Page 49 of 402 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #481
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் புதியகார் வாங்கி அதை பதிவு செய்ய 1975 ல் மேனேஜர் பத்மநாபன் மூலம் முயற்சித்தபோது 7 என்ற எண்ணில் கூட்டுத்தொகை வரவேண்டும் என கூறினாராம். மேனேஜரிடம் அதிகாரி, 4777 என்ற பேன்சி நம்பர் உள்ளது தலைவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என தெரிவித்தாராம். அந்த வகையில் இந்த நம்பர் 1975 லேயே பதிவுசெய்யப்பட்டது. தலைவரின் கார்கள் பற்றிய சிறப்பு பேட்டி ஒன்றை திரு.சைதையார் கொடுத்து உள்ளார். அதை நேற்றுதான் தலைவர் பெயரிலான முகநூல் ஒன்றில் பார்த்தேன்.அதை கண்டுபிடித்து இன்று மாலைக்குள் பதிவிடுகிறேன்........ Thanks mr.Samuevel...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #482
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எதிரிகளுக்கு #நெற்றிப்பொட்டில் #அடித்த #புரட்சித்தலைவரின் #அபாரமான #விளக்கம்...

    வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள் - : 1973 மே 21 ம் தேதி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவு...

    தொகுதி முழுவதும் பரபரப்பு. ஆண்களை விடப் பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பதைக் கண்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது...

    தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியலில் #எம்ஜிஆர் #ஒரு #மாபெரும் #சக்தியாக உருவெடுக்கிறார் என்று எல்லா பத்திரிகைகளும் எழுதின...

    வழக்கம் போல கருணாநிதி இது கவர்ச்சி அரசியல் என்று பிதற்ற ஆரம்பித்தார்...காமராஜர் கூட புரட்சித்தலைவரைக் கடுமையாக விமர்சித்தார்.

    அதற்கு மக்கள் திலகம் அளித்த அற்புதமான பதில் தான் #இப்பதிவின் #ஹைலைட்...

    ஒரு கொள்கையின் மீது பற்று ஏற்படுவதற்கு கவர்ச்சி எனலாம். தனிமனிதனின் செயலாற்றல் அல்லது தொண்டின் மீது வைக்கின்ற நம்பிக்கைக்கும் கவர்ச்சி எனக் கூறலாம். அதாவது கவர்ச்சி என்பது "ஈர்க்கும் சக்தி" என்று தான் பொருள்படும். அந்த ஈர்க்கும் சக்தி அழகின் மீதோ, ஒரு உருவத்தின் மீதோ மட்டும் தான் ஏற்படும் என்பது தரம் குறைந்த வாதமாகும்.

    மகாத்மாவின் அகிம்சை வழிப்போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொண்டது அவரின் தன்னலமற்ற தியாகசீலத்தின் ஈர்ப்புசக்தி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

    மூதறிஞர் ராஜாஜியின் ஆழமிக்க கருத்துக்கள், மனதிற்குப்பட்டதை நியாயமான வாதத்தோடு எடுத்துவைக்கும் ஆற்றல், படித்தவர்களையும், ஏன் பாமரமக்களையும் அவர்பால் ஈர்த்தன என்றால் அந்த கவர்ச்சியை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...

    அண்ணாவின் தத்துவங்களும், பாச உணர்வும், எழுத்தும், பேச்சும் அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்தன. அந்த ஈர்ப்புசக்தி அவரின் கொள்கைகளை செயல்படுத்தப் பாடுபடும் அதிமுகவிற்கும் உண்டு. இதை ஒப்புக்கொள்ளத் துணிவில்லாதவர்கள் "கவர்ச்சி" என்னும் வார்த்தைக்கு தரக்குறைவான பொருள் கொடுக்கிறார்கள்...

    தங்களுடைய பலவீனத்தையும், மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அவர்களின் பரிதாப நிலையையும் உலகத்தின் முன் மறைத்துக்கொள்ள 'கவர்ச்சி' எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

    மக்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இயலாதபோது ஆத்திர உணர்ச்சியால் தங்கள் தகுதியையும் மறந்து சொல்லும் வேதனைச்சொல் தான் "கவர்ச்சி" என்ற சொல்லாகும்...

    இப்படி #நெற்றிப்பொட்டில் #அடித்தார்போல அதே சமயம் நேர்மையான நியாயமான முறையில் #புரட்சித்தலைவர் #அளித்த #விளக்கம் அனைவரையும் அவர் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது... நன்றி முகநூலில் பாலு சார்............ Thanks wa.,

  4. #483
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    04.07.1977

    நாளை நமதே .

    04.07.1975ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 125 வது காவியம் ''நாளை நமதே ''

    எம்ஜிஆரின் தாரக மந்திரம் ''நாளை நமதே ''

    1977 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 30.6.1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று 4.7.1977 ல் தமிழக முதல்வராக கோட்டைக்குள் சென்ற இனிய திருநாள் தினம் இன்று .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்

    1950 களில் மக்கள் திலகம் பல படஙக்ளில் இளவரசனாகவும் , படைத்தளபதியாகவும் , போர் வீரராகவும் மன்னராகவும் நடித்து புகழ் பெற்று வந்த நேரத்தில் திமுகவில் இணைந்து அக் கட்சியின் கொள்கைகளை தான் நடித்த எல்லா படங்களிலும் பாடல்கள் மூலமும் காட்சிகள் மூலமும் இடம் பெற செய்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பெற்றார் . லட்சக்கணக்கான ரசிகர்கள் திமுக உறுப்பினர்களாகவும் , கோடானுகோடி அனுதாபிகளாகவும், மாறி எம்ஜிஆரின் செல்வாக்கை உயர்த்தினார்கள் ...........

    அறிஞர் அண்ணா அவர்கள் எம்ஜிஆரின் ஆளுமையை நன்கு உணர்ந்திருந்தார் .எம்ஜிஆரின் செல்வாக்கை பெற்று 1967ல் திமுக ஆட்சி அமைந்திட எம்ஜிஆரின் உழைப்பு மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களின் ஈடில்லா பிரச்சாரம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது .

    1972ல் எம்ஜிஆரின் சினிமா & அரசியல் புகழ் உச்சத்தில் இருந்தது .கருணாநிதியின் பேராசை காரணமாக எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் .
    லட்சக்கனக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் அவர் பின்னால் அணிவகுத்து நின்றனர் . அண்ணா திமுக உதயம் .. புரட்சிநடிகர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் .அதிமுக நிறுவனர் ஆனார் .

    1947-1977
    30 ஆண்டுகள் இந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகர் எம்ஜிஆர் . வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் .
    1977-2019 எம்ஜிஆரின் பழைய படங்கள் 42 ஆண்டுகளாக பல்வேறு வெளியீடுகளில் பல திரை அரங்குகளில் தென்னகமெங்கும் வசூலை வரிக்குவித்து சாதனைகள் படைத்தன .சாதனைகள் தொடர்கிறது .... சாதனைகள் தொடரும்

    உலகில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கிடைத்துள்ளது .

    எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவை தமிழக முதல்வராக்கி அழகு பார்த்தார் .
    எம்ஜிஆரை நம்பி இருந்த கருணாநிதியை தமிழக முதல்வராக்கி அழகு பார்த்தார் .

    எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் என்று தப்பு கணக்கு போட்டவர்கள் எண்ணத்தில் இடி விழுந்தது .

    திருமதி ஜானகி எம்ஜிஆர்
    செல்வி ஜெயலலிதா
    திரு ஓ.பன்னீர்செல்வம்
    திரு .பழனிசாமி

    4 முதல்வர்களை அதிமுக இயக்கம் கண்டுள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ் , செல்வாக்கு , இரட்டை இலை சின்னம் கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலைத்து விட்டது . விரைவில் அதிமுக இயக்கத்தின் பொன்விழா ஆண்டு [ 1972- 2022] நம்மை எல்லாம் வரவேற்க இருப்பதை எண்ணி மகிழ்கிறோம் .

    இந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் நிரந்தரமாக நிலைத்து விட்டது
    மக்கள் திலகம் எம்.ஜி ஆர்., ரசிகர்கள் பல தலை முறைகள் தாண்டியும் இன்னமும் உயிர்ப்புடன் எம். ஜி . ஆரை நினைத்து வாழ்ந்து வருவது உலகில் எங்குமே நடக்காத அதிசயம் .........👌 👍 💐 ........... Thanks wa.,

  5. #484
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    04.07.1977 அன்று நம் தலைவர் மன்னாதி மன்னன் இதயதெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் *எம்ஜிஆர்* அவர்கள் தமிழ்நாடு *முதலமைச்சர்* சிம்மாசனத்தில் அமர்ந்து *முதல் கையெழுத்து இட்ட நாள்*
    அதன் ஞாபகமாகத்தான் தன் காரின் *எண் 4777* என்று வாங்கினார்.......... Thanks wa.,

  6. #485
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை முதல் (05/07/19) வட சென்னை அகஸ்தியாவில் வேங்கையன் வெற்றி விஜயம் . தொடர்ந்து 5 வது வாரமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் வசூலில் சமீபத்தில் வெளியான புதிய படங்களின் வசூலை முறியடித்து சாதனை
    வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் அகஸ்தியாவில் புதிய படங்களை வசூலில் மிஞ்சவோ, அதற்கு இணையாகவோ சமீபத்தில் சாதித்த வரலாறில்லை
    என்பதை நிரூபிக்கும் வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் தொடர்வெற்றியை பதிவு செய்து வருகின்றன .

  7. #486
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #487
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #488
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #489
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று (03/07/19) வெவ்வேறு தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
    திரை காவியங்கள் ஒளிபரப்பாகிய செய்தி

  11. #490
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தாராபுரம் வசந்தாவில் நாளை முதல் (05/07/19) வீராங்கன்/மார்த்தாண்டன் வெற்றி விஜயம் .புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து , இயக்கிய "நாடோடி மன்னன் ". தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •