Page 332 of 402 FirstFirst ... 232282322330331332333334342382 ... LastLast
Results 3,311 to 3,320 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #3311
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  #எது #நடந்ததோ #அது #நன்றாகவே #நடந்தது

  "புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்"
  "PURATCHI THALAIVAR DR.M.G.RAMACHANDRAN CENTRAL RAILWAY STATION"

  யானைக்கவுனியில் (வால்டாக்ஸ் ரோடு) ஆரம்ப காலத்தில் வசித்துவந்த புரட்சித்தலைவர், அருகிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தை தினசரி கடந்து சென்றாகவேண்டும்.

  விடியற்காலையில் ரயில்களில் ஒலிக்கும் ஹாரன்கள் தான் வாத்தியாருக்கு, அலாரமாக இருந்திருக்கும்...

  படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வாத்தியார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தான் தனது திரையுலகப் பயணத்தைப் பற்றி கற்பனையில் செதுக்கியிருக்கிறார்...

  முக்காலமும் உணர்ந்த வாத்தியாருக்கு, வருங்காலத்தில் தனது பெயரில் இந்த ரயில்வே ஸ்டேஷன் அழைக்கப்படப்போவது தெரியாமலா இருந்திருக்கும்...???......!!!....... Thanks...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #3312
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  #Vaathiar's #Workout

  உடற்பயிற்சி என்றால் அது
  வாத்தியார் தான்...
  வாத்தியார் என்றால் அது
  உடற்பயிற்சி தான்...

  தன் இளம்பிராயத்திலிருந்து கடைசிவரை உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தினார்...

  பட்டிக்காட்டுப் பொன்னையா என்ற இந்தத் திரைப்படத்தில் நடிக்கும்போது வாத்தியாருக்கு 56 years...

  Awesome performance by our
  #ULTIMATE #VAATHIYAR........ Thanks...

 4. #3313
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  புரட்சி தலைவர் முதல்வராக இருந்த சமயத்தில் ,கோட்டை அலுவலக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணி செய்ய லிப் டுக்காக காத்திருந்தனர் , லிப்ட் வந்தவுடன் அனைவரும் ஏறினர் புறப்பட தயாராகும் போது புரட்சி தலைவர் வந்து விட்டார் , மரியாதைக்காக அனைவரும் வெளியே வந்தனர் , அவர்களை நோக்கி தலைவர் "ஏன் நின்று விட்டீர்கள்" என்றார்
  அதற்கு அவர்கள்" நீங்கள் போங்கள் , நாங்கள் பின்னர் வருகிறோம்" என்றனர் தயக்கத்துடன் , அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட தலைவர் "நானும் அரசு ஊழியன் தான் மக்கள் என்னை ஐந்து வருஷம் ஆள உத்தரவிட்டிருக்கிறார்கள் , ஆனால் நீங்களோ58 வயது வரை அரசு ஊழியர்கள் , வாருங்கள் அனைவரும் லிப்டில் செல்வோம்" என அனைத்து ஊழியர்களுடன் லிப்டில் சென்றார் புரட்சி தலைவர் .(இந்த செய்தியை சொன்னவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற , இன்றளவும் திமுக கட்சிக்காரர் )....... Thanks...

 5. #3314
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  ����அழகு கலையே..
  ����அன்பின் நிலையே..
  ����தர்மத்தை காக்கவே
  தரணியில் மலர்ந்த எங்கள்
  தர்ம தேவனே..
  ����பாரோர் போற்றி வணங்கும் எங்கள்
  பரங்கிமலையாரே..
  ����மக்களோடு மக்களாய்
  மக்களின் தொண்டராய்
  மத்தியில் பவணி வந்த எங்கள்
  மன்னாதி மன்னனே..
  ����ஒவ்வொரு உள்ளத்திலும்
  ஒளிரும் திருவிளக்கே..
  ����அன்னையின் அரவணைப்பு போல்
  அகிலத்தாரையும் உம் அன்பால்
  அணைத்துக்கொண்டு , எங்களின்
  இதயத்தில்
  ஆளும்
  ஆளவந்தாரே..
  ����புவி மயங்கும்
  புதல்வரே.. எங்கள்
  புரட்சித்தலைவரே.. எங்களின்
  இதயத்தை ஆளும்
  நிரந்தர முதல்வரே..
  ����ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
  காணலாம் என்றார் உம் அண்ணன்..
  ஆனால்., எங்கள்
  மன்னவன் சிரிப்பிலே தான்
  மக்கள் மகிழ்ச்சி ஆழியில் நீந்தினார்கள்..
  ����எங்களின்
  உள்ளத்தில் வாழும்
  உலகாளும் காவலரே..
  உள்ளம் மகிழ்ந்து
  உமது கொள்கைகளை போற்றுவோம்..
  ����எத்தனை தலைமுறை வந்தாலும்
  எங்கள் தானைத்தலைவன் வாத்தியாரின்
  புகழினை போற்றுவோம்..
  ������என்றும் எங்கள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும்..!!!������

  #புரட்சித்தலைவரின்
  பக்தன்..
  #Subash_KmsBoss.��........... Thanks...

 6. #3315
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  அப்படிப் போடு!!
  --------------------------
  இது எம்.ஜி.ஆரின் ஒரு புதிய கோணத்தைக் காட்டும் பதிவு!!
  அது 1982!!
  ஏ.வி.எம்மில் ஒரு பேட்டியை முடித்துக் கொண்டு அடியேன் கிளம்பும்போது அந்த நடிகரை சந்தித்தேன். நாடகம் வசனம் திரைப்படம் என்று அப்போது பட்டையைக் கழட்டிக் கொண்டிருந்த அந்தப் பிரபல நடிகருடன் உரையாடினேன்.
  கோடம்பாக்கத்தில் உங்களை இறக்கி விடுகிறேன் என்று சொன்ன அந்த நடிகர்,,தம் காரில் என்னை ஏற்றிக் கொண்டார்!!
  காரில் பல விஷயங்களுக்கு இடையில் எம்.ஜி.ஆர் பற்றிப் பேச்சு வந்தது!!
  உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்திருக்கிறீர்களா என்று அந்த நடிகர் என்னிடம் கேட்டார்.
  அதைப் பார்க்காதவங்க இருக்க முடியுமா? எனக் கேட்ட என்னிடம் அந்தப் படத்தின் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு அவர் சொன்னதை இங்கு அப்படியே தருகிறேன்.
  ரூங் மேட்டா ராக் என்ற அந்த அயல் நாட்டு நடிகை எம்.ஜி.ஆருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலை பாடிவிட்டு,,,தமது காதலை எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க வருபவர்--எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து கேவி அழுவார்!!
  அப்போது அந்த நடிகையைத் தேற்றும் எம்.ஜி.ஆர் வசனம் தான் இந்தப் பதிவின் ஹீரோ??
  அம்மா! இந்த உலகத்துலே நாம் எதிர்பார்க்கறது எல்லாமே நடந்துடும்ன்னு நாம எதிர்பார்க்கக் கூடாது. அதற்காகக் கவலைப்பட்டோ கண்ணீர் விட்டோ ஒரு பயனும் இல்லை.
  இயற்கையின் முடிவுக்கு நாம எல்லோருமே கட்டுப்பட்டுத் தான் தீரணும்!!
  எப்பவுமே முடிந்து போன ஒண்ணில் தொடக்கத்தை நாம் தேடக் கூடாது!!
  இப்போது அந்த நடிகர் இப்படிக் கூறி முடிக்கிறார்!
  ஒரு காதல் ஸீன்! அதுலே எல்லாருமே காதலைப் பத்தி தான் அந்த இடத்துலே குறிப்பிடுவாங்க! அது தான் லாஜிக் கும் கூட!!
  அந்த இடத்துலே கூட நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்ட அறிவுரையை எம்.ஜி.ஆர் சொன்னது எப்பேர்ப்பட்ட விஷயம் சார்!! அதிலேயும் அதைச் சொல்லும்போது ரொம்ப நிதானமாகவும் இயல்பாகவும் எம்.ஜி.ஆர் சொல்லற விதம் என்னை ரொம்பவேக் கவர்ந்துடுத்து!!
  அந்த நடிகர் சொன்ன பிறகு நான் அந்தப் படத்தில் அந்த ஸீனைப் பார்த்தபோது அவர் சொன்ன விளக்கத்தின் நிதர்சனம் எனக்குப் புரிந்தது!!
  அந்த நடிகர்??
  திரு எஸ்.வி.சேகர்!!
  ஒரு நடிகரை நமக்குப் பிடிக்கும் என்பதாலேயே எல்லா ஸீன்களிலும் கூச்சல்--கைத்தட்டல் -விசில் சகிதம் நாம் உற்சாகப் படுவதைக் காட்டிலும் ஒவ்வொரு ஸீனையும் நுணுக்கமாக உள் வாங்க வேண்டும் என்ற படிப்பினையையும் நான் கற்றுக் கொண்டேன்.
  நம் எஸ்.வி.சேகரின் இப்போதைய செல் ஃபோன் ரிங்--டோன்??
  நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்!!!
  திரு எஸ்.வி சேகர் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது நமக்குக் கொள்ளை இன்பமல்லவா??
  அவர் எம்.ஜி.ஆர் பற்றி இப்படி ஆய்ந்து சொன்ன விஷயங்களை அவ்வப்போது அடியேன் பதிவிடுவேன்!
  இன்றைய ஹீரோக்கள்--
  பன்ச் டயலாக் பேசுகிறார்கள்!1
  ஆனால் எம்.ஜி.ஆர் மட்டுமே--அவர் பேசிய--
  டயலாக் எல்லாமே பன்ச் ஆக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்??
  உண்மை தானே உறவுகளே???......... Thanks...

 7. #3316
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  லண்டனில் எம் ஜி ஆர் விழா
  உலகம் எங்கும் எம் ஜி ஆர்

  பொன்மன செம்மல் அல்லவா எம் ஜி ஆர்
  பொற்க்கால ஆட்சி தந்த மன்னன் அல்லவா எம்ஜிஆர்
  சத்தான சத்துணவு தந்த முதல்வர் அல்லவா எம் ஜி ஆர்
  தனகென எதுவும் சேர்க்காதவர் அல்லவா எம் ஜி ஆர்
  மனிதநேயம் மிக்கவர் அல்லவா எம் ஜி ஆர்
  எட்டாம் வள்ளல் அல்லவா எம் ஜி ஆர்
  வீரமிக்க வெற்றி வீரன் அல்லவா எம் ஜி ஆர்
  தனதெல்லாம் தமிழனுக்கு தந்ததவர் அல்லவா எம் ஜி ஆர்
  சேரகுலத்தில் உதித்து தமிழர் தங்க நிலவானர் அல்லவா எம் ஜி ஆர்
  ஜாதி மதம் கடந்தவர் அல்லவா எம் ஜி ஆர்
  தங்கமேனி காந்தமாக மக்களை கவர்ந்தவர் தங்கம் காந்தம் ஆன அதிசயம் நிகழ்த்தியவர் அல்லவா எம் ஜி ஆர்
  தமிழன் அடையாளம் தமிழன் வீரம் தமிழன் வெற்றி எல்லாம் எம் ஜி ஆர் எனும் மூன்று எழுத்தில் காட்டியவர் அல்லவா எம் ஜி ஆர்
  அதனால் உலகம் எங்கும் எம் ஜி ஆர் புகழ் கொடி பறக்குகிறது
  வாழ்க எம் ஜி ஆர் புகழ்........ Thanks...

 8. #3317
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  உலகிலுள்ள
  எந்த நடிகருக்கும் கிடைக்காத அரிய பெருமை நம் தலைவருக்கே.
  நம் தலைவருக்கு மட்டுமே நூற்றாண்டுகள் முடிந்து இன்றும் பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.
  இதற்கு காரணம் மக்கள் தலைவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக நேசித்து வந்த ஒரே காரணம்தான்......... Thanks...

 9. #3318
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  ����எங்களின் இதயத்தில் வாழும் வாத்தியாரே...!����
  ����மன்னா - வா...!!
  ����எழுந்து - வா...!!!

  ���� எங்களின் இமைகளை கடந்து
  கண்ணீராய் வழிந்தோடும்
  உன் நினைவுகளை...!����
  ����உயிருக்குள் அடக்கிவைத்து
  ஊமையாக அழுகிறோம்...!����
  ����சுவையின்றி
  சுவைக்கும் நாவினைப்போல் நீயின்றி
  திகைக்கும் நாங்கள் இங்கே...!����
  எங்களின்
  ����நெஞ்சுக்குள் உம் பிரிவின் நினைவு
  நெருப்பாய் எரிகிறது வாத்தியாரே...!����
  ����கண்ணுக்குள் எங்களின்
  கண்ணீர் உப்பாய் கரிக்கிறது வாத்தியாரே...!
  ����உள்ளத்துக்குள் எங்களின்
  உண்மையுணர்வு வலிக்கிறது
  வாத்தியாரே...!����
  ����எனக்குள்
  எத்தனை ஆயிரம்
  இன்பங்கள்
  இருந்தபோதும் ...!����
  ����உம்மை காணாத என்
  இருவிழிகள்
  இருந்தும் ஓர் குருடனாகவே உணர்கிறேன் வாத்தியாரே..!����
  ����கணவை சுமக்கும்
  கண்கள் தான்
  கண்ணீரையும் சுமக்கிறது...!����
  ����உம் கொள்கைகளை சுமக்கும்
  எம் இதயம்
  உம் பிரிவை சுமக்க மறுக்கிறது
  மன்னாதி
  மன்னா - வா..!!!����

  ����என்றும் நாம் வணங்கும் இதய தெய்வம்
  பொன்னார் மேனியன்
  பொன்மனச்செம்மலின் புகழ்
  ஓங்கி
  ஒலித்துக் கொண்டு இருக்கும்..!!!����....... Thanks...

 10. #3319
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  #Women's #Day #Special 2

  #புதுமுகம்...#புகழ்முகம்

  ஒரு துறையில் அறிமுகமாகி, புகழ் பெற்று விளங்குபவரை, 'இவர் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்':என்று கூறுவதுண்டு...

  ஆனால் நம்ம லதாம்மா அப்படியல்ல...

  உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியத்தில் #பொன்மனச்செம்மலின் #பொற்கரங்களினாலேயே #குட்டப்பட்ட #பேறுபெற்றவர்... ������

  உ.சு.வா வில் புதுமுகமாக அறிமுகமாகி...
  வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் புகழ்முகமாக மிளர ஆரம்பித்தவர்... ������

  கடந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில், நடிப்பால் நம்மை மிகவும் கவர்ந்த லதாவை 'பேசும்படம்' 1973 ம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக அறிவித்துக் கௌரவிக்கிறது... ������

  "லதாவிற்கு வந்த வாய்ப்பும் வரவேற்பும் இவரது திறமையின் உயர்வினால் தான்...பண்போடு பழகவும், பொறுப்போடு பேசவும் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட லதா அவர்கள் 74ன் புகழ்முகமாக ஒளிவீச வாழ்த்துகிறோம்..." என்றும் தமது வாழ்த்துக்களில் பிரசுரித்தது... ������

  இன்றளவும் அதே பண்பை கடைபிடித்துவரும் நம்ம லதாம்மாவைப் பாராட்ட வார்த்தைகளேது...!!!

  புரட்சித்தலைவர் #வாத்தியாரின் #மாணவின்னா சும்மாவா!! ������.......... Thanks...

 11. #3320
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  #வாழ்வாதாரத் #திட்டங்கள்

  பொன்மனச்செம்மலின் திட்டங்கள் யாவுமே தொலைநோக்குப் பார்வையுடனும், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் கொண்டு அமைக்கப்பட்டன... என்பதை இளைய சமுதாயத்தினர் இக்காணொளியைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்...

  வாழ்க்கையில் தான் சந்தித்த இன்னல்களையும், தானே நேரில் சென்று மக்களின் குறைகளை ஆராய்ந்தும், அத்திட்டங்களை செயல்படுத்தும் போது, தான் மக்களோடு மக்களாக இணைந்தும் செயலாற்றியவர் நமது புரட்சித்தலைவர்...

  பொன்மனச்செம்மலின் உணர்வுப்பூர்வமான இந்த அரிய காணொளியை அவசியம் காணவும்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •