Page 52 of 402 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #511
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #512
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆண்டவன் தமிழ் நாட்டை ஆண்ட காலம் அது எம் ஜி ஆர் ஆட்சி
    நாட்டுக்கு மட்டுமா
    தனி நபர் கூறியது கேளுங்கள்

    எங்கள் குடும்பத்தை தற்கொலையில் இருந்து மீட்டவர் எம் ஜி ஆர் முரசொலி மாறன் கருணாநிதி குடும்பம்

    கடும் சொற்கணையால் நான் தாக்கினேன் எம் ஜி ஆரை ஆனால் அவர் அன்பு எனும் பாணத்தால் என்னை வீழ்த்திய ராமசந்திர மூர்த்தி எம் ஜி ஆர் கண்ணதாசன் கூறியது

    விறகாய் இருந்த என்னை வீணையாய் மாற்றியவர் எம் ஜி ஆர் கவிஞர் வாலி

    என் உயிர் எம் ஜி ஆர் இட்ட பிச்சை வெண்ணிற ஆடை நிர்மலா

    என் மனைவி என் உடமை எல்லாம் கிடைத்தது எம் ஜி ஆராலே நடிகர் ரஜினி காந்து

    நான் இயக்குனர் ஆனது பிலிம் கல்லூரியில் படித்தது எம் ஜி ஆராலே தங்கர்பச்சன்

    எங்கள் குடும்பம் வாழ்வதே எம் ஜி ஆராலே அவர் நினைத்திருந்தால் விலாசம் இல்லாமல் செய்து இருக்கலாம் எம் ஆர் ராதிகா கூறியது

    என் குரு என் கட்சி பெயர் தெலுங்கு தேசம் என வைத்தவரே எம் . ஜி .ஆர் .,என் வெற்றி அண்ணன் எம் ஜி ஆர் வழியிலே என் டி ராமராவ் கூறியது

    என் குரு நான் இவ்வளவு மதிப்போடு வாழ்வது
    எம் ஜி ஆராலே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறியது

    நான் பிரபலமானது எனக்கு வாழ்வு தந்தது எம் ஜி ஆர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் கூறியது

    இதுபோல் ஆயிரகணக்கான பிரபலங்கள் சமானியர்கள் வாழ்வை மலர வைத்த ஆண்டவன் எம் ஜி ஆர்
    மனிதனாக பிறந்து இறைவன் ஆன அற்புத பிறவி எம் ஜி ஆர்

    வாழ்க எம். ஜி ஆர் .,புகழ்........... Thanks Sudharsan ..

  5. #513
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் நடிப்பதாக இருந்த "கொடுத்து சிவந்த கை" பற்றி திரு. கலைஞானம்.

    இதில் முக்கியமானது திருமதி கே.ஆர்.விஜயா தலைவரை "சேட்டா" அதாவது நம்ம தலைவரை திருமதி கே.ஆர் விஜயா "அண்ணன்" என்று தான் நினைத்தார்!!!! இப்படி திருமதி. சரோஜாதேவி சொன்னதற்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது!

    இதை நான் எதற்கு சொல்லுகிறேன் என்பது அனைவர்க்கும் தெரியும்!!! இதுதான் உண்மை.������ .......... Thanks to mr. Sailesh basu...

  6. #514
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் அட்டகாசமான காவியங்களில் ஒன்று... "குடியிருந்த கோயில்" சினிமாஸ்கோப் பாலியஸ்டர் ப்ரிண்டில் சென்னை - அஹஸ்திய 70 mm., திரையரங்கில் வெளி வருவதாக நண்பர் தகவல்..........

  7. #515
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

    இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர்.

    வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர்.

    இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

    கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார்.

    அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

    தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார்.

    அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின.

    அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

    அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே.

    இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!......... Thanks...

  8. #516

  9. #517
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு தலைவரை தொண்டர்கள் கொண்டாடலாம்
    தனக்கு பிடித்த நடிகரை
    அவரது ரசிகர்கள் கொண்டாடலாம்
    ஆனால் எல்லோரது
    மதிப்பையும் மரியாதையும்
    ஒருவருக்கு தானே தேடி வந்தது
    நம்
    புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டுமே
    என்ற பெருமிதத்துடன்
    இந்த பதிவு
    படித்து பாருங்கள்

    #திருமதி.#சீதாலட்சுமி எழுதிய "வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள்" கட்டுரையிலிருந்து...

    எல்லாத் திட்டங்களையும் விட இந்தியாவே ஏன் உலகமே புகழும் ஓர் திட்டம் என்று ஒன்று என்றால் அது திரு. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டமாகும். குழந்தைகளின் பசி தீர்க்க வந்த திட்டம். எல்லா கிராமங்களிலும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் குழந்தைகள் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    சத்துணவுத் திட்டத்தைப் பிரித்து தனித் துறையாக ஆக்கும் முயற்சி நடந்தது. ஆனால் நான் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது பற்றிக் கூறியவுடன்... “#தாயையும் #சேயையும் #பிரிக்க #மாட்டேன்” என்று கூறி தடுத்துவிட்டார்.

    எம்ஜிஆர் சினிமா உலகில் ஓர் நிர்வாகியாய் வலம் வந்தவர். அவருடைய ரசிகர்கள் தான் அவரது கட்சித் தொண்டர்கள். முதல்வரான பிறகு மற்றவர் மனம் புண்பட குத்தலாக அவர் என்றுமே பேசிய தில்லை. யாருடைய நம்பிக்கைகளையும் விமர்சிக்கவில்லை. அண்ணா அவர்கள் அறிஞர். படித்தவர். ஓர் இயக்கத்தில் இருந்து போராடி வந்தவர். அவர் சீக்கிரம் மறைந்தது ஒரு குறை.

    ஆனாலும் "எம்ஜிஆர் அவர்கள் இது கட்சி கொள்கை என்று சாதீய உணர்வுகளை எழுப்பவில்லை..." எல்லோரும் அவரை விரும்பினார்கள்.

    அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் விரும்பினாகள். அவர் உடல் நலம் பாதிக்கப்படவும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது உலகறிந்த உண்மை.

    சில கொள்கைகளுக்காக இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் ஓர் பொறுப்பில் வந்தவுடன் அங்கே துலாக்கோலைப் போல எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்க வேண்டும். பிரிவினைகளை வளர்க்கக் கூடாது. காழ்ப்பு உணர்ச்சியைத் தூண்டக் கூடாது. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எல்லோரையும் அரவணைத்தார்...

    எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் மிக நல்ல மனிதர். மிகச்சிறந்த மனிதநேயர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். #ஆனால் #நானே #என்னை #மறந்து #ஒருவரை #வணங்கினேன் #என்றால் #அது #எம்ஜிஆர் #அவர்களைத் #தான்.

    பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி இருந்தார்கள்.

    இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். #அந்த #தெய்வீகமுகமும் #குரலும் #என்னை #அவரை #வணங்கவைத்தது. #தாய்க்குலத்தை #மதிக்கும் #அவர் #குரலில் #அன்று #தாய்மைப்பரிவை #உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டியதில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்.

    #மனிதநேயம் #உள்ளவர்கள்தான் #மனிதம் #காப்பாற்றுகின்றார்கள்.
    நன்றி சீதாலெட்சுமி மேடம்
    அன்புடன்
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����... Thanks...

  10. #518
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கி வார இதழ் -14/07/19

  11. #519
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -06/07/19

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #520
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது தங்கமுகம். ...........தானை தலைவர்.
    மக்கள்திலகம். வாழும் தெய்வம் புரட்சி தலைவரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் வழிப்பட்டு கொண்டும் தெரிந்தவழியில் புகழ் பாடியும் வருகிறோம். ஆனால் கோபிசெட்டிபாளையம் ஆசிரியர்(மாணவர்களின் வாத்தியார்)- சாமுவேல் புரட்சி தலைவரை ஆசானாக ஏற்றுக்கொண்டு (வாத்தியார் மாணவன்) என்ற அடைமொழியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் இதுவரை எவரும் செய்யாத ஓவியவடிவில் வரைவது மட்டும் அல்லாது அதற்கு ஒரு தலைப்பும் கொடுத்து நண்பர்கள் வட்டத்தையும் பெருக்கி தலைவர் புகழ் பரப்பும் தங்களை இப்பிறந்த நாளை முன்னிட்டு விசித்திர மகான் ஸ்ரீ.எம்.ஜி ஆர்., அவர்களின் ஆசி பெற்று வளமுடன் நலமுடன் இன்பமுடன் வாழ்க பல்லாண்டு என கலைவேந்தன் எம்.ஜி.ஆர் ., பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துகிறோம்..... ஷிவபெருமாள்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •