Page 335 of 402 FirstFirst ... 235285325333334335336337345385 ... LastLast
Results 3,341 to 3,350 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3341
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR filmography Film 19 (1948) Poster

    1948ஆம் ஆண்டு வெளிவந்த எம்ஜியாரின் மூன்றாவது படம். ஜூபிடரின் தயாரிப்பில். பின்னாளில் ரிலீசாகியிருந்தால், டிஎஸ் பாலையாவுடன் புரட்சித் தலைவர் இணைந்து மிரட்டும் என்றெல்லாம் விளம்பரித்திருக்கக் கூடும். இதில் ஹீரோ பாலையாவா எம்ஜியாரா என்றே தெரியாத அளவில் இருக்கும். டைட்டில் லிஸ்டில் முதலாவதாக பாலையாதான்...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3342
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR filmography Film 20 (1949)

    எம்ஜியார் திரையில் தோன்றி 13 ஆண்டுகளாகிவிட்டன; ஆனால், இன்னமும் முழுநீளக் கதாநாயகனாகவில்லை. இருந்தாலும் படத்தின் டைட்டிலில் பி.யூ.சின்னப்பாவுக்கு அடுத்து அவரது பெயர் பெரிய எழுத்தில் காணப்படுகிறது.
    ஆக்சுவலி, இந்த போஸ்டர் பிற்காலத்தில் ரீரன்களின்போது உருவாக்கப்பட்டிருக்கலாம். '49ல் அவர் புரட்சிநடிகராகவில்லை; அவர் பெயரும் எம்.ஜி.ராமச்சந்திரன்தான்....... Thanks...

  4. #3343
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR filmography (Film 21) Poster (1950)

    நடிக்கத்துவங்கி 14 ஆண்டுகள் கழிந்தபின் தனது 33ஆவது வயதில் எம்ஜியாருக்குக் கிடைத்த முதல் ஸோலோ ஹீரோ படம்! வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதற்குப் பிறகு அவர் சிறுபாத்திரங்களில் நடிக்கவில்லை. அவரது முழுத் திரைவாழ்க்கையிலும், கௌரவ வேடங்களிலும் கௌரவ வேடங்களிலும் நடிக்கவில்லை........ Thanks...

  5. #3344
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 22 (1950) Poster

    1950 ம.நா.இளவரசியைத் தொடர்ந்து எம்ஜியாருக்கு கதாநாயகனாகப் புலர்ந்த இரண்டாவது படம். ஆனாலும், உண்மையில் இதில் ஹீரோ என்றால் எஸ்ஏ நடராஜனைத்தான் சொல்லவேண்டும். இந்தக் கால பிரயோகப்படி நெகடிவ் ஹீரோ!
    இதில் இன்னொரு சுவாரசியம்: பின்னாளில் எம்ஜியாருக்கு மேலும் அழகூட்டியதாக எண்ணப்பட்ட மோவாய்ப் பள்ளம் ஹீரோ ரோலுக்கு சரிப்பட்டு வராது என்று எண்ணி வேறு ஹீரோவுக்கு முயன்று, பிறகு அதை மறைக்க ஒரு சிறுதாடி ஒட்டி எம்ஜியார் ஓகே ஆனாராம்..... Thanks.........

  6. #3345
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967-ம் ஆண்டு தி.மு.க முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. கிட்டத்தட்ட அதே ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் முக்கியமான படம், `விவசாயி’. இது, அவரை விவசாயிகளின் தலைவனாக்கியது. அவரின் சிறந்த பாடல்களை யார் பட்டியலிட்டாலும் அதில் இடம் பெறக்கூடிய பாடல்களில் ஒன்று

    ``கடவுள் என்னும் முதலாளி,

    கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி'' என்னும் பாடல். கிராமப்புறங்களில் இன்னும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள் என எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒலிக்காத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு அவர் அடித்தட்டு மக்களிடையே புகழ்பெற்றிருந்தார். இந்தப் பாடலின் காட்சி அமைப்பு முழுவதும் டிராக்டர் ஓட்டியபடியே ஒரு விவசாயி பாடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.

    அந்தப் பாடலில்,

    ``பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக் கொடி - அது,

    பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடி... ⁠’ என்ற வரிகள் வரும்போது, அப்போது எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.க-வின் கறுப்பு, சிவப்புக் கொடி திரையில் காண்பிக்கப்படும்........ Thanks...

  7. #3346
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருநெல்வேலியில் 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் #புரட்சித்தலைவர் முதல்வர் #எம்ஜிஆர்.

    அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

    அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.

    ‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது.

    அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.

    அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது.

    அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
    கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.

    “அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.

    “அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர்,

    அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?

    ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.

    அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது.

    அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

    “கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.

    அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார் புரட்சித்தலைவர்..

    அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!

    தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து.......... Thanks.........

  8. #3347
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எப்போதும் #எம்ஜியார் விரும்பிய திருச்சி..

    தலைவர் தனிக்கட்சி தொடங்கக் கோரி முதல்முறையாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடந்தன. எம்.ஜி.ஆர். அனுமதி இல்லாமலேயே, தி.மு.க. கொடிகள் இறக்கப்பட்டு கறுப்பு சிவப்பு தாங்கிய திமுக கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் ஏற்றி திமுக மீதான தங்கள் கோபத்தையும், #மக்கள்திலகத்தின் மீதான அன்பையும் வெளிப்படுத்தினர்.

    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சற்று தயக்கத்தோடு இருந்தார். ஆனால் திருச்சி ஆரம்பித்த ரசிகர்களின் ஆர்வம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் நம்பிக்கையுடன் முடிவெடுத்து கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.

    எம்.ஜி.ஆர் கட்சி ஆரமிக்க முதன்முதலில் ஆர்பாட்டம் நடத்தியதுபோல் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆருடன் திருச்சியில் இருந்து கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க.வில் இருந்து விலகினார்கள்.

    அதிமுகவை துவங்கிய எம்.ஜி.ஆர் முதன் முறையாக 1972-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மன்னார்புரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    பல ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சில் அனல் தெரிந்தது.

    அடுத்து கடந்த 1973-ம் ஆண்டு அதிமுக போட்டியிட்ட முதல் தேர்தலான திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலுக்காக நிதி திரட்ட திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.

    அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என்.அமிர்தீன் எம்.ஜி.ஆரிடம் முதன்முதலில் தேர்தல் நிதியை வழங்கினார். அடுத்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடந்தது. இதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. உருவாகிய பிறகு நடந்த முதல் பொதுக்குழுவும், முதல் மாநில மாநாடும் திருச்சியில்தான் நடந்தது.

    கடந்த 1974-ம் ஆண்டு ஏப்ரல் 23,24 ஆகிய இரு நாட்கள் பாப்பாக்குறிச்சி காட்டூரில் நடந்த இந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க.வின் மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மாநாடு என்று சொல்லலாம்.

    இம்மாநாட்டிற்கு பிறகுதான் எம்.ஜி.ஆர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை செண்டிமெண்டாக எடுத்துக்கொண்ட எம்.ஜி,ஆர் அவர் உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க “கைக்குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தை, மாநாடு நடந்த அதே பாப்பாக்குறிச்சி காட்டூரில் கடந்த 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரே நேரில் வந்து துவக்கி வைத்தார்.

    அதேபோல் கடந்த 1977-ம் ஏற்பட்ட வெள்ளத்தில் திருச்சி நகரம் மட்டுமல்லாமல், சுற்றுப்புற கிராமங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், சேதமடைந்த பயிர்களையும், ஹோலிகிராஸ் கல்லூரியில் ஏற்பட்ட சேதங்களையும், முதல்வர் எம்.ஜி.ஆர். பார்வையிட்டு உடனடியாக நிவாரணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முதலில் கலந்துகொண்ட கூட்டம் திருச்சி ஒத்தக்கடையில் நடந்தது.

    தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி திருச்சியில் நடத்த இருந்த பச்சை துண்டனிந்த விவசாயிகளின் பேரணி முதல்வர் எம்.ஜி.ஆரின் கடுமையான நடவடிக்கைகளால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.

    தமிழகத்தில் உள்ள போதிய வருவாய் இல்லாத சிறு கோயில்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் இந்து அறநிலையத் துறையின் சார்பில் நிதியுதவி அளித்து ஒரு கால பூஜைக்கு வகைசெய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை சமயபுரத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார்.

    இதேபோல் தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வர தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983-ம் ஆண்டு திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக இருந்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டிலும், திருச்சி முசிறி அருகேவும் தலைமைச் செயலகம் அமைக்க இடம் பார்க்கப்பட்டது.

    இதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் தனது இறுதிகாலத்திலும் திருச்சியில் தங்கவேண்டும் என ஆசைப்பட்டார்.

    அதற்காக திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2-ஏக்கர் தோட்டங்களுடன் பங்களா வீட்டை சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடம் கிரையத்துக்கு வாங்கினார்கள். அந்த பங்களாவை நேரில் பார்த்த எம்.ஜி.ஆர் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார். அவர் சொன்னபடி மாற்றம் செய்யப்பட்டது.

    "இதை பார்வையிட வந்த எம்.ஜி.ஆர் எல்லாத்தையும் சரியா பார்த்துக்கங்க. திருச்சியை தலைநகராமாக மாற்றினால் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்" என தனது திருச்சி சகாக்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

    அதன்பிறகு மாறிய அரசியல் சூழ்நிலை, இந்திராகாந்தி மரணம், திடீர் தேர்தல் போன்ற காரணங்களினால், திருச்சியை தலைநகராகும் திட்டம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., நினைத்து, அது நிறைவேறாத மாபெரும் திட்டம் என்றால் திருச்சி தலைநகர் திட்டம் மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள் திருச்சி மாவட்ட அ.தி.மு.கவினர்.

    சாகும் வரை திருச்சி மீது மட்டுமல்லாமல் திருச்சி மக்கள் மீதும் பிரியம் உள்ளவராக வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்........ Thanks...

  9. #3348
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் பற்றிய பதிவுகளுக்கு தாங்கள் தரும் வரவேற்பு என்னை பிரமிக்க வைத்துள்ளது.
    #அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் ஒவ்வொருவரின் இதயத்திலும் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
    #இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் ஒரே தலைவர் நம் தலைவர்.

    #பல செய்திதாள்கள், இணைய செய்திகள். பல புத்தகங்களின் தொகுப்புகளையே பதிவாக தந்துள்ளேன்.

    பதிவுகளில் பல பிழைகள் இருக்கலாம். அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தவறு இருப்பின் சுட்டுக் காட்டுங்கள். திருத்திக்கொள்வோம்.

    மேலும் நம் தலைவர் பற்றி தெரிந்து கொள்ள என் தேடல் தொடரும். நன்றி அன்புடன். MJ., ........ Thanks.........

  10. #3349
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 8 செவ்வாய்

    எம்ஜிஆர் பக்தர்களே

    படத்தில் இருப்பவர் பெயர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி

    1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் முதல் முதலாக எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றார்

    அவரது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்

    சுப்புலட்சுமி

    அமைச்சரவை பட்டியலில் சுப்புலட்சுமியின் பெயரை பார்த்தவுடன் எங்களைப் போன்ற ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மன்றம் வைத்து அண்ணா திமுகவை வளர்த்தவர் களுக்கு அதிர்ச்சியாக இருந்தன

    காரணம் கட்சியில் புதுமுகமாக இருந்தார்

    சுப்புலட்சுமிக்கு எம்ஜிஆர் அமைச்சர் பதவி கொடுத்து இருந்தார்

    சுப்புலட்சுமி ஆசிரியர் தொழில் பார்த்தவர்

    1980 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தன

    சிவகாசி /கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் தான் அண்ணா திமுக வெற்றி அடைந்தது

    அதன் காரணமாக அண்ணா திமுக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்

    இந்த சோதனையான காலகட்டத்தில் நாஞ்சில் மனோகரனும் சுப்புலட்சுமியும் அண்ணா திமுகவை விட்டு ஓடிவிட்டார்கள்

    அடுத்த மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார்

    தனி மனிதனாக பம்பரமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் மீண்டும் ஆட்சியை பிடித்தார்

    இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களைப் பார்த்து கேட்ட கேள்வி

    என்ன காரணத்திற்காக என் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தீர்கள்

    என்னுடைய ஆட்சி ஊழல் ஆட்சியா

    நான் ஊழல் செய்து சொத்து சேர்த்தேனா

    அடுத்தவர்களுடைய சொத்துக்களை நான் மிரட்டி எழுதி வாங்கினேனா

    என் அண்ணன் குடும்பமோ என்னுடைய உறவினர்கள் குடும்பமோ அரசியலில் தலையிட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தார்களா

    தமிழ்நாட்டு மக்களளேஅதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்

    அந்தப் பதில் உங்கள்வாக்குசீட்டு மூலமாக இந்த உலகிற்கு தெரிய வேண்டும்

    இவ்வாறு ஊழல் செய்யாத. நம் உத்தமத் தலைவன் பேசினார்
    /////?///////////////////////////////////?????/?

    1980 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்

    அமைச்சர் காளிமுத்து அவர்கள் பேசியதாவது

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்திரா காங்கிரசு கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது

    மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை இந்தியா முழுவதும் வெற்றியடைய செய்து உள்ளார்கள்

    திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்

    இந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆரிடம் சிக்கி

    திமுக காங்கிரஸ் கூட்டணி

    தேர் சக்கரத்தில் சிக்கிய. தேங்காயை போல் சிதறி விடும்

    இதோ என் தலைவர் புறப்பட்டுவிட்டார்

    தரங்கெட்ட வர்களிடமிருந்து தாய்நாட்டை காக்க. புலி என புறப்பட்டுவிட்டார் புரட்சித்தலைவர்

    இன்னும் சில நாட்களில் என் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறை ஆட்சியில் அமரப் போகிறார்

    இவ்வாறு காளிமுத்து பேசினார்

    ///////////////////////////////////////////////////

    1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் எப்படி எம்எல்ஏ ஆனார்

    சுப்புலட்சுமியின் கொழுந்தனார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட எம்ஜிஆரிடம் மனு கொடுத்திருந்தார்

    சுப்புலட்சுமியின் கொழுந்தனாரை எம்ஜிஆர் அண்ணா திமுக வேட்பாளராக அறிவித்தார்

    சுப்புலட்சுமியின் கொழுந்தனார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்

    வேட்பு மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் அதில்சில தவறு இருந்த காரணத்தினால் அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள்

    இப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது

    வேட்பு மனுவில் டம்மி வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் மனு கொடுத்திருந்தார்

    இதை அறிந்த எம்ஜிஆர் அவர்கள் சுப்புலட்சுமி அவர்களை அண்ணா திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதிக்கு அறிவித்தார்

    இப்படி குறுக்கு வழியில் எம்எல்ஏ ஆனவர் சுப்புலட்சுமி

    பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது

    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு ஓடி விட்டார்......... Thanks PM

  11. #3350
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்திலகத்தின் நடவடிக்கைகளை கண்டு அலறிய ஜெயவர்தனே.. #எம்ஜிஆர் அவர்களுக்கு எதிராக சிங்கள மாணவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்...

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 ஏப்ரல் 27 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

    “சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள்.

    பொதுவாக, ஆண்கள் செந்நீரை சிந்து வார்கள். பெண்கள் கண்ணீரை சிந்துவார்கள். ஆனால், இலங்கைத் தமிழ்ப் பகுதியைப் பொறுத்தவரையில் பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச்சிந்துகிறார்கள்.

    ஆண்களும், பெண்களும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக்கடமைப் பட்டு இருக்கிறோம்.

    இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும்,உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற வகையில், நான்கு கோடி ரூபாய் வழங்குவதற்கு இந்த அரசு
    முடிவு செய்துள்ளது.”

    சட்டமன்றத்தில் அறிவித்தவாறு நான்கு கோடி ரூபாயில் விடுதலைப்புலிகள்
    இயக்கத்திற்கு மூன்று கோடி ரூபாயும், பாலகுமாரனின் ஈராஸ் இயக்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நேரிடையாக அளிக்கப்பட்டது.

    புலிகள் தலைவர் #பிரபாகரன், 1987 மே தின செய்தியில்,

    “தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் எமது விடுதலை இயக்கத்திற்கு அங்கீகாரம் அளித்தது, எமது இலட்சியத்திற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பது எமது போராட்டத்தின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பம் ஆகும்” என்று எம்ஜிஆர். அரசுக்கு நன்றி கூறினார்.

    தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அலறிய ஜெயவர்த்தனே, பிரதமர்
    ராஜீவ்காந்தியிடம் எம்.ஜி.ஆர். மீது புகார் கூறினார்.

    மேலும், “இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருள்களை வழங்கப்போவதாக தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.

    நாங்களே உணவு அளிக்க முடியும். அதற்கு இந்தியப்பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால், எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆ தனிப்படை”

    -என்று கூறிய ஜெயவர்த்தனே, கொழும்பு நகரில் புத்தர் ஆலயத்திற்கு எதிரே பத்தாயிரம் சிங்கள மாணவர்களைக் கூட்டி எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினான்........ Thanks CKS

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •