Page 354 of 402 FirstFirst ... 254304344352353354355356364 ... LastLast
Results 3,531 to 3,540 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3531
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 11 வெள்ளி

    எம்ஜிஆர் பக்தர்களே

    படத்தில் நம் அருமை தலைவனை

    வணங்குபவர் பெயர்

    வி பி பாலசுப்ரமணியன்

    துணை சபாநாயகர்

    வேடசந்தூர் தொகுதி

    ++++++++++++++++++++++++++++++++++

    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை

    ,இந்தத் தொகுதியில்

    நஞ்சுண்டையா

    . என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான்

    தொடந்து எம்எல்ஏவாக வருவார்

    இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர்

    ++++++++++++++++++++++++++++++++++

    1977. ஆண்டு வாசன் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் MGR

    1980 ஆண்டு வி பி பாலசுப்ரமணியன் என்பவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்

    வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்

    1984 ஆண்டு மீண்டும் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியனை

    வெற்றிபெற வைத்தார் MGR

    உப்பிட்ட MGR குடும்பத்திற்கு உறுதுணையாக இருநதவர்

    உண்டவீட்டிற்கு ரெண்டகம்

    நினைக்காதவர்

    ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்தவர்

    இவர் சிறந்த பேச்சாற்றல் உடையவர்

    வேடசந்தூர் மிகவும் வறச்சியானதொகுதி அந்தததொகுயில்பலமில்களை உருவாக்கியவர் இவர்

    வேடசந்தூரில் இருந்து கரூர்

    செல்லும் ரோட்டில் பல மில் / பல. தொழிற்சாலைகளை

    இவர் காலத்தில் உறுவாக்கினார்

    இவரைபோன்ற. MGR ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான் ஜெயலிதா எடப்பாடி முதல்வராக. வர முடிந்தது

    இவரைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

    இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3532
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!

    உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?

    அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.

    பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.

    ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’

    கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?

    ‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’

    அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.

    ‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’

    எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.

    ‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’

    இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.

    ‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’

    முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.

    ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா........ Thanks...

  4. #3533
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.
    எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்

    .அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
    அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
    நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.
    அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.
    எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.
    நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.
    வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.
    முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
    அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.
    மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.
    ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
    ‘உலகமெனும் நாடக மேடையில்
    நானொரு நடிகன்;
    உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’

    பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

    தொடரும்...

    Posted : MG.Nagarajan
    24 April 2020 01:34 AM
    ........... Thanks...

  5. #3534
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [சொந்தப் படமெடுத்து சொத்தை இழந்தவர்களில் நடிகை சாவித்திரி அவர்களும் ஒருவர்.

    சென்னை ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்திரியின் பெரிய மாளிகையும் ஏலத்தில் போனது. இப்படி தன்னிடமிருந்த ஒவ்வொரு பொருளும் கைவிட்டு போய் மிகவும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இந்த நிலையில் ஒரு நாள் எம்ஜிஆரின் மாம்பலம் அலுவலகத்திற்குச் சென்று தலைவரை சந்தித்தார் சாவித்திரி. தலைவரோ சாவித்திரி வசம் ஒருபையில் பணத்தை வைத்துக் கொடுத்ததுடன், சாவித்திரி தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.

    அந்தப் பையில் இருந்ததோ பணம் ஒரு லட்சம். ஆனால் சாவித்திரி அதை வைத்து முன்னேறப்போவது கிடையாது. சாவித்திரி எப்படி செலவழிப்பார் என்பதும் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.

    இருப்பினும் மாபெரும் நடிகை வந்துக் கேட்கும்போது உதவாமல் இருக்கவும் முடியாது, உதவினார். இது தலைவரின் மனித நேயத்தை காட்டுகிறது.]........ Thanks...

  6. #3535
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திரு. சத்தியராஜ் தன் "வாட்ஸ் ஆப்" பில் பதித்துள்ள வாசகங்கள் "உலகம் சுற்றும் வாலிபன்"
    படத்தில் வரும் "உலகம் அழகு கலைகளின் சுரங்கம்" பாடலில் இடம்பெற்ற "உள்ளம் மட்டும் அள்ளிக் கொள்ளும் மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம் துள்ளிச் செல்லும் உடல் வேண்டும்" என்ற வரிகளை.

    திரு.சத்தியராஜ் தன் இல்ல வரவேற்பறையில் ஒரு சிறிய பாட்டிலில் தனக்கு பரிசளிக்கப்பட்ட (இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அளித்தது) முள்ளிவாய்க்கால் போரின் நினைவாக வீரம் செறிந்த தமிழ் ஈழ மண்ணையும், நாம் இலங்கையில் 2017 ஏப்ரலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வீட்டில் (இலங்கை ராணுவம்
    சிதைத்து மண் குவியல் மட்டுமே மிச்சம்) சேகரித்த மண்ணையும் நிரப்பி காட்சி பொருளாக வைத்திருக்கிறார்.

    #இதயக்கனி எஸ். விஜயன்....... Thanks....

  7. #3536
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம்.
    'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி "நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
    அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.
    அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும், பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.
    எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!"
    - கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகளிலிருந்து......... Thanks...

  8. #3537
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி*-24/04/20
    ----------------------------------

    நெல்லை*கொரோனா*நிவாரண*மையத்தில்* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்*பார்த்து ரசித்த ஆதரவற்றோர் .* - மன*அழுத்தத்தை*குறைக்க*ஏற்பாடு*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    நெல்லை கொரோனா நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவுப்படி ,மாநகராட்சி ஆணையர் கண்ணன், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் தன்னார்வலர்கள், ஆதரவற்றோர்கள்* 105 பேர்களை* அடையாளம் கண்டு நெல்லை டவுன்* கல்லணை மாநகராட்சி பெண்கள்* மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள* நிவாரண மையத்தில் , அங்குள்ள திறந்த வெளி அரங்கத்தில் பழைய திரைப்படங்களை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது . அதில் முதலாவதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் நேற்று முன்தினம்* இரவு திரையிடப்பட்டது .

    ஆதரவற்றோருக்கு அங்கு போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் சமூக இடைவெளியிட்டு அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தனர் .* இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் ஆறுதலாகவும், மன அழுத்தத்தை குறைக்க சரியான ஏற்பாடு என்றும் அனைவரும் பாராட்டினார்கள் .

  9. Likes orodizli liked this post
  10. #3538
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலை மன்னன் எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    18/04/20* * -மெகா டிவி* -காலை 10 மணி* - படகோட்டி*

    * * * * * * * * * சன் லைப்* - காலை 11 மணி* - சங்கே முழங்கு*

    19/04/20* - சன் லைப்* - காலை 11 மணி* - தொழிலாளி*

    20/04/20* *- ஜெயா டிவி* -காலை 10 மணி - இதய வீணை*

    * * * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்* -காலை 10 மணி -மாட்டுக்கார வேலன்*

    21/04/20-* ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி - ஊருக்கு உழைப்பவன்*

    ** * * * * * * *ஜெயா டிவி* * * * - காலை 10 மணி* - பணக்கார குடும்பம்*

    * * * * * * * * முரசு டிவி* *- பிற்பகல் 2 மணி* *- அபிமன்யு*

    * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி -* தாய்க்கு தலைமகன்*

    * * * * * * * * சன் டிவி* * * * - இரவு 9.30 மணி* - அன்பே வா*

    22/04/20 -* ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * * * மீனாட்சி டிவி* *- காலை 7 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * * * ஜெயா டிவி* * - காலை 10 மணி* - தாய்க்கு பின் தாரம்*


    23/04/20* -* ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - குமரிக்கோட்டம்*

    * * * * * * * * * ஜெயா டிவி* *- காலை 10 மணி* - குலேபகாவலி*

    * * * * * * * * * *முரசு டிவி* - பிற்பகல் 2 மணி - கொடுத்து வைத்தவள்*

    * * * * * * * * * சன் டிவி* *- இரவு 9.30 மணி* - எங்க வீட்டு பிள்ளை*

    23/04/20* *மெகா*டிவி* - நள்ளிரவு 12 மணி - கலங்கரை விளக்கம்*

    24/04/20* *ஜெயா டிவி* - காலை 10 மணி - பெரிய இடத்து பெண்*

    * * * * * * * * புதுயுகம் டிவி**-* இரவு 7 மணி* --சங்கே முழங்கு*
    Last edited by puratchi nadigar mgr; 24th April 2020 at 09:17 PM.

  11. Thanks orodizli thanked for this post
  12. #3539
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

    அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.

    எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கு அவரைப் பற்றி வெளியான நூல்களின் மொத்தத் தொகுப்பையும் அளித்தால் மகிழக்கூடும் தானே?!

    எம்ஜிஆர் குறித்து வெளிவந்த நூல்களின் மொத்தத் தொகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...

    எம்ஜி ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன, சில தமிழ் நூல்கள் எப்போது வெளியிடப்பட்டன? யாரால் வெளியிடப்பட்டன? என்ற விவரங்களேதுமின்றியும் கூடக் கிடைத்துள்ளன.

    001. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))

    002. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))

    003. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))

    004. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))

    005. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))

    006.0புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))

    007. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))

    008. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))

    009. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))

    010. எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))

    011. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))

    012. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))

    013. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))

    014. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))

    015. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))

    016. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))

    017. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))

    018. அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))

    019. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))

    020. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))

    021. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))

    022. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))

    023. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))

    024. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))

    025. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))

    026. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

    027. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))

    028. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

    029 .அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))

    030. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))

    031. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

    032. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))

    033. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))

    034. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

    035. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))

    036. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))

    037. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

    038. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))

    039. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))

    040. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))

    041. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))

    042. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))

    043. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))

    044. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))

    045. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))

    046. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))

    047. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))

    048. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))

    049. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

    050. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))

    051. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

    052. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))

    053. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

    054. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))

    055. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))

    056. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))

    057. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))

    058. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))

    059. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))

    060. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))

    061. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))

    062. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))

    063. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))

    064. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))

    065. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

    066. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))

    067. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))

    068. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))

    069. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))

    070. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))

    071. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))

    072. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))

    073. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))

    074. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))

    075. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))

    076. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))

    077. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))

    078. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))

    079. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))

    080. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

    081. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))

    082. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))

    083. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

    084. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))

    085. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))

    086. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))

    087. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

    088. எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016

    089. எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007

    090. பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007

    091. நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009

    092. எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987

    093. எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011

    094. விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009

    095.காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004

    096. எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015

    097. பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎

    098. செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985

    099. 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎

    100. எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010

    101. எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎

    102. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011

    103. மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –

    104. எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013

    105. எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016

    106. எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008

    107. எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013

    108. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015

    109. பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -

    110. மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்

    111. நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎

    112. வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011

    113. எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000

    114. வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009

    115. எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007 –

    116. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்.

    #ஆங்கில_நூல்கள் (English Books)

    01. Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))

    02. All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))

    03. Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))

    04. Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))

    05. The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))

    06. M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))

    07. The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

    08. On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.

    09. Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

    10. Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

    #முழு_விபரங்கள்_கிடைக்கப்_பெறாத_நூல்கள்:-

    01. வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))

    02. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

    03. குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))

    04. ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

    05. இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))

    06. தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

    07. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

    08. அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

    09. அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

    10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

    11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

    12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

    13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

    14. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

    15. புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

    16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

    17. தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

    18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.

    19. Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

    20. C.M. Speech's

    தொகுப்பு: மல்லிகா பிரபாகரன் | வழக்கறிஞர் சி.பி. சரவணன் | தினமணி......... Thanks.........

  13. #3540
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 46 (1960) Poster

    1960ஆம் ஆண்டில் எம்ஜியாரின் மூன்றாவது மட்டும் அந்த ஆண்டின் இறுதிப் படமாக வெளியான மன்னாதி மன்னன் முதலிரண்டில் இடறியதை சரி செய்து வெற்றிப் படமானது, காதலுக்கும் அரச கடமைக்கும் இடையில் அல்லாடும் இளவரசனும் அவனிடம் காதல் கொண்ட இரு மங்கையருமாக வடிக்கப்பட்ட கதையில் நடனராணியாக பத்மினியும், இளவரசியாக அஞ்சலிதேவியும் வேடமேற்றனர். எம்ஜியாரின் பல வெற்றிப்படங்களுக்கு வசனமெழுதிய கண்ணதாசன் இதிலும் பணியாற்ற, எம்.நடேசன் தயாரித்து இயக்கினார்.
    மொத்தம் 14 பாடல்களைக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு ம்யூசிக்கல் என்றே அமைந்து விட்ட காதலும் நடனங்களுமே நிறைந்திருந்த இப்படத்தில் பொதுவாக எம்ஜியார் படங்களில் மிகுந்து காணப்படும் சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும், பத்மினியுடன் எம்ஜியார் ஆடும் போட்டி நடனம் பிரபலமானது;
    விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. எம்எல்வியின் குரலில் ஆடாத மனமும் உண்டோ கர்நாடக இசைப்பிரியர்களை மயக்கியது என்றால், படத்தின் துவக்கத்தில் ஒலிக்கும் அச்சம் என்பது மடமையடா பாடல் ஏறத்தாழ திராவிட இயக்கத்தின் தேசிய கீதமாகவே மாறியது; இன்றளவும் இசைக்கப்படுகிறது. சுசீலாவின் கண்கள் இரண்டும் பாடல் எவர்க்ரீன் நிலை பெற்றது. கனியக் கனிய, மற்றும் நீயோ நானா போன்றவை மிகுந்த இனிமையோடு துலங்கின. இதில் இரண்டாவதில் பிபி ஸ்ரீனிவாஸ் எம்ஜியாருக்குப் பின்னணி கொடுத்திருந்தார்........ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •