Page 53 of 402 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #521
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன் �� �� ��..........
    _______________________
    உங்கள் பொக்கிஷமே இடமாறினாலும் அவள் கைமாறமாட்டாள்
    என்ன ஒரு ஸ்திரத்தனமான உள்ளத்தின் உறுதியை உணர்த்தும் வசனம் ...
    தியாக ராஜன் என்பவர் என் நண்பர் இவருடைய மாமா ராம்மூர்த்தி தான் இந்த படத்திற்கு கேமராமேன் இவர் கூறியது ...
    இந்த சண்டை காட்சியில் நம்பியார் அவர்கள் மக்கள் திலகத்தின் குத்து வாளை எடுத்துக் கொள்வார் ... மீண்டும் லாவகமாக கத்தியை
    தட்டவிட்டு மக்கள் திலகம் அதை பறித்துக் கொள்வார்... மேலிருந்து விழ
    ழும் கத்தியை பிடிப்பது மிகவும் கடினம்... ஆனால் ஒரே ஷாட்டில் இந்த காட்சி படமாக்கப் பட்டது
    09 - 07 -1965 வெளியான தேதி இன்றும் இந்த படம் Non stop - ஆக ஒடிக்கொண்டிருக்கிறது ...
    ஷிப்டிங் படங்களுக்கு கின்னஸ் ரிகார்டு என்று ஒன்றிருந்தால் நிச்சயம் "ஆயிரத்தில் ஒருவனு"க்கு தான் ...

    .......Thanks... to mr.Hayath...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராமாவர தோட்டத்தில் எம்.ஜி.யார் ., அவர்களுக்கு என்று ஒரு சூப்பர் ஏ. சி. அறையை சிறப்பாக அமைத்து கொடுத்தவர் ஏ. வி.எம்.செட்டியார்..அதை பராமரிக்க கோபால் என்பவரையும் அவரே வாத்தியார் வசம் சேர்த்து விடுகிறார்.கோபால் ஒரு தீவிர பாகவதர் ரசிகர்...தலைவர் யூனிட்டில் தொடர்கிறார் கோபால்... எங்கள்தங்கம் படத்தில் ஒரு காட்சியில் 10.கிலோவாட் லைட் மூலம் 11000 கிலோ வாட் ஓளி தலைவர் மீது விழும்.அந்த காட்சியில் எலெட்ரீசியன் கோபால் கண்கள் கூச அவருக்கு ஒரு சிறப்பு கூலிங் கண்ணாடியை வாங்கி தருகிறார் பொன்மனம்.அப்படி கூட இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து உதவினார் எம்ஜியார்...04.07.1977.இல் முதல்வராக பொறுப்பு ஏற்கவேண்டும் எம்ஜியார்... அதற்கு முதல் நாள் இரவு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இறுதி கட்ட காட்சிகள் எடுக்க பட்டன...அனைவருக்கும் சிறப்பான விருந்து வாத்தியார் செலவில்... அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு முடிகிறது....அனைவரையும் அழைத்த பொன்மனம். இதுவரை நடிகனாக உங்களோடு பயணித்த நான் நாளை முதல் இந்த நாட்டின் முதல்வர்....உங்களை எல்லாம் தொழில் ரீதியாக பிரிய வேண்டிய நேரம் இது என்று கண்ணீர் மல்க செட்டில் இருந்த அனைவருக்கும் கண்ணீர் முட்டுகிறது. யாருக்கு என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள் புகழ் பணம் சம்பாதித்து விட்டேன் இனி இந்த நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என்கிறார்.யாரும் எந்த உதவியும் கேட்கவில்லை..அனைவர் முகத்திலும் ஒரு தாங்க முடியாத சோகம்.. கோபால் மட்டும் அண்ணே உங்களை நெருங்கி இருந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் அதுவே ஆசை என்று சொல்ல அவரின் அந்த ஆசையையும் நிறைவேற்றி..கூட இருந்த மற்றவர்களுடன் குழு புகை படம் எடுத்து கொண்ட பின் நடிகராக இருந்த நம் மன்னன் நாடாள அதிகாலை புறப்படுகிறார் நாடாள சென்ற மன்னன் மன்னனாகவே நம்மை விட்டு மறை கிறார்....ஆம் அவர் சொன்னது போல ஒரு குற்றம் இல்லாத முதல்வனாக. தலைவனாக...மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கோவில் இல்லாத இறைவனாக....வாழ்க எம்ஜியார் புகழ்... Thanks...

  4. #523
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்


    by ஜெகதீஸ்வரன்

    திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

    கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

    திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

    “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

    செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

    நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

    “என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

    மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

    “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

    “என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

    “எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

    “இருக்காதே” என்றேன்.

    “இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

    இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

    அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

    கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

    “உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

    “என்ன நினைக்கிறாய்?” என்றார்.

    “கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

    “பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

    ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

    1971 பொதுத் தேர்தலே சான்று.

    அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

    இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

    ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

    இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

    1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

    சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

    ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

    எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

    முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

    அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

    ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

    கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

    அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

    இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

    இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

    சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

    அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

    அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

    எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

    அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

    கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

    எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

    அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

    மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

    விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

    “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

    – என்றும் அவர் காட்டினார்.

    அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

    யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

    எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

    ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

    திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

    இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

    ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

    கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

    பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

    கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

    எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

    நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

    ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

    இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

    ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

    அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

    ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

    இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

    பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

    ஆதாரம் –

    கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)....... .. .... Thanks mr.Gurunathan...

  5. #524
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #525
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் -அடிமைப்பெண் வெற்றியடைந்தது எப்படி?
    அத்தியாயம் - 2
    - முனைவர் இராஜேஸ்வரி செல்லையா

    புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.

    திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

    எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

    ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

    ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

    எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.

    எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

    அன்று அடிமைப்பெண்

    `அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

    `அடிமைப்பெண்'ணின் சாதனை

    தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.

    இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

    அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’

    ‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.

    பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'

    `அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவிஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.

    புஷ் குல்லா

    `அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

    1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.

    பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.

    எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்

    ``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.

    கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!

    எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.

    நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு

    சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.

    ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா

    கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.

    தாயின் வைராக்கியம்

    வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.

    சூரக்காடு ஏன்?

    எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

    ஜீவா – காதலின் கௌரவம்

    எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.

    குழந்தைகள், ரசிகரான கதை

    எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.

    `அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.

    இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.

    எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?

    எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

    கட்சிக் கொள்கை

    எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.

    `அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை........... Thanks...

  8. #526
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டு பிள்ளை !
    _______________________
    மக்கள் திலகம் ஹோட்டலுக்குள் நுழைவதும் சாப்பிடுவதும் பணம் தராமல் வெளியேறுவதும் நடிப்பாக கருதாமல் திரையில் ஒன்றிப்போவோம்
    இதற்கு பெயர் தான்
    சிறந்த நடிப்பு .

    .......... Thanks...

  9. #527
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

    1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.

    டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவகுழு 'விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்' தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது.

    இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது. இத்திட்டத்திற்கு ஒதுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. இதற்கு முன்பு ஆட்சி செய்துவிட்டுப்போன கருணாநிதி தான் போகும்போது அரசாங்க கஜானாவையும் துடைத்து வைத்துவிட்டே போயிருந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிதி நிலைமையை சரிசெய்துவரவே பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

    இந்நிலையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி.

    இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 50 லட்ச ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார்.

    முதல்கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு ரூ.60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும், உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள் , 39 அவசர சிகிச்சை மையங்கள், போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் பெரிய அளவில் விரிவடைந்தது.

    இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணிக்க காவல்துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்ப்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமேஸ்வரன் போன்றோர்களை உறுப்பினர்களாகவும், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நடேசன் அவர்களை தலைவராகவும் கொண்டு கண்காணிப்பு குழுவையும் அமைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

    தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பிட்டசில மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

    பிற்காலத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்திய அளவில் செயல்படுத்திய 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த திட்டம்.

    #MGR #இலவச_ஆம்புலன்ஸ் #எம்ஜிஆர்
    —Nambikai Raj........ Thanks...

  10. #528
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுகவை நிறுவியவர் C.N. அண்ணாதுரை தோற்றுவித்த ஆண்டு 17.9.1949 முக்கிய தலைவர்கள் ஒரு சிலரே அண்ணாவுடன் இருந்தனர். அதில் கருணாநிதி இல்லை.. தனது குடும்பத்திற்காக, வயிற்று பிழைப்புக்காக சேலத்தில் ஏதோ எழுதி பிழைத்து கொண்டிருந்தவர்.. இன்று கடைகோடி திமுக தொண்டன் போல அன்று கருணாநிதி அவ்வளவுதான்..

    அண்ணாவின் உறவுமுறையோ, சொந்தமோ, பந்தமோ அல்ல கருணாநிதி.. மாபெரும் முன்ணனி தலைவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தவர் ( அதற்கு புரட்சி தலைவர் முக்கிய காரணம்) திமுக கருணாநிதி வசமானது.. அண்ணாவால் எதற்காக உருவாக்கப்பட்டதோ , அது நிறைவேறாமல் தடம் மாறி போனது.. திமுக கருணாநிதி குடும்ப சொத்தாக மாறியது.. முரசொலி மாறன், அவர் பிள்ளைகள், முதல்தாரத்து பிள்ளை, இரண்டாம் தாரத்து பிள்ளைகள், மூன்று வைப்பு மகள், பேரன்கள், பேத்திகள் இப்படி திமுகவை ஆக்ரமித்து கொண்டார்கள்..

    வாழ்க..!! வாழ்க..!! என வாய்கிழிய கத்திய தொண்டன் வாசற்படி வாயிலேயே நிற்க வைக்கப்பட்டான்.. ஏதோ கருணாநிதி தான் தின்று விட்டு கையை உதறிய போது விழுந்த சோற்று பருக்கைகளை எஞ்சியவர்கள் எடுத்து உண்டார்கள்.. வீரத்திற்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொண்டது கருணாநிதியின் குள்ளநரித்தனம்..

    உடன்பிறப்பே... உன்னைதான் உடன்பிறப்பே.. என முரசொலியில் கூப்பிட்டதும்.. உள்ளம் குளிர்ந்து போவான், வா..வா.. என அழைத்தால் இமயமலை உச்சிக்கே போய் விடுவான்.. மந்திரம் இல்லாமல், தந்திரம் இல்லாமல் மனோவசியத்தில் மயங்கி கிடக்கிறான் தொண்டன்.. அன்றும் சரி.. இன்றும் சரி மாறவே இல்லை.. இந்த அடிமைத்தனத்தை காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.. எழுதப்படாத சட்டமாக பின்பற்றி வருகிறார்கள் தொண்டர்கள்..

    அப்பா...!!

    பிள்ளை..!!

    பேரன்..!!

    பேரனின் பிள்ளை... அப்படியே தலைமுறை தலைமுறைக்கும் திமுகவும், அதன் தலைமையும் அவர்களுக்கு தான் சொந்தம்.. ஏன்..?? இப்படி..?? என அடிமைபட்டவன் எவனுமே கேள்வி கேட்க முடியாது.. இந்த திமுக வந்து மக்களுக்கு நல்லது செய்யப்போகிறது என அப்பாவி மக்களும் ஏக்கத்தோடு ஏங்கி காத்திருக்க வைத்திருக்கின்றனர்.. புது புது அடிமைகளும் அங்கே குவிந்த வண்ணம் இருக்கின்றனர்..

    அதிமுக இப்படியா..?? இல்லே என தமிழக மக்கள் நன்கறிவார்கள்..

    திமுகவின் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வீறுகொண்டு
    எழுந்ததுதான் #அதிமுக அதை நிறுவியவர் மக்களின் மனதில் குடியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர்..
    அவருக்கு பிறகு தன்னுடன் நடித்தவர் என்கிற சிறப்பை தவிர சொந்தமோ, பந்தமோ உறவோ இல்லாத புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமை பொறுப்புக்கு வந்தார்கள்.. அதிமுக நிறுவனரை மலையாளி என்றார்கள் அவருக்கு பிறகு வந்தவரை பாப்பாத்தி என்றார்கள் சம்மந்தமே இல்லாத உறவு, வாரிசு கலவாத தலைமை என்பதை அவர்களே ஒத்துக்கொண்டார்கள்.. அம்மாவின் தலைமைக்கு பிறகு ( உயிருடன் இருந்த போதே) பெரியகுளத்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழகத்தை ஆளுவோம் என கனவிலும் காணாத வெள்ளந்தியான மனிதன் தலையில் கிரீடம் சூட்டப்பட்டது.. இவர் நிறுவனருக்கோ, அதன் பிறகு வந்த அம்மாவிற்கோ உறவோ, சொந்தமோ, பந்தமோ கிடையாது.. பால் வியாபாரம் செய்துகொண்டிருந்தவரை பல்லாக்கில் ஏற்றப்பட்டார் அவ்வளவே.. இவருக்கு பிறகு.. தெரிந்தோ தெரியாமலோ சசிகலா அம்மையாரால் முன்மொழியப்பட்ட சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் எடப்பாடி என்ற சிற்றூரில் இருந்து வந்தவர் பழனிச்சாமி.. இவரும் தலைவருக்கோ, அம்மாவிற்கோ, OP..பன்னீர்செல்வம் அவர்களுக்கோ வாரிசுதாரர் கிடையாது இது அதிமுக வரலாறு.. இங்கே தலைமை பொறுப்பு வழி வழியாக வருவதவல்ல.. உண்மை, உழைப்பு தொண்டர்கள் மேல் விஸ்வாசம் இதுவே தன்னாலே தலைமை பொறுப்புக்கு ஏற்றி விடும்.. இங்கே தலைமை பொறுப்பு வாரிசுக்காக உருவாவதல்ல நல்ல தொண்டனுக்காக தலைமை உருவாகும் என்பதே அதிமுக கடந்த கால வரலாறு... இனி மக்களுக்கான அரசு எது என்பதை மக்கள் மன்றத்தில் முடிவு செய்யட்டும்......... Thanks..

  11. #529
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா வார இதழ் -01/07/19

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #530
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை சுடர் -07/07/19


  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •