Page 357 of 402 FirstFirst ... 257307347355356357358359367 ... LastLast
Results 3,561 to 3,570 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3561
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [#புரட்சித்தலைவர்

    திரையுலக வாழ்க்கை :

    7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு உணர்த்தினார்.

    தொண்டுகள் :

    பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம், காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத் திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார் அதனால், அவரை மக்கள், 'பொன்மனச் செம்மல்', 'புரட்சித்தலைவர்'என்று அழைத்தனர்.

    மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 -ம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின், 1988-ல், இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

    சுவையான குறிப்புகள் :

    * விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார், பிரபாகரன்.

    * சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹூக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.

    * முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

    * ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

    * நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா அடுத்தது சரோஜா தேவி

    * எம்.ஜி.ஆர்- ன் வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா இது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.

    * நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள். சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.

    * எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.

    Cont...]......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3562
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [மதுரை ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வர் #எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னையில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டது..

    பாராட்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சீர்காழி சிவ சிதம்பரத்தின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

    அப்போது மேடைக்கு வந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள், சிவசிதம்பரத்தின் அருகில் போய் அமர்ந்தபடி ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.

    உடனே சிவசிதம்பரம்..

    'பண்டு தமிழ் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன்'

    -என்ற பாரதிதாசன் பாடலை பொன்மனச்செம்மலை சுட்டிக்காட்டி பாடியவுடன் வள்ளுவர் கோட்டத்தில் எழுந்த ஆரவாரத்தில் விண்ணேஅதிர்ந்தது.

    இசைக் கச்சேரிகளில் எம்.ஜி,ஆர். தரையில் அமர்ந்து ரசித்து கலைஞர்களைப் பாராட்டினார்.

    தலைவரின் எளிமைக்கு இந்த நிகழ்வு ஒர் சான்று.] https://m.helo-app.com/al/mfFQwkSNe...... Thanks...

  4. #3563
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!
    ������������������������������

    M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின்,

    ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’

    என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.

    முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.

    அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து,

    ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’

    என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.

    அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி,

    ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’
    என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.

    அந்த இளைஞர் சென்ற பிறகு,

    ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’
    என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து,

    ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’
    என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

    முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம்---

    ‘சக்கவர்த்தி திருமகள்.’

    அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.

    எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்---

    ‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’

    என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.அவருடன், நடன தாரகை E V சரோஜாவும், G சகுந்தலாவும் போட்டி நடனம் ஆடி அசத்தி இருப்பார்கள்--!

    அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார்.

    ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’

    என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.

    விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார்.

    ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’
    என்று உதவியாளரை விரட்டினார்.

    அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும்,

    ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’
    என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.

    எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி இன்றளவும் வியக்கும்படி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.

    அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது.

    "எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர்"

    என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று

    ‘காவல்காரன்’
    படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....

    ‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது

    கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”

    எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.01.1957-ம் ஆண்டு வெளியான

    ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி,

    18.03.1976-ம் ஆண்டு வெளியான

    ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை

    எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார்.

    எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்............. Thanks...

  5. #3564
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அபூர்வசக்தி...#

    வணக்கம் தோழர்களே... இன்று மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்களிடத்தில் இருக்கும் அபூர்வ சக்தியை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்!
    1972 ஆம் ஆண்டு திமுகவில் உள்ளே இருந்து கொண்டு மேடையில் பகிரங்கமாக கணக்கு கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் #எம்ஜிஆர் ஒருவரே
    கட்சியில் இருந்து நீக்கப் பட்ட நேரம் புதிய கட்சியான அதிமுக வும் அரங்கேறிய வேளை "உலகம் சுற்றும் வாலிபன்" படம் துவக்கத்தில் அதிமுக கொடியுடன் துவங்குகிறது இதற்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றம் வரை தடை வாங்குகிறார்கள்(விளம்பரம் போஸ்டர் இல்லாமல் வெளி வந்து கின்னஸை தொட்டது வேறு கதை) திமுக வினர் அப்போது மதுரையில் நடந்த திமுகவின் பெரிய பொது கூட்ட மேடையில் இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் மதுரை முத்து (பல ரவுடிகளை கையில் வைத்திருப்பவர்) பேசுகிறார் அடேய் ராமசந்திரா நீ சினிமாவில் அட்டைக்கத்தி வைத்து மக்களை ஏமாற்றி சண்டை போடுவாய் நான் ஒரிஜினல் கத்தியுடன் மோதும் உண்மையான நிஜ ஹுரோ நீ கலைஞரை பாத்தா கணக்கு கேக்குற உன்னை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் உன் படம் ரிலீஸ் ஆனால் சேலைக் கட்டிக்கொள்கிறேன் என்று வீர முழக்கமிடுகிறார்
    உன்னை எங்கும் வாழ விட மாட்டேன் என்றார் அன்று தினமணியில் கார்டூன் படம் எம்ஜிஆர் அண்ணா படம் இனி இங்கு இருக்கக் கூடாது என்று எடுத்து செல்வது போல் அதை பார்த்த கலைஞர் எனக்கு இனி அண்ணா எல்லாம் மதுரை முத்து தான் என்று அவரை கட்டி தழுவுகிறார்
    அதே மேடையில் நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் என்னை பத்மினியுடன் நெருங்கி நடிக்க விடாமல் சூழ்ச்சி செய்தவர் தான் இந்த இராமசந்திரன் இராஜாதேசிங்கு படத்தில் இதை நாடு மறக்காது என்று அவரும் கரீத்து கொட்டினார் எம்ஜிஆரை
    மறுநாள் துக்ளக் பத்திரிக்கையில் சோ நீங்களும் பத்மினியும் நெருங்கி பழகுவதை எம்ஜிஆர் தடுத்தார் இதை நாடு மறந்தால் நாட்டுக்கு என்ன பேராபத்தா வரும்? என்று கிண்டல் கேள்வி எழுப்பினார்?
    அடுத்து பேசியவர் திண்டுக்கல் எம் பி இராஜங்கம் பேசும் போது அருமை நண்பர் எஸ்.எஸ் ஆரை தன் வக்கிர புத்தியால் சினிமாவை விட்டே விரட்டியவர் இந்த இராமசந்திரன் தான் இனி உன்னை அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தலை காட்ட விடமாட்டோம் என்று குரலை உயர்த்தி நெஞ்சை உயர்த்தி மார் தட்டி சவால் விட்டார் மேடையில்
    பின்பு அவர் பேச்சை முடித்து தன் காரில் போகும் போது திண்டுக்கல் சேரும் முன் மாரடைப்பால் ரோட்டிலே இறந்தார். பின்பு திண்டுக்கல் எம்பி தொகுதிக்கு இடை தேர்தல் வந்தது அதிமுக சார்பில் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தில் முதன் முதல் அமோக வெற்றி பெற்றார் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவதூறு பேசிய இராஜாங்கம் ஆவார் எதிர்த்து போட்டியிட்ட பொன்ராமலிங்க தேவரை மதுரை முத்து திமுகா சார்பில் நிறுத்தினார் அவர் டெபாசிட் தொகையை இழந்தார் எம்ஜிஆர் செல்வாக்கை வெளியில் மறைக்க கருணாநிதி தந்திரத்திற்கு மதுரை முத்து மீது பழி போட்டார் உன்னால் தான் திமுக தோற்றது ஆகையால் மேயர் பதவியை பறித்தார் கட்சிக்காக கத்தீ பேசும் போதெல்லாம் கைதட்டியவர்கள் என்னை முதுகில் குத்தி விட்டார்கள் என கூறி எம்ஜிஆர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதிமுகாவில் சரணாகதி ஆனார் மதுரை முத்து
    பின்பு காலபோக்கில் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தில் புகுந்து ஆட்சி செய்ய தொடங்கினார் கருணாநிதி அப்போதைய நாளேடுகளில் விஜயகுமாரியையும் கருணாநிதியையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்க இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவிக்க வில்லை (ஒரு நாள் உண்ணாவிரத்தின் போதும் அவரது கால்மாட்டில் அமர்ந்திருந்தார் நடிகை விஜயகுமாரி நாடறியும்) காலப்போக்கில் மனம் நொந்து கருணாநிதி செய்த துரோகத்தால் எம்ஜிஆர் அவர்களிடமே எஸ்.எஸ்.ஆர் சரணாகதி அடைந்தார்
    இப்படி எம்ஜிஆரை எதிர்த்து பொது மேடையிலே சவால் விட்டு தோற்றவர்கள் நான் இராஜங்கம் எஸ்.எஸ்.ஆர்
    இதனை 1977 ல் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரம் அதே மதுரை மேடையில் மேயரான பின்பு மதுரை முத்து எடுத்து கூறி எம்ஜிஆரின் அபூர்வ சக்தியை சொல்லி பாராட்டினார்

    ஆனால்,கடைசி வரை எம்ஜிஆர் அவர்கள் தன்னை தாக்கி பேசியவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட யாரையும் தரம் தாழ்த்தி பேசியதே இல்லை மாறாக தனது பொன் மனத்தால் அவர்களாக திருந்தி வரும் வரை காத்திருந்து வெற்றி கண்டவர்

    #குறிப்பு
    அப்போதெல்லாம் சூட்கேஸ் கொடுத்து ஆள் பிடிப்பது கிடையாது

    #எல்லாப்புகழும் எம்.ஜி.ஆர்., க்கே....... Thanks...

  6. #3565
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    What a Style....!!!

    வாத்தியாரின் ஃபைட்டை அணுஅணுவா ரசிப்பதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தானே செய்யுது....

    எனது பள்ளிப்பருவத்தில் எம்ஜிஆர் என்று சொல்வதை விட வாத்தியார்னு சொன்னது தான் அதிகம்...!

    மிக நுட்பமாக சண்டைக்கலைகள் தெரிந்தால் மட்டுமே இத்தகைய ஸ்டைல் பண்ணமுடியும்!!!

    நான் சொல்றது சரிதானே!!!( "ஆயிரத்தில் ஒருவன்" ஸ்டைல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் - நம்பியார் Fight Scene... அலசல்... சிலாகித்து பதிவுகள்... Thanks...

  7. #3566
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஹா... தலைவரின் ஸ்டைல்.. அழகு யாருக்கும் வராது தம்பி.. கண்கொள்ளாக் காட்சி... Thanks...
    ����������

  8. #3567
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ❤️ ❤️❤️அவருக்கு அதுக்கு தகுந்தாப்படி எதிராளிகளும் இருந்தாங்க.
    டி.எஸ்.பாலையாவோ, பி.எஸ்.வீரப்பாவோ, எம்.என்.நம்பியாரோ, எஸ்.ஏ.அசோகனோ, ராமதாஸோ, ஏன் பிற்காலத்தில் வந்த ஜஸ்டின்கூட, தலைவருக்கு சமமான பலத்துடனும், வீரத்துடனும் இருந்தாங்க.
    தலைவரென்ன இந்த #...... மாதிரி சோப்ளாங்கியா !!!.... Thanks...

  9. #3568
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Pasupathy Parasaram நான் கதாநாயகனாக நடித்து பாதியில் நின்றுபோன "சித்தாடை கட்டிக்கிட்டு"படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக எனக்கு சினிமா சண்டை போட கற்று கொடுத்தவர் எம் ஜி ஆரின் மனதுக்குப் பிடித்த, அவருடைய பல படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் அவருடன் மோதிய ஜஸ்டின் அவர்கள்தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்
    Bala Subramanian ரகசிய போலீஸ் 115 படத்தில் ஜஸ்டின் எம்ஜிஆருடன் மோதும் ஒரு சண்டை காட்சி உள்ளது அந்த சமயத்தில் வந்து கொண்டிருந்த பல ஆங்கிலப் படங்களின் சிறந்த சண்டை காட்சிகளுக்கு நிகராக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளதாக நான் இன்றும் நினைக்கிறேன். சண்டைக் காட்சி மிகவும் ஸ்டைலிஷாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. அந்த சண்டைக்காட்சியை நீங்கள் உங்கள் பக்கத்தில் பதிவிட வேண்டுகிறேன்.... Thanks...

  10. #3569
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Pasupathy Parasaram anna! தனக்கு நிகரான வலிமையையோ அல்லது தன்னைவிட பலம் மிக்கவரோடு தான் வாத்தியார் மோதுவார்... Thanks...

  11. #3570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மிக உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள் அருமை சகோ .என்ன ஸ்டைல் என்ன நுட்பம் என்ன அழகு!
    சும்மா இல்லை இவருக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லப்படுவது..... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •