Page 341 of 402 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3401
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 42 (1958) Poster
    "நாடோடிமன்னன்"
    எம்.ஜி. ராமச்சந்திரன் என்னும் ஒரு நடிகனை வருங்காலத்தில் ஒரு மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் முதலமைச்சராக உயர்த்துவதற்கு முடிவு செய்த விதி, அதற்கு முதற்படியாகப் பயன்படுத்திக் கொண்டது: நாடோடி மன்னன் என்ற பெயரில் ஒரு சொந்தப்படத்தைத் தயாரிக்கும்படி அவர் மனதில் எண்ணத்தைப் புகுத்தியதுதான்! 'நானே போடப்போறேன் சட்டம்!' என்று வீராங்கன் பாடியது பத்தொன்பதே ஆண்டுகளில் மெய்யப்பட்டது!
    நீண்ட நாட்களாக ஒரு சொந்தப்படம் எடுத்துத் தன் விருப்பப்படி தன் இமேஜை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த எம்ஜியாரும் அவரது தமையன் எம்ஜி சக்ரபாணி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோர் If I were king, The Prisoner of Zenda ஆகிய படங்களைப் போல, அவற்றின் loosely based thread என்பதாக விவாதித்து உருவாக்கிய கதை நாடோடிமன்னன். இதன் விளம்பரங்களில் Prisoner of Zenda வைத் தழுவிய படம் என்றே விளம்பரங்களில் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
    எம்ஜியார் திமுகவின் பிரசார ஊடகமாக தன் சினிமாவைப் பயன்படுத்தத் தொடங்கியதும் இப்படம் துவங்கியே. ஒரு ஆணும் பெண்ணுமாக கருப்பு சிவப்புக் கொடியை ஏந்தியதாக EMGEEYAAR PICTURES லோகோ உருவானது. அவரது அடுத்த சொந்தப்படமான அடிமைப்பெண்ணுக்கும் அதுவே லோகோ. மூன்றாம் படமான உலகம் சுற்றும் வாலிபனில் அது அதிமுக கொடியாக மாற்றம் கண்டது!!!......... Thanks.........
    ........... to be contd....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3402
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 42 (1958) Poster (Contd..)

    இப்போது பாலிவுட் படங்களில் 1000 மிலியன் கிளப் என்று சொல்கிறார்கள் இல்லையா? முதன் முதலாக ஒரு கோடி வசூலித்த படம் என்ற பெருமையைப் பெற்றது எம்ஜியாரின் மதுரை வீரன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெருமையைப் பெற்றதும் எம்ஜியார் படமான நாடோடி மன்னன்.

    தமிழ்நாட்டின் நகரங்கள் மட்டுமல்லாது, பெங்களூர் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் மற்றும் இலங்கையில் பல இடங்களிலும் நூறு நாட்களைத் தாண்டிய பெருமை நாடோடி மன்னனுக்கு உண்டு. சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகியவற்றில் ஐம்பது நாட்கள் ஓடிய படம். மொத்ததில் எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் மட்டுமன்றி, தமிழ்த் திரை வரலாற்றிலும் மாபெரும் வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது இப்படம்.

    படத்தின் நீளம் 226 நிமிடங்கள் என்று விக்கி சொல்கிறது: அதாவது 3 மணி நேரம் 46 நிமிடங்கள்.பின்னாட்களில் இது ஏறத்தாழ மூன்றரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கலாம். இப்போது யூட்யூபில் கிடைக்கும் வர்ஷன் 3 மணி 20 நிமிடங்களாக உள்ளது.

    பிரம்மாண்ட தயாரிப்புகள் மூன்று மணி நேரத்தைத் தாண்டுவதாகவே அந்நாளில் அமைந்திருந்தன. 1956ஆம் வருடம் செசில் பி டெமில் இயக்கத்தில் வெளியான டென் காமாண்ட்மென்ட்ஸ் 220 நிமிடங்கள்;1962ல் வெளியான டேவிட் லீனின் லாரன்ஸ் ஆஃப் அரேபியா 222 நிமிடங்கள்; 1964ல் வெளிவந்த ராஜ்கபூரின் சங்கம் 238 நிமிடங்கள்.

    மேலும், பிரம்மாண்டம் அல்லாது சாதாரணக் குடும்பக் கதை கொண்டிருந்த பல தமிழ்ப் படங்களும் அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ 3 மணி நேரத்திற்குக் குறையாமல்தான் இருந்தன. ஜெமினி கணேசனின் சூப்பர் ஹிட்டான கல்யாணப் பரிசு (1959) 198 நிமிடங்கள்; சிவாஜி கணேசனின் பாசமலர் (1961) 180 நிமிடங்கள்.

    படத்தின் நீளம் அதிகம் என்றாலும், எந்த இடத்திலும் தொய்வு விழாதபடி அமைக்கப்படும் திரைக்கதையே ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படையாகும்.

    நாடோடி மன்னன் படத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் வரும்; தொடர்ந்து ஒரு ஆக்ஷன் பிளாக்; ஒரு நகைச்சுவைக் காட்சி; ஒரு செண்டிமெண்ட் சீன்; ஒரு அழுத்தமான வசனக்கோர்வை. படத்தின் இறுதிவரை இந்தக் கட்டுக்கோப்பு மாறாமல் தொடரும்! பர்ஃபெக்ட் பேக்கேஜிங் என்று சொல்லக் கூடிய தகுதி பெற்ற மிகச்சில மசாலா படங்களுள் நாடோடி மன்னனும் ஒன்று. இதைப் போன்ற சிறப்பு பெற்ற மற்றொரு எம்ஜியார் படம்: எங்க வீட்டுப் பிள்ளை.

    ...................... to be contd........... Thanks...

  4. #3403
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 42 (1958) Poster (3)

    நாடோடி மன்னனில் வீராங்கன் என்ற கதாபாத்திரத்துக்கு டிசைன் செய்யப்பட்ட காஸ்ட்யூம் சுவாரசியமானது. இதற்கு இரண்டாண்டுகள் முன்னதாக வெளியான டென் கமாண்ட்மெண்ட்ஸ் என்னும் படத்தில் யூத அடிமைகளை எகிப்திய மன்னனிடமிருந்து காப்பாற்றிச் செல்லும் மோசஸ் என்னும் பழைய ஆகமப் பாத்திரமாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டனின் காஸ்ட்யூமை ஏறத்தாழ ஒத்திருக்கும் அது! கையில் கம்புடன் எம்ஜியார் நிற்பது மக்கள் மந்தையை நல்வழி நடத்திச் செல்லும் ஒரு மேய்ப்பனைப் போன்ற பிம்பத்தை உருவாக்கப் பெரிதும் உதவியது. மோசஸ் போன்றே இப்படத்திலும் எம்ஜியாரின் வீராங்கன் கொடுங்கோல் மன்னர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக சாதாரண மக்களைத் திரட்டிப் போராடுவதாகத் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

    நாடோடி மன்னன் எந்த அளவு தமிழ்த்திரை வரலாற்றில் பெரிய இடம் பெற்றதோ அந்த அளவு, அந்தப் படத்தின் நடிகர்கள், படப்பிடிப்பின்போதான சம்பவங்கள் போன்று பலவும் அவரவர் கற்பனைக்கேற்றவாறு இன்றளவும் பேசப்படுவனவேயாக உள்ளன. அவற்றுள் பிரதானமானது எம்ஜியாருக்கும் பானுமதிக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு அதன் காரணமாக இந்நாளைய சீரியல் பாணியில் பானுமதியைக் கழற்றி விட்டு சரோஜாதேவியை நுழைத்தார் என்பார்கள். உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், அது உண்மையாக இருந்தால் அந்த மாற்றம் வேண்டுமென்று செய்யப்பட்டது போல அல்லாது மிக இயல்பாக ஒன்றிய திரைக்கதையின் பெருமையையே உரைக்கும்!

    எம்ஜியாருடன் சரோஜாதேவி இணைந்த முதல் படம். அப்போது அவர் ஏறத்தாழ புதுமுகம் என்பதால் அவர் பகுதியை கலரில் எடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியதுண்டு. என்னென்ன செய்தால் படத்தின் வெற்றியை மேலும் சிறக்க வைக்க முடியுமோ அத்தனையும் இதற்காகச் செய்தார் எம்ஜியார் என்பார்கள். 'இது வெற்றி பெற்றால் நான் மன்னன்; இல்லாவிட்டால் நாடோடி' என்று எம்ஜியார் கூறியதாகச் சொல்வார்கள். ஒருவேளை இது ஆவரேஜாகப் போயிருந்தால் கூட, எம்ஜியாருக்கான பிற்காலத்தை திரையுலகில் மட்டுமல்ல, அரசியலிலும் விதி மாற்றி எழுதியிருக்கலாம். படத்தின் வெற்றி விழாவுக்காக எம்ஜியார் எழுதி வெளியிட்ட ஒரு சிறு புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தில் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் எம்ஜியார் மனம் திறந்து பாராட்டியுள்ளார். (லிங்க் முதல் காமெண்ட் பாக்சில் காணலாம்).
    ....concluded........... Thanks.........

  5. #3404
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அவரை மாதிரி பல லட்சம் , பல கோடி தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார் புரட்சித்தலைவர்..
    அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
    தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து.
    “தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார்.
    ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
    கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை.
    ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!
    தன்னை விமர்சித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த பெரும் வள்ளல் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.......... Thanks.........

  6. #3405
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [திருநெல்வேலியில் 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் #புரட்சித்தலைவர் முதல்வர் #எம்ஜிஆர்.

    அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

    அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

    ‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது.

    அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.

    அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது.

    அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
    கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.

    “அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.

    “அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர்,

    அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?

    ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.

    அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது.

    அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

    “கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.

    Cont...] ( கடந்த பதிவின் முந்தைய பதிவு)... Thanks...

  7. #3406
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், #MGRபேஷன்டெயிலர் என்று கடை நடத்தி வந்தார் . புரட்சித்தலைவர் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பபூர் மக்களிடையே பிரபலமானார் .

    அவர் புரட்சித்தலைவரை காண இந்தியா வந்தார். "காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன். ஒரு சூட் "என்று கொடுத்தார்..

    "அளவு ஏது ? நாயுடு கொடுத்தாரா ? " என்று கேட்டார் மக்கள் திலகம்.

    "இல்லை ,ஒரு உத்தேசம் தான் .என் மனக்கனக்கால் பார்த்து வெட்டிச் தச்சேன் " என்று போடச் சொன்னார் , அத்தோடு 20000 பணம் கொடுத்தார் .

    " எதற்கு ? " என்று புரட்சித்தலைவர் கேட்க.. உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன் , நூத்துக்கு ஒரு டாலர் வீதம் , உங்க பங்குக்கு சேர்ந்த பணம் . இதுவும் என் காணிக்கை .. என்றார் அந்த சிங்கப்பூர் டெயிலர் ...

    புரட்சித்தலைவர் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு , தனது பெட்டியிலிருந்து 5000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20000 ரூபாய்க்கு மேல் வைத்து , "என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி என்றார்"..

    அது தான் புரட்சித்தலைவர் ...

    பிறந்த நாளுக்கு வாசலில் பண மாலையுடனும் , பணத்தாலான கிரீடத்துடனும் அமர்ந்து உண்டி குலுக்கி ... ஏழை தொண்டர்களிடம் ஏதாவது பீராயலாமா என்று 90 வயதிலும் பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் பொழுதும் அலைந்திடும் ஜென்மங்கள் வாழ்ந்த இதே நாட்டில் தான் நம் மக்கள் திலகமும் பிறந்துள்ளார் ....

    எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே ... அது எம்ஜிஆர் ஆவதும் கருணாநிதி ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே...

    புரட்சித்தலைவர் புகழ் சிலப்பதிகாரம் ஆக வாழ்க......... Thanks...

    #MGR103

  8. #3407
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் MGR..
    ..
    எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136.

    முதல் படம் : சதிலீலாவதி(1936).
    கடைசிப் படம் : மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

    எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி.
    இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார்.
    அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

    எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

    சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

    முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

    ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

    நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.!

    எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

    எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

    காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

    நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

    சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

    தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’. இப்ப....!!!

    பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

    அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

    ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

    ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

    அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

    எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன்.

    இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

    முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

    அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !

    ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் என்னை போன்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !..
    இது சில மட்டுமே. அவரின் பெருமைகள் இன்னும் பல இருக்கிறது..
    ....
    Sai Subramanian............ Thanks...

  9. #3408
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
    இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
    வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
    கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
    மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலதுகையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி........ Thanks...

  10. #3409
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. தனது அண்ணன் சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண்ணன்களாகவே கருதினார். தனது ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து கஷ்டப்பட்டு, பட வாய்ப்புக்களுக்காக காத்திருந்தபோது உதவி செய்தவர்களை எம்.ஜி.ஆர். பின்னர் கவுரவிக்கத் தவறியதில்லை.

    1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜ குமாரி’ திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக அமைந்து, எம்.ஜி.ஆரின் திறமை பற்றி உயர்ந்த அபிப்ராயம் ஏற்படுத்திய படம் அதற்கு முந்தையதாக வெளிவந்த ‘ஸ்ரீ முருகன்’. இப்படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ஆர். அற்புதமாக சிவ தாண்டவம் ஆடுவார். அதற்காக கடுமை யான பயிற்சிகளும் மேற்கொண்டார். இந்த முயற்சியும் உழைப்பும் திறமையும் தான் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக உயர்த்தியது.

    ‘ஸ்ரீ முருகன்’ படத்தின் கதாநாயகனாக முதலில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. விளம்பரம் வந்ததுடன் சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலையில் பாகவதர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர் சிறை செல்லவேண்டி வந்தது. அதனால், தியாகராஜ பாகவதருக்கு பதிலாக இன்னொரு பாகவதர் கதா நாயகனாக நடித்தார். அவர் கர்நாடகா வைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர். கர்னாடக இசையில் திறமை மிக்க இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற படத்தை தயாரித்தவர். கன்னடத்தில் பல படங்களை தயாரித்து நடித்துள்ளார். பின்னாளில், ஒரு நிகழ்ச்சியில் இவரை எம்.ஜி.ஆர். கவுரவித்தார்... Thanks...

  11. #3410
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.
    பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.
    ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
    அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.
    இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •