Page 391 of 402 FirstFirst ... 291341381389390391392393401 ... LastLast
Results 3,901 to 3,910 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3901
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரைப் பற்றி திரு. நாகேஷ் அவர்கள் !

    எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

    காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.

    எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

    அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!

    இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.

    ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!

    எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.

    எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

    எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!

    நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?........ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3902
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது.

    எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது.

    குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது.

    இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். ....

    அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.

    இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.

    தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான்.

    இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.
    தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட,

    அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.

    நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.

    ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். ......!

    நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான்.

    இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.

    இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்?

    ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை.

    காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார்.

    பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.

    எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.

    - இந்து டாக்கீஸ்....... Thanks...

  4. #3903
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்", 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்..
    1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது.
    Audio time: 2:18:21
    இப்படத்தின் தொடர்ச்சியாக மாய பின்பம் குழுமம் ''புரட்சித்தலைவன்''' என்ற முப்பரிமாணப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது........... Thanks...

  5. #3904
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது அரசியல் பதிவல்ல... ஆன்மிக பதிவு...
    1977ல்
    ஈரோட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கலைஞர்.
    இந்த சம்பவம் நடந்து ஓரிரு வாரங்களில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
    அதன் பின்பு நடந்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்.
    அவர் பெயர் M.G.இராமச்சந்திரன் என்கின்ற M.G.R.நம் பொன்மனச்செம்மல்.
    எந்த ராமரை இழிவு படுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்ட நம் மக்கள் திலகத்திடம் தோற்றார் கலைஞர்.
    எம்.ஜி.ஆர்.தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
    அதாவது கலைஞரை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ ராமச்சந்திர ப்ரபு.
    யாராக இருந்தாலும் கர்மா தப்பாது......... Thanks...
    .

    .

  6. #3905
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மகா சக்தியுடன் இன்றும் வாழும் தெய்வம்...10.4.2020 அன்று கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்றதலைப்பில் இலங்கையில் பிறந்து தமிழகத்தை ஆட்(சி) கொண்டு கேரளாவில் திருமணம் புரிந்த மும்மூர்த்திகளின் அவதாரமாகிய மூன்றெழுத்து தெய்வத்திடம் ஒரு சில சிறிய கோரிக்கை வைத்தோம். மறுநாளே திரு.பெரியாண்டவர் அவர்கள் 15 பைகளில் மளிகை பொருட்களும் அதற்கு அடுத்தடுத்த நாளில் கலைவேந்தன் பக்தர்கள் பாஸ்கர் ரூ 1500.. லோகநாதன் ரூ 1000... மற்றும் 2 மூட்டை அரிசி ஆட்டோ கார் லைசென்ஸ் வினியோக செலவு. ஷிவபெருமாள் ரூ 1000 மற்றும் வினியோக செலவு சாந்தகுமார் ரூ 1000 ஆயிரம்விளக்கு ரகுகுணா ரூ 1000 யும் சைதை கோபாலகிருஷ்ணன் 20 பை மளிகை பொருட்களும் அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம் சார்பாக *ஹயாத் அண்ணன் மூலமாக. ரூ 3000. அண்ணன் முருகு பத்மநாபன் பிரான்ஸிலிருந்து MTCN வழியாக ரூ 5005ம் சத்தியமங்கலம் வாத்தியார் சாமுவேல் ரூ 1500 இதயகனி திரு விஜயன் 1 மூட்டை அரிசி பூக்கடை சக்தி 1 மூட்டை அரிசியும் வழங்கி உதவி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டு இதுவரை 45 பக்தர்களுக்கு மளிகை பொருட்களும் 6 நபர்களுக்கு சேர்த்து 5000 ரூபாய் வங்கி கணக்கிலும் நேரிலும் வழங்கி மொத்தம் 51 நபர்கள் சிறிய பலன் பெற்றார்கள் என்றால் தலைவரின் சக்தி இன்றும் உள்ளது நிஜம் தானே......என்பதை நிருபிக்கவே இந்த பதிவு.... அடுத்த வாரம் மீதி உள்ள பணத்தில் ஒருசிலருக்கு அரிசி காய்கறி வழங்கி விடலாம் என்று மயிலை திரு லோகநாதன் ஆலோசனை வழங்கி உள்ளார். இனி பெரிய மனது படைத்து யாரேனும் உதவினால் அதையும் பெற்று அமைப்பின் பொறுபாளர்கள் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் தெரிய படுத்தப்படுகிறது.இவன் ஷிவபெருமாள்....... Thanks...

  7. #3906
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .... Thanks...

  8. #3907
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் பார்முலாவே இல்லையேனு எம்ஜிஆர் சொன்னார்’’ - ஏவிஎம்.சரவணன் ’அன்பே வா’ ஃப்ளாஷ்பேக்...

    அன்பே வா’ படத்து கதையைக் கேட்டுட்டு, ‘என் பார்முலாவே இல்லையேன்னு எம்ஜிஆர் சொன்னார். ஏவிஎம் எந்த ஹீரோவுக்காகவும் கதை பண்ணினதே இல்லை. எம்ஜிஆர் நடிச்ச ‘அன்பே வா’ படம்தான், ஹீரோவுக்காக ஏவிஎம் கதை பண்ணின முதல் படம்’’ என்று ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.

    ஏவிஎம்.சரவணன் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டியளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    அப்பா (ஏவி.மெய்யப்பச் செட்டியார்) எப்போதுமே முதல்ல கதையைத்தான் ரெடி பண்ணுவார். கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார்யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும். அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம்.

    ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’ன்னு சொன்னார். ‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் திருலோகசந்தர் (ஏ.சி.திருலோகசந்தர்) ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன்.

    இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘ஏவிஎம்க்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன்.

    அப்பா கதையைக் கேட்டாரு. ‘சரி, சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க’ன்னாரு அப்பா. நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், ’இது என் படம் இல்ல. என் பார்முலா எதுவுமே இந்தப் படத்துல இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம்’னு சொன்னார். ஆனா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார்.

    ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு.

    ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்.

    இவ்வாறு ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.... Thanks...

  9. #3908
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    100-ஐக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர்..!
    
    மக்கள் திலகம், புரட்சித்தலைவர் ஆகிய சிறப்புப் பெயர்களால் சினிமா உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் அழைக்கப்பட்டவர்.

    எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டு அரசியல் உணர்வால் துவங்கப்பட்ட அதிமுக., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. காமராசரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் நிறைவேற்றப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் மாணவ மாணவியர் பலர் பசி இன்றி, இன்று கல்வி பயின்று வருகின்றனர்.

    எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வருடம்தோறும்... பலர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் இன்று அவரது புகைப்படம் வைத்து, மைக் செட் கட்டி, அவர் நடித்த சினிமாப் பாடல்களைப் போட்டு, அவருடைய பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.

    வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த இவரின் புகழ் என்றும் அழியாதது.

    மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, நாடகக் குழுக்கள் பலவற்றில் பிரபலமாகத் திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்ததால், இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

    எம்.ஜி.ராமச்சந்திரன், தனது சொந்தக் கட்சியாக, அ.தி.மு.கவை உருவாக்கினார். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கியக் காரணம், அவர் ஏழைகளின் மீது வைத்த அன்பும் பரிவும்தான். அதனால்தான் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்த முதல் இந்தியத் திரையுலகப் பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

    இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருந்த போது, தந்தை காலமானார். அதனால், அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தினார்.

    1960ல், எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ அறிவித்தது. ஆனால், அரசின் மீதான பற்றற்ற நடத்தையின் காரணமாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த விருதில் பாரம்பரிய ஹிந்தி சொற்களுக்குப் பதிலாக தமிழில் அவை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்........ Thanks.........

  10. #3909
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு முதலாளிக்கு உண்மையாக வேலைசெய்யும் தொழிலாளியை, வேலை சரியாக செய்யாத தொழிலாளி "முதலாளியிடம் காக்கா பிடிக்கிறார்" என்று கிண்டல*டிக்கிறார். அதற்கு தலைவரின் பதில்: காக்காய் என்றால் ஈனப்பிறவி அல்ல! விடியற்காலையில் எழுந்திருக்கிறது. தன் இனத்தோடு சேர்ந்து வாழுது. கிடைக்கும் இரையை பகிர்ந்து உண்ணுது. தன் இனத்தில் ஏதோ ஒரு காகம் இறந்துவிட்டால் ஒன்று சேர்ந்து ஈமக்கடன் செய்யுது! இவற்றில் ஏதாவது ஒரு நல்லகுணம் உன்னிடம் இருக்கா? என்று சோம்பேரி வேலையாளுக்கு அறிவுரை கூறும் "இதயக்கனி" ப*ட*க்காட்சியுட*ன் மதிய ஊர*ட*ங்கு வணக்கம்......( இந்த சிறிய அளவிலான காட்சியில் கூட போதனை, விளக்கங்கள். அதனால் தானே "வாத்தியார்".....)..... Thanks...

  11. #3910
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கைத் தமிழர் துயர் துடைக்க முதலமைச்சரின் வேண்டுகோள் :

    இலங்கைத் தமிழர் நலத்திலும் நல் வாழ்விலும் தமிழ்நாட்டு மக்களின் பரிவும் பாசமும் அனைவரும் அறிந்துள்ளனர். அவர்கள் துயருற்று வாடி நிற்கும் இந்த வேளையில் நம் நெஞ்சங்கள் புண்ணாகி இருப்பதும் யாவரும் அறிந்ததே. நாடுகள், நாடுகளின் எல்லைகள், கடல்கள் போன்ற பூகோளப் பிரிவுகள் நம்மிடையே இருக்கும் அன்பையும், பாசத்தையும் பிரித்துவிட முடியாது. சர்வதேச சட்ட மரபுகள் காரணமாக அவர்கள் நாட்டுப் பிரச்சினையில் நம்மால் தலையிட இயலாது என்றாலும் அவர்கள் மானத்தோடும், கௌரவத்துடன் வாழ நாம் அனைவரும் அகமும் புறமும் வேண்டிக் கொண்டேயிருக்கின்றோம். அமைதியாக அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று கொண்டேயிருக்கின்றோம்.

    எனினும், திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னும் இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுருக்கின்ற கொடுமையான சம்பவங்கள் நம் மனதை வருத்துகின்றன. இந்த சம்பவங்களை கண்டிக்கும் வகையிலும் இலங்கை தமிழ்ச் சகோதரர்கள் பால் நமது உள்ளக் கிடக்கையை காட்டும் வழியிலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் 24.09.1985 அன்று ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பது என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி செய்த முடிவை தமிழ்நாட்டு மக்களின் முன் வைக்க நான் விழைகிறேன்.

    வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக வந்த வண்ணம் உள்ள இலங்கை தமிழ் குடும்பங்களின் மறுவாழ்வுக்கென இந்த உண்ணா நோன்பு நாளில் நம்மால் இயன்ற நிதி உதவியை கொடையாக செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் நண்பர்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற உண்டியல்களை எடுத்துக் கொண்டு 24. 09. 1985 லிருந்து தங்களை அணுகும்போது தாராளமாக தங்கள் உதவியை நல்குமாறு வேண்டுகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவரின் பெயரிலான காசோலை மூலமாகவும் தங்கள் உதவியைத் தரலாம். இந்த நற்பணிக்கு தாராளமாக உதவ வேண்டி தங்களை விரும்பி அழைக்கின்றேன்.

    தங்கள் அன்புள்ள,

    எம்.ஜி.இராமச்சந்திரன்,

    முதலமைச்சர்,

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •