Page 51 of 402 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #501
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவன் இருக்கிறான் ..........

    மேலாதிக்க காங்கிரஸை தூக்கி வீசிய போது உணர்ந்தோம் எம் .ஜி .ஆர் ., தலைவனாக இருக்கிறார் என்று ...
    திராவிட தலைவன் அண்ணாவை அரியணை ஏற்றிய போது உணர்ந்தோம் தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் என்று

    தான் பதவியில் அமர்த்திய கருணாநிதி மக்களை மறந்து தன் மக்களுக்காக ஊழல்வாதி ஆனபோது எதிர்த்து வீழ்த்திய போது உணர்ந்தோம் தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் என்று

    தானே ஆட்சியில் அமர்ந்து ஒரு பொற்க்கால ஆட்சி தந்த போது உணர்ந்தோம் தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் பொர்க்கால ஆட்சி எம் ஜி ஆர் ஆட்சி என உணர்ந்தோம் ..........

    தான் கடவுள் ஆனபின் தன்னால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஊழல் ஆட்சி செய்த போது முதல் குற்றவாளி பட்டம் கொடுத்து கடும் தண்டனையும் கொடுத்த போது உணர்ந்தோம் ... கடவுளாய் தலைவராய் எம் ஜி ஆர் இருக்கிறார் எனபதை உணர்ந்தோம் ...

    ஒரு தவறு தெரிந்து செய்தால் அவர் தேவன் என்றாலும் தண்டிக்க தலைவர் எம் ஜி ஆர் இருக்கிறார் என்ற உணர்வில் வாழ்கிறோம் நாங்கள் ...

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பில் வித்தியாசமாக அசத்திய "நாளை நமதே " வெளியான நாள் :04/07/1975.
    44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

    இந்தியில் வெளியான யாதோன் கி பாராத் ;படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் .
    சென்னை ஸ்டார் அரங்கில் 52 வாரங்கள் ஓடிய படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம். நாளை நமதே. படத்தயாரிப்பின்போதே மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இந்தி பாடல்களுக்கு இணையாக தமிழ் பாடல்கள் ஒப்பிடக்கூடாது ,யாருடைய தலையீடும் இசை அமைப்பில் இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன் இசை அமைத்து , தன் திறமையால்
    பாடல்கள் நன்கு அமையும்படி செய்தார்

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் பாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்தார். என் வழி தனி வழி போன்ற பஞ்ச் வசனங்கள் அதிகம் இருந்தன .இதையே பின்னாளில் நடிகர் ரஜினிகாந்த் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார் .
    ராஜஸ்ரீ மக்கள் திலகத்திற்கு , (சிறு வயதில் ) தாயாக நடித்தார் . நடிகர் சந்திரமோகன் மக்கள் திலகத்திற்கு தம்பியாக நடித்தார் நடிகர் கமலஹாசன் நடிக்க ஒரு மாதம் வாய்ப்பு அளித்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் சமீபத்தில் மீடியாவில் நடிக்காமல் போனதற்கு இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார் .நடிகைகள் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வில்லன் எம்.என்.நம்பியார், கே.கண்ணன், கோபாலகிருஷ்ணன் ,
    நாகேஷ்,வி.எஸ். ராகவன், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோர் அளித்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர் . இயக்குனர் சேதுமாதவன் திறம்பட இயக்கினார் ,கிளைமாக்ஸ் காட்சிகளில் அமைந்த அரசியல் நெடி கொண்ட வசனங்கள் பெரிதும் வரவேற்கப்பட்டு கைதட்டல்கள் பெற்றன அனைத்து அம்சங்கள் பொருந்தியும், இந்தி படம் அளவிற்கு இல்லை என்று ஒரு கூட்டம் நெகட்டிவாக செய்திகள் பரப்பியதன் காரணமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை . ஆனால் வசூலில் சோடை போகவில்லை .50நாள் நிறைவு செய்யும் வேளையில் இதயக்கனி வெளியானதும் படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருந்தது .ஆனால் இலங்கையில் 100நாள் கடந்து மிக சிறப்பாக ஓடி ,
    நல்ல ஆதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது .ஓடியன், பாண்டியனில் 63 நாட்களும் முரளிகிருஷ்ணாவில் 50 நாட்களும், ராஜகுமாரியில் 42 நாட்களும் ஓடியது .
    முதல் நாள் ரசிகர்களுடன் ஓடியன் அரங்கில் மேட்னி காட்சியும், இரண்டாவது வாரம் பாண்டியனிலும் , மூன்றாவது வாரம் முரளிகிருஷ்ணாவிலும் பார்த்து ரசித்தது மறக்க முடியாதது .மறு வெளியீடுகளில் பல நகரங்களில் அவ்வப்போது வெளியாகி வெற்றிநடை போடுகிறது .
    பாடல்கள் : 1.நாளை நமதே (சிறு வயதில் சகோதரர்களுடன், தாயுடன் பாடுவது )

    2.நீல நயனங்களில் (காதல் பாடல் )
    3.என்னை விட்டால் ( காதல் பாடல் )
    4.லவ்விங் இஸ் தி கேம் (கிளப் பாடல் )
    5.காதல் என்பது காவியமானால் ( காதல் பாடல் )
    6.நான் ஒரு மேடை பாடகன் ( மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அருமையாக நடனம் ஆடி பாடியிருப்பார் )
    7. நாளை நமதே ( சகோதரர்கள் மீண்டும் இணைவதற்கு உறுதுணையாக அமைந்த உணர்ச்சிமிக்க பாடல் )

  4. #503
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #504
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  6. #505
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like





  7. #506
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  8. #507
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  9. #508
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஆனந்த ஜோதி " வெளியான நாள் 28/06/1963
    56 ஆண்டுகள் நிறைவு பெற்றது . நடிகை தேவிகா புரட்சி நடிகருடன் நடித்த ஒரே படம். வில்லன் நடிகர் பி.எஸ்.,வீரப்பா தயாரித்தது .கதை வசனம் ஜாவர் சீதாராமன் .பாடல்கள் :கவிஞர் கண்ணதாசன், இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயக்கம் : வி.என்.ரெட்டி,மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி

    நல்ல துப்பறியும் திரைக்கதை. கமலஹாசன் சிறுவனாக பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருடன் இணைந்த ஒரே படம் .கமலுக்கு ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராகவும்,தேவிகாவுக்கு கவி மணியரசராகவும் சில காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார் .சிறுவர்களுக்கு அறிவுரை கூறும் காட்சி
    அபாரம் . நாட்டுப்பற்று, தேசியப்பற்று உணர்த்தும் காட்சிகளில் கூட நடிப்பு திறனை மக்கள் திலகம் வெளிப்படுத்தி இருந்தார் எப்போதும் வில்லனாக நடிக்கும் நடிகவேள் எம்.ஆர்.ராதா மனோரமாவுடன் ஜோடி சேர்ந்து நகைச்சுவையில் கலக்கியதுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு துப்பு துலங்குவதில் உதவியாக இருப்பார் .வில்லன் அசோகன், ராமதாஸ், எஸ்.வி.சகஸ்ரநாமம் ,ஜாவர் சீதாராமன்
    ஆகியோர் பங்களிப்பு நன்றாக இருந்தது .பாடல்கள் மிகவும் இனிமை. டைட்டில் இசை அருமை. ஒருதாய் மக்கள் பாடல் ஒலித்தபடி இருக்கும் . படம் முழுவதும்
    பின்னணி இசை நன்றாக இருந்தது . துப்பறியும் காட்சிகளில் ஆங்கில படத்திற்கு இணையான இசையமைப்பு . முதல் வெளியீட்டில் பார்க்க இயலவில்லை. 1972க்கு பின் தலைவர் கட்சி ஆரம்பித்த பின்னர் பார்த்தேன் .பலமுறை பல அரங்குகளில் பார்த்திருந்தாலும் ஒரு முறை உட்லண்ட்ஸ் அரங்கில் பகல் காட்சி (புதிய காப்பி )பார்த்து ரசித்தது சுவையான நிகழ்ச்சி .

    பாடல்கள் : ஒரு தாய் மக்கள் நாமென்போம் (சமூக நல பாடல் )
    2. நினைக்க தெரிந்த மனமே (சோகமான தத்துவ பாடல் )
    3. பலப்பல ரகமா இருக்குது பூட்டு
    4.கடவுள் இருக்கின்றார் (தத்துவ /போதனை பாடல் )
    5.காலமகள் கண்திறப்பாள் சின்னையா
    6.பொய்யிலே பிறந்து (காதல் பாடல் )
    7.பனி இல்லாத மார்கழியா ( காதல் பாடல் )

    1963ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து 9 படங்கள் வெளியாகின .பெரிய இடத்து பெண் வெளியாகி 50 வது நாளில் ஆனந்த ஜோதி வெளியாகியது .ஆனந்த ஜோதி 50நாட்கள் ஆனதும் நீதிக்கு பின் பாசம் வெளியானது .அடுத்து காஞ்சி தலைவன், பரிசு ஆகிய படங்கள் வருகையால் வெற்றி ஓட்டம் தடைபட்டது .
    இருப்பினும், பாரகன், முருகன்,மேகலா அரங்குகளில் 50 நாட்கள் கடந்து ஓடியது .மறு வெளியீடுகளில் பல அரங்குகளில் திரையிடுவதை காண முடிகிறது .

  10. #509
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #510
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •