Page 353 of 402 FirstFirst ... 253303343351352353354355363 ... LastLast
Results 3,521 to 3,530 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3521
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய பிற்பகல் வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    நாளை போடப்போறேன் #சட்டம் – பொதுவில்
    நன்மை புரிந்திடும் #திட்டம்
    நாடு நலம் பெறும் #திட்டம்

    என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.

    #தொழிலாளியாக_எம்ஜிஆரின்_நலத்_திட்டங்கள்

    ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்*ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Omega Sea Foods ஆயிரத்தில் ஒருவன் ஆங்கில படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்ட படம். அதனால்தான் காலஞ்செல்ல செல்ல அமோக வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர் படத்துக்கு சிவாஜி படம் போட்டியே கிடையாது. எம்ஜிஆர் படத்துக்கு போட்டி இன்னொரு எம்ஜிஆர் படம்தான். பந்துலு தயாரித்த அத்தனை படங்களிலும் ஆயிரத்தில் ஒருவன் படம்தான் அதிக வசூலை பெற்று அவரின் கடனை அடைக்க உதவியது என்று அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்...... Thanks...

  4. #3523
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகப்பேரரசர் எம்ஜிஆர் நண்பரே ஆண்டவரின் ஆயிரத்தில் ஒருவன் படம் MV ராஜம்மா பந்துலுக்கு வசூலை வாரி வழங்கியது பந்துலு ஆண்டவரை வைத்து எடுத்த படங்களிலேயே பெரிய உச்சமாகும் இதில் பி ஆர் பந்துலுவிக்கும் ஏ பி நாகராஜனுக்கும் சபாஷ் சரியான போட்டியாக தான் அமைந்தது நண்பர்களே..... Thanks...

  5. #3524
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுக குடும்பத்திற்கு பிழைப்பு தரும் எம்ஜிஆர்.. எஸ்வி சேகர் டிவீட்.. திட்டி தீர்க்கும் திமுகவினர்

    சென்னை: "திமுக குடும்பத்திற்கு பிழைப்பு கொடுக்கிறார் எம்ஜிஆர்.. இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி பிழைப்பு தரும் MGR the Great என்று பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில், "கொரோனாவைரஸ் பெருந்தோற்று காலத்தில் அமெரிக்கவாக இருந்தாலும் சரி, ஏழை நாடாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்குத் தேவையான பொருளுதவி மற்றும் பண உதவிகளை அரசு முன்வந்து தருகிறது. ஆனால், நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள்... மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு தான்" என்று தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எஸ்வி சேகர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், இரவு 11.06- க்கு பல வீடுகளில் அலறல் சத்தம்... எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்திற்குப் பிழைப்பு கொடுக்கிறார். அதுதான் MGR the Great என்றும், கற்பூரவாசனை தமிழகத்தில் அறிய முடியவில்லையாமே. வாழ்த்துகள் மோடி அவர்களே" என்று பதிவிட்டுள்ளார். திமுக இந்த ட்வீட் படு வைரலாகி வருகிறது.. இதை பதிவை பார்த்ததும் ஏற்கனவே தயாநிதியை விமர்சித்த விவகாரத்தில் கொந்தளித்த திமுக தரப்பினர் இப்போது மேலும் சூடாகி உள்ளனர்... காட்டமான பதிலடிகள் விழுந்து கொண்டிருக்கின்றன... எனினும் திமுக தரப்பில், ஒருசிலரோ இதை "பல வீடுகளில் சன் டிவி. Great" என்று பாசிட்டிவ் கமெண்ட்களாகவும் பதிவிட்டு வருகின்றனர் ...... Thanks...

  6. #3525
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைக்கு வரும் புது திரைப்படங்கள் 4 வாரம் ஓடுவதற்குள் நாக்கு தள்ளுகிறது.

    ஆனால் ஒரு படம் முதல்முறை வந்து ஓடி முடிந்து மறுவெளியீட்டில் தினசரி 3 காட்சிகளுடன் 100 நாட்கள் ஓடியதை நம்ப முடியுமா....

    ஆம் நம் தலைவரின் நாடோடிமன்னன் படம் திருவண்ணாமலை நகரில் 100 நாட்கள் மறுவெளியீட்டில் ஓடியது...

    வாழ்க எம்ஜியார் புகழ்.

    நன்றி...தொடரும்..
    உங்களில் ஒருவன் நெல்லை மணி...... Thanks...

  7. #3526
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவில் தலைவரது எங்கவீட்டுப்பிள்ளை குடும்பத்துடன் பார்தேன் மூன்றாவது தலைமுறையான பலரும் நேற்று இரவு இந்த திரைபடத்தை பார்திருக்கிறார்கள் (சில காட்சிகள் கட்) அருமையாக இருந்தது இருந்தும் _மறைந்தும் கருணாநிதி குடும்பம் எம்ஜிஆர் அவர்களை வைத்து வசூல் செய்கிறார்கள் சிவாஜி முதல் இன்றய முண்ணனி நடிகர்கள் வரை எந்த திரைபடங்களும் நினைவில் நிற்பதில்லை
    எம்ஜிஆர் குறைந்தளவு படங்களே நடித்திருக்கிறார் ஒவ்வொன்றும் மணி மணியாக இருக்கிறது அத்துனை டிவி சேனல்களிலும் எதாவது ஒரு தலைவர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது தலைமுறைகடந்து வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்.......... Thanks............

  8. #3527
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கருணையில்லா #நிதி

    தமிழகத்தில் ஒரு குடும்பக்கட்சி விளைவித்த இன்னல்கள் வெகு அதிகம்..... இலட்சாதிபதி, கோடீஸ்வரர் என்ற கணக்கை எல்லாம் தள்ளிவிட்டு, மில்லினியர் பில்லினியர் குடும்பத்தை உருவாக்கி மாபெரும் சாதனையைப் படைத்த கட்சி.....

    ஆனால், புரட்சித்தலைவரோ #ஏழைப்பங்காளன் என்ற பெயரோடு, பெரிதாக தனக்கென்று சொத்து சுகம் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கும், மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்துவிட்டுப் போன தெய்வம்...!.......... Thanks...

  9. #3528
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திமுக வில் 1953 ல் இணைந்து 1962 பொதுத்தேர்தலில் அதன் வெற்றிக்காக பிரச்சாரம் செய்கிறார் ஐம்பது இடங்களில் திமுக வெற்றி பெறுகிறது அதற்கு பரிசாக அறிஞர் அண்ணா எம்ஜிஆர் அவர்களுக்கு எம்*எல்சி.பதவி*வழங்கினார்.67 தேர்தலுக்கு பல லட்சம் ரூபாய் திமுக வுக்கு*வழங்கிய போது*அண்ணா தம்பி உன்னுடைய பணம் வேண்டாம் உன் முகத்தை மட்டும் மக்களிடம் காட்டினால் போதும் தேர்தல் பிரச்சாரம் செய் என்று சொல்கிறார் அண்ணா.பெரியார் காமராஜரை ஆதரித்து வந்தார் அவரது தொண்டர் எம்.ஆர்.ராதா எம்ஜிஆர் அவர்களுடன் தொழிலாளி படத்தில் நடித்தபோது கழக கொள்கை யை கழகத்தின் சின்னம் உதய சூரியனை தனது வசனத்தில் குறிப்பிட்ட தற்காக தகராறு செய்த நிலையில் பெற்றால்தான்பிள்ளையா படத்தின் சம்பள பாக்கியை கேட்டதற்காகவும் கோபமடைந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களை ராதா சுட்டு விடுகிறார்.உயிருக்கு போராடிய நிலையில் எம்ஜிஆர் கட்டுகளுடன் இருக்கும் படத்தை நாடெங்கும் ஒட்டி திமுக வுக்கு ஆதரவாக எம்ஜிஆர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் ராதா எம்.ஜி.ஆரை.கொலை செய்ய த்திட்டமிட்டு சுட்டுவிட்டார் என்று திமுக பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.அண்ணா இந்த வெற்றி தம்பி எம்ஜிஆர் அவர்களால் கிடைத்தது என பெருமிதமாக சொனானார் அமைச்சரவை பட்டியலை என்.வி.என்.அவர்கள் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர் அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்னர் செயல் படுத்தினார் எம்ஜிஆர் ஆட்சேபித்த ஆதித்தனாரை அமைச்சர் ஆக்காமல் எம்ஜிஆர் சம்மதத்துடன் சபாநாயகர் ஆக்கினார்.எம்.ஜி.ஆர்.அவர்களை அமைச்சர் அந்தஸ்தில் சிறு சேமிப்பு துணை தலைவர் ஆக்கினார் அண்ணா.அண்ணா மறைவுக்கு பின்னர் நாவலர் முதல்வர் ஆவார் என எண்ணிய நிலையில் எம்ஜிஆர் ஆதரவு பெற்ற கருணாநிதி முதல்வர் ஆனார் . அதற்கு பரிசாக *எம்ஜிஆர் அவர்களை கழக பொருளாளர் ஆக்கினார் கருணாநிதி . நாளடைவில் கருணாநிதி ஆட்சியில் லஞ்சம் ஊழலுக்கு இடம் இடம் கொடுத்தார் *அதனால் கட்சி மும் ஆட்சியும் செல்வாக்கு சரிந்து விழுந்தது.இத்தகைய சூழலில் 71 ல் பொதுத்தேர்தலில் காமராஜர் ராஜாஜி கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து வலுவான நிலையில் கருத்து கணிப்பில் அக்கூட்டணியே வெற்றி நிச்சயம் என்ற சூழலில் எம்ஜிஆர் அவர்கள் பட்டி தொட்டி நகரம் ஆகியவற்றில் *இரவு பகல் பாராது நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டார் 67 ல் வால் போஸ்டரில் பார்த்த எம் ஜி ஆர்.ஐ*மக்கள் நேரில் காண்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து காத்திருந்து கண்டார்கள்.மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.தேர்தலில் எம்ஜிஆர் பிரச்சாரம் காரணமாக திமுக மாபெரும் வெற்றி பெற்றது.184 தொகுதிகள் திமுக பெற்றது இதுவரை இந்த சரித்திரம் முறியடிக்கப்படவில்லை.சுயநல குடும்ப அரசியலுக்காக திமுக விலிருந்து விலக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுக வை தொடங்கி தொடர்ந்து திமுக வுக்கு தோல்வி ஐ கொடுத்தார் . திமுக விலிருந்து விலக்கப்பட்ட பின்னர் நல்லநேரம் இதயவீணை உ.சு.வா. சிரித்து வாழவேண்டும் நினைத்ததை முடிப்பவன் உரிமைக்குரல் மீனவ நண்பன் பல்லாண்டு வாழ்க 77 ல் தேர்தலில் வெற்றிபெற்று *அதிமுக ஆட்சி அமைக்க மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் கால்சீட் காரணத்தால் பதவி ஏற்பு வரையில் தொடர்ந்தது நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார் புரட்சி தலைவர். அவர் உயிர் உள்ளவரை கருணாநிதி தோல்வி யை கண்டார் புரட்சி தலைவர் மறையும் வரை முதல்வராக இருந்தார்....... Thanks...

  10. #3529
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Karthikeyan Ks அண்ணா உ.சு.வா. 1973.1974ல் அதிக வசூல் உரிமைகுரல்.1975 இதயக்கனி.1976 நீதிக்கு தலைவணங்கு.1977 ல் மீனவ நண்பன் தலைவர் முதல்அமைச்சர்.1977ல் ரஜினி இரண்டாம் கதாநாயகன் 1978ல் பைரவி. 1977ல் கமலின் வளர்ச்சி கதையின் நாயகனாக 16 வயதினிலே. இளஞ்சூரியன் முகமுத்துக்காக நடிக்கவில்லை என்று கூறினால் 1977ல் முகமுத்து நிலையும் கூறலாம் ......Fb fb.... Thanks...

  11. #3530
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது. அது திரைத்துறையாக இருந்தாலும் சரி.. அரசியலாக இருந்தாலும் சரி..!

    திரைத்துறையில் எம்ஜிஆர் வளர்ந்து கொண்டிருந்த நேரம்...
    திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார்.
    மாடர்ன் தியேட்டர்ஸ்
    தயாரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீரவாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றியதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.

    இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலிதேவி நடித்தார். நடிகை அஞ்சலிதேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலைவராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலிதேவி.

    ‘சர்வாதிகாரி’ படப்பிடிப்பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலிதேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

    ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடியும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என்றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக்கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை.
    டி.ஆர் சுந்தரம்.. எம்ஜிஆர் சொன்னால் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணியவர் காட்சியை திரும்பவும் எடுக்க உத்தரவிட்டார்.
    காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. மறுபடியும் அஞ்சலிதேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம்முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்..! எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன்னார்..? என்று சுற்றிலுமிருந்த எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.

    எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் அது விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக்கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார்.
    இயக்குனர் கூட கவனிக்காத சிறு தவறை எம்ஜிஆர் கவனித்திருக்கிறார் என்பதை நினைத்து
    அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமும் எம்ஜிஆர் மீது மதிப்பும் ஏற்பட்டது ..!

    தாய்மையையும் பெண்மையையும் எப்போதும் போற்றியவர் புரட்சித்தலைவர்..!....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •