Page 331 of 402 FirstFirst ... 231281321329330331332333341381 ... LastLast
Results 3,301 to 3,310 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3301
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
    நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
    மங்காத தங்கம் எங்கள் தங்கம்
    புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
    அப்போதும் சரி...!
    இப்போதும் சரி...!
    இனி எப்போதும் சரி...!
    மங்காத தங்கம் எங்கள் தங்கம்........... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3302
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #சட்டம் #பொதுதானே

    ஒருநாள் மாலை வடபழனி முருகன் கோவில் அருகில் போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட சில கார்களை மடக்கி நிறுத்திக்கொண்டிருந்தனர். அப்போது படப்பிடிப்புக்கு போவதற்காக அந்தப்பக்கம் வந்த எம்ஜிஆர் காரையும் போலீசார் நிறுத்தினர்...

    ஆனால் காரினுள் இருந்த எம்ஜிஆர் அவர்களைப் பார்த்ததும் திகைத்து சட்டென்று சல்யூட் அடித்துவிட்டு "நீங்கள் போகலாம்" என்றனர்.

    உடனே, உள்ளே இருந்த எம்ஜிஆர் "எதற்கு வண்டியை நிறுத்தினீர்கள்? " என்று கேட்க, அதற்கு 'ஒன்றுமில்லை சார்...கார் விளக்குகளில் பாதி கறுப்பு வர்ணம் பூசியிருக்கப்பட வேண்டும்...அப்படிப் பூசாத கார்களை நிறுத்தி, கறுப்பு வர்ணம் அடித்து அனுப்புகிறோம்...என்றனர்...

    இந்த வண்டியில் கறுப்பு வர்ணம் பூசாமல் இருந்தால் உங்கள் கடமையைச் செய்யவேண்டியது தானே ? என்று எம்ஜிஆர் கேட்க, "#பரவாயில்லை #சார், #உங்கள் #கார் #என்றால் #நிறுத்தியிருக்க #மாட்டோம்..." என்று போலீசார் தயங்கியபடி கூறினர்...

    "#சட்டம் #எல்லோருக்கும் #ஒன்று #தான்...#நான் #வெயிட்பண்றேன்...#என் #காருக்கும் #வர்ணம் #பூசுங்கள்" என்றார் எம்ஜிஆர்.......... Thanks...

  4. #3303
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாக சத்யா ஸ்டுடியோவில் எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

    #அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், எம்ஜிஆரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக் கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள் திமுகவினர்.

    #அந்த நிமிடம் வரை தி.மு.க.வோடு சமாதானமாக போய்விடலாம் என்றுதான் எம்ஜிஆரும் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இரத்த வெள்ளத்தில் தம் முன்னால் நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்தார் எம்ஜிஆர்.

    #சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்றார்.

    #அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது.

    #இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித் தாக்குதல்கள் கணக்கிலடங்காதவை ஆகும்.

    #HBDAiadmk48........... Thanks...

  5. #3304
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பிரம்மாண்டமான படங்களின் இயக்குனர் திரு. B.R.பந்துலு அவர்கள் சிவாஜியை விட்டு புரட்சித் தலைவர் பக்கம் வந்த கதை:-

    பி.ஆர்.பந்துலு தமிழகத்தின் சிசில் பி டிமிலி என்று அறியப்பட்ட இயக்குனர். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர். சிவாஜிக்கும் இவருக்குமான நட்பு வித்தியாசமானது . அந்த நெருக்கம் காரணமாக கொஞ்சம் ஓவராகவே சிவாஜியிடம் நடந்து கொள்வார்.

    பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,பலே பாண்டியா படங்களுக்கு பிறகு-

    ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்,சுற்றிலும் சில கைத்தடிகள் நிற்க, சிகரட்டை பற்றவைக்கும்போது பந்துலு காரில் வந்து இறங்குகிறார்.

    சிவாஜி பார்க்கிறார். பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்கிறார்

    ” டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.”

    சிவாஜி எப்போதும் எல்லோரையும் ஏகாரத்தில் தான் குறிப்பிடுவார்.அதோடு ஜாதியை குறிப்பிட்டே பேசுவார். பாப்பாரப்பய , யோவ் செட்டி , ரெட்டி எங்கேடா, வாய்யா நாயுடு , டேய் கவுண்டபயலே , கூப்புடறா முதலியார, டே துளுக்கப்பயலே – இப்படித்தான், இது தான் சிவாஜி.

    (கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில் சிவாஜி ஒரு மூன்று பிராமணர்களுடன் உற்சாகபானம் – ஸ்காட்ச் விஸ்கி – அருந்திக்கொண்டிருந்திருக்கிறார் . விஸ்கி கூட ஒரு பிராமணர் உபயம் தான். சிவாஜி அவ்வப்போது ” டே பாப்பான் நீ என்ன சொல்றே… ” பாப்பாரப்பயல்களா ” இப்படி வார்த்தைகளை பிரயோகம் செய்துகொண்டே இருந்திருக்கிறார்.

    சுயமரியாதையுள்ள ஒரு பிராமணர்
    ( விஸ்கி உபயம் செய்தவர் தான் ) எழுந்து இந்த அநாகரீகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறார். அதன் பிறகு சிவாஜியை அந்த உத்தமப்பிராமணர் சந்திக்கவேயில்லை. பலவருடங்களுக்குப் பின் யதேச்சையாய் இருவரும் சந்திக்க நேர்ந்தபோது சிவாஜிக்கு அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அல்லது அடையாளம் தெரிந்ததாக காட்டிக்கொள்ள விருப்பமில்லை.)

    பக்கத்தில் பந்துலு வருகிறார்.
    ‘ யோவ்! என்ன அத்திப்பூத்தாப்பலே…. காத்து இந்தப்பக்கம் அடிக்குதா… ‘

    பந்துலு ‘ பவ்யம் பாவ்லா ‘ எதுவும் செய்ய மாட்டார். மரக்கிளை ஒன்றில் பார்வை நிலைத்துள்ள நிலையில் சிரித்துக்கொண்டே உட்கார்வார்.

    பந்துலு மெதுவாக வேறுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்வார்
    ”புதுசா ஒரு படம் பண்ணப்போறேன் . ”

    சிவாஜி ” என்ன கதை ”

    பந்துலு ” மகாபாரதத்திலே இருந்து ”

    சிவாஜி ” படத்து பேர் என்னவோ ”

    பந்துலு ” கர்ணன் ”

    சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம் இடைவெளி விட்டு ” யாரு ஹீரோ ?”

    பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக ” சிவாஜி கணேசன் யா ”

    சிவாஜி கண்ணை விரித்து , மூக்கை விடைத்து , குரலை செருமி விட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போதே பந்துலு எழுந்து விடுவார் .

    ” நாளைக்கு பூஜை .”
    சிவாஜியைப் பார்க்காமலே அவருடைய மேக் அப் மேன் , உதவியாளர், கார் டிரைவர் ஆகியோரிடம் பேசி ( நாளைக்கி எந்த ஸ்டுடியோவில் பூஜை, மேக் அப் எப்படி …இப்படி …இப்படி …) விட்டு பந்துலு காரில் ஏறி கார் கிளம்பிப்போவதை வைத்த கண் வாங்காமல் சிவாஜி பார்த்துக் கொண்டிருப்பார்.

    எரிமலையாய் வெடிப்பார்
    ” டேய், பாப்பான் என்னடா நினைச்சுக்கிட்டிருக்கான். வந்தான், நாளைக்கு பூஜைங்கிறான்.நான் தான் ஹீரோங்கிறான்.

    யாரிட்டயாவது சொல்லியிருக்கானா .
    சண்முகத்தை கூப்பிடுறா .”

    தம்பி சண்முகம் வந்து தன்னிடமும் பந்துலு இது பற்றி முன்னதாக பேசவேயில்லை என்கிற விஷயத்தை சொல்வார் .

    சிவாஜி கடுமையான கோபத்துடன் Abusive languageல் கண்டபடி திட்டுவார்.”பாப்பான் என்னை ரொம்ப ஆழம் பாக்கராண்டா.இவனுக்கு ரொம்ப துளுர் விட்டுப்போச்சி ”

    ஸ்டுடியோ பூரா செய்தி பரவும். சினிமாவுலகம் பூரா அரை மணி நேரத்தில் பேசும்.

    ” அவ்வளவு தான். சிவாஜிக்கும் பந்துலுவுக்கும் முட்டிக்கிச்சி”.”
    இனி கடும் பகை தான்.” ”

    “இருந்தாலும் பந்துலு ரொம்ப ஓவரா உரிமை எடுக்கறதெல்லாம் சரியில்லே ..” “சிவாஜி இனி அந்த ஆளு மூஞ்சிலேயே முழிக்க மாட்டருய்யா ”
    ………….

    மறு நாள் அதிகாலை,
    சூரியன் உதிப்பதற்கு முன்பே
    முழு மேக் அப்புடன்
    பந்துலு பட பூஜையில் சிவாஜி ஆஜர் !

    பந்துலு -சிவாஜி நட்பும் தொழில் பங்களிப்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் ‘ முரடன் முத்து’ படத்துடன் இருவரின் காவியத்தொடர்பு முற்றுபெற்றது என்றே ஆகி விட்டது. ” முரடன் முத்து தான் சிவாஜியின் நூறாவது படம் ” என்று பந்துலு லூஸ் டாக் செய்தார் .

    சிவாஜி தன்னுடைய நூறாவது படம் என்ற அந்தஸ்தை ஏ.பி.நாகராஜனின் ” நவராத்திரி ” படத்துக்கு கொடுத்தார்.

    பந்துலு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் தற்செயலாக எம்ஜியாரை சந்திக்க நேர்ந்தது. எம்ஜியார் எழுந்து நின்று

    ” பந்துலு சார்!”-கட்டிப்பிடித்துக்கொண்டார்
    இந்த சந்திப்பு கண் காது மூக்கு வைக்கப்பட்டு வேறொரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த சிவாஜி காதுக்கு போனது.

    “போதும்டா இந்த பாப்பான் சங்காத்தம்.”

    எம்ஜியாருடன் ”ஆயிரத்தில் ஒருவன் ” படத்தில் பந்துலுவின் தொழில் தொடர்பு துவங்கியது. தொடர்ந்து “நாடோடி ” ” ரகசிய போலீஸ்115 “, “தேடி வந்த மாப்பிள்ளை ” ……..

    “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” படம் இயக்கிக்கொண்டிருந்தபோது பி.ஆர். பந்துலு மறைந்தார். மீதிப்படத்தை எம்ஜியாரே இயக்கினார் என்று விளம்பரப்படுத்தப் பட்டது- பட டைட்டில் ‘இயக்கம்-பி ஆர் பந்துலு – எம்ஜிஆர் ‘ என்றாலும் ப.நீலகண்டன் தான் இயக்கம் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டார்....... Courtesy by: fb.,

  6. #3305
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்நாள் முழுவதும், தன் மனசாட்சிப்படியும், தர்மத்தின்படியும் வாழ்ந்து வெற்றிக்கொடி நாட்டிய உத்தமத்தலைவர் புரட்சித்தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை துவக்கிய நாள், இன்று. நாம் பிச்சை கேட்காமலேயே, இந்திய நாட்டின் உயர் விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு மனமுவந்து தனக்கு அளிக்கும் அளவுக்கு, தன் கலையுலக மற்றும் அரசியல் உலக எதிரிகள் ஆச்சரியப்படும்படி, வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
    அந்த மாபெரும் தலைவரை வணங்கி, அவருடைய தம்பிகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
    நன்றி.

    எம் ஜி ராமகிருஷ்ணன் கோவை........ Thanks...

  7. #3306
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாயிலே #பூட்டு

    தனது திரைப்ப(பா)டங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசபக்தி , சமூக முன்னேற்றம் , மக்களுக்கு விடுதலை
    வேட்கை ,என்று பல படங்கள் மூலம் இடம் பெற செய்தவர்...புரட்சித்தலைவர்

    மக்கள் திலகம் தன்னுடைய படங்களில் சுதந்திர உணர்வு - உரிமை போராட்டம் - நேர்மை - நீதி -சமூக நலனில்
    அக்கறை - மக்களுக்கும் , இளம் வயதினருக்கும் , குழந்தைகளுக்கும் , பெண்களுக்கும் வாழ்வில் முன்னேற
    பல அருமையான பாடல்கள் தந்துள்ளார் .

    தர்மத்தின்சாவி!

    “பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
    பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
    கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
    கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”

    கேட்டீர்களா …. பாட்டு?

    பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் நம்ம வாத்தியார்...

    இனி அவர் என்ன சொல்கிறார்?

    “அடக்கமில்லாம சபையில் ஏறி
    அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
    (உம்முனு, கம்முனு, ஜம்முனு ன்னு சபையில் 'மறை கழண்டது' போல் உளறிக்கொட்டும் ஒரு அரைவேக்காட்டிற்கும், , தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாத 'சிஸ்டமுக்கும்', அதிமேதாவித்தனமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு தான் பேசுவது மக்களுக்கே புரியாத 'மய்யத்திற்கும்' இந்த வரிகள் பொருந்தும்...)

    அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
    அள்ளிக்கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு!”

    சரிதானே!...... Thanks...

  8. #3307
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் - அப்படியேதான் இருந்தார்

    M.G.R. ரசிகர்களில் நடிகர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்ட ரசிகரான ஒரு நடிகர் காமெடி வேடங்களில் கலக்கியவர். பொதுவாக நகைச்சுவை நடிகர் என்றாலே அவர்கள் தோற்றமே சிரிப்பை வரவழைக்கும். ஆனால், நகைச்சுவை நடிகர்களிலேயே அழகான தோற்றம் கொண்டவர் அவர். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த அந்த நடிகர் தேங்காய் சீனிவாசன்!

    எம்.ஜி.ஆர். மீது தீவிரமான அன்பு கொண்டவர் தேங்காய் சீனிவாசன். வெறிபிடித்த ரசிகர் என்றுகூட சொல்லலாம். ‘கல் மனம்’ என்ற நாடகத் தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் சீனிவாசன் என்ற இவரது பெயருக்கு முன்னால் ‘தேங்காய்’ சேர்ந்து கொண் டது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், கட்சியிலும் சேர்ந்தார். எம்.ஜி.ஆருக்கும் தேங்காய் சீனிவாசன் மீது மிகுந்த அன்பு.

    மனதில் எந்த களங்கமும் இல்லாமல் எல்லோரிடமும் வேடிக்கையும் விளையாட்டுமாக பழகு பவர் தேங்காய் சீனிவாசன். அவரது விளையாட்டு குணம் எம்.ஜி.ஆருக்கும் தெரியும். அதனால், தவறாக நினைக்க மாட்டார். அதேநேரம், அவரது உடல்நலம் குறித்தும் பொருளாதார நிலை குறித்தும் உரிமையுடன் கோபித்துக் கொள்வார்.

    எம்.ஜி.ஆருடன் ‘கண்ணன் என் காதலன்’, ‘நம்நாடு’, ‘என் அண்ணன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக் குரல்’ உட்பட அவரது கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் தேங்காய் சீனி வாசன் நடித்துள்ளார். ‘நான் ஏன் பிறந் தேன்’ படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடி யோவில் நடந்து கொண்டிருந்தது. ‘ரிக் ஷாக்காரன்’ படத்தை இயக்கிய எம்.கிருஷ்ணன், இந்தப் படத்தையும் இயக்கினார்.

    ஒருநாள் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர். வருகைக்காக குழுவினர் காத்திருந்தனர். அப்போது, இயக்குநர் கிருஷ்ணனிடம் தேங்காய் சீனிவாசன் வேடிக்கையாக, ‘‘டைரக்டர் சார், ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் வாத்தியா ருக்கு (எம்.ஜி.ஆருக்கு) ‘அழகிய தமிழ் மகள் இவள்..’ பாடல் வெச்சது மாதிரி இந்த படத்தில் எனக்கும் ஒரு பாட்டு வெச் சுடுங்களேன்’ என்றார். சுற்றி இருந்தவர் களுக்கு அதிர்ச்சி. ‘என்ன இவர் இப்படி பேசுகிறாரே?’ என்று நினைத்தனர்.

    படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவர் காதுக்கு தேங்காய் சீனிவாசன் சொன்ன விஷயம் சென்றது. அவரை எம்.ஜி.ஆர். அழைத்தார். வேகமாக ஓடிவந்தார் தேங்காய் சீனிவாசன். அவ ரிடம், ‘‘உன் ஆசைப்படியே இந்தப் படத் தில் உனக்கு ஒரு பாட்டு வைச்சுடலாம்!’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். தேங்காய் சீனிவாசனுக்கு பயம் வந்துவிட்டது. ‘‘தலைவரே, நான் சும்மா விளையாட் டுக்கு சொன்னேன்’’ என்றார். அவரது தோளைத் தட்டி சிரித்தபடியே எம்.ஜி.ஆரும், ‘‘அட! நானும் விளை யாட்டுக்குத்தாம்பா சொன்னேன்’’ என்றதும் படப்பிடிப்பு தளமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

    தனக்கு நெருக்கமானவர்கள் தவ றான பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்துக் கொள்வதையோ, அநாவசியமாக செலவு செய்வதையோ எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார். ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட வர் நகைச்சுவை நடிகர் ஐசரி வேலன். ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது அவர் எம்.ஜி.ஆரிடம், ‘‘அண்ணே, எனக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கச் சொல்லுங்க. குடும்ப செலவை சமாளிக்க முடியலை’’ என்றார்.

    அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘வரும் சம்பளத் தில் குடும்ப செலவை சமாளிக்க முடி யலை என்று சொல்லாதே. இந்த வருடத் தில் நீ எத்தனை படங்களில் நடித்தாய்? அதற்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கினாய்? உன் குடும்பத்துக்கான செலவினங்கள் என்ன?’’ என்று கேட்டு அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர். சொல் வதில் உள்ள நியாயத்தை ஐசரி வேலன் உணர்ந்து கொண்டார். இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பின்னர், அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். இணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணை யான ‘பார்லிமென்டரி செக்ரட்டரி’ பதவியி லும் ஐசரி வேலனை எம்.ஜி.ஆர். நியமித்தார்!

    தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார். ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண் டாம்’’ என்று எம்.ஜி.ஆர். தடுத்தார். ஆனால், அதையும் மீறி படத் தயாரிப் பில் தேங்காய் சீனிவாசன் ஈடுபட்டார். அவர் கையில் இருந்த பணம் படப் பிடிப்பு செலவுகளுக்காக கரைந்துவிட் டது. பணமும் புரட்ட முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வதென்று தெரியா மல், ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையைச் சொன்னார்.

    ‘‘நான்தான் ஆரம்பத்திலேயே சொன் னேனே, கேட்டியா? பட்டால்தான் புத்தி வரும். போ… போ…’’ என்று எம்.ஜி.ஆர். கோபமாகப் பேசி அவரை அனுப்பிவிட் டார். இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோன நிலையில், ஏமாற்ற மும் சோகமுமாய் நெடுநேரம் கழித்து இரவில் வீடு திரும்பினார். அங்கே தேங்காய் சீனிவாசனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது உதவியாளர்கள் மூலம் பெரும் தொகையை அவர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியிருந் தார். விஷயம் அறிந்து, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கோரியதுடன், உதவிக்காக கண்களில் நீர்மல்க நன்றியும் தெரிவித்தார் தேங்காய் சீனிவாசன்!

    ‘நினைத்ததை முடிப்பவன்’ படத் தில், கிராமத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆர்., தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள மற்றவரைப் போல நடிக்க வேண்டிய நிலை. அடுக்கு மாடி ஒன்றில் இருந்து கீழே பார்க்கும் எம்.ஜி.ஆர்., அங்கு சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனை மேலே அழைப்பார். படத்தில் இருவருக் கும் ஏற்கெனவே அறிமுகம். தனக்கு ஆரம் பத்தில் காசே வாங்காமல் சுக்கு காப்பி கொடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு 500 ரூபாய்க்கு காசோலை கொடுக்கு மாறு நடிகை லதாவிடம் சொல்வார் எம்.ஜி.ஆர்.! அப்போது அது பெரிய தொகை.

    பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வியா பாரம் செய்யும் சுக்கு காபி வைத்திருக் கும் தூக்கை மறந்துவிட்டு செல்லும் தேங்காய் சீனிவாசனிடம், ‘‘பணம் வந்த தும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார். தனது தவறை ஒப்புக்கொள்ளும் தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக் காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.

    அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.!....... Thanks...

  9. #3308
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எவராலும் வெல்ல முடியாத தனித்தன்மை வாய்ந்த ஒரேயொரு தலைவர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான்

    புரட்சித் தலைவர் அவர்களை
    எவருமே வென்றது இல்லை இல்லவே இல்லை

    அந்த தனிப் பெருமை நம் வாத்தியார் மக்கள்திலகம் பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே தான் உண்டு ✌️���� நன்றி ��........ Thanks...

  10. #3309
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1987ம் வருடம் இறுதியாக தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அதோடு தனது ஆரம்ப கால மெய்காப்பாளர்களையும் இறுதி வரை தனக்கு அருகிலேயே இருக்குமாறு புரட்சித் தலைவர் பார்த்து கொண்டதற்கான புகைப்படமும் கூட. காவல் துறை பாதுகாப்பு இருப்பினும் ஆரம்பகால தனது கரடு முரடான அரசியல் பயணத்தில் தோள் கொடுத்து துணை நின்ற மெய்காப்பாளர்களை இறுதி வரை மறவாது தன்னுடனேயே இருக்குமாறு பார்த்து மனித நேயத்தின் மறுபதிப்பு ஆக திகழ்வதால் தானே அவர் மனித புனிதர் எம்ஜிஆர். காரணம் பிறரை போன்று பின்னர் தனக்கு கிடைக்கும் உயர் அந்தஸ்தை மனதிற் கொண்டு வந்த வழியை மறப்பவர்கள் போல் அல்லாது தனது ஆரம்பகால வழி தடத்தை மறவாதவர் அல்லவா புரட்சித் தலைவர்.

    நன்றி : Kp. கோவிந்தராஜ்......... Thanks...

  11. #3310
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் ஒரு நடிகன் மட்டுமே என்றிருந்தால் மற்ற சிவாஜி கணேசன் கமல் ரஜினி விஜய் ஆஜித் போல் என்றால் என்றோ வேறு ஒரு ஆக்ஸன் ஹீரோ வின் ரசிகனாக மாறி இருப்போம்

    முப்பது ஆண்டுகள் கழிந்தும் அவர் ரசிகர்கள் மாறாமல் பக்தர்கள் ஆகினதும் புது புது எம் ஜி ஆர் பக்தர்கள் உருவாகுவதும் ஏன் என்றால்

    எம் ஜி ஆர் ஒரு வள்ளல்
    எம் ஜி ஆர் ஒரு மனிநேயகடல்
    எம் ஜி ஆர் கருணையாளன்
    எம் ஜி ஆர் ஒரு மாவீரன்
    எம் ஜி ஆர் ஒரு சிறந்த முதல்வர்
    எம் ஜி ஆர் ஒரு அதிசயபிறவி
    எம் ஜி ஆர் ஒரு சகலகலாவல்லவன்
    எம் ஜி ஆர் ஒரு சக்தி எவராலும் வெல்ல முடியாத சக்தி
    எம் ஜி ஆர் ஒரு ஆக்க சக்தி
    எம் ஜி ஆர் தனது எல்லாம் தமிழர்க்கு என வாழ்ந்தததால்

    இப்படி சிறப்பு சக்தி உள்ளதாலே மற்ற நடிகர்கள் ரசிகர்களை விட எம் ஜி ஆர் பக்தர்கள் வேறுபட்டு எம் ஜி ஆரை கொண்டாடுகிறார்கள் உலகம் எங்கும்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •