுவேல்......... Thanks...

 7. #586
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  புரட்சித்தலைவர் பக்தர்கள் / ரசிகர்கள்.........

  உண்மையான ரசிகர் / பக்தன் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம்:

  1) புரட்சித்தலைவர் படம் (காவியங்கள்) எங்கு வந்தாலும் பணம் செலவு செய்து பார்க்கிறவன்.

  2) திரையரங்கில் அவர் படம் வைத்து வழிபட்டு தலைவர் தோன்றும் காட்சியில் பூ தூவி மகிழ்பவன்.

  3) தனது வருமான மிகவும் குறைவாக இருந்தாலும் அதற்கு தங்குதபோல பழம், ஊதுபத்தி, பூ வாங்கி புரட்சித்தலைவருக்கு காணிக்கை செலுத்துபவன்.

  4) இல்லை என்று தெரிந்தால் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்பவன்.


  5) புரட்சித்தலைவர் காவியங்களின் பொன்விழா/ வைரவிழா., இப்படி விழா எடுப்பவன்

  நாளை சந்திரமண்டலத்தில் விழா நடக்கிறது என்று வைத்து கொள்வோம். நான் அங்கு செல்கிறேன் என்றால் சந்திரமண்டலத்தில் புரட்சித்தலைவர் பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நான் செல்லுவது தான் ஆதாரமா அல்லது அங்கு இருப்பவர் விழா எடுப்பது தான் ஆதாரமா?

  புரட்சித்தலைவர் புகழ் பாடும் உண்மையான பக்தர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்சு, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் [ 1980 ஆம் ஆண்டு தலைவர் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது, தலைவர் தமிழக முதல்வர் ஆன பிறகு] போன்ற பல நாடுகளில் இரத்தத்தின் இரத்தங்கள் இருக்கிறார்கள்.

  எனவே, தன்னிடம் இருக்கும் செல்வத்தின் அடிப்படையில் செயல்படுபவர்கள் , புரட்சித்தலைவரை படங்களில் பார்த்தால் தன்னையும் அறியாமேல் கண்ணீர் சிந்துபவர்கள், திரை கவிஞர்களின் பொன்விழா / வைரவிழா , பிறருக்கு உதவி செய்பவர்கள், கடமையில் தவறாதவர்கள், உண்மையை பேசுபவர்கள், “நினைவு தெரிந்த நாள் முதல் [ பிறப்பு முதல்]” தினமும் அந்த சத்திய புருஷனை வணங்குபவர்கள் தான் புரட்சித்தலைவர் புகழ் உலகமெங்கும் உள்ளது என்பதற்கு ஆதாரம்.������ . ........... Thanks mr. Sailesh Basu...

 8. #587
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  ஆட்சிக்கு வந்து ஏழை எளியவர்கள், பொது மக்கள், கட்சிக்காரர்கள் , நண்பர்கள். போன்றவர்களுக்கு செய்த உதவிகள் கொடைகள் ஆயிரம் இருந்தாலும் தான் நடிகராக இருந்து வியர்வை சிந்தி உழைத்த பணத்தை அள்ளி கொடுத்த வள்ளல் நம் பொன்மனம் மட்டுமே. கட்டி கொடுத்த வாங்கி கொடுத்த வீடுகள் அடுத்தவர்களுக்கு ஏராளம்....அந்த வரிசையில் அந்த காலத்தில் திரையுலகினர் அடகு வைத்து பின் மீட்க முடியாமல் வாத்தியார் மீட்டு கொடுத்த வீடுகள் வரிசை...இதோ.. நாகர்கோவிலில் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்ந்த வீடு, சென்னையில் நடிகை கண்ணம்மா வீடு, நடிகை குமுதினி வீடு , நடிகர் நாகேஷ் வீடு, நடிகர் எஸ்.வி. சுப்பையா வீடு , கவியரசு கண்ணதாசன் வீடு, மருதகாசி வீடு, இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வீடு, ஐசரிவேலன் மறைந்த பின் அவர் வாழ்ந்த வீடு...கடைசியில் சொன்னா நம்ப மாட்டீங்க. நம்ம சுருளிராஜன் வீடு...தெரிந்தவரைக்கும் இவை...இன்னும் தெரியாதவை எத்தனையோ.... அது எப்படி ஒரு மனிதனுக்குள் இவ்வளவு இரக்கம்...காரணம் அவர் மனிதர் இல்லை இறைத்தூதர் எம்ஜியார். அப்படித்தான் தோன்றுகிறது...வாழ்க எம்ஜியார் புகழ்...இன்னும் வெளியே வராத புது புது உண்மை நிகழ்வுகளுடன்...உங்கள் சார்பாக தொடருவேன்...நன்றி..
  V P சிவகுமார் NKL........... Thanks...

 9. #588
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  உயர்ந்தவர்கள் எழுதிய கடிதங்களை விட சாமானியர் கடிதங்களை விரும்பி படிப்பார் எம்ஜிஆர்.. அந்த வகையில் 1978 இல் சென்னை திருவல்லிக்கேணி மிகவும் ஏழை பிராமண குடும்பத்தை சேர்ந்த மாணவி கௌரி தனக்கு வீணை வாசிக்கும் ஆர்வம் பற்றியும் ஆனால் சொந்தமாக ஒரு வீணை இல்லாததால் இரவல் வீணை கொண்டு தன் திறமையை வெளிக்கொண்டு வர முடியவில்லை நீங்கள் பண வசதி இல்லாமல் தங்கள் சின்ன வயதில் நாட்டிய பயிற்சி கர்நாடக சங்கீதம் என்னால் கற்று கொள்ள முடியவில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்ததை படித்தேன்...எனக்கும் வீணை மீது ஆர்வம் இருக்கு வாங்க வசதி இல்லை என்று கடிதத்தில் முடிக்க வழக்கம் போல உதவியாளர் வசம் சொல்லி ஒரு வீணை மைசூரில் இருந்து வாங்க சொல்ல உதவியாளர் பணம் அனுப்பியும் மைசூரில் இருந்து அந்த வீணை வராமல் நிற்க...இனி. 1980 சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து பள்ளிகள் இடையே நடந்த பல்வகை போட்டிகள் அதில் வெற்றி பெற்ற மாணவர் மாணவியர் களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்வு எம்ஜிஆர் தலைமை......நிகழ்வுக்கு ஒப்புக்கொள்ளும் மன்னன் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழை படிக்க வீணை இசைக்கருவி போட்டியில் முதல் பரிசு கௌரி என்று படிக்க தூக்கி வாரி போட்ட மாதிரி உடனே உதவியாளர் வசம் ரொம்ம நாட்களுக்கு முன்னால் வீணை ஒரு மாணவிக்கு கொடுக்க சொன்னது என்ன ஆனது என்று கேட்க அவர் வீணை மைசூரில் இருந்து வரா நிகழ்வை சொல்ல தலைவர் கோபமாக நீ.. போ... என்று சொல்லி நிகழ்ச்சிக்கு வந்து விட நிகழ்வு ஆரம்பம் ஆகி வரிசை ஆக எல்லோரும் பரிசு பெற வீணை கௌரி பெயர் வாசிக்க பட அவரும் தலைவர் அருகில் வந்து தலை குனிந்து ஒரு துண்டு சீட்டை நீட்ட அதில் இன்னமும் இரவல் வீணைதான் என்னை மறந்து விட்டீர்களா என்று எழுதி இருந்ததை படித்து மனம் வருந்திய நம் மன்னன் மேடையில் ஒருவருக்கு சைகை காட்ட அடுத்த சில நிமிடங்களில் வெளியே வாகனத்தில் இருந்து ஒரு புதியவீணை பூம்புகாரில் வேறு ஒருவர் மூலம் வாங்க பட்டு அதை அப்போதே அந்த கௌரி வசம் கொடுக்கிறார் நம் இறைவன்.. கௌரிக்கு மயக்கம் வாராத குறை.....யாருக்கும் எதுவும் புரியவில்லை நடந்தது நம் வாத்தியாருக்கும் கௌரிக்கும் அந்த உதவியாளருக்கும் மட்டுமே தெரியும்...எப்படி பட்ட தலைவனின் தொண்டர்கள் நாம்.
  இதயவீணையின் புகழை நித்தம் மீட்டுவோம்...நன்றி...........வீணை பேசும்..பேசியது...வாழ்க எம்ஜிஆர் புகழ்......தொடரும்...........
  பின்குறிப்பு...பின்னாளில் அந்த கௌரி சிறந்த வீணை இசைக்கலைஞர் ஆகி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் அரும் பெரும் தொண்டுகள் ஆற்றியது துணை நிகழ்வு......... Thanks mrs. Janani medam...

 10. #589
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  நேற்று சென்னை தி.நகரில் ஹபிபுல்லா சாலையில் உள்ள அரைமணி நேர அரங்கில் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்ற தலைவர் புகழ்பாடும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நிகழ்வுகளின் ஆலோசனை கூட்டம் சிறப்பாக தலைவரின் அமைப்புகள் ............பக்தர்கள் .........சார்பாக இனிதே நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் 5 முக்கிய நிகழ்வு பற்றி பேசபட்டது. மேலும் வரும் செப்டம்பர் 22ம் தேதிசென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் ஞாயிறு அன்று நடைபெறும் தலைவரின் நம்நாடு திரைப்பட பொன்விழா பற்றியும் அதற்கான ஒத்துழைப்பு பற்றியும் பேசபட்டது. இக்கூட்டத்தில் அண்ணன் திரு. முத்து அவர்கள் திரு. துரைகாருணா அவர்கள் திரு. எம்.ஜி.சி. பிரதீப் அவர்கள். சைதைகலையுலக பேரோளி எம்.ஜி.ஆர். தலைமை மன்றத்தின் சார்பாக திரு. சைதை எஸ். மூர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்றம் (எழும்பூர் பகுதி) திரு. டி.தேவசகாயம், திரு.கே.ராமு திரு. மகாலிங்கம் திரு.பாண்டியன் திரு. எஸ்.பி. ராஜன் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு. இ. பாண்டிய ராஜ் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக திரு.ஏ. பாஸ்கரன் திரு. எஸ். தாமஸ் திரு. ஏ.கே. ராஜோந்திரன் திரு.பி.மோகன் திரு. பி.ஜி.சேகர் திரு பி.ஏ. நடராஜன் திரு. ஏ.டி. சந்திரபாபு திருமதி. சி. திலகவதி பாபு திரு எஸ். சோமசுந்தரம் திரு. டி. பத்ரிநாத் திரு.ஆர். கிரி திரு. எம்.ஜி.ஆர் ராஜன் திரு. ஆழ்வை திரு. உதயகுமார் திரு. எஸ். விஸ்வநாதன திரு. முகப்பேர் சி. நந்தா திரு. சங்கையா இவர்களுடன் உரிமைக்குரல் ராஜு கலந்து கொண்டவர்கள். மற்றும் சூழ்நிலை காரணமாக வராதவர்கள்முன் கூட்டியே சொன்னவர் திரு. வி.டி. சேஷன் . திரு. தம்பாச்சாரி திரு. பி. ரவிசங்கர் திரு. ஏம்.எஸ். மணியன் திரு. ஸ்ரீதர் பெருமாள் திரு. வி.எஸ். ராஜு திரு. ஆர். இளங்கோவன் திரு. கே.எஸ். மணி திரு. இ. பாலகுரு திரு. எல் பொன்னுசாமி திரு. ஆர். லோகநாதன் திரு. எம் தேவா திரு. வி. கிருஷ்ணசாமி திரு. சேர்மக்கனி திரு. குப்பன் திரு. ஜெ. சங்கர் திரு. ஜெய்சங்கர் திரு. கே. தேவராஜ் திரு. கவிஞர் கவிகுமரன் திரு. முருகன் திரு. கணேசன் திரு. கிருஷ்ணகுமார் திரு. மாம்பலம் குமார் அழகிரி திரு. ராஜு திரு. ஜமீல் திரு. நஸீர் திரு. ரவி மற்றும் சிலர். வந்த திருவாளர்களுக்கும் சூழ்நிலை காரணமாக வரமுடியாது தகவல் சொன்ன திருவாளார்களுக்கும் நிகழ்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்களுக்கும் விழாவுக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன நல்லவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! என்றும் தலைவர் புகழ்பாடும் ஒலிக்கிறது... உரிமைக்குரல் ராஜு...... Thanks...

 11. #590
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  பாசம்!........
  ________
  இந்த பாடலை பிடிக்காதவர் எவரும் இலர்,
  தலைவர்கள் பாராட்டியுள்ளனர் நடிகர்கள் இது போல் பாடல் தமக்கும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்...

  நடிகருக்கு உடல் கட்டு கோப்பாக இருக்க வேண்டும் நம் மக்கள் திலகத்திற்கு கட்டு கோப்பாகவும்
  flexible ஆகும் இருப்பதை காணுங்கள்..... கடற்கரை மணலில் பின் பக்கமாக வளைந்து சர்வசாதரணமாக எழந்து செல்வார் ...

  மாட்டு வண்டியில் அமர்ந்தவாறு
  எல்லாம் எனக்குள் இருந்தாலும்
  என்னை தனக்குள் வைத்திருக்கும்
  அன்னை மனமே என் கோவில் அவளே என்றும் என்தெய்வம் !

  இந்த காட்சியில் மக்கள் திலகம் தன் அன்னையை உருகி வணங்குவது
  நெகிழ்ச்சியின் எல்லை !

  ........ Thanks ..........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •