Page 343 of 402 FirstFirst ... 243293333341342343344345353393 ... LastLast
Results 3,421 to 3,430 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3421
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எனது அரசுப்பணி வரலாற்றில் எனக்குப் பிடித்த உன்னதர்களில் ஒருவர் திரு.பிச்சாண்டி IAS அவர்கள்.அவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிரதம உதவியாளராக கடைசிவரை பணிபுரிந்தவர்.1995ல் அம்மையார் அவரை திண்டுக்கல் கலெக்டராக நியமித்தார்.நானும் அவரும் இணைந்து 1995ல் மாநிலம் தழுவிய கொடைக்கானல் கோடைவிழாவினை நடத்தினோம்.அதன் நினைவாக ஒரு வீடியோ...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3422
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஊருக்கு வெளியே பஸ் நிறுத்தம். பயணிகள் காத்திருக்கும் அந்த கட்டிடத்தின் பின்புற சுவரில் அண்ணா, எம்ஜிஆர் அவுட்லைன் ஓவியங்கள். வரைந்தவர் எனது மாமா. இந்த கோட்டோவியங்கள் எப்போதெல்லாம் சேதாரமாகிறதோ அப்போதெல்லாம் கரித்துண்டு கொண்டு அவற்றைப் புதுப்பித்தேன். தேர்தல் நேரம்...ஊருக்கு வெளியே 'ரெட்டை இலை வெற்றித்தந்த இலை' ' இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்' என ஒலிபெருக்கி சத்தம் கேட்கிறது.வீட்டிலிருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்து செல்கிறோம். தேர்தல் ஜீப் வாக்கு கேட்டபடி தெருவுக்குள் நுழைகிறது. உங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்ற வாசகத்துடன் இருவிரல் காட்டி எம்ஜிஆர் நிற்கும் அரைமுழ நீள நோட்டீஸ்களை ஜீப்பில் தொங்கி கொண்டு வாங்கிய பிறகே சிறுவர்கள் கீழே இறங்குகிறோம். (அப்போது ஜீப்பை ஸ்டார்ட் செய்ய ' ட ' வடிவில் வளைந்த இரும்பு கம்பியை ஜீப்பின் முன்புறம் செருகி சுழற்றுவார்கள்) அன்று..திருமண வீட்டில் அதிகாலையிலேயே பக்தி பாடல் ஒலிபரப்பிவிட்டு 'பூ மழை தூவி' இசைத்தட்டை அதற்கான பிளேயரில் பொருத்தி அந்த இசைத்தட்டுல் சரியாக அந்த ஊசிமுனை கைப்பிடியை எடுத்து வைக்கிறார் சவுண்ட் சர்வீஸ்காரர். இசைத்தட்டில் பாட்டுப் போட அனுமதி கிடைத்ததில் பேரானந்தம் எனக்கு. இசைத் தட்டு சுழல...ஸ்பீக்கர் முகப்பில் நாய்க்குட்டி முகம்பார்த்து குந்தவைத்து இருக்க அந்த கொலம்பியா இசைத்தட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு எம்ஜிஆர் பாடல்களை மட்டுமே ஆசைதீர ஒலிபரப்ப ஒரு சந்தர்ப்பம். இரவில் மதுரை வீரன், உரிமைக்குரல் கதை வசன ஒலி கேட்டு ஊரே இன்புற்று தூங்குகிறது. திருமண விசேஷம் முடிந்து வாழை மரம் பந்தலிலிருந்து தூக்கி வீசப்பட்டுக் கிடக்க கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் ஏக்கம் தணிக்க, சிறுவர்கள் சவுண்ட் சர்வீஸ் விளையாட்டு விளையாடுவோம். பிளாஸ்டிக் புனலை ஸ்பீக்கராக பயன்படுத்தி தெருவில் உள்ள பூவரசு, வேப்ப மரங்களில் ஏறி கிளைகளில் கட்டி வைப்போம். களிமண்ணால் செய்த இசைத்தட்டு பிளேயரில் சோடா பாட்டில் மூடியை வட்ட வடிவமாக்கி இசைத்தட்டாக பயன்படுத்துவோம். வயர் வேண்டுமே...வாழை நாரை பயன்படுத்துவோம். டியூப் லைட் வேண்டுமே...வாழைத் தண்டை பயன்படுத்துவோம். சிறுவர்கள் மரத்திற்கு மரம் ஏறி உட்கார்ந்து 'அய்ங்...அய்ங்... நேத்து பூத்தாளே' பாட்டுப் பாடி கத்திக் கொண்டிருப்போம். பொங்கல் வாழ்த்து எங்க வீட்டுக்கு வருகிறது. பளபள வழவழப்பான தாளில் இதயக்கனி எம்ஜிஆர் கைகூப்பி நிற்கிறார். பின் அது துணிகள் வைக்கும் பெட்டியினுள்... பெட்டியைத் திறந்தால் அந்த படமே முகமலர்ச்சியை தரும். தேர்தல் பரப்புரை...மெஞ்ஞானபுரத்தில் திமுக பேச்சாளர் எம்ஜிஆரை திட்டுகிறார். பெண்கள் காதைப் பொத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடுகிறார்கள். ஏன் எம்ஜிஆரைத் திட்டுபவர்கள் திட்டு வாங்கிய காலம் அது.( இப்போதும் கூடத்தான்) தியேட்டர் பக்கம்...ரஜினி,கமல் படம் ரிலீஸ். மறுவாரம் எம்ஜிஆர் படம் மறுவெளியீடு. புதிய படத்தைவிட இரண்டு மடங்கு கூட்டம். உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் மாட்டு வண்டியில் பயணித்து உரிமைக்குரல் பார்க்க கிராமவாசிகள் சிரமம் பார்க்கவில்லை. மர்பி, பிலிப்ஸ் ரேடியோக்களில் இலங்கை வானொலியில் எம்ஜிஆர் பாட்டு ஒலிபரப்பப்படும்போது மட்டும் அதிக சப்தம் - (வால்யூமை அதிகரிக்க) செய்து கேட்பது. திடீரென ஒருநாள் எம்ஜிஆர் முதலமைச்சராகிவிட்டார் என்ற ஆரவாரம் தமிழ்நாட்டில்.
    பாடப்புத்தகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சர் புகைப்படம் பார்த்து நெகிழ்கிறேன். இன்று கற்பித்தலில் பாடப்புத்தகம் தவிர்த்து வீடியோ clips காண்பிக்கும் வழக்கம் உள்ளது. அன்று வகுப்பறையில் கற்பிக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும் எம்ஜிஆர் சினிமா காட்சிகள். தாயை வணங்குவதே கடவுளை வணங்கியது போல என்றும் சான்றோர்கள் நல்வழிக்கு வழிகாட்டியவைகளையெல்லாம் காட்சிப்படுத்தி சிறுவயதிலயே நம் மனதில் எளிமையாக பதியும்படி பாடல்கள் மற்றும் நடிப்பு மூலம் எம்ஜிஆர் தனது கலையை அர்ப்பணித்திருந்தார்.( திரையில் பாடம் நடத்திய வாத்தியார் என்பதால் எம்ஜிஆருக்கு நான் ரசிகனாக... பக்தனாக மாறியதற்கு காரணம் இது ஒன்றே என்பதை கோடிட்டுக் காட்டுகிறேன்)
    அன்று தெருவின் மைய பகுதியில் இரவு 9 மணிக்குமேல் சைக்கிளில் எடுத்து வந்து ஜவுளி ஏலம் விடுவது வழக்கம். ஜவுளி வியாபாரி ஒரு தீபந்தத்தை எரிய விட்டிருப்பார். லுங்கி, வேட்டி, புடவை என ஒவ்வொன்றாக ஏலம் விட்டுக் கொண்டிருப்பார் வியாபாரி. சில பெற்றோர் அண்ணா நீ என் தெய்வம் எம்ஜிஆர் படம் போட்ட பனியன் சிறுவர்களுக்கு வாங்கி கொடுப்பார்கள். அதை அணிந்து கொண்டு தூங்கி மறுநாள் பலருக்கு தெரியும்படி ஊரில் வலம் வருவோம்.
    ஊரில் கோயில் பண்டிகை காலங்களில் உறவினர் வருகை தருவது வழக்கம். விழா முடிந்ததும் உறவினர் தங்கள் ஊருக்கு புறப்படுவதை தடுத்து அவர்களை இன்னும் இரண்டொரு நாள் தங்க வைக்க ஆசைப்படுவோம். ஏதாவது காரணம் சொல்லும்போது 'நம்ம ஊரில் இன்று இரவு எம்ஜிஆர் படம் திரையில் போடுறதா இருக்கு. பாத்துட்டு நாளைக்குப் போகலாம்' என்போம். திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களில் சவுண்ட் சர்வீஸ்காரரிடம் பந்தலில் உட்கார்ந்து கொண்டு சில பெருசுகள் எம்ஜிஆர் பாட்டைப் போடு என அதிகாரம் செய்துகொண்டிருப்பார்கள். 16 எம்எம்மில் தெருவில் சினிமா திரையிட்டால் எம்ஜிஆர் படம் இல்லாமல் சிவாஜி படம் இருக்காது. முதலில் எம்ஜிஆர் படம் திரையிட்டால் இரண்டாவது சிவாஜி படம் பார்க்க ஆள் இருக்காது.
    80 களில் புதிய படங்கள் பார்க்க தியேட்டருக்குப் போவோம். கோழி கூவுது, மௌன கீதங்கள், அன்னை ஓர் ஆலயம் படங்களில் எம்ஜிஆர் படங்களின் பாடலோ, சண்டைக் காட்சிகளோ இடம்பெற்றிருக்கும். வீடு வந்தபின்புன் எம்ஜிஆர் காட்சிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக கோழி கூவுது படம் பார்த்த பின்பு குடியிருந்த கோயிலும் மௌன கீதங்கள் பார்த்த பின்பு மீனவ நண்பனும் பார்க்க துடித்தேன். 87 ம் வருடம்தான் அந்த ஆசை நிறைவேறியது.பில்லா, வாழ்வே மாயம் புதிய படங்கள் இரவு காட்சி பார்க்க போவோம். இடைவேளை நேரத்தில் வணிக மற்றும் பிற வியாபார பொருட்களின் கடை விளம்பரம் நடிகர்களின் புகைப்படத்துடன் சிலைடில் காட்டப்படும். எம்ஜிஆர் புகைப்பட சிலைடு போடும்போது கைத்தட்டல் விசில் சத்தம் மற்றதைவிட அதிகமாகவே கேட்கும். அன்று 'ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க' என போஸ்டர் ஒட்டுவார்கள். நீதிபதி படம் அப்போது ரிலீசான காலக்கட்டம். அது மேட்னி உள்பட 3 காட்சி படம். அத்துடன் ஒருவாரமாக மாட்டுக்கார வேலன் காலை 10.30 காட்சியாக திரையிட்டிருந்தனர். சிவாஜி படம் இடைவேளையில் 'பூ வைத்த பூவைக்கு' என்ற பாடலை காட்டி 'தினசரி காலைக் காட்சி காணத்தவறாதீர்கள்' என சிலைடு போடுவார்கள். அப்போது எம்ஜிஆரைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரமாக அடங்க வெகு நேரம் பிடித்தது. நீதிபதி படம் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டு மாட்டுக்கார வேலன் 2 வது வாரமாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க என 4 காட்சியாக்கப்பட்டது. அந்த 2 வது வார ஞாயிறு மேட்னி மீனவர்களின் ஆர்ப்பரிப்பால் உடன்குடி அமளி துமளிப்பட்டது.
    இதயக்கனி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் கறுப்புக் கண்ணாடி அணிவித்து என்னை 'எம்ஜிஆர் போல இருக்கிறாய்' என கூறி உறவினர் கலகலப்பூட்டிய நிகழ்வே எம்ஜிஆர் என்னைக் கவர்ந்த முதல் அனுபவம். மனித முகம் வரையும் போதெல்லாம் எம்ஜிஆர் மூக்கு, கண்கள், புருவம், அரும்பு மீசை, தாடையில் சிறு குழி, நல்லநேரம் ஹேர் ஸ்டைலிலேயே வரைவேன். ஆண் உருவம் வரைந்தால் எம்ஜிஆர் சாயலில்தான் வரைகிறேன். அன்று ஒருநாள்...மாலை 4 மணிக்கு 'எம்ஜிஆர் நம்ம ஊருக்கு வருகிறாராம்' என்ற செய்தி கேட்டு பள்ளிக்கூடத்தில் இருக்க முடியவில்லை. பள்ளி கடைசி மணி அடித்ததும் மின்னலாக வந்து மேடை முன்பு அமருகிறேன். சற்று நேரத்தில்..புரட்சித்தலைவர் வருகிறார்...வாழ்க..வாழ்க கோஷம் ஆர்ப்பரிக்கிறது. சந்தன நிறத்தில் சந்திரன் மேடையை அலங்கரிக்கிறார். அனைத்து கண்களும் நிலைகுத்தி நிற்கிறது.மேடை காலியாகிறது. அன்று எம்...ஜி...ஆர் என் கண்ணுக்குள் நுழைந்தார்... இதயத்தில் இன்றும் ....( நண்பர்களே இங்கு சுட்டிக்காட்டப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக கூற ஆயுள் போதாது)....... Thanks mr. Samuel...

  4. #3423
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெரியவாளும்
    எம்.ஜி.ஆரும்....

    ஒரு சோம்பலான மதியம் மூன்றரை மணி!!
    அதாவது மதியத்தின் முடிவு--மாலைப் பொழுதின் ஆரம்பம் என்ற இரண்டுங்கெட்டான் பொழுது??

    காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது!!

    காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்ததும்
    மடம் -தீ பிடித்துக் கொண்டதைப் போல் ஆகிறது??

    ஆம்!! காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!!

    எந்தவித முன் அறிவிப்பும் இல்லை. அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை.

    மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள்.காரணம்?

    அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை!! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்.

    மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்!!
    ஏன் இந்தப் பரபரப்பு?

    அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது!!

    மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.இவ்வளவு தானே.அங்கேபோய்அவரைதரிசித்துக்கொள்கிறேன்பதட்டம ில்லா பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்??

    மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கிநம் மனதிலோ பிரமிப்பில் நெடிலை நோக்க.

    இப்படி வருத்தப் படுகிறது முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி.

    உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.

    அதனால் என்ன?இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!! என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.

    இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!! அந்த ஒரு சிலரில்
    எம்,ஜி,ஆரும் ஒருவர்!!!

    ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!!

    நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி--திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு!! அதுக்கு தேக சிரமம்--கால விரயம்--பணச் செலவுன்னு ஆகிறது!!
    ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்!!

    இவ்வளவு தானே?இந்த சின்ன விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?

    நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்தசங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்கஉன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை,, என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.

    நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா!! அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து!! நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி!!

    இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!!!!

    எம்,ஜி,ஆர்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அருட்காட்சியும்,அரசாட்சியும் அருமையாக அமைந்து விட்டால்---அரசனும்--ஆண்டவனும் ஒன்றே என்பது நமக்கு விளங்குகிறது அல்லவா நன்றே.......... Thanks...

  5. #3424
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வசனகர்த்தாவோ, பாடலாசிரியரோ எழுதுகின்ற ,சொல்லுகின்ற எந்த கருத்தும் ,அவர்களின் ஏட்டிலே இருக்க்கின்றவரை தெருவில் பாடுகின்ற குரலாகத்தான் இருந்தது ! எம் புரட்சித்தலைவரின் கைகளில் வந்த பிறகுதான் அது திருக்குறளாய் மாறியது ! ஆமாம்! ஆட்சிபீடத்திற்கு உரியவர்கள் ஆண் பெண் என்ற பேதமில்லை! யாராக இருந்தாலும் மக்களின் உதவி என்னும் நூலை கொண்டுதான் பதவி என்னும் பட்டம் வானமளாவி பறக்கவேண்டும் ! நேர்மையான செங்கோல் ,நிம்மதியான ஆட்சி இதுதான் ஒரு ஆட்சிக்கு அளவுகோல் ! என்ன ஒரு சத்தியமான வார்த்தை ! அதை சாத்தியமாக்கிய சரித்திர நாய்கர் !....... Thanks...

  6. #3425
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

    உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன் என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.

    கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
    எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.

    பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான மன நோய

    கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
    இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது.(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள் ) அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
    எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
    தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
    1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
    அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,

    ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.
    மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
    உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
    எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
    கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
    சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
    கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
    அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
    கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!..... Thanks...

  7. #3426
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பத்திரிகை: இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
    கருணா: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வள்ளுவர் கோட்டம் போய் பாருங்கள். அங்கு பிரம்மாண்டமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் என் பதவியேற்பு விழாவில் பிரதமர் இந்திரா கலந்து கொள்ள உள்ளார். நீங்களும் தவறாது கலந்து கொள்ளுங்கள். (நகைச்சுவையாக) வடக்கும் தெற்கும் ஒன்றிணைகிறது. ஆம். சுவையான வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு நான் வெற்றி பெறுவது உறுதி. என் கவலையெல்லாம் நாளை என்பது சீக்கிரம் வர வேண்டுமே என்றுதான்.
    மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் மறுபடி எம்ஜிஆர் அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதே நிருபர் எம்ஜிஆர் இடம் பேட்டி.
    பத்திரிகை :கருணாநிதி அவர்கள் நேற்று பேட்டியில் வெற்றி பெற்று விடுவேன். என மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தாரே... ஆனால் வெற்றி உங்கள் பக்கம். இது எப்படி சாத்தியமானது?
    எம்ஜிஆர் : கருணாநிதி அதிகாரத்தையும் ஜோசியத்தையும் நம்பினார். நான் மக்களை நம்பினேன்..இந்திராவிடம் என் ஆட்சியை கலைக்க சொன்ன கருணாநிதிக்கு நன்றி சொல்கிறேன். மக்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்திய நண்பர் கருணாநிதிக்கு நன்றி!!
    அதுதான் எம்ஜிஆர்......... Thanks...

  8. #3427
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [#பட்டங்களுக்குப் #பெருமை

    கல்மனம் நிறைய உண்டு...நன்மனம் பார்ப்பது அரிது...அதிலும் அரிது #பொன்மனம் #தரம் #குறையாதது...பெண்ணும் பொன்னும் மாற்றுக்குறையாமல் இருக்கவேண்டுமென்பது விதி..அந்த நன்மனம், பொன்மனம் எப்படி நெகிழ்ந்தது...மகிழ்ந்தது ...!!!

    பொன்மனச்செம்மல் பட்டம், தமிழ் வளர்த்த பெரியார் வாரியார் அவர்களால் வழங்கப்பட்டதை அறிவோம்...
    #வாரியார் #என்ற #பெயருக்கே பொன்மனச்செம்மல் அளித்த விளக்கம் : "தமிழ்ச்சுவையை வாரி வாரி வழங்குவதால், அப்பெரியார்க்கு அப்பெயர்" என்றார்.

    பொன்மனச்செம்மல் #நகைச்சுவை #உணர்வு மிகுந்தவர்...
    ஓர் முறை ராமாவரத்திலிருந்து வரும் போது நல்ல மழை. கார் போரூரை நோக்கி கார் போய்க்கொண்டிருந்தது...அப்போது ஒரு கார் வேகமாகக் கடந்து சென்றது. வேகத்தில் சேற்றை அவரது காரின் மீது இறைத்தது...

    அப்போது மக்கள்திலகம் சிரித்துக்கொண்டே சொன்னார்:
    "பாரி வள்ளல் வாரிக்கொடுத்தான் அக்காலத்தில்...
    காரில் போகிறவர்களும் வாரியடிக்கிறார்கள் இக்காலத்தில்...இவர்களையும் "வாரியார்" என்றே சொல்லலாம்...

    உலகில் ஒருவர் மற்றவரை மதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த நபர் '#கொடுக்கிறார்' என்றே பொருள். அதாவது மதிப்புக்கும் விலை கொடுக்கவேண்டும். ஆனால் பொன்மனச்செம்மல், வாரியார் அவர்களை நமக்கு பட்டம் தரவேண்டும் என்பதற்காக மதிக்கவில்லை...

    இதற்கு ஒரு சிறு உதாரணம் :

    வாரியார் சுவாமிகள் பிரபலமாகாமலிருந்த போதே அவரது தமிழ்ச்சேவைக்காக மக்கள்திலகம் மதித்தார்.

    1954- ல் பொருட்காட்சியில் "இன்ப கனவு" நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெருங்கூட்டம். அந்நாடகத்தில் வில்லன் வேடமேற்று நடித்த சேதுபதி என்பவர் ஒரு கட்டத்தில் "கிருபானந்த வாரியார் காலட்சேபத்துக்கு சுண்டல் வாங்கப் போனேன்" என்று சொல்வதற்கு பதில் '#கிருக்கானந்தவாரியார்' #உம்ஹும் '#கிருபானந்தவாரியார்' என்று கிண்டலடிப்பார். கூட்டத்தில் பலர் சிரித்தனர்...

    மேடை மேல் ஓரமாக நின்ற மக்கள்திலகம் முகம் சிவந்தார். நாடகம் முடிந்ததும் கண்டிக்கப்பட்டார்.

    "மன்னிச்சுக்கங்க அண்ணா. சும்மா தமாசுக்கு சொன்னேன். ஜனங்களை சிரிக்கவைக்க" ன்னார் சேதுபதி.

    அப்ப மக்கள்திலகம், "அப்ப அண்ணா பேரு, காந்தி பேரு, காமராசர் பேரு வந்தாக்கூட இப்படித்தான் கிண்டல் பண்ணுவியா??? #மத்தவங்களை #சிரிக்கவைக்க #மகான்களின் #பெயரை #இழுக்கக்கூடாது...அது மிகவும் #இழிவான #செயல்" என்று பொட்டிலடித்தாற் போலக் கூறினார்.

    பட்டங்களால் சிறப்பு பெறுபவர் பலர் உண்டு...!!!

    அந்தப் #பட்டங்களே #சிறப்புபெறுவது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுக்கு சூடியதால் மட்டுமே என்பதை யாரால் மறுக்கமுடியும் !!!]....... Thanks...

  9. #3428
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பல வருடங்களுக்கு முன்னால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஏற்பட்ட கட்சி மோதலில் மாணவர் பாலசுந்தரம் சில தீயசக்தி கும்பலால் வெட்டி சாய்க்கப்பட

    அவர் அருகில் இருந்த ஒரு மாணவர் அவரை தன் மடியில் சாய்த்து கொண்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முனைகிறார். அதிக ரத்தம் வெளியேற அந்த மாணவர் பாலு அவர் சக தோழர் மடியில் உயிர் நீக்கிறார்.

    இதை கேள்விப்பட்ட நமது தலைவர் அந்த மாணவர் பாலு உயிரை காக்க கடும் முயற்சி செய்தவர் பற்றி விவரம் சேகரிக்க அவர் தச்சு வேலை செய்யும் ஒரு ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் அந்த மாவட்டம் முழுவதும் அறிய பட்ட தனது தீவிர ரசிகர் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

    அடுத்து அந்த மாணவரை அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆக்குகிறார்.

    அவருக்கு தன்னை எப்பொழுது சந்திக்க வந்தாலும் தோட்டத்தில் சிறப்பு அனுமதி கொடுக்கிறார் பொன்மனம்.

    பின்னாளில் அவரை அவர் சார்ந்த மாவட்ட ஆட்சியர் வசம் கட்டுப்பாட்டில் இருந்த cooptex சொசைட்டியை பிரித்து புதிதாக சேர்மன் என்ற பதவியை உருவாக்கி அவருக்கு கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு இடுகிறார்.

    மாவட்ட ஆட்சியர் யாரோ பெரிய கட்சிக்காரர் போல இவர் என்று நினைத்து கொண்டு தலைவர் சொன்ன படி அந்த பொறுப்பை கொடுக்க அவர் வீட்டுக்கு சென்று அரசு முறைப்படி பதவி ஏற்பு நிகழ்வு விவரம் சொல்ல போக.

    அங்கே அவர் கண்ட காட்சி அவரை உறைய வைத்தது....சாதாரண ஓட்டை ஓலை குடிசை வீட்டு வாசலில் வந்து நிற்கிறார் ஆட்சியர்.

    வீட்டு வாசலில் தலைவர் நலம் பெற வேண்டி அவர் வகுத்த தீக்குண்டம், அவரின் எளிமையான இனிமையான குணம் கண்டு மிகவும் கண்டிப்பான அந்த ஆட்சியர் உடன் இவர் வீட்டை அடையாளம் காட்ட வந்த மேனேஜர் வேலாயுதம் ஆச்சர்யம் அடைகின்றனர்.

    உண்மையான தொண்டனை தலைவர் ஒரு நாளும் கை விட்டது இல்லை.

    சரி இவ்வளவு நேரம் பதிவில் அவர் பெயரை நான் குறிப்பிடவில்லை

    அவர் யார் என்றால் கடலூர் மாவட்டம் சேர்ந்த அந்த தொண்டரின் பெயர் முருகுமணி.

    சரித்திரம் படைத்த மதுரையில் நடந்த எம்ஜியார் மன்ற மாநாட்டுக்கு தலைமை வகித்தவரும் இதே முருகுமணியே.... அன்று நடைபெற்ற ஊர்வலத்துக்கு தலைமை நெல்லை ...ப.இளமதி ஆகும்.

    மாநாட்டு மேடையில் அம்மையார் ஒரு வெள்ளி செங்கோலை தலைவர் அவர்களிடம் கொடுக்கும் படம் வரலாற்று புகழ் பெற்றது.

    அந்த நினைவு பரிசை கொடுக்கும் போது தலைவர் மாநாட்டு தலைவர் முருகுமணியை அழைத்து அந்த நிகழ்வில் நிற்க அந்த செங்கோலை பிடிக்க சொல்லும் படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது.

    அந்த மூன்றாம் நபர் தொண்டன் கடலூர் முருகுமணியே ஆகும்.

    வாழ்க எம்ஜியார் புகழ்.

    நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி..
    நாளை சந்திப்போம்....... Thanks...

  10. #3429
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இரண்டு மணி நேரம் பொறுமையாய் படம் பார்க்கும் நம் மக்கள் எண்ட் கிரெடிட் டைட்டில்ஸ் ஓடுகையில் ஏதோ திரையரங்கில் தீப்பிடித்துக் கொண்டது போல ஓட முற்படுவார்கள். அத்தனை பொறுமை!!

    இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு மூன்றுமணி நேரம் ஓடுகிற படத்தில், அதுவும் க்ளைமாக்ஸ் காட்சி முடிந்தபின் ஒரு பாடல் வைக்கலாம் என்று எந்த இயக்குநராவது யோசிப்பாரா..? ஏ.சி.திருலோகசந்தர் யோசித்தார், வைத்தார்.

    நாலு நிமிடம் ஓடுகிற அந்த ‘அன்பே வா’ ஹேப்பி ஸாங் முடிகிற வரையில் ஒருத்தராவது எழுந்து வெளியே போகணுமே... அப்படி ஈர்த்தது எம்ஜிஆரின் ஆகர்ஷண சக்தி. வேறு எந்த ஹீரோவுக்கும் அப்படியொரு கட்டிப் போடுகிற பவர் இருந்ததில்லை என்றும். இன்று காணலாம் அத்திரைப்படத்தை மீண்டும்.

    நன்றி கணேஷ்பாலா........ Thanks.........

  11. #3430
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மை. சிறுவயதில் அந்த அனுபவம்நிறைய உண்டு.டீ.வி இல்லாத .காலம்.பற்பல தடவைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறேன்.....பிரமித்தேன் .....அன்று எம்ஜிஆர்........ ஒரு பிரம்மாண்டம்........ Thanks...

    .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •